தொல் தடயங்கள்

1,608 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 19, 2020, 4:31:51 PM10/19/20
to மின்தமிழ்

தேமொழி

unread,
Oct 19, 2020, 4:34:10 PM10/19/20
to மின்தமிழ்


hero stone2.jpg

பெண் வீரகல் மசினகுடி , மாயாறு , பொக்கப்புரம் மற்றும் பல இடங்களில் ஆண்ட வீரர்கள் கல்வெட்டுகள் வழிபாடு நடைமுறையில் உள்ளது.. பழங்குடியினர் வழிபாடு தொடர்புகள் அதிகமாக நடைமுறையில் இருக்கின்றன.

"இழந்த விதைகள் இன்னும் சில கணக்கில் எண்ணப்பட்டவை"


தேமொழி

unread,
Oct 19, 2020, 4:54:48 PM10/19/20
to மின்தமிழ்


ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஜம்பை ஊரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் புலவர் அ.பழனியப்பன். தமிழ்ப் பற்றாளர். நிறைய ஓலைச்சுவடிகள் இவரால் படிக்கப்பட்டு நூலாக்கமும் பெற்றுள்ளன. பவானி வேதநாயகி சதகம், கந்தர் அனுபூதி  உட்பட சில வரலாற்று நூல்களும்(மறுமொழியில் காண்க) அடங்கும். இவரைச் சந்தித்து உரையாட வேண்டும் என்று முடிவு செய்து கடந்த பிப்ரவரி மாதம் நானும் பல்லடம் பொன்னுசாமி அவர்களும் சென்றிருந்தோம். நாங்கள் வருவதை ஏற்கனவே அலைபேசியில் சொல்லியிருந்த படியால் தன்னுடைய மற்ற பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரைபொழுது எங்களுடன் செலவிட்டார். அவரின் ஆரம்பக்கால கல்வி பயணம். இடையே புலவர் பட்டம், அதன் பின்னர் தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு படிப்பு.  ஓலைச்சுவடிகள் பதிப்பித்தல், கல்வெட்டு தேடல் என தொல்லியலில் அவரது தொடர் பங்களிப்பு என உரையாடல் நீண்டது. 
ஈரோடு திருப்பூர் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் நிறைய கல்வெட்டுக்கள் கண்டறிந்து படித்து ஆவணத்தில் பதிவும் செய்துள்ளார். தமிழக தொல்லியல் கழகம் வெளியிடும் "ஆவணம்" இதழுக்கு கொங்குப் பகுதியிலிருந்து தொடர்ந்து நிறைய பங்களிப்பை வழங்கியுள்ளார்.  இதுகாறும் அவரால் பதிவு செய்யப்பட்ட தரவுகளை ஒவ்வொன்றாகச் சொல்லி வரும்போது  பவானி அருகேயுள்ள சாணாராபாளையம் நடுகல் குறித்தும் அதை முழுவதும் ஆய்வு செய்ய இயலாமல் போனது பற்றியும் பகிர்ந்து கொண்டார்.  
இவருடனான சந்திப்பு முடிவடைந்தவுடன்  சாணராபாளையம் சென்று நடுகல்லைப் பார்க்க முடிவு செய்து அங்கு சென்றோம். நடுகல்லைப் படியெடுத்துக் கொண்டிருக்கும் போது அருகிலுள்ள தோட்டத்தின் உரிமையாளர் இங்குள்ள செக்கில் ஒரு கல்வெட்டு இருப்பதாகக் கூறி அழைக்க அவையிரண்டும் கொங்கின் வரலாற்றிற்கு ஓர் புதிய வரவாக அமைந்தன. 
கொங்கின் நிலவியல் அமைப்பும் அதன் வளங்களும் தொல் பழங்காலத்தில் நிறைய இடங்களில் மக்கள் வாழ்விடங்கள் ஏற்படுத்திக் கொண்டு வாழ்வதற்கு உகந்த இடமாக இருந்துள்ளது. குறிப்பாக நொய்யல் நதிக்கரையில் பேரூர், வெள்ளலூர், சூலூர், கொடுமணல் போன்ற இடங்கள் ஏராளமான வெளிநாட்டு வணிகர்களையும் மக்களையும் ஈர்த்த பகுதி என்பதை நிறைய அகழாய்வுகளின் மூலம் தொல்லியல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். நொய்யல் நதிக்கரை மட்டுமே கொங்குப் பகுதியின் முழுமையான பண்பாட்டுத் தடயம் ஆகாது. தென்கொங்குப்  பகுதியின் அமராவதி ஆற்றங்கரை நாகரீகமும் வடகொங்குப்  பகுதியின் பவானி நதிக்கரை நாகரீகம் குறித்தும் அதிகளவில் பேசப்படவில்லை. எனினும் அவற்றிலும் ஏராளமான தொல்லியல் தடயங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறன. இந்த நிலப்பகுதியின் அமைப்பின் வித்தியாச தன்மையினால் இங்கு தொழிற் நகரம் இருந்த அதே நேரத்தில், மற்ற பகுதிகளில் மேய்ச்சல் தொழிலும், சில இடங்களில் விவசாயமும்  சிறப்புற்று விளங்கியது.  
பவானி ஆறு தமிழக எல்லையில் தான் தொடங்கும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாறை ஓவியங்கள், ஏராளமான இரும்பு கால மக்கள் தடயங்களும், சிறுமுகை, தெங்குமரஹடா உள்ளிட்ட தான் பாயும் கொங்கு நிலப்பரப்பில்  பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கொண்டு வளமான பண்பாட்டுத் தடயங்களை வெளிப்படுத்தி  ஈரோடு அருகேயுள்ள பவானியில் காவிரியோடு கலக்கும் நதி. இதன் கரையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அகழ்வு செய்யப்பட்டதற்குப் பின்னர் வேறெந்த அகழாய்வுகளும் நிகழவில்லை. நாளடைவிலான மக்கள் பயன்பாட்டில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டு ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே இவற்றை தற்போது அடையாளங் காணக்கூடிய சூழல் உள்ளது. 
பொதுவாக ஒரு வாழ்விடப் பகுதியில் அவர்களின்  பொதுப் பயன்பாட்டிற்குச் செக்கு அமைத்துத் தருவதே அக்காலத்தில் பெரும் பணியாகக் கருதப்பட்ட சூழல் நிலவியுள்ளது. கொங்கு நாட்டின் உடுவாங்க நாட்டுப் பிரிவில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் பொயு 2 நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறிப்பு கொண்ட அரிதான கல்வெட்டு கிடைத்திருப்பதும் இங்கு நினைவுக் கூறல் தகும். வடகொங்குப்  பகுதியின் ஓர் பகுதி எண்ணெய் நாடு என அழைக்கப்படும் அளவிற்கு இங்கு செக்கின் பயன்பாடு இருந்துள்ளது. 
இங்குள்ள வாழ்விட மேட்டில் மூன்று செக்குகள் பாறையில் வெட்டப்பட்டுள்ளன. அவற்றில் 90 செமீ விட்டமும் 40 செமீ ஆழமும் கொண்ட செக்கில் மூன்று வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. " (வ)ல்லவரய.. (ப)ருக்கிய…" என்ற வாசகத்தை மட்டும் படிக்கக்கூடிய அளவிலும் மற்ற எழுத்துக்கள் சிதைந்தும் காணப்படுகின்றன. 
கொங்கின் நிலவியல் அமைப்போடு ஒத்துப் போகும் திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி பகுதியில் இது போன்ற ஏராளமான செக்கு கல்வெட்டுகள் பல்லவர், சோழர் கால அரசர்களின் பெயர் தாங்கிய நிலையில் கிடைத்துள்ளன. கொங்குப் பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளில் பத்தாம் நூற்றாண்டு வரையில் பெரும்பாலும் அரசர்களின் பெயர் தாங்கி வருவதில்லை. உள்ளூர் தலைவர்களே நிர்வாகம் சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரிதாகக் கிடைக்கக்கூடிய கல்வெட்டுகளிலும் பெரிய அளவிலான செய்திகளையும் பெற முடிவதில்லை. 
இங்கு வல்லவரைய என்பவரின் பெயர் தொடக்க நிலையில் காணமுடிகிறது. அவரே இந்த செக்கினை அமைத்துக் கொடுத்தவர் என்று சொல்லலாம். செக்கு கல்வெட்டு இருக்கும் இடத்தில் ஏராளமான தொல்லியல் எச்சங்களான மட்பாண்டங்கள் சில ஏக்கர் பரப்பளவில் விரவிக் காணப்படுகின்றன. இவை தொடர்ச்சியான உழவுத் தொழிலின் போது மண்ணின் உள்ளடுக்குகளில் இருந்து வெளிப்படுபவையாகும். கொங்கு நாடு தனது மட்பாண்ட கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது. பழமையான வாழ்விடம் பகுதியில் மேடான இடத்தில் பொது யுகம் 8/9 நூற்றாண்டு எழுத்தமைதியில் கிடைத்திருக்கும் இக்கல்வெட்டு தொல்லியலை உறுதிப்படுத்தும் முக்கிய வரலாற்றுச் சான்றாக உள்ளது.
நடுகல் 135 செமீ உயரமும் 115 செமீ அகலமும் உடைய அளவில் கல்லின் முழுப் பகுதியிலும் வீரனின் உருவம் பெரிய அளவில் புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் வலது கையில் நீண்ட வாளும் இடது கையில் தட்டையான கேடயமும் கொண்டு எதிரிகளை எதிர்கொள்ளும் நிலையில் இடுப்பில் அரைக்கச்சும் ஆடைகளும் காற்றில் அசைந்தாடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடுகல் கல்வெட்டு பதின்மூன்றாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் இந்த பகுதியில் ஏற்பட்ட பூசலில் ஊரழிவினைத் தடுக்கும்  பொருட்டு ஓர் வீரன் இறந்துபட்ட நிகழ்வினை  குறிப்பிடுகிறது. ஊராளி என்னும் சொல் இப்பகுதியில் கிடைத்துள்ள மற்ற நடுகல் கல்வெட்டுகளிலும் தொடர்ந்து பயின்று வருவதைக் காண முடிகிறது. இராசேந்திர சோழன் காலத்திய துக்காச்சி நடுகல், அதே காலகட்டத்தைச் சேர்ந்த பழமங்கலம், பட்லூர் கல்வெட்டுகளிலும் இச்சொல் பயின்று வந்துள்ளது. தொடக்கத்தில் ஊரை ஆள்பவர்/கிழார் என்ற பதத்தில் பயன்படுத்தப்பட்ட இச்சொல் காலப்போக்கில் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு  சமுதாயத்தின் தலைவர்களைக் குறிக்கும் பதத்தில்  சில இடங்களில் வந்துள்ளது.  இறந்த வீரனின் பெயரைத் தெளிவாக அறிய முடியவில்லை. அவ்வீரனின் நினைவாக வேட்டுவர் வெள்ளைமார் ஊராளிகள் நடுகல் எடுத்து வீரனின் சமுதாயப் பற்றினை போற்றியுள்ளனர். 
ஓர் பழமையான வாழ்விடம் பகுதியில் அம்மக்களின் அன்றாட தேவையைப் பூர்த்தி செய்ய செக்கு அமைத்துக் கொடுத்ததும் அதன் 400 ஆண்டுகளுக்குட்பட்ட இடைவெளிக்குப் பின் அங்கு ஊர் பகுதி இருந்ததும், அதனைக் காத்து இறந்த வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டும் கொண்டிருக்கும் சானரப்பாளையம் வடகொங்குப்  பகுதியில் ஓர் முக்கிய பண்பாட்டு இடமாக விளங்கியது எனலாம். 
கொங்குப் பகுதியில் இதுவரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட நடுகற்கள் கிடைத்திருந்தும் என்பது சதவீத நடுகற்களில் கல்வெட்டுகளைக் காண முடிவதில்லை.  இந்நிலையைப் பார்க்கும் போது அரிதாகக் கல்வெட்டுகள் கொண்டிருக்கும் இது போன்ற நடுகற்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. 
நன்றி: 
முனைவர் ரா.பூங்குன்றன், கல்வெட்டறிஞர் சு.இராஜகோபால் ஐயா,
தி இந்து ஆங்கில நாளிதழ் நிருபர் சரவணன் அண்ணன்
hero stone.jpghero stone2.jpg
hero stone3.jpg
oilmill.jpg
hero stone4.jpg
---

தேமொழி

unread,
Oct 21, 2020, 2:49:59 AM10/21/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/story.php?story_fbid=171855691197277&id=100051185418894


சென்றவாரம் எனது உடன்பணிபுரியும் ஆசிரியரும் நண்பருமான சென்னஞ்சுவாமி தன் உறவினர் தவறியதால் அவரை நல்லடக்கம் செய்ய அவரது வயற்காட்டிற்க்கு சென்ற போது அங்க ஒரு சிற்பங்கள் பொறிக்கப்பட்ட பெரிய பலகை கல்லை கண்டதாக தகவலளித்தார்.
நானும் மனோரஞ்சித்( தமிழாசிரியர்) இருவரும் வண்டியில் தொட்டபுரம் நோக்கி விரைந்தோம் எம் பள்ளி அமைந்திருந்த சிக்கஹள்ளியிலிருந்து தொட்டபுரம் 8 கி.மீ தொலைவில் உள்ளது
நடுவில் வனபகுதியை கடந்துதான் செல்ல வேண்டும் தொட்டபுரத்தில் ஏற்கெனவே மாணவர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டு 14 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு உட்பட புலிகுத்திகல்,நடுகற்கள் என கண்டறிந்து பதிவு செய்யப்பட்டது. அக்காலத்தில் தொட்டபுரம் தலமலையை சுற்றியுள்ள ஊர்களில் முக்கியமான பெரிய வாழ்விடப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் (தொட்ட- பெரிய)
தொட்டபுரத்திலிருக்கும் நண்பர் சென்னஞ்சுவாமியின் பூர்வீக இல்லத்தில் அவரை சந்தித்தோம் அங்கிருந்து ஊருக்கு வெளியே வனப்பகுதிக்கருகே அமைந்துள்ள அவரது உறவினர் தோட்டத்திற்கு அழைத்து சென்றார் அங்கு வயற்காட்டிற்க்கு நடுவே பெரிய நடுகல் படுத்த நிலையில் கிடந்தது. அந்த நடுகல்லை கண்டமாத்திரத்தில் பெரும் மகிழ்வுற்றேன்.. இது வரை தாளவாடி மலைக்கிராமங்களில் ஏராளமான நடுகற்கள், சதிகற்கள் தொன்மக் கூறுகளை கண்டறிந்து பதிவிட்டிருக்கிறோம் ஆனால் முதன்முறையாக தலைபலிகல் அதுவும் சிறப்பாக கர்நாடக பகுதிகளில் காணப்பெறும் மூன்றுநிலை அமைப்பில் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு அளவேது?
நடுகல் அமைப்பு-;
சுமார் 5 அரை அடி உயரம் 3 அடி அகலம் கொண்டு மூன்றடுக்கு நிலையில் அமைந்துள்ளது. கீழிருந்து மேலாக -;
முதல்நிலை-; தன்னுயிர் கொடையாளி தன் இன்னுயிரை ஈந்து கொடுக்க சித்தமாய் பீடத்தில் கால்களை மத்தியில் சரிவிகிதமாய் மடக்கி கைகளை கூப்பி வணங்கியவாறும் தலையை கொய்யும் சடங்கை நிறைவேற்ற முனைபவன் முன்னேறிய நிலையில் சற்று குனிந்தவாறு இரு கரங்களில் நீண்ட கொடுவாள் போன்ற ஆயுதத்தை தலைக்கு மேலே உயர்த்தியவாறும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை-; இறந்துபட்ட தலைபலிவீரனின் ஆன்மாவை கரங்களில் வெண்சாமரம் பற்றிய இரு தேவகன்னிகையர் இடுப்பில் கை கோர்த்து அணைத்தபடி விண்ணுலகம் அழைத்து செல்லும் காட்சி அவர்கள் வான் வெளியே பறந்து செல்கின்றனர் என்பதையுணர்த்த கால்கள் சற்று மடங்கிய நிலையில் காட்டியிருப்பது சிறப்பு.
மூன்றாம் நிலை-; மேலுலகில் இந்திரன் சுகாசனத்தில் அமரந்த நிலையில் வலது கரத்தை நாசிக்கருகே பிடித்தவாறும்( பேகூர் தலகுப்பே போன்ற கங்கர் கால நடுகற்களில் இந்திரன் மலரை முகர்ந்தவாறு காட்டப்பட்டிருப்பது போன்று இருக்கலாம்.) இருமருங்கிலும் தேவகன்னிகையர் வெண்சாமரம் பற்றிய படி நின்ற நிலையில் காட்சி தருகின்றனர் இவற்றின் காலம் 8-9 நூற்றாண்டு மற்றும் கங்கர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்!
ஆத்மஹுதி-; அக்காலத்தில் தனது அரசன் நலனுக்காகவும் போர்களில் வெற்றி பெற வேண்டியும், தம் குடும்பத்திற்காகவும் பொது நலனுக்காக வும் தனது தலையை வெட்டி கொற்றவைக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்தது இதனை பழந்தமிழ் இலக்கியங்கள் நவகண்டம் தூங்குதலை அரிகண்டம் என குறிப்பிடுவது போன்றே பழங்கால கன்னட இலக்கியங்களும் ஆத்மஹுதி, சிடிதலே( தூங்குதலை) என இந்நிகழ்வை
உரைக்கின்றது. இருப்பினும் தமிழகத்தில் கிடைக்கப் பெறும் நவகண்ட சிற்பங்களுக்கும் கர்நாடகத்தில் காணப்பெறும் ஆத்மஹுதி ( தலைப்பலி) சிற்பங்களுக்கும் அடிப்படையில் ஒரு பெரும் வித்தியாசத்தை காணமுடிகிறது.
தமிழகத்தில் உள்ள நவகண்ட வீரன் ஒரு கையில் தலையில் உச்சிகுடும்பியை பற்றிக் கொண்டு மறு கரத்தால் தன் கழுத்தை தானே அறுத்தவாறு காட்சி தருகிறான் ஆனால் கர்நாடக சிற்பங்களில் பெரும்பாலும் தலைப்பலி வீரன் அமரந்த நிலையில் மற்றொருவன் தலையை கொய்யும் சடங்கை நிகழத்துவது போன்று காட்டிருப்பது நமக்கு வியப்பையளிப்பதோடு தன் தலையை தானே அரிந்து கொள்ளுமளவு மனவலிமை பெற்றிருக்க வில்லையோ என்ற ஐயப்பாடை உண்டாக்குகிறது.
tholthadayam1.jpg
tholthadayam2.jpg
--------

தேமொழி

unread,
Oct 26, 2020, 12:07:05 AM10/26/20
to மின்தமிழ்
திருப்பரங்குன்றம் அருகே திருவள்ளுவர், நந்தனார் சிற்பங்கள் – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு:
https://dailytamilnews.in/latestnews/2776-மதுரை-அருகே-நந்தனார்-வள்.html

வள்ளுவர்.jpg
October 26, 2020

திருப்பரங்குன்றம் அருகே திருவள்ளுவர், நந்தனார் சிற்பங்கள் – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு:

திருப்பரங்குன்றம் அருகே பல்லாண்டு காலமாக மக்களின் வழிபாட்டில் இருந்த திருவள்ளுவர் மற்றும் நந்தனார் சிலைகளை ஆய்வாளர்கள் இன்று கண்டறிந்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தினர்.

தியாகராஜர் கல்லூரியிலிருந்து திருப்பரங்குன்றம் கோயில் செல்லும் சாலையின் வளைவில் சுமார் நான்கடி உயரமும் நான்கடி அகலமும் கொண்ட பலகைக்கல் ஒன்றில் திருவள்ளுவர் மற்றும் நந்தனார் சிற்பங்கள் புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களின் கீழே திருவள்ளுவர், நந்தநார் என்று கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன.

கோயில் கட்டடக்கலை ஆய்வாளர் தேவி வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் தொல்லியல் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் இணைந்து இந்தக் கள ஆய்வில் மேற்காணும் சிற்பங்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் தேவி கூறுகையில், இக்கல்வெட்டுகளைக் கொண்டு இப்பலகைக்கல்லில் உள்ள முனிவர்களைப் போன்று நீண்ட தாடி, மீசையுடன் காணப்படும் இரு ஆண் உருவங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் பீடத்தின் மீது இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இடது கையில் சுவடிகளைத் ஏந்தியும், வலதுகையில் எழுத்தாணியைப் பிடித்தபடியும் உள்ளார். தலையில் தலைப்பாகை (முண்டாசு போன்று) காணப்படுகின்றது. நீண்டு தொங்குகின்ற மீசை, மார்பு வரை நீண்டுள்ள தாடியுடன் தோற்றமளிக்கும் புலவரின் மார்பில் யக்ஞோபவீதம் என்னும் முப்புரிநூல் காட்டப்பட்டுள்ளது. மேலும் கழுத்தில் பதக்கத்துடன் கூடிய முத்துமாலை காணப்படுகின்றது. கணுக்கால் வரையிலான நூலாடை மடிப்புகளுடன் கூடியதாக அணிந்துள்ளார். சற்று பருத்த உருவத்தினராய் காட்டப்பட்டுள்ள திருவள்ளுவரின் விழிகள் பெரியதாக மூடிய நிலையில் உள்ளன. அவரின் காலடிக்கு கீழே திருவள்ளுவர் என்ற கல்வெட்டு இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
 
இப்புடைப்புச்சிற்பத்தின் அருகே மற்றுமொரு சிற்பம் முன்னவரைப் போன்றே நீண்ட தாடி, மீசையுடன் யானையின் மீது அமர்ந்துள்ளார். இச்சிற்பத்தின் கீழே “நந்தநார்“ என்று கல்வெட்டு பொறிப்புக் காணப்படுவதால் இவரை 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் என்று கருதவேண்டியுள்ளது. திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநாளைப்போவார் நாயனார் என்றழைக்கப்படும் நந்தனாரின் வரலாறு தனித்துவமானது. புலையர் இனத்தில் பிறந்து சைவத்தின் புறத்தொண்டு புரிந்து இறைவனடி அடைந்த நந்தனார் சரித்திரம் “ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே“ என்ற அப்பரின் வாக்கிற்கேற்ப நாயன்மார் ஆனார் நந்தனார் என்னும் திருநாளைப்போவார்.

இச்சிற்பத்தில் நந்தனார் தன்னுடைய கழுத்தில் தோற்வார்ப்பட்டையுடன் மாட்டியுள்ள சிறிய பறையை இரு கைகளாலும் முழக்குவதாக இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டபடி சுகாசனத்தில் அமர்ந்துள்ள நந்தனார் முன்னவரான திருவள்ளுவர் போன்ற தொங்கும் மீசையுடன் மார்பு வரை நீண்டுள்ள தாடியுடன் காணப்படுகிறார். ஆனால் அவரைப் போன்று அல்லாது சற்று ஒடுங்கிய தேகம் கொண்டவராய் காணப்படும் நந்தனாரின் மார்பில் புரிநூல் காட்டப்படவில்லை. பறையின் வார்ப்பட்டை மட்டுமே கழுத்தில் தெரிகின்றது. இவரும் கணுக்கால் வரை ஆடை அணிந்துள்ளார். நந்தனார் யானை மீது அமர்ந்து பறை முழக்குவதாக இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மடக்கிய துதிக்கையில் பழம் போன்ற ஒன்றை யானை பிடித்துள்ளது. யானையின் முகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது.

பெரியபுராணத்தின் நந்தனாரின் புராணத்திற்கும் இச்சிற்பத்திற்கும் உள்ள தொடர்பு யாதென்று தெரியவில்லை.

இச்சிற்ப பலகை வேறு எங்கேனும் இருந்து அதாவது அருகில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புனரமைப்பின் போது இங்கு கொண்டு வரப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றதா என்பது ஆராயப்படல் வேண்டும். எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடி கையிலிருப்பதால் திருவள்ளுவரின் உருவமைதியை அக்கல்வெட்டுப் பெயர் மெய்ப்படுத்துகிறது. ஆனால் திருவள்ளுவரின் அருகில் அதுவும் ஒரே பலகைக் கல்லில் நந்தனாரின் சிற்பம் செதுக்கப்படுவதற்கான காரணம் யாதென்பது மேலும் ஆய்வுக்குரியது. அச்சிற்பம் நந்தனார் தான் என்பது கீழே உள்ள கல்வெட்டினால் உறுதிப்பட்டாலும் அக்கல்வெட்டுகளின் எழுத்தமைதியை நோக்குகையில் சிற்பத்தின் உருவமைதி காட்டும் காலத்தை விட சற்று பிற்காலத்தியதாக தோன்றுகிறது. இந்நிலையும் ஆய்வுக்குரியது என்றார்.


---


தேமொழி

unread,
Nov 5, 2020, 2:05:58 PM11/5/20
to மின்தமிழ்

வேறு எங்கும் இல்லை; கொடுமணல் அகழாய்வில் தமிழ் நெடில் எழுத்துகள் கண்டுபிடிப்பு: 
உயர்நீதிமன்ற கிளையில் தொல்லியல்துறை தகவல்.!!!  

மதுரை: கொடுமணல் அகழாய்வில் தமிழ் நெடில் எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கிழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் தாமிரபரணி  பகுதிகளில் பல்வேறு இடங்களில் மத்திய, மாநில தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு தொடர்ந்து நடத்தவும், அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கவும் பல்வேறு மனுக்கள்  உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் இன்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தொல்லியல்துறை சார்பில் பல்வேறு தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக,  கொடுமணலில் நடத்தப்பட்ட அகழாய்வின்போது, தமிழில் உள்ள நெடில் ஆ, ஈ போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு நெடில் எழுத்துகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற  அகழ்வாய்வில் எங்கும் தமிழில் நெடில் எழுத்துகள் கிடைக்கவில்லை. கொடுமணலில் தான் தமிழ் எழுத்துக்கள் கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழ் எழுத்துக்கள் கிடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக, 12 பொருட்களை கார்பன் டேட்டிங் சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி  கிடைப்பெற்ற 12 பொருளை வயது, காலங்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதனை ஆய்வகத்திற்கு அனுப்பும் செலவை தமிழக அரசு ஏற்று 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, கீழடி மற்றும் பல்வேறு  இடங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளின் தற்போதைய நிலை என்ன?, அதிக கல்வெட்டுகள், எழுத்துகள் தமிழில் இருக்கும்போது சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் ஏன்? என்ற பல்வேறு கேள்விகளை மத்திய  தொல்லியல்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தொல்லியல்துறை, பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பொறுப்பாளர்கள் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர். விரைவில் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என்றனர்.
தொடர்ந்து, 12 பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பியது தொடர்பாக 1 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  

Sathivel Kandhan Samy

unread,
Nov 6, 2020, 11:44:02 PM11/6/20
to mint...@googlegroups.com
தகவலுக்கு நன்றி.  பல பொய் மாயைகள் களையப்படுகின்றன் நீதிமன்ற நடுனின்ற சொல்லால்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d24b9907-4828-46dc-bfc3-c74f8877b7b3n%40googlegroups.com.

தேமொழி

unread,
Nov 19, 2020, 5:03:09 PM11/19/20
to மின்தமிழ்
பெருங்கற்கால மரபின் எச்சமாக நாயக்கர் காலத்தில் கல்திட்டை மற்றும் நடுகற்கள் 

மதுரை கள்ளந்திரியில் கல்திட்டை, திருமங்கலம் வடகரை புதுாரில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்லை மதுரை கோயில் கட்டட கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் சசிகலா, வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் கண்டுபிடித்தனர்.

அவர்கள் கூறியதாவது: கள்ளந்திரி கால்வாய் அருகே கிழக்கு பார்த்தபடி 3 பக்கங்களும் 6 குத்து கற்கள் நட்டு மேலே பலகை கல் மூடிய கல்திட்டை உள்ளது. உள்ளே சிறு கல் ஊன்றி மாலை அம்மன் கோயில் என அப்பகுதி மக்கள் வழிபடுகிறார்கள். அருகில் 20க்கும் மேற்பட்ட தனி கற்களில் இறந்தவர் பிறப்பு, இறப்பு தேதி பொறிக்கப்பட்டுள்ளது.பெருங்கற்கால மரபின் எச்சமாகப் பல கல்திட்டைகள் நவீனக் காலத்தில் உருவாக்கியதை இங்கு காணலாம்.

b.jpg
c.jpg
a.jpg

கொங்கு நாட்டிலிருந்து விஜய நகர நாயக்கர் காலத்தில் பாண்டிய மண்டலம் வந்த ஒரு இனத்தினர் இங்கும் இறப்பு சடங்கு பின்பற்றியதை இக் கல்திட்டைகள் உணர்த்துகின்றன. திருமங்கலம் வடகரை புதுாரில் சிறு பலகை கல்லில் இரு ஆண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் இருப்பவர் இடது கையில் வளரி, வலது கையில் வாள், தலையில் கொண்டை வடிவ தலையணி அணிந்து அரை ஆடையுடன் இயக்க நிலையில் உள்ளார்.

இடதுபுறம் இருப்பவர் உயரம் குறைந்து, நீண்ட காது, அரை ஆடையுடன் வலது கையில் வாள், இடது கையில் குடுவை வைத்துள்ளார். தலைக்குப் பக்கவாட்டில் சந்திரன், சூரியன், பூ அமைப்பு உள்ளது.இவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் வடகரை ஊரை உருவாக்கிய சோழ மூக்கன், நல்ல மூக்கன் என்ற சகோதரர்கள். இவர்களது வாரிசுகள் இவர்களுக்கு நடுகல் எடுத்து, இன்றும் விழா எடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் என்றனர்.


தெரிவு: முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
நன்றி: தினமலர் - நவம்பர்  19, 2020 (https://www.dinamalar.com/news_detail.asp?id=2654963)
---

தேமொழி

unread,
Nov 21, 2020, 5:20:05 PM11/21/20
to மின்தமிழ்
source  - https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=632641

அகரத்தில் ஆறு உறைகிணறுகள் திசை மாறிய வைகை ஆற்றிற்கு சான்று 

2020-11-20

 அகரத்தில் கண்டறியப்பட்ட உறைகிணறுகள் திசை மாறிய வைகை ஆற்றிற்கு சான்றாக இருக்கக்கூடும் என வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது. அகரத்தில் தங்க நாணயம், கெண்டி மூக்கு பானை உள்ளிட்ட 1,020 பொருட்கள் கண்டறியப்பட்டன. அகரம் அகழாய்வில் 26 அடுக்கு மற்றும் 4 அடுக்குகள் கொண்ட உறைகிணறுகள் கண்டறியப்பட்டிருந்தன.

தற்போது அகழாய்வின் முடிவில் அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த 6 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆறரை மீட்டர் உயரத்தில் 26 அடுக்குகள் கொண்ட உறைகிணறு, 8 அடுக்குகள் கொண்ட உறைகிணறு, 6 அடுக்குகள் கொண்ட உறை கிணறு, மூன்று அடுக்குகள் கொண்ட உறைகிணறு, ஒரு அடுக்கு கொண்ட உறைகிணறு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.
வரலாற்று பேராசிரியர் (ஓய்வு) மணலூர் முத்துச்சாமி கூறுகையில், ‘‘ஆறுகள் சுனாமி, வெள்ளச்சீற்றம் உள்ளிட்ட காலக்கட்டங்களில் திசை மாறிச் செல்லும் என கருதப்படுகிறது.

அதன்படி தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு இதுவரை மூன்று முறை திசை மாறியுள்ளது என கூறப்படுகிறது. ஏற்கனவே இருமுறை திசை மாறிய வைகை ஆற்றின் தடம் கண்டறியப்படவில்லை.தற்போது கீழடி, அகரத்தில் கிடைத்த உறை கிணறுகளின்படி வைகை ஆற்றின் தடம் கீழடி, அகரம் வழியாக சென்றிருக்க வாய்ப்புள்ளது. காரணம் ஆற்றினுள்தான் தற்போது கூட கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் தோண்டப்படுகின்றன. எனவே பண்டைய காலக்கட்டத்தில் ஆற்றுப்படுகையில்தான் உறைகிணறுகள் இருந்திருக்க கூடும். தற்போது வெளிப்பட்டுள்ள உறைகிணறுகள் அதற்கான சான்றாக இருக்க கூடும். அடுத்தடுத்த ஆய்வுகளில் இது உறுதியாக தெரியவரும்’’என்றார். டேராடூன் பல்கலை கழக பேராசிரியர்கள் குழு அகரத்தில் உள்ள மண் அடுக்குகளை நீண்ட கால ஆய்விற்கு எடுத்து சென்றுள்ளனர். ஆய்வு முடிவுகள் வெளியாகும் போது உறைகிணறுகளின் காலக்கட்டங்களும் தெரிய வரும்.
-----

தேமொழி

unread,
Dec 14, 2020, 3:42:12 AM12/14/20
to மின்தமிழ்

உத்திரமேரூர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல் 

உத்திரமேரூரில் உள்ள பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் 565கிராம் எடையுள்ள தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது. இந்தக்கோயில் புனரமைப்பு பணிக்காக இடிக்கப்படும்போது கிடைத்த தங்கப் புதையலை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் எடுத்துச் சென்றனர். அதை வருவாய் துறை கைப்பற்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரமேரூரில் குழம்பேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் முற்றிலும் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து திருப்பணிகளைச் செய்யமுடிவு செய்து, கடந்த 10-ம் தேதிபாலாலயம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சிதிலமடைந்த கோயிலை இடித்து கோயிலின்படிக்கட்டுகளை அப்புறப்படுத்தினர்.

அப்போது படிக்கட்டுகளுக்கு கீழே பெட்டி போன்ற அமைப்பு இருந்தது. அதில் தங்கக் காசுகள், ஆபரணங்கள், தங்கத்தால் ஆன மணிகள், தகடுகள் ஆகியவை இருந்தன. இதுகுறித்து திருப்பணிக் குழுவினரிடம் அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் எடை போட்டு பார்த்தபோது 565 கிராம் அளவுக்கு தங்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அவற்றை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் எடுத்துச் சென்று பத்திரப்படுத்தினர். இது தொடர்பாக தகவல் அறிந்த வருவாய் துறையினர் புதையலை கைப்பற்ற சம்பவ இடத்துக்கு வந்தபோது, புதையலை தர மறுத்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து வருவாய் துறையினர், "2 மணி நேரத்துக்குள் புதையலை ஒப்படைக்காவிட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தனர்.

சாமியாடிய பெண்

இந்த வாக்குவாதத்துக்கு மத்தியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென்று அருள் வந்து ஆடினார். பொதுமக்கள் அனைவரும் அவரை சூழ்ந்துகொள்ள, "இது இளவரசியின் நகை. கோயிலுக்கு கொடுத்த இந்த நகையை கோயிலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார். இதை ஏற்ற பொதுமக்களில் சிலர், "சாமியே கூறிவிட்டது; இதை கோயிலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்" என்று ஆவேசமாகக் கூற அதிகாரிகள் செய்வதறியாமல் விழித்தனர்.

இதைத் தொடர்ந்து கூடிப் பேசிய அந்தக் பகுதி முக்கியப் பிரமுகர்கள், கோயில் திருப்பணிக் குழுவினர், இந்த நகைகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பது என்றும், கோயிலை கட்டி முடித்தபின் இந்த நகைகளை இதே கோயிலுக்கு வழங்க வேண்டும் அல்லது கோயில் கட்டுமானப் பணிக்கு அரசு உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பது என்றும் முடிவு செய்தனர். இதன்பின்னர் இந்த புதையல் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரசு கண்காணிக்குமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர் கால அரசர்கள் கட்டிய, விரிவுபடுத்திய பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் பலவற்றை அறநிலையத் துறை தன் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருகிறது. ஆனால், சிலகோயில்கள் பராமரிக்க ஆள் இல்லாமல் உள்ளன. குழம்பேஸ்வரர் கோயிலும் அப்படித்தான் உள்ளது. பழங்கால கோயில்கள் அரசர்கள் காலத்தில் அரசு கஜானாக்கள், நகைகளை பாதுகாக்கும் இடமாகவும் செயல்பட்டு வந்தன.பிற மன்னர்களின் படையெடுப்புகளின்போது நகைகளை பாதுகாக்க கோயில்களில் பதுக்கி வைத்ததாகவும் வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நகைகள் மட்டுமல்லாமல் பழங்கால கோயில்களில் மன்னர்களின் வரலாற்றை அறிய உதவும்கல்வெட்டுகள், அரிய சிலைகள், நினைவுப் பொருட்கள் ஆகியவையும் புதைந்து கிடக்கின்றன. இவை கோயில் புனரமைப்பின்போது தெரியாமல் சேதப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. புதையல்கள் கிடைத்தாலும் எவ்வளவு கிடைத்தது என்பதை எடுப்பவர்கள் கூறி கொடுப்பதையே வருவாய் துறையினர் ஏற்க வேண்டியுள்ளது.

எனவே, மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கோயில்களை புனரமைக்கும்போது அவற்றை வருவாய் துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் கண்காணிக்க வேண்டும். கோயில்கள் இடிக்கப்படும்போது கிடைக்கும் அரிய பொருட்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

______________________________

தேமொழி

unread,
Dec 18, 2020, 4:16:40 AM12/18/20
to மின்தமிழ்


உடுமலை அருகே கிரந்த வரிவடிவத்துடன் கூடிய 1000 ஆண்டு பழமையான தூம்பு கண்டெடுப்பு 

thumbu.gif 
பதிவு: டிசம்பர் 17,  2020 
திருப்பூர்,

மனித குலத்தின் அடிப்படை தேவைகளில் மிக முக்கியமானது தண்ணீர். அதனால்தான் வள்ளுவப் பேராசான் நீரின்றி அமையாது உலகு என்றார். மேலும் மனிதகுல நாகரிகங்கள் அனைத்துமே நீரை அடிப்படையாக வைத்து தோன்றியவை தான். இன்றுவரை கிராமப்புற மக்களின் உயிர் நாடியாக விளங்கிவரும் கால்நடை செல்வங்களும், வேளாண்மையும் இந்த நீரை சார்ந்தே இருக்கின்றன. எனவே இந்த நீரின் அளவு ஒட்டுமொத்த சமூகத்தை பாதிக்கிறது.

எனவேதான் 2ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் சமூகம் நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. மழைக்காலங்களில் மிகுதியாக வரும் நீரைக்குளம், குட்டை, கண்மாய், ஏரி போன்ற பல்வேறு தாழ்வான பகுதிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் அவற்றை நீர் தேவைப்படும் கோடை காலங்களில் மடை, மதகு, தூம்பு, கலிங்கு, குமுளி, வாய்க்கால் போன்றவை மூலம் வேளாண்மைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சு.சதாசிவம், க.பொன்னுச்சாமி மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் உடுமலை தாலுகாவில் அமைந்துள்ள வடபூதிநத்த கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1000 ஆண்டுகள் பழமையான தூம்பை கிரந்த கல்வெட்டுகளுடன் கூடிய கூம்பு கண்டறிந்துள்ளனர்.

இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது:-

கிரந்த எழுத்து:
இடைக்கால கல்வெட்டுக்களில் வீரநாராயணப்பெருவழி என அழைக்கப்படும் பெருவழியில் அமைந்துள்ள ஊர் தான் வடபூதிநத்தம். இங்கு பண்டைய ரோம வணிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஏற்கனவே 1,500 வெள்ளி ரோமானிய காசுகள் கிடைத்துள்ளன. இங்கு உள்ள பெரிய குளத்திற்கு திருமூர்த்தி மலையில் பெய்யும் மழைநீர் வந்து சேர்கிறது. இன்றுவரை இந்த குளத்துநீர் வேளாண்மைக்குப் பயன்பட்டு வருகிறது.

இந்த பெரியகுளத்தில் ஆய்வு மேற்கொண்டபோது வலம்புரி விநாயகர் மற்றும் லட்சுமி உருவங்களுடன் கூடிய சிற்பத்தின் பின்புறத்தில் தூம்பு இருப்பதையும், இதில் வலம்புரி விநாயகர் சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் 4 வரிகளில் கிரந்த எழுத்துகள் இருப்பதையும் கண்டறிந்தோம். தமிழ் கல்வெட்டுகளில் வடமொழி சொல்லை பயன்படுத்த நேர்கின்ற போது இவற்றை எழுத கிரந்த எழுத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்.

தூம்பு கல்வெட்டு:
இங்குள்ள தூம்பின் மேல்பகுதியில் வலம்புரி விநாயகர் 4 கரங்களுடன் பத்மபீடத்தில் அமர்ந்த நிலையில் கீழ் இரு கைகளைத்தொடையின் மீது வைத்தபடியும், மேல் இரு கைகளில் வலது கையில் அங்குசமும், இடது கையில் மலரையும் பிடித்தபடி காணப்படுகிறார். இத்தூம்பின் உயரம் 140 செ.மீ மற்றும் அகலம் 50 செ.மீ ஆகும். இத்தூம்பின் கீழ்ப்பகுதி உடைந்துள்ளது. மிகவும் அழகான மாலைத்தொங்கல் உடன் காணப்படும் இத்தூம்பின் கீழ் பகுதியில் உள்ள கிரந்த கல்வெட்டை இந்திய வரலாற்று பேரறிஞர் சுப்பராயலு வாசித்தார். ஸ்வதிஸ்ரீ என தொடங்கும் இக்கல்வெட்டு கி.பி. 1000 ஒட்டி உள்ளதாகவும் இந்த பெரிய குளத்திலிருந்து நீர் பாசனம் பெறும் வேளாண் நிலங்கள் என்றுமே ஈரப்பதம் நிறைந்து மிகவும் செழிப்பாக பயிர்கள் காணப்படுவதாகவும் குறிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இதன் வளமையை குறிப்பதற்காகத்தான் வலம்புரி விநாயகர் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டு உடைந்து உள்ளதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை.

லட்சுமி தூம்பு:
70 செ.மீ உயரமும், 50 செ.மீ அகலமும் கொண்ட இத்தூம்பில் லட்சுமி பத்மாசன நிலையில் அமர்ந்தபடி வலது மற்றும் இடது கையில் மலரை பிடித்தபடி உள்ளார். மேலே இருபக்கமும் சாமரமும் காணப்படுகிறது. இரு தூம்பின் இடுதுளைகளும் 18 செ.மீ விட்ட அளவுடன் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டு மற்றும் தூம்பின் மூலம் கி.பி 10-ம் நூற்றாண்டிலேயே கொங்கு மண்டலத்தில் ஏரி, குளங்களில் தேங்கிய நீரை வாய்க்கால்கள் மூலம் வேளாண்மைக்கு பயன்படுத்தி உள்ளதை நாம் அறிய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
---

தேமொழி

unread,
Dec 19, 2020, 3:51:39 AM12/19/20
to மின்தமிழ்
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/dec/18/விழுப்புரம்-அருகே-பாண்டியா்-கால-கல்வெட்டு-3526619.html

விழுப்புரம் அருகே பாண்டியா் கால கல்வெட்டு  

Dec/18/2020

விழுப்புரம் அருகே பாண்டியா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.  
kalvettu1.JPG
விழுப்புரம் அருகே அய்யூா்அகரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் கருவறையின் பின்புறம் இருந்த பழங்காலக் கல்வெட்டை விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியா்கள் த.ரமேஷ், த.ரங்கநாதன் உள்ளிட்டோா் அண்மையில் கண்டறிந்தனா்.  

  இந்தக் கல்வெட்டிலுள்ள தகவல்கள் குறித்து அவா்கள் கூறியதாவது: பிற்கால பாண்டிய மன்னரான மாறவா்மன் விக்கிரமபாண்டியன் ஆட்சிக் காலத்தில் (பொது ஆண்டு 1301) இப்பகுதி அதிகாரியாக இருந்த பாண்டிய மண்டல காப்பலூரைச் சோ்ந்த காலிங்கராயன் என்பவா், அரசனின் பட்டப்பெயரான கோதண்டராமன் என்ற பெயரால் இவ்வூருக்கு கோதண்டராம சதுா்வேதி மங்கலம் எனப் பெயரிட்டு, இவ்வூா் பிராமணா்களுக்கு நன்செய், புன்செய், நத்தம் ஆகிய பம்பையாற்றின் கரைப்பகுதிகளை பிரம்மதேயமாக வழங்கப்பட்டுள்ளதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.  

  இந்த ஊா், நடுநாடு ராஜராஜ வளநாட்டுப் பனையூா் (பனையபுரம்) பகுதியிலும், ஜனநாத சதுா்வேதி மங்கலத்தின் (விழுப்புரம்) வடக்கிலும் அமைந்த அகரம் அவ்வியூா் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வூரின் ஐயனாா் கோயிலில் உள்ள முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டில், இவ்வூா் "கையூருா்"; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியா் காலத்தில் அவ்வியூா்அகரம் என்றழைக்கப்பட்டு, தற்போது அய்யூா்அகரம் என மருவியுள்ளது.  

  இந்தக் கல்வெட்டில், பாண்டியா் காலத்தில் இவ்வூரில் செய்யப்பட்ட பயிா்களைப் பற்றியும், வரி விதிப்புகளைப் பற்றியும் அறியமுடிகிறது. அதன்படி, கமுகு (பாக்கு), தெங்கு (தென்னை), மா, பலா போன்ற மர வகைகளும், செங்கழநீா், செண்பகம், மரிக்கொழுந்து ஆகிய பூ வகைகளும், மஞ்சள், கரும்பு, வாழை, எள், கேழ்வரகு, வரகு, சாமை, பருத்தி, ஆமணக்கு, பூசணி, வெள்ளரி, வழுதலை (கத்திரிக்காய்) போன்ற புன்செய் பயிா்களும் பயிரிடப்பட்டதை கல்வெட்டு கூறுகிறது.  

  வரிவிதிப்புகளாக, கடமை பொன் வரி, காா்த்திகை பச்சைக் காணிக்கை, முகம் பாா்வை, வாசல் விநியோகம், தறியிறை, செக்கிறை, தட்டொலி, தட்டாா் பாட்டம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.  

  இக்கல்வெட்டின் மூலம் பிற்கால பாண்டியா்கள் ஆட்சி புரிந்தது, அவா்களின் வரிவிதிப்புகள், வேளாண் பயிா்கள் குறித்த தகவல்களைப் பெற முடிகிறது என்றனா்.  

தேமொழி

unread,
Dec 22, 2020, 4:15:02 AM12/22/20
to மின்தமிழ்

தமிழ் கல்வெட்டுகள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா?.. 
ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவு  

2020-12-21 
 
மதுரை: மைசூர் ஆய்வகத்தில் உள்ள தமிழ் பாரம்பரிய சின்னங்கள் கல்வெட்டுகள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுகள் கர்நாடகாவில் உள்ள மைசூரில் கல்வெட்டியல் ஆய்வகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நமது தொன்மையான நாகரிகத்தை அறிய உதவும் இந்த பொருட்கள் அண்டை மாநிலத்தில் வைக்கப்படுவதால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் இதனால் தமிழகத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட கோரியும் இளஞ்செழியன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி குருபாகரன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில்,' மைசூரில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் முறையாக, பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன'என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள்; முனைவர்கள் ராஜவேலு, சாந்தலிங்கம், மார்க்சிய காந்தி, பத்மாவதி மற்றும் தமிழக தொல்லியல் துறையில் பணியில் இருக்கும் கல்வெட்டியல் அலுவலர் ஆகியோர் மைசூரில் உள்ள கல்வெட்டியல் மையத்திற்கு சென்று அங்கு தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தும் முறையாக படிமம் எடுக்கப்பட்டுள்ளதா? பாதுகாக்கப்பட்டுள்ளதா? முறையாக வரிசை எண்கள் அளித்து பராமரிக்கப்படுகிறதா? அவற்றில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? எத்தனை கல்வெட்டுகள் உள்ளன? அவை எவ்வாறு பராமரிக்கப் படுகின்றன? என்பது தொடர்பாக ஆய்வு செய்து ஜனவரி மாதம் 2-ம் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  

தேமொழி

unread,
Dec 26, 2020, 4:40:22 AM12/26/20
to மின்தமிழ்
source - https://www.dinamalar.com/news_detail.asp?id=2678185

உசிலம்பட்டி அருகே ஊர்மந்தையில் தமிழி (பிராமி) எழுத்துக்களுடன் கல்
டிச 26, 2020

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி ஊர் மந்தையில் கிடந்த தொம்பரை கல்லில் கி.மு., 2 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் மதுரை ரோட்டில் கொங்கபட்டி கிராமம் உள்ளது. கிராமத்தின் சீலைக்காரி அம்மன் கோயில் முன்பாக ஊர்மந்தையில் பழமையான தொம்பரை கல் கிடந்தது. கல்லில் பழமையான எழுத்துக்கள் இருப்பதைப் பார்த்த கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த எழுமலை அரசு பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரியும் மயில்மீனா கொடுத்த தகவலின் பேரில், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், மதுரை தொல்லியல்துறை அலுவலர் ஆசைத்தம்பி, அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கல்லில் இருந்த எழுத்துக்கள் கி.மு., காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதை உறுதி செய்தனர். கல்வெட்டு எழுத்துக்களை படி எடுத்து அதில் உள்ள தகவல்களை படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் மயில்மீனா:
கிராமத்து மந்தையின் முன் இருந்த கருங்கல்லை ரோடு விரிவாக்கம் செய்த போது சீலைக்காரி அம்மன் கோயில் முன்பாக போட்டனர். அதில் எழுத்துகள் இருப்பதை பார்த்து காந்திராஜனிடம் தகவல் தெரிவித்தேன். அவர் வந்து கல்மேல் இருந்த மண்ணை அகற்றிப்பார்த்து பழமையான கல்வெட்டுக்கள் என்பதை உறுதி செய்து தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்தார் என்றார்.

தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்:
செக்கானூரணி, உசிலம்பட்டி, தேனி மாவட்ட பகுதிகளில் பாறை ஓவியங்கள், கப்மார்க்குகள், தமிழி எழுத்துக்கள், சமணர் படுகைகள் என அதிகம் கிடைத்துள்ளன. தனிக்கல்லில் தமிழி எழுத்துக்களுடன் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்றார்.

தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி:
கல்வெட்டின் காலம் கி.மு., 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம். மதுரையில் இருந்து செல்லும் வணிகப்பாதையின் வழியில் இந்த பகுதியில் வணிகர்கள் தங்கிச் செல்லும் இடமாக முன்னர் இருந்திருக்கலாம். எழுத்துகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

அரசு அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன் :
எழுத்துக்களில் ஒருவருடைய பெயர், ஊர் பெயர், மற்றும் பொன் ( தங்கம்) குறித்த குறியீடு முதலியவை உள்ளன. கல்லின் முதல் எழுத்து முழுமையான தகவல் இல்லாமல் உள்ளது. ஆய்வாளர்கள் முறையாக படித்தபின் என்ன எழுதியுள்ளது என்பது தெரியவரும் என்றார்.
----

thamizhi inscription.jpg
thamizhi inscription2.jpg
pictures #whatsappshare

தேமொழி

unread,
Jan 7, 2021, 1:44:52 PM1/7/21
to மின்தமிழ்
source - https://www.hindutamil.in/news/tamilnadu/619978-palani-152-years-old-seppaedu-discovered.html

பழநியில் 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு: கோயிலில் நித்ய பூஜை செய்ய எழுதிக்கொடுத்தது  
copper plate inscription.jpg
பழநியில் கண்டுபிடிக்கப்பட்ட 152 ஆண்டுகள் பழமையான செப்பேடு.

பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு தினமும் நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பாண்டாரம் என்பருக்கு எழுதிக்கொடுத்த 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது:

உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த வெள்ளாளகவுண்டர் சமூகத்தினரால் இந்தசெப்பேடு எழுதப்பட்டுள்ளது.

பழனிமலைக் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பண்டாரம் என்பவருக்கு எழுதிக் கொடுத்ததாகவும், தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் திருமஞ்சன குடம் எடுத்து 120 வில்வ இலை, ஒரு கிண்ணம் சந்தனம், விபூதி உள்ளிட்டவையால் பூஜை செய்து நெய்வேத்தியம் செய்வதற்கு கூலியாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அரை ரூபாய் முதல் இரண்டரை ரூபாய் வரை திரட்டி ஆண்டுக்கு ரூ.115 கூலியாக வழங்க தீர்மானித்து எழுதப்பட்டுள்ளது.

இந்த செப்பேடு 1868 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் எழுதப்பட்டுள்ளது. 152 ஆண்டுகள் முந்தைய இந்த செப்பேடு 25 செ.மீ அகலமும், 45 செ.மீ உயரமும், 2 கிலோ எடையும் கொண்டுள்ளதாக உள்ளது.

செப்பேட்டில் வேல், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சிவமயம் தண்டாயுதபாணி துணை என துவங்கி வைகை நீடுக மாமழை என்ற பாடலுடன் 106 வரிகள் இந்த செப்பேட்டில் உள்ளது.

இந்த செப்பேட்டின் படி கந்தசாமி பண்டாரம், தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜை செய்வதற்கு அறை மற்றும் மடத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோயிலுக்கு நன்மை செய்பவர்கள் கங்கை மற்றும் சண்முக நதியில் பூஜை செய்வதற்கு சமமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, என்றார்.

இந்த செப்பேடு எழுதிக்கொடுக்கப்பட்ட கந்தசாமி பண்டாரத்தின் தற்போது ஐந்தாவது தலைமுறையினரான பரமேஸ்வரன் என்பவரிடம் தற்போது உள்ளது. ஆய்வின் போது தொல்லியல் ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், அஜய் கிருஷ்ணன், பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

தேமொழி

unread,
Jan 13, 2021, 5:02:30 PM1/13/21
to மின்தமிழ்


தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு! 
13/01/2021  
நக்கீரன் செய்திப்பிரிவு


தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள், 2 இடங்களில் தொல்லியல் கள ஆய்வுகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, கீழடி (சிவகங்கை), ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை (தூத்துக்குடி), கொடுமணல் (ஈரோடு), மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி), கங்கை கொண்ட சோழபுரம், மாளிகைமேடு (அரியலூர்) உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 தமிழ்நாட்டின் வரலாற்றை உலக அரங்கில் நிலைநிறுத்த அகழாய்வு பேருதவியாக அமையும் என்று தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 

தேமொழி

unread,
Jan 13, 2021, 5:03:58 PM1/13/21
to மின்தமிழ்
தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு! 

Tamil Nadu Excavation Sites.jpg

---------

தேமொழி

unread,
Feb 13, 2021, 2:17:21 AM2/13/21
to மின்தமிழ்
source - https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/02/13011731/Dermatological-materials.vpf

எலந்தக்கரையில், கண்டெடுக்கப்பட்ட ெதால்லியல் பொருட்கள்

பிப்ரவரி 13,  2021 

காரைக்குடி,

எலந்தக்கரையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பார்வையிட்டார்.
dr rajavelu.JPG
தொல்லியல் பொருட்கள் 
காளையார்கோவில் அருகே உள்ள எலந்தக்கரையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அதன் சேகரிப்பாளர் காளையார்கோவிலை சேர்ந்த ரமேஷ், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து வழங்கினார். அதை அவர் பார்வையிட்டார். 
பின்னர் துணைவேந்தரின் வழிகாட்டுதல்படி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் சரவணக்குமார் தலைமையில் பேராசிரியர்கள் எலந்தக்கரையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்பில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டது.
இது குறித்த திட்ட அறிக்கை ெடல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பல்கலைக்கழகத்தால் தமிழக அரசு வழியாக அனுப்பப்பட்டது. டெல்லி மத்திய தொல்லியல் கழகம் 2020-21 கல்வி ஆண்டில் அகழாய்வு செய்ய அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் முறை
மத்திய தொல்லியல் துறையிலிருந்து ஒரு தொல்லியாளரை அகழாய்வில் ஈடுபடுத்தவும் சம்மதம் தெரிவித்துள்ளது. இது குறித்து அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் கூறியதாவது:-
,மத்திய தொல்லியல் துறை பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழகத்தில் ஆய்வு செய்வது இதுவே முதல் முறையாகும். அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழக தொல்லியல் துறையும் இணைந்து தொல்லியல் அகழாய்வுகள், களஆய்வுகள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தொல்லியல் ஆர்வலர் ரமேஷ் மூலம் பெறப்பட்ட பொருட்களின் மூலமாக இப்பகுதி சிறந்ததொரு கலாசாரத்தையும், பண்பாட்டையும் கொண்டு விளங்கியுள்ளது என்பது தெரியவருகின்றது. 
அழகப்பா பல்கலைக்கழகம் நடத்த இருக்கின்ற ஆய்வின் மூலம் அரிய  பொருட்களும், பண்பாட்டு எச்சங்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.தமிழக வரலாற்றில் சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுக்கு இணையாக எலந்தக்கரை இருக்கக்கூடும் என்பது கிடைத்திருக்கும் பொருட்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. இதனை அழகப்பா பல்கலைக்கழகம் நடத்தவிருக்கும் அகழாய்வு மேலும் உறுதி செய்யும். ஆய்வு மார்ச் 2-வது வாரத்தில் தொடங்கப்படும்.
 இவ்வாறு அவர் கூறினார்.

கல்வெட்டுப்படிகள்
இந்த அரும்பொருட்கள் ஒப்படைப்பு நிகழ்வின் போது கல்வெட்டு ஆய்வாளர் மேலப்பனையூர் ராஜேந்திரன் தனது வாழ்நாள் காலத்தில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு தனது பாதுகாப்பில் வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுப்படிகளை துணைவேந்தரிடம் ஒப்படைத்தார்.அதனை துணைவேந்தர் வரலாற்றுத்துறை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.

தேமொழி

unread,
Feb 17, 2021, 4:26:29 PM2/17/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/AncientTamilCivilizationATC/posts/1651659301889822


மறுபுறத்தில் பொறிக்கப்பட்ட பானை ஓட்டின் ஒளிப்படம்!
சாடியின் இருபுற‌த்தில் ""பானை உரி (அ) பனை ஓரி (அ) பானை உறி (அ) பனை ஓரி"" என இருமுறை பொறிக்க‌ப்ப‌ட்டு பானை ஓடு எகிப்தின் "க‌சீர் அல் க‌டீம் [Quseir-Al-Qadim]" என்ற இடத்தில் கிடைத்துள்ளது. அதில் ஒரு புறம் பொறிக்கப்பட்ட பானை ஓட்டின் ஒளிப்படம் மட்டுமே ஊடகங்களில் வெளிவந்துள்ளது. மறுபக்கம் பொறிக்கப்பட்ட அதே பெயருடைய ஒளிப்படத்தை அனுப்புமாறு அவ்வாய்வில் பங்கேற்ற லூசி ப்ளூ [Dr. Lucy Blue] அவர்களை மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டோம். இதோ அவர் அவ்வொளிப்படத்தை எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நன்றி: லூசி ப்ளூ [Dr. Lucy Blue]
...
எகிப்தில் பழந்தமிழி எழுத்துரு! [Quseir-Al-Qadim [Egypt] yielded potsherds with the Tamili text reading “paanai ori”]
பழந்த‌மிழ் எழுத்துரு பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஓர் உடைந்த‌ சாடியொன்று எகிப்தில் "க‌சீர் அல் க‌டீம் [Quseir-Al-Qadim]" எனும் செங்க‌ட‌லின் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் வ‌சிப்பிட‌த்தில், அக‌ழ்வாராய்ச்சியின் மூல‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வ‌ழி இவ்வெழுத்துக‌ள் கி.மு முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌வையாக‌ இருக்கும் என‌வும் இது ஒரு ம‌கிழ்ச்சியூட்டும் க‌ண்டுபிடிப்பு என‌வும் வேதியிய‌லாள‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.
இத்த‌மிழ் எழுத்துரு சாடியின் இருபுற‌த்தில் இருமுறை பொறிக்க‌ப்ப‌ட்டு காட்சிய‌ளிக்கின்ற‌ன‌. பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் 'பானை ஒரி' (பானையை தொங்க‌விடுவ‌த‌ற்காக‌ க‌யிற்றால் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை)எனும் அர்த்த‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌. பிரிட்ட‌னில் உள்ள‌ 'ச‌வுத்தாம்த‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தைச் [University of Southampton in the U.K.] சார்ந்த‌ தொல்பொருளாராய்ச்சிக் குழுவில் அட‌ங்கிய‌ பேராசிரிய‌ர் டீ.பீகோக்கு [Prof. David Peacock] ம‌ற்றும் முனைவ‌ர் எல்.புளூ [Dr. Lucy Blue] ஆகியோர், அண்மையில் எகிப்திலுள்ள‌ க‌சீர் அல் க‌டீம் எனும் ப‌ழமைவாய்ந்த‌ இட‌த்தில் அக‌ழ்வாராய்ச்சிப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டிருக்கும்பொழுது, ப‌ழ‌ங்கால‌ எழுத்துக்க‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ உடைந்த‌ சாடியைக் க‌ண்டெடுத்துள்ள‌ன‌ர்.
இல‌ண்ட‌னில் அமைந்துள்ள‌ பிரிட்டிசு அருங்காட்சிய‌க‌த்தில் ப‌ழ‌ங்கால‌ பானை,க‌ல‌ன்க‌ள் குறித்த‌ ஆராய்ச்சியில் நிபுண‌த்துவ‌ம் வாய்ந்த‌ முனைவ‌ர் ரோபேர்த்தா தோம்பேரு [Dr. Roberta Tomber], க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ இவ்வுடைந்த‌ சாடி இந்தியாவில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌தென்றும், இச்சாடி கொல்க‌ல‌ன் வ‌கையைச் சார்ந்த‌து என‌வும் அடையாள‌ம் க‌ண்டுபிடித்துள்ளார்.
க்வாசீர்-அல்-க்வாதிம் (எகிப்து) கிடைத்த பானை ஓடு
பானை உரி (ஐராவதம் மகாதேவன்)
பனை ஓரி (நடன காசிநாதன்)
க்வாசீர்-அல்-க்வாதிம் (எகிப்து) என்ற இடத்தில் கிடைத்த பானை ஓட்டில், தமிழ் - பிராமி எழுத்தில் கடந்த ஆண்டு கிடைத்திருப்பது ஆய்வாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
அந்தச் சொல்லைப் "பானை உரி" என்று ஆய்வாளர்கள் படித்துள்ளனர்.அப்பானையில் எழுதியிருக்கும் எழுத்துகள் மட்பானையின் வெளிப்புறத்தில் இரு பக்கமும் எழுதப்பட்டிருக்கும் "பானை உரி" என்ற இந்தத் தமிழ்ப் பிராமி எழுத்துக்கு விளக்கம் தருமிடத்து, "உறியில் தொங்கவிடப் பட்டிருக்கும் வகைப் பானை என்று ஐராவதம் மகாதேவன் கூறியுள்ளார்.
நடன காசிநாதன் இக்கருத்தை மறுத்து, "பேச்சு வழக்கில் உறிப்பானை என்றுதான் சொல்வார்களே தவிர, "பானை உறி" என்று சொல்லமாட்டார்கள் என்று மேற்சொன்ன கருத்துக்கு மறுப்புக் கூறி, அவ்வெழுத்துகளைப் "பனை ஓரி" என்று படித்து, அதற்குப் "பனந்தாரை அணிந்திருந்த ஓரி எனும் அரசன் பெயரைக் குறிக்கிறது" என்றார்.
ஆனால், இவை எல்லாவற்றையும்விட முனைவர் அமுதன் என்பவர் குறிப்பிடும் கருத்துப் பொருத்தமுடையதாய் உள்ளது.
அவர் கூறியுள்ளதாவது:-
எகிப்தில் கிடைத்த இந்த தமிழ் - பிராமி எழுத்துகளையுடைய இப்பானை ஓட்டில், உணரப்பட வேண்டியது பானையின் எதிரெதிர் இரு புறங்களிலும் "பானை உறி" என்று பொறிக்கப்பட்டிருப்பதுதான்.
உரி (அது பானையைக் குறிப்பது) என்ற சொல், தமிழில் தொல்காப்பியத்தில் "முகத்தல் அளவை"ப் பொருளில் வருகிறது.
"உரி வரு காலை, நாழிக் கிளவிஇறுதி இகரம் மெய்யொடும் கெடுமேடகாரம் ஒற்றும் ஆவயினான. (தொல். உயிர் மயங்கியல்:- நூற் - 38)
நாழி என்பது ஒருபடியையும், உரி என்பது அரைப்படியையும் குறிக்கும். அரைப்படி பானை என்பது இப்பானை எழுத்தின் பொருளாகும். எனவே, இது அரைப்படியை அளக்கும் பானையாகும் என்ற இக்கருத்தே ஏற்புடையதாகத் தெரிகிறது."
Pottery inscription in Tamili giving the name Catan & Kanan. 1st century A.D. Found at Quseir-al-Qadim on the Red Sea coast of Egypt.
A broken storage jar with inscriptions in Tamil Brahmi script has been excavated at Quseir-al-Qadim, an ancient port with a Roman settlement on the Red Sea coast of Egypt. This Tamil Brahmi script has been dated to first century B.C. One expert described this as an “exciting discovery.”
The same inscription is incised twice on the opposite sides of the jar. The inscription reads paanai oRi, that is, pot (suspended) in a rope net.
An archaeological team belonging to the University of Southampton in the U.K., comprising Prof. D. Peacock and Dr. L. Blue, who recently re-opened excavations at Quseir-al-Qadim in Egypt, discovered a fragmentary pottery vessel with inscriptions.
Dr. Roberta Tomber, a pottery specialist at the British Museum, London, identified the fragmentary vessel as a storage jar made in India.
Iravatham Mahadevan, a specialist in Tamil epigraphy, has confirmed that the inscription on the jar is in Tamil written in the Tamil Brahmi script of about first century B.C.
In deciphering the inscription, he has had the benefit of expert advice from Prof. Y. Subbarayalu of the French Institute of Pondicherry, Prof. K. Rajan of Central University, Puducherry and Prof. V. Selvakumar, Tamil University, Thanjavur.
According to Mr. Mahadevan, the inscription is quite legible and reads: paanai oRi, that is, ‘pot (suspended in) a rope net.’ The Tamil word uRi, which means rope network to suspend pots has the cognate oRi in Parji, a central Dravidian language, Mr. Mahadevan said. Still nearer, Kannada has oTTi, probably from an earlier oRRi with the same meaning. The word occurring in the pottery inscription found at Quseir-al-Qadim can also be read as o(R)Ri as Tamil Brahmi inscriptions generally avoid doubling of consonants.
Earlier excavations at this site about 30 years ago yielded two pottery inscriptions in Tamil Brahmi belonging to the first century A.D.
Another Tamil Brahmi pottery inscription of the same period was found in 1995 at Berenike, also a Roman settlement, on the Red Sea coast of Egypt, Mr. Mahadevan said. These discoveries provided material evidence to corroborate the literary accounts by classical Western authors and the Tamil Sangam poets about the flourishing trade between the Tamil country and Rome (via the Red Sea ports) in the early centuries A.D.
From the Roman Red Sea to beyond the Empire: Egyptian ports and their trading partners
Roberta Tomber
The strategic importance of Egypt’s Red Sea is apparent throughout history and no more so than during the Roman period following Egypt’s annexation by Augustus in 30 BC. The most extensive evidence is provided by the recent excavations at Myos Hormos (Quseir al-Qadim) and Berenike (Berenice). Both sites produced finds of diverse origin and material­­­­­­—from pottery to archaeobotanical remains and texts­­—that clearly attest to their function as transhipment centres that facilitated goods from West and East, within and beyond the Empire. This paper will focus on the range of foreign goods and geographic connections from outside the Roman Empire and highlight corresponding trade sites in East Africa (Ras Hafun), Arabia (Qana’, Khor Rori) and India (Hathab, Pattanam, Arikamedu, Alagankulam) whose connection with the Red Sea is particularly visible through pottery.
ROBERTA TOMBER
Sourcing studies of the ceramics found at Roman Berenike on the Red Sea of Egypt show that India or the neighbouring regions supplied many styles and types of pottery.
Behind the Scenes at the British Museum: Indo-Roman trade in the Hotung Gallery
தொகுப்பு:- முத்தமிழ்வேந்தன்

Ancient Tamil Civilization.JPG
Ancient Tamil Civilization1.JPG
Ancient Tamil Civilization2.JPG
Ancient Tamil Civilization3.JPG
Ancient Tamil Civilization4.jpg
Ancient Tamil Civilization5.JPG
Ancient Tamil Civilization6.JPG
Ancient Tamil Civilization7.JPG
-----


தேமொழி

unread,
Feb 19, 2021, 11:46:48 PM2/19/21
to மின்தமிழ்

வயலூர் கல்வெட்டு காட்டும் தமிழ்ப் பற்று மிக்க கோப்பெருஞ்சிங்கன்

தமிழைப் போற்றிய பல மன்னருள் சிறப்புப்பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன் என்ற பிற்காலப் பல்லவர் அரசராவான். அவனுடைய புகழையும் மாட்சியையும் தமிழ்மீதான பற்றினையும் சோழனை வென்று சிறைபிடித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல்களையும் ஒருங்கே பெற்ற ஒரு கல்வெட்டு, சேத்துப்பட்டு அருகே வயலூர் என்ற குக்கிராமத்தில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கல்வெட்டு ஏற்கனவே இந்தியத் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டு எப்பிகிராபியா இந்தியா மடலம் 23 இல் வேங்கடசுப்பையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.  

இக்கல்வெட்டை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் மீண்டும் ஒரு முறை படியெடுத்து காட்சிக்கு வைத்தது. தற்போது அதன் புகைப்படமும் கல்வெட்டுப் பாடமும் "யாதும் ஊரே.காம்"தளத்தில் ஆவணப்படுத்தப்படுகிறது.

இக்கல்வெட்டின் சிறப்பாகக் கருதுவது கோப்பெருஞ்சிங்கனின் தமிழ் ஆர்வமும் இக்கல்வெட்டு  3 வகை பா வகையினால் அமைந்துள்ளதும் ஆகும். இக்கல்வெட்டு  பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திலும், நேரிசை வெண்பாவிலும், கலிவிருத்தத்திலும் , எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Pallavarkone Koperunjingan inscription2.jpg
Pallavarkone Koperunjingan inscription.JPG

கல்வெட்டு:
மாவட்டம் : திருவண்ணாமலை
வட்டம் : சேத்துப்பட்டு
கிராமம் : வயலூர்
இடம் : தெற்குப் பகுதியில் உள்ள சிறிய குன்றின் நீர்நிலைக்கு அருகில்.
காலம் : 13 ஆம் நூற்றாண்டு
அரசன் : கோப்பெருஞ்சிங்கன்
ஆட்சி : பிற்காலப் பல்லவர் – காடவராயர்
மொழி : தமிழ்
எழுத்து :  தமிழ்
பதிப்பு : இ.க.ஆ. 418/1922 , எ.இ. எண் 27, பக்கம் 174.

குறிப்பு:
தெள்ளாற்றில் சோழனிடம் போரிட்டு வென்று சிறையிட்டு, சோணாடு கொண்ட அழகிய சிங்கன்,  பொன்னிநாடனும் கண்ணி, காவிரி, பாகீரதி நதிகள் பாயும் நாடனும் அவணி நாராயணன், செந்தமிழ்க் காவலன், தொண்டை மன்னவர், மல்லை வேந்தர், என பலவாறு புகழ்ந்தும் அவனது வெற்றியும் வலிமையையும் போற்றும் பாடல் கல்வெட்டு.

 கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ சகலபுவன சக்கரவத்தி ஸ்ரீகோப்பெருங்சிங்க சோழனை தள்ளாற்றில்
வென்று சகல பரிச்சினமும் கொண்டு சோழனை சிறையிட்டு வைத்து சோணாடு கொண்ட
அழகியசிங்கன் பொன்னி நாடனும் முரிமையும் அமைச்சரும் இருபத்துன் சிறைகோட்டம் பொருப்பி
ண்டென வளர்ந்த தோள்வலியினர் கொண்டது சோணாடு கண்ணி காவிரி பாகிரது நின்பரியாடு தன்துறை வாவி
காவல் மன்னவர் திரையுடன் வணங்குவது உன் பெருங்திருவசால் வென்னிட பொர்கன்ன வெள்ளிடப்
பொருதூதுங் பெருங்சேனை விலங்கு செம்பொனின் அம்பலக்கூத்து நீ விரும்பிய தேவாரம் பின்னக்வால்
அவனிநாரயண பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கனின் பெருமை யார் புகழ்வாரே.
திரையிட்ருமின்கள் தேவ வேந்தர்செம்பொன் திறையிட்ட பூம்புகார்ச் சோழன் சிறைகிடந்த கொட்டந்தனை நினை
மின் கோப்பெருங்சிங்கன் கமல நாட்டன் கடை சிவந்த நாள் . மில்வன் கொடி இடை வேந்தர் மார்பினன் தோளிது  
ன் திட்டிய தொண்டை மன்னவர் வாலில் வென்றிடு சிறைவளவன் துஞ்சிய நாலினும் பெரியதுன் நாளெனப் புறம்பே
அரை கடலின் இசையுடனே ஆண்டார் வெயினும் பல்லிசை சேவிகவர அந்தி மாலை நிறைமதியி நிலவென்று நெருப்புப் பட்
டால் நீரிலை நின்றவோ நிருபதுங்க பிறை பொருத்த கன மகர இம்புரி வங்கோட்டுப் பெருங்கல்லிறு சோழனையும் அம
ச்சரையும் பிடித்து சிறையில்லிட்ட கல்லிரு விடமிதன் சிய திரிபுவன நாட்டராசங்கள் தம்பிரானே  ஒரு நாளும் விடியா
த நெடிய கங்குலியேன நிண்டு வர உலகிற் புங்கன் மருமலை யிடுமுன்னே வந்தென்றால் மடந்தை யிவ்வாற்றுவான்
மல்லை வேந்தே பொருமலை முடியரசர் கன்னிமாதர் பொற்றிசையும் புவனமுமுதுடையார்தாமும் திருமாதும் புணர்
புயத்து மிண்டான் சியத் திரிபுவன நாட்டிராசாக்கல் தம்பிரானே.. இது சொக்க சீயன் ஆணை


நன்றி- திரு. சேது, முனைவர் ரா.சேகர், முனைவர் ராசவேலு

source:
http://www.yaadhumooray.com/வயலூர்-கல்வெட்டு/
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
(Tiruvannamalai District Centre for Historical Research) (Reg.No. 163/2017)
தொடர்புக்கு- mail: tvm...@gmail.com, contact : 9047578421
----

தேமொழி

unread,
Mar 3, 2021, 5:10:45 PM3/3/21
to மின்தமிழ்

கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டதா?

terracotta lid.JPG
திருப்புவனம்:  கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சேதமடைந்த நிலையில், சுடுமண் மூடி குமிழ் கண்டறியப்பட்டது. இது 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கணேசன் என்பவரது நிலத்தில் கடந்த பிப்.13ம் தேதி துவங்கியது. கீழடி அகழாய்வில் ஆறு குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதலில் ஒரு குழி மட்டும் தோண்டப்பட்டது. இதுவரை இரண்டு மீட்டர் ஆழம் தோண்டப்பட்ட நிலையில் மணிகள், பாசிகள், பானை ஒடுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.

நேற்றைய அகழாய்வின்போது இரண்டு செ.மீ விட்டமுள்ள சுடுமண் மூடி குமிழ் சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது. தண்ணீர் வைக்க பயன்படுத்தப்படும் மண் பானை மூடி போன்ற அமைப்பை உடையதாக உள்ளது. மிகவும் சிறியதாக இருப்பதால் 2,600 ஆண்டுகளுக்கு முன் சிறுமியரின் விளையாட்டு பொருளாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


தேமொழி

unread,
Mar 12, 2021, 9:27:29 PM3/12/21
to மின்தமிழ்

Silver, copper coins unearthed during excavation at Kodumanal 

ERODE: A team of archaeologists from the Tamil Nadu archaeological department has unearthed silver and copper coins, Tamil Brahmi letters, art material and pot urns during an excavation work at Kodumanal near Chennimalai in the district.

“We had unearthed silver and copper coins, Tamil Brahmi letters, art materials, pot urns during the eighth phase of our excavation work in May 2020,” project director J Ranjith said.

The discovered material would be at least 2,300 years old, he added.


The team also identified a river channel passing into the Noyyal river.

Ranjith said they had identified a pit in which women’s stone ornaments, glass pieces and conch bangles, material that were used to make mud pots were spotted. “We had also found a metal spoon (12cm in length) like an object,” he said.


The team, led by Ranjith, started its ninth phase of excavation work at Kodumanal on February 26, 2021. Ranjith said that they would continue the excavation work till September.


tnn.JPG
-----

தேமொழி

unread,
Mar 12, 2021, 9:32:56 PM3/12/21
to மின்தமிழ்
2,000-yr-old slab with Tamil Brahmi script gives glimpse of past
TNN / Mar 9, 2021

Read more at:

madurai.jpg

madurai.jpg

2,000-yr-old slab with Tamil Brahmi script gives glimpse of past

By the side of the Madurai-Kochi national highway at Kongapatti in Madurai district an inconspicuous stone slab, found recently, opened a portal to the past. The inscription on it engraved in Tamil Brahmi script, dating back 2,000 years, revealed that it was a memorial stone for a local hero. The place where the stone was found, is on the ancient route linking the Chera and Pandya kingdoms. A choultry where travellers rested, had existed on this route till about two decades ago, said historians. Mayil Meena, a villager had chanced upon the stone slab when the road widening work was taken up about two months ago. The strange inscription on it had piqued his interest and he had contacted the experts. Archaeological researcher K T Gandhirajan and his team had gone to the village to inspect the stone, which is 6.5ft in length, 3.5ft in width and 9cm thick. There were inscriptions in three rows, and as it had become damaged, many attempts were made including by state archaeology department, ASI, Mysore and epigraphist V Vedachalam to estampage the block. Gandhirajan said that the top and bottom lines of the inscription had been damaged. "From what we could decipher, it said that the stone had been erected for a local hero called Ilank Kannan by Pathan Paraban, thathanthai," he said. The Tamil Brahmi is similar to 2,000-year-old inscriptions found in memorial stones in Kinnimangalam, Pulliman Kombai and Thathapatti in Usilampatti region, which are about 20km from Kongapatti, said Gandhirajan. Curator of the Madurai government museum M Marudhupandian said the term "Ilank" is in Sangam period and pertains to the period between 3rd to 1st century BC. "The place where it was found was the ancient trade route of the Romans. It should be taken over by the archaeology department, but the people of the village want it to remain in its place," he said. 

Unlike the Tamil-Brahmi inscriptions usually found in caves and near sites of religious significance, the present discovery of the script at a public place, hints at the fact that the common man of the time used the script and that it was not just the medium of communication for the elite. "This particular stone was kept at a common place, to glorify the hero among the people who travelled through the region. This memory stone is a contemporary of the Keeladi civilization, and does not have any religious symbols or references," he said.   

தேமொழி

unread,
Mar 14, 2021, 3:49:20 AM3/14/21
to மின்தமிழ்
Potsherds with inscriptions similar to Indus Valley found in Tamil Nadu 
| Madurai News - Times of India

4 hours ago — Out of the 20 potsherds, 15 black and red potsherds, and five red potsherds had signs similar to the numbers '125', '137', '365' of the Indus Valley inscriptions. The number '125' also looked like the letter 'tha' in Tamil Brahmi script, and '137' looked like a multiplication symbol, he said.

Potsherds with inscriptions similar to Indus Valley found in Tamil Nadu.JPG
Read more at:

தேமொழி

unread,
Mar 27, 2021, 7:27:07 PM3/27/21
to மின்தமிழ்

Laddoos made with Cereals and Pulses Dating Back to 2600 BCE Found During Excavation at Harappan Site


The discovery of food balls, along with figurines of bulls and copper adze, suggests that Harappan people used these items to perform some kind of rituals.

People living during the Harappan civilization around 4,000 years ago, have been found consuming high-protein, multigrain ‘laddoos’, according to a study. The scientific study of the material found during an excavation in Rajasthan has revealed this. Jointly conducted by the Birbal Sahni Institute of Palaeosciences (BSIP), Lucknow, and Archaeological Survey of India (ASI), New Delhi, the study was recently published in the ‘Journal of Archaeological Science: Reports’ by Elsevier.

At least seven ‘laddoos’ were discovered in 2017 during the excavation of a Harappan archaeological site in Binjor in western Rajasthan (near Pakistan border) between 2014 and 2017. BSIP senior scientist Rajesh Agnihotri said, “Seven similar big-size brown ‘laddoos’, two figurines of bulls and a hand-held copper adze (a tool similar to an axe, used for cutting or shaping wood) were excavated by the ASI at the Harappan site in Anupgarh district of Rajasthan.


Read more @https://www.news18.com/news/buzz/laddoos-made-with-cereals-and-pulses-dating-back-to-2600-bce-found-during-excavation-at-harappan-site-3571670.html

----

தேமொழி

unread,
Mar 27, 2021, 7:40:10 PM3/27/21
to மின்தமிழ்

தேமொழி

unread,
Apr 2, 2021, 10:15:39 PM4/2/21
to மின்தமிழ்

pallava.JPG

"திருப்பத்தூா் அருகே பல்லவா் கால எழுத்துடை நடுகற்கள், கல்வெட்டு கண்டெடுப்பு"

source-
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2021/mar/29/திருப்பத்தூா்-அருகே-பல்லவா்-கால-எழுத்துடை-நடுகற்கள்-கல்வெட்டு-கண்டெடுப்பு-3593148.html

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலையில் சின்னவட்டானூா் கிராமத்தில் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் கால எழுத்துடை நடுகற்கள், கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, தொல்லியல் அறிஞா் பெ. வெங்கடேசன், பேராசிரியா்கள் ரே.கோவிந்தராஜ், இரா.சங்கா் ஆகியோா் அடங்கிய ஆய்வுக் குழுவினா் திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டு நாட்டுக்கு உட்பட்ட சின்ன வட்டானூா் கிராமத்தில் இரண்டு எழுத்துடை நடுகற்களும், ஒரு உடைந்த நிலை நடுகல்லும், புதைந்த நிலை கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் க.மோகன் காந்தி கூறியதாவது:ஜவ்வாதுமலையின் பண்டைய பெயரான நவிரமலை என்னும் சொல்லாட்சி கொண்ட மூன்று கல்வெட்டுகள் இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு அதாவது 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவா் கால நடுகற்களாகும்.
திருப்பத்தூா் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டு நாட்டிற்கு உட்பட்ட சின்னவட்டானூா் கிராமத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 2 கி.மீ தொலைவில் இலவமரத்து ஆற்று ஓடையின் மேல் பகுதியில் மூக்கறக் காளியம்மன் என்னும் பெயரில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த இரண்டு எழுத்துடை நடுகற்கள் உள்ளன. அதன் அருகில் உடைந்த நிலையில், படுத்த கோலத்தில் ஒரு நடுகல்லும் புதைந்த நிலையில் ஒரு கல்வெட்டும் என நான்கு கற்கள் இக்கோயிலில் உள்ளன.

பல்லவா் கால நடுகல்-1
முதல் நடுகல் 137 செ.மீ நீளமும், 70 செ.மீ அகலமும் கொண்டது.வாரிமுடிக்கப்பட்ட கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், காதுகளில் குண்டலங்களுடன் வடிவமைக்கப்பட்ட கோலத்தில் இந்நடுகல் அமைந்துள்ளது.
மேலும், வலது கையில் குறுவாள் ஒன்றும் இடது கையில் வில்லைத் தாங்கியும் காட்சித் தருகிறது. இடைக்கச்சு, அதில் குறுவாள் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடது காலின் ஓரத்தில் இரண்டு சிறிய மாட்டுருவங்கள் உள்ளன.
இக்கல்வெட்டின் எழுத்து வடிவம் கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும். பல்லவா் காலத்தில் இம்மலைப் பகுதி பங்கள நாட்டில் இருந்தது என்றும் இம்மலை நவிரமலை (ஜவ்வாதுமலை)என்றும் வழங்கப்பட்டதை இந்நடுகல் கல்வெட்டுச் சான்றுடன் விளக்குகிறது.

பல்லவா் கால நடுகல் - 2
இரண்டாவது நடுகல் 151 செ.மீ நீளமும் 100 செ.மீ அகலமும் கொண்டது. நடுகல் வீரனின் தலைகொண்டை மேற்புறமாக வாரிமுடிக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளன. இவ்வீரா் இடைக்கச்சு அணிந்துள்ளாா். இதில் குறுவாள் ஒன்றும் உள்ளது. வயிற்றுப்பகுதியில் அம்பு ஒன்று தைத்துள்ளது.
பகைவா்கள் விட்ட அம்பால் இவ்வீரா் இறந்து போன செய்தியை அறிய முடிகிறது.இக்கல்வெட்டு ஸ்வஸ்திஸ்ரீ என்று மங்களமாகத் தொடங்குகிறது.இதுவும் பல்லவா் கால நடுகல்லாகும். பல்லவா் ஆண்ட தொண்டை மண்டலம் பெரிய நிலப்பரப்பாகும். அதற்கு உட்பட்ட பகுதியே பங்கள நாடாகும்.
கி.மு. (அ) கி.பி 1-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சங்க நூல்களில் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் இம்மலையை நவிரமலை என்று இரண்டு இடங்களில் பதிவு செய்துள்ளது. பல்லவா்கால இந்த நடுகல் கல்வெட்டுகள் சங்க காலத்துக்கு சற்று ஏறக்குறைய 600 ஆண்டுகள் பிந்தையது. சங்க காலத்தில் கூறப்பட்ட நவிரமலை என்னும் சொல்வழக்கு கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலும் வழக்கில் இருந்ததைச் சான்றுகளோடு இக்கல்வெட்டுகள் கூறுகின்றன.
மேலும், பல்லவா் காலத்துடைய நாடு பிரிப்பு முறைகளை இந்நடுகல் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பல்லவா்கள் ஆண்ட ஒட்டு மொத்தப் பகுதிக்குத் தொண்டை மண்டலம் என்று பெயா்.ஆனால் இங்குத் தொண்டை மண்டலம் என குறிப்பிடப்படவில்லை. தொண்டை மண்டலத்தில் இருந்த பங்களநாடு, பங்களநாட்டில் இருந்த நவிரமலை (ஜவ்வாதுமலை) ஆகிய பிரிப்பு முறைகள் வெளிப்பட்டுள்ளன.எழுத்துகளின் வடிவம் மற்றும் கோவி விசைய என்று பல்லவா்களைக் குறிப்பிடும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.இச்சொற்கள் சிம்ம விஷ்ணு, மகேந்திரவா்மன், நரசிம்மன் ஆகியோரில் ஒருவரை பற்றியதாகும்.

பல்லவா்காலக் கல்வெட்டு-3
இக்கல்வெட்டு முழுமையாக மண்ணில் புதைந்துள்ளது. இரண்டு வரிகள் மட்டுமே வெளியில் தெரிகின்றன. இதன் நீளம் கணக்கிட முடியவில்லை. இதன் அகலம் 36 செ.மீ. ஆகும். இந்தக் கல்வெட்டும் பங்களநாடு, நவிரமலை சொற்களைத் தாங்கி நிற்கின்றன.

உடைந்த நிலை நடுகல் - 4
மண்ணில் படுத்த கோலத்தில் உடைந்து போய் ஒரு நடுகல் காணப்படுகிறது. இதைப்பற்றிய செய்திகளை அறிய முடியவில்லை என்றாா்.
---

தேமொழி

unread,
Apr 29, 2021, 6:28:12 PM4/29/21
to மின்தமிழ்

சிறப்பு செய்திகள்
சங்ககால மான் கொம்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

29/04/2021 

பகத்சிங்
 
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதுகுளத்தூர் அருகே உள்ள கருங்கலக்குறிச்சி கண்மாய் பகுதியில் வாழவந்தாள் அம்மன் கோயில் எதிரில், பண்ணைக்குட்டை தோண்டியபோது அதிகளவில் பானை ஓடுகள் வெளி வந்ததாக அவ்வூரைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் உ.சண்முகநாதன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
அதன்பேரில், அக்கண்மாய்ப் பகுதியில் ஆசிரியர் சண்முகநாதனுடன் இணைந்து கள மேற்பரப்பாய்வு செய்த பின், தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, "பண்ணைக்குட்டை தோண்டிய பகுதியில், ஒரு நுண்கற்காலக் கருவி, வழுவழுப்பான மற்றும் சொரசொரப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், தடித்த மற்றும் வழுவழுப்பான சிவப்பு நிற பானை ஓடுகள், தரையில் பதிக்கப்படும் சுடுமண் ஓடுகள், சுடுமண்ணால் ஆன விளக்குகள், குழாய், மூடிகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், துளையுள்ள பானை ஓடு, சிறிது உடைந்த சிவப்புநிற சிறிய குவளை, மான் கொம்பின் உடைந்த பகுதிகள், அரைப்புக் கல் மற்றும் குழவி, பெரிய செங்கல், குறியீடுகளுள்ள இரு பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் மற்றும் பண்ணைக்குட்டை பகுதிகளில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட பழம் பொருட்களைக் கொண்டு, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு ஊர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது. 
Karungalakurichi.jpg

இங்கு கிடைத்த ஒரு முழு செங்கலின் நீளம் 29 செ.மீ., அகலம் 15 செ.மீ., உயரம் 7 செ.மீ. ஆகும். இது கி.பி. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககால செங்கல் அளவில் உள்ளது. இதேபோன்ற செங்கல், கமுதி அருகே பேரையூரிலும் கிடைத்துள்ளது. இரு கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் ஆங்கில எழுத்துகளான ‘E, H’ போன்ற குறியீடுகள் உள்ளன. இதில் ‘E’ போன்ற குறியீடு அழகன்குளம் அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரைப்புக்கல் சிவப்பு நிற கல்லிலும், குழவி கருங்கல்லிலும் செய்யப்பட்டுள்ளன. 

இங்கு கண்டெடுக்கப்பட்ட மானின் உடைந்த கொம்புகள் உள்துளையுடன் உள்ளன. பொதுவாக மான்களின் கொம்புகளைக் கொண்டு அவற்றை இரலை மான், உழை மான் என இரு வகையாகப் பிரிப்பர். இதில் இரலை மானின் கொம்புகள் உள்துளை இல்லாமல் உள்ளே கெட்டியாக இருக்கும். இதன் கொம்பில் கிளைகள் இருக்காது. இவற்றின் கொம்பு கீழே விழுந்து புதிய கொம்பு முளைக்காது.

ஆனால், உழை மானின் கொம்புகள் உள் துளையுடையவை. கீழே விழுந்து புதிய கொம்பு திரும்பவும் முளைக்கும். இவற்றின் கொம்புகளில் கிளைகள் உண்டு. கீழே விழுந்த உழை மானின் கொம்புகளை மருந்தாகப் பயன்படுத்துவர். கெட்டியான இரலை மானின் கொம்புகளை ஆயுதமாகப் பயன்படுத்துவர்.

இவ்வூரில் கிடைத்த உள்துளையுடன் உள்ள கொம்புகளைக் கொண்டு இவை உழை எனும் புள்ளிமானின் கொம்புகள் என்பது உறுதியாகிறது. மேலும், இவ்வூருக்கு அருகில் இம்மானின் பெயரில் உழையூர் என்ற ஒரு ஊர் உள்ளது. மேலக்கொடுமலூர் கோயில் கல்வெட்டில், வடதலைச் செம்பிநாட்டு உழையூர் என்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன், உத்தரகோசமங்கை அருகில் உள்ள கீழச்சீத்தை என்ற ஊரில் மேற்பரப்பாய்வில் கண்டெடுக்கப்பட்ட மான் கொம்புகள் உள்துளை இல்லாதவை. எனவே அவை இரலை மானின் கொம்புகள் என்பதை அறியமுடிகிறது. இரலை மானை புல்வாய் எனவும் அழைப்பர். அம்மானின் பெயரில் கமுதி அருகில் புல்வாய்க்குளம் என்ற ஊர் அமைந்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
------------
Also --
Ancient potsherds, tiles, bricks found in village near Ramanathapuram
Read more at:

தேமொழி

unread,
May 2, 2021, 4:59:21 AM5/2/21
to மின்தமிழ்
கொற்கை அகழாய்வில் 2800 ஆண்டு பழமையான செங்கல் கட்டுமானம், 
சங்கு அறுக்கும் இடம் கண்டுபிடிப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் உற்சாகம்


ரெ.ஜாய்சன்

30 Apr 2021 

 தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுமார் 2800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் மற்றும் சங்கு அறுக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களில் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொற்கையில் கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் ஏற்கெனவே தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளது.

அந்த அகழாய்வு பணி தான் தமிழக தொல்லியல் துறை உருவான பின்னர் செய்த முதல் அகழாய்வுப் பணியாகும். அந்த அகழாய்வின்போது 2800 பழமையானது கொற்கை நகரம் என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்தாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி, இறக்குமதி நடந்தாகவும், பாண்டிய மன்னரின் தலைநகராக இவ்விடம் விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது.

பண்டைய துறைமுக நகரமான கொற்கையில் 52 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளிஸ்வரன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பணியாளர்களை இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த அகழாய்வு பணிக்காக கொற்கை பகுதியில் 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொற்கையில் நடைபெறும் அகழாய்வில் 2800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள செங்கல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் உள்ளன.

அதேபோல் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமான ஒரு குழியில் சங்குகள் முழுமையாகவும், அறுத்த நிலையிலும் காணப்படுகின்றன.

மேலும் அதே குழியில் சங்குகள் அறுத்த பின்னர் தீட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் பல வடிவங்களில் கிடைத்துள்ளன. மேலும் இந்த அகழாய்வு குழிகளில் சங்குகள், சங்கு வளையல் துண்டுகள், இரும்பு உருக்கு துண்டுகள், கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் குறீயிடுகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த அகழாய்வு பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கொற்கை துறைமுகம் மிகப்பெரிய வியாபார தலமாக இருந்துள்ளது. முன்பு நடந்த ஆய்வில் கிடைத்த பொருள்களை தென்காசி மாவட்டம் குற்றாலம் வைப்பறையில் காட்சிக்கு வைத்தனர். தற்போது இங்கு கிடைக்கும் பொருள்களை சேகரித்து, பழைய பொருள்களையும் கொண்டு வந்து இந்த பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டு தமிழ் அறிஞர் கால்டுவெல் இந்த பகுதியில் அகழாய்வு செய்தபோது தெரு முழுவதும் சங்குகளும், வெளிநாட்டு நாணயங்களும் நடந்து செல்லும் இடங்களில் எல்லாம் கிடைத்தன என எழுதியுள்ளார். தற்போதும் அகழாய்வின் போது நிறைய சங்குகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. கொற்கையின் முழுமையான அகழாய்வு முடிவு வெளியாகும் போது, உலகமே தமிழனின் பெருமையை சிறப்பாக பேசும் காலம் வரும். எனவே, கொற்கை அகழாய்வை தொல்லியல் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, கொற்கையில் மிகவும் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இதில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் மஞ்சள் அடித்து மறைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலை பழமை மாறாமல் கல்வெட்டுகளை வெளியே தெரியும் படி சீரமைக்க வேண்டும்.

இதுபோல் கொற்கை துறைமுகம் இருந்த இடத்தில் மாதிரி துறைமுகம் அமைத்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது இதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்பின் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மீண்டும் கொற்கை பகுதியை சிறப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தேமொழி

unread,
Jun 14, 2021, 2:24:03 AM6/14/21
to மின்தமிழ்
நன்றி:  https://www.dailythanthi.com/News/TopNews/2021/06/13115441/Discovery-of-3000-year-old-stone-circles-in-Sivakalai.vpf

சிவகளை அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டெடுப்பு

சிவகளையில் நடந்து வரும் அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பதிவு: ஜூன் 13,  2021 
தூத்துக்குடி,

கொரோனா பரவல் குறைந்ததால் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் நடந்து வந்த அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை, முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அகழாய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் சிவகளையில் 2 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வின் போது, ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. சிவகளையில் சிவகளை பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீமூலக்கரை ஆகிய மூன்று இடங்களில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் முதன் முறையாக 3,000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் ஸ்ரீமூலக்கரை பகுதியில் நடந்த ஆய்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற கல்வட்டங்கள் ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

சுமார் பத்துக்கு பத்து என்ற அளவில் ஒவ்வொரு கல்வட்டங்களும் அமைந்துள்ளன. மேலும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள்ணார். தற்போது ஒரு கல்வட்டம் மட்டும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் 7 முதுமக்கள் தாழிகள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. சிவகளை பகுதியில் நடைபெற்று வரும் இந்த அகழாய்வில் 29 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3 முதுமக்கள் தாழிகள் மட்டும் மூடியுடன் காணப்படுவதால் இவை அடுத்தகட்ட ஆய்வுக்கு உறுதுணையாக இருக்கும் என ஆய்வாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

தேமொழி

unread,
Jun 25, 2021, 5:13:36 PM6/25/21
to மின்தமிழ்

aravaazhi.JPG

தம்ம சக்கரம் ..
தேசூர் ...
காணொளி  காண்க - 

தேமொழி

unread,
Jul 4, 2021, 3:51:47 AM7/4/21
to மின்தமிழ்

கொடுமணலில் 2300 ஆண்டுகள் பழமையான கிணறு கண்டுபிடிப்பு: 
தொல்லியல்துறை திட்ட இயக்குநர் தகவல்

Archaeologists find Ancient Well.JPG
கொடுமணலில் நடந்த ஆகழாய்வில் கண்டறியப்பட்ட படிக்கட்டுடன் கூடிய கிணறு.

அகழாய்வு குறித்து தொல்லியல்துறை திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் கூறியதாவது:

கொடுமணல் பகுதியில் நடந்த அகழாய்வில்  படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக 2 திசைகளில் இருந்து செல்லும் வகையில் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். அந்த கிணற்றை 10 மீட்டர் நீள, அகலத்தில் 2.36 மீட்டர் ஆழத்தில் பாறைகளை குடைந்து தோண்டியுள்ளனர். இந்த கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர்.

விரிவான செய்திக்கு - பார்க்க - https://www.hindutamil.in/news/tamilnadu/688822-oldest-well.html

தேமொழி

unread,
Jul 4, 2021, 3:57:26 AM7/4/21
to மின்தமிழ்

hero stone.JPG
Rare 800-year-old hero stone of later Chola era found in Tiruvannamalai  village

Jul 02,2021

The Tiruvannamalai Centre for Historical Research has located an 800-year-old hero stone in a village on the district’s border with Villupuram, sources said.


தேமொழி

unread,
Jul 11, 2021, 2:33:43 PM7/11/21
to மின்தமிழ்

Murali Thar.jpg

சங்க காலம் முதல் வெள்ளையர் ஆட்சி காலம் வரை திண்டுக்கல்- மதுரை சாலை மதுரையிலிருந்து கொங்கு நாடு செல்லும் ராஜபாட்டையாக இருந்தது வெள்ளையர் ஆட்சியில் நெடுஞ்சாலை யாகவும் தற்போது தேசிய நெடுஞ்சாலை யாக உள்ளது பாண்டிய மன்னர் காலத்திலும் நாயக்கமன்னர் காலத்திலும் இந்த ராஜபாட்டை வழியே மக்கள் நடை பயணிகளாகவும் சரக்குகள் மாட்டு வண்டிகளிளும் குதிரை வண்டிகளிளும் கொண்டு சென்றனர் அப்படி பயணித்த மக்கள் ஆங்காங்கே உள்ள குளங்களில் நீராடி கிணறுகளில் குடிநீர் அருந்தியும் சத்திரங்களில் உண்டும் தோப்புகளில் உறங்கியும் சென்றனர் இது 100 ஆண்டுகளுக்கு முன் வரை இப்படியே இருந்தது இந்த ராஜபாட்டையில் திண்டுக்கல் முதல் மதுரை வரை பத்துக்கும் மேற்பட்ட தெப்பங்கள் இருந்தன அதில் பல தூர்ந்து விட்டன சில தெப்பங்கள் இப்போதும் மக்கள் பயன்பாட்டில் உள்ளன தோமையார்புரம் தாண்டி சிறுநாயக்கன்பட்டி சாலை பிரிவில் உள்ள பாண்டியர்கள் கட்டிய சிறிய தெப்பம் ஒன்று உள்ளது அது தற்போது தூர்ந்து விட்டது அதில் ஒரு ஓரத்தில் இரு மீன் சின்னங்கள் மற்றும் தண்ணீர் வரும் வழியும் உள்ளது இதற்கு அடுத்து சின்னாளபட்டி பிரிவு அருகே உள்ள நடுப்பட்டி பிரிவு தெப்பம் நன்கு பராமரிக்கப்பட்டு உள்ள ஆனால் அதில் தண்ணீர் இல்லை இத்தெப்பத்தின் கரையில் ஒரு மாலை கோயில் கல்தூண், இரு பலகை கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டு இருந்தது 30 ஆண்டுகளுக்கு முன் ஆய்வாளரும், ஆலமரத்துப்பட்டி பிரசிடென்ட் சௌந்தரராஜ நாயக்கர் அவர்களும் கல்வெட்டை ஆய்வு செய்தனர் இக்கல்வெட்டு அம்மையநாயக்கனூர் பாளையக்காரர் காசி முதல் ராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்காக இத்தெப்பம் வெட்டப்பட்டதாக கல்வெட்டில் இருந்தது தற்போது தெப்பம் துர் எடுக்கப்பட்டு அகலப்படுத்த பட்டதால் மலைக்கோயில் கல்தூண் அகற்றப்பட்டு அங்கு உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு பின் வைக்கப்பட்டுள்ளது கல்வெட்டை தேடினோம் கல்வெட்டு கிடைக்கவில்லை.
இக் கல்தூணில் சிற்பங்களாக
வியாக்கியபாத முனிவர் சிவலிங்கத்தை வணங்குவது போற்றும், அரசி பல்லக்கில் அமர்ந்து செல்வதும், இரு காளைகள் மோதுவதும், பேரரசர் வாளை தூக்கிய நிலையிலும், அரச குடும்பத்தினர் இருப்பது போலவும், மறுபுறம் சிற்பத்தில் அரச குடும்பத்தினர் குழந்தைகளுடன் நிற்பது போலவும், கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதிய சிற்பமும் உள்ளது.
இதற்கடுத்து அம்மையநாயக்கனூர் தெப்பம் உள்ளது இது மைய மண்டபத்துடன் பெரிய தெப்பமாக உள்ளது இது தற்போது பராமரிப்பின்றி உள்ளது இதற்கடுத்து பாண்டியராஜபுரம் பிரிவில் இருந்த தெப்பம் நெடுஞ்சாலைத் துறையால் மூடப்பட்டுவிட்டது. இதற்கடுத்து சமயநல்லூர் அருகே அய்யனார் கோயில் தெப்பம் தற்போதும் நல்ல நிலையில் உள்ளது இது மக்கள் பயன்பாட்டில் உள்ளது இதற்கடுத்து பரவை ஊரின் அருகே உள்ள தெப்பம் அருகிலுள்ள குளத்துடன் இணைக்கப்பட்டது இப்படி பாண்டியர்கள் காலத்திலும் நாயக்கர்கள் காலத்திலும் மக்கள் பயன்பாட்டிற்காக ராஜபாட்டை எங்கும் நீர் நிலைகளை உண்டுபண்ணி நீர் வளத்தை பெருக்கினார்.
ஆய்வு மேற்கொண்டவர்கள் திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக் குழு வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாததாஸ்,தளிர் சந்திரசேகர் மற்றும் வரலாறு மாணவர் முரளிதர்.

தேமொழி

unread,
Jul 12, 2021, 9:41:04 PM7/12/21
to மின்தமிழ்
நன்றி- தினத்தந்தி 


keezhadi well.JPG

கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் வெளிவந்த சுடுமண் உறைகிணறு

ஜூலை 10,  2021

கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன உறை கிணறு வெளிவந்துள்ளது. அதில் உள்ள நுட்பமான வடிவமைப்பை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கீழடியில் அகழாய்வில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுடுமண்ணால் ஆன உறை கிணறு தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த உறை கிணறு 3 அடுக்குகளை கொண்டதாக உள்ளது. இரும்பு சங்கிலி போன்ற நுட்பமான வடிவமைப்பு அதில் உள்ளது.இந்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

பண்டைய காலத்திலேயே கீழடியில் வாழ்ந்த தமிழர்கள் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இது போன்ற உறை கிணறுகள் முக்கிய ஆதாரமாக கிடைத்து வருகின்றன. ஆனால், 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

கடந்த ஆண்டு நடந்த 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேமொழி

unread,
Jul 14, 2021, 5:39:29 AM7/14/21
to மின்தமிழ்

சிவகளை அகழ்வாய்வு.
தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெறும் அகழ்வாய்வுப் பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு கனிமொழி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தொல்லியல் துறை ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் இன்று நேரில் பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றேன்.
கீழடி போன்றே தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டு அடையாளமாகக் கருதவேண்டியது சிவகளை தொல் மாந்தர் வாழ்விடம்.
சிவகளை முதற்கட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற ‘ ஆதன்’ என்ற தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடு, நமக்குக் கீழடியை நினைவூட்டுகிறது. ஆதிச்சநல்லூரைப் போல செம்பினால் ஆன பொருட்களோ அல்லது தங்கத்திலான ஆன பொருட்களோ சிவகளையில் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனினும், கருப்பு-சிவப்பு வண்ணக் கலயங்கள், குடுவைகள், பானை மூடிகள் போன்றவற்றில் அழகிய வடிவமைப்பில் வரையப்பெற்றுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகளை நோக்கும் போது இரும்புக் காலத்தில் சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப் பழமையானதாக இருக்கக்கூடுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அறிவியல் பூர்வமான ஆய்வின் முடிவுகள் வெளிவரும் போது தமிழ்ப்பண்பாட்டுத் தளத்தில் இன்னும் பல முக்கிய புதிய திருப்பங்களுடன் கூடிய செய்திகளை சிவகளை நமக்கு வழங்கக் காத்திருக்கின்றது என்பது என் திடமான நம்பிக்கை.
Thangam Thenarasu.jpg
--------

தேமொழி

unread,
Jul 15, 2021, 12:30:11 AM7/15/21
to மின்தமிழ்

“தமிழ்ப் பொண்ணு!”
இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள்.
இந்த ‘ஹேர் ஸ்டைல்’ எல்லாம் அந்தக் காலத்துலயே அத்துப்படி 
tamil pen.JPG
_______________________________________________________________________________________
என் முயற்சியில் சிலை முக அமைப்பு விளக்கம் ...

pen.jpg
_______________________________________________________________________________________

தேமொழி

unread,
Jul 15, 2021, 8:02:49 PM7/15/21
to மின்தமிழ்

pen2.jpg

தமிழகத்தின் பழஞ்சிற்ப மரபிற்கான எடுத்துக்காட்டுகளாக பல்லவர் சிற்பங்களையே நாம் முன்னிருத்துக்கொண்டிருந்த நிலையில்
தற்போது கிடைத்திருக்கும் மனித உருவின் சிற்பம் என்பது 2000 மற்றும் 2600 கால ஆண்டுகளுக்கும் இடையேயான தொன்மச்சிறப்புடையதாக சிறப்பு பெறுகிறது. இதைத்தான் என்போன்றோர் எதிர்பார்த்தோம். ஆக, சிந்துசமவெளி நாகரிகத்திற்குப் பின் தொன்மையான சிற்பமாக இது ஏற்றமுறலாம். கார்பன் டேட்டிங் மூலம் இதன் காலம் அறியவேண்டும். எவ்வாறெனினும், இது 2000 ஆண்டுகள் பழமையுடையதாகவே இருத்தல்வேண்டும். அவ்வகையில், இச்சிற்பம் சிதைவுறாமல் இருந்திருந்தால் அதனின் பெண்ணுருவம் எவ்வாறு இருந்திருக்கும் என கோட்டோவியம் மூலம் இட்டு நிரப்பியுள்ளேன். ஒரு சிறு முயற்சிதான்.
(பட உதவி:
நன்றி: அமைச்சர், மாண்புமிகு. திரு. தங்கம் தென்னரசு)
பேராசிரியர். முனைவர்.
சி.அ.வ.இளஞ்செழியன்
15.7.21
மதுரை.

தேமொழி

unread,
Aug 9, 2021, 2:26:59 PM8/9/21
to மின்தமிழ்

about a week ago

Memorial stone setup for a rooster | Aaviyur | Thirukovilur | Villupuram district | 10th century

சேவல் சண்டையில் வெற்றி பெற்ற கோழிக்கு அதன் உரிமையாளர் சாமரம் வீசுவது போன்ற அமைப்பில் உள்ளது. அருகில் பூரண கும்பம் காட்டப்பட்டுள்ளது.

honoring hero rooster.JPG
@Ponkarthikeyan4
8870680285

தேமொழி

unread,
Aug 9, 2021, 5:37:43 PM8/9/21
to மின்தமிழ்
A Chola inscription.jpeg
source - https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/aug/07/சேலம்-அருகே-சோழா்-காலக்-கல்வெட்டு-கண்டெடுப்புதமிழ்ப்-பல்கலை-மாணவிக்கு-பாராட்டு-3675271.html

ஆகஸ்ட் 7, 2021 

சேலம் அருகே சோழா் காலக் கல்வெட்டு கண்டெடுப்புதமிழ்ப் பல்கலை. மாணவிக்கு பாராட்டு...

சேலம் அருகே காடையாம்பட்டியில் சோழா் காலக் கல்வெட்டைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி அண்மையில் கண்டெடுத்தாா்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் அருகே உள்ள காடையாம்பட்டியில் சோழா் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலை பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் படித்து வரும் மாணவி பெ. இந்துஷா, இக்கல்வெட்டைக் கண்டுபிடித்தாா். இங்குள்ள ஒரு கல்லின் இரு புறமும் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்லின் பின்புறமுள்ள கல்வெட்டுப் பகுதி சிதைந்து காணப்படுகிறது. இக்கல்லின் உயரம் 80 செமீ, அகலம் 29.4 செமீ, கனம் 6.5 செ.மீ. ஆகும்.

சோழ அரசா் இரண்டாம் இராசாதிராசனுடைய 10 ஆம் ஆட்சியாண்டைச் சோ்ந்த இக் கல்வெட்டு (பன்னிரண்டாம் நூற்றாண்டு) ஓமலூா் வட்டத்தில் உள்ள காடையாம்பட்டியில் உள்ளது. இந்தக் காடையாம்பட்டியின் பழைய பெயா் பொன்னாா்கூடல் எனக் குறிப்பிடுகிறது.

‘நிகரிலிச் சோழமண்டலத்து கங்கனாட்டு தகட நாடான பொந்னாா் கூடலிலிருக்கும் திருவரங்கமுடையான் மகந் சொக்கனாந கற்கடராயப் பல்ல(வ)ரையன்‘ ஒரு ஏரியை தா்மமாக வெட்டியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

மேலும், இந்த ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த மகாதேவா்கோயிலுக்கு நிலக் கொடை அளித்ததையும் இக்கல்வெட்டு சுட்டுகிறது.
இக்கல்வெட்டில், 
1. ஸ்வஸ்திஸ்ரீ ராஜா, 
2. திராஜ தெ(வ)ற்க்கு திருவெ, 
3. ழுத்திட்டுச் செல்லா நிந்ற, 
4. திருநல்லியாண்டு பத்தாவ,
5. து நிகரிலிச் சோழமண்டலத்து, 
6. கங்கனாட்டு தகட நாடான பொந், 
7. னாா் கூடலிலிருக்கும் திருவ, 
8. ரங்கமுடையான் மகந் சொக்க, 
9. னாந கற்கடராயப் பல்ல(வ)ரை, 
10. யந் தந்மம் இவெரி இ, 
11. வெரியிந்கீழ் மஹாதேவா், 
12. ஆவிஞ்சி யாண்டவற்கு விட், 
13. ட விதை முக்கண்டமம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின் பக்கத்தில், 
1..ந்ததில் தெ., 
2. சாசரிக்கிற பிட..துக்கு, 
3. த்துக்குளக விதை.பெ, 
4. ரா ந கருமாணிக்காழ்வாா்க்கு,
5. கண்ட (கவி)தை பிடராயற்(கு), 
6. டக..இக்கல்வெட்டின, 
7. ...கு கண்டக விதை, 
8. பிராமணற்கு தா நம் பண்ணித்த, 
9. (ந்)து இரு கண் (ட) க விதை யித்த, 
10. ந்மத்தை அழிவு செய்வாந், 
11. கெங்கையிடை குமரியிடை, 
12. ஆயிரங்கு*ப் பசுவைக் கு, 
13. த்தினாந் பிரம்*ம வத்தியில் வி, 
14. ழுவாந் வழி எழெச்சமறுவா் 
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நிகரிலிச் சோழ மண்டலத்து கங்கனாட்டு தகட நாடான பொந்னார் கூடலிலிருக்கும் திருவரங்கமுடையான் மகந் சொக்கனாந கற்கடராயப் பல்லவரையன்" என்று ஏரியை வெட்டியவர் குறித்த விவரம் இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. செங்கல் சூளையில் கேட்பாரற்ற நிலையில் கிடந்து தொல்லியல் மாணவியால் கண்டெடுக்கப்பட்ட இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்வெட்டை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். 

இக்கல்வெட்டில் நிலத்தின் அளவுக் கண்டக விதை, குளக விதை என்ற அளவுகளில் குறிக்கப்படுகிறது.

இக் கல்வெட்டைக் கண்டுபிடித்த மாணவியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் பாராட்டினாா்.  

தேமொழி

unread,
Aug 9, 2021, 7:59:28 PM8/9/21
to மின்தமிழ்
source  - 

கி.மு.1500ஆண்டிற்கு முந்தைய 500 தொல்லியல் பொருள்கள் கண்டெடுப்பு : அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைப்பு

மதுரை காந்தி மியூசிய வளாகம் அரசு அருங்காட்சியகத்தில் உசிலம்பட்டி சூலப்புரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்கள் மக்கள் பார்வைக்காகவைக்கப்பட்டுள்ளன.

காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறியதாவது: மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய இளநிலை ஆராய்ச்சியாளர் உதயகுமார் சூலப்புரத்தில் ஆய்வு செய்தார். காந்தி கிராம பல்கலை பேராசிரியர்முருகேசன் தகவலின்பேரில் அங்கு ஆய்வு செய்தோம். சூலப்புரம் மலை பகுதியில் ஈமக்காடுகள் இருப்பதை கண்டறிந்தோம்.

இங்கு மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் அலங்கார கல் வகையான சூதுபவள மணிகள், உலோக ஆணிகள், இரண்டு மீன் சின்னம், தெரகோட்டா எடை கற்கள், வளையல்கள், எலும்பு துண்டுகள், பற்கள், கருப்பு, சிவப்பு மண் பானைகள், நான்கு கால் குடுவை, வேட்டை கருவிகள், இரும்பு துண்டுகள் உட்பட 500 விதமான பொருட்கள் கிடைத்தன.தமிழி போன்ற எழுத்துக்கள் ஓவியங்கள், குறியீடுகளில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என புதுச்சேரி பல்கலை பேராசிரியர் கா.ராஜன் கூறுவார்.

அவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இங்கு கிடைத்த பானைகளில் சிறு குறியீடுகள் உள்ளன. இதோடு பானைகளில் முக்கோண வடிவில் கோடுகள் வரைந்து அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், பேரையூர் தாசில்தார் முயற்சியில் கண்டெடுத்த பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளோம் என்றார். பார்வை நேரம்: காலை 9:00 - மாலை 5:00 மணி,நுழைவு கட்டணம் உண்டு.

தேமொழி

unread,
Aug 11, 2021, 12:01:45 AM8/11/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3123237197897351&set=a.1509998529221234

குகைவிட்டுக் கிளம்பும் புலி !
புகைவிட்டுக் கிளம்பும் எரிமலை !
உறைவிட்டுக் கிளம்பும் வாள்!
தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரீகம்!

tn-excavations.JPG
கீழடியில் தற்போது கண்டறியப்பட்டுள்ள சிவப்பு நிற பெரும் பானை!
#tnexcavations

---

தேமொழி

unread,
Aug 13, 2021, 11:25:24 PM8/13/21
to மின்தமிழ்
ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை

asi.jpeg

வாருங்கள் படிப்போம்

புத்தகத் திறனாய்வு : 72
ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை
Adichanallur excavation report
by  ASI

திறனாய்வு: எழுத்தாளர் சிவசித்ரா

14/8/21
சனிக்கிழமை மாலை 7.30 மணி

Join Zoom Meeting

Meeting ID: 884 5712 3718
Passcode: 824910

அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்
------

தேமொழி

unread,
Aug 13, 2021, 11:27:07 PM8/13/21
to மின்தமிழ்
WhatsApp Image 2021-08-12 at 10.43.19 PM.jpeg

------

தேமொழி

unread,
Aug 19, 2021, 12:24:01 AM8/19/21
to மின்தமிழ்

தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் உள்ள கல்வெட்டை மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட நடவடிக்கை

ஆர்.ஷபிமுன்னா

19 ஆகஸ்ட்  2021

தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகல்வெட்டு தகவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிடும் பணியில் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் கல்வெட்டியல் பிரிவு இறங்கியுள்ளது.

இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் (ஏஎஸ்ஐ) கல்வெட்டியல் பிரிவு மைசூரில் உள்ளது. இது,நாடு முழுவதிலும் கண்டு எடுக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்தல் முறையில் காகித நகல் எடுத்து சேமிக்கிறது. இவற்றை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் தொகுப்பு நூல்களாகவும் வெளியிடுகிறது. இதில் அதிகமாகக் கிடைத்து வரும் தமிழ் கல்வெட்டுகள், முறையாகப் பதிப் பிக்கப்படுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ளது.

அதேசமயம் கல்வெட்டு தகவல்களை படிக்கும் கல்வெட்டியலாளர் கள் அந்த அலுவலகத்தில் போதுமான அளவில் இல்லை. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட 758 காலிப் பணியிட அறிவிப்பில் கல்வெட்டியலாளர் முற்றிலும் இல்லை.

இதனால், கல்வெட்டியல் துறை மூடப்படுவதாக புகார்எழுந்தது. இந்தச் சூழலில் தமிழகதொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்’’ என கடந்த வாரம் கூறியிருந்தார்.

காகித நகல்கள்:
இது நடைமுறையில் சாத்திய மல்ல எனத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், மைசூரின் ஏஎஸ்ஐ அலுவலகத்தில் எந்தவிதமான கல்வெட்டுகளும் இல்லை. மாறாக அதிலிருந்து படி எடுக்கப்பட்ட காகித நகல்கள் மட்டுமே உள்ளன. இப்பணிக்காகவே மைசூரின்கல்வெட்டியல் துறை இயங்குவதால் அவற்றை தமிழக அரசிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஏஎஸ்ஐயில் பணியாற்றி ஓய்வுபெற்ற கல்வெட்டிய லாளர்கள் வட்டாரங்கள் கூறும்போது, “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடைசி ஆட்சியில் இதேபோல் தமிழ் கல்வெட்டுகள் மீது சர்ச்சை கிளம்பியது. அப்போது முதல்வர் கருணாநிதி மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டு களின் காகித நகல்கள் படம் எடுக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் தொகுக்கப்படும் என அறிவித்தார்.

இப்பணியை தஞ்சையின் தமிழ் பல்கலைக்கழகம் செய்யும் எனக் கூறி அதற்காக ரூ.10 லட்சம் நிதியும் ஒதுக்கியிருந்தார். இந்த நிதியிலிருந்து கேமரா மட்டுமே வாங்கப்பட்டதே தவிர வேறு எந்தப்பணியும் நடைபெறவில்லை. அப்போது மத்தியில் திமுகவின் கூட்டணி ஆட்சி இருந்தும் மைசூரின் அலுவலகத்தை முன்பிருந்த ஊட்டிக்கு மாற்றவும் முடியாமல் போனது” என்று தெரிவித்தன.

இந்நிலையில் மைசூரு அலுவலகத்தில் தமிழ் கல்வெட்டு நகல்களை படிக்கும் பணியில் ஓய்வுபெற்ற கல்வெட்டியலாளர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இத்தகவல்களை ஆங்கில மொழிபெயர்ப்புடன் தனது இணையதளத்தில் பதிவேற்றும் முயற்சியில் மைசூருஏஎஸ்ஐ அலுவலகம் இறங்கியுள்ளது. இந்த பதிவேற்றத்துக்கு பிறகு அவற்றை இலவசமாக படிக்கும் வசதி செய்யப்பட உள்ளது.

இவற்றை யார் வேண்டுமாலும் மத்திய அரசின் ஏஎஸ்ஐ இணையதளத்தில் படிக்கலாம். தற்போது மொழிபெயர்க்கப்படும் தகவல்களுடன் இதற்கு முன் தொகுக் கப்பட்ட தமிழ் கல் வெட்டு தகவல்களும் அதில் இடம்பெற உள்ளன. இதுதவிர சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழி கல்வெட்டு தகவல்களும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

தற்போது, மொழி பெயர்க் கப்பட்ட கல்வெட்டு தகவல் தொகுப்புகள் மத்திய அரசால் நூலாக அச்சிடப்பட்டு ஏஎஸ்ஐ அலுவலகங்களில் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேமொழி

unread,
Aug 19, 2021, 2:16:27 AM8/19/21
to மின்தமிழ்
verdict.jpeg
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னை கொண்டுவரவும், கல்வெட்டியல் கிளை பெயரை மாற்றவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறைக்கு கொண்டு வரவேண்டுமென மணிமாறன் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 மாத அவகாசத்திற்குள் தமிழ் கல்வெட்டுகளை சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டு கிளைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும் தொல்லியல்துறையின் கிளையான கல்வெட்டு இயல் கிளையை தமிழ் கல்வெட்டு இயல் என பெயர் மாற்றவும், கல்வெட்டு இயலுக்கு போதுமான வசதிகள் மற்றும் கல்வெட்டு நிபுணர்களை பணியமர்த்தவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தேமொழி

unread,
Aug 19, 2021, 10:23:23 PM8/19/21
to மின்தமிழ்

சுடுமண் முத்திரை கண்டெடுப்பு 

திருப்புவனம் அருகே அகரத்தில் நடந்து வரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சுடுமண் முத்திரை, கூடுதல் அடுக்கு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது

பதிவு: ஆகஸ்ட் 20,  2021 00:57 AM

திருப்புவனம் அருகே அகரத்தில் நடந்து வரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சுடுமண் முத்திரை, கூடுதல் அடுக்கு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.

keezhadi trade artifacts.jpg
சுடுமண் முத்திரை
திருப்புவனம் யூனியனை சேர்ந்த அகரத்தில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு குழியில் சுடுமண்ணால் ஆன முத்திரை 256 சென்டிமீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ளது. இந்த முத்திரையானது கனமாகவும், தலைப்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், உடல் பகுதியானது உட்குழிவுள்ள உருளை வடிவத்தினையும் கொண்டுள்ளது. முத்திரையின் தலைப்பகுதியில் கீறப்பட்ட மூன்று பிரிவுகளை கொண்ட தடிமனான வட்ட வடிவ அலங்காரங்கள் உள்ளன. அவ்வட்ட வடிவத்தின் நடுவே புள்ளிகள் காணப்படுகின்றன. 

கைபிடி பகுதியின் பக்கவாட்டிலும் முத்திரையின் தலைப்பகுதியிலும் சிறிது சேதமடைந்துள்ளது. இந்த முத்திரையின் மேற்புறம் நன்கு வழுவழுப்பாகவும், அடிப்பகுதி சற்று சொரசொரப்பாகவும் உள்ளது. மிக நேர்த்தியாக கையால் வனையப்பட்டுள்ள இம்முத்திரையானது 2.75 செ.மீ உயரமும், முத்திரையின் தலைப்பகுதியின் விட்டம் 2.80 ஆகவும் உள்ளது. இந்த முத்திரையின் எடை 24.6 கிராம் ஆகும்.

உறை கிணறு
மேலும் அகரத்தில் நத்தை ஓடுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பெரிய பானைகள், செங்கல் சுவர், சுடுமண் பொம்மை, சுடுமண் உறைகிணறு உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. அகரத்தில் ஒரு குழியில் ஏற்கனவே 7 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. 

அதே குழியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டதில் கூடுதலாக மூன்று அடுக்கு உறைகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் பத்து அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கும்போது கூடுதலாக அடுக்கு உறைகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக என கருதப்படுகிறது.
keezhadi trade artifacts3.jpg
---
keezhadi trade artifacts2.jpg
---

தேமொழி

unread,
Sep 13, 2021, 6:24:06 PM9/13/21
to மின்தமிழ்

புதுக்கோட்டையில் டைனோசர் காலத்து கல்மரம் - 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது


ஆ. விஜயானந்த், பிபிசி தமிழுக்காக
13 செப்டெம்பர் 2021

fossil tree-bbc.JPG
கல்மரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரம் கிடைத்துள்ளதை தொல்லியல் ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர். ` மண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பழைய வரலாற்றை கண்டடைவதற்கும் இது பேருதவியாக இருக்கும்' என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் பாண்டியன்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நரிமேடு பகுதியில் சுண்ணாம்பு பாறைகளும் கூழாங்கற்களும் அதிகளவில் கிடைக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இந்தப் பகுதியின் நில அமைப்பின் மாறுபாட்டை உணர்ந்து பல ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை சீற்றம் ஏற்பட்டு சுண்ணாம்புப் பாறைகளுக்கு இடையில் தாவரங்களும் உயிரினங்களும் புதையுண்டு போனதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறு, இந்த மரங்கள் எல்லாம் கனிமப் பொருளால் ஆன படிமங்களாக உருமாறியுள்ளதையும் பல்வேறு ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் இங்கு கிடைத்த 28 செ.மீ நீளமுள்ள கல் மரத்தை புதுக்கோட்டை மாவட்ட அரசு அருங்காட்சிய காப்பாட்சியரிடம் தொல்லியல் ஆய்வாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் எஸ்.பாண்டியன் என்பவர், ஞாயிற்றுக்கிழமையன்று கள ஆய்வில் கண்டறிந்த கல்மரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இந்தக் கல்மரம் அமைந்துள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டுத் துறையில் எம்.ஏ, எம்.ஃபில் படிப்பை நிறைவு செய்த பாண்டியன், ஓய்வு நேரங்களில் ஆய்வுப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டறிந்தார். கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த நடுகல், பசுக்களை கவர வரும்போது நடந்த சண்டையில் கனங்குமரன் என்பவர் இறந்ததற்காக பொதுமக்கள் நடுகல் எடுத்ததை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. இவர் தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டே ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தொல்லியர் ஆய்வாளர் எஸ்.பாண்டியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் கல்மரம் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர்கள் கல் மரம் ஒன்றை கள ஆய்வில் கண்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாக நரிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வந்தேன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (12 ஆம் தேதி) இந்தக் கல்மரத்தைக் கண்டறிந்தேன். இதன் அளவு 10 செ.மீ உயரமும் 10.5 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. இதன் ஆயுள் என்பது பத்து கோடி ஆண்டுகள் ஆகும். அதாவது, டைனோசர்கள் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்ததாக இந்தக் கல்மரம் உள்ளது. அரியலூரில் கண்டறியப்பட்ட கல்மரமும் அதே காலட்டத்தைச் சேர்ந்தவைதான்" என்கிறார்.

`` கல் மரங்கள் எப்படி உருவாகின்றன?" என்றோம். `` பூகம்பம் காரணமாக மனிதர்களோ, மரங்களோ அப்படியே மண்ணுக்குள் செல்லும்போது அது வேதியியல் மாற்றங்களால் கனிமப் பொருளாக அப்படியே மர வடிவில் கல்லாக மாறிவிடுகின்றன. நரிமேடு பகுதியில் 15 அடி ஆழத்துக்கு கூழாங்கற்கள் கிடைக்கின்றன. இந்தப் பகுதியில் நீரோட்டம் இல்லாமல் இவ்வளவு கூழாங்கற்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படி அங்கே ஓடிய நீரோடையில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் மண்ணுக்குள் புதைந்து படிமங்களாக மாறியிருக்கலாம். இந்தப் பகுதி முழுக்க முழுக்க சுண்ணாம்புக் கல் பாறைகள் நிரம்பிய பகுதியாக உள்ளது" என்றார்.

`` கல்மரத்தின் வயது 10 கோடி ஆண்டுகள் என எப்படி வரையறுக்கிறீர்கள்?" என்றோம். `` மண்ணியல் ஆய்வாளர்கள் இதற்கான காலகட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கல்லால் மரம் உருமாறுவது என்பது உடனடியாக நடக்காது. பல கோடி ஆண்டுகள் வேதியியல் மாற்றத்தால் மட்டுமே அவை மாறுபடும். அந்தவகையில் பார்த்தால் இந்தக் கல்மரத்தின் வயது என்பது 10 கோடி ஆண்டுகளாக உள்ளது. இது கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தது. பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த ஆஞ்சியோஸ்பெர்முக்கு முந்தைய ஜிம்னோஸ்பெர்ம் வகையைச் சேர்ந்ததாக உள்ளது. இது ஓர் அரிதான தொல்லியல் பொருள். இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் ஏராளமான அரிய பொருள்கள் கிடைக்கும்" என்கிறார்.

``இந்த ஆய்வின் அடுத்தகட்டப் பணி என்னவாக இருக்கும்?" என்றோம். `` மண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பழைய வரலாறுகளைத் தேடி எடுக்கவும் இந்தக் கல் மரம் உதவும். இந்தப் பகுதியில் விலங்குகள் அதிகமாக இருந்துள்ளன. இதற்கு முன்பு 3 இடங்களில் கிடைத்த கல் மரங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைகள்தான். அரியலூரில் ஒரு மரமே முழு கல்லாக கிடைத்துள்ளது. அங்கு டைனோசரின் முட்டைகளும் கிடைத்துள்ளன. கடற்பகுதிகளில் நத்தை ஒன்று கல்லாக மாறியதையும் கண்டறிந்துள்ளனர்" என்கிறார்.

---

தேமொழி

unread,
Sep 13, 2021, 6:43:20 PM9/13/21
to மின்தமிழ்

தோண்ட தோண்ட பொக்கிஷங்கள்... தமிழக அகழாய்வுகளில் இதுவரை கிடைத்தது என்ன? 

-கே.எஸ். ராதாகிருஷ்ணன்

செப்டெம்பர் 12, 202
தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் அதன் முடிவுகள் தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுக செய்தித் தொடர்பாளருமான சமூக செயற்பாட்டாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாறு அருகே 2,000 ஆண்டுகள் பழமையான தொல்லியல் மேடு கண்டறியப்பட்டுள்ளது. சாத்தூர் எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் பா.ரவிச்சந்திரன் இந்த தொல்லியல் மேடு குறித்து ஆய்வு நடத்தி உள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணி நடந்துவருகிறது. சித்தன்னவாசல், குடுமியான்மலை, கலசமங்களம் எனப் பல கிராமப் பகுதிகளில் அகழாய்வுத் தரவுகள் பூமிக்குக் கீழ் உள்ளதை மீட்க வேண்டும். 

சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் அகழ்வாராய்ச்சி செய்யவேண்டிய பகுதிக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழ்வாராய்ச்சி பகுதிக்கும் செல்ல நேரிட்டது. கொடுமணல் மற்றும் இங்குள்ள அரச்சலூரில் இசை சார்ந்த பல அகழ்வாராய்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நன்னூல் எழுதிய பவனந்தி முனிவர் வாழ்ந்த திங்களூர் இங்கேதான் உள்ளது. இங்கிருந்து நொய்யலாற்றில் பரிசல், சிறு படகுகள் மூலம் பொருட்களை ரோமாபுரிக்கு அப்போதே அனுப்பியது பெரும் வியப்பை தந்தது. இன்னும் பல தரவுகள் தோண்டி எடுத்தால் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. 

இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்புடையது. கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யலாற்று நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது, இதனுடைய உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளி உலகத்திற்கு வெளிவரவில்லை. 

இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது. 

கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்திருக்கும் பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த இடம் கல்லறைப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளின் போது கல்லறைகள், சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஹெக்டேர் பரப்பளவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. 

இங்கு முதல் ஆய்வினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985 ஆம் ஆண்டு நடத்தியது. பின்னர் 1986, 1989,1990ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தியது. இதில் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 48 இடங்களில் தோண்டப்பட்டு பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அகழாய்வு நடந்தது. அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு கருதப்படுகிறது. காரணம் ஒரே பகுதியில் 15 அகழிகள் தோன்டுவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இது இந்த பகுதியில் பல்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. காரணம் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளும் வெவ்வேறு விதமாக உள்ளன. இங்கு கிடைத்த பொருட்கள் கிமு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தெரியவந்தது. 

இரும்பு பொருட்கள், கல், கோமேதகம், விலையுயர்ந்த குண்டு மணிகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான வளையல்கள் கிடைத்துள்ளன. மாணிக்கக் கற்கள், ரத்தினம் உள்பட விலையுயர்ந்த கற்களும் கிடைத்துள்ளன. முழுமையான ஆராய்ச்சி கொடுமணலில் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த இந்த நிலையில் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கியிருக்கும் ஆய்வு முழுமையான வரலாற்றை கொண்டு வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர். 

அதே போலவே, வரலாற்றில் திருவில்லிப்புத்தூருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்த பகுதியை இராணி மல்லி என்பவர் ஆண்டார். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர். தமிழை ஆண்டாள், கோதை நாச்சியாருடைய திருத்தலம். ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்விச் சாலைகள், நூலகங்கள் சூழ்ந்த ஊர். திருப்பாவை என்ற தமிழ் இலக்கியத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அர்ப்பணித்த ஊர். பெரியாழ்வாரின் தீந்தமிழ் பாசுரங்கள் இன்றைக்கும் வியக்க வைக்கின்றது. இப்படி பல வரலாற்றுத் தரவுகளை திருவில்லிப்புத்தூருக்கு சொல்லிக் கொண்டே போகலாம். 

திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே கிருஷ்ணன் கோவில் வட்டாரத்தில் உள்ள விழுப்பனூர் கிராமத்தில் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள் நிரம்ப புதைந்துள்ளது. இது குறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறையை சார்ந்த உதவிப் பேராசிரியர் கந்தசாமியும், பேராசிரியர் திருப்பதி, பேராசிரியர் தங்க முனியான்டி, பேராசிரியர் முத்துகுமார் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த பூமியில் காணப்பட்ட முதுமக்கள் தாழிகளின் தொடர்ச்சி பல இடங்களில் இந்த வட்டாரத்தில் உள்ளதாக தரவுகள் சொல்கின்றன. அதன்மீது கற்பாறைகளால் அடுக்கி மூடப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான மூன்றுவித ஓடுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. 

ஏறத்தாழ 2 அங்குலம் கனப் பரிமாணத்தில் களிமண், செம்மண் முதுமக்கள் தாழிகள் தென்பட்டுள்ளன. இதில் வண்ணப் பூச்சும், பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கற்கள் யாவும் கனம் அதிகமாகவும், அவை இரும்புத் தாது கலந்து சுட்ட மண்ணால் கலவைபடுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளும் பூமியில் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் வடபுறமும், கீழ்மேலாகவும் ஒரு சிறு ஓடை உள்ளது. இந்த சிற்றோடையின் வடகரை மிகப் பழமையான சுவர் தடுப்புகளும் கொண்டுள்ளது. எனவே அங்கு கட்டுமானப் பணிகள் அந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது. 

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் கீழும் முதுமக்கள் தாழிகள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே இந்த பகுதி தொல் மூத்த தமிழ் குடியினர் வாழ்ந்துள்ளனர். இவர்களுடைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் வெளிக் கொணர வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இதே போல, இதன் அருகேயுள்ள மம்சாபுரம், குறவன்கோட்டை ஆகிய இடங்களின் அருகேயும் பழமையின் அடையாளங்கள் பூமியில் புதைந்துள்ளன என்றும் பல கருத்துகளை சொல்கின்றனர். இவையாவும் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று குறிப்பிடுகின்றனர். 

சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அடிக்கல் நாட்டிய நிலத்திலும் அகழ்வாராய்ச்சி செய்தால் தமிழர்களின் தொல் நாகரிகத்தின் அடையாளம் கிடைக்கும் என்று திருவில்லிப்புத்தூரை சேர்ந்த கள ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், செவல்பட்டி, கோபால்சாமி மலை போன்ற சில பகுதிகளும், திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு, கழுகுமலை போன்ற பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மட்டுமல்லாமல், பாறை ஓவியங்களையும் ஆய்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் உள்ளன. 

கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து, மண்பானைகள் உட்பட 5,300 சங்கக்கால பொருட்கள் கிடைத்துள்ளன. அது குறித்து உரிய ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டன. மாமதுரை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை நகரம் ஆகும். ஏதென்ஸ், ரோம்-க்கு ஒப்ப தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மதுரை. தமிழ்நாட்டில் நெடுங்காலமாக சிறப்புப் பெறுகிற நகரங்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது மதுரை. இந்நகரின் தொன்மையை பேசும் சான்றுகள் நிறையவே உண்டு. பிளினி, தாலமி போன்ற கிரேக்க அறிஞர்கள் மற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரின் தூதரான மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவரின் எழுத்துக் குறிப்புகளும், சங்க இலக்கியங்களின் பாடல் வரிகளும் விளக்குகிற தகவல்கள், இந்நகரம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையையும் இந்தியாவின் தொன்மை நகரங்களில் ஒன்று என்பதையும் சொல்லுகிற சான்றுகளாகின்றன. இருந்தாலும் மதுரை மாநகரைப் பற்றிய சொல்லும்படியான அகழ்வாய்வு சான்றுகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்றே தெரிய வருகிறது. 

அந்நகரின் வரலாற்றைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கால கட்டத்திற்கு நகர்த்துவதற்குத் தோதான வலுவான ஆதாரங்கள் எதுவும் மதுரை நகர் சார்ந்து இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை என்பதே அதிகமான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் கடந்த 2015 ஆண்டு முதல் மத்திய தொல்துறை அகழாய்வுத் துறை பெங்களூர் பிரிவு கீழடியில் நிலத்தை வெட்டி ஆகழராய்ச்சி செய்ததில் பல தரவுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 43 தொல்லியல் குழிகள் வெட்டப்பட்டன. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் கிடைத்துள்ளன. அன்றைக்குள்ள நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் இருந்து திரும்பவும் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள். 

ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 3000 ஆண்டின் தொன்மையை காட்டுகிறது. 1872, 1876, 1903 1914 என பல கட்டங்களில் இங்கு ஆய்வுப் பணிகள் நடந்தன. முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம் போன்ற பண்டைய பயன்பாட்டுப் பொருட்கள் கிடைத்தன. இது குறித்தான சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கையும் வெளிவராமல் மத்திய அரசிடம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 

பழனி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பொருந்தல் கிராமம், கோவை மாவட்டம் சூலூர், ஈரோடு மாவட்டம் அரச்சலூர், நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி, கண்டியூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஈரோடு சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல், அழகன்குளம், மருங்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பானையோடுகள், கரூரில் கிடைத்த மோதிரம்; மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துக்கள்; கேரளவின் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துக்களை கொண்டே தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆகவே, மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழையே, மௌரிய மன்னனும், திபேத்திய மன்னனும் பயன்படுதியிருப்பர் என்று கூறப்படுகின்றது. 

தமிழகத்தில் அகழராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதற்கான முடிவுகளும் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர், கொற்கை, முசிறி, வைகை ஓரத்தில் வருசநாடு, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கரூர் அருகே அமராவதி ஆற்றங்கரை, பாடியூர் போன்ற இடங்களில் அகழ் ஆய்வில் பல தரவுகள் கிடைத்தன. குறிப்பாக இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள்தான் கிடைத்தன. ஆனால் கீழடியில் வேறு சில அரிய பொருட்கள் அகழ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொகஞ்சதரோ, ஹரப்பாவில்தான் இங்கு கிடைத்த கழிவுநீர் கால்வாய் மாதிரி இருந்தன என்கிறது செய்திகள். 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இப்படியான தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற செய்திகள் உள்ன. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டால் இன்னும் பல தரவுகள் நடக்குக் கிடைக்கும். இந்திய திருநாட்டின் வடபுலத்தில் பாடலிபுத்திரம், கன்னோஜி, உஜ்ஜயினி, இந்திரப்ரஸ்தம், தட்சசீலம் போன்ற ஒரு சில பெருநகரங்களையே சிறப்பாக சொல்ல முடியும். ஆனால் பண்டைய தமிழகத்தில் சிறிய நிலப் பரப்பிலேயே சிறப்பு வாய்ந்த நகரங்களாக, தெற்கேயிருந்து களக்காடு, திருச்செந்தூர், மணப்பாடு, உவரி, கொற்கை, பழைய காயல், ஆதிச்சநல்லூர், தென்காசி, திருவில்லிப்புத்தூர், இராமநாதபுரம், மதுரை, பரம்புமலை, தொண்டி, உறையூர், கரூர், தகடூர், முசிறி, காங்கேயம், காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் சானூர், குன்றத்தூர், பட்டறைப்பெரும்புதூர், அத்திரம்பாக்கம், பரிக்குளம், பூண்டி மற்றும் திருக்கோவிலூர் என வரலாற்றை சொல்லும் எண்ணற்ற நகரங்கள் இருந்துள்ளன. இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிட தமிழனின் நாகரிகமும், ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது. 

வடக்கில் மகதப் பேரரசு, மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, முகலாயப் பேரரசு என பெரிய பேரரசுகள் இருந்திருந்தாலும், அத்தகைய நிலப்பரப்பைவிட தமிழகத்தில் அமைந்த சிறியப் பரப்பில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சி மேலோங்கிதான் இருந்துள்ளது. 
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து தமிழகத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வு மூலம், தமிழ் மண்ணல் ஆதிகாலத்தில் நெல் பயிரிடப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் தாவரப் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது. 
மேலும், 
1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது. 
3. தமிழகத்தில் ஆதிச்சநல்லுர், கீழடி, அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் போன்ற தொன்மைமிக்க பல இடங்களில் வரலாற்று, தொல்லியல் ஆர்வலர்கள் மூலமாகவே பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே அரசும் இதில் கூடுதல் அக்கறை எடுத்து அந்த இடங்களில் முறைப்படி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும். 

அது போன்று, சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல தரவுகள் கிடைத்துள்ளது. 

ஆனால் தமிழருடைய வரலாறு சரியாக, சீராக, நேராக எழுதப்படாததால், ஏதோ குப்தர் காலம் தான் பொற்காலம் என்றும், மௌரியப் பேரரசு பலம் வாய்ந்தது என்பது போலவும் கூறப்படுகின்றது. சரியான தரவுகள் இல்லாததால் தமிழனுடைய சிறப்பை சொல்ல முடியாமல் போய்விட்டது. எனவே, இத்தகைய அகழ்வாய்வு, கல்வெட்டு, சிற்ப ஆய்வுகள் மேலும் வளர வேண்டும். இவையாவும் அரசியல், வட்டாரம் போன்ற அனைத்து மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடைபெற வேண்டிய நடவடிக்கை ஆகும். இதுகுறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்


---

தேமொழி

unread,
Sep 15, 2021, 5:32:19 PM9/15/21
to மின்தமிழ்

திண்டுக்கல் அருகே கி.பி.17 ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு

செப்டெம்பர் 14, 2021 
NEWS.JPG
போடி: திண்டுக்கல் அருகே தொல்லியல் களஆய்வின்போது 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகற்களை மாணவா்கள் கண்டறிந்துள்ளனா்.

தேனி மாவட்டம் போடியில் செயல்பட்டு வரும் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியா் சி.மாணிக்கராஜ், திண்டுக்கல் மாவட்டம் நெல்லூா் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பி.பெரியசாமி, வரலாற்று ஆசிரியா் அ.கருப்பையா ஆகியோா் அண்மையில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு தொல்லியல் சாா்ந்த கள ஆய்வு குறித்து பயிற்சி அளித்தனா். அப்போது கி.பி.17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நினைவு நடுகற்களை மாணவா்கள் கண்டறிந்தனா்.

இதுகுறித்து பேராசிரியா் மாணிக்கராஜ் கூறியது: திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகேயுள்ள அழகா்நாயக்கன்பட்டி பகுதியில் ஆய்வு செய்தபோது இரு விதமான நினைவு நடுகற்கள் கண்டறியப்பட்டன. ஒரு நடுகல் 2 நிலை அடுக்குகளைக் கொண்டிருந்தது.

அக்கல்லின் முன் பக்கமுள்ள கீழ் அடுக்கில் வீரன் ஒருவன் தன் மனைவியுடன் நிற்பதை புடைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனா். வீரனின் வலது கையில் துப்பாக்கியும் அவனது மனைவி கையில் தீப்பந்தம் பிடித்தபடியும் சிற்பம் காணப்படுகிறது. இருவருக்கும் நாயக்கா் கால மக்கள் அணியும் கொண்டை அமைப்பு உள்ளது. சதி செய்து இறக்கும் பெண்களின் நினைவாக செதுக்கப்படும் கல்லில் அவா்களின் கைகளில் தீப்பந்தம் காட்டப்பட்டிருக்கும் என்பதால் இது சதிக்கல் வகையைச் சாா்ந்ததாகும். 

இதே பகுதியில் காணப்படும் மற்றொரு நினைவு நடுகல்லில் சமூகத்தில் உயா்ந்தவா்கள் அல்லது குறுநில மன்னா்கள் அணியும் தலைப்பாகையுடன் ஒரு ஆண் தன் மனைவியருடன் கைகளை கூப்பி வணங்கிய நிலையில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் இப்பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னராக இருக்கலாம் அல்லது அனைவராலும் மதிக்கும் நல்ல மனிதராக இருக்கலாம். இதனால் அவா்கள் நினைவாக இந்நினைவு நடுகல் செதுக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது என்றாா்.
---

தேமொழி

unread,
Sep 20, 2021, 8:16:18 PM9/20/21
to மின்தமிழ்
source:

கொற்கை அகழாய்வு: 
9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!

-- இ.கார்த்திகேயன்
விகடன் மாணவப் பத்திரிகையாளர்
செப்டெம்பர் 19, 2021 


கொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணியில் நான்கு அடுக்கு கொண்ட திரவப் பொருள்கள் வடிகட்டும் சுடுமண் குழாய், 9 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 அடி உயரமுள்ள இரண்டடுக்கு கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. கொற்கையில், கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் தமிழக தொல்லியல்துறை சார்பில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. அந்த அகழாய்வுப் பணிதான், தமிழக தொல்லியல்துறை உருவான பின்னர், செய்யப்பட்ட முதல் அகழாய்வுப் பணியாகும்.

அந்த அகழாய்வில், கொற்கை நகரம் சுமார் 2,800 ஆண்டுகள் பழைமையானது என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்ததாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடந்ததாகவும், 'கொற்கை' பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது. 52 ஆண்டுகள் கழித்து, தற்போது இங்கு மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

அகழாய்வு இயக்குநர் முனைவர் தங்கத்துரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளீஸ்வரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அகழாய்வுப் பணிக்காக, கொற்கைப் பகுதியில் 17 ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் ஏற்கெனவே சுமார் 2,800 ஆண்டுகள் பழைமையான கட்டிடம், அறுக்கப்பட்ட நிலையில் சங்குகள், அறுக்கப்பட்ட சங்குகளை பட்டை தீட்டப் பயனபடுத்தப்பட்ட பல வடிகங்கள், சங்குகள், சங்கினால் செய்யப்பட்ட வளையல் துண்டுகள், இரும்பு உருக்குத் துண்டுகள், கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் பல்வேறு குறியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நான்கு அடுக்குகள் கொண்ட திரவப் பொருள்களை வடிகட்டும் சுடுமண் குழாய்கள், உருகிய கண்ணாடி மணிகள், கடல் சிப்பிகள், சில கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகள், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் பயன்படுத்திய 9 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதே குழியில், இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள் என வாழ்விட பகுதிகளை உறுதிப்படுத்தும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்தின் அடியில் 4 அடி உயரம் கொண்ட கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கொள்கலனைத் தொல்லியல் ஆய்வாளர்கள் வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அதன் அடியில் மற்றொரு கொள்கலன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டடுக்கு கொண்ட கொள்கலன், பழங்காலத்தில் தானியப் பொருள்களைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என, ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வைப் போலவே கொற்கை அகழாய்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் ஆய்வுப் பணிகள் நிறைவுபெறவுள்ள நிலையில், அகழாய்வில் தொடர்ந்து பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேமொழி

unread,
Sep 26, 2021, 12:14:15 AM9/26/21
to மின்தமிழ்
.
வேட்டவலம் - பாக்கம்: கற்கால உலகத்தின் பொற்பாதை

 – ச.பாலமுருகன்

பண்டைய காலத்தில் தொண்டை மண்டலமாக கருதப்படுகின்ற வடதமிழ்நாட்டுப் பகுதிகள் வரலாற்றுக்கும் தொல்லியலுக்கும் அளப்பறியச் சான்றுகளை அளித்துக்கொண்டே உள்ளது. சமணம், பௌத்தம், நடுகற்கள், பாறை ஓவியங்கள், குடைவரைகள், கோயில்கள், பெருங்கற்கால மற்றும் புதிய கற்காலத் தடங்கள் எனப் பட்டியல் நீளும். இவை அனைத்தும் ஒரே பகுதியில் காணவேண்டுமெனில் நாம் செஞ்சிக் குன்றுகளில் காணலாம். வேட்டவலம் பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் செஞ்சிக்குன்று வடகிழக்காகவும், தென்கிழக்காகவும் நீண்டு செல்கிறது. வடக்கே தேசூர்- வந்தவாசி வரையிலும் தெற்கே திண்டிவனம்- விழுப்புரம் வரையிலும் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில் எத்தனை எத்தனை தொல்லியல் புதையல்கள். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதே ஒரு பரவச அனுபவம் தான். அப்படியொரு கொள்ளை அழகு.

செஞ்சி -வேட்டவலம் இடையே அமைந்துள்ள குன்றுகள் தொல்லியல் ஆர்வலர்களால் தேடப்படும் பகுதியாக மாறியதில் ஆச்சர்யம் இல்லை. அண்மையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவர் கால ஓவியம், பாக்கம் மலைப்பகுதியில் உள்ள கோட்டைச்சிதிலங்கள், புதிய கற்கால இடங்கள், செத்தவரை ஓவியங்கள், வேட்டவலம் ஓவியங்கள், கஞ்சூர் சமணப்படுக்கை ஆகியவற்றின் நடுவே அமைந்துள்ள நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா ஓர் அற்புதமாக புதையலைக் கண்டுபிடித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவத்தைச் சேர்ந்த மதன்மோகன், பழனிச்சாமி, ச.பாலமுருகன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தோம். செத்தவரை ஓவியத்திற்கு சற்றேறக்குறைய இணையான இரண்டு ஓவியத் தொகுதிகள் அவரால் உலகத்திற்கு வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள் பாரதிராஜா. 

pakkam.jpg
தொடரட்டும் தேடல்கள். அந்த ஓவியத்தைப் பற்றி....
வேட்டவலத்திற்கு வடகிழக்காக அமைந்துள்ள மலைப்பகுதியில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தின் நந்தன் கால்வாய் அருகே ஒரு பாறையில் இரண்டு பகுதிகளாக ஓவியங்கள் காணக்கிடைத்தன. இதில் பாறையின் உயரமான பகுதியில் உள்ள ஓவியத் தொகுதியில் மீன் அல்லது ஆமை போன்ற தோற்றம் கொண்ட செஞ்சாந்து நிறத்தில் சுமார் 3 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட ஓர் ஓவியமும் அதன் அருகில் ஊர்வன போன்ற வடிவம் கொண்ட ஓவியம் சுமார் 2 அடி நீளமும் ஓர் அடி அகலமும் கொண்டுள்ளது. அதன் அருகில் சுமார்  1 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட சிறிய அளவிலான மீன் அல்லது ஆமை போன்ற வடிவம் கொண்ட மற்றொரு ஓவியமும் அமைந்துள்ளது. இந்தப் பாறையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ஓவியத் தொகுதியில் இரண்டு மனிதர்கள் உருவமும் வடிவியல் சார்ந்த குறியீடு கொண்ட ஓவியங்களும் உள்ளன. இந்த ஓவியங்கள் வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள பாக்கம் கிராமத்திலும்  ஏரிக்கரையின் அருகில் உள்ள மற்றொரு பாறை ஒன்றில் மங்கலான நிறமுடைய வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டன, 

இவ்வோவியங்கள் குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இங்கு இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன என்றும் முதலாவது பிரிவில் உள்ள ஓவியங்கள் வெண்சாந்து மற்றும் செஞ்சாந்து நிறங்கள் கலந்த ஓவியங்கள் உள்ளன என்றும் இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாலாம் என்றும் இரண்டாவது தொகுதி ஓவியங்கள் வடிவியல் சார்ந்த குறியீடுகள் தனியாகவும் மனித உருவங்களும் சேர்ந்து  வரையப்பட்டுள்ளன. இதில் கோடுகள் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் காட்டப்பட்டுள்ளது. சில குறியீடுகள்  கீழ்வாலை மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள குறியீடுகள் போன்ற வடிவத்தை ஒத்துள்ளது. மேலும் இங்கு காட்டப்பட்டுள்ள மனித உருவங்களில் ஆண்குறி கட்டப்பட்டுள்ளது இதுபோன்று ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. அருகில் உள்ள பாக்கம் கிராம எல்லையில் உள்ள ஓவியங்கள் மங்கிய நிலையில் மனித உருவங்கள் மட்டும் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள்  பெருங்கற்கால ஓவியங்களாக கருதப்படுகின்ற ஓவியங்கள் போல உள்ளது எனக் கூறினார் , இதன் அருகில் உள்ள செத்தவரை , கீழ்வாலை போன்ற ஊர்களிலும் ஏற்கனவே பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  தொடர்ச்சியாக இப்பகுதியில் பாறை ஓவியங்கள் கிடைத்து வருவது இதன் தொல்லியல் முக்கியத்துவத்தையும் அக்கால மனிதர்களின் கலை சிறப்பினையும் உணர்த்துகிறது. தமிழகத் தொல்லியல் துறை இந்த ஓவியத்தைப் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும். 

-----


தேமொழி

unread,
Sep 28, 2021, 5:48:36 PM9/28/21
to மின்தமிழ்
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி தாலுகா, சிறுவரை கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த கோயிலின் உட்புறத்தில் உள்ள கல்வெட்டு

inscription.jpg

(இ)றங்க(ல்) மீட்ட பெரு 
மாள் அரசுநிலை
யிட்ட தொண்டைமா
ன் தன்மம்

-18 ஆம் நூ. 
கோயிலின் பூஜைகள் தட்டுப்பட்டமையால்    (இறங்கல்) அதனை மீட்க ஏற்பாட்டை தொண்டைமான் செய்தமை( தருமம்) அளித்த செய்தி.
சு. இராசவேல்

தேமொழி

unread,
Oct 8, 2021, 1:55:22 AM10/8/21
to மின்தமிழ்

வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு

-- முனைவர் ப.தேவி அறிவு செல்வம்

பொ.ஆ 2 முதல் பொ. ஆ13 வரை தமிழகத்தில் இருந்த எழுத்துமுறை வட்டெழுத்து. இவற்றுடன் கிரந்த எழுத்து கலந்ததுதான் மலையாள எழுத்து வடிவம். அவ்வாறான வட்டெழுத்துக் கல்வெட்டு மதுரை அருகே அருள்மிகு மணிகண்டீசுவரர் திருக்கோயிலில் உள்ளது.  

Devi1.jpg
கோயில் அமைப்பு:
இக்கோயிலில், அருள்மிகு மணிகண்டீசுவரர், அருள்மிகு உமா மகேஸ்வரி, அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரமாணிக்க பெருமாள் ஆகியோருக்கென மூன்று சன்னதிகள் தனித்தனியாக உள்ளன.  இக்கோயிலானது விமானம் இல்லாத கற்றளியாக உள்ளது. சிவன் கோயிலில் பெருமாளுக்குத் தனி சன்னதி உள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். 

வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு:
Devi.jpg
இக்கோயிலில் எஞ்சியுள்ள  வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கூறும் செய்தி:
தூணி...விருநாழியும்..ம் நில்லிரு குறுணி தயி...(ரா)ணட்டு மந்த் ராதி...ணிரு தூணிய்ங் நெல்லு நூற்றிரு
(நன்றி தொல்லியல் மூத்த அறிஞர் திரு.ராஜகோபால்) 

பொ.ஆ950 வாக்கில் சோழருடன் போரிட்டு சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் கல்வெட்டு இது. அவனுடைய அதிகாரி கண்டன் சாத்தன் என்பவர் திரு மாத்தூரில் ஸ்ரீகண்ட ஈசுவரம் என்ற கற்றளி எடுத்து, நிலம் கொடுத்து, அதில் ஒரு பங்கில் வரும் நெல்லினை கோயில் வழிபாட்டுப் பொருள்களைப் பிரித்துக் கணக்கிட்டுக் கொடுத்துள்ளார். இவ்விவரங்களைச் சொல்லும் கல்வெட்டின் ஒரு பகுதியாக இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது(Ref SII 5No.864-866).

----

தேமொழி

unread,
Oct 23, 2021, 4:31:44 PM10/23/21
to மின்தமிழ்

மதுரையில் 150 ஆண்டுகள் பழைமையான விஷ முறிவு கல்வெட்டு...

source: https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/oct/21/மதுரையில்-150-ஆண்டுகள்-பழைமையான-விஷ-முறிவு-கல்வெட்டு-3721521.html

அக்டோபர் 21, 2021 

devi.jpg
மதுரை விராட்டிபத்து பகுதியில் 150 ஆண்டுகள் பழைமையான விஷமுறிவு கல்வெட்டு என்றழைக்கப்படும் கருட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை விராட்டிபத்து பகுதியில் 150 ஆண்டுகள் பழைமையான விஷமுறிவு கல்வெட்டு என்றழைக்கப்படும் கருட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை அருகே உள்ள விராட்டிபத்து பகுதியில் உள்ள அய்யனாா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது கோயிலின் நுழைவுவாயிலில் 150 ஆண்டுகள் பழைமையான கருட கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்வெட்டில் கருடன் பாம்பின் வாலை பிடித்தவாறு உருவம் பொறிக்கப்பட்டு, ஓம் கருடாய நமஹ என்ற மந்திர உச்சாடனத்துடன் குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக கோயில் கல்வெட்டியல் ஆய்வாளா் தேவி கூறும்போது, கருட கல்வெட்டு விஷமுறிவு கல்வெட்டு என்றும் அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் பாம்பு கடித்தவா்களை கருட கல்வெட்டு முன்பாக கிடத்தி வழிபாடு நடத்தி, அதில் உள்ள மந்திரத்தை உச்சாடனம் செய்து விஷத்தை இறக்கிச்சென்றுள்ளனா். தற்போதும் விஷமுறிவு கல்வெட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனா். கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.

தேமொழி

unread,
Oct 23, 2021, 4:44:18 PM10/23/21
to மின்தமிழ்
artifact.jpg
ஒட்டன்சத்திரம் அருகே கி.பி 1746ம் ஆண்டை சேர்ந்த டச்சு நாணயம் கண்டெடுப்பு

 2021-09-17

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கிபி 1746ம் ஆண்டு டச்சு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வாகரை கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். வேதியியல் விரிவுரையாளரான இவர் தனது வீட்டை புதுப்பிக்கும்போது ஒரு பழைய நாணயத்தை கண்டெடுத்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அரிஸ்டாட்டில், லட்சுமணமூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தார். அந்த நாணயத்தை ஆய்வு செய்த பின் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கிபி 1602ல் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியினர், விரிங்கெ ஊஸ்ட்டிண்டிஸ் கம்பெனி ஒன்றை தொடங்கினர். இது தான் உலகின் முதல் பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும். இந்த கம்பெனி தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளிலும், இலங்கையிலும் வணிகம் செய்தபோது புழக்கத்தில் விடப்பட்ட நாணயம் தான் இது. இந்த நாணயம் கி.பி 1746ம் ஆண்டு அச்சிடப்பட்டிருந்தது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் டச்சு கம்பெனியை குறிக்கும் விஓசி என்ற குறியீடு உள்ளது. மறுபக்கத்தில் சிங்க சின்னம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த நாணயம் அச்சடிக்கும் இடம் கொச்சி, நாகப்பட்டினம், புலிகாட், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்தன. பணம், துட்டு, காசு, தம்பிடி, சல்லி ஆகியவை நாணயத்திற்கான வேறு பெயர்களாக இன்றும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாணயம் ஜாவா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்காக தயாரிக்கப்பட்டவை. பின்னர் இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் இந்த நாணயங்கள் தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, சேதுக்கரை, பால்கரை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன’’ என்றார்.

தேமொழி

unread,
Oct 23, 2021, 7:10:38 PM10/23/21
to மின்தமிழ்
பேரையூர் அருகே 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

அக் 22, 2021  01:07

artifact.jpg
போடி, :மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தும்மிநாயக்கன்பட்டியில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தேனிமாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது:கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வழிகாட்டுதலின் படி, எனது தலைமையில் திண்டுக்கல், நெல்லுார் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, தும்மிநாயக்கன்பட்டி கண்ணனுடன் தொல்லியல் சார்ந்த கள ஆய்வு மேற்கொண்டோம்.

பிற்கால பாண்டியர் காலத்தில் பேரையூரும், சுற்றியுள்ள பகுதியும் செங்குடிநாடு பிரிவின் கீழ் இருந்துள்ளது. பேரையூர் அருகே தும்மிநாயக்கன்பட்டி முனியப்பசாமி கோயிலில் இயற்கையாகவே அமையப்பட்ட பாறை ஒதுக்கு என்ற இடத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, வெள்ளை செங்காவி நிற பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மனித நாகரிகம் இல்லாத காலத்தில் அவர்களது வாழ்விடம் இயற்கையான குகைகளும், பாறை ஒதுக்குகளும்தான். தனது உணர்வுகளை கண்டு வியந்து, அஞ்சிய காட்சிகளையும், தான் வென்ற வெற்றிகளையும் ஒவியங்களாக வரைந்துள்ளனர்.

வெள்ளை நிற ஓவியம்
தட்டையான உடல் அமைப்புடன் தலை வட்டமாக மனித உருவ ஓவியங்கள் மிகவும் பழமையானதாகும். மனித உருவம் ஒன்று தனது இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, கால்களை விரித்து நின்று உள்ளது. மற்றொன்று தனது கைகளை நடனமாடுவது போன்று உள்ளது. வெள்ளை நிறத்தில் இரு புலியின் உருவங்களில் ஒன்று தனது காதுகளை உயர்த்தியும், மற்றொன்று வாலை உயர்த்தியபடி வரையப்பட்டுள்ளன.

கருப்பு நிற ஓவியங்கள்
ஒருவன் குதிரையில் அமர்ந்திருக்க, குதிரைக்கு கீழ் வட்டமான தலையுடைய மனிதன் தனது இரு கைகளையும் தொங்க விட்டு நின்றபடியும், மேல் பகுதியில் சில மனித உருவங்கள் அழிந்துள்ளது. புலிகளை வேட்டையாடி வெற்றியுடன் குதிரையில் வரும் வீரன் அல்லது இக்குடியின் தலைவனை வரவேற்கும் காட்சி ஓவியமாக வரையப்பட்டுள்ளன.
கருப்பு வண்ணம் ஒரு வகையான மண்ணையும், விலங்கின் கொழுப்பு, ரத்தம் போன்றவற்றை பயன்படுத்தி வரைந்திருக்கலாம். இதனை முனியப்பசாமி என்ற பெயரில் மக்கள் வணங்கி வருகின்றனர், என்றார்.

தேமொழி

unread,
Oct 26, 2021, 5:12:45 PM10/26/21
to மின்தமிழ்
source :  https://www.facebook.com/TamilAvanam/posts/4701872079876431


மீன் சின்னம் பொறித்த வட இலங்கை நாணயங்கள் காளையுடன் கூடியது 
- தமிழ் நாணயங்கள் அறிஞர்களின் பார்வைக்கு- பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
************************************************
dr.pusparatnam.JPG
சமகால முகநூல்களில் பகிரப்படும் முக்கிய செய்திகளில் ஒன்றாகப் பண்டைய கால நாணயங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச் செல்வதாகக் காணப்படுகின்றன. இச்செய்திகள் பயன்பாட்டிலிருந்து மறைந்த நாணயங்களைக் கண்டறிந்து பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பண்டைய நாணயங்கள் ஒரு நாட்டில் அல்லது ஒரு வட்டாரத்தில் வாழும் மக்களிடையே பண்டுதொட்டு வழக்கிலிருந்த எழுத்து, மொழி, மதம், அரசு, ஆட்சியாளர், ஆட்சிப்பரப்பு, அயல்நாட்டுத் தொடர்பு, பொருளாதாரம், கலை, பண்பாடு முதலானவற்றின் வரலாற்று வளர்ச்சியை அறிந்து கொள்ள நம்பகரமான சான்றுகளாகக் காணப்படுகின்றன. இதற்கு இந்திய வரலாற்று இலக்கியங்களில் சொல்லப்படாத ஆதிகால, இடைக்கால அரசுகள், அரச வம்சங்கள், ஆட்சியில் இருந்த மன்னர்கள் பற்றிய வரலாற்று உண்மைகள் நாணயங்களால் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்ததை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இலங்கை வரலாறு பற்றிய ஆய்வில் ஆதிகால, இடைக்கால நாணயங்களை நம்பகரமான வரலாற்று மூலாதாரமாகப் பயன்படுத்தும் மரபு பிரித்தானியர் ஆட்சியுடன் தோன்றியது. அந்நோக்கில் இலங்கையின் பண்டைய நாணயங்களை ஆய்வு செய்தவர்களில் எலியட் (Elliot, W.: 1858), பிரின்செப் (Prensep 1858 ), கொட்றிங்ரன் (Codrinton H. : 1924 ), கெற்ரியாரச்சி (Hettiaratchi, D.P.E. : 1955) பிடுல்பே (Biddulph, C.H.:1966 ), தேசிகாசாரி (Desichari ,T: 1953) மிக்சனர் (Micchiner M. 1998) முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இலங்கையில் சிறப்பாக வடஇலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்களை விரிவாக ஆராய்ந்துள்ளனர். ஆயினும் இலங்கைத் தமிழரிடையே யாழ்ப்பாண இராசதானிக்கு முன்னர் தமிழ் அரச மரபு இருக்கவில்லை என்ற பாளி இலக்கியக் கதைகளின் நம்பிக்கையில் இத்தமிழ் நாணயங்களை தமிழகத்துடனான அரசியல், வர்த்தகத் தொடர்பாலே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவை என்ற முடிவுக்கே வந்தனர். சமகாலத்தில் பாக்கர் (Parkar 1909) என்ற அறிஞர் இலக்குமி உருவம் பொறித்த நாணயத்தை எல்லாளன் என்ற தமிழ் மன்னன் வெளியிட்டதாகக் கூறிய போதிலும் அம்மன்னன் பற்றிய வரலாற்று ஆய்வில் அக்கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் 1990 களில் இருந்து வடஇலங்கையில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வின் போது முன்னைய அறிஞர்களால் ஆய்வுக்கு உட்படுத்தியதை ஒத்த தமிழ் நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ( நாணயங்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன). ஆயினும் முன்னைய அறிஞர்கள் கூறியது போல் இத்தமிழ் நாணயங்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது. ஏனெனில் தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள் பலவும் சமகாலத்தில் இலங்கையில் பயன்பாட்டிலிருந்துள்ளன. ஆனால் வடஇலங்கையில் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் நாணயங்கள் தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் ஏனைய மாநிலத்திலோ கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படவில்லை. தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களின் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள அரச இலட்சனைகள் இந்நாணயங்களில் காணப்படவில்லை. நாணயங்களில் இடம்பெற்றுள்ள காளை, யானை, மீன் முதலான சின்னங்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் இடம்பெற்றிருந்தாலும் அவற்றின் வடிவமைப்பு, கலைநுணுக்கம், அழகு என்பவை தமிழக நாணயங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டதாகவே காணப்படுகின்றன. மேலும் எமது ஆய்வில் கிடைத்த இந்நாணயங்களை நேரில் பார்வையிட்ட தென்னிந்திய நாணயவியல் அறிஞர்கள் இவற்றை இலங்கைக்குரிய தனித்துவமான தமிழ் நாணயங்களாகவே பார்க்கின்றனர். இவற்றின் அடிப்படையில் இத்தமிழ் நாணயங்களை சங்ககாலத்திற்குச் சமமான காலத்தில் இருந்து இலங்கைத் தமிழரிடையே தமிழ் அரச மரபு தோன்றி வளர்ந்ததன் நம்பகத் தன்மையுடைய ஆதாரமாகவே கருதுகின்றேன். ஆகவே இக்கருத்து தொடர்பாக அறிஞர்கள் தமது விமர்சனங்களை பொருத்தமான சான்றாதாரங்களுடன் முன்வைத்தால் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்.
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

தேமொழி

unread,
Oct 26, 2021, 5:16:16 PM10/26/21
to மின்தமிழ்
Ref: https://www.indiatoday.in/magazine/special-report/story/20211011-an-ancient-southern-civilisation-1859501-2021-10-01

An ancient southern civilisation
Recent archaeological discoveries in the Tamirabarani river valley have pushed back the earliest date for the emergence of a complex civilisation in the region to near 1200 BCE

Amarnath K. Menon 
Chennai October 1, 2021
ISSUE DATE: October 11, 2021

On August 27, Ramalingam Sivanantham, Tamil Nadu’s commissioner for archaeology, found himself floored by a report by the Miami-based Beta Analytic Testing Laboratory, which had performed a radiocarbon dating of the contents of a burial urn recovered from a dig in Sivagalai, in the state’s Thoo­thukudi district. The report concluded that the contents of the urn—including rice and soil—dated back to 1155 BCE, indicating that an agrarian civilisation was flourishing in Tamil Nadu at that time. The news travelled quickly up the ranks—Sivanatham shared the report with Tamil Nadu archaeology advisor Prof K. Rajan, who passed it on to the state’s minister for archaeology Thangam Thennarasu, who informed Chief Minister M.K. Stalin.


தேமொழி

unread,
Nov 7, 2021, 1:37:17 AM11/7/21
to மின்தமிழ்

அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகம்

கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (ஓய்வு)


சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் வடிகட்டியுடன் கூடிய நீர் செல்லும் குழாய் அமைப்புகள் மற்றும் உறைகிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றோம். தொன்மைச் சிறப்புமிக்க ஆதிச்ச நல்லூர் கொற்கை போன்ற ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் நீர் செல்லும் குழாய்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மனித இனத்திற்கு மிகவும் தேவையானதாக விளங்கும் சுத்தமான குடிநீரை தண்ணீரை பெறுவதற்கும் கழிவு நீரை அகற்றவும் "சுருங்கை' எனப்படும் குழாய்களும் கழிவு நீர் அகற்றும் வாய்க்கால்களும் இருந்திருக்கின்றன. இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சங்க இலக்கியமான பரிபாடலில் குழாய்கள் நிலத்தின் அடியில் நீண்ட யானையின் துதிக்கை போல அமைந்திருந்ததாக குறிக்கப்படுகிறது.

அருவி சொரிந்த தியிற்றுரந்து
நெடுமால் சுருங்கை நடுவழிப்போந்து
கடுமாகி களிறணத்துக் கைவிடு நீர் போலும்
(பரிபாடல் 20 : 14-106)
surungai.jpg
நீர் செல்லும் குழாய் அமைப்பு "சுருங்கை" என அழைக்கபடுகிறது. அரண்மனையின் மாடிமேல் நிலா முற்றம் அமைந்திருந்தது. அம்முற்றத்தின் மேலாக பெய்த மழைநீர் கீழே விழுவதற்கு மீன் வாயைப் போன்ற அம்பணங்கள் (தூம்புகள்) அமைக்கப்பட்டிருந்ததாக நெடுநல்வாடை (96) கூறுகிறது. நீர்செல்லும்  "சுருங்கை"   பற்றி மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுகிறது.

கல்லிடித்தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின்
நல்லெயிலுடிந்த செல்வத்தம்மின் (730-31)

மேலும் "சுருங்கை' அமைப்பினைப் பற்றி சிலம்பு, மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.

இலக்கியங்கள் குறிப்பிடும் செய்திகளை அகழ்வாராய்ச்சிகள் சான்றுகளுடன் மெய்ப்பிக்கின்றன. சுடுமண்ணால் ஆன குழாய்வகை நீர்க்கால்கள் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) ஊத்தங்கரை (தர்மபுரி மாவட்டம்) சென்னை-நங்கநல்லூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.

இவ்வகை குழாய்களில் ஒரு முனை சற்று குறுகலாகவும் மறுமுனை அகலமாகவும் இருக்கும். குழாய்களை ஒன்றுக்குள் ஒன்று சொருகிவிடலாம். களிமண் பூச்சு தேவையிருக்காது. மேலும் இவை துணிகளுக்கு வண்ண சாயமேற்றும் பணிகளுக்காக இவை பயன்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் "சுருங்கை' எனப்படும் நீர் செல்லும் குழாய்கள் கிடைத்துள்ளன. அரிக்கமேடு, வசவசமுத்திரம் திருக்கோவிலூர், உறையூர் உலகடம் (ஈரோடு மாவட்டம்) போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. உலகடத்தில் கிடைத்த குழாய்களின் மீது எண்கள் (கி.பி. 10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை) தமிழ் எண்கள் இடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தரைக்கு கீழே நீர் செல்லக் கூடிய வடிகால்கள், படைவீடு, கண்ணனூர், கங்கை கொண்ட சோழபுரம், கரூர் போன்ற தொன்மைச் சிறப்புமிக்க இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வாராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சிறந்த நகர நாகரீகம், சிறப்பான நிலையில் இருந்ததற்கான சான்றுகளாக (சுருங்கை) சுடுமண் குழாய்களும், வடிகால்களும் விளங்குகின்றன!



நன்றி: தினமணி 


---

தேமொழி

unread,
Nov 15, 2021, 11:26:11 PM11/15/21
to மின்தமிழ்
ஆடற்கலை: ஆண்ட தமிழர்கள்!

  --  கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை


மனிதன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று சிற்பக்கலை. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் முக்கியமானது சிற்பக்கலை.

தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகிறது. கண்ணால் கண்ட உருவங்களையும், கற்பனை உருவங்களையும் சிற்பங்களாக வடிவமைத்து சிலைகளாக வடித்தனர். சிற்பங்கள் கல், மண், மரம், செம்பு,  செங்கல், தந்தம், மெழுகு ஆகியவை கொண்டு வடிக்கப்பட்டன. கல்லில் கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு ஏற்றனவாகக் கருதப்பட்டன.

திருக்கோயில்களில் வழிபாட்டிற்குரிய சிற்பங்களை வடிக்கும்பொழுது தேர்ந்தெடுக்கப்படும் கற்களை சிற்பிகள் நன்கு பரிசோதித்து எடுப்பார்கள். மலைகள், நதிக்கரை, பால்மரத்தடி, வனங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் கற்கள் சிறப்பானவை. மேலும் அதன் நிறத்தை கொண்டும் வகைப்படுத்துவர். கற்களில் ரேகை, புள்ளிகள் இல்லாதவாறு தேர்ந்தெடுப்பர். கற்களின் வலிமை - உறுதியைக் கொண்டு ஆண் கல், பெண் கல், (அலிக்கல்) வலிமையற்ற கல் எனவும் வகைப்படுத்தி சிற்பிகள் சிற்பங்களை வடித்தனர்.

விசிறிப்பாறை:
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே கல்லிலே சிற்பம் வடிப்பதை தமிழர்கள் உணர்ந்திருந்தனர். 

thay deyvam.jpg
விழுப்புரம் அருகில் உடையாநத்தம், திருவண்ணாமலை அருகில் மோட்டூர் என்ற இடத்திலும் பறவை போன்ற அமைப்புடைய கல்லாலான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை "விசிறிப்பாறை' என மக்கள் அழைக்கின்றனர். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தாய், தெய்வ வழிபாட்டிற்கு இச்சிற்பங்கள் முன்னோடி என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

நடுகற்கள்:
இதற்கு பின்னர் வரலாற்றுக் காலமாகிய சங்ககாலத்தில் போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரர்களுக்கு மற்றும் ஊருக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்க போரில் இறந்த வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்ட கற்கள் "நடுகற்கள்' எனப்படும். 
nadukal.jpg

அக்கல்லில் வீரனது உருவத்தைச் செதுக்குவர்.  அதற்கு அடியில் வீரனின் பீடும், பெயரும் பொறிப்பர் என சங்ககால இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. இத்தகைய நடுகற்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றை இன்றும் மக்கள் போற்றி வழிபாடு செய்கின்றனர். வேடியப்பன் என அழைத்து போற்றுகின்றனர்.

பல்லவர்:
பல்லவ மன்னர்கள் காலத்திலிருந்து கல்லிலே தான் கோயில்கள் அமைக்க தொடங்கிவிட்டனர். கட்டடக்கலையும் சிற்பக்கலையும் வளர்ச்சி பெற்றன. பல்லவர்கள் குடைவரைக்கோயில், ஒற்றைக்கல் கோயில்களை பாறைகளைச் செதுக்கி அமைத்தனர். கட்டடக் கோயில்களையும் எழுப்பினர். 
siva-seeyamangalam.jpg
குடைவரைக் கோயில்களில் சுவர்களில் (தாய்ப்பாறைகளில்) சிற்பங்களை அமைத்தனர். இதற்கு புடைப்புச் சிற்பங்கள் எனப் பெயர். மண்டகப்பட்டு, தளவானூர், வல்லம், திருச்சிராப்பள்ளி, மாமண்டூர், மாமல்லை போன்ற பல இடங்களில் குடைவரைக் கோயில்களைக் காணலாம். 

சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்கள் காலத்தில் சிற்பக்கலை மேலும் வளர்ச்சி அடைந்தது. சுவரில் இருந்து வெளிவரும் புடைப்புச் சிற்பங்களும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களையும் அமைத்தனர். இவ்வகை முழு வடிவ சிற்பங்களும் திருக்கோயில்களில் இடம்பெற்று வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உற்சவத் திருமேனிகளும் முழு வடிவ சிற்பங்கள் ஆகும்.

சிற்பிகள்:
அழகுமிக்க சிற்பங்களை கல்லிலே வடிக்க திறமையான சிற்பிகள் இருந்தனர். பல்லவ மன்னர்கள் காலத்தில் இருந்து நாயக்க மன்னர்கள் காலம் வரை சிற்பங்களை, திருக்கோயில்களை அமைத்த சிற்பிகள் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் அவர்களது சிற்ப வடிவங்களையும் பல கோயில்களில் காண முடிகிறது. இவர்கள் பண்டைய சிற்ப நூல்களின் அடிப்படையில் அழகு மிக்க சிற்பங்களை கல்லிலே வடித்தனர்.

ஆடற்கலை இலக்கணம்:
தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள். அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். சிற்பம் - ஆடற்கலை இரண்டுமே திருக்கோயில்களில் போற்றி வளர்க்கப்பட்டன. சிற்ப வடிவங்கள் நின்ற வடிவில் காட்சி அளித்தாலும், அமர்ந்திருந்தாலும், புராணக்கதைகளை எடுத்துக்காட்டும் வகையில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்துடன் அமைந்திருப்பதைக் காணலாம். 
Gajasamharamurti-Darasuram-Sreedharan.jpg

உதாரணமாக சிவபெருமான் காலனைக் கடிந்த நிலையிலும், ஆனை உரித்த எம்பிரானாகக் காட்சித்தரும் போதும் அச்செய்கை ஆடற்கலை இலக்கணத்தை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கும்.  இச்சிற்பங்களை சிற்பிகள் வடிக்கும்பொழுது ஆடற்கலை இலக்கணத்தை நன்கு அறிந்து கலை உணர்வு கலந்து அமைத்ததால் கலை அழகுடன் அவை காட்சி தருகின்றன. மேலும் சிற்பிகளின் திறமையையும் எடுத்துக்காட்டுகின்றன.

தமிழகச் சிற்பங்கள்:
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மாமல்லபுரம் சிற்பங்கள், பாண்டியர் கால கலைப்படைப்புகள், திருவரங்கம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தாடிக்கொம்பு போன்ற பல திருக்கோயில்களில் காணப்படும் விஜயநகர நாயக்கர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ளன. 

siva-kangai konda sozhapuram.jpg
சோழ மன்னர்கள் காலத்தில் புள்ளமங்கை, குடந்தை நாகேசுவரர் சுவாமி கோயில் சிற்பங்கள், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் போன்றவை சோழர் கால சிற்பக் கலையின் உயர்ந்த நிலையை எடுத்துக் கூறுகின்றன.

மேலும் தமிழகச் சிற்பக்கலை மராட்டிய மன்னர்கள், மற்றும் செட்டிநாட்டு கோயில்களில் மிகச் சிறப்புடன் விளங்குவதையும் காணமுடிகிறது.

தமிழர்களின் சிற்பக்கலை தொடர்ந்து பல சிற்பிகளின் கைவண்ணத்தைக் திறமையினாலும் தொடர்ந்து சிறப்பு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றதையும் காணமுடிகிறது. தமிழகம் பெருமை கொள்கிறது.



நன்றி: தினமணி 

----------



தேமொழி

unread,
Nov 19, 2021, 7:15:12 PM11/19/21
to மின்தமிழ்
Adhichanallur.jpg
‘ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம்’ தொல்லியல் ஆவணப்படம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன தயாரிப்பில் உருவான இப்படம்
இரண்டு பாகமாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம்’- ஆகஸ்டு 2021
நேரம்-122 நிமிடங்கள்
இயக்கம்-ஆர்.ஆர்.சீனிவாசன்
தயாரிப்பு-செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

ஆவணப்படத்தைக் காண இந்த இணைப்புக்குச் செல்லவும்
ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் - 2021 (பாகம் 1)

ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் - 2021 (பாகம் 2)
---

தேமொழி

unread,
Dec 13, 2021, 5:52:14 PM12/13/21
to மின்தமிழ்
source - https://www.nakkheeran.in/special-articles/special-article/rajaraja-chola-wins-sri-lanka-government-school-student-finds

chozha coins.jpg

இலங்கையை வென்ற இராஜராஜ சோழன்! ஆதாரத்தை கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவி!

13/12/2021 - பகத்சிங்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவி கு. முனீஸ்வரி, முதலாம் இராஜராஜ சோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளைக் கண்டெடுத்துள்ளார்.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்குப் பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், விடுமுறை நாட்களில் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருட்கள், காசுகளை ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்துவருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் சீனப்பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்தனர். இந்நிலையில், இப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் திருப்புல்லாணியைச் சேர்ந்த கு. முனீஸ்வரி என்ற மாணவி, முதலாம் இராஜராஜ சோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளைக் கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார்.

இதுபற்றி இப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே. ராஜகுரு கூறியதாவது, “வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் இராஜராஜ சோழன் வெற்றிகொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதலாம் இராஜராஜ சோழன் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம்வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு, ஈழக்கருங்காசு எனப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்றும் செம்பால் ஆன ஈழக்கருங்காசுகள் ஆகும்.

இக்காசுகளின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ’ என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இக்காசில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறான்.

ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன்குளம் உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை, சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளன. ஏற்கனவே இப்பள்ளி மாணவர்கள் பஞ்சந்தாங்கி, தாதனேந்தலில் சோழர்களின் ஈழக்காசுகள், பால்கரையில் டச்சுக்காரர்களின் துட்டு, திருப்புல்லாணியில் கச்சி வழங்கும் பெருமாள் எனும் பாண்டியர் காசு, ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளையும் கண்டெடுத்துள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

 

தேமொழி

unread,
Dec 17, 2021, 10:55:42 PM12/17/21
to மின்தமிழ்
அரிய "விநாயகி" சிலை ஒன்று சென்னைக்கு அருகே கிடைத்துள்ளது 

idol of Vinayaki discovered.jpg

Rare Idol Of Vinayaki Discovered Near Chennai - Times of India
A 5th century stone sculpture of Vinayaki, (female form of Lord Ganesha), from the pre-Pallava period, has been discovered by a team of ASI
Read more at:
http://timesofindia.indiatimes.com/articleshow/88328829.cms

தேமொழி

unread,
Feb 15, 2022, 3:39:19 AM2/15/22
to மின்தமிழ்

தண்டலம் கிராமத்தில் ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுகள்!

டி.எஸ்.சுப்பிரமணியன்

பிப்ரவரி  15, 2022

fish stone inscription.jpg
ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டின் பின்புறம் பொறிக்கப் பட்டுள்ள மீன் சின்னம்.

ராஜராஜ சோழன் (ஆட்சிக் காலம் பொ.ஆ. 985–1014) காலத்தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள், அரக்கோணத்திலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள இலுப்பைத் தண்டலம் என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் ஒன்று அக்காலத்தில் பெரிதாக இருந்திருக்க வேண்டும். அது மூன்றாக உடைந்து, நடுப் பகுதி மட்டும்தான் இப்போது கிடைத்துள்ளது. கல்வெட்டுப் படியைக் கல்வெட்டு அறிஞர்கள் எ.சுப்பராயலு, வெ.வேதாசலம், சு.இராஜவேலு மூவருக்கும் அனுப்பியபோது, இக்கல்வெட்டுகள் ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுகள் என்று கூறினார்கள்.

இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் என்னவென்றால், அது கிராமத்தின் பெயரை இலுப்பைத் தண்டலம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. அது பன்மா நாட்டில் அடங்குகிறது என்று கூறுகிறது. அதாவது, இந்த அழகிய கிராமத்தின் பெயர் இலுப்பைத் தண்டலம் என்று ஆயிரம் ஆண்டுகளாகப் பெயர் மாறாமல் வழங்கிவருகிறது. இந்தக் கல்வெட்டு ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளை (பிரசஸ்தி) – அவர் போரில் வெற்றி கண்டு, நாடு பிடித்த பகுதிகளையெல்லாம் – பட்டியலிடுகிறது.

இந்தக் கல்வெட்டு, திருவெண்காடிச்சாணி என்ற பெயர் கொண்ட ஒரு பிராமணப் பெண்மணி இலுப்பைத் தண்டலத்திலுள்ள (திரு அகத்தீஸ்வரர்) கோயிலுக்குத் தானமாகக் கொடுத்த நிலம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறது. அக்கோயிலின் மூன்று சந்தி பூஜைக்கும் (மூன்று வேளை காலை, மதியம், மாலை வழிபாட்டுக்குரிய) செலவுகளுக்கு இந்த நிலத்தை அந்தப் பெண்மணியும் அவரது உறவினரும் தானமாக அளித்துள்ளனர்.

இந்தக் கல்வெட்டு அந்த நிலங்களின் எல்லைகளைக் குறிப்பிடுகிறது என்று சுப்பராயலு, வேதாசலம், இராஜவேலு ஆகியோர் கூறினார்கள்.

ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட கல்வெட்டில் கிடைத்துள்ள வாசகத்தை இராஜவேலு இவ்வாறு படித்தார்:

1. பூண்டமை மனக்கெளெ காந்தனூர் சாலை…
2. நாடுங் கொல்லமுங் கபிங்கமும் பெட்டியை…
3. க விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசு கொள்…
4. து பந்மா நாட்டு இலுப்பைத் தண்டலமாகிய கந்த…
5. தாமன் பிராஹ்மணி திருவெண்காட்டிச் சாணியும் இவள்…
6. ற்கு தானமட்டின பூமியும் உறுப்பிட்டூர்க் கிரமங்…
7. த்தி கமார இராமவித்தனும் நடாதூர் மாதவ சோமா…
8. மூன்று ஸந்தியும் பலி வலமி செயக் கொட்டவ…
9. ண்டக நூர் மாதவச் சோமாசி பூமிக்கு தெற்கும் தென்
10. (க்கும்) வடபாற்கெல்லை புற்றுக்கு தெற்கும் இனனா (ன் கெல்லை)…

விரிவாக இந்து செய்தித் தளத்தில் காண்க : https://www.hindutamil.in/news/opinion/columns/767705-inscriptions-from-the-time-of-rajaraja-chola-1.html

தேமொழி

unread,
Feb 15, 2022, 3:47:57 AM2/15/22
to மின்தமிழ்
தென்காசி அருகே 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பிப் 15, 2022  04:48
thenkasi stone inscription.jpg
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நொச்சிக்குளம் கிராமத்தின் விவசாய விளை நிலத்தில் 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர் கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து உதவிபேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா கூறுகையில், ‘‘இக்கல்வெட்டு 5 அடி உயரமும் மேற்பகுதியில் அரை அடி அகலமும், கீழ்பகுதியில் ஒரு அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த உருளை வடிவ கல்லானது ஒரு செவ்வக வடிவ கல்லின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் கல்வெட்டு தமிழ் வருடம் சய ஆண்டு இரண்டாம் பாண்டியர் காலத்தில் மன்னன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் 1294 - 1295-வது வருடம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் கல்லக நாட்டு கீழ் பிடாகை காருலபயார் நல்லாண்டி கொடுத்த தான கல்வெட்டு எனும் வரிகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கல்வெட்டில் 18 வரிகள் காணப்படுகின்றன. அதில் 13 வரிகள் தெளிவாகும் மீதமுள்ள ஐந்து வரிகள் தெளிவற்ற நிலையிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டு முன்னால் தமிழக தொல்லியல் துறை உதவி இயக்குனர் சொ.சாந்தலிங்கம் துணையோடு படிக்கப்பட்டது.

விரிவான செய்திக்கு பார்க்க : https://www.hindutamil.in/news/tamilnadu/767432-800-years-old-pandyan-inscriptions-found-1.html

தேமொழி

unread,
Feb 16, 2022, 1:36:36 AM2/16/22
to மின்தமிழ்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2962384

மதுரை வேடர்புளியங்குளத்தில் 300 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கிடைத்துள்ளது

பிப் 16, 2022

பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு . . .

மதுரை வேடர்புளியங்குளத்தில் 300 ஆண்டுகள் பழமையான சதிக்கல் ஒன்றை மதுரை கோயில் கட்டட, சிற்பக் கலை ஆய்வாளர் தேவி, வரலாற்று ஆர்வலர்கள் அறிவுச்செல்வம், ராஜசேகர் ஆகியோர் கண்டுபிடித்தனர்.
devi.jpg
தேவி கூறியதாவது: சுற்றுச்சூழல் பொறியாளர் ராமகிருஷ்ணன் தகவல்படி ஊருக்குள் நுழையும் இடத்தில் உள்ள சதிக்கல் குறித்து ஆய்வு செய்தோம்.போரில் வீர மரணமடைந்த வீரன் நினைவாக வைக்கப்படுவது நடுகல். அவனோடு உடன்கட்டை ஏறிய இரு பெண்கள் சிற்பங்களும் இருப்பதால் இது சதிக்கல்லாக உள்ளது. மூன்றரை அடி உயரம் உள்ள வீரனின் சிலை நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளது.

வலது கையில் ஒரு வாள், இடது கையில் கேடயம், இடுப்பில் குறுவாள், ஆடை, கழுத்தணிகள் உள்ளன. தலைப்பகுதி உடைந்து இருப்பதால் முக அம்சங்கள் தெரியவில்லை. சிறு அலங்காரமண்டபத்தில் உள்ள வீரனுக்கு அருகே இருபுறமும் இரு பெண்கள் நின்ற நிலையில் பக்கவாட்டு கொண்டை, கழுத்தணி, தொங்கிய காதில் காதணிகளுடன் வடிக்கப்பட்டுள்ளனர். இச்சிலை 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றார்.

தேமொழி

unread,
Feb 17, 2022, 9:03:15 PM2/17/22
to மின்தமிழ்
source:  https://twitter.com/TThenarasu/status/1494319287842263042

Thangam Thenarasu
@TThenarasu

dice.jpg

மாண்புமிகுமுதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் தமிழ் நாடு தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளில் கனசதுர (Cubical)வடிவில் மட்டுமே பகடைக் காய்கள் கிடைத்தது

தேமொழி

unread,
Apr 19, 2022, 12:30:21 AM4/19/22
to மின்தமிழ்
source - https://www.dailythanthi.com/Districts/Chennai/2022/04/19005818/Excavation.vpf

artifact.jpeg

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்கள்:

தாயில்பட்டி, ஏப்.19 சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணி நேற்று நடைபெற்றது. அப்போது நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் அரியவகையான தக்களி கிடைத்துள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் நெசவுத் தொழில் நடந்திருக்கலாம் என்பது தெரியவருகிறது. மேலும் ஏராளமான சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் ஓடுகள், பாசி மணிகள் கிடைத்தன. அந்த காலத்தில் புகை பிடிப்பதற்கு பயன்பட்ட கருவி சேதமடைந்த நிலையில் கிடைத்தது. மேலும் தாடையுடன் கூடிய பற்கள் கிடைத்துள்ளன. அது எந்த உயிரினத்தின் பற்கள் என தெரியவில்லை. அகழாய்வு பணி நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியதால் பணி நிறுத்தப்பட்டு குழிகள் தார்ப் பாய் கொண்டு மூடப்பட்டன.

https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2022/04/19005818/Excavation.vpf

Dr.Chandra Bose

unread,
Apr 19, 2022, 1:18:53 AM4/19/22
to mint...@googlegroups.com
மகிழ்ச்சி அளிக்கும் தகவல்கள்.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/659d2262-92c3-4859-9a6a-cc1f4d11c9dfn%40googlegroups.com.

தேமொழி

unread,
Apr 20, 2022, 1:21:37 AM4/20/22
to மின்தமிழ்
source - https://www.dailythanthi.com/News/Districts/2022/04/20010803/Excavation.vpf

Excavation.jpg
சிவகாசி அருகே அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டது.
பதிவு: ஏப்ரல் 20,  2022
தாயில்பட்டி, 
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. அதில் தற்போது வரை நான்கு குழிகள் தோண்ட பட்டுள்ளன. 2 குழிகள் 7 அடி ஆழத்திலும், 3-வது குழி 5 அடி ஆழமும், 4-வது குழி 3 அடி ஆழத்திலும் தோண்டப்பட்டது. இதில் 4-வது தோண்டப்பட்ட குழியில்  நுண்கற்கால கருவிகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களில் சில பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட சதுரங்க கட்டைகள், ஆடுபுலி ஆட்டத்திற்கு  பயன்படுத்தப்பட்ட கட்டைகள் கிடைத்தன. அதேபோல மிருகங்களின் கொம்புகள், உணவு சமைக்க பயன்படுத்தப்பட்ட மண்சட்டி, சுடுமண்ணால் செய்யப்பட்ட கின்னம், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் பொம்மைகள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், 4-வது பள்ளம் கூடுதல் ஆழத்தில் தோண்டப்படும் போதும், 5-வது குழி தோண்டப்படும் போதும் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

தேமொழி

unread,
Jun 4, 2022, 4:09:42 PM6/4/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo?fbid=4398550316915370&set=gm.3044823675828811

ஆறகழூரில் பூமிக்கடியில் நாயக்கர் கால உலோக சிற்பங்கள் கண்டெடுப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள திருகாமநாத ஈஸ்வரன் கோயிலில் நாயக்கர் காலத்தை சேர்ந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலைநகராக கொண்டு பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னன் மகதை நாட்டை ஆண்டுவந்தார். இவர் மூன்றாம் குலோத்துங்கன் என்ற சோழமன்னனின் கீழ் ஆண்ட குறுநில மன்னன் ஆவார். இவர் கட்டிய கோயில்தான் ஆறகழூர் காமநாத ஈஸ்வரர் கோயில் ஆகும். பல்வேறு மன்னர்களின் காலகட்டங்களில் செய்யப்பட்ட 63 உலோக சிற்பங்கள் இங்கு உள்ளது.அதில் சமணத்தை சேர்ந்த 3 சிற்பங்களும் அடங்கும். இந்நிலையில் கோயில் குடமுழுக்கு செய்ய கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.கருவறை அருகே உள்ள முதல் திருச்சுற்றில் உள்ள சுற்றுப்பாதையில் கீழே பதிக்கப்பட்டுள்ள கற்களை அகற்றி புதிய கற்களை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதியம் 12 மணி அளவில் கற்களை அகற்றும் போது 2 அடி ஆழத்தில் 3 உலோக சிற்பங்களும்,4 தூபக்கரண்டியும் கண்டெடுக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் சண்முகம், சேலம் வரலாற்று ஆய்வுமைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசனும் கோயிலுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.
3 அடி உயரத்தில் பார்வதி சிலை ஒன்றும் 2 அடி உயரத்தில் உள்ள அம்மன் சிற்பங்கள் இரண்டும், 4 வேலைப்பாடுகள் நிறைந்த தூபகரண்டியும் 15 ஆம் நூற்றாண்டை சேந்தவை என தெரிய வந்தது. நாயக்க மன்னர்கள் காலத்தில் செய்யப்பட்டவையாக இருக்கலாம்
#ஆறகழூர்பொன்வெங்கடேசன்

தேமொழி

unread,
Jun 6, 2022, 3:04:29 AM6/6/22
to மின்தமிழ்
source - https://www.dinamalar.com/news_detail.asp?id=3046596

சோழர் கால அரண்மனையின் செங்கல் சுவர்; கங்கை கொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு

ஜூன் 6, 2022 

கங்கை கொண்டசோழபுரம் அகழ்வாராய்ச்சியில், சோழர் கால அரண்மனையின் செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அரியலுார் மாவட்டம், கங்கை கொண்டசோழபுரம் மாளிகைமேடு பகுதியில், தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில், கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் துவங்கின.

kangai konda sozhapuram.jpg
முதல்கட்ட அகழாய்வு பணியின் போது, பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பாலான ஆணிகள் போன்றவை கிடைத்தன.முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதி சுற்றுச்சுவர், அரண்மனையின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம், பழங்கால தமிழர்களின் வடிகால் அமைப்பு போன்ற சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதத்துடன் முதல் கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கடந்த பிப்ரவரியில் துவங்கி நடந்து வருகிறது.

மொத்தம், 14 இடங்களில் குழிகள் தோண்டி நடந்த அகழாய்வு பணியில், பழங்கால தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன. மேலும், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால அரண்மனையின் தொடர்ச்சியாக, 22 அடுக்குகள் கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அந்த அரண்மனையின் தொடர்ச்சியாக, 9 அடி ஆழத்தில் செங்கல் சுவர் இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ள செங்கற்கள் 25 செ.மீ., நீளமும், 13 செ.மீ., அகலமும், 4.5 செ.மீ., உயரமும் கொண்டுள்ளன.மேலும், சிறிய ஆணிகள், கிளிஞ்சல்கள், கண்ணாடி மணிகள், சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சீன நாட்டில் பீங்கானால் தயாரான பொருளின் அடிப்பாகம் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.

தேமொழி

unread,
Jun 19, 2022, 12:49:29 AM6/19/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/SuVe4Madurai/posts/594957671977468

Su Venkatesan MP-2.jpg
Su Venkatesan MP-1.jpg
புதுமண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு
சு.வெங்கடேசன் எம்.பி
தென்தமிழகத்தின் முதல் அருங்காட்சியகமும் முதல் புத்தகக்கடைகளும் உருவான இடம் மதுரை புதுமண்டபம்.
1800களின் பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழா நிகழ்வினை “காவல்கோட்டம்” நாவலில் விரிவாக எழுதியுள்ளேன்.
பழங்காலத்தில் ஓலைகளில் தயாரான
ஏடுகள் புத்தகங்களாக மாறி அந்த புத்தகங்களை விற்க புதியவகைக் கடைகள், “புத்தகக்கடைகள்” என்ற பெயரில் உருவாயின. அப்படிப்பட்ட கடைகள் முதன்முதலில் உருவான இடம் மதுரை புதுமண்டபம்.
1800களின் இறுதிப் பத்தாண்டில் இராமநாதபுரத்திலிருந்து மதுரை வந்து தங்கியிருந்த திரு. பாண்டித்துரைதேவர் அவர்கள் கம்பராமாயணத்தையும் திருக்குறளையும் படிப்பதற்காக நண்பர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. இறுதியில் புதுமண்டபத்திலுள்ள புத்தகக் கடைகளிலிருந்து இரண்டு புத்தகத்தையும் விலைக்கு வாங்கியுள்ளார்.
கம்பராமாயணமும் திருக்குறளும் மதுரையில் கிடைப்பதே இவ்வளவு கடினமாகிவிட்டதே என்ற நிலைதான் நான்காம் தமிழ்ச்சங்கம் ஒன்றினை மதுரையில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் உருவாக்கியதாக பதியப்பட்டுள்ளது. 1800களின் பிற்பகுதியில் புத்தகக்கடை என்றால் அது மதுரை புதுமண்டபத்தில் தான் இருக்கும் என்பது நிலைபெற்றுள்ளது.
இவ்வரலாற்றின் தொடர்ச்சியாக 1942ஆம் ஆண்டு புது மண்டபத்தின் மையப்பகுதியில் அருங்காட்சியகத்துடன் அமைந்த நூலகம் ஒன்று அன்றைய சென்னை மாகாண கவர்னரால் திறந்து வைக்கபட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பட்டிற்காக அமைக்கப்பட்ட மதுரையின் முதல் பொதுநூலகம் இதுவாக இருக்கக்கூடும்.
இந்த திறப்புவிழாவினைக் குறிக்கும் கல்வெட்டு புதுமண்டபத்தின் மையப்பகுதி நுழைவாயில் கதவினோரம் இருந்தது. கால் நூற்றாண்டுக்கு முன்பு நான் பார்த்துள்ளேன். ஆனால் இடைபட்ட காலத்தில் அக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட அந்த தூணைக் காணவில்லை. புது மண்டபத்துக்கு போகும் போதெல்லாம் அந்த தூணைத் தேடுவது வழக்கம்.
நாடாளுமன்ற உறுப்பினரான பின் ஆய்வுப் பணிக்காக புதுமண்டபம் போன போது அதிகாரிகளிடம் இந்தக் கல்வெட்டினைப் பற்றி சொல்லி “நுழைவாயிலில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட சிறு தூண் இருந்தது. இப்பொழுது அது இல்லை. கண்டறிய வேண்டும்” என்று கூறினேன். அதிகாரிகளும் முயல்கிறோம் என்றனர்.
கோவிட் ஊரடங்கு காலத்துக்குப் பின்னர் மீண்டும் ஆய்வுக்கு போனேன். புதிய அரசு பொறுப்பேற்றபின் அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையராக திரு.செல்லதுரை பொறுப்பேற்றிருந்தார். அவரிடம் புதுமண்டபத்தின் சிறப்பினையும் கல்வெட்டு குறித்த செய்தியையும் கூறினேன்.
“புதுமண்டபம் முழுவதும் எண்ணற்றை கடைகள் இருப்பதால் எங்களால் அப்படியொரு கல் தூண் இருக்கிறதா? எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை” என்று உடனிருந்த அதிகாரிகள்
சொன்னார்கள்.
நான் செல்லதுரை அவர்களிடம் “மதுரையின் மிகமுக்கியமான கல்வெட்டுகளில் அதுவும் ஒன்று. கண்டறியத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.
இப்பொழுது புதுமண்டபத்திலிருக்கும் கடைகள் முழுவதும் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பின் புதுமண்டபம் மீண்டும் “பழைய மண்டபமாக” முழு அழகுடன் காட்சியளிக்கிறது.
புதுமண்டபத்தில் ஆண்டுதோறும் நடக்கும் வசந்த விழாவினை இந்த ஆண்டு கூடுதல் சிறப்புடன் நடத்த கடைகள் இருந்த பகுதி முழுவதையும் முதன்முறையாக சுத்தம் செய்துள்ளனர்.
அப்பொழுது ஏதோவோர் ஓரத்தில் தனியாக ஒரு கல்தூண் கிடந்துள்ளது. அதனைப் புரட்டிப் பார்த்தபொழுது சென்னை மாகாண கவர்னரால் அருங்காட்சியகமும் நூலகமும் திறந்து வைக்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டு என்பது தெரிய வந்துள்ளது.
அவ்விடத்தில் இருந்த திரு. செல்லதுரை அவர்கள், “எம் பி இந்த கல்வெட்டு குறித்துதான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். அது கிடைத்துவிட்டது. உடனே அவருக்கு போன் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
துனை ஆணையர் அருணாச்சலம் அவர்கள் உடனே எனக்கு போன் செய்தார். “சார், நீங்கள் நீண்ட காலமாகத் தேடிய அந்தக் கல்வெட்டு கிடைத்துவிட்டது” என்றார்.
நூல்களின் அடையாளத்தையும் நூலகத்தின் அடையாளத்தையும் மதுரை அவ்வளவு எளிதில் தொலைத்துவிடாது.
நூற்றாண்டுக்கும் மேலாக புத்தகக் கடைகளும் நூலகமும் இருந்த புதுமண்டபத்தில் புத்தகங்கள் விட்டுச்சென்ற பேரடையாளமாய் இந்தக் கல்வெட்டு என்றென்றும் அங்கிருக்கும்.
இதனை மீட்டுக்கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி

தேமொழி

unread,
Jun 21, 2022, 12:39:18 AM6/21/22
to மின்தமிழ்
#whatsappshare

இலங்கையில் தமிழி எழுத்துத் தடயங்கள் 

Sri Lanka Archaeology.jpg

நாம் கீழடி, கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி (தமிழ்) எழுத்துக்கள்தான் மிகவும் பழைமையான எழுத்துக்கள் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம். அதற்கு முன்னரே ஈழத்தில்  அனுராதபுரத்தில் சிரான் தெரணியகல மேற்கொண்ட ஆய்வில் கி.மு 7-5 ஆம் நூற்றாண்டைச் சேந்த பானை ஓடு ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்களைக் கண்டறிந்தார். அந்த பானை ஓட்டில் #தயா_குட என்ற வசனம் காணப்பட்டது. இதன் பொருள் தயாவின் குடம் என்பதாகும்.

நாம் இந்த பானையோட்டை சாதாரணமாக நினைக்கக்கூடாது. ஈழத்தமிழர் வரலாற்றில் இது ஒரு முக்கியமான ஆவணமாகும். பாளி இலக்கியங்களில் விஜயனின் வருகை கி.மு 6 ஆம் நூற்றாண்டு இந்த பானையோட்டின் காலம் கி.மு 7-5 இதன் மூலம் விஜயன் இலங்கைக்கு வருகை தரும்போது இங்கு தமிழ் மொழியில் பரீட்சித்து பெற்ற ஒரு குழுவினர் இங்கு வாழ்ந்துள்ளமையினை சிங்கள தொல்லியல் ஆய்வாளரான சிரான் தெரணியகலவே ஒப்புக்கொண்டுள்ளார்.

-- நெடுங்கேணி சானுஜன்
--------------------------------------


*********** இது குறித்து மேலும் தேடிய பொழுது இலங்கையின் தொல்லியல் குறித்த தளம் ஒன்றும் அறிந்து கொள்ள முடிந்தது********** 
கூகுளை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரச் சொல்லி படிக்கலாம் 

An Overview of the Archaeological Evidence for the Antiquity of the Brahmi Alphabet in Sri Lanka

https://sinhala.archaeology.lk/බ%e2%80%8d්%e2%80%8dරාහ්මී-අක්%e2%80%8dෂර-මාලාවේ/?doing_wp_cron=1655785370.2191369533538818359375

[...]

All the cultural artifacts unearthed during excavations near the Mahapali Charity Hall (AMP 88) are closely intertwined with the southern and central parts of the city, and in the context of its designation numbered 75 (AMP 88 (75)) ' Can be applied to the 'historical era'. Evidence revealed in this context is parallel to the cultural deposits in the context of Anuradhapura Gedige No. 17 (AG 85 (17)) and Salgahawatta No. 88 (ASW 88 (88)). These comparative studies confirm the simultaneous spread of a culture showing similar characteristics between the cultural deposits of excavation sites located at considerable distances from each other within the city, which is spread over a wide area. Prof. Wimalasena HologamaIt should be pointed out again that the confusions of Mr.'s view cannot be identified in the soil layers of these excavations and at least there is no room for speculation or conjecture.

Sri Lanka Archaeology1.jpg

The context of the excavation near the Mahapali Alms Hall in 1988
Sri Lanka Archaeology2.jpg
Part of a pottery vessel with the text 'Thayakute' discovered during the Anuradhapura Mahapali excavations

As mentioned above, there are 5 fragmented clay pots (these include 5 clay pots) found in the cultural deposits of No. 75 (AMP 88 (75)) excavated near the Mahapali Alms Hall in 1988. As mentioned by Prof. Hologama , they are ' Ge ', ' Thayakute ', 'Thara (cha) ', ' Chagaya ' and ' Ka (b).Has been identified. The researcher has provided 14 absolute dates for these archeological excavations, namely 9 determinations of radiocarbon or carbon 14 (Q14) and 5 thermoluminescence (TL) time periods. Among the chronologies are five radiocarbon chronometers and one thermocouple chronometer for the upper cultural layers of the 75th (AMP 88 (75)) context of excavations near the Great Hall of Fame, as well as 2 carbon chronometers and 75 ultrasonic luminosities for the 75th context of this excavation. Also known as 2 radiocarbon dates for cultural events below context. Accordingly, the cultural stratification of this excavation has been established to a formal chronology on a robust chronological basis. In connection with the 75th context of excavations (AMP 88 (75)) near the Anuradhapura Mahapali Alms Hall, which is directly related to our discussion, the cultural layer with pottery fragments of Bandarahmi letters belongs to 2 dates. If we consider the mean values ​​of these, they date back to the 6th or 7th century BC and the corresponding period.

Among the three research excavations in the inner city used for the above discussion are the context of excavation 75 (AMP 88 (75)) near the Mahapali Alms Hall and the context of the 17th excavation near Gedige (AG 85 (17)) and the context of excavation 88 near Salgahawatta (ASW 88 (88). )) Have been established to coincide with each other in terms of their existing cultural materiality. These excavations have generated the chronological basis for dating to at least the 7th-6th centuries BC, more justifiably from the ecological densities themselves.

Sri Lanka Archaeology3.jpg

Part of a pottery vessel with the text 'Biyaanura (D)' discovered during the excavations at Salgahawatta, Anuradhapura

The context of the 88th excavation at Salgahawatta, Anuradhapura (ASW 88) has yielded two fragments of pottery with the texts of Bandarahmi . According to the second Mahapurana letter ' D ', it is meant that these letters must be spelled correctly. These factors date back to the 6th century BC, according to carbon dating.

The discussion on the antiquity of the Barahrami alphabet focused on various instances of archeological excavations carried out in South India. In the meantime, it is pertinent to pay special attention to three recent archeological excavations in South India and Ceylon. These are the prehistoric Iron Age burial sites ' Kodumanal ' and ' Porunthal ' located in the South Indian region and the excavations carried out at the ' Andarawewa ' Prehistoric Iron Age Cemetery near Galgamuwa in Sri Lanka .


Professor K.S.Rajan, Department of History, University of Pondicherry, South India. Rajan and his team excavated two burial mounds at Kodumanal and Porunthal in the Kongu region. Excavations at Kodumanal have uncovered a number of documents depicting the Brahmin alphabet, and two pottery specimens inscribed with the Brahmin alphabet have been unearthed by radiocarbon dating of 408 and 330 BC, respectively. Note that subsequent calendar days belong to a much older period.) Given by those researchers.

Excavations at the Mahashila Cemetery at Porunthal Gnarama at the foothills of the Western Ghats, about 12 km southwest of Palani in the Dindigul district of Tamil Nadu, have uncovered two fragments of clay pottery inscribed with the Bandrarahmi inscriptions. The excavations were carried out at this site in 2009 and 2010 by Prof. K.S. Mr. Rajan was conducted by a leading research team. One portion of the pottery found here dates back to 490 BC, when radiocarbon dates (unedited) were obtained. This again suggests an earlier date than the Kodumanal dates. Prof. K.S. RajanAnd other researchers, including Mr. ” This inspires us to revisit the ideas behind the Brahmanical alphabet of India. ”


Dr. Iravatham Mahadevan , considered to be one of the most distinguished epigraphic writers in the South Asian region who passed away on November 26, 2018, said that the evidence uncovered in Anuradhapura in 1997 was a revolutionary discovery and that in order to acknowledge it, one must obtain contemporary evidence from India. Subsequent excavations at Kodumanal and Porunthal have met this need, so it is no longer difficult or painful to accept the veracity of these factors uncovered in the city, including Anuradhapura.

It is of particular importance in this discussion to draw attention to the findings of the excavations carried out at the Andarawewa Mahashila Sampradaya Cemetery near Galgamuwa due to a local location as well as a recent discovery. In the second half of 2017, Prof. D.W. Archaeological excavations carried out by Thusitha Mendis at the prehistoric Iron Age Cemetery at Andarawewa Gannaramaya near Galgamuwa in the Anamaduwa Divisional Secretariat have uncovered these facts. Two Brahmin letters have been identified in two pieces of broken body parts in a clay pot buried in the tomb. Prof. Thusitha Mendis has commented as follows.

THIS DISCOVERY IN CONNECTION WITH THE ANDARAWEWA MAHA SHILA CEMETERY CAN BE POINTED OUT AS A VERY IMPORTANT DISCOVERY REGARDING THE BANDARAHMI INSCRIPTIONS IN SRI LANKA. IT CAN BE POINTED OUT THAT THE CLAY POTS PLACED INSIDE A STONE BOX SURROUNDED BY 4 STONE SLABS ARE COVERED WITH A LARGE LID STONE AND THERE IS NO DISPLACEMENT AND NO MOVEMENT DUE TO ANIMAL CARCASSES. THEREFORE IT IS VERY IMPORTANT TO GET THESE SPELLED CLAY POTS FROM A PLACE WHERE THE CONTEXT IS NOT CONFUSING IN THE FIRST PLACE. THE OTHER IMPORTANT POINT HERE IS THAT THE BONE SAMPLES TAKEN FROM THE INSIDE OF THE POTTERY CONTAINING THESE LETTERS WERE SENT TO THE BETA ANALYTIC INSTITUTE IN THE UNITED STATES AND THE CHRONOLOGY OF THE BONES AND THE POTTERY DATES BACK TO 491 - 366 BC (2440-2315 CAL). BP) 94.4% RELIABILITY GIVEN THIS TIMELINE1. BETA ANALYTICS (BETA - 482665) STATES THAT THEY BELONG TO 507-501 (2456-2449) BC, WITH AN ACCURACY OF 0%. ACCORDINGLY, IT IS CERTAIN THAT THESE LETTERS BELONG TO THE 6TH CENTURY BC.

According to Prof. Thusitha Mendis , the adoption of the Bandarahmi script in line with these dates in a context where the context has the least ambiguity underscores the idea put forward by Dr. Siran Deraniyagala  in the 1990s.

[... ]

Joseph Patrick

unread,
Jun 25, 2022, 2:16:04 AM6/25/22
to mint...@googlegroups.com
ஆற்றல்மிகு செயல்பாடுகள் நன்றி நன்றி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 4, 2022, 3:30:20 AM7/4/22
to மின்தமிழ்
 திருவில்லிபுத்தூர் அருகே தொன்மையான  
இரும்பு உருக்கு உலை தடயங்கள் கண்டுபிடிப்பு

ancient iron smelting evidence2.jpg

ancient iron smelting evidence.jpg


திருவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமம் காவல்தோப்பு பேச்சியம்மன் கோயில் எதிரில் தொல்லியல் தடயங்கள் இருப்பதாக மங்காபுரம் முத்துராஜ் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி முதுகலை தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் மனோஜ், பிரவீனா ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு ஓர் ஏக்கர் பரப்பளவில் இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், கறுப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்பு நிறப் பானை ஓடுகள், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்கள், சுடுமண் குழாய்கள், கல் குண்டு ஆகியவை சிதறிக் கிடப்பது கண்டறியப்பட்டது. இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு உலையின் தடயங்கள் ஆகும்.

மேலும் படிக்க - https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=779061

தேமொழி

unread,
Jul 18, 2022, 3:15:09 AM7/18/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/story.php?story_fbid=pfbid029Tt2eHeLTHLfkVBG9wjur6CB3fZjxC2Qo9YBNKbCViThqF8man3pGC4ua6NDzJMMl&id=100001935370654


antiquity archaeology.jpg
தமிழகத்தின் பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுத்த தொல்பொருள்களின் கண்காட்சி...
தொல்லியல் உதவிப் பேராசிரியர் முனைவர் இ.இனியன் தலைமையில் தமிழ் நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் -வரலாறு சுற்றுலாப் பள்ளி சார்பில் நடத்திய இந்த அகழ்வாய்வு இன்னும் மேலும் கவனத்தைப் பெறும்.
இக் கண்காட்சி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்- கல்வி வளாகத்தின் இரண்டாம் தளத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. (வரும் வெள்ளிக் கிழமை வரை நடைபெறும்.)
படங்களில் உதவிப்பேரா. இனியன் மற்றும் நாடகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி. கார்த்திகேயன்...

தேமொழி

unread,
Oct 7, 2022, 5:52:25 PM10/7/22
to மின்தமிழ்
source -   https://www.facebook.com/photo/?fbid=587771853155564&set=a.567236895209060



இராஜேந்திர சோழன் காலத்திய (பொலன்னறுவை) ‘ஜனநாதமங்கலம்’ வானவன்மாதேவீஸ்வரம் கல்வெட்டு
-----------------------------------------------------------------
இலங்கையின் மத்தியகால தலைநகரமாக வரலாற்றில் இடம் பெறுவது பொலநறுவையாகும் (பொலன்னறுவை). அனுராதபுரத்திற்கு அடுத்த இலங்கையின் இரண்டாவது பெரிய இராஜதானி என்ற பெயரும் அதற்கு உரியது.
இராஜராஜன் எனப் புகழப்பட்ட அருண்மொழித்தேவன் கி.பி 985ல் சோழநாட்டின் வேந்தனாக முடிதரித்தார். அவர் பதவிக்கு வந்ததும் ஈழத்துடன் இறுக்கமான தொடர்பினைப் பேணிக் கொண்டிருந்த அமரபுயங்க பாண்டியனைத் தோற்கடித்து பாண்டி நாட்டைக் கைப்பற்றினார். அதன் பின்னர் தனது புதல்வனான இராஜேந்திரன் தலைமையில் சேரத்தையும் இணைத்துக் கொண்டார். இக்காலத்தே அனுராதபுரத்தில் அரசிருக்கையைக் கொண்டிருந்த ஈழவேந்தன் 5ஆம் மகிந்தன் தனது ஒற்றர்களைப் பாண்டிய நாட்டுக்குள் ஊடுருவச் செய்து தனது ஆட்சிக்கு எதிராகச் செயல்படுவது இராஜராஜனுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. இதனைக் காரணப்படுத்தி இராஜராஜன் வடபகுதியூடாக அனுராதபுரத்தைக் கைப்பற்றினார். இலங்கையின் வடபகுதி முழுவதும் சோழரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும் அது மும்முடிச் சோழ மண்டலம் எனும் பெயருடன் சோழப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது.
அதனைத் தொடர்ந்து, போரினால் அழிபாடுற்ற பண்டைய நகரமான அனுராதபுரத்தைச் சோழர்கள் கைவிட்டு, அதன் தென்கிழக்காக அமைந்திருந்த பொலநறுவையைத் தங்களது தலைநகரமாக மாற்றி ‘ஜனநாதமங்கலம்’ எனப் பெயர் சூட்டினர். அதன் பின்னர் இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழன் 1017ல் பெரும்படையுடன் ஈழம் நோக்கிய படையெடுப்பில் நாடு முழுவதையும் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அதனைத் தொடர்ந்து இலங்கையில் சோழர் ஆட்சி சுமார் 70 ஆண்டுகள் வரை நீடித்தது.
இராஜேந்திர சோழன் சாதனைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கது அவரது இலங்கை வெற்றி,
ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தேடுதலை இராஜேந்திரனே நிறைவு செய்தார் அதிக ஆண்டுகள் இலங்கையை ஆண்ட ஒரே தமிழ் மன்னன் இராஜராஜனே.
இராஜராஜ சோழனும் அவன் மகன், இராஜேந்திர சோழனும் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழ ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகவே ஆக்கினார்கள்.
பராந்தகனால் முடியாததை…, சுந்தரச் சோழனால் முடியாததை…, இராஜராஜனாலும் முடியாததை… இராஜேந்திரன் தான் முடித்து வைத்தார்.
கி.பி.910-ம் ஆண்டு, முதலாம் பராந்தகச்சோழனுக்கும், இராஜசிம்ம பாண்டியனுக்கும் வெள்ளூர் என்னும் இடத்தில் கடும்போர் நடைபெற்றது. போரில் தோல்வியுற்ற பாண்டியன் இலங்கைக்கு தப்பிச் செல்கிறார். பாண்டியர்குல அடையாளமான மணிமுடியையும், இந்திர ஹாரத்தையும் ஈழ மன்னனிடம் கொடுத்து மறைத்து வைக்கிறார். இதை மீட்பதற்கு சோழர்கள் கடும் முயற்சி மேற்கொண்டும் நிறைவேறவில்லை.
பராந்தகன் காலத்திலும் இலங்கையின் மீது சோழர்கள் படையெடுத்தனர்; வெற்றிபெற இயலவில்லை.
சுந்தரச்சோழன் காலத்தில் நடந்த ஈழப்படையெடுப்பும் தோல்வியில் முடிந்தது.
இராஜராஜன் காலத்தில் நடந்த ஈழப் படையெடுப்பு வெற்றிபெற்றாலும், பாண்டியனது மணிமுடியையும் ஆரத்தையும் மீட்க முடியவில்லை, முப்பாட்டானாலும் முடியவில்லை; பாட்டனுக்கும் தோல்விதான்; தந்தையாலும் முடியவில்லை.
கி.பி.982-ம் ஆண்டு, ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தார். அவர் சோழர்களுக்கு எதிரிகளான பாண்டியனுக்கும், சேரனுக்கும் உதவி செய்து வந்தார். எனவே, இலங்கை மீது படையெடுக்க சோழமன்னன் இராஜராஜசோழன் முடிவு செய்தார்.
தன் மகன் இராஜேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல் படையை அனுப்பி வைத்தார். தமிழ்ப்போர் வீரர்களுடன் கப்பல்கள் இலங்கையை சென்றடைந்தன. போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர். சோழர் படையை எதிர்க்கத் துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டார். சோழர் படை இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது.
அந்தப்பகுதிக்கு `மும்முடிச் சோழ மண்டலம்' என்ற பெயர் சூட்டி தலைநகரமான அனுராதபுரம் அழிக்கப்பட்டது அதற்குப் பதிலாக பொலனறுவா நகரம் புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது. அதற்கு `ஜனநாதமங்கலம்' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. சிங்கள மன்னனின் கருவூலத்தில் இருந்த நகைகள், வைர மாலைகள், அரச அணிகலன்கள் முதலியவை கைப்பற்றப் பட்டன. உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது.
இரண்டாவது படையெடுப்பு ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை. சோழருக்கு எதிராக பெரும்படை ஒன்றை திரட்டினார். இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்க போர் தொடுத்தார்.
இதுபற்றி சோழ மன்னன் இராஜேந்திரனுக்குத் தெரிந்தது. அவர் கி.பி. 1017-ம் ஆண்டில் மீண்டும் இலங்கை மீது படையெடுத்தார். இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது.
சோழப் படைகளின் தாக்குதலை, மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை. போரில் சோழர் படை வென்றது;சிங்களர் படை தோற்றது. இராஜேந்திரனிடம் தோல்வியுற்ற இலங்கை வேந்தன் மகிந்தன் தப்பியோடினார். தப்பியோடிய மகிந்தனை இராஜேந்திரனின் தளபதி ஜயங்கொண்ட மூவேந்தவேளான் என்பவர் தேடிப்பிடித்து கைது செய்து தமிழகம் கொண்டு வந்தார்.
இந்நிகழ்வை இலங்கையில் உள்ள கல்வெட்டு சாசனம் விவரிக்கிறது.
இலங்கையை வெற்றி கொண்டு, பாண்டியனது மணிமுடியையும் இந்திர ஆரத்தையும் மீட்டு தமிழகம் கொண்டு வந்தார்.
இந்நிகழ்வை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சமும் உறுதி செய்கிறது.
"பொருகடல் ஈழத்து அரசர் தம்முடியும்,
ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும்,
முன் அவர் பக்கல் தென்னவன் வைத்த
சுந்தரமுடியும் இந்திரன் ஆரமும்,
தெண்டிரை ஈழமண்டலம் முழுவதும்."
ஈழமண்டலம் முழுவதையும் கைப்பற்றி... இலங்கை வேந்தனின் முடியையும் கைப்பற்றிய இராஜேந்திரன்,
"தென்னவன் வைத்த சுந்தரமுடியும் இந்திர ஆரமும்."
பாண்டியனது மணிமுடியும், பாண்டியனின் ஆபரணமான இந்திர ஆரத்தையும் இலங்கையில் இருந்து மீட்டார் இராஜேந்திரன். இது தான் பாடலின் விளக்கம்.
இராஜேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டார்.
கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம் என்னும் ஊருக்கு இராஜேந்திரன் வந்திருந்தபோது இராஜேந்தினை இலங்கை வேந்தன் வணங்கியதாக திருநல்லம் கல்வெட்டு பதிவு செய்கிறது.
" இலங்கேஸ்வரன் வந்தடி வணங்க இனிதங்கியிருந்த கொப்பரகேசரிவன்மரான ஸ்ரீராஜேந்திர
சோழதேவர் "
என்பது கல்வெட்டு செய்தி. கரந்தை செப்பேடும் இந்நிகழ்வை பதிவு செய்கிறது.
" சோழர் படையினால் தோற்கடிக்கப்பட்ட இலங்கை அரசன் இராஜேந்திரனுடைய திருவடியை வணங்கினார்."
ஆனால், இராஜேந்திர சோழன் தென்னிலங்கையில் அவரை சிறைப்பிடித்து சோழநாட்டிற்கு கைதியாக கொண்டு சென்றார். 12 ஆண்டுகள் கைதியாக இருந்த அவன் 1029 இல் இறந்தான். அவனது மகன் தான் காஸ்யபன், தென்னிலங்கையில் அவனது தளபதிகளின் உதவியோடு எழுச்சி பெற்று முதலாம் விக்கிரமபாகு (1017-1041) என்ற பெயரில் சிங்கள அரசை நிறுவினார். இராஜேந்திர சோழன் 1941- இல் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து அந்த சாம்ராஜ்யத்தையும் வீழ்த்தினார்.
இலங்கை முழுவதும் சோழர் வசமாயிற்று. சோழஇலங்கேஸ்வரன் என்ற பெயருடன் இராஜேந்திரனின் மகன்களில் ஒருவர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
தஞ்சாவூர் பெரிய கோயில் எனப் பெறும் முதலாம் இராஜராஜசோழன் எழுப்பித்த தஞ்சை இராஜராஜேச்சரத்தின் ஸ்ரீவிமானத்தின் வடபுறம் அடித்தளக் கட்டுமான அதிஷ்டானத்து ஜகதி என்ற பகுதியில் அப்பேரரசன் இட்ட ஆணை, கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டுச் சாசனத்தின் முற்பகுதியில் அப்பேரரசனின் கீர்த்தியினை எடுத்துரைக்கும் மெய் கீர்த்திப் பாடலொன்றுள்ளது.
திருமகள் போல எனத் தொடங்கும் அப்பாடலில்
‘‘குடமலை நாடும் கொல்லமும், கலிங்கமும் முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும்..’’
என்ற அடி காணப்பெறும். அப்பேரரசன் வென்ற நாடுகளுள் ஒன்றே சிங்களரின் கட்டுப்பாட்டிலிருந்த இலங்கை நாடாகும். அதனை வென்று தன் கட்டுப்பாட்டிற்குள் இராஜராஜன் கொணர்ந்தார் என்பதே தஞ்சை கல்வெட்டு கூறும் செய்தியாகும்.
தந்தையும் மகனும் இலங்கை நாடு முழுவதையும் வென்று தம் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்பதை இலங்கையிலும், தமிழகத்திலும் உள்ள பல கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன.
பண்டைக் காலந்தொட்டு ஈழ நாட்டின் தலைநகரமாக விளங்கியது அனுராதபுரம் என்னும் பேரூரேயாகும். ஈழநாட்டைக் கைப்பற்றிய இராஜராஜசோழன் அந்நகரை துகள்படச் செய்து பின்பு பொலன்னருவா எனும் புதிய தலைநகரை நிருமாணித்தார். கொழும்பிலிருந்து திரிகோணமலை செல்லும் நெடுஞ்சாலையில் ஹபரேணி என்னும் இடத்திலிருந்து பிரியும் மின்னேரியா வழி சாலையில் பொலன்னருவா எனும் பெருநகரம் உள்ளது. பொலன்னருவா என்ற சிங்களப் பெயருக்கு மாற்றாக அந் நகருக்கு ‘ஜனநாதமங்கலம்’ எனப் பெயர் சூட்டினார்.
ஜனநாதன் என்றால் மக்களால் விரும்பப்படும் தலைவன் என்பதாகும்.
இராஜராஜன் மகிழ்ந்து சூடிய விருதுப் பெயர்களுள் ஜனநாதன் குறிப்பிடத்தக்கவொன்றாகும்.
இராஜராஜனின் பெயரால் பொலன்னருவா, ஜனநாத மங்கலமானது போன்று, ஈழ மண்டலம் ‘மும்முடிச் சோழ மண்டலம்’ என அவரால் பெயர் மாற்றம் பெற்றது.
தஞ்சை பெரிய கோயிலிலுள்ள மற்றொரு கல்வெட்டு இலங்கை பற்றிய ஒரு முக்கியத் தகவலைக் கூறுகின்றது. இராஜராஜன் சோழநாட்டிலிருந்தும் அவர் கைக்கொண்ட பிற நாடுகளிலிருந்தும் பல ஊர்களைத் தேர்வு செய்து அவ்வூர்களில் அவனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு என ஒதுக்கப் பெற்ற நிலங்களிலிருந்து நெல்லாகவும், காசாகவும், இலுப்பை எண்ணெய்யாகவும் ஆண்டுதோறும் தஞ்சை கோயிலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து அவ்வூர்களின் பட்டியலையும், அங்கிருந்து அனுப்பப்பெற வேண்டியவற்றின் அளவுகளையும் ஒரு நீண்ட கல்வெட்டுச் சாசனத்தில் பதிவு செய்துள்ளார்.
அப்பட்டியலில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்து மாப்பிசும்பு கொட்டியாரம் எனும் ஊரிலிருந்து நெல்லாக 3164 கலம் நெல்லும், 12-1/2 பொற்காசும், இலுப்பைப் பாலான எண்ணெய் இரு கலமும், அங்கிருந்த மற்றொரு ஊரிலுள்ள 119 வேலி நிலத்து வருவாயிலிருந்து நெல்லும், இலுப்பைப்பால் 3 கலமும் காசு 22ம் தஞ்சைக்கு அனுப்ப வேண்டும் என்று குறிக்கப் பெற்றுள்ளது. அதுபோன்றே அதே நாட்டு மாசார் எனும் ஊரில் இருந்த 353 வேலி நிலத்து நெல் வருவாயினையும் தஞ்சை இராஜராஜேச்சரத்துக்கு அனுப்ப அப்பேரரசன் ஆணையிட்டுள்ளதை அக்கல்வெட்டுச் சாசனம் எடுத்துரைக்கின்றது.
இவற்றோடு ஈழமான மும்முடிச்சோழ மண்டலத்தின் அதிகாரங்களைக் கவனிக்க அனுப்பப் பட்ட பிரதிநிதியான சோழ இலங்கேஸ்வரன் பற்றிய இரு கல்வெட்டுக்களின் ஆதாரங்களும் திருகோணமலையின் கந்தளாய், மானாங்கேணி ஆகிய இடங்களில் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
சோழர் ஆட்சியில் ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் இதுவரை ஆறு வளநாடுகளே அடையாளங் காணப்பட்டுள்ளன. அவற்றுள் அருண்மொழித்தேவ வளநாடு (மாதோட்டமான இராஜராஜபுரம்), நிகரிலிச் சோழ வளநாடு என்பவை தவிர்த்து மிகுதி நான்கு வளநாடுகளும் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவையாவன,
1. இராஜேந்திர சோழவளநாடு - திருகோணமலையும், கந்தளாயும் உள்ளடங்கிய பகுதி. இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது.
2. விக்கிரம சோழ வளநாடு என்னும் கணக்கன் கொட்டியாரம் (மூதூரின் ஒரு பகுதி)
3. இராஜராஜ வளநாடு என்னும் மாப்பிசும்பு கொட்டியாரம் (மூதூரின் மற்றொரு பகுதி)
4. இராஜேந்திர சிங்க வளநாடு - மானவத்துளா அல்லது வீரபரகேசரி வளநாடு என்றழைக்கப்பட்ட இப்பிரதேசமே பின்னாட்களில் கட்டுக்குளம் பற்று என வழங்கப்பட்டது. இங்குதான் இராஜராஜப் பெரும்பள்ளி இருக்கிறது.
இராஜராஜசோழனாலும் அவர் மைந்தன் கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழனாலும் புதிதாக உருவான பொலன்னருவா எனும் இலங்கை நாட்டுப் பெருநகரத்தில் 14 சிவாலயங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்து, அவை இருந்ததற்கான தடயங்களை மட்டும் சுமந்த வண்ணம் காணப்பெறுகின்றன. இவை அனைத்தும் இராஜராஜனால் எழுப்பப் பெற்றவையாகும்.
இதுவரை பொலநறுவையில் மேற்கொள்ளப்பட்ட ஆகழ்வாய்வுகளின்படி பதினாறு இந்துக் கோவில்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் பத்துச் சிவன் கோவில்களும், ஐந்து விஷ்ணு கோவில்களும், ஒரு காளி கோவிலுமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை சோழர் காலத்திலும் பின்னரும் கட்டப்பட்டவையாகும். பொலநறுவை ஆட்சிக் காலத்தே அனைத்து இந்து ஆலயங்களிலும் சிறப்பான வழிபாடுகள் இடம்பெற்றுவந்துள்ளமையை அறிய முடிகின்றது.
இலங்கை தொல்பொருள் துறையினர், இவற்றை எண்கள் மூலமே அடையாளப் படுத்துகின்றனர். இதில் இராஜேந்திர சோழரால் அவரது அன்னை நினைவாகக் கட்டப்பட்ட வானவன்மாதேவீச்சரம் இரண்டாம் சிவாலயமாக குறிப்பிடப்படுகின்றது. இது இன்றும் மக்களால் வழிபாடு செய்யப்படுகின்றது.
இராஜராஜனும் இராஜேந்திரனும் தமிழ் மரபில் வந்த சோழர்கள் தான். தந்தை தாய் வழி இரண்டும் தமிழ் மரபு. கொடும்பாளூர் வேளிர்குல இளவரசி வானதி என்னும் வானமாதேவி தான் முதலாம் இராஜேந்திர சோழனின் தாய். கொடும்பாளூர் என்பது தற்போது இருக்கும் புதுக்கோட்டை பகுதி.
வானவன் மாதேவி செய்துள்ள ஆலய திருப்பணிகள் மற்றும் கொடைகளில் இருந்து முக்கியமான விடயம் கண்டறியப்படுகிறது. திருவெண்காடு இறைவனுக்கு அதிகளவு தானங்களை மேற்கொண்டுள்ள இவ்வரசி “உடைய பிராட்டி தம்பிரானடிகள் திரிபுவன மாதேவியான வானவன் மாதேவ ” என்றும் “இராஜேந்திர சோழ தேவர் தங்களாய்ச்சி (தாய்)” எனவும் அறியப்படுகிறார்.
வானவன்மாதேவீச்சரம்
வானவன்மாதேவீச்வரம் இங்குள்ள ஆலயங்களின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகும். இங்கு கண்டெடுக்கப்பட்ட இராஜராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திர சோழனின் ஆரம்பகாலக் கல்வெட்டைச் சான்றுபடுத்தி, இது 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது. இராஜேந்திர சோழனின் தாயின் பெயர் வானவன்மாதேவி என்பதுவும், அவன் தனது தாயின் பெயராலேயே இக்கோவிலை அமைத்திருக்கக்கூடும் என்பதுவும் ஆய்வுகளின் வெளிப்பாடாகும்.
இலங்கையில் உள்ள இராஜராஜனின் தமிழ்க் கல்வெட்டு, விமானத்துடன் காணப்பெறும் சிவாலயத்தை ‘வானவன் மாதேவீச்சரம்’ என்று குறிப்பிடுகின்றது. வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் காணப்பட்ட கல்வெட்டின் துணை கொண்டு அது முதலாவது இராஜேந்திர சோழனின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது. வானவன் மாதேவி ஈஸ்வரத்தின் அமைப்பு சோழர் காலத் திராவிடக் கட்டடக்கலைப் பாணியைச் சேர்ந்தது.
இராஜராஜசோழனின் தாயும் சுந்தரசோழனின் தேவியுமான வானவன் மாதேவியார் நினைவாக எடுக்கப்பெற்ற அந்த ஆலயம் பொலன்னருவா நகரத்தில் அப்பேரரசனின் மாட்சிமையினை புலப்படுத்தும். இக்கோவிலில் உள்ள கல்வெட்டில் இராஜேந்திரனின் மெய்கீர்த்தி வரிகளும் மற்றொரு கல்வெட்டில் "வானவன் மாதேவி ஈஸ்வரமுடையார்" பெயரும் காணப்படுகிறது. இக்கோவிலுக்கு அழகிய மணவாளர் என்னும் கல்யாணசுந்தரர் படிமத்தை எடுத்த செய்தியும் உள்ளது.
வானவன் மாதேவியாரின் சிறப்புகளை தமிழகத்திலுள்ள பல கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவலூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலிலுள்ள மாமன்னன் இராஜராஜசோழனின் அலுவலன் கம்பன் மணியன் வெட்டுவித்த கல்லெழுத்துச் சாசனத்தில்,
“இராஜராஜன் எனும் புலியைப் பெற்றெடுத்த பொன்மான் அத்தேவி”
என்றும் அவ்வம்மையார் ‘திருக்கோவிலூர் மலையமான் குலத்தில் பிறந்தவர் என்றும், சுந்தரசோழன் மாய்ந்தபோது அவரது ஈமத்தீயில் பாய்ந்து தன் தலைவனைப் பிரியாத தையல்’ என்றும் கூறுகின்றது.
வானவன் மாதேவியான வானதியின் மகன் இராஜேந்திரர் தன்னுடைய மாற்றன்னையான பஞ்சவன் மாதேவிக்கு எடுப்பித்த பள்ளிப்படை கோயில் குறித்து மக்களுக்கு தெரிந்திருக்கும் அளவு, தன்னுடைய பிறப்பன்னையான வானவன் மாதேவியின் பெயரில் இலங்கையில் எடுப்பித்த கற்றளி குறித்து தெரிந்திருக்காது.
கி.பி 1017 ம் ஆண்டு முழு இலங்கையையும் சோழர் அதிகாரத்துக்குள் கொண்டு வந்த இராஜேந்திரசோழர், இலங்கையின் புதிய தலைநகரமான ஜனநாதமங்கலம் எனும் பொலன்னறுவையில் வானவன் மாதேவீஸ்வரம் எனும் சிறிய கருங்கல் ஆலயம் ஒன்றை எடுப்பித்தார் என்பதுஎன்பதும், இன்று இலங்கையில் எஞ்சியிருக்கும் பதினாறு சோழ ஆலயங்களில் இது ஒன்று மட்டுமே அதிகளவு சேதம் இல்லாமலும், இன்று வரை வழிபாட்டிலும் உள்ளதுஎன்பதும் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை தமிழ் சாசனங்கள்..பக் 73
கரந்தைச் செப்பேடு சுலோகம் – 59

Raman M P

unread,
Oct 7, 2022, 9:02:16 PM10/7/22
to mint...@googlegroups.com
இலங்கையில் சோழர் ஆட்சி பற்றிய பொருளற்ற ஐயங்களுக்குச்   சரியான விளக்கம். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages