Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

எனது ஆய்வுக்கட்டுரையின் பதிப்பு

650 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Sep 15, 2020, 4:40:20 AM9/15/20
to mintamil
இன்று வல்லமை இதழில் வெளியாகி இருக்கும் எனது ஆய்வுக்கட்டுரை "பொறையாற்றுக் கிழானும் கோமான் பெரியனும்".

கட்டுரையை வாசிக்க.....
https://www.vallamai.com/?p=99036  
  
 ச.கண்மணி கணேசன் 

mknp...@gmail.com

unread,
Sep 16, 2020, 8:47:18 AM9/16/20
to மின்தமிழ்
வெகு நாட்களாக பேரா. கண்மணி அவர்களின் படைப்புகளும் கலந்துரையாடலும் மின் தமிழில் காண இயலாமல் இருந்தது ஒரு குறையாக இருந்தது. தங்களின் படைப்புகளை மீண்டும் காண்கையில் மகிழ்ச்சியளிக்கின்றது.

மு. கமலநாதன்
Message has been deleted

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 17, 2020, 7:06:27 AM9/17/20
to mintamil
ஒதுங்குதல், சேருதல், மௌனித்தல், ஒலித்தல், ஒதுக்கப்படல் இவையெல்லாம் மடலாடுதல் குழுக்களில் அப்போதைக்கப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வாழ்க!

சொ.வினைதீர்த்தான்

On Wed, 16 Sep, 2020, 10:17 PM இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
புதிய படைப்புகளை காண ஆவலாய் உள்ளேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2dd1b342-1083-4fe7-bf61-17a6dfc38267n%40googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 7, 2020, 12:26:01 PM10/7/20
to mintamil
'தமிழ் மொழியும் இலக்கியமும்' என்ற  பன்னாட்டு மின்ஆய்விதழில் (IJTLLS) 15.07.2020 அன்று பதிப்பிக்கப் பட்டிருக்கும் என் ஆய்வுக்கட்டுரை:
                                                            "தாமான் தோன்றிக்கோன் - முல்லைத்திணை மாந்தர் தலைவன் "
கட்டுரையைப் படிக்க --->

Sk 

On Sat, Sep 26, 2020 at 11:18 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

kanmani tamil

unread,
Oct 22, 2020, 5:00:03 AM10/22/20
to mintamil
மதுரையிலிருந்து வெளியாகும் உலகத்தமிழ் என்னும் காலாண்டு ஆய்விதழின் ஜூலை மாத வெளியீட்டில் இடம்பெற்று இருக்கும் என்னுடைய கட்டுரை 'நற்றிணை உழவன் உண்ட சத்துணவு'
சுட்டியைக் கொடுப்பதற்கு முன் என் கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால் அந்தப் பதிப்பு ரொம்பவே சுமாராக இருக்கிறது. நான் இணைத்திருந்த மூன்று படங்களையும் போடாமல்; சம்பந்தமே இல்லாத கம்மஞ்சோறு படத்தைப் போட்டிருப்பது மட்டுமில்லாமல் தேவை இல்லாத இடத்தில் எல்லாம் க்,ச் சேர்த்துக் கடுப்பேற்றி இருக்கிறார்கள்.   


  

     

முன்னுரை:

பண்டைத்தமிழரின் காலைஉணவு பற்றிய இக்கட்டுரைக்கு அடிப்படையாக  அமைவது நற்றிணை பா-60ல் உழவன் அதிகாலையில் உண்ணும் பொம்மலும் மிளிர்வையும் ஆகும்.  பொம்மல் என்றால் என்ன? மிளிர்வை என்னும் பெயர் எதற்குரியது? அவற்றின் ஊட்டச்சத்து என்ன என்று அறிவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். 

 

நற்றிணைப் பாடலும் செய்தியும்:

விடியுமுன்னர் உழவன் தன் மனைவியரோடு வயலுக்குப் பணியாற்றக் கிளம்புகிறான். கிளம்பும் முன்னர் வயிறார உண்கிறான். ஏனெனில் அன்று அவன் நாற்று நடவேண்டும். அதுவும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வேலையைத் தொடங்கினால் வெயிலேறும் வரை ஓய்விற்கோ உணவிற்கோ வழியில்லை என்பது பின்வரும் பாடற்பகுதி மூலம் தெளிவாகிறது.

“மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின் 

பெருநீர் பல்கூட் டெருமை உழவ 

கண்படை பெறாது தண்புலர் விடியல் 

கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு 

புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு 

கவர்படு கையை கழும மாந்தி” என்கிறார் தூங்கலோரியார்.

 எனவே பருத்த வரால்மீன் துண்டுகளின் மிளிர்வையுடன் ‘புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோற்றைத் தன் கவர்த்த கைகளால் அரித்தெடுத்துண்டு; பின்னர் 'மாந்து’கிறான். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையில் ‘உணவுக்குரிய அரிசியால் ஆக்கிய மிக்க சோற்றுத்திரளை விருப்பமிக்க கையை உடையனாய் நிறைய மயக்கமேற உண்டு’ என்கிறார்.  

பொம்மல் பெருஞ்சோறு எது?

’பொம்மல் பெருஞ்சோறு’ என்ற சொற்றொடரில் பொம்மல் எனும் சொல் பெருஞ்சோறு என்னும் பண்புப்பெயர்த் தொடருக்கு அடையாக அமைந்துள்ளது. இங்கே ஒருபொருட் பன்மொழியாக பொம்மல் சோற்றைக் குறிக்கும் எனக் கொள்ள வழியில்லை. ஏனெனில் கடலைக்   குறிப்பிடும்போது “பொம்மல் படுதிரை” எனவும் (நற்றிணை- 96& அகநானூறு- 200), பெண்ணைக் குறிப்பிடும் போது “பொம்மல் ஓதி” எனவும் (நற்றிணை- 71,129, 252, 274, 293; குறுந்தொகை- 191, 379& அகநானூறு- 65, 214, 221, 257, 311, 353) தொகைநூல்களில் பல இடங்களில் பயின்று வருவதைக் காண இயல்கிறது. கடலலையைக் குறிக்குமிடத்தும், பெண்ணின் கூந்தலைக் குறிக்குமிடத்தும் ‘பொம்மல்’ பெயரடையாக வருவதால் சோற்றைக் குறிக்குமிடத்திலும் அது பெயரடையே எனல் திண்ணம். எல்லா இடங்களிலும் ‘பொலிந்த’ என பின்னத்தூர் நாராயண சாமி ஐயரும், நாவலர் வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு வேகடாசலம் பிள்ளையும் ஒருங்கு  பொருள் உரைக்கின்றனர்.

பொம்மல் ஓதி = பொலிந்த கூந்தல் எனல் பொருத்தமே.

பொம்மல் படுதிரை = பொலிந்த படுதிரை என்பது பொருந்தவில்லை .

கழகத் தமிழகராதி ‘பொம்மல்’ எனும் சொல்லுக்குப் ‘பூரித்த’, ‘பொருமிய’ எனும் பொருளையும் சொல்கிறது(ப.- 716). தமிழ்மொழி அகராதி  ‘பொருமல்’, ‘பொலிவு’ என்ற பொருள்களைத் தருகிறது (ப.- 1075). 

பொம்மல் படுதிரை = பூரித்த/ பொருமிய  படுதிரை எனல் 

பொருத்தமே. ஏனெனில் கடல் அலைகள் பூரித்துப் பொங்கி கரையை மோதுகின்றன. அவ்வாறாயின் ‘பொம்மல் பெருஞ்சோறு’ எனும் தொடரின் பொருள் யாது? பூரித்த/ பொருமிய சோறு எப்படி உண்டாகும்? கேள்விகட்கு உரிய பொருள் பாடலிலேயே உள்ளது. உழவன் விடியுமுன் உண்டுவிட்டு வேலைக்குக் கிளம்புகிறான். அவன் மனைவியர் முதல்நாள் ஆக்கி நீரில் ஊறவைத்த சோற்றையே உண்ண இயலும். நீர்ச்சோறு பூரித்துப் பொருமி இருப்பது இயற்கை. நீரில் ஊறியதால் சோறின் கொள்ளளவு கூடி; மென்மையாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டில் நீராகாரம் என்று வழங்கிய பழைய சோறு தான் சங்க காலப் ‘பொம்மல் பெருஞ்சோறு’. இதனை மேலும் ஒரு சான்றால் நிறுவலாம்.    

“குரூஉக்கண் இறடிப் பொம்மல்” (மலைபடுகடாஅம் அடி- 169) 

என்ற அடிக்கு  உரை கூறும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் ‘நிறம் மிக்குத் தோன்றும் தினையின் சோறு’ என்கிறார். ‘இறடி’ என்பது தினை. இறடிப் பொம்மல் தினையின் சோறு எனப் பொருள் கொள்கிறார்.  புன்செய்த் தானியங்களின் உணவை  நீரில் அல்லது மோரில் கரைத்து உண்ணும் வழக்கமே இன்றும் நிலவுகிறது. சங்க காலத்திலும் அவ்வாறு கரைத்து உண்ணும் வழக்கம் தான் இருந்தது என்பதற்குப் புறநானூறு சான்று பகர்கிறது. 

கரும்பனூர் கிழான் பற்றி நன்னாகனார் பாடுங்கால்; அவன் நாட்டில் கூலம் விளைந்தது என்னும் செய்தியை,

“இருநிலம் கூலம் பாறக் கோடை” எனும் அடியில் கூறுகிறார். 

அத்துடன் பாலில் கரைத்தோ, அல்லது பாகில் கலந்தோ புன்செய்த் தானிய உணவைத் தந்து விருந்தயர்வான் என்பதை, 

.”பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்

அளவுபு கலந்து மெல்லிது பருகி

விருந்துறுத்து”(புறம்- பா- 381) எனும் அடிகளால் உரைக்கிறார். 

இதனால் கூத்தராற்றுப்படையின் தினை உணவும் கரைத்துக் குடிக்கக் கூடியது எனல் பெற்றோம். முடிவாக பொம்மல் என்பது நீரில் கரைத்த / ஊறவைத்த உணவு என்பது உறுதிப்படுகிறது. 

அது நீராகாரமாக இருந்ததால் தான் உழவன் ‘மாந்து’வதாகக் குறிக்கிறார் புலவர். அது மட்டுமன்று; “கவர்படு  கையை கழும” எனும் தொடர் அவன் தனது விரல்களால் சோற்றினை அரித்து எடுத்து மிளிர்வையோடு உண்கிறான் என்பதைப் புலப்படுத்துகிறது (பார்க்க- படங்கள்1& 2).

(தொடரும்)


kanmani tamil

unread,
Oct 22, 2020, 5:15:02 AM10/22/20
to mintamil


படம்- 1 நீரூற்றிய சோறு         படம்-2 பொம்மலான சோறு                    படம்- 3 பொம்மலும் மிளிரவையும் 

மிளிர்வை - விளக்கம் யாது?

“கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வை” இன்றைய தமிழில்  

வரால் மீனின் குழம்பு என்பது வெளிப்படை. இன்றும் முந்தைய நாள் வைத்த மீன்குழம்பே ருசி மிகுந்தது என்னும் கொள்கை பரவலாக உண்டு. ‘முள்ளும் மலரும்’ திரைப் படத்தில் இடம்பெறும்,

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு; நெய் மணக்கும் கத்திரிக்கா

நேத்து வச்ச மீன்குழம்பு என்னை இழுக்குதையா“ என்னும் 

பாடல் சான்று. ஆனால் மிளிர்வை என்ற சொல்லின் சிறப்புப் பொருள் என்ன?; என்பது ஆய்விற்குரியது. 

பால் விட்டு உண்ணும் உணவு  பாலின் மிதவை என்று  பண்டைத்

தமிழில் பெயர் பெறுகிறது.(மலைபடுகடாஅம்- அடி- 417, அகநானூறு- பா-37) தயிர் விட்டு உண்ணும் உணவு  தயிரின் மிதவை ஆகும் (அகநானூறு- பா- 340& புறநானூறு- பா- 215). நீர்ச்சோறாகிய பொம்மல் பெருஞ்சோற்றில் மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து மிசைய வழியில்லை. ஏனெனில் அவ்வுணவு மாந்த வேண்டிய அளவு நீர் மிகுந்து உள்ளது. எனவே வரால் மீனின் பருத்த துண்டுகள் மட்டுமே பக்க உணவாக முடியும். அத்துண்டுகளின் மிதவை மிளிர்வையாக மாறுகிறது; அதாவது ‘சொட்டானம்’ ஆகிறது. சொட்டானம் என்பது கையில் எடுக்கும் சோற்றுக்  கவளத்தில் ஒரு சிறு குழிவினை உருவாக்கி அதில் ஆனத்தை ஊற்றி உண்ணும் முறை ஆகும் (பார்க்க- படம்- 3).

பொம்மல் பெருஞ்சோற்றின் ஊட்டச்சத்து: 

இன்று பழையசாதம் என்று அழைக்கப்படும் சங்ககாலப் பொம்மல் பெருஞ்சோற்றை முதல்நாள் ஆக்கிப் புளிக்க வைப்பதால் தேவையான தாதுச்சத்துக்களான கால்சியம், மெக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், செலினியம் அனைத்தும் உள்ளன. செலினியம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் திறன் வாய்ந்தது. (Mineral nutrients of ‘pazhaya sadham’: A traditional fermented food of Tamil Nadu, India.- P. Praveen Kumar&co)

அமெரிக்க ஊட்டச்சத்துக் குழுமம் (American Nutrition Association) பழைய சோற்றினால் விளையும் நன்மைகளை வரிசைப்படுத்துகிறது.

  1. உடல் தெம்பாகவும்; நாள் முழுதும் சுறுசுறுப்பாகவும்  இருக்கலாம்.  

  2. உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மிகுதியாக உருவாகும்.

  3. உடலுக்குத் தீமை செய்யும் மிகைச்சூடு சமன்படுத்தப்படுவதால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

  4. நார்ச்சத்து மிகுந்த உணவாகையால் மந்தம் நீங்கிச் சோர்வு அகலும்.

  5. இரத்த அழுத்தம் சீராகி; பதட்டநிலை குறையும். 

  6. ஒவ்வாமைச் சிக்கல்களும், தோல் வியாதிகளும் குறையும்.

  7. இளமையான தோற்றம் பெற இயலும்.

  8. உடலுக்குள் இருக்கும் எல்லாப் புண்களும் ஆறும்.

  9. புது நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.

  10. வைட்டமின் B12 மிகுதி

  11. காபி, தேநீருக்கு அடிமையாவதைத் தவிர்க்க இயலும்.

பக்கஉணவாக உழவன் உண்ட வரால்மீனில் அடர்த்தியற்ற கொழுப்பு அமிலங்களும், கால்சியம் தாதுவும் மிகுதி.

 மேற்சுட்டிய ஆய்வுமுடிபுகளின்படி உழவன் உண்ட பொம்மலும் மிளிர்வையும் உடலுக்கு நலமும் ஊட்டமும் தரவல்லன என்பதுடன்; புற்றுநோய் உருவாகாமல் இருக்க வழிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. வயிற்றுக்கோளாறும் மந்தமும் நீங்கி; இரத்த அழுத்தம் சீராகி; ஒவ்வாமை, நோய்த்தொற்று, தோல் வியாதிகள் இன்றி; உடலுக்குள் புண்களின்றி; இளமை வேகத்துடன் சுறுசுறுப்பாக வேலைசெய்ய ஏதுவாக அவனது காலைஉணவு அமைந்தது 

முடிவுரை:

உழவனின் காலைஉணவு பழைய சோறும் சொட்டானமும் ஆகும். நீர்ச்சோற்றுக்குச் சொட்டானம் ஊற்றி உண்ணும் 2000 ஆண்டுக் காலப் பாரம்பரியம் தலைமை சான்ற சத்துணவு முறையாகும். மிளிர்வை என்னும் தொகைநூலின் சொற் பயன்பாடு இன்று ‘சொட்டானம்’ என்று வழங்குகிறது.

துணைநூற்பட்டியல் 

  1. கழகத் தமிழகராதி கழகப் புலவர் குழுவினர் தொகுத்தது- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு- 1999- 15ம் பதிப்பு 

  2. தமிழ்மொழி அகராதி- நா.கதிரைவேற் பிள்ளை திருத்தியது- 6ம் பதிப்பு- Asian Educational Services, New Delhi. Madras-1998 

  3. Mineral nutrients of ‘pazhaya sadham’: A traditional fermented food of Tamil Nadu, India. P. Praveen Kumar&co- Department of Siddha Medicine, Faculty of Sciences, Tamil University, Thanjavur-10, India. 

  4. Mineral nutrients of ‘pazhaya sadham’: A traditional fermented food of Tamil Nadu, India.- P. Praveen Kumar&co)

(https://academicjournals.org/article/article1379675511_Kumar%2520et%2520al.pdf)

(https://www.quora.com/How-good-is-Pazhaya-soru-Fermented-Rice-for-breakfast)

http://tamilconcordance.in/TABLE-sang.html

முற்றும் 

சக 

இக்கட்டுரைக்குரிய சுட்டி --->

kanmani tamil

unread,
Nov 8, 2020, 1:03:46 AM11/8/20
to mintamil
இப்போது கட்டுரையில் நான் அனுப்பிய படங்கள் சரியாக மாற்றப்பட்டு விட்டன. 

ஒரு தொலைபேசி அழைப்புக்கும் இரண்டு மின்மடல்களுக்கும் தகுந்த எதிர்வினை கிடைத்தது. நிம்மதி. 
சக 

kanmani tamil

unread,
Nov 24, 2020, 9:20:50 AM11/24/20
to mintamil
கல்வியியல் மாநாட்டில் நான் வாசித்த கட்டுரை பதிப்பிக்கப் பட்டுள்ளது. கட்டுரையை வாசிக்க ...

kanmani tamil

unread,
Dec 12, 2020, 1:27:21 PM12/12/20
to mintamil
மலேசியாவில் இருந்து வெளியாகும் 'வளர்தமிழ்' என்னும் மின்ஆய்விதழில் பதிப்பிக்கப் பட்டிருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 
                                                                                   "பாடல் பெற்ற கிழார்கள்" 
கட்டுரையை வாசிக்க... இங்கே சொடுக்கவும்.
சக   

kanmani tamil

unread,
Dec 20, 2020, 1:01:43 PM12/20/20
to mintamil

தமிழ்ப் பேராய்வு' ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை- "தொல்தமிழகத்து அரசியலில் நன்னன்"
கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும் 


சக 

kanmani tamil

unread,
Jan 10, 2021, 3:33:22 AM1/10/21
to mintamil
Journal of Indian Studies மின் ஆய்விதழில் வெளியாகி இருக்கும் எனது ஆய்வுக்கட்டுரை "Critical Evaluation of the Narrative Song of Muththaalamman"
கட்டுரையை வாசிக்க...

kanmani tamil

unread,
Mar 1, 2021, 1:18:51 AM3/1/21
to mintamil
இன்று வல்லமை இதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை; "கரும்பனூர் கிழான் அளித்த விருந்து".

கட்டுரையை வாசிக்க ...                       

kanmani tamil

unread,
Apr 12, 2021, 11:03:03 AM4/12/21
to mintamil
இன்று வல்லமை இதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை : 
"அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்"  

கட்டுரையை வாசிக்க ...

kanmani tamil

unread,
May 5, 2021, 7:12:30 AM5/5/21
to mintamil
  இன்று வளர்தமிழ் மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை "பெண்ணிய நோக்கில் புறநானூற்று மகட்பாற் காஞ்சிப் பாடல்கள்" - கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
சக 

kanmani tamil

unread,
Jul 31, 2021, 12:23:29 PM7/31/21
to mintamil
தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் இன்று வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரைப் பதிப்பு: "பண்டைத்தமிழர் உணவில் புழுக்கும் சூட்டும்"


சக 

kanmani tamil

unread,
Aug 1, 2021, 5:42:46 AM8/1/21
to mintamil

Journal of indian studies மின்ஆய்விதழில்  இன்று வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை: Features Differentiating Venthar, Velir and Tinaimanthar. கட்டுரையை வாசிக்கத் தொடுப்பு பின்வருமாறு:


சக 

kanmani tamil

unread,
Aug 23, 2021, 12:07:05 PM8/23/21
to mintamil
இன்று 'இனம்' மின் ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை "தொகைஇலக்கியத்துக் கிளையும் ஆயமும் - ஒப்பியல் பார்வை". கட்டுரைக்குரிய தொடுப்பு https://storage.googleapis.com/inamtamil-cdn/Articles/inamtamil-cdn-data/
சக 

kanmani tamil

unread,
Aug 27, 2021, 8:36:50 AM8/27/21
to mintamil
  ஏப்ரல் மாத 'உலகத்தமிழ்' காலாண்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 

"அகஇலக்கியப் பாத்திரங்களுள் அகவன்மகளும் முதுவாய்ப் பெண்டும்- ஒரு ஒப்பீடு" 

கட்டுரையை வாசிக்க: 

http://ulagatamil.in/அக-இலக்கியப்-பாத்திரங்க


http://ulagatamil.in/ஏப்ரல்-காலாண்டிதழ்-12/


சக 

kanmani tamil

unread,
Sep 22, 2021, 4:47:59 AM9/22/21
to mintamil
மார்ச் 30ம் தேதி ஃபிரான்ஸில் இருந்து இணையவழி நடத்திய மாநாட்டில் நான் ஆற்றிய உரைப்பொழிவின் சில்லுக் காட்சி ... (இணைப்பில்)
சக 
The Mango Tree of Vel Nannan.pptx

kanmani tamil

unread,
Nov 24, 2021, 3:43:43 PM11/24/21
to mintamil
இன்று 'இனம்' மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "தொகை இலக்கியத்தில் 'தமர்' காட்டும் சமூகப்பிரிவினை". கட்டுரையை வாசிக்க:
சக 

RM S Viswanathan

unread,
Nov 25, 2021, 3:45:23 AM11/25/21
to mint...@googlegroups.com, S Viswanathan

நல்ல ஒரு கட்டுரை

.... வாழ்த்துக்கள்.

இதையும் கொஞ்சம் காண்க..... மேலும் ஒரு செய்தியாக இதை பகிர்கிறேன்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--
Thanks & Regards,

------------------------------------------------------------------
S. Viswanathan
Chennai

------------------------------------------------------------------

kanmani tamil

unread,
Dec 17, 2021, 9:46:29 PM12/17/21
to mintamil
JTS மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை 'தொகை இவக்கியத்தில் மகப்பேறு தொடர்பான நாட்டார் வழக்காறுகள்'. 
கட்டுரையை வாசிக்க:https://ejournal.upsi.edu.my/index.php/JTS
சக

On Thu, 25 Nov 2021, 3:24 pm RM S Viswanathan, <rmsv...@gmail.com> wrote:
Yes.

RMSV

On Thu, Nov 25, 2021 at 2:55 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பாராட்டுக்கு நன்றி. 
அதுவும் நான் எழுதிய கட்டுரை தான் 
சக 

RM S Viswanathan

unread,
Dec 18, 2021, 2:44:58 AM12/18/21
to mint...@googlegroups.com

kanmani tamil

unread,
Dec 27, 2021, 3:14:53 AM12/27/21
to mintamil
உலகத்தமிழ் அக்டோபர் காலாண்டு மின்ஆய்விதழில்

"தொகையிலக்கியத்தில் பெண்ணின் தமர்- மணவினைக்கு முன்னும் பின்னும்

என்ற என் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும் 

                                          
ச.க 

kanmani tamil

unread,
Jan 11, 2022, 3:27:06 AM1/11/22
to mintamil
மே மாதம் வல்லமை இதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "தொகை இலக்கியத்தில் வானியல் குறிப்புகள் பெறும் இடம் "

கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்: https://www.vallamai.com/?p=102427
சக 

kanmani tamil

unread,
Jan 22, 2022, 1:25:55 AM1/22/22
to mintamil

ANJAC 'ஆய்வுச்சுடர்' எனும் மின்ஆய்விதழில்  நேற்று வெளியாகி உள்ள என் கட்டுரை "பேய் அனையம் யாம் எனும் உவமை"
கட்டுரையை நான் ஏற்கெனவே குழுமத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
சக 

kanmani tamil

unread,
Mar 16, 2022, 12:00:23 PM3/16/22
to mintamil
ஜனவரி மாதத்திற்குரிய 'உலகத்தமிழ்' காலாண்டு மின்ஆய்விதழில்  வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை "நற்றிணை - 57 ஒரு மீள்பார்வை".
கட்டுரையை வாசிக்க:  

kanmani tamil

unread,
May 11, 2022, 12:22:46 AM5/11/22
to mintamil
இன்று 'இனம்'- பன்னாட்டுக் காலாண்டு மின்னாய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை...


"வேந்தரும் வேளிரும்"
சக 

kanmani tamil

unread,
Jun 3, 2022, 12:35:50 PM6/3/22
to mintamil
இன்று கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியிலிருந்து வெளியாகும் 'செங்காந்தள்' பன்னாட்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை: "தொகையிலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் தேர்ப்பாகன் பெறும் இடம்". கட்டுரையை வாசிக்க...


சக 

kanmani tamil

unread,
Jun 9, 2022, 12:12:36 PM6/9/22
to mintamil
இன்று 'உலகத்தமிழ்' காலாண்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை: 'தொகையிலக்கியக் கால வேந்தர்க்கும் பிறர்க்கும் இடையில் நிலவிய உறவுநிலை'
கட்டுரையை வாசிக்க...

kanmani tamil

unread,
Aug 6, 2022, 3:20:41 AM8/6/22
to mintamil
தொகையிலக்கியத்து முதுபெண்டிரும் பேய்ப்பெண்டிரும்" என்ற தலைப்பில் தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரையை வாசிக்க ...

https://tamilperaivu.um.edu.my/index.php/tamilperaivu/article/view/35329/14345  Volume 10 No 2 Published: 2021-12-25 p.39-45

SK

kanmani tamil

unread,
Aug 30, 2022, 3:57:53 AM8/30/22
to mintamil
இன்று இனம் பன்னாட்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை " தொகையிலக்கியக் கால மன்னரும் பிற தமிழ்ச் சமூகத்தாரும்".
சக 

kanmani tamil

unread,
Sep 6, 2022, 1:47:45 PM9/6/22
to mintamil

இன்று தமிழ்ப்பேராய்வு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "தொகையிலக்கியக் கால அரசியலில் மூவேந்தரும் பிற தமிழ்ச்சமூகத்தாரும்" கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும் - p.71-79

Sk

On Tue, Aug 30, 2022 at 5:53 PM Dr.Chandra Bose <drchan...@gmail.com> wrote:
தெளிவுரைக்கு மிக்க நன்றி.

On Tue, 30 Aug 2022, 08:11 kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
வேந்தரை 'வேந்தர்' என்றும் மன்னரை 'வேளிர்/கோ/கோமான்' என்றும் தொகைநூல்கள் சுட்டுகின்றன. 'அரசர்' இருதரப்பினர்க்கும் உரிய பொதுப்பெயர். 

கட்டுரைகளை நூலாக வெளியிடவில்லை ஐயா. (Refereed journals)
மின்ஆய்விதழ்களில் அதற்கு அனுமதி கிடையாது.

சக 

On Tue, 30 Aug 2022, 4:03 pm Dr.Chandra Bose, <drchan...@gmail.com> wrote:
மதிப்பிற்குரிய முனைவர் கண்மணி கணேசன் அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் ”தொகையிலக்கியக் கால மன்னரும்  பிற தமிழ்ச் 
சமூகத்தாரும்” என்னும் தலைப்பிட்ட ஆய்வுக் கட்டுரையைத் தரவிறக்கம் 
செய்து படித்தேன். அளப்பரிய தகவல்கள் ஆதாரத்துடன் உள்ளன. தொகையிலக்கியத்தில் ‘மன்னர்’ என்று எங்கும் குறிப்பிடவில்லை, 
வேந்தர் என்ற சொல்லே கையாளப்பட்டது என்ற தகவலை 
இன்று கற்றுக் கொண்டேன். 

தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை நூலாக வெளியிட்டுள்ளீர்களா?
இருப்பின் தகவல் தெரிவிக்கவும்.  ஆய்வு மாணவர்களுக்கு மிக
உதவியாக இருக்கும்.  இப்போது தனித்தனியே தரவிறக்கம் செய்து 
பயன்படுத்தி வருகின்றனர். 

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
முகாம்: அட்லாண்டா, ஜியார்ஜியா, அமெரிக்கா. 

kanmani tamil

unread,
Sep 7, 2022, 9:41:43 AM9/7/22
to mintamil
இன்று உலகத்தமிழ் காலாண்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை: "உரிப்பொருள் மட்டும் அமைந்த குறுந்தொகைப் பாடல்கள்" கட்டுரையை வாசிக்க...


சக 

kanmani tamil

unread,
Sep 15, 2022, 12:58:28 AM9/15/22
to mintamil
ஜூலை மாதத் 'தமிழ்ப் பேராய்வு'  மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "தொகையிலக்கியக் கால அரசியலில் மூவேந்தரும் பிற தமிழ்ச் சமூகத்தாரும்". கட்டுரைக்குரிய தொடுப்பு:      https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/38904/14909
சக 

kanmani tamil

unread,
Sep 15, 2022, 4:30:31 AM9/15/22
to mintamil

Chandra Sekaran

unread,
Sep 15, 2022, 4:40:56 AM9/15/22
to mint...@googlegroups.com
மிகச்சிறப்பு.

kanmani tamil

unread,
Mar 16, 2023, 10:59:49 PM3/16/23
to mintamil

நேற்று தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 
"தொகையிலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் அறிவன் பெறும் இடம்". கட்டுரையை வாசிக்க:


சக 

On Thu, Sep 15, 2022 at 8:38 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நன்றி ஐயா 
சக 
Message has been deleted

kanmani tamil

unread,
Apr 11, 2023, 9:10:39 AM4/11/23
to mintamil
இன்று  காலாண்டு இதழாக வெளிவரும்  உலகத்தமிழ் பன்னாட்டு மின்ஆய்விதழில் பதிப்பிக்கப் பெற்ற என் கட்டுரை "தொகை இலக்கியக் காலக் குடும்ப அமைப்பில் தந்தையும் மகளும்" .கட்டுரையை வாசிக்க ...

சக 

On Sat, Mar 18, 2023 at 9:34 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
On Sat, 18 Mar 2023, 7:45 pm Pitchaimuthu, <pitchaim...@gmail.com> wrote:
நலமாக இருக்கிறேன். சரி தாங்கள் டிசம்பர் எனும் சொல் பற்றி கூறவில்லையே!

நான் நேரடியாக டிசம்பர் பற்றிக் கூறவில்லையே தவிர; மொழிகளுக்கு உரிய பொதுவான தன்மை பற்றிக் கூறினேன். 
அது சரிவரப் புரிந்தால் உங்களுக்கு பதில் கிடைத்துவிடும். அதாவது... 

'இப்படித்தான் தொடங்க வேண்டும்' என்று விதித்து மொழியை வளர்க்க இயலாது; இப்படிப் பயின்று வருகிறது என இலக்கண நூலார் விதந்து கூறியுள்ளனர். அது காலப்போக்கில் மாறும் என்று அவர்களுக்கும் தெரியும். மாற்றமே கூடாது என விதித்து இருந்தால் தொல்காப்பியர் காலத் தமிழைத் தானே நாம் இன்று வரை பேசியும் எழுதியும் இருக்க வேண்டும். 

விமர்சனங்கள் இல்லையென்றால்; உலகில் பரிமாற்றம் வளர்ச்சி இல்லையல்லவா! 

பரிணாமமோ வளர்ச்சியோ விமர்சனத்திற்காகக் காத்து நிற்பதில்லை. அது இயற்கையாக நிகழக் கூடியது. அதற்காக விமர்சனம் கூடாது என்று நான் சொல்லவில்லை. 

அறிவன் கட்டுரை படித்தேன் பாதியளவு படிக்க முடிந்தது.

நன்றி. மீதியும் படித்துப் பாருங்கள்.

சக  

On Friday, 17 March 2023, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நலமா இசையினியன்? 

இலக்கணத்தை விதித்து எந்த ஒரு மொழியையும் உருவாக்க இயலாது. 

மொழி எப்படி இருக்கிறது என்று மட்டுமே இலக்கணம் வகுக்க முடியும்.

அதுவும் காலந்தோறும் மாறும். 

இந்த அடிப்படை உண்மையும் நடைமுறையும் தமிழைப் பாடமாகத் தேர்ந்து படிக்கும் போது புரிந்தது. 

விமர்சனம் எல்லோரும் செய்யலாம். 

சக 

On Fri, 17 Mar 2023, 10:20 am pitchaim...@gmail.com, <pitchaim...@gmail.com> wrote:
Inline image

தமிழ்ப் பேரவை ஆய்விதழ்; தமிழ் ஆய்விதழ் எனப் பெயர் உள்ளது; ஆனால் December எனும் திசைச் சொல்லை தமிழ்ப்படுத்தினால் அதை "டிசம்பர்" என்பதற்குப் பதில் "திசம்பர்" என்றுதான் எழுத வேண்டும். அதுவே தமிழ் ஆய்வின் உச்சமாக இருக்கும்.

டிசம்பர் என்னும் சொல் தமிழ்ச் சொற்கள் பிறப்பின்படி தவறு என்று தெரிந்தும் தமிழ்நாடு அரசு மட்டுமல்ல; உலகில் உள்ள மற்ற தமிழ்சார் அரசுகள் மற்றும் தமிழ் அமைப்புகளும் டிசம்பர் என்னும் சொல்லையே பயன்படுத்துகின்றனர்.

டிசம்பர் எனும் சொல், தமிழ் சொற்கள் உருவாக்கல் இலக்கணப்படி தவறான சொல்.



On Friday, 17 March, 2023 at 08:29:51 am IST, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:



நேற்று தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 
"தொகையிலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் அறிவன் பெறும் இடம்". கட்டுரையை வாசிக்க:


சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 18, 2023, 3:42:46 PM4/18/23
to mintamil
இன்று 'இனம்' பன்னாட்டுக் காலாண்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை:   "குறுந்தொகை 156 ஆவது பாடல் - ஓர் ஆழ் நோக்கு" . 

kanmani tamil

unread,
Jul 12, 2023, 1:56:05 PM7/12/23
to mintamil
இன்று உலகத்தமிழ் காலாண்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக் கட்டுரை "பாரதியார் பாடிய குயிலும் இன்றைய திரைப்படப் பாடல்களின் குயிலும்" கட்டுரையை வாசிக்க:  http://ulagatamil.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-2023/  ப.68-73 

kanmani tamil

unread,
Sep 13, 2023, 5:49:15 AM9/13/23
to mintamil
இனம் பன்னாட்டு இணையத் தமிழ் ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக் கட்டுரை- தொற்று நச்சில் உள்ளிருப்புக் காலத்தில் உருவாகி அங்கும் இங்கும் என இடம் மாறி மீண்டும்... மீண்டும்... மீண்டும் என் மடி(க் கணினி)யில் வைத்து செதுக்கிச் செதுக்கிச்  சீர்படுத்திய கட்டுரை. என்னை வழிநடத்திய வல்லுநர்களுக்கு  (யாரோ? எவரோ? ஊரும் தெரியாது; பேரும் தெரியாது.)  நன்றி.  

"திருமுருகாற்றுப்படையில் வேலன் வெறியாட்டும் நகர் வழிபாடும் உணர்த்தும் சமூகப் பிரிவினைகள்"


கட்டுரையை வாசிக்க : https://inamtamil.com/journal/issue/view/24


சக 

kanmani tamil

unread,
Oct 1, 2023, 12:34:01 AM10/1/23
to mintamil
  இனம் பன்னாட்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை  

"கலித்தொகை-74ன் உள்ளுறை ஓர் ஆழமான பார்வை" ப.30-32 


கட்டுரையை வாசிக்க: https://inamtamil.com/journal/article/view/233


சக 

kanmani tamil

unread,
Oct 14, 2023, 10:02:29 PM10/14/23
to mintamil
சென்ற மாதம் தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "

பண்டைத் தமிழகக் குடியிருப்புகள் உணர்த்தும் சமூகப் பிரிவுகள்" ப.51-58


கட்டுரைக்கு உரிய சுட்டி : https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/46175
 

சக 

kanmani tamil

unread,
Oct 15, 2023, 11:52:55 AM10/15/23
to mintamil
இன்று உலகத்தமிழ் காலாண்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "கூற்றிற்கு உரியோர் அல்லா அகஇலக்கியப் பாத்திரங்கள்". கட்டுரைக்கு உரிய சுட்டி: https://ulagatamil.in/wp-content/uploads/2023/10/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-22.pdf 
ப.23-32

சக 

kanmani tamil

unread,
Mar 5, 2024, 12:01:42 AM3/5/24
to mintamil

இன்று உலகத்தமிழ் காலாண்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "ஒலி அடங்கிப் பேசும் அகப்ோத்திரங்கள்"  கட்டுரையை வாசிக்க:
சக 

kanmani tamil

unread,
May 29, 2024, 6:15:14 AM5/29/24
to mintamil
இன்று 'இனம்' பன்னாட்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை "முரவுவாய்க் குழிசி முரியடுப்பு" - கட்டுரையை வாசிக்க ...  


சக 

kanmani tamil

unread,
Aug 19, 2024, 12:07:54 AM8/19/24
to mintamil
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, Aug 19, 2024 at 9:26 AM
Subject: Re: [வல்லமை] Re: எனது ஆய்வுக்கட்டுரையின் பதிப்பு
To: vallamai <vall...@googlegroups.com>


ஆஅய் எயினன் பற்றிப் 'பறவைக் காதலன்' என்ற பெயரில் ஒரு இலக்கியக் கட்டுரை எழுதத் தொடங்கினேன். ஆனால் கட்டுரை வளர வளர அந்த வரலாற்று நிகழ்வின் கனம் புரிந்தது. ஒரு முழு ஆய்வுக்கட்டுரையாக உருப்பெறும் தகுதி அக்கட்டுரைக்கு இருந்தது. பின்னர் என் முயற்சி அதை ஆய்வுக்கட்டுரை ஆக்கும் போக்கில் திரும்பியது. இன்று 'ஆஅய் எயினன் எனும் அதிகன்' என்ற தலைப்பிலான என் ஆய்வுக்கட்டுரை 'இனம்' பன்னாட்டு மின்ஆய்விதழில் வெளியாகி உள்ளது. கட்டுரையை வாசிக்க:        https://zenodo.org/records/13294296

சக 

On Thu, May 30, 2024 at 8:25 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'தொல்லை' எனும் பெயரடை முரவுவாய்க் குழிசி முரியடுப்பிற்கு உரியது; ஏனெனில் அது தான் பண்டு தொட்டுத் திணைமாந்தர் பயன்படுத்திய அடுப்பு. கோட்டடுப்பு வந்தேறிய வேளாளர் கொண்டு வந்தது.

சக 

On Thu, 30 May 2024, 8:15 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
'பண்டைத் தமிழர் பயன்படுத்திய முரிகளும் அடுப்புகளும்' என்ற கட்டுரை தயாராக உள்ளது. அடுத்து கட்டுரை அனுப்ப வேண்டிய ஆய்விதழுக்கு அனுப்புவேன். 

மேலே குறிப்பிட்ட 'முரவுவாய்க் குழிசி முரியடுப்பு' தொடர்பான பாடலில் எயினர் புழுக்குகின்றனர்; அதாவது வேக வைக்கின்றனர். பின்னே எப்படி அது kebab ஆகும்?!!!
சக

On Thu, 30 May 2024, 5:19 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
கோட்டடுப்பு, கொடியடுப்பு, அனலடுப்பு (baking oven), கையடுப்பு (portable oven)... போல முரியடுப்பு (skewer-oven). இதில் முன்னரே வாடூன் செய்கின்றனர். புலால் சோறு சமைக்கும் *முன்னரே* (= தொல்லை) செய்த கபாப் (வாடூன்) எனத் தெளிவாகப் பெரும்பாண். குறிப்பிட்டுள்ளது.

தொல்லை
முரவு வாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி,
வாராது அட்ட வாடு ஊன்

அந்த முன்பே அட்டு தயாராய் இருந்த வாடூனை, குற்றிய புல்லரிசியுடன் கிணற்று நீரை ஊற்றிப் புலாச்சோறு சமைத்தனர்.

பலவகையான கபாப்களை மீண்டும் சமைப்பது உண்டு. உ-ம்:

ஒருவகையில், கருவாட்டு ஊன் கொண்டு, கருவாட்டுக் குழம்பு வைப்பது போல.

முரவுவாய்க் குழிசி சரியான விளக்கம் தந்துள்ளீர்கள். குழிசி - குழியின் விளிம்பில் கற்களை அடுக்கியது. முரவு வாய் இது. வண்டிச் சக்கர ஆரங்களைப் பொருத்த குழியும், பக்கலில் மேடும் உள்ள, வண்டிச் சக்கரத்தின் கும்பம் குழிசி எனப்படுவது இதனால் தான்.
ஆதியில் தோன்றிய முரவுவாய் முரியடுப்பு, அழகாக ஆகும் நிலை:
தொல்லை என்ற சொல்லும், முரியடுப்பு என்ற சொல்லும் பற்றிய வருணனை உங்கள் கட்டுரையில் காணோம். அதைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதலாம். 

NG


On Wed, May 29, 2024 at 8:48 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
உங்கள் கருத்தோடு நான் முரண்படுவதைத் தான் என் கட்டுரை காட்டுகிறது. 

நீங்கள் கட்டுரையை சரியாக வாசித்தீர்களா?

சக 

On Wed, 29 May 2024, 5:56 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
சிறப்பு.

விரிவாக, முரவு வாய்க் குழிசி பற்றி எழுதியுள்ளேன். 
முரி = skewer. முரியடுப்பு = skewer-oven. இதில் வாடூன் (Kabab) அடுவர்.

முரி is a technical word for skewer, wooden stick:
https://en.wikipedia.org/wiki/Skewer
முரி - தாவரத்தினின்றும் முரித்ததால்.
https://en.wikipedia.org/wiki/Skewer#/media/File:Wooden_skewers.jpg

முரிகளை வைத்து வாடூன் வாட்ட, முரவு வாய் தேவை. இயற்கையான குழிகளில் விறகை இடுவர். குழிசியின் மேல்புற விளிம்பு கற்களால் அடுக்கப்பட்டிருக்கும். அதில், முரிகளைச் செருகுவர். முரிகளில் ஊன் கோத்திருக்கும். அவ்வகை அடுப்பின் கீழே விறகை எரிப்பர். உலகம் முழுதும், தசையூனை இவ்வாறு அடும் முரியடுப்புகள் கிடைக்கின்றன. இதன் வளர்ச்சி மிக அழகான முரியடுப்பு ஒன்றும் கொடுத்திருந்தேன். தேடினால் கிடைக்கும்.

வாடூன் என இருவகைச் சூடுகளைப் பற்றிப்பாடல்கள் இருக்கின்றன
வாடூன் (1) Kebab (2) Jerky:
https://groups.google.com/g/vallamai/c/O_s4Jn_lxOI/m/DyMlez5HBgAJ
கபாப் செய்முறை:
         முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

முரியடுப்பில் அடுகிற வாடூன் (= Kabab cooked in the skewer-oven) :: பெரும்பாணாற்றுப்படையில் வருணனை




On Wed, May 29, 2024 at 5:15 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இன்று 'இனம்' பன்னாட்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை "முரவுவாய்க் குழிசி முரியடுப்பு" - கட்டுரையை வாசிக்க ...  


சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeroT4w%3DEA1CraHWXx%3DitfYpnYswMnyctwQKf6Houov%3DA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctWiwFS8NdmPF%3D9aLxAq0kyyVayZQwag8%2BqJwGu3dUrOw%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcJh2vCot829f5nLnGx5zPQO8WkUMBezr7-_OicaA6gHA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Nov 7, 2024, 10:55:17 AM11/7/24
to mintamil
இன்று பதிப்புப் பெற்று இருக்கும் என் ஆய்வுக் கட்டுரை "பண்டைத் தமிழர் உணவு முறையில் ஊன்சோறு (Exploring Uunchoru: An Analysis of Ancient Tamil Cuisine)" கட்டுரையை வாசிக்க ...

சக 

Dr. Mrs. S. Sridas

unread,
Nov 10, 2024, 12:10:06 AM11/10/24
to mint...@googlegroups.com
நன்றி. 
அன்புடன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--
Dr. Mrs. S. Sridas

kanmani tamil

unread,
Dec 27, 2024, 11:29:44 PM12/27/24
to mintamil
இனம் பன்னாட்டு மின்ஆய்விதழில் (vol.10 No.40: November 2024) வெளியாகியிருக்கும் என் கட்டுரை  "பண்டைத் தமிழகப் போர் நடைமுறைகளும் தொடர் விளைவுகளும்" கட்டுரையை வாசிக்க:

On Sun, Nov 10, 2024 at 1:24 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
🙏🙏🙏

Sk

kanmani tamil

unread,
Dec 27, 2024, 11:33:36 PM12/27/24
to mintamil

kanmani tamil

unread,
Mar 2, 2025, 12:53:19 AMMar 2
to mintamil
இனம் பன்னாட்டு மின்ஆய்விதழில்  Vol. 10 No. 41 (2025)  வெளியாகியிருக்கும் என் கட்டுரை 

மாங்குடி மருதனார் பாடிய மோதகம் 

கட்டுரையைவாசிக்க:  https://www.inamtamil.com/index.php/journalhttps://zenodo.org/records/14946470

இது இரண்டாயிரம் ஆண்டுகளாக நாம் ரசித்துச் சமைத்து ருசித்து உண்ணும் கொழுக்கட்டை பற்றியது. மாற்றுக் கருத்தாளர் இருப்பின்... மறுப்புக் கட்டுரைகளை ஆரோக்கியமான மனதோடு ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்.
சக 

kanmani tamil

unread,
Mar 20, 2025, 8:37:48 AMMar 20
to mintamil
இன்று UAIJAHSS ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் article entitled “Social Divisions of Early Tamilnadu (பண்டைத் தமிழகத்துச் சமூகப் பிரிவுகள்)”. It was successfully published online and is available in the current issue. Kindly visit the link:  https://uaipublisher.com/uaijahss-vol-2-issue-3-2025/
Sk

kanmani tamil

unread,
May 15, 2025, 12:38:11 AMMay 15
to mintamil
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Thu, 15 May 2025, 9:49 am
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] Re: எனது ஆய்வுக்கட்டுரையின் பதிப்பு
To: vallamai <vall...@googlegroups.com>


தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் வெளியாகி இருக்கும் எனது அடுத்த கட்டுரை "கிளையும் ஆயமும் தொடர்புறும் பால்கள்" - கட்டுரையை வாசிக்க...

https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/60211 - 

ப.86-93 



On Thu, Mar 27, 2025 at 4:44 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
Thank you 

Sk


---------- Forwarded message ---------
From: V N <velmani....@gmail.com>
Date: Thu, 27 Mar 2025, 4:23 pm
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] Re: எனது ஆய்வுக்கட்டுரையின் பதிப்பு
To: <kanmani...@gmail.com>


Dear M'am,

 Congrats. Keep up the good work.

Thanks.
Velmani Natarajan

kanmani tamil

unread,
May 23, 2025, 6:22:41 AMMay 23
to mintamil
இன்று இனம் மின் ஆய்விதழில் (Vol. 11 No. 42 (2025): மலர் : 11, இதழ் : 42 மே (May) 2025) வெளியாகி இருக்கும் என் ஆய்வுக் கட்டுரை " கோமான் புல்லி". (ப.19-27) கட்டுரையை வாசிக்க ...

சக 

On Fri, May 16, 2025 at 10:33 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
மாறுபட்ட கோணம்...
நன்றி 
சக 

On Fri, 16 May 2025, 9:07 am seshadri sridharan, <ssesh...@gmail.com> wrote:
On Thu, 15 May 2025 at 09:49, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் வெளியாகி இருக்கும் எனது அடுத்த கட்டுரை "கிளையும் ஆயமும் தொடர்புறும் பால்கள்" - கட்டுரையை வாசிக்க...

https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/60211 - 

ப.86-93 



குலை > கிலை > கிளை என்று கொத்தை குறிப்பதாக உள்ளது.

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages