
அனைவருக்கும் வணக்கம்,
நமது வள்ளுவர் வள்ளலார் வட்டம் செயலி வரிசையில் நான்காவதாகத் தட்டச்சம் எனும் ஆண்ட்ராய்டு செயலியை இன்று வெளியிடுகிறோம். நண்பர்கள் கூகுள் பிளேவில் இதனைத் தேடி, தங்கள் கைபேசியில் நிறுவிப் பயன் பெற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் போல உங்கள் ஆதரவு இதற்கும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
https://play.google.com/store/apps/details?id=com.valluvarvallalarvattam.tamiltypinggameஇது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட செயலி, இது குழந்தைகள், கைபேசி, கைகணினி போன்ற டிஜிட்டல் கருவிகளில் தமிழில் எழுதப் பயிற்சி பெறும் செயலி.
இதில் திரையில் ஒரு திருக்குறள் காட்டப்படும் அதனை அப்படியே எழுத வேண்டும். எங்களின் நோக்கம் தட்டச்சுப் பலகையில் எந்தெந்த எழுத்து எங்கெங்கு இருக்கிறது என்பது குழந்தைகளுக்கு நன்கு தெரிய வேண்டும். பிழை இல்லாமல் எழுதவும், வேகமாக எழுதவும், பயிற்சி பெற இது உதவும்.
எழுதியது சரியா தவறா என்று சொல்லும். மேலும் எழுத எடுத்துக் கொண்ட நேரம், சரியானவை எண்ணிக்கை பிழையானவை எண்ணிக்கை போன்ற தன்னிலை தகவலைக் காட்டும்.
குழந்தையின் எழுதும் வேகத்தையும், எழுதும் திறனையும் இந்த செயலி மூலம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அறிந்துக் கொள்ளலாம். பள்ளிகளும், அயல்நாட்டு தமிழர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்குப் எழுதும் திறனை மேம்படுத்தவே, இந்த முயற்சி, இதனைத் தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறோம். இது அனைவருக்கும் பயன்பட, அனைவரிடம் கொண்டு செல்ல வேண்டியது, உங்கள் அனைவரின் பொறுப்பு.
விரும்புக! பிடித்திருந்தால் பகிர்க!
நன்றி,
இவண்
இங்கரசால் நார்வே & அர்ச்சித்
வள்ளுவர் வள்ளலார் வட்டம்
Thattacham Tamilapps
பகிர்க!