ரீஷான் ஷெரீஃப் - உடல் நலம்

7 views
Skip to first unread message

chithan yugamayini

unread,
May 5, 2009, 5:53:13 AM5/5/09
to மின்தமிழ்
நம் அன்புச்சகோதரர் ரிஷான் ஷெரீஃப் மிகவும் மோசமான உடல் நிலையில் சில
நாட்களாக மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் வந்து
கொண்டிருக்கின்றன.
ஏனைய குழுமங்களில் இது செய்தியாகக் கசிந்து கொண்டிருக்கிறது.யாருக்காவது
இது குறித்து தெரியுமா?
சித்தன்

Sri Sritharan

unread,
May 5, 2009, 6:45:16 AM5/5/09
to minT...@googlegroups.com
நண்பர் ரிஷான் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
சிறீதரன்

துரை.ந.உ

unread,
May 5, 2009, 7:16:01 AM5/5/09
to minT...@googlegroups.com
இது தான் தற்போதைய நிலவரம்
 
கீழே சகோதரியின் மடல்
 
 
/////
 
இன்று பகல் நான் தம்பி ரிஷானுடன் கதைத்தேன்.

அந்தக் கணம் தொட்டு இந்த இரவு வரைக்கும் என்னால் சகஜ நிலைக்குத்
திரும்பவே முடியவில்லை.

அவர் முன்னர் கதைத்த சந்தர்ப்பத்தில் அண்ணாவிடம் முழுப் பொய்யையும்
என்னிடம் பாதி உண்மையையும் கூறியிருக்கிறார்.

தற்போது ரிஷான் வைத்தியசாலையில் மோசமான உடல் நிலையில்
காணப்படுகிறார்.அவரது குரல் கூட மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
புன்னகையோடு கதைக்கும் பழைய ரிஷான் அல்ல இன்று  என்னுடன் கதைத்தது.

அவரது உடலில் இன்னும் நச்சுக் காணப்படுவதாகவும் இது வரைக்கும் எந்த
உணவும் உட்கொள்ளவில்லையென்றும் கூறினார்.

அவர் பணிபுரியும் நிறுவனதுக்குச் சொந்தமான குடும்ப மருத்துவ மனையில்
சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

அன்புடனில் அனைவரையும் நினைவு படுத்தியதாகவும் கூறச் சொன்னார்.

ரிஷானைப் பற்றிக் கதையெடுக்கும் போதே எனக்கு அழுகை வருகிறது. ஆபத்தான
நிலையிலிருந்து இன்னும் ரிஷான் மீளவில்லை என நினைக்கிறேன். நாங்கள்
கவலைப் படுவோம் என்பதற்காக உண்மையை மறைக்கிறார்.

அன்பு உள்ளங்கள் அனைவரும் ரிஷானுக்காகக் கூட்டுப் பிரார்த்தனையில்
ஈடுபடுங்கள்.  எங்கள் தம்பி சீக்கிரமே குணமடைந்து வந்து விடட்டும்.

அன்புடன்
பஹீமாஜஹான்
                                                                      ///////
 
கடவுள் இருக்கிறார்

 
ஹைகூ     :http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    :http://duraipathivukal.blogspot.com
கனவுகள்    :http://duraikanavukal.blogspot.com

annamalai sugumaran

unread,
May 5, 2009, 7:28:27 AM5/5/09
to minT...@googlegroups.com

நண்பர் ரிஷான் விரைவில் இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்

அன்புடன்
ஏ சுகுமாரன்


2009/5/5 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

இது தான் தற்போதைய நிலவரம்
 

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !

நா.கண்ணன்

unread,
May 5, 2009, 7:33:57 AM5/5/09
to மின்தமிழ்
அடக்கடவுளே!
என்ன இது!
நண்பர் உடல் நலம் பெற நாம் எல்லோரும் இறைவனிடம் வேண்டுவோம்!

நா.கண்ணன்

Tthamizth Tthenee

unread,
May 5, 2009, 7:58:29 AM5/5/09
to minT...@googlegroups.com
அன்பு நண்பர் சகோதரர் ரிஷான் ஷெரீஃப் அவர்கள்  கூடிய விரைவில் குணமாகி அவர்களின் குடும்பத்தாரின் மகிழ்ச்சிக்கு காரணமாகி
அவருடைய குடும்பத்தாருடன் இணைந்து  பலகாலம் சுகமாக வாழ மனப்பூர்வமான   ப்ரார்த்தனையை  இறைவன் பாத கமலத்தில் இட்டு தொழுகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

meena muthu

unread,
May 5, 2009, 10:18:52 AM5/5/09
to minT...@googlegroups.com
இன்று இந்திய நேரம் இரவு 9 க்கு எல்லோரும் கூட்டுப்பிரார்த்தனை செய்வதாக உள்ளோம் இங்கும் எல்லோரும் அதில் கலந்து ரிஷானுக்காக  இறையருளை வேண்டுவோம். நன்றி.

மீனா

2009/5/5 chithan yugamayini <chitha...@yahoo.co.in>
Reply all
Reply to author
Forward
0 new messages