(வெருளி நோய்கள் 911-915: தொடர்ச்சி)
கைப்பந்து குறித்த வரம்பற்ற பேரச்சம் கைப்பந்து வெருளி.
Volley என்றால் தட்டுதல் அல்லது அடித்தல் அல்லது தாக்குதல் எனப்பொருள்கள். Volleyball என்னும் பொழுது பந்து கீழே விழும் முன்னர் அதனைக் கையால் அடித்தல் என்று பொருளாகிறது.
00
தாங்கள் கைவிடப்படுவோமோ என்ற பேரச்சம் கைவிடல் வெருளி.
புறக்கணிக்கப்படுபவர்களுக்குக் கைவிடப்படுகிறோம் என்ற அச்ச உணர்வு பெருகும். பிள்ளைகளால் கை விடப்படுவோம், வளர்ப்பவர்களால் கை விடப்படுவோம், வாழ்க்கைத் துணைவரால் கை விடப்படுவோம் என்றெல்லாம் அளவு கடந்து கவலைப்படுவோர் உள்ளனர். இதனால் எதிர்காலம் குறித்த அளவுகடந்த பேரச்சம் எழும்.
‘எங்க ஊர் இராசா’ திரைப்படத்தில் கண்ணதாசனின் “யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க “ எனத் தொடங்கும் பாடலில்
7
என வரிகள் வரும். இவ்வரிகள் மட்டுமல்ல, பாடல் முழுமையுமே பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றாரின் அழுகுரல்தான். என்றாலும் இப்பாடலில் என் காலம் வெல்லும் என்னும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறில்லாமல் எதிர்காலம் வெறுமையாகிப் போனதாக எண்ணிக் கவலைப்படுவோர் உள்ளனர்.
பாதகாணிக்கை திரைப்படத்தில் கண்ணதாசனின்
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி
என்னும் பாடல் வரும். காதலனால் கைவிடப்படும் காதலியின் அழுகுரல் இது. இதனால் காதல் வெருளியும் வரும்.
solvero என்னும் கிரேக்கச் சொல்லிற்கு விட்டுவிடல் என்று பொருள்.
00
பெண்களின் மார்பு தொடர்பான தேவையற்ற பேரச்சம் கொங்கை வெருளி
பெண்களின் மார்பு, பிறப்பு உறுப்பு முதலியவற்றைப்பற்றிய சிந்தனை, அவற்றின் படங்களை அல்லது காணுரைகளைப் பார்த்தல், தொடர்பான செய்திகளைப் படித்தல் அல்லது கேட்டல் என இவை தொடர்பான நேர்வுகளில் ஏற்படும் தேவையற்ற வெறுப்பு அல்லது அளவுகடந்த பேரச்சம் கொங்கை வெருளி எனப்படும்.
பிறப்புறுப்பு தொடர்பான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் என்ற பொருளில் பிறப்புறுப்பு வெருளி என்றும் குறிப்பிடுகின்றனர். நானும் அவ்வாறு முன்னர்க் குறித்திருந்தேன்.
பெண்ணுறுப்பு வெருளி(Eurotophobia), ஆணுறுப்பு வெருளி(Phallophobia / Ithyphallophobia), விறைப்பு வெருளி(Medorthophobia) போன்றதே இதுவும்.
பிறப்புறுப்பு வெருளி என்பது பொதுவாகவும் குறிப்பாகப் பெண்ணுறுப்பையும் குறிப்பது; பெண்ணுறுப்பு வெருளி என்பது பெண்ணின் கருவாயைமட்டும் குறிப்பது என்கின்றனர். பெண்ணின் பிறப்பு உறுப்பு மட்டுமல்லாமல் கொங்கைகளைப் பார்த்தாலும் படத்தில் பார்த்தாலும் நினைத்தாலும் ஏற்படும் பேரச்சத்தையும் குறிப்பது. பெண்ணுறுப்பு வெருளி எனத் தனியாகக் குறிப்பதால் நாம் இதனை வேறுபடுத்தக் கொங்கை வெருளி எனலாம்.
சிக்குநாறும் கூந்தலையே செழுமை மேகமாய்
செப்புவார்கள் கொங்கைதனை செப்புக் கொப்பதாய்
நெக்கு நெக்கு உருகி பெண்ணை நெஞ்சில் நினைப்பார்.
நிமலனை நினையார் என்று ஆடு பாம்பே
என்னும் பாடலில் பாம்பாட்டி சித்தர் பெண்மார்புப்பகுதி மீதான தன் வெறுப்பைக் காட்டியிருப்பார். இவர் மட்டுமல்ல பட்டினத்தார் முதலான பல சித்தர்களும் இவ்வாறு பாடி உள்ளனர்.
பெண்ணாகி வந்தொரு மாயபிசாசம் பிடித்திட்டென்னை
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கி கடிதடத்து
புண்ணாங் குழியிடைத் தள்ளி என் போத பொருள்பறிக்க
எண்ணாதுணை மறந்தேன் இறைவா கசசி ஏகம்பனே
என்னும் பட்டினத்தார் பாடல் பெண்ணுறுப்பு வெருளியை உணர்த்துகிறது.
kolpo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கருவாய்.
00
கொசுக்கள் குறித்த வரம்பு கடந்த பேரச்சம் கொசு வெருளி.
பூச்சி வெருளி(entomophobia) உள்ளவர்களுக்குக் கொசு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
என்புமுறிவுக்காய்ச்சல், முடக்குக் காய்ச்சல், யானைக்கால் முதலான பல்வகை நோய்கள் கொசு மூலம் பரவுவதால், கொசுக்கள் மீது வெருளி உண்டாகிறது.
anopheline, anophelin என்றால் காெசு எனப் பொருள். கொசுக்களில ஒரு வகை இனத்தையும் குறிக்கிறது.
000
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5