தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள்

133 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 14, 2024, 7:03:44 PMMay 14
to மின்தமிழ்
பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் (தொகுதி 1): நூலறிமுகம்

— அருள் மெர்வின்



சங்க இலக்கியங்கள் பற்றி வெளிவரும் புத்தகங்களைக் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கடமையாக வாங்கி வாசித்துவருகிறேன். பொதுவாக இந்த புத்தகங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தவை சங்க இலக்கியங்கள் பற்றி எப்படியெல்லாம் எழுதக்கூடாது என்பதைத்தான்.

உதாரணமாக நான்கு ஆண்டுகள் முன்பு வாங்கிய ‘பத்துப்பாட்டு - மூலமும் விளக்கமும்’ என்ற ஒரு புத்தகம். அதை வெளியிட்ட பதிப்பகத்தார் தங்கள் முன்னுரையில், “பழந்தமிழர் பெருமையைக் கூறும் இப்பாடல்களுக்குப் பலர் உரை வகுத்துள்ளனர். அந்த உரைகள் பாமரரும் படித்துணரும் வகையில் இல்லை. எனவே மிகச்சிறந்த முறையில் ஒரு தெளிவுரை வழங்கியுள்ளார் திரு. பத்துப்பாடகர்* அவர்கள் என்று எழுதியிருந்தார்கள். (*பெயர் மாற்றப்பட்டுள்ளது.) ஆகா, நமக்கேற்ற புத்தகம் என்று வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.

பத்துப்பாட்டில் முதல் பாடலான திருமுருகாற்றுப்படையில் வரும் ஒரு வரி: “வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி…”. இதற்கு அந்த திரு. பத்துப்பாடகர் பாமரரும் படித்துணரும் வகையில் எழுதியிருந்த விளக்கம், “அருவிகள் கொடிபோல் அசைந்தாடி வெள்ளைத்துணி விரித்துவிட்டது போலக் கீழே விழும். விழுகிற அருவிகள், வருகிற வழியில் உள்ள அகில் கட்டைகளை அள்ளிக் கொண்டும், சந்தன மரங்களை வேரோடு சாய்த்துக் கொண்டும்…”. பின்னால் அருஞ்சொற்பொருள் என்று சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்திருந்தார். மேலே உள்ள வரியிலுள்ள எந்த வார்த்தைக்கும் அதில் அர்த்தம் இல்லை. இப்போது இவர் எழுதியிருக்கும் விளக்கத்தையும் திருமுருகாற்றுப்படையில் வரும் அந்த வரிகளையும் எப்படித் தொடர்புப்படுத்துவது என்று தெரியாமல் டெனட் படம் பார்த்தது போல இன்னுமோர் ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்று. ‘வெள்ளைத் துணி’ என்கிறார். பாடலில் ‘துகில்’ வருகிறது, ஆனால் ‘வெள்ளை’ எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ‘அகில் சுமந்து’ என்று பாடலில் வருகிறது, இவர் ‘அகில் கட்டைகளை அள்ளிக் கொண்டு’ என்று விளக்கம் எழுதியிருக்கிறார். ‘சுமந்து’ என்றால் ‘அள்ளிக் கொண்டு’ என்று சங்ககாலத்தில் ஒருவேளை அர்த்தமோ என்று யோசிக்கவைத்தார். இப்படியே அந்த விளக்கவுரைப் புத்தகத்தை வாசிக்க வாசிக்கத்தான் தெரிந்தது பத்துப்பாடல் ஒரு ட்ராக்கில் செல்கிறது, திரு. பத்துப்பாடகர் பாமரர்தானே வாசிக்கிறார்கள் என்று இன்னொரு ட்ராக்கில் தனது விளக்கத்தைப் பிடித்துக் கொண்டு வண்டியைத் தன்போக்கில் ஓட்டியிருக்கிறார் என்று.  

சங்க இலக்கியத்தின் தெளிவுரை, விளக்கவுரை என்று வெளிவரும் பெரும்பாலான புத்தகங்களை வாங்கினால் முன்னுரை, அணிந்துரைகளில் ‘பாமரருக்கான விளக்கம், இளைஞர்களுக்கான விளக்கம், எளிய விளக்கம், அரிய விளக்கம்…’ என்று கலர்கலராக ட்ரெய்லரை ஓட விடுவார்கள். நம்பி வாங்கி புத்தகத்தின் உள்ளே போய் உட்கார்ந்த பிறகுதான் தெரியும் அதற்குப் பதிலாக ஒரு கிலோ நியூஸ்பேப்பரையோ, காய்கறியையோ வாங்கி வந்திருந்தாலாவது வீட்டுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று. இதில் இன்னொரு கோஷ்டி இருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லி கோனார் தமிழ் உரை போல எழுதுவார்கள். ‘வெளிற்று’ என்ற செய்யுள் வார்த்தைக்கு ‘சிறாயின்’ என்று அர்த்தம் எழுதியிருப்பார்கள். நாம் படமும் புரியாமல், சப்டைட்டிலும் புரியாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்று ஓரளவு ஆர்வம் உள்ளவர்களையும் ஓட ஓட விரட்டிவிடுபவை இப்படிப்பட்ட விளக்கவுரைப் புத்தகங்கள்தான். இவர்கள் செய்து வைத்திருக்கும் அட்டூழியத்தால் புத்தகக் கடைகளில் சென்று சங்க இலக்கியங்கள் பற்றிய புத்தகங்கள் எங்கே இருக்கின்றன என்று கேட்டால் கடைக்காரர்களே நம்மை மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் கடைக்குள்ளே அனுமதிக்கிறார்கள்.

நான் மேலே எழுதியிருப்பவை நகைப்பூட்டினாலும் உண்மையிலேயே பலமுறை மனம் நொந்து போயிருக்கிறேன். யாராவது சங்க இலக்கியங்களின் அடி ஆழம் வரை சென்று புரிந்து கொண்டு அதே சமயம் சங்க இலக்கியங்களே வாசிக்காதவர்களுக்கும் அவற்றைப் புரியும்படி, ரசிக்கும்படி ஏன் எழுதமாட்டேன் என்கிறார்கள் என்று மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். எவ்வளவு நொந்து போனேன் என்றால் இரண்டடி திருவள்ளுவருக்குப் பிறந்த பையன்தான் நாலடியாராக இருப்பாரோ என்ற அளவில் தமிழாராய்ச்சி செய்து கொண்டிருந்த நானே சங்க இலக்கியங்களுக்கு விளக்கம் எழுதி போஸ்ட் செய்யும் நிலைமைக்கு ஒருகாலத்தில் தள்ளப்பட்டுவிட்டேன். நல்ல வேளையாக என்னைப் போன்ற ஆய்வாளர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள அவசியமில்லாமல் சங்க இலக்கியங்களைக் காப்பாற்றியிருக்கிறார் ஒருவர்.

முனைவர் ப. பாண்டியராஜாவின் ‘பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள்’ தமிழ் மரபு அறக்கட்டளையால் இரண்டு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இதுவரை நான் வாசித்த (ஒருவேளை நீங்களும் வாசித்த) சங்க இலக்கியங்கள் பற்றிய புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம். பல பேர் சங்க இலக்கியங்கள் பற்றி எழுதியிருந்தாலும் இதுதான் முதல் முறை.

மேலே சொன்ன திருமுருகாற்றுப்படையில் வரும் அதே வரிக்கு வருவோம்: “வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி…”. இதை முனைவர் ப. பாண்டியராஜா எப்படி விளக்குகிறார் என்று பார்த்தால் நான் ஏன் இதை எழுதுகிறேன் என்பது புரியும்.

நீர் ஓடி வருகிறது. எப்படி ஓடி வருகிறது? வேறு வேறான பல துணிகள் போல நுடங்கி ஓடி வருகிறது (‘வேறுபல் துகிலின் நுடங்கி’). இந்த வரியைப் புரிந்து கொள்ள முதலில் ஆறு எப்படி ஓடுகிறது என்று ஒருமுறையாவது ஆற்றங்கரையில் உட்கார்த்து பார்க்க வேண்டும். அதன் பிறகு காற்றில் சுதந்திர தினத்திற்கு ஏற்றும் கொடி எப்படி பறக்கிறது என்பதையும் அண்ணாந்து பார்க்க வேண்டும். (துகில் என்றால் துணி அல்லது துணியால் செய்யப்பட்ட கொடி என்று எடுத்துக் கொள்வோம்.) இரண்டையும் பார்த்தால் தெரியும் இரண்டும் ஒரேமாதிரியான அசைவைக் கொண்டிருக்கின்றன என்று. ஓடும் ஆற்றின் அலையலையான தோற்றமும் பறக்கும் கொடியின் அலையலையான தோற்றமும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த அசைவுக்குப் பெயர்தான் ‘நுடங்குதல்’ என்கிறார் முனைவர் ப. பாண்டியராஜா. ஓடும் ஆற்றில் பல இடங்களில் இந்த நுடங்குதல் இருக்கும். வேறுபல் துகிலின் நுடங்கி…பல்வேறு துணிகள் நுடங்கி வருவது போல. இதைப் புத்தகத்தில் படத்துடன் விளக்கியிருக்கிறார். இதைவிட நம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்குவது அடுத்த சொற்றொடருக்கு அவர் அளிக்கும் விளக்கம்.

‘அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி…’ அகில் என்றால் அகில் மரம். இன்று நாம் அகர்பத்தி என்று வீட்டில் வாசனைக்காகக் கொளுத்தும் பத்தியின் முன் ஒட்டிக் கொண்டிருக்கும் ‘அகர்’ ‘அகில்’ என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்தது. அகில் மரத்திலிருந்து ஊதுவத்தி போன்று பல வாசனைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் அகிலை ஈகிள் என்றாக்கி Eagle Wood என்பார்கள். ‘ஆரம்’ என்றால் சந்தன மரம். இதுவும் வாசனைப் பொருட்கள் தயாரிக்க உதவும் மரம் என்று நெட்ஃப்ளிக்ஸில் வீரப்பன் ஆவணப்படம் பார்த்த எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இந்த இரண்டு வாசனை மரங்களைக் கொண்டுவருகிறது அந்த ஆறு. ஆனால் பாடல் வரியில் ‘அகில் சுமந்து’ என்றும், ‘ஆரம் முழுமுதல் உருட்டி’ என்றும் வருகிறது. அதாவது, ஆற்று நீரில் அகில் மரம் மிதந்து (சுமக்கப்பட்டு) வருகிறது. சந்தன மரம் உருட்டப்பட்டு வருகிறது. ஏன்? இங்கேதான் முனைவர் ப. பாண்டியராஜா தெறிக்க விடுகிறார்.

அகில மரம் அடர்த்தியில் (density) குறைவானது. அது எளிதாக நீரில் மிதக்கும். சந்தன மரம் அடர்த்தி அதிகமானது. அது முழுதாக மிதக்காது. நானும் உங்களைப் போல சந்தேகப்பட்டு கூகிளில் தேடிப்பார்த்தேன். அகில மரத்தின் அடர்த்தி சந்தன மரத்தின் அடர்த்திக்குப் பாதியானது. அகில் 400+ kg/m3, சந்தனம் 900+ kg/m3. சந்தன மரத்தின் அடர்த்தி நீரின் அடர்த்திக்கு அருகில் வந்துவிடுகிறது. அதாவது சந்தனக்கட்டையில் கப்பல் செய்து ஓட்டமுடியாது. அடிப்படை அறிவியல். அதனால் திருமுருகாற்றுப்படையை எழுதிய மதுரை கணக்காயனார் மகன் நக்கீரனார் அந்த ஆற்று நீர் அகில மரத்தைச் சுமந்து வருவதாகவும், சந்தன மரத்தை உருட்டி வருவதாகவும் எழுதியிருக்கிறார் (அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி…). இந்த ஒரு விளக்கத்திற்காகவே முனைவர் ப. பாண்டியராஜாவுக்கு மெரினா பீச்சில் சிலை வைத்தாக வேண்டும். இதெல்லாம் யோசிக்காமல், ‘அகில் கட்டைகளை அள்ளிக் கொண்டும், சந்தன மரங்களை வேரோடு சாய்த்துக் கொண்டும்..’ என்று விளக்கவுரை எழுதி உருட்டியிருக்கிறார்கள். இவர்களை சிறையில் பிடித்துப் போட வேண்டும் யுவர் ஆனர்.

நான் மேலே சொல்லியிருப்பது ‘பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் (தொகுதி 1)’ புத்தகத்தின் ஒரு பக்கத்தில் வரும் விஷயம்தான். இப்படி நூற்றுக்கணக்கான ஆச்சரிய விளக்கங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன. அதிலும் முனைவர் ப. பாண்டியராஜா அவர்களின் பார்வைகள் இதுவரை யாரும் பார்க்காதவை.     ஒரு பெண்ணின் முகம் எவ்வளவு  அழகாக இருக்கிறது என்பதற்கு ‘அது தாமரை போல இருக்கிறது’ என்று முகத்துக்குத் தாமரையை ஒப்பிட்டுக் கேள்விப் பட்டிருப்போம் (அரசியல் தாமரை அல்ல). பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் தாமரை எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதற்கு அது பெண்ணின் முகம் போல இருக்கிறது என்ற உவமை வருகிறது (திருமுகம் அவிழ்ந்த தெய்வத்தாமரை). இதெல்லாம் நம் சங்கப் புலவர்கள் அந்த காலத்திலேயே செய்த அல்டிமேட் பெண்ணியப் புரட்சி.

ஒட்டகம் எப்படி தூங்குகிறது என்பதையெல்லாம் கவனித்து அதே போன்ற வடிவில் மரக்கட்டைகள் கடற்கரையில் வந்து ஒதுங்கியிருப்பதாக எழுதியிருக்கிறார்கள். இரண்டும் ஒரே அறிவியல்தான். (‘ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்…’) இதை நமக்கு விளக்க ஒட்டகம் எப்படித் தூங்கும் என்பதை படம் போட்டுக் காண்பித்திருக்கிறார் இந்த புத்தகத்தில் முனைவர் ப. பாண்டியராஜா. இந்த புத்தகத்தை முதலில் வாசிப்பவர்களுக்கு பத்துப்பாட்டு எழுதிய புலவர்களை வியப்பதா, முனைவர் ப. பாண்டியராஜா அவர்களை வியப்பதா என்ற முதல் காதலின் குழப்பம் வருவது நிச்சயம்.

இரண்டாம் தொகுதி வாசித்துவிட்டு அதைப்பற்றியும் எழுதுகிறேன்.

dr pandiyaraja book patthupaddu 1.jpeg
நூல் கிடைக்குமிடம் :
https://wisdomkart.in/book/patthupaatil-sollovingal-1/
&
https://www.commonfolks.in/books/d/patthupaatil-solloviyangal-thoguthi1
பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் (தொகுதி 1)
விலை:  ₹250
ஆசிரியர்: முனைவர் ப. பாண்டியராஜா
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை
பதிப்பு:  2024

Pandiyaraja Paramasivam

unread,
May 14, 2024, 11:20:48 PMMay 14
to mint...@googlegroups.com
அருள் மெர்வினுக்கு மிக்க நன்றி. பத்துப்பாட்டை நான் படித்த போது எனக்கு ஏற்பட்ட வியப்பும் மகிழ்ச்சியும், என் புத்தகத்தைப் பற்றி அருள் மெர்வின்(என் பேரனின் பெயர் அருள் முகில் - பத்தாம் வகுப்பு முடிக்கிறான்) எழுதியிருப்பதைப் படித்த போது கிடைத்தன. பத்துப்பாட்டு என்ற சொல்லோவியத்தை நான் படம் எடுத்துக் காட்டும் அழகை இவர் படமெடுத்துக் காட்டியிருக்கும் நேர்த்தி என்னை வியக்கவைக்கிறது. மீண்டும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதைப் படித்து இங்கு எடுத்துப்போட்ட தேமொழி அம்மைக்கும் மிக்க நன்றி. 
எனக்குச் சிலையெல்லாம் வைக்கவேண்டாம். சங்க இலக்கியங்களின் அழகும் ஆழமும் இன்னும் பலரை இதுமூலம் சென்றடைந்தால் நான் பிறவிப்பயன் பெற்றவனாவேன்.
ப.பாண்டியராஜா


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/56d0afa8-09d0-46ac-bb54-0a1ff51bffa6n%40googlegroups.com.

K. Jeyapalan

unread,
May 16, 2024, 8:59:58 AMMay 16
to மின்தமிழ்
வணக்கம்,
 
இப் புத்தகங்களை வாங்க விரும்புகிறேன். 
வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்களில்லை என்று தெரிகிறது.
வேறு உண்டா? கிண்டிலில் (Kindle) கிடைக்குமா?
தயவு செய்து அறியத் தாருங்கள்.
அன்புடன்
செயபாலன் 

தேமொழி

unread,
May 16, 2024, 2:01:13 PMMay 16
to மின்தமிழ்
வணக்கம். 
மின்னூல்களாக கிண்டிலில்  வெளியிடப்படவில்லை. 
இத்தளத்தில்  வாங்கினால் அயல்நாடுகளுக்கும் அனுப்புவதாகத் தெரிகிறது. 
இவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டுப் பாருங்கள். 

books new.jpg

நான் இவர்களிடம் நூல்கள் வாங்கி இந்திய தோழர்களுக்கு பரிசாக அனுப்பியுள்ளேன். 
ஆனால் இதுவரை அயல்நாடுகளுக்காக வாங்கியதில்லை. 
நன்றி  

Jeyapal K

unread,
May 16, 2024, 2:59:27 PMMay 16
to mint...@googlegroups.com
மின்னஞ்சல் அனுப்பினேன், பதில் இல்லை. பார்க்கலாம்.
நன்றி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/91sIpaCtiOw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/6eaca088-46e0-4feb-9a0b-ed89d4d4be75n%40googlegroups.com.

K. Jeyapalan

unread,
May 17, 2024, 10:06:41 AMMay 17
to மின்தமிழ்
நன்றி தேமொழி அவர்கள்.

1000 ரூபாவிற்கு மேல் வாங்கினால் அனுப்புவார்களாம்.
திரு. பாண்டியராஜா அவர்களுக்கு ஒரு  விண்ணப்பம். 
இந்த நூல்களை "கிண்டிலில்" விற்பனைக்குச் சேர்க்கலாமே?

அன்புடன் 
செயபாலன் 

Thiagarajan

unread,
May 18, 2024, 12:22:10 AMMay 18
to மின்தமிழ்
அருள் மெர்வின் அவர்களின் நூல் விமர்சனம் மிக அருமை . முனைவர் ப. பாண்டியராஜா அவர்களின் எழுத்து சங்க இலக்கியங்களை படிக்க தூண்டுகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் "கிண்டல்" பதிப்பில் இருந்தால் மேலும் சிறப்பு.
- தியாகராஜன், சேலம் 

தேமொழி

unread,
May 18, 2024, 12:52:08 AMMay 18
to மின்தமிழ்
நன்றி தோழர், பதிப்பக குழுவினரிடம் சொல்லி ஏற்பாடு செய்வோம் 

தேமொழி

unread,
May 20, 2024, 11:46:42 PMMay 20
to மின்தமிழ்
murali.jpg
பொருள் முதல்வாதப் பார்வையில் அத்வைதம்
ll நூல் அறிமுகம் ll பேரா.இரா.முரளி
ஆதி சங்கரர்  படைத்த அத்வைத தத்துவத்தை  
பொருள் முதல்வாதப் பார்வையில் 
புரிந்து கெள்வது பற்றிய நூல் அறிமுகம்
https://www.youtube.com/watch?v=wjGEGOX6M2Q


நூல் விவரம் : 
பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்
 விலை:  ₹180
ஆசிரியர்: அ. கா. ஈஸ்வரன்

வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை
பதிப்பு : முதல் பதிப்பு 2023
ISBN: 9788196263652
இணையம் வழி தருவிக்க: 

தேமொழி

unread,
May 22, 2024, 3:00:52 AMMay 22
to மின்தமிழ்
வரலாற்றில் பொய்கள்: நூல் மதிப்புரை

 — சபாரத்தினம்



தற்போது படித்து முடித்த நூல்.  சகோதரி முனைவர் தேமொழியின் சிறப்பான நூல். வரலாற்றுப் பிழைகள் பற்றி ஏதோ சொல்லுகிறார் என்ற நினைப்பிலேயே படிக்க ஆரம்பித்தேன். ஆனால் வரலாற்றில் பொய்கள்தான் என்று புரிந்து கொண்டேன். பிழைகள் என்றால் இயல்பாகக் கூட நிகழ்ந்திருக்கலாம்.

வலிந்து திணிக்கப் பட்டவையே பொய்கள்.

இந்நூலுக்கு சகோதரி முனைவர் க.சுபாஷிணியின் சிறப்பான பதிப்புரை. அதில் "கான்ஸ்டன்டைனின் நன்கொடை" குறித்து திருச்சபைக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் இடையே எழுந்த முரண்பாடு, நிலவில் உயிரினம் என்ற விந்தை செய்தி, சர் ஜான் ஹெர்ஷல் கட்டுரைகள், இப்படி உலா வரும் பொய்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்த நூல் சுட்டிக்காட்டும், வரலாற்றுப் பொய்கள் என்னவென்றால் . . .
     1.  குமரிக்கண்டம் என்ற ஒரு புனைவு
     2.  பிக்கோலிம் போர் என்ற ஒரு புளுகு.
     3.  சிந்துவெளியின் குதிரை முத்திரை என்ற ஒரு மோசடி
     4.  சரஸ்வதி நதி என்ற ஒரு புரட்டு.
இவையெல்லாம் அவர் கொடுத்துள்ள அத்தியாயத் தலைப்புகளும் கூட.
நான் விரிவாக இங்கே சொல்வதை விட நூலைப் படிப்பது சிறப்பு. முக்கிய செய்தியை (core point) மட்டும் சொல்லிவிடுகிறேன்.

1.  குமரிக்கண்டம்:
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் இவை கூறும் கடல்கோள், நிலம் பாதிப்பு இவற்றுக்கு 12,13 ம் நூற்றாண்டில் கூறிய கருத்துக்களையும், 19 ம் நூற்றாண்டில் உருவான அறிவியல் கோட்பாடுகளையும் இணைத்து  குமரிக்கண்டம் என்ற புனைவு உருவாக்கப் பட்டது. உண்மையில் குமரி முனைக்குத் தெற்கே எந்த நிலப் பரப்பும் இருப்பதற்கான அறிவியல் தரவுகள் இல்லை. இலக்கியங்கள் கூறும் லெமுரியா, குமரிக் கண்டம் இவற்றை அறிவியல் கூறும் Pangea வோடு ஒப்பு வைக்க முடியாது.

2.  பிக்கோலிம் போர்:
மராட்டியத்தில் இருந்த மராட்டிய அரசுக்கும், கோவாவில் இருந்த போர்ச்சுக்கீசிய அரசுக்கும் நில ஆக்கிரமிப்பு விஷயத்தில் சிறு சிறு போர்கள் இருந்தது உண்மை. ஓர் ஒப்பந்தம் கூட செய்து கொண்டனர். ஆனால் இதை பானிப்பட்டு யுத்தம், உலக மகா யுத்தம் அளவு கட்டமைத்த கூத்து குறித்து சொல்வதே இந்த அத்தியாயம்.

3.  சிந்துவெளியின் குதிரை முத்திரை:
சிந்து சமவெளியில் குதிரை முத்திரை என்ற மோசடி; சிந்து சமவெளிக் காலம் 5000 ஆண்டுகள் முற்பட்டது. ஏறத்தாழ  இரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்திருந்தது (3300-1300 BCE). அந்தக் காலகட்டத்தில் குதிரை இங்கே இல்லை. இறக்குமதியும் செய்யப்படவில்லை.  முகமும் முன்பாதியும் சிதைந்து போன, உயர் திமிள் கொண்ட எருது உருவம், குதிரை எனப் புனையப்பட்டது. வேத காலத்தில் தான் குதிரைகள் இருந்தன. சிந்து சமவெளிக் காலம், வேத காலத்துக்கு மிக மிக முற்பட்ட காலம். அதையும் இதையும் ஒன்று என்று பொருத்திப் பார்க்க எத்தனை புனைவுகள்.

4.  சரஸ்வதி நதி:
நான்கு வேதங்களும் இயற்றப்பட்டது சரஸ்வதி நதி தீரத்தில்தான் என்பது வைதீகர்களின் நம்பிக்கை. வேதங்களில் கூட அதிகம் உச்சரிக்கப்பட்டது சரஸ்வதி என்ற பெயர்தான். கங்கை யமுனை கூட ஓரிரு இடங்களில்தான். ஆனால் இந்த நதிக்கான தரவுகள் நிரூபிக்கப் படவில்லை. இந்த சரஸ்வதி விவகாரம் குறித்து மிக விரிவாக எழுதியிருக்கிறார். நூலின் உட்பொருள் அத்தனையும் உரைப்பது இயலாத காரியம் மட்டும் அன்று, அது முறையும் அன்று. தடம் மாறிய சட்லெட்ஜ் நதியின் பழைய பாதையின் மிச்சங்களையே சரஸ்வதி என்று அழைக்க விரும்புகிறார்கள் சரஸ்வதி நதி ஆர்வலர்கள் என்கிறார் ஆசிரியர்.

ஆசிரியரின் கருத்துக்கள் இருக்கட்டும்; நம் சிந்தனையைத் தூண்டும் இந்த நூல். நமக்குள் எழும் தர்க்க வினாக்களுக்கு விடை கிடைக்கிறதா என்று பாருங்கள்.
வாழ்த்துகள் தேமொழி.


Themozhi book - THFi - Varalatril Poigal.jpg
நூல் விவரம்:
நூல்: வரலாற்றில் பொய்கள்
விலை:   ₹100
ஆசிரியர்: தேமொழி

வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை
பதிப்பு:  2022 முதல் பதிப்பு
கிடைக்குமிடம்:
https://www.commonfolks.in/books/d/varalaatril-poigal

தேமொழி

unread,
May 24, 2024, 5:26:50 PMMay 24
to மின்தமிழ்
நமது பதிப்பகப் பிரிவின் வெளியீடுகளாக .. 
ஜூன் மாதம் மத்தியில் வெளிவர உள்ள 2 நூல்கள் - 
தமிழகப்  புவியியலில் ஆய்வில் ஆர்வம் உள்ளோர் வாசித்து மகிழ வரவுள்ளன.
singanenjam book1.jpg
singanenjam book2.jpg
நூல்கள் அச்சாகி வெளிவரும் போது மேலும் தகவல் பகிர்கிறேன்
-- சுபா 

தேமொழி

unread,
May 27, 2024, 4:17:18 PMMay 27
to மின்தமிழ்
books to library.jpg
சுவிட்சர்லாந்து, பாசல் நகர தேசிய நூலகத்திற்குத் தமிழ் நூல்களை நன்கொடை வழங்கல், மற்றும் பாசல் நகரில் சந்திப்புக்கூட்டம், ஒரு கலந்துரையாடல். 
பாசல் நகர நூலகத்துக்கு நூல்கள் வழங்குதல்
மாலை 5:00 மணி
Venue: GGG Bibliothek St. Johann JUKIBU 
            Lothringerplatz 1, 4056 Basel
            Switzerland.
சந்திப்புக்கூட்டம் - மாலை  6:30
Date & Time: 30th May, 2024 (Thursday) 6:30 PM -7:30 PM
Venue: Chennai Kings restaurant, Basel, Switzerland
சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் மக்களே.. வாருங்கள்.. சந்தித்து உரையாடி மகிழ்வோம்.

தேமொழி

unread,
May 28, 2024, 2:36:01 AMMay 28
to மின்தமிழ்
Dr. J.R.SIVARAMAKRISHNAN BOOK.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவின் அடுத்த வெளியீடு..
ஜூன் 10 முதல் நமது நூல்கள் பட்டியலில் ஆர்வலர்கள் வாங்கி வாசித்து மகிழ இடம்பெறும்.

தேமொழி

unread,
Jun 2, 2024, 2:49:17 AMJun 2
to மின்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு , மதுரைக்கிளை

ஜூன் மாத நூல் அறிமுகம் & நூல் கொடை வழங்கும் விழா


முனைவர் தேமொழி அவர்களின் . . .

"வரலாற்றில் பொய்கள் " நூல் அறிமுகம்

& நூல் கொடை


நாள் : 08.06.2024 — சனிக்கிழமை (👈மாற்றம்)

இடம் : அல் அமீன் மேல்நிலைப்பள்ளி கோ. புதூர் , மதுரை.

நேரம் : காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை


தலைமை :

முனைவர் திருமதி செ. ராஜேஸ்வரி

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர்


முன்னிலை :

திருமிகு ஷே .ஷேக் நபி, M.A.,M.Ed.,MPhil.,

தலைமையாசிரியர்,

அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, கோ. புதூர், மதுரை.


வரவேற்பு மற்றும் அறிமுகம் :

நல்லாசிரியை திருமிகு மு. சுலைகா பானு , M.A.,M.A.,B.Ed., M.Phil.,

தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக்கிளைப் பொறுப்பாளர்.


நூல் கொடை :

முனைவர் தேமொழி அவர்களது அறிவியல் தொகுதி 5 நூல்கள்


மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கல் :

முனைவர் திருமதி செ. ராஜேஸ்வரி


நூல் அறிமுகம் :

திருமிகு மு.தாமரைச் செல்வி, M.A.,M.A.,B.Ed., M.Phil.,

பட்டதாரி ஆசிரியை,ஊ.ஒ. நடுநிலைப் பள்ளி, மைக்குடி.


நன்றியுரை :

திருமிகு செல்வம் ராமசாமி. ஒளிப்படக் கலைஞர். சமூகச் செயற்பாட்டாளர்.


june madurai book meeting.jpg
---------------------------------

தேமொழி

unread,
Jun 16, 2024, 12:33:08 PMJun 16
to மின்தமிழ்
new  books.jpg
நூல்களைப் பெற:
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்
ச. சிங்கநெஞ்சம்
வெளியீடு : 2024 - தமிழ் மரபு அறக்கட்டளை
விலை: ₹120
ISBN: 9788196962630

தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கிய கடல்களும் கடல்கொண்ட நிலங்களும்
ச. சிங்கநெஞ்சம்
வெளியீடு : 2024 - தமிழ் மரபு அறக்கட்டளை
விலை:  ₹140
ISBN: 9788196962624

வரலாற்று நிலவியல் நோக்கில் சிதம்பரம் நகரும் நகர்ப்புறமும்
முனைவர் ஜெ. ஆர். சிவராமகிருஷ்ணன்
வெளியீடு : 2024 - தமிழ் மரபு அறக்கட்டளை
விலை: ₹300
ISBN: 9788196962692
______________________________________________________________________

தேமொழி

unread,
Jun 27, 2024, 10:51:42 PM (3 days ago) Jun 27
to மின்தமிழ்

தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்: ச. சிங்கநெஞ்சம்
— சபாரத்தினம் 

""நதிகளும் சில நேரம் தடம் மாறலாம் 
நீரின் குணங்களும் மணங்களும் நிறம் மாறலாம் 
இருக்கின்ற இரு கரை பழுதாகலாம்!
நதியினில் கிளை நதி உருவாகலாம்!!
சிறு நதிகளும், சில நேரம் அதில் சேரலாம்.
நதி வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்""

தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள். நண்பர் சிங்கநெஞ்சம் வழங்கிய கருத்துப் பொக்கிஷம்.  ஆழ்ந்த ஞானமுடையவர்.
நதிகள் பாதை மாறுவது, வறண்டு போவது, சில சமயம் இல்லாமலே போவது.... இதெல்லாம் இயற்கை நிகழ்வுகள்.

அறிவியல், பக்தி இலக்கியங்கள் எல்லாவற்றிலும் புகுந்து வந்திருப்பார் இந்த நூலில். சில உதாரணங்கள் மட்டும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் இந்த நூலில்.
காவிரியும் கொள்ளிடமும் ஒன்றா?
தேவாரம் போன்ற பக்திப் பாடல்களில் கொள்ளிடம் பற்றி எங்கேயாவது குறிப்பிடப்பட்டுள்ளதா? 
கரிகாலன் கல்லணையைக் கட்டினானா??  கரை எழுப்பினானா?
""கரையேற விட்ட குப்பம் ""--கடலூர். திருநாவுக்கரசரை கற்றுணைப் பூட்டி கடலில் வீசியபோது, எங்கே கரை ஏறினார்.....
கடலூரின் வடக்கே இருக்கும் கெடிலம், புராண காலங்களில் தெற்கே இருந்ததே? 
துருத்தி என்றால் என்ன?......

பல வரைபடங்களும் பகிர்ந்திருக்கிறார். இந்த நூல் ஆசிரியர் சிங்கநெஞ்சம்.  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புவியியல் துறையில் எனக்கு ஒரு ஆண்டு முன்னவர்.  என் இனிய நண்பர். இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையில் GSI இயக்குநர் ஆக இருந்தார். அவர் செப்டம்பர் 2019 காலமானார்.  அவர் மறைந்து ஏறத்தாழ 5  ஆண்டுகளுக்குப்பின் இந்த நூல் வந்திருக்கிறது.  மிகவும் சிரத்தையுடன் இந்த நூலை வெளிக்கொணர்ந்த தமிழ் மரபுக் கட்டளையினருக்கு, குறிப்பாக அதன் 
தலைவர் டாக்டர்சுபாஷிணி, செயலர் டாக்டர்தேமொழி ஆகியோருக்கு நன்றி உடையவன் ஆவேன்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கும் அரிய வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.
""ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்....... என்பது போல் என் நூல் வெளியிட்ட போது எனக்கு ஏற்பட்ட பெருமிதம்....அதை விட  இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியபோது சற்றே அதிகம்.

— சபாரத்தினம் 


நூல் விவரம்:
தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்
ச. சிங்கநெஞ்சம்
 தமிழ் மரபு அறக்கட்டளை, 2024
விலை: ₹120 
ISBN: 9788196962630

நூல் கிடைக்குமிடம் : 
தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்

Reply all
Reply to author
Forward
0 new messages