உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌ - 4,300 தமிழாய்வுத்‌ தலைப்புகள்‌ ஒரே தளத்‌தில்‌ வெளியிட்டுள்ளது

3,246 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 5, 2021, 3:57:29 PM8/5/21
to மின்தமிழ்
100 ஆண்டுகளை நெருங்கும்‌ முனைவர்‌ பட்‌ட ஆய்வுகள்‌: ஒரே தளத்தில்‌ 4,900 தமிழாய்வுத்‌ தலைப்புகள்‌ வெளியீடு 
--------------------------------------------

சென்னை, ஆக. 4: தமிழில்‌ முனைவர்‌ பட்ட ஆய்வுகள்‌ தொடங்கி 100 ஆண்டுகள்‌ நெருங்கும்‌ நிலையில்‌, உலகம்‌ முழுவதும்‌ உள்ள பல்கலைக்கழகங்களில்‌ மேற்‌கொள்ளப்பட்டுள்ள 4,300 தமிழாய்வுத்‌ தலைப்புகள்‌ ஒரே தளத்‌தில்‌ வெளியிடப்பட்டுள்ளதாக உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌ தெரிவித்துள்ளது.

தமிழ்‌ இலக்கிய, இலக்கணங்‌கள்‌ உள்பட பல்வேறு பொருண்‌மைகளையும்‌ ஆய்வுக்‌ களங்களாகக்‌ கொண்டு தமிழியல்‌ முனைவர்‌ பட்ட, இளம்‌ முனைவர்‌ பட்ட ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்‌படுகின்றன. 

பட்டப்பேற்றிற்கான (திறனாய்வு) இவ்வகை ஆய்வுகள்‌ தொடங்கி ஏறத்தாழ 100 ஆண்டுகள்‌ நிறைவடையவுள்ளது. 

தமிழியல்‌ முனைவர்‌ பட்ட ஆய்வுகள்‌, தமிழக பல்கலைக்கழகங்கள்‌, உயராய்வு நிறுவனங்கள்‌, கல்லூரிகள்‌, தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்‌கள்‌ போன்றவற்றில்‌ மேற்கொள்‌ளப்படுகின்றன. 

இவை தமிழகத்‌தில்‌ மட்டுமல்லாது இந்தியாவின்‌ பிற மாநிலங்களில்‌ செயல்படும்‌ பல்கலைக்கழகங்கள்‌, இலங்கை, மலேசியா, பிரிட்டன்‌, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்‌ செயல்படும்‌ பல்வேறு கல்வி நிறுவனங்களிலும்‌ மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும்‌ இவற்றில்‌ இதுவரை மேற்கொள்ளப்பட்ட தமிழியல்‌ ஆய்வுகள்‌ குறித்துப்‌ புதிதாக ஆய்வுகளை மேற்கொள்ளும்‌ ஆய்வாளர்களுக்கு எந்தத்‌ தகவலும்‌ தெரிவதில்லை. பல நேரங்களில்‌ ஏற்கனவே வெளிவந்த ஆய்‌வுத்‌ தலைப்புகளையே மீண்டும்‌ பதிவுசெய்து ஆய்வு செய்யும்‌ சூழலும்‌ ஏற்பட்டுவிடுகிறது.

எனவே, ஒரு ஆய்வாளர்‌ தான்‌ எடுத்துக்கொண்ட பொருண்மையில்‌ இதற்கு முன்னால்‌ வெளிவந்‌திருக்கிற ஆய்வுகளைக்‌ கட்டாயம்‌ அறிந்துகொள்ள வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்‌ளது. எனவே, ஆய்வாளர்‌ இதுவரை வெளிவந்துள்ள முனைவர்‌ பட்ட ஆய்வுகளை அறிந்‌துகொள்ள www.thamizhiyal.com என்கிற இணையப்பக்கம்‌ தொடக்கப்பட்டுள்ளது.

33 பல்கலை.களின்‌ ஆய்வுகள்‌: இது குறித்து உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தின்‌ சமூகவியல்‌, கலை மற்றும்‌ பண்பாட்டுப்‌ புலத்தின்‌ பேராசிரியர்‌ ஆ.மணவழகன்‌ கூறியது: 

இந்த இணையப்‌ பக்கத்தின்‌ http://thamizhiyal.com/?cat=78 என்ற இணைப்பில்‌ சென்னைப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சைத்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, மதுரை காமராசர்‌ பல்கலைக்‌கழகம்‌, கோவை பாரதியார்‌ பல்கலைக்கழகம்‌, திருச்சி பாரதிதாசன்‌ பல்கலைக்கழகம்‌ போன்ற தமிழகப் பல்‌கலைக்கழகங்கள்‌, கேரளப்‌ பல்கலைக்கழகம்‌, திருவேங்கடம்‌ பல்கலைக்கழகம்‌, அலிகார்‌ முஸ்‌லிம்‌ பல்கலைக்கழகம்‌, காசி பனாரஸ்‌ பல்கலைக்கழகம்‌, தில்லி பல்‌கலைக்கழகம்‌ போன்ற இந்தியப்‌ பல்கலைக்கழகங்கள்‌, யாழ்ப்பாணம்‌ பல்கலைக்கழகம்‌, லண்டன்‌ பல்கலைக்கழகம்‌, நன்யாங்‌ பல்‌கலைக்கழகம்‌, பர்மிங்காம்‌ பல்கலைக்கழகம்‌ போன்ற வெளிநாட்‌டுப்‌ பல்கலைக்கழகங்கள்‌ என 33 பல்கலைக்கழகங்களின்‌ சுமார்‌ 4,300 தமிழ்‌ ஆய்வேடுகள்‌ பட்டியலிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன..

தமிழாய்வுத்‌ தரவுதளம்‌: இவற்‌றில்‌ஆய்வுத்தலைப்பு, ஆய்வாளர்‌, நெறியாளர்‌, பல்கலைக்கழகம்‌, வெளியான ஆண்டு ஆதிய விவரங்கள்‌ அடங்கியுள்ளன. இதுவரை வெளிவந்த தமிழியல்‌ ஆய்‌வுத்‌ தலைப்புகளை ஒரே இடத்‌தில்‌ இனி காணமுடியும்‌. தமிழில்‌ ஆய்வுகளை மேற்கொள்ளும்‌ ஆய்‌வாளர்களுக்கும்‌ தமிழில்‌ ஆய்வுத்‌ திட்டங்களை மேற்கொள்ளும்‌ ஆய்வாளர்களுக்கும்‌, தமிழார்வலர்களுக்கும்‌ இந்தத்‌ தமிழாய்வுத்‌ தரவுதளம்‌ மிகுந்த பயனைத்‌ தரும்‌ என்றார்‌ அவர்‌.

--------------------------------------------
செய்தி : தினமணி, 5.8.2021, வியாழன்

#whatsappshare

cat-78.jpeg
cat-78-2.jpeg
thamizhiyal.jpeg
--------------------------------

Pandiyaraja Paramasivam

unread,
Aug 6, 2021, 1:08:24 AM8/6/21
to mint...@googlegroups.com
தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வேடுகள் பற்றிய தகவலில் 62-ஆவதாக என்னுடைய ஆய்வேடு பற்றிய (2001) தகவலைஅறியலாம்.
ப.பாண்டியராஜா


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/9c5d4524-d527-4c4f-aaec-77745a829034n%40googlegroups.com.

Rathinam Chandramohan

unread,
Aug 6, 2021, 4:31:29 AM8/6/21
to mint...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி 


Dr.R.Chandramohan
Research Advisor, Vidhyaa Giri College of Arts and Science, Puduvayal-630108
Coordinator, Tamilnadu Physical Education and Sports University Distance Education Study Centre D0123




தேமொழி

unread,
Aug 6, 2021, 2:35:37 PM8/6/21
to மின்தமிழ்
இந்த முயற்சி மனமகிழ்ச்சி தருகிறது.  
ஆனால்,  மனநிறைவு தரவில்லை. 
இது முழுமையான  தரவுகளைக் கொண்டதாக கருத முடியவில்லை. 


தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்” என்ற தகுதி பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri) அவர்களைச் சேரும்.   ‘History of Grammatical Theories in Tamil and their relation to grammatical literature in Sanskrit’ (தமிழ் இலக்கணக்கொள்கை வரலாறும் அதன் வடமொழி இலக்கண உறவும்) என்ற ஆய்வறிக்கையை சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1930 ஆம் ஆண்டு சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழில் முதல் முனைவர்ப்பட்ட ஆய்வேடாக இது இருப்பினும் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அக்காலத்தில் தமிழ் இலக்கிய ஆய்வு அறிக்கைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. 

சென்னைப் பல்கலை பக்கம் http://thamizhiyal.com/?p=2442  சென்று பார்த்தால் வரலாற்றில் 1930 முதல்  இதுவரை வழங்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகள் உள்ளதாகக் கருத முடியவில்லை.  

தரவுகளைப் பெற்ற முறையும் வியப்பளிக்கிறது.  இது போன்ற தரவுகளுக்கு செல்ல வேண்டிய இடம் பல்கலைக் கழக நூலகம்.   ஒவ்வொரு ஆய்வேடும் நூலகத்திற்கு ஒரு படி அனுப்பப்படும். 

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வேடுகளும் இடம் பெற வேண்டும்.  ஆய்வு செய்தார், ஆனால் ஆய்வாளர் நிறைவு செய்து பட்டம் பெறவில்லை என்றால், அதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அந்தப் பொருண்மையில் மற்றொருவர் விரும்பினால் ஆய்வைத் தொடர முடியும். 

ஆய்வுத் தலைப்பு 
ஆய்வாளர் 
நெறியாளர் 
ஆண்டு 
ஆய்வுப் பட்டம் - முனைவர் அல்லது ஆய்வியல் நிறைஞர் (M.phil)
இவற்றைப் போலவே 
எந்தப் பொருண்மை என்பதும்தான் தேடலின் அடிப்படை . சொல்லப் போனால் அதுதான் முக்கியம். 

கொடுக்கப்பட்ட தரவுகள் ஆவணப்படுத்தும் துவக்கம்தான்.  

ஆனால் இது போல நிலையான தரவுகள் கொண்ட நிலையான பக்கம் (static page) வகையில் தகவல் தருவது  கால்  நூற்றாண்டிற்கு முன் வழக்கில் இருந்த இணையக் கற்கால முறை.  தேடுபவர் கோணத்தில் இருந்து செய்தி வழங்க வேண்டும்.  தேடுபவர் இந்தப் பொருண்மையில் எவராவது ஆய்வு செய்தாரா என்றுதான் தேடுவார்.  ஒவ்வொரு பல்கலை தளமாகச் சென்று வரிசையாக படித்துக் கொண்டிருக்க மாட்டார்.  

ஆய்வாளர் பெயரிலோ, பொருண்மையிலோ தேடுவதாக,   ஒரு  பக்கத் தேடல் தளமாக மாக, மாறும் தகவல்களை அளிக்கும் பக்கமாக (dynamic page) அமைக்க வேண்டும்.  

நான் பாண்டியராஜா என்று தேடினால் அது, பாண்டியராஜா என்ற பெயரில் உள்ள ஆய்வாளர்கள் அனைவரின் ஆய்வுத் தலைப்புகள், முடித்த ஆண்டு, பல்கலைக்கழகம், நெறியாளர் என அனைத்தையும் பட்டியலாகத் தர வேண்டும். அந்தப் பெயரில் ஆய்வு நடந்தால் அதுவும் அதில் இருக்கும்.

தேடுவோர் பொருண்மையில்தான் தேடுவார்கள் நாடகங்கள், வரதராசனார், சங்க இலக்கியம், கணினி வழி தமிழ் ஆய்வு, தத்துவக் கோட்பாடுகள் என்றோதான்  தேடுவார்கள்.  இதற்கு ஆய்வுத் தலைப்பு மட்டும் உதவாது.  தலைப்புகளை விவரிக்கும் குறிச்சொற்களும்  தேவை.  

இல்லாவிட்டால் ஆய்வேடுகளைத் தேடுவதே மற்றுமொரு ஆய்வாக அமையும். 

தரவுகளை வழங்குவது ஒரே பக்கத்தில் தேடும் பக்கம் அமைய வேண்டும்.  

மேலும் அரசு நிறுவனம் வழங்கும் செய்திகளும் படங்களும் மக்களுக்கானவை.  காப்புரிமை சிக்கல் இல்லை. அதைப் பாதுகாப்பு கொண்டதாக அமைக்கவும்  வேண்டியதில்லை.  மக்களின் வரிப்பணத்தில் அரசு வழங்குவது மக்களுக்கானது.  இவை வெட்டி ஒட்டும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.   

Dr. Mrs. S. Sridas

unread,
Aug 7, 2021, 6:25:04 PM8/7/21
to mint...@googlegroups.com
வணக்கம். நீங்கள் குறிப்பிட்டது போல இப் பட்டியல் முழுமையானது என்று கூறமுடியாது.

நான், செல்வநாயகி ஸ்ரீதாஸ்,  2015 ஆம் ஆண்டு சூலை மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். எனது பெயர் பட்டியலில் இல்லை. 
இப்படிப் பலர் பெயர்கள் தவறவிடப்பட்டிருக்கலாம். 
காலக்கிரமத்தில் சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

சிறந்த முயற்சி. முயற்சிக்குப் பாராட்டு. 

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 18, 2021, 12:36:14 PM9/18/21
to மின்தமிழ்
கீழ்க்காணும் எனது பதிவிற்கு, தளத்தில் தரவுகளை இணைத்தவரிடம் இருந்து இன்று  பேஸ்புக்  தனிச்செய்திப் பெட்டியில் மறுமொழி கிடைக்கப் பெற்றேன்.   
 
கெங்கவல்லி ஆ.மணவழகன்
தமிழ்ப் பேராசிரியர்
(Dr.A.Manavazhahan)

எனது மறுமொழி: 
விளக்கத்திற்கு மிக்க நன்றி.  
இதை நான் மின்தமிழில் பகிர்ந்து கொள்கிறேன். 
உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்.
-----------------------------------------

வணக்கம். 
நான் மணவழகன். தமிழியல்.காம் தளத்தில் நான் பதிவிட்டுள்ள தமிழாய்வுத் தலைப்புகள் தொடர்பாக நீங்கள் பதிவிட்டுள்ள கருத்தினை ‘மின்குழுமத்தில்’ (ஆக.7,2021) தற்செயலாகக் காண நேர்ந்தது (நீங்கள்தான் என்று எண்ணுகிறேன்). 
உங்கள் புரிதலுக்காக: 

1. “இந்த முயற்சி மனமகிழ்ச்சி தருகிறது. ஆனால், மனநிறைவு தரவில்லை. இது முழுமையான தரவுகளைக் கொண்டதாக கருத முடியவில்லை. “ - மனமகிழ்ச்சிக்கு நன்றி - கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் உங்களைப் போன்ற மிகப்பெரிய வல்லுநர்களின் மனநிறைவிற்கானதல்ல; இதுவரை வெளிவந்துள்ள தமிழியல் ஆய்வேடுகள் குறித்த அடிப்படைத் தகவல்கள்கூட கிடைக்காமல், தலைப்பை எப்படி தேர்வு செய்வது என்பதை அறியமுடியாமல், தவறுதலாக ஏற்கனவே வெளிவந்துள்ள ஆய்வுத் தலைப்புகளையே (புதுமை என்றெண்ணி) தேர்வு செய்துவிடும் தொடக்கநிலை ஆய்வாளர்களுக்கானது. அவர்களுக்கு இது மனநிறைவை அளித்துள்ளது. என் இலக்கும் அவர்களே.

 2. தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்” என்ற தகுதி பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri) அவர்களைச் சேரும்.(1930) - 1925 ஆம் ஆண்டிலேயே தமிழியல் ஆய்வு வெளிவந்துள்ளதை அறிக. ஆனால் அதுகுறித்து உரிய தரவுகள் கிடைக்கப்பெறவில்லை. உங்களிடம் இருந்தால் வழங்கலாம் (தளத்திலும் இக்கருத்தையே பதிவிட்டுள்ளேன்.) 

 3. தரவுகளைப் பெற்ற முறையும் வியப்பளிக்கிறது. இது போன்ற தரவுகளுக்கு செல்ல வேண்டிய இடம் பல்கலைக் கழக நூலகம். ஒவ்வொரு ஆய்வேடும் நூலகத்திற்கு ஒரு படி அனுப்பப்படும். - உயராய்வு நிறுவனத்தில் பணியாற்றும் நான், இதைக்கூட அறியாமல் இருப்பேன் என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பது பெருவியப்பு. எத்தனை பல்கலைக்கழக நூலகங்களில் ஆய்வேட்டுப் பட்டியல்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறது? எத்தனை நூலகங்களில் ஆய்வேடுகள் உரிய முறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன? நீங்கள் கூறினால் நான் பயன்படுத்திக்கொள்வேன். - அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் ஆய்வேடுகளின் விவரம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஒரேயொரு பல்கலைக்கழத்தில் இருந்து மட்டுமே பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் ஆய்வுத் தலைப்புகள் மட்டுமே. ஆய்வாளர் பெயர்கூட அதில் இடம்பெறவில்லை… - வியப்படைவதற்கு முன்பாக நடைமுறை எதார்த்தம் அறிக 

 4. ஆய்வாளர் நிறைவு செய்து பட்டம் பெறவில்லை என்றால், அதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். - இக்கருத்து எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது. “வெளிவந்துள்ள ஆய்வேடுகளின் பட்டியல்” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் நிறைவு செய்யாத ஆய்வேடுகள் பற்றிய கேள்வி எங்கிருந்து வந்தது? சரி, நிறைவு செய்யாத ஆய்வேட்டுப் பட்டியலை எப்படிப் பெறலாம்? வழிமுறை கூறவும். - பதிவு செய்யப்பட்ட தலைப்பில் குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆய்வேடு வழங்கப்படவில்லை என்றால் அது உயிர்ப்பு நிலையை இழந்துவிடும். ஆய்வாளர் மீண்டும் தலைப்பை உரிய முறையில் பதிவுசெய்தே ஆய்வேடு வழங்கவேண்டும். நடைமுறை அறிக. 

 5. எந்தப் பொருண்மை என்பதும்தான் தேடலின் அடிப்படை. சொல்லப் போனால் அதுதான் முக்கியம். - தலைப்புத் தேர்வு, முன்னோடி ஆய்வுகள் போன்றவற்றிற்கு அனைத்துவகைப் பொருண்மைகளும் நிரல்பட ஆண்டுவாரியாக வழங்குவது தேவை. 

6. கொடுக்கப்பட்ட தரவுகள் ஆவணப்படுத்தும் துவக்கம்தான். - புரிதலுக்கு நன்றி. 

7. ஆனால் இது போல நிலையான தரவுகள் கொண்ட நிலையான பக்கம் (static page) வகையில் தகவல் தருவது கால் நூற்றாண்டிற்கு முன் வழக்கில் இருந்த இணையக் கற்கால முறை. - இருக்கட்டும். இணையக் கற்கால முறையில் கூட இவ்வகைச் செய்திகள் இல்லை என்பதாலேயே நான் முயற்சித்துள்ளேன். 

 8. தேடுபவர் கோணத்தில் இருந்து செய்தி வழங்க வேண்டும். தேடுபவர் இந்தப் பொருண்மையில் எவராவது ஆய்வு செய்தாரா என்றுதான் தேடுவார். ஒவ்வொரு பல்கலை தளமாகச் சென்று வரிசையாக படித்துக் கொண்டிருக்க மாட்டார். - பொருண்மை/தலைப்பு கொடுத்துத் தேடினால் ஆய்வேடுகள் காட்டப்படும் என்ற அடிப்படையை அறிக. 

9. ஒவ்வொரு பல்கலை தளமாகச் சென்று வரிசையாக படித்துக் கொண்டிருக்க மாட்டார். - ஒரே பல்கலைக்கழகத்தில், ஆய்வு மேற்கொண்ட தலைப்பிலேயே மீண்டும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு பல்கலையில் வெளிவந்துள்ள ஆய்வுத் தலைப்பு எழுத்து மாறாமல் வேறொரு பல்கலையில் வெளிவந்துள்ளது. தேவை என்பது உங்கள் குறுகிய நோக்கைப் பொறுத்தல்ல. முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுபவர்கள் தான் ஆய்வு மேற்கொள்ளும் துறையில் இதுவரை வெளிவந்துள்ள ஆய்வுகளை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பது ‘ஆய்வு நெறிமுறை’. 

10. மேலும் அரசு நிறுவனம் வழங்கும் செய்திகளும் படங்களும் மக்களுக்கானவை. காப்புரிமை சிக்கல் இல்லை. அதைப் பாதுகாப்பு கொண்டதாக அமைக்கவும் வேண்டியதில்லை. மக்களின் வரிப்பணத்தில் அரசு வழங்குவது மக்களுக்கானது. இவை வெட்டி ஒட்டும் வகையில் அமைக்கப்பட வேண்டும். - தமிழியல்.காம் முகப்புப் பக்கத்தையெல்லாம் எடுத்துப் பதிவிட்டுள்ளீர்கள். அதிலுள்ள அறிமுகப் பக்கத்தைப் பார்க்க மறந்தது ஏனோ? இது அரசாங்க தளம் அல்ல. மணவழகன் என்ற தனியனின் தளம். அவனின் தேடலால், அவனின் உழைப்பால் உருவான தளம். ஊரடங்கு காலத்திலும் பல்வேறு வழிமுறைகளில் தேடித்தேடிச் சேகரித்த தகவல்களே இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. நான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுவதால் நிறுவன செய்தி என்பதாக வெளிவந்துள்ளது. (தளத்தினைப் பார்வையிட்டிருந்தால் தெளிவாகியிருக்கும்). 

மனமிருந்தால் நீங்களும் தரவுகள் கொடுத்து, ஆய்வாளர்களுக்கு உதவலாம். 
 நன்றி 
ஆ.மணவழகன். 
18.9.21
--------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages