30.7.09 வியாழன்
பெருங்காயம்
இன்றைய 'இந்து' ஆங்கில நாளிதழில் 'விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்'
பொருள் பற்றி வாரம் ஒருமுறை என வரும் கட்டுரை பக்கங்களில்
நான் கண்ணுற்ற. "The Smelliest spice in the world" எனும் ஓர்
பயனுடை கட்டுரையிலிருந்து. ஈங்கு மடலாடுவோர் எளிமைக்காக
தமிழில் முக்கியமான கருத்துகள் மட்டும். முழு விவரம் விரும்புவோர்
இந்து நாளிதழ் பக்கங்களுக்குச் சென்று பார்க்கலாம்.
கட்டுரையாளர் திரு.டி பாலசுப்ரமணியன் (db...@lvpei.org)
1. 'பெருங்காயம்' என்றால் பெரிய கட்டி(Big lump. [[பெரிய காயம்(புண்) அல்ல]]
இந்துஸ்தானியில் 'ஹிங்(கு)' என வழங்குவது
2. இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தானத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவது.
3. ஓர்வகை வேர்க்கிழங்கிலிருந்து (கீறி) எடுக்கப்பட்ட ஓர் கட்டிய பால்
Ferula Family (a cousin of carrot and fennel plants)
4. இதனில் இருவகை கிடைக்கின்றது நீரில் கரைவது எண்ணெயில் கரைவது என்று
5. மண்ணினை அகழ்ந்து, கஃரட் (carrot)போன்ற ஓர் கிழங்கிலிருந்து அதன்
மேல் பகுதில் கீறி வடிந்து காய்ந்த பால். பின் கட்டிய பிசினை சேர்த்து வைத்தது.
6. ஒரு செடியிலிருந்து 3 மாதம் ஒரு கிலோகிராம் வரை கிடைக்கும்.
7. காய காய பால்கட்டி நாளாக நாளாக பழுத்த நிறத்தை அடையும்
8. இதிலுள்ள மணப்பொருளை வேதியல் மரபுச்சொல்லில் ஓர் 'சல்பைடு' என குறிப்பர்
9. அதற்கு மிகச்சரியான வேதியல் முறைச்சொல் // 2-butyl 1 proponyl disulphide //
10. ஐரோப்பியர் இதனை 'asafoetida' என்பதில் உள்ள 'asa' என்றால் பர்ஷிய மொழியில்
பிசின் எனவும் 'foetida' என்றால் துர்நாற்றப்பாருள் என்று லத்தீனிலும் பொருள்படும்
11. மணத்தினாலும் நிறத்தினாலும் இதனை 'பேயின் சாணம்' (Devild dung) எனவும் குறிப்பர்
12. இப்பயிரினம் (Ferula asafoetida) இந்தியாவில் பயிரடப்படுவதில்லை ஆனால்
ஆப்பகானிஸ்தானம்.ஈரான் துருக்மேனிஸ்தானம் மற்றும் மேற்காசிய பகுதிகளில்
வளர்கப்படுகின்றது.
13. பலப்பல நுற்றாண்டுகளாக அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது
14. இந்நாட்களில் இந்தியாவிலிருந்து ஒருவர் மட்டும் 2 டன் வரை ஆப்கானிஸ்
தானத்திலிருக்கும் ஹரத் என்னுமிடத்திலிருக்கும் வணிகர் ஒருவரிடமிருந்து
இறக்குமதி செய்துள்ளார்
15. முனைவர் சிப் ரொசட்டி என்பவர் தன் 2009 ஆண்டு 'சவுதி அராம்கோ' எனும்
இதழில் இதனைப்பற்றி பலகருத்துக்களை(சமையல் பயன் தொடர்பாக) எழுதினார்
16. கெய்ரோவில் (எகிப்து தலைநகர்) அவர் பெருங்காய்கட்டியை பார்க்கும் போது
ஏதோ ஒரு அதிகமாக வேகவைக்கப்பட்ட முட்டைக்கோசும் பயிர்உரமும் கலந்த
ஓர் கலவை போல நாற்றம் உடைதாய் இருந்ததாம்
17. அதன் சிறு துண்டினை காயவைத்த எண்ணெயில் போட்டவுடன் வெங்காயத்தையும்
பூண்டினையும் நினைஉறுத்தும் ஓர் நறுமணம் கொண்ட ஓர் கட்டியாக வந்ததாம்
18 அம்மணமானது வெங்கயம் தாளிக்கும் நேரம் வரும் சிறந்த நறுமணத்திற்கும்
(diallyl sulphide) மேலானதாகவே இருந்ததாம்
19 இத்தாலியர்தாம் முதலில் asafoetida எனும் சொல்லை உருவாக்கினர்
20 இதனைப் பகுத்தால் காணப்படும் வேறு வேதியல் பொருள்களாக குறிக்கப்படுவன
cumarines (umbelliferrone) asareninotannols ferulic acid
21 பலவிதமான மருத்துவக்குணங்களும் இதற்குண்டு எனவே பல விதங்களில்
பல நாடுகளில் பயன் கொள்ளப்படுகின்றது
22 பூச்சிக்கொல்லி குணங்களும் உள்ளதால் பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகின்றது
23 'கொடுமுடி'யில் (ஈரோடு அருகு) ஓர் வேளாளர் (செல்லமுத்து) ஓர் கோணிப்பையில்
பெருங்காயத்தைப் சிறு மூட்டையாக கட்டி பாயும் நீரில் போட்டு வைத்ததால் அவருக்கு
தன் காய்கறி விளைச்சலில் அதிகரிப்பினைக் கண்டாராம் இதனை இப்போது கோவை
வேளாண் பலக¨க்கழகமும் ஆய்வு செய்ய முனைந்துள்ளதாம்.
மேலும் பற்பல கருத்துக்களுக்கள் உள்ளன வேண்டுவோர்
அந்நாளிதழ் பக்கத்திணைப் பார்த்து பயன் பெறவும்
நூதலோசு
இந்தியாவில் பயிர் செய்யப்படாமலா, இவ்வளவு பயன்பாடு?
க.>
2009/7/30 N D Llogasundaram <selvi...@gmail.com>:
>
> 2. இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தானத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவது.
>>
ஒரே சொல்லில் விடை கொண்ட இரு வினாக்களின் தொகுதி ஒன்று உண்டு.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
எருக்கு இலை பழுப்பதேன்? எருமைக்கன்று இறப்பதேன்?
..................................................................
பாலற்று, பாலற்று.
அரைக் கீரை சிறுப்பதேன்? இரவில் பெண் தனி வழி போவதேன்?
..........................................................
பறிப்பாரற்று; பறிப்பாரற்று.
சாம்பார் மணப்பதேன்? போர் வீரன் மாய்வதேன்?
........................................... பெருங்காயத்தால்,
பெருங்காயத்தால்.
ஓம்.<>வெ.சு<>
On Jul 31, 7:02 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நல்ல பங்களிப்பு. நன்றி.
>
> இந்தியாவில் பயிர் செய்யப்படாமலா, இவ்வளவு பயன்பாடு?
>
> க.>
>
> 2009/7/30 N D Llogasundaram <selvindl...@gmail.com>:
உடனே ஜிமெயில் வீரராகி இழை பிரியாமல் ஒரு பதில் போட்டுவிட்டீர்கள்.
பெரிவர்களின் தீவிர கணினிப்பசி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எள்
என்பதற்குள் எண்ணெயாய் கணினிப்பயிற்சி வந்து நிற்கிறது.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
க.>
2009/7/31 v.dotthusg <v.dot...@gmail.com>: