சீகரித்தல்/சேகரித்தல் < ஸ்வீகரித்தல் (சீகரம் = கவரி)

129 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 3, 2019, 7:06:58 AM10/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, S. V. Shanmukam
On Thu, Oct 3, 2019 at 4:33 AM இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaa...@gmail.com> wrote:
ஐயா, சேகரம் என்றால் ஒன்று சேர்த்தல், திரட்டுதல் போன்ற பொருள்கள் இல்லையா? ஆக, சேகரன் என்றால் சேர்ப்பவன், ஒருங்கிணைப்பவன், திரட்டுபவன். இவ்வகையில் குலசேகரன் என்றால் தன் குலத்தை அல்லது குடியைச் சேர்ந்த - அதாவது தன் குழுவைச் சேர்ந்த - மக்களை ஒருங்கிணைப்பவன், தலைவன் எனப் பொருள் தரும் இல்லையா? நான் சொல்வது சரியா?

இந்த சேகரம், ஸ்வீகரி- என்ற வடசொல் திரிபு.

சீகரித்தல் (சீகரம் என்னும் பெயர்ச்சொல்):
ஸ்வீகரித்தல் முதலில் சீகரித்தல் என்றாகும். சீகரம் என்ற சொல்லுக்கு கவரி எனப் பொருள்.
பல கவரி மாக்களின் சௌரியைச் சேர்த்தால் (= சேகரித்துச்) கிடைப்பது சீகரம்.
கவரி என்ற முதலாகுபெயராய் (=பொருளாகுபெயர்) வழங்குதலும் உண்டு.

கவரி, கௌரி என்ற சொற்களின் பிறப்பைப் பற்றி ஆழமாக அறிய
ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை:

              கவரி மா - Dravidian word for Gauṛ bison and Tibetan yak

                                           Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:  
                                  Dravidian word for Gauṛ bison and Tibetan yak

மேனகை யோடு திலோத்தமை மெய்யின்
ஊனமில் காமர் உருப்பசி யாதி
வானவர் மங்கையர் வட்டம் அசைத்தே
மேனிமிர் சீகரம் வீசினர் நிற்ப.  (கந்தபுராணம்)
18

"மேல்நிமிர் சீகரம் வீசினர்”. அரம்பையர்கள்
ஆலவட்டமாக, வெண்சாமரையை மேலே நிமிர்த்தி (தூக்கி) வீசினர். சீகரம் = கவரி (< சீகரி-த்தல்).

ஸ்வீகரி- > சீகரித்தல் > சேகரித்தல். இதில்வரும் பெயர்ச்சொற்கள்: சீகரம், சேகரம். அந்தச் சேகரம் பற்றியது ஞானப்பிரகாசனின் மடல்.

   N. Ganesan   
 

வியா., 3 அக்., 2019, பிற்பகல் 2:10 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Wed, Oct 2, 2019 at 11:45 PM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:
//குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். //

சேகரன் = உச்சியில்/தலையில் சூடி/தாங்கி. 
சந்திரசேகரன் = பிறைசூடி (பித்தா! பிறைசூடி! - சுந்தரர் தேவாரம்).
ஶிக²ர (= முச்சி/உச்சி) > ஶேக²ர  

குலசேகரன் = குடிதாங்கி.
---------------------------------------------

பழைய பாடல்கள், கல்வெட்டுகளில் “குடிதாங்கி” என்ற சொல் உண்டு.

கட்டளைக் கலித்துறை 
வெறும்புற் கையும்அரி தாம்;பிள்ளை சோரும்,என் வீட்டில்வரும்
எறும்புக்கும் ஆர்பதம் இல்லை,முன் னாள்என் னிரும்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கி யைச்சென்று கூடியபின்
தெறும்புற்கொள் யானை கவளம்கொள் ளாமல் தெவிட்டியதே.
                                                                             - தமிழ்நாவலர்சரிதை 
 
நா. கணேசன்


சேகரன் என்னும் சொல்லைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இச்சொல்லுக்கு “ரட்சிப்பவன்”  என்னும் பொருள் தவறு என்றே கருதுகிறேன்.
சிகரம் என்னும் சொல் அடிப்படையானது. அதனைச் சார்ந்த ஒரு சொல்லே
சேகரன்.  சிகரம் என்னும் சொல்  உச்சி, முடி, தலை  என்னும் பொருள் கொண்டது.
குல சேகரன் என்றால் குலத்துக்கே சிகரம் போன்றவன்.   இராஜராஜ சோழன் 
தன்னைச் சிவபாத சேகரன் என்றழைத்துக்கொண்டான். சிவனின் பாதங்களத் தன் 
சிகரத்தில் (தலையில்) இருத்தி வணங்குபவன். கோயில் விமானத்தின் உச்சிப்
பகுதியும் சிகரம் என்றழைக்கப்படுதலைக் காண்க.

சுந்தரம்.

kanmani tamil

unread,
Oct 4, 2019, 9:39:46 AM10/4/19
to vallamai, mintamil
நல்ல தகவல் ; முனைவர் கணேசன் அவர்களே 
நன்றி 
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUenZpOBkDhT9HmNABGf6e7bOMWYs%3Dz2jYZNyjB%2BBDEgSA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 4, 2019, 10:47:13 PM10/4/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Fri, Oct 4, 2019 at 6:39 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நல்ல தகவல் ; முனைவர் கணேசன் அவர்களே 
நன்றி 
சக 


 சீகரம் (கவரி என்ற பொருளில் வரும்போது)  šrī-kara. என்ற வார்த்தையை மூலம்
என்கிறது சென்னைப் பல்கலைப் பேரகராதி. அது சரியன்று.
ஸ்ரீ-க்ர் >> ஸ்ரீகர - இவற்றுக்கும் கவரிக்கும் தொடர்பில்லை.

நேராகவே எளிதில் பொருள் சொல்லமுடியும் எனக் காட்டத் தான் எழுதினேன்.
ஶிக²ர (= முச்சி/உச்சி) > ஶேக²ர  தமிழிலே இந்த இணைவார்த்தைகள் சிகரம்:சேகர- என வரும்.
குலசேகர், சந்திரசேகர் இவற்றில் உள்ள  ஶேக²ர இது.

அதே முறையில்,
ஸ்வீகரித்தல் என்ற சொல்லில் இருந்து, ஸீகரித்தல். >> சீகரம்/சேகரம்.

சேகரித்தல், சீகரம் எனத் தமிழ்ச்சொற்கள்.
இங்கே, சீகரம் = கவரி (அ) சாமரை.
கவரி மாவில் (திபெத்திய யாக்) இருந்து வால் மயிரை
திரட்டிச் சேகரித்துச் செய்வது சீகரம்.
இ/எ மாறுபாடு. இலை/எலை என்பதுபோல சீகரம்/சேகரம்.
கவரி:

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuUyyJvXgL0MjBwgkMC9hjFrhB-zaBRU6RZeBFUUHwZVQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages