நூலாற்றுப்படை

245 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 25, 2024, 1:44:50 AMJan 25
to மின்தமிழ்
ref : https://www.facebook.com/100088388310881/posts/342730962016512/


“தமிழ் பௌத்தத்தை அழித்த தீவிரவாதிகளை உலகுக்கு வெளிப்படுத்திய பெரியபுராணம்” என்கிற சுவாரசியமான தலைப்பில் 214 பக்க நூலை சிங்கள மொழியில் வெளிக்கொணர்ந்துள்ளார் ஹிந்தகல ஞானாதார தேரர்.
"தமிழ் பௌத்தம்" குறித்த ஆய்வுகளில் சமீப காலமாக அதிகம் கவனப்படுத்தும் ஒரு ஆய்வாளராக அவர் அறியப்படுகிறார். அவர் எழுதிய மேலதிக சில நூல்களே இதற்கு சிறந்த சான்றுகள்.
அவர் எழுதிய “தென்னிந்தியாவில் தேரவாத பௌத்தத்தின் பரவல்” என்கிற நூல் சிங்களச் சூழலில் பரவாலாக பேசப்பட்ட முக்கியநூல். 2016 ஆம் ஆண்டு அந்த நூலுக்கு சிறந்த ஆய்வுக்கான அரச சாகித்திய விருதும் வழங்கப்பட்டது. (சிங்களத்தில் எழுத்தப்பப்பட்ட இந்த நூல் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் இரா.சடகோபன்)
• இலங்கையின் ஆட்சி அதிகாரத்திலும் மக்கள் வாழ்விலும் செல்வாக்கு செலுத்திய சோழர்களும் பல்லவர்களும்.
• உலக உள்ளங்களை ஆற்றுப்படுத்திய பௌத்த உபதேசங்கள்
• நவீன அறிவியலால் நிரூபிக்கப்பட்ட தியானம், பிரித் மற்றும் போதி பூஜை
• பிரபஞ்சத்தின் முடிவிலியைக் கண்ட அறிவியல் கருத்துக்களின் விஞ்ஞானபூர்வ சூத்ரபீடகம்
• The Rise and Decline of Therawada Buddism Tamiln Countries (kerala)
“தமிழ் பௌத்தத்தை அழித்த தீவிரவாதிகளை உலகுக்கு வெளிப்படுத்திய பெரியபுராணம்” நூலையும், தென்னிந்தியாவில் தேரவாதத்தின் பரவல் பற்றிய நூலுக்காகவும் தென்னிந்தியாவில் பல ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டதாக அவர் தெரிவிக்கிறார். தமிழ் பௌத்தம் அழிந்தது எப்படி என்கிற விபரங்கள் பெரிய புராணத்தில் விளக்கமாக இருப்பதாக அவர் இந்த நூலில் விளக்கியுள்ளார் என்று இந்த நூலில் பின் அட்டையில் அறிமுகக் குறிப்பு எழுதியுள்ள மடுலுகிரியே விஜேரத்ன குறிப்பிடுகிறார்.
பெரியபுராணத்தின் மீது இப்படியும் ஒரு பார்வை வைக்க முடியுமா என்று நினைத்தும் பார்த்ததில்லை. தமிழில் இப்படி ஒரு கருத்து கூட வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இன்னொரு மொழியைச் சேர்ந்தவர் ஒரு நூலையே எழுதி முடித்திருக்கிறார் என்பது பிரமிபாக இருக்கிறது. நூலின் உள்ளடக்கத்தையும் வாசித்தால் தான் அதன் மீதான முழு மதிப்புரையையும் வெளியிட முடியும். இது ஒரு அறிமுகத்துக்காக எழுதிய குறிப்பு.
தமிழில் விரைவில் மொழிபெயர்க்கப்பட்டு இது வெளிவரும் என்று நம்புகிறேன். தமிழ் பௌத்தம் குறித்த இத்தகைய சமீபகால ஆய்வு முயற்சிகள் ஆரோக்கியமான ஆய்வு நகர்வுகளாக அடையாளம் காணலாம்.
periyapuranam review.jpeg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 25, 2024, 1:51:50 AMJan 25
to மின்தமிழ்
ref : https://www.facebook.com/m.arul.mervin


முட்டை ஓடு
முன்னுரை:
ஒரு புத்தகத்தை வாசித்தால் சில விஷயங்கள் மனதில் தங்கும், பல மறந்துவிடும். அதன் பின் இன்னொரு புத்தகத்தை வாசிக்கும் போது நாம் எப்போதோ வாசித்து மறந்து போன ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தும். இரண்டும் சிந்தனையைக் கலைடாஸ்கோப் போலக் குலுக்கி ஒரு புதிய காட்சியைத் தரும். அப்படி இன்று ஒரு விஷயம்.
விளக்கவுரை:
ஏறக்குறைய இதே குளிர்காலத்தில் எண்பது வருடம் முன்பு, 1943-இல் சென்னை சட்டக் கல்லூரியில் ஒரு டிபேட் நடந்தது. அந்த சமயத்தில் கம்ப ராமாயணம், பெரிய புராணம் போன்ற தமிழ் இலக்கியங்களைக் கொளுத்த வேண்டும் என்று ஒரு சர்ச்சையை பெரியார் ஈ.வே. இராமசாமி (அப்போதே அவரை ஏனோ பெரியார் என்று அழைத்திருக்கிறார்கள்) கொளுத்திப் போட்டிருந்தார். அதுதான் டிபேட்டின் தலைப்பு. ஈ.வே.ரா.வின் சுயமரியாதைக்காரர்களையும், தமிழ் உணர்வுள்ள ஆன்மீகவாதிகளையும் கூப்பிட்டு இந்த டிபேட்டை தலைமை தாங்கி நடத்தியது அன்றைய இந்துதர்ம பரிபாலன போர்டு கமிஷனர் சி்.எம். ராமச்சந்திரன். டிபேட்டை ஆரம்பித்து வைத்த ஒருவரின் அறிமுக உரை: “தமிழருக்குச் செல்வம் போன்ற கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூற்களைக் கொளுத்த வேண்டும்; அல்லது அழிக்க வேண்டும் என்று பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்கள் கூறுவது கேட்டு தமிழ் மக்கள் கோபம் கொள்வது இயற்கை. ஆனால் சுய மரியாதைக்காரர்களின் தீர்மானத்தைப் புறக்கணிப்பது கூடாது. ஆகவே, அதுபற்றி அவர்களின் கருத்தை அறியத் தோழர் அண்ணாதுரை அவர்களை அழைத்துள்ளோம். அவர் இந்திரசித்துக்கு சமம் என்று கூறுவேன். அவருரையை மறுத்துப் பேசத் திருவாளர் சேதுப்பிள்ளை அவர்கள் இராம்பிரான் போல் வந்திருக்கிறார்கள். இதற்கு நடுநிலையாக இருக்க ஜனக மகாராஜனைப் போல உயர்திரு இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் வந்திருக்கிறார்கள். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்க வேண்டுமென விழைகிறேன்.” (இதில் நம்மை ஆச்சரியப்படுத்துவது ஒரு சென்சிடிவான விஷயத்தை ஆரோக்கியமான விவாதமாக அன்றைய தமிழகம் எடுத்துச் சென்றது. இன்று இப்படி யாராவது சொன்னால் எப்.ஐ.ஆர். விழுந்திருக்கும், ட்விட்டர் சிதறியிருக்கும், பேஸ்புக் கதறியிருக்கும், வாட்சப் புதிய கெட்ட வார்த்தைகள் நாலைக் கண்டுபிடித்திருக்கும், நாலு பேருக்கு மண்டை உடைந்திருக்கும், ஈ.வே.ரா. வீட்டிற்கு ஈ.டி. வந்திருக்கும், அடுத்த தேர்தலில் பிரச்சாரமாயிருக்கும்.)
1943-இல் நடந்த அந்த டிபேட் ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியாகி பல ஆண்டுகள் ஆகிறது. அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது இன்றும் திருக்குறளுக்கு நாம் வாசிக்கும் உரை எழுதிய டாக்டர் மு. வரதராசனார். எத்தனை பேர் இந்த காலத்தில் வாசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அண்ணாவின் பேச்சின் வீச்சும், சேதுப்பிள்ளையின் எதிர் வீச்சும் அபாரமாக, எல்லாத் திசைகளிலும் சிந்திக்க வைப்பதாக இருக்கும். இன்று டீவி டிபேட்களில், ‘மாமியாரா? மருமகளா?’, புரட்சிகரமான டாபிக் வேண்டுமென்றால் ‘மாமனாரா? மருமகனா?’, ‘தங்கச்சியா? தங்கச்சி புருஷனா?’ என்று பலபேரின் குடும்பக்கதைகளை தெருவில் இழுத்துப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ரஜனீஷ் (இன்று ஓஷோ) சொற்பொழிவுகள் எழுநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவரைப் பற்றி பிறர் எழுதிய புத்தகங்களும் பல உள்ளன. அவற்றில் பலவற்றை வாசித்துக் கவிழ்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதில் ஒரு சம்பவம் மனதில் நிற்கிறது. அந்த சம்பவம் குறிப்படப்பட்டிருப்பது ‘My Diamond Days with Osho’ என்று அவருடன் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அவரது துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்த ஒரு ‘சந்நியாசி’ எழுதியது. 1970-களில் அவர் ஒரு செக்ஸ் சாமியார், இந்திய கலாச்சாரத்திற்கு எதிரி என்று அன்றைய ஜனதா கட்சி ஆட்சியின் போது பூனாவிலிருந்த ஆசிரமம் அடித்து நொறுக்கப்பட்டு, அவர் மீது கத்தியெல்லாம் வீசப்பட்டு 1981-ஆம் ஆண்டில் இந்தியா லாயக்குப்படாது என்று கிளம்பி அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கே இன்னும் பல பிரச்சனைகள் வந்து, கைது செய்யப்பட்டு 1985-இல் அமெரிக்காவை விட்டுக் கிளம்பு என்று சொல்லிவிட்டார்கள். (ஏன் என்பதெல்லாம் நெட்பிளிக்ஸில் உள்ளது.) அவரை விரட்டிவிட்ட இந்தியாவிற்கு மறுபடியும் வர விருப்பமில்லை. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு விசா விண்ணப்பமளித்தார். அவர் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரி, ஒரு கலகவாதி என்று மொத்தம் 21 நாடுகள் விசாவை நிராகரித்துவிட்டன. அதில் மதச்சார்பற்ற நாடு ஒன்று அவர் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரி என்ற அடிப்படையிலெல்லாம் விசாவை நிராகரித்தது! அவருக்கு தெரியாத்தனமாக விசா கொடுத்த ஒரே நாடு கிரீஸ். ஆள் யாரென்று தெரியாமல் இரண்டு வாரத்திற்கு டூரிஸ்ட் விசா கொடுத்துவிட்டார்கள்.
கிரீசுக்கு டூர் போன ஆள் முதல் நாளே, ‘சாக்ரடீஸ் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் விஷம் வைக்கப்படுகிறார்’ (Socrates is Poisoned Again After 25 Centuries) என்ற தலைப்பில் உரையாற்ற ஆரம்பித்தார். அதன் உபதலைப்புகளெல்லாம் தீயாக இருக்கும் - ‘உண்மை என்பது தேடல், அது நம்பிக்கையல்ல’, ‘போப் என்ற கோமாளி ஏசுநாதரின் எதிரி’, ‘ஆன்மீகம் வியாபாரமல்ல’, ‘முட்டாள்கள்தான் சீராகச் சிந்திப்பார்கள்’…என்று பல. விளைவு? அடுத்த நாளே எல்லா கிறிஸ்தவ அமைப்புகளும் கொடிபிடித்துப் போராட்டம் நடத்த அவரது விசாவை 24 மணிநேரத்தில் கிரீஸ் அரசாங்கம் தடைசெய்து நாட்டைவிட்டுக் கிளம்பச் சொல்லிவிட்டது.
கீரீஸ் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டார்கள், “இரண்டு வாரம் விசா கொடுத்துவிட்டு இருபத்திநான்கு மணிநேரத்தில் விரட்டிவிடுகிறார்களே? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று. அவர் சொன்ன பதில், “இரண்டாயிரம் வருடமாக உள்ள ஒரு மதத்தை ஒருவன் இரண்டு வாரம் விசாவில் வந்து அழித்துவிட முடியும் என்றால் அது அழிய வேண்டியதுதான்”, என்றார். இது நடந்தது 1985-இல்.
இப்போது மறுபடியும் 1943-க்கு வருவோம். அண்ணாதுரைதான் அந்த டிபேட்டில் முதலில் பேசியது. அவர் தனது பேச்சைத் துவங்கி முதலில் எடுத்து வைத்த வாதம், “கம்பனின் இராமாயணமும், சேக்கிழாரின் பெரிய புராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால் ஓர் அண்ணாதுரையின் அனலால் அக்கலை அழிந்துபடும் என்று கருதுவரேல், அவ்வளவு சாமான்யமானது கலையாகாது. அத்தகைய கலை இருத்தலுமாகாது”. அதைத் தொடர்ந்து சேரன் செங்குட்டுவனையெல்லாம் இழுத்துப் பல பக்கங்கள் பேசுகிறார்.
முடிவுரை:
முட்டைக்குள் வசிப்பவர்கள் முட்டை ஓட்டை யாராவது உடைத்துவிடுவார்களோ என்றுதான் பயந்து கொண்டிருப்பார்கள்.

anna book.png
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 27, 2024, 5:07:59 PMJan 27
to மின்தமிழ்
ref:  https://www.facebook.com/velusamy.po/posts/pfbid02DUV47RLMd7K2rKghbqqbfwgj5zdnGkQ28NyhqeoFnGUrCz4iJGHv7Tox3Nuz5WxXl


உலகத்தை மாற்றிய புத்தகங்கள்
நண்பர்களே…
கொடியவர்களான ஆட்சியாளர்களை நடுங்க வைத்து, அலற அடித்ததும், மக்கள் அனைவரும் சமமான தகுதியுடையவர்கள் என்று அவர்களுக்கு உணர்த்தி அதனால் அவர்கள் சுதந்திர மனிதர்களாகக் கிளர்ந்து எழ வைத்ததும் ஆன புத்தகங்கள் பல ஐரோப்பாவின் அறிவு மலர்ச்சிக் காலத்தில் அறிவின் வெடிகுண்டுகளாக வெளிவந்தன. இத்தகைய நூல்களைக் கண்டு ஆட்சியாளர்கள் அலறிய விதத்தை இந்த நூலை எழுதிய ஆசிரியர் “ராபர்ட் பி.டவுன்ஸ்” கூறுவதாவது…
“ ஒவ்வொரு சகாப்தத்திலும் ( ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ) புத்தகங்களின் உள்ளுறை சக்தியை உணர்ந்தறியும் சாமா்த்தியசாலிகளாகச் “சர்வாதிகாரிகள்” இருந்து வந்துள்ளனர். “கொடுங்கோலர்களும்” “சர்வாதிகார ஆட்சிகளும்” எப்பொழுதேனும் எங்கேனும் எதிர்ப்பை அடக்கவும், கருத்துக்களை அழிக்கவும் விரும்பியபோதெல்லாம், ஒவ்வொரு தருணத்திலும் மாறுபட்ட கருத்துக்களைத் தாங்கி நிற்கும் புத்தகங்களையும் பல சமயம் அவற்றை இயற்றியவர்களையும் ( ஆசிரியர்களையும் ) அழித்துவிட வேண்டுமென்றே முதல் முதலாக எண்ணமிட்டனர்..”
இவ்வாறான அரசியல் தொடர்பான நூல்கள் மட்டுமல்லாது அறிவியல், உளவியல், தொழில்நுட்பம், நாவல், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் பெரும் மாற்றத்தையும் அதனால் அக்காலத்தில் பெரும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி இன்றும் உலக மொழிகளில் எல்லாம் மொழிப்பெயர்க்கப்பட்டும் அறிஞர்கள் பலரால் பாராட்டப்பட்டும் பரப்பப்பட்டும் வருகின்ற 16 வகையான நூல்களைப் பற்றியும் மிகவும் சுவையாக எழுதப்பட்டுள்ள இந்த நூலை வெகு காலத்திற்கு முன் நான் படித்தேன். மீண்டும் இந்த நூலை இணையத்தில் கண்டவுடன் மறுபடியும் படித்தேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற ஆவலில் இந்த நூலின் இணையதள இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.

தேமொழி

unread,
Jan 28, 2024, 1:08:43 AMJan 28
to மின்தமிழ்
ref :  https://www.facebook.com/photo/?fbid=10228231601389617&set=a.1214544398150


"இராமன் கதை கேளுங்கள்'

- புதுமைப்பித்தன்

'நாரத இராமாயணம்' என்கிற நெடுங்கதையைப் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். இதன் மூலக்கதையை ஓலைச்சுவடியில் கண்டடைந்ததாகவும் அது சமஸ்கிருத மொழியில் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இராவண வதம் முடிந்து இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்துவிட்டிருக்கிறது. வடக்கிலிருந்து மேற்கு வரையிலான இராஜ்ஜியத்தைத் தனக்கு வைத்துக் கொண்டு கிழக்குப் பகுதியைப் பரதனுக்கும் தெற்குப் பகுதியை லக்ஷ்மணனுக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறான். அதற்குப் பிறகு, அரண்மனையைவிட்டு அவன் வெளியே செல்வதே இல்லை. நாட்டு நடப்புகளிலும் மக்கள் நலனிலும் அக்கறையின்றி விட்டேற்றியாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறான். அவனது எண்ணமெல்லாம் போர் புரிவதில்தான் உள்ளது. ஏனெனில், அவனது வில்லும் அம்புகளும் தூசு படிந்து கிடப்பதைக் காண அவனுக்குச் சகிக்கவில்லை.

அதனால் கருவுற்றிருக்கும் சீதாப் பிராட்டியைக் காட்டிற்குத் துரத்தி விடுகிறான். எவனாவது அரக்கன் வந்து அவளைக் கடத்திக்கொண்டு சென்றால் அதைக் காரணமாக வைத்து மீண்டும் வதம் செய்யப் புறப்படலாமே என்கிற வஞ்சக எண்ணம்தான் அவனுள் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அவளோ குழந்தைகளைப் பெற்றெடுத்து நலமுடன் வீடு திரும்பி விடுகிறாள். இந்த நாட்டிலிருக்கிற அரக்கர்களுக்கு எல்லாம் என்னாயிற்று என இராமன் விசனப்படுகிறான்.

தெற்கிலுள்ள அரக்கர்களை எல்லாம் கொன்றுவிட்டோம் என்றும் இமயமலைப் பக்கம் சென்று பார்க்கலாம் என்றும் அனுமன் யோசனை சொல்கிறான். இராமனும் அனுமனும் சீதாவும் இமயத்திற்குக் கிளம்பிச் செல்கிறார்கள். சீதாவைக் குகையினுள் தனித்திருக்கச் சொல்லிவிட்டு, அனுமனும் இராமனும் மறைந்திருந்து, எவனாவது வர மாட்டானா என ஏக்கத்துடன் நோட்டம் விடுகிறார்கள். அங்கேயும் எந்த அரக்கனும் வருவதில்லை.

அந்தக் கடுங்குளிரில் சீதாவின் உடல் நடுக்கம் கொள்கிறது. ஒரு தார்ப்பாய் செய்து தரச் சொல்லி இராமனிடமும் அனுமனிடமும் கேட்கிறாள். இருவருக்குமே ஓலை பின்னுவது எப்படியென்று தெரியவில்லை. கொழுந்தனார் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என சீதா வருத்தப்படுகிறாள். 'இதுக்குக்கூட நீங்கள் இருவரும் பிரயோஜனமில்லையா?' எனக் கோபத்துடன் கேட்கிறாள். அவளது வார்த்தைகள் கூர்வேல் நெஞ்சில் பாய்ந்ததைப் போல இராமனை நிலை குலையச் செய்கின்றன. மூவரும் அரண்மனைக்கே திரும்புகிறார்கள்.

லவனுக்குத் திருமணம் செய்துவைத்து அவனையே அரசனாக்குகிறார்கள். அவனுக்கு நான்கு மகன்கள் பிறக்கிறார்கள். இராமனின் மூத்த பேரன் நோஞ்சானாக இருக்கிறான். இரண்டாவது பேரனுக்குப் பூஜை சடங்குகளிலும் பாராயணம் கேட்பதிலும் ஆர்வம் இருக்கிறது. மூன்றாமவனுக்குக் குடியிலும் சல்லாபிப்பதிலும் நாட்டம். நான்காவது பேரனுக்கோ அரச சாம்ராஜ்ஜியத்தைத் துறந்து குடியானவனாக வாழும் எண்ணம்தான் இருக்கிறது.

இராமனும் அனுமனும் பழங்கதைகள் பேசிப் பொழுதைக் கழிக்கிறார்கள். தங்களது வீரப் பராக்கிரமச் செயல்களைத் தினந்தோறும் நினைவில் மீட்டுச் சுகிப்பதில் அவர்கள் இருவருக்கும் அத்தனை ஆர்வம். இராமாயண பாராயணத்தை முதலில் தொடங்கியவர்களே இராமனும் அனுமனும்தான் என்று புதுமைப்பித்தன் நக்கலடிக்கிறார். இவர்களுடன் நோஞ்சான் பேரனும் இணைந்து கொள்கிறான். ஞாபக மறதியினால் சில சம்பவங்களை இராமன் மாற்றிச் சொல்லும்போது அனுமன் அவற்றை அன்புடன் திருத்துகிறான்.

பாராயணம் செய்து மூச்சிளைத்தால் அது நுரையீலைப் பாதிக்கும் என அரண்மனை மருத்துவர் எச்சரிக்கிறார். அதனால், இராம காதையைப் பாராயணம் செய்து உடலை வதைத்துக் கொள்ள வேண்டாம் என மூத்த பேரனைச் சீதாப்பிராட்டி தடுத்து விடுகிறாள். இவ்விஷயம் இராமனுக்கு ஆழமான வருத்தத்தைத் தருகிறது.

இந்திரன் விண்ணிலிருந்து இறங்கி வந்து பாற்கடலில் பாசி படிந்திருப்பதாகவும் பூலோகத்தை விட்டு நீங்கி விண் புக வேண்டுமென்றும் வேண்டுகோள் வைக்கிறான். வேறு வழியின்றி இராமனும் அதற்கு ஒப்புக்கொள்கிறான். இராமன் இறந்து, லவனும் இறந்து, இப்போது மூன்றாவது பேரனை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். ஆம், அந்தக் குடிகாரப் பேரனைத்தான்.

நாட்டின் நிதி நிலைமை மோசம் அடைகிறது. பிணியாலும் பட்டினியாலும் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா நாளும் உபவாசம் இருப்பதென்பது சொர்க்கத்திற்குச் செல்லும் வழிதானே என்று பட்டினிச் சாவுகளை அலட்சியப் படுத்துகிறார்கள். கொஞ்சம் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளவோம் என்று கஞ்சித் தொட்டிகள் அமைக்கிறார்கள்.

நிலைமை கவலைக்கிடமாக ஆகும்போது நாட்டின் சரிவை எப்படிச் சீர் செய்வதென பூஜை புனஸ்காரங்களில் நம்பிக்கையுடைய இரண்டாவது பேரனிடம் ஆலோசனை கேட்கிறார்கள். இதற்குப் பரிகாரமாக இராம ஜென்ம பூமியில் இராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்கிறான். அப்படிச் செய்தால் மட்டுமே பாவங்கள் நீங்கி நாட்டு மக்களுக்கு விமோசனம் கிட்டும் என ஆருடம் சொல்கிறான்.

மிச்சமிருக்கிற அரசாங்க கஜானாவைச் சுரண்டி இராமனுக்குக் கோவில் கட்டுகிறார்கள். இராம இராஜ்ஜியம் மலர்ந்துவிட்டதெனப் பூரித்துப் போகிறார்கள்.

(இதற்குப் பிறகும் கதை நீள்கிறது. ஆங்கிலேய ஆட்சி வரைக்கும் எவரையும் விட்டு வைக்காமல் பகடி செய்திருக்கிறார் புதுமைப்பித்தன். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். அவருக்கு இந்த 'நாரத இராமாயண' ஓலைச்சுவடி சீனாவில் கிடைக்கிறது.)

- Gokul Prasad

தேமொழி

unread,
Jan 31, 2024, 8:23:01 PMJan 31
to மின்தமிழ்
ref : https://www.facebook.com/velusamy.po/posts/pfbid02cN3a6TjKvNfQm7hAuMLQRsPHtpP5RVqsYE3X7Z6a2Bnskb6ytfX5WiYB31fFpujNl
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. எழுதிய சிறந்த நூல்களின் PDF வடிவம்
நண்பர்களே…
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களுள் தமிழர்களால் மறக்கமுடியாத ஆளுமையாக நிலைபெற்றுவிட்டவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். கொடிய வறுமையின் காரணமாக சிறுவயதிலேயே உழைத்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர் ம.பொ.சி. இருப்பினும் தன்னுடைய சுயமான முயற்சியால் சிறந்த தமிழ் அறிஞராகவும் சிறைக் கண்டு அஞ்சாத சுதந்திர போராட்ட வீரராகவும் வாழ்ந்தவர்.
இவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்த அனுபவங்களையும் சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த “மொழி போராட்டம்”, “மாநில எல்லைப் போராட்டம்” போன்ற பல்வேறு வகையான அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு மக்களுக்கு வழிகாட்டியவர். இத்துடன் கூடவே தமிழ் மக்களின் மொழி வரலாறு, பண்பாட்டு வரலாறு போன்றவற்றை நன்கு பயின்று சிறந்த நூல்களை ஆக்கித் தந்த சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்து சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி போன்ற மாபெரும் மனிதர்களின் வாழ்க்கையை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியதில் இவருடைய பங்கு மறக்க முடியாதது ஆகும்.
இவ்வாறு பலதுறைகளில் பெருமையும் மதிப்பும் பெற்ற தலைவரின் சிறந்த சுவையான நூல்களை உங்கள் கைகளில் கிடைக்க செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நூல்களின் இணையதள இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.

ம.பொ.சி. எழுதிய நூல்கள்
2. எனது போராட்டம் -1 [1974] 3. எனது போராட்டம் -2 [1974] 4. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு [1964] 5. ஆன்மீகமும் அரசியலும் [1980] 6. காந்தியடிகளும் ஆங்கிலமும் [1961] 7. இலக்கியங்களில் புத்திரசோகம் [1986] 8. இன்பத் தமிழா? இந்தி – ஆங்கிலமா? [1963] 9. கம்பரும் காந்தியடிகளும் (1981) 10. கண்ணகி வழிபாடு [1950] 11. சிலம்புச் செல்வரின் பல்கலைக் கழகப் பேருரை [1984] 12. சிலப்பதிகாரமும் தமிழரும் [1947] 13. சிலப்பதிகார ஆய்வுரை [1979] 14. ஆங்கிலம் வளர்த்த மூடனம்பிக்கை [1982] 15. பாரதியார் பற்றிய ம.பொ.சி.பேருரை [1983] 16. மொழிச் சிக்கலும் மாநில சுயாட்சியும் [1968] 17. சுதந்திரப் போரில் தமிழகம் [1948] 18. தமிழா?ஆங்கிலமா? [1961] 19. தமிழர் கண்ட காந்தி [1949] 20. உலக மகாகவி பாரதி [1966] 21. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963] 22. வள்ளலாரும் பாரதியும் [1965] 23. வள்ளுவர் வகுத்த வழி [1952] 24. வந்தே மாதரம் வரலாறு [1977] 25. வேதாரணியத்திலிருந்து டில்லி ராஜ்காட் வரை [1988] 26. வீரபாண்டிய கட்டபொம்மன் [1949] 27. விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு [1978]

தேமொழி

unread,
Jan 31, 2024, 11:37:01 PMJan 31
to மின்தமிழ்
ref: https://www.facebook.com/photo/?fbid=10224505883905614&set=a.4848200853896


Ritual and Mythological Sources of the Early Tamil Poetry.png
Finally, my teacher late Prof. Alexander Dubiansky's opus magnum "Ritual and Mythological Sources of the Early Tamil Poetry" has been published in Tamil translation - 30+ years after its original publication in Russian, and 20+ years after its improved and expanded English edition appeared. It was a long-time dream of Alexander that his book would be translated into Tamil one day and would find its way to the Tamil-speaking audience in India and other countries. And finally this day has come - thanks to outstanding efforts of its Tamil translator P. Kamalakannan. The book is published with my short preface attempting to contextualize Prof. Dubiansky's scholarly work for its Indian readers.
----------------------------------------------------------------------

தேமொழி

unread,
Feb 13, 2024, 3:42:34 PMFeb 13
to மின்தமிழ்
இந்தியா முழுவதும் தமிழே பேசப்பட்டது.. என்னும் உண்மை இந்நூலின் வழி நிறுவப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் பழந்தமிழ் சொற்களின் இருப்பு என்னும் இவ்வாங்கில நூலை செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விலை ரூ 300
நிறுவனத்தில் அல்லது பொத்தகக்கண்காட்சியில் 50% கழிவில் 150 ரூ க்கு பெறலாம்
அமேசான் கிண்டில்  வழியிலும் பெறலாம்
#வாட்சப் செய்தி 
-----------------

Presence of Ancient Tamil Words In Other Indian Languages
tamil and indian languages.jpg
AUTHOR: R. MADHIVANAN
PUBLISHER: CENTRAL INSTITUTE OF CLASSICAL TAMIL, CHENNAI
LANGUAGE: ENGLISH
EDITION: 2023
ISBN: 9788196098933
PAGES: 221

Book Description
About The Book
Modern linguists, following Pävanar's research methodology, are highlighting the resemblances between ancient Tamil words and those in various Indian languages, particularly North Indian languages once thought to be Indo-European. This inquiry raises a pivotal question: whether North Indian languages belong to the Indo-European or Dravidian family.

Greenberg and Merritt Ruhlen, American scholars, have published typological research findings, a guiding beacon in unraveling humanity's common basic vocabulary. By comparing basic word lists from global language families, they seek shared vocabulary dating back to the inception of human speech. A similar typological study could unveil a common birthplace for Tamil and the ancient Prakrit language, a precursor to North Indian languages, also known as Vada Tamil or Northern Tamil.

It's notable that even before the Aryan influx, North India was inhabited by proto- Dravidians, explaining the Tamil roots in place names, flora and fauna names. agricultural terms, basic vocabulary, verbs, and case markers in North Indian languages. Historian and linguist George Erdosy remarked, "All Indians once spoke Dravidian before adopting Indo-Aryan."

Max Müller and others, not delving deeply into the historical origins of North Indian languages, primarily noted Sanskrit nouns, concluding Indo-European affiliation. However, it's crucial to note that while languages may borrow nouns from others, verbs, case markers, and other grammatical features resist borrowing. In North Indian languages, these linguistic features have Tamil origins.

About the Author
Dr. R. Madhivanan specializes in Tamil etymological studies and formerly served as the Chief Editor of the Tamil Etymological Dictionary project initiated by the Government of Tamil Nadu. He has authored four books on the decipherment of the Indus script, with his latest work titled "Indus Script among Dravidian Speakers" published in 1995.

Madhivanan's approach to deciphering the Indus script is based on several fundamental principles. He posits that the Indus civilization originated in Kumari Kandam, an ancient Tamil land, and that the people inhabiting the Indus Valley were Tamils. He also asserts that the language of the Indus civilization was Tamil. Madhivanan suggests that the Indus script is syllabic and written from left to right, similar to the Tamil script. He applies the grammatical rules of Tolkäppiyam to the Indus language.

Preface
I am thankful to the authorities of the Central Institute of Classical Tamil, Chennai for having sanctioned a one-year project (2012 2013) under the title "Presence of Ancient Tamil Words in Other Indian Languages".

North Indian languages are classified as Indo-European and South Indian languages as Dravidian languages. William Jones and Max Müller have established the close relationship of Sanskrit with the European languages. Ellis (1816) and Robert Caldwell have proved the close relationship of South Dravidian, Central Dravidian and North Dravidian languages and they have further established that Tamil and Dravidian family languages owe nothing to Sanskrit.

But modern linguists and others who follow Pavanar's methodology of research are throwing light on similarities of basic ancient Tamil words in all the other Indian languages, preferably North Indian languages hitherto believed to belong to Indo-European languages.

Their work has raised a new question: Do the North Indian languages belong to Indo European family or to the Dravidian family. Greenberg and Merritt Ruhlen of the USA have published their research findings on typological research which is believed to be a guiding star to trace the basic common vocabulary of the Mother tongue of mankind. They compared the list of basic words in all language families of the world to find out the shared vocabulary from the days of the emergence of the first human speech.

Foreword
The Government of India established Central Institute of Classical Tamil (CICT) in Chennai. It has been functioning as an autonomous Institution. The main objective of this institute is to promote and safeguard the uniqueness of Classical Tamil by encouraging further studies. The literary works of the Sangam Age are considered to be the treasure trove not only of Tamil Nadu but also of the whole nation, since they are unsurpassed in world literature.

Tamil Classical language stresses the oneness of mankind and paves way for national integration. Sangam Tamil poet Kaniyan Poonkundran proclaimed "Every town is my town and all men are my kith and kin".

Keeping in mind the observations of many scholars that the Indus Civilization is of Dravidian origin, Dr. R. Madhivanan selected the subject "Presence of Ancient Tamil words in other Indian Languages" for his project work announced by CICT (2012-2013). He has satisfactorily compleated the project work assigned to him.

He has followed a novel method of collecting typological basic terms of similar words with similar meanings irrespective of derivational changes at the morphological level but retaining the same semantic content. This type of methodology has already been followed by Greenberg and Merritt Ruhlen in the USA.

The best found in classical Tamil need to be shared by all, in our uni-cultural India. It is with this expectation that CICT brings out this book to the limelight.

Let us hope the present generation of scholars, historians and linguists of comparative and historical linguistics will evince keen interest in this attempt of strengthening national integration.

A Similar typological study will pave the way to trace a common birthplace of Tamil and the old Prakrit language which was the mother of all the North Indian languages otherwise known as Vada Tamil Northern Tamil. It is to be noted here that even before the advent of the Aryans, North India was populated by proto-Dravidians. That is why the place names, names of flora and fauna, agricultural terms, basic words, verbs and case markers in North Indian Languages happen to be Tamil.

Introduction
Classical Tamil is the fundamental and core fountainhead of the family of Dravidian languages. Similarities are quite common in a language family. But its ramification and impact on other Indian languages need a special study. Such a study paves way for a novel research in typology which will open vistas to track the journey of words trespassing the geographical and historical boundaries. Further, the chronological fixation of typologies will throw light on the puzzle.

Generally, it is a hidden fact that the geographical distribution of basic words will denote the geographical distribution of people. Another hidden fact is that verbs, case markers and basic grammatical features are never borrowed from one language family to another language family. Inter-family borrowings or loan words invariably happen to be only nouns. They come under the category of borrowed vocabulary.

In spite of the above fact, if verbs, case markers and other grammatical features are found in other language families, (so-called Indo Aryan languages like North Indian languages), such a geographical distribution of words comes under the category of carried vocabulary. This study begins from a very remote common parentage and such a study needs to be renamed language Archaeology.

That is why R.C. Trench in his elegant lecture on the study of words observed, "Language is fossil poetry and fossil history as well, language is the amber in which a thousand precious and subtle thoughts have been safely embedded and preserved. Far beyond all written records, the language stretches back and offers itself for our investigation. Language is never false, never deceives us". Language is made up of words. All words have their root in the mother tongue of mankind. This connectivity cannot be ruled out. Max Müller has rightly observed, "It was quite clear that though we might trace new out of old words, no man can ever frame at his own pleasure a word entirely new.

தேமொழி

unread,
Feb 24, 2024, 2:24:24 AMFeb 24
to மின்தமிழ்
A Rare Book . . . 
The History Of The Braminical Castes,Conataining A Minute
Description Of The Origin, Ceremonies, Idolatry, Manners,
Customs Of The Forty-Two Sects Of Bramis Of The British
Indian Empire.
Author: Etienne Alexander, Rodriguez
Published : London,1846
https://archive.org/details/dli.venugopal.809/mode/1up


தேமொழி

unread,
Mar 6, 2024, 3:22:58 AMMar 6
to மின்தமிழ்
feminism books.jpeg
-------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Mar 6, 2024, 5:58:43 PMMar 6
to மின்தமிழ்
kairathi.jpeg

கைரதி 377:
மாறிய பாலினரின் மாறாத வலிகள்
ஆசிரியர் - மு.ஆனந்தன்
விலை - ₹120
வெளியீடு -  2022
பக்கம் -  120
பதிப்பகம்  - பாரதி

கைரதி377...                                  
மு.ஆனந்தன் அவர்களின் கைரதி 377 சிறுகதைத் தொகுப்பு குறித்து 
க.மணிமாறன் அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை..

எல்லோருக்குமான உலகில்
எதன் பொருட்டாவது
எல்லோரையும் எடை போடும் பழக்கம்
மானுடப் பிறவியில் மட்டுமே
மாறாமல் நீள்கிறது.
அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு,
மதம், ஜாதி, நிறம், பணம், மொழி,
பாலினம் என பல மாறுவேடம் அணிகிறது.

நவீனம் பெருகியும்
நாகரிகம் மாறியும்
உடலில் ஏற்படும்
உயிரியல் மாற்றங்களை
மானுடம் ஏன் இன்னுமும்
உணர மறுக்கிறது எனும்
அடிப்படைக் கேள்வியே
முன்வைக்கிறது கைரதி 377.

கைரதி என்னும் சொல்லாடல்
மாறிய பாலினர்களுக்கான
நிரந்தர நம்பிக்கையாகவே
இத்தொகுப்பில் இடம்பெறுகிறது.

"ஓலையாக்கா லாக்கப்,
அதிகாரமிகுந்த காவல்துறை
அத்து மீறும் போது
தெய்வமாகும் ஓர் கைரதியின் கதை.
முழுக்க வலிமிகுந்த தொகுப்பென்பதை
முதல் கதையிலேயே எழுத்தாளர் அடையாளப்படுத்துகிறார். 
அடுத்தடுத்த கதைகளுக்கு ரணமோடு நம்மை நகர்த்த
வாசகர்களை தயார்படுத்துகிறார்.

இதரர்கள்
இல்லத்தில் இடம் கொடுக்க
மறுக்கும் மானுடக் கூட்டம்,
விண்ணப்ப படிவங்களிலும்
மூன்றாம் பாலினர் மீதான
வெறுப்பை விதைப்பதையும்,
அதை எதிர்த்து கேள்வி எழுப்பும்
சட்ட ரீதியான போராட்டங்களையும் முன்னெடுக்கும் கதை.

சுயநலத்திற்காக அழைத்து வரப்படும்
கைரதி சமையலில் கெட்டிக்காரி.
மாதவிடாய் சார்ந்த மூன்றாம் பாலின ஏக்கங்கள், 
நாப்கின் நுகர காத்திருக்கும் நாசிகள் என சமூகத்தில் பேச வேண்டிய,
விழிப்புணர்வு தரக்கூடிய தரமான படைப்பு.
பூமிக்கு இன்னும் தேவை
நிறைய பூர்விகாக்கள்.

தொகுப்பில் ஆறுதலான கதை
 நஸ்ரியா ஒரு வேசக்காரி.
இஸ்லாமிய பின்னணியில் வாழ்ந்த பெண் ஆணாக வாழ நினைத்து
ஆணாகவே வாழ்ந்த கதை.
உறுப்புகள் சார்ந்த உளவியல் எண்ணங்களை நுட்பமாக கையாண்ட கதை.

மாத்தாராணி கிளினிக்
பெற்றவர்களால் கைவிடப்படும் கைரதி மருத்துவராக மாறி நிற்கும் பெரும் நம்பிக்கை அளிக்கும் கதை.
துடி துடிக்க வைத்த எழுத்தாளரின் விரல்கள் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது இக்கதையில்.

மூன்றாம் பாலினர்களுக்கான
தனி கழிவறை இல்லா சோகமே அடையாளங்களின் அவஸ்தை.

இயற்கை உபாதைகளைக் கழிக்க
மூன்றாம் பாலினம் படும் பாடு பெரும்பாடு.
பொது புத்தியோடும் வன்மத்தோடும்
திரியும் மிருகக் கூட்டங்கள் இதைப் பற்றி சிந்திக்கப் போவதுமில்லை.
அரசாங்கமும் இதை ஒட்டிய தீர்க்கமான திட்டத்தை வகுக்கப் போவதுமில்லை.

பாதுகாப்பிற்காக கொண்டு வந்த சட்டம்,
அதிகாரத்தின் பெயரில் பழி சுமத்துவதற்காகப் பயன்படுவதையும்,
மரணத்திற்கும் மேலான கொடுமைகளை மூன்றாம் பாலினம் எதிர்கொள்வதையும்,
சமூகத்தில் தப்பிக்க வழியின்றி பலியாடு ஆவதையும் உள்ளபடியே பதிவு செய்கிறது
377 ஆம் பிரிவின் கீழ் கைரதி.

தொகுப்பில் எனை வெகுவாக
பாதித்த கதை ஜாட்ளா. உதவித்தொகைக்காக சான்றிதழ் வாங்க செல்லும் கைரதி,
மனிதமற்ற பிணங்களால்
நொந்து போகும் அழுத்தமான கதை.
அருவருப்பாகவே பார்த்து வாழும் அறிவற்றவர்களுக்குள் இருக்கும் அசிங்கமான எதிர்பார்ப்பை வெளிக்கொணர்கிறது ஜாட்ளா.

பரபரப்பான எழுத்து
பதபதக்க வைக்கும் நிகழ்வுகள்
இழப்புகளை சந்திக்கும்
இனத்திற்கான நியாயம்,
மனிதம் அடங்கிய பார்வை, பொதுப்புத்தியை எதிர்த்த கேள்விகள் என ஒட்டுமொத்த மக்களுக்கான
அறம் சார்ந்த படைப்பு கைரதி 377.

எண்ணற்ற தகவல்களோடு,
நம் சீரற்ற சிந்தனைகளோடு
உரையாடல் நிகழ்த்தும் படியான,
மூன்றாம் பாலினம் சார்ந்த
உளவியல் எண்ணங்களை
வெளிப்படையாகப் பேசும்
தரமான தொகுப்பு.

நூலினைப் பெற
மு.ஆனந்தன்
94430 49987

வாழ்த்துகள் தோழர்
மு. ஆனந்தன்

க. மணிமாறன் 

தேமொழி

unread,
Mar 12, 2024, 5:55:07 PMMar 12
to மின்தமிழ்
periyar ariviyal.jpeg
-------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Mar 25, 2024, 4:37:42 AMMar 25
to மின்தமிழ்


macaulay.jpg

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பதிப்பில் வெளியான 'நவீன கல்விக் கொள்கையை நோக்கி: மெக்காலே கூறியது என்ன?' என்ற நூலை டிஜிட்டலில் படிக்க PDF வடிவில் கொடுத்துள்ளோம். புத்தகத்தை நேரடியாக வாங்க இயலாத பலருக்கு இது உதவியாக இருக்கும்.

https://rmrl.in/publications/macaulay_rmrl.pdf
---------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Apr 22, 2024, 10:49:34 AMApr 22
to மின்தமிழ்
புத்தகம் பேசுது - ஏப்ரல் 2024 மாத இதழில்  
முனைவர் க. சுபாஷிணி எழுதிய
"மெட்ராஸ் 1728"
நூல் பற்றிய நூல் மதிப்புரை
page 1 suba  book review.jpeg

page 2 suba  book review.jpeg

page 3 suba  book review.jpeg
page 4 suba  book review.jpeg
------------------------------------------------------------------------------------------------------------- 

தேமொழி

unread,
May 7, 2024, 12:22:12 PMMay 7
to மின்தமிழ்
The Passage of Tamils.jpg
ஏறக்குறைய 9 மாதங்கள்.. குறிப்பாக கடந்த 3 மாதங்கள் இரவு பகல் எனது பல மணி நேரங்களை எடுத்துக் கொண்ட எனது புதிய ஆங்கில மொழியில் அமைந்த ஆய்வு நூல் இப்போது அச்சுக்குத் தயாராகி விட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்த “தமிழர் புலப்பெயர்வு - பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு” என்ற தலைப்பிலான எனது தமிழ் ஆய்வு நூலின் ஆங்கில வடிவமாக The Passage of Tamils - A History of Migrations and Settlements என்ற தலைப்பில் இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றேன்.
ஏறக்குறைய 2500 ஆண்டுகால தமிழர்களின் உலகளாவிய புலப்பெயர்வுகளையும் அவை ஏற்படக் காரணமாகிய நிகழ்வுகளையும், அவற்றின் வரலாற்றையும் தமிழ் அறியாத, ஆங்கிலம் வழி அறிந்து கொள்ள விழையும் உலகளாவிய ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பயன்பெறும் வகையில் இந்த நூல் வெளிவருகின்றது. இந்த நூல் Black Town Publishers பதிப்பகத்தின் வெளியீடாக வருகின்றது.
தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல ஆய்வு நூலை உருவாக்கியிருக்கின்றோம் என்ற மனநிறைவு ஏற்படுகின்றது. நூல் வெளிவரும் தேதியைச் சில நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.
-சுபா
7.5.2024

தேமொழி

unread,
May 12, 2024, 12:12:18 AMMay 12
to மின்தமிழ்
இந்திய நாகரிகம் பற்றிய புனித நூல்

 — பக்தவத்சல பாரதி

viyaththagu-india.jpg
வியத்தகு இந்தியா
ஏ.எல்.பாஷம் (தமிழில்: க.பூரணச்சந்திரன்)
அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ.870
தொடர்புக்கு:
04332- 273 444

ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு புனித நூல் உண்டு. இந்திய நாகரிகத்தைப் பற்றிய புனித நூல் ஏ.எல். பாஷம் எழுதிய 'வியத்தகு இந்தியா'. விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் பதிப்பின் மொழிபெயர்ப்பினை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு 1954இல் வந்தது. இதுவரை இரண்டாம் பதிப்பையே நாம் வாசித்து வந்தோம். இந்தப் புதிய பதிப்பினை பூரணச்சந்திரன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

திராவிடச் சான்று, திராவிட உறவுமுறை உள்ளிட்ட அறிவார்ந்த நூல்களை எழுதிய தாமஸ் டிரவுட்மன் மூன்றாம் பதிப்புக்குப் பெறுமதியான முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இவர் ஏ.எல். பாஷமின் மாணவர். இதனால் வெளியுலகம் அறியாத செய்திகள் பலவற்றை முன்னுரையில் பேசியிருக்கிறார். இதில் இந்தியவியல் பற்றிய புதிய பார்வையை முன்வைக்கிறார். இதற்காகவே இந்த நூலை வாசிக்கலாம்.

ஏ.எல்.பாஷம் இந்தியாவின் மறைந்து போன ஆசீவகம் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். சமஸ்கிருதத்தில் புலமை மிக்கவர். இப்பின்புலத்துடன் பாஷம் இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முக மரபுகளை வரலாற்று வரைவியலாக எழுதியுள்ளார். ஆனால், இவருடைய பார்வை. முற்றிலும் மாறுபட்டதாகும். இந்தியாவை ஐரோப்பிய அறிவு மரபிலிருந்து அணுகுகிறார். 'அயல் பார்வையில் இந்தியா' என்பதே இந்த நூலில் மறைந்திருக்கும் அணுகுமுறை. இதற்கான காரணத்தை முன்னுரையில் விளக்கியிருக்கிறார். இந்திய நாகரிகத்தைப் பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை பல ஆயிரம் ஆண்டுகள் நிகழ்ந்த பயணத்தை விவரிக்கும் முறையியல் அபாரமானது. பாஷமின் நுட்பமான தேடுதலும், காத்திரமான பகுப்பாய்வும், நேர்த்தியான எடுத்துரைப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. முதற்பதிப்பில் விடுபட்டாலும் மூன்றாம் பதிப்பில் தமிழ் மரபின் சாரத்தைக் கருத்தூன்றி விவாதிக்கிறார்.

இந்த நூலின் பரப்புக் கடலென விரிகிறது. இந்திய நாகரிகம், பண்பாடு, மதங்கள் எனும் வரிசை ஒரு புறம். சிந்துவெளி நாகரிகம், வேதகாலம், அடுத்தடுத்த பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், காலனித்துவக் காலம் வரையிலான வரிசை மறுபுறம். பிரபஞ்சவியல், நிலவியல், வானியல், பஞ்சாங்கம், கணிதம், மொழி, இலக்கியம், சமூகம், அன்றாட வாழ்வு, கலைகள் எனும் வரிசை இன்னொரு புறம். இவை சார்ந்து எண்ணற்ற பிரிவுகள் தொடர்கின்றன. இந்திய மரபில் இவ்வளவு நீள, அகல, ஆழம் இருக்கிறதா எனும் வியப்பு நம்மைக் கவ்விப் பிடிக்கிறது. இந்த நூல் இந்திய மரபின் கலைக்களஞ்சியம் எனலாம். ஒரு முழுமை நோக்கிய பார்வை இதிலுள்ளது. மேற்குலகின் செவ்வியல் மரபுக்குரிய பாஷம் இந்திய மரபின் ஆணி வேரினை அலசிக் காட்டுகிறார். இந்த நூலில் இந்திய மதங்கள் பற்றிய அத்தியாயம் மிகவும் நீண்டுள்ளது. இதிலிருந்து அவர் காட்டும் சித்திரம் இதுவரை நாம் காணாதது. 'வியத்தகு இந்தியா' எழுதப்பட்டதற்கு ஒரு வலுவான பின்னணி இருந்தது. பாஷத்தின் ஆசிரியர் எல்.டி.பார்னெட் 1913இல் 'இந்தியாவின் தொல்பொருட்கள்' (Antiquities. of India) எனும் நூலினை எழுதினார். அதன் தொடர்ச்சியாகச் சமகாலம் வரை எழுத முனைந்தார் பாஷம்.

பாஷம் எழுதுவதற்கு முன்பு வின்சென்ட் ஸ்மித் 1904இல் 'இந்தியாவின் தொடக்ககால வரலாறு' (Early History of India) எனும் நூலினை எழுதியிருந்தார். அக்காலத்தில் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்நூல் ஒரு தர நிர்ணயத்தை உருவாக்கியிருந்தது. இதில் ஸ்மித் இந்தியர்களையும் அவர்களின் மரபுகளையும் ஏளனப்படுத்தி எழுதியிருந்தார். இவர் 30 ஆண்டுக் காலம் இந்திய மக்கள் பணியில் கடமையாற்றியவர். ஸ்மித்தின் கருத்துகளைத் தலைகீழாக்கி, ஓர் அறிவார்ந்த பார்வையில் இந்தியாவைக் காட்டியவர் பாஷம். மேற்குலகத்தாரை இந்தியா பக்கம் திருப்பியதில் 'வியத்தகு இந்தியா' வெற்றி பெற்றது. இந்தியர்கள் பெருமையோடு போற்ற வேண்டிய புத்தகம் இது.

பக்தவத்சல பாரதி
மானிடவியலாளர்
தொடர்புக்கு: bharath...@gmail.com

நன்றி: இந்து தமிழ் திசை, மே 11, 2024

குறிப்பு:
வியத்தகு இந்தியா - ஏ.எல்.பாஷம் - நூலின் முதல்  பதிப்பின் - 1963 மறு வெளியீடு  நூலகம் தளத்தில் படிக்கலாம்
https://noolaham.net/project/46/4528/4528.pdf


இணைப்பில் நாளிதழ் பதிவு காண்க . . . 
viyaththagu-india news.jpg

தேமொழி

unread,
May 14, 2024, 2:10:40 AMMay 14
to மின்தமிழ்

தமிழ்  செவ்வியல்    நூல்களையும் அவற்றுக்கான உரைகளையும் 
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பாவேந்தர் நூலகம்
தளத்திலிருந்து படிக்கலாம் நூல்களைத் தரவிறக்கமும் செய்யலாம். 
கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு அக்காலப்பகுதியில் தோன்றிய நூல்களைச் செவ்வியல் நூல்களெனக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அந்நூல்கள் கீழ்வருமாறு:

books.jpg

---------------------------------------------------------------

தேமொழி

unread,
May 17, 2024, 5:57:45 PMMay 17
to மின்தமிழ்
நாமக்கல் கவிஞர் என அழைக்கப் பெற்ற திரு. வெ. இராமலிங்கம் அவர்களின் நூல்களை 
இத்தளத்தில் படிக்கலாம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 
namakkal kavignar books.jpg

நாமக்கல் கவிஞர் நூல்கள் . . . 
https://www.namakkalkavignar.in/books.html
வள்ளுவரின் உள்ளம்

ஆரியராவது திராவிடராவது

அன்பு செய்த அற்புதம்

தேசபக்தர் மூவர்

இளைஞர்களுக்கு

என் கதை

காந்தி அடிகளும் கம்பநாட்டழ்வரும்

காந்திய அரசியல்

இலக்கிய இன்பம்

இசைத் தமிழ்

காதல் திருமணம்

காணாமல் போன கல்யாணப் பெண்

கலைஇன்பம்

கம்பன் கவிதை இன்பக்குவியல்

கம்பரும் வால்மீகியும்

கப்பலோட்டிய தமிழன்

கவிஞர் களஞ்சியம்

பார்ப்பனச் சூழ்ச்சியா?

தமிழ் மொழியும் தமிழ் அரசும்

தமிழன் கண்ட அரசு

தாயார் கொடுத்த தனம்

தேமதுரத் தமிழோசை

திருக்குறள் மூலமும் தெளிவுரையும் 

திருக்குறள் புது உரைச் சுருக்கம்

திருவள்ளுவர் இன்பம்

திருவள்ளுவர் திடுக்கிடுவார்

திருவள்ளுவரும் பரிமேலழகரும்

மலைக்கள்ளன்

மாமன் மகள்

அவளும் அவனும்

--------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
May 18, 2024, 6:29:51 PMMay 18
to மின்தமிழ்

padi.jpg
17 மே, 2024
மாணவர்களைக் குறித்த சமூக மனிதனின் பார்வை: டி.ஏ.பி.சங்கர்

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களைப் பற்றிய ஆய்வுகளையும், சமூகப் பொருளாதார அரசியல் காரணங்களால் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் பற்றி விரிவாகப் பேசுகிறது இச்சிறிய நூல். 

சமூக மாற்றங்களுக்கான உரையாடல்களைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பேராசிரியர் ஏர் மகாராசன், இணைய இதழ்களில் எழுதிய இரண்டு முக்கியமான கட்டுரைகளே மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து என்ற இந்நூல்.

கட்டுரை 1:

மாணவர்கள் கல்வியை விடுத்து இடை நிற்பதற்கான காரணங்கள் என்னென்ன என ஆராய்ந்து, அவற்றைப் பற்றி விரிவாகப் பேசத் தொடங்கும் போது, 2022-23 ஆண்டில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத வராத 50000 மாணவர்களையும், அவர்களைத் தடுக்கும் புற மற்றும் அகச்சூழல்களையும் அடுக்குக்கிறார். இப்போதுள்ள பாடத்திட்டப் பொருன்மையில் உள்ள குறைகளைப் பதிவு செய்வது மட்டுமின்றி, அதற்கான காரணமாக:

மீத்திறன் மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் கடினமாக உள்ளது. 

மெல்லக் கற்கும் மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகக் கற்க முடியாமல் திணறுவது.

அனைத்து வகையான மாணவர்களையும் உட்படுத்தாத கல்வி முறை

ஆகியனவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் புதிய பாடத்திட்டத்தைக் கண்டு தயங்கி, விலகி, தனிமைப் படுவதையும், அவர்களைத் தொடர்ந்து பள்ளிக்கு வரச் செய்து படிக்க வைக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்களையும் கண்டு வருந்துகிறார். 

இவ்வாறு பள்ளியைத் துறந்து, தேர்வுகளைத் தவிர்க்கும் சூழலுக்குத் தள்ளப்பட்ட வகையில், மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது வலிந்து திணிக்கப்படும் இந்தப் பாடத்திட்டம் ஒரு வகையில், நவீனத் தீண்டாமை என்று குறிப்பிடுகிறார். 

இவ்வாறு, தேர்வுகளைத் தவிர்க்கும் மாணவர்கள், அடுத்த கட்டமாக உயர்கல்வி பெற முடியாத சூழலில், வேலை வாய்ப்பின்றி, சமூகத்தில் உதிரிகளாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது.

கட்டுரை 2:

அடுத்த முக்கியமான கட்டுரை, சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திராசெல்வி மீது நடத்தப்பட்ட சாதி வெறியாட்டத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பற்றியது. 

கல்வி கற்க வரும் பள்ளிக்கூடத்தில் சாதிய வேறுபாடுகளை ஏற்படுத்தி, அதன்மூலம் சுயசாதிப் பெருமைகளையும், தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சீண்டல்கள், தாக்குதல்கள் முதலியவற்றைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார். 

இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடத்திய அந்த மூன்று மாணவர்கள் (16/17 வயதுடையவர்கள்) காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில், அவர்களுடைய பெற்றோர் யாரும் அங்கு இல்லை. அதுமட்டுமின்றி, இப்படி ஒரு சம்பவம் நடந்ததைக் குறித்த எந்த ஒரு குற்ற உணர்வுமின்றித் தமக்குள் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்திருக்கின்றனர். இவர்கள் இப்படி ஒரு மனநிலைக்குச் செல்வதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது, இவ்வாறான சாதி அடையாளம் கொண்ட நடவடிக்கைகளுக்குக் காரணம் அதே பகுதிகளில் ஏற்கனவே படித்து முடித்த சாதி இந்து இளைஞர்கள்தான் என்று எடுத்துரைக்கிறார். இவர்கள்தான் இப்போது அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சாதிய ரீதியாகத் தூண்டிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்கின்றனர்.

இவ்வாறு, அந்த நிகழ்வின் காரணங்கள், அதன் விளைவுகள், அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என, கள நிலவரங்களைத் தெரிவிக்கும் அதேநேரம், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கையாள்வது எப்படி? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உரிமைகள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சுயமரியாதை மற்றும் சுதந்திரத்தையும் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

மேலும், அறம் சார்ந்த கல்வியைப் பயிற்றுவிக்கும் பாடங்கள் வெறும் மொழிப்பாடங்களாக, அவையும் குறைந்த அளவிலான மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே உள்ளன என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும், மாணவர்கள் மத்தியில் அறம் என்ற ஒன்றை விதைக்கத் தவறி விட்டது என்கிறார் ஆசிரியர்.

லும்பர்கள் எனப்படும் இந்தச் சமூக உதிரிகளாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிப்பருவ வயதுடையவர்கள் மாற்றப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் என:

1. சாதிவெறி

2. போதை வெறி

3. அரசியல் கட்சிகள் பின்புலம்

4. அரசு அதிகார மட்டத்தின் செயல்பாடு

5. அந்நியப்படுத்தப்பட்ட கல்விமுறை

6. பெற்றோரின் வளர்ப்பு மற்றும் குடும்பச் சூழல்

7. சமூக ஊடகப் பயன்பாடு 

போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். 

இவர்கள் இவ்வாறு உதிரிகளாக்கப்படுவது உயர்சாதி என்று தன்னை நினைத்துக் கொள்பவர்கள் மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களையும்தான் என்னும் நூலாசிரியர், அதற்கான காரணிகளாக, சுயசாதிப் பெருமை பேசவும் பரப்பவும் நடத்தப்படும் சாதிவாரியான மாநாடுகள், திருவிழாக்கள், குருபூஜைகள் மற்றும் சாதியப் பதாகைகள் தாங்கிய திருமண நிகழ்வுகள் என்கிறார்.  

சமூகத்தில் உதிரிகளாக மாற்றப்படுபவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்களே எனக் குறிப்பிடும் மகாராசன், இவர்களை உதிரிகளாக ஆக்குவதில் சில ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு என்கிறார். சாதி அடையாளம் என்பதுவும், சாதி ரீதியான மனப்பான்மை என்பதும் சில ஆசிரியர்களிடமும் கல்வியாளர்களிடமும் இருப்பது வேதனைக்குரியது. அதனால், பாடத்திட்டத்தை உருவாக்குவதில் இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பும், சமத்துவ மனப்பான்மையும் இன்றைய தேவை என்று வலியுறுத்துகிறார். 

பிறகு, இட ஒதுக்கீடு குறித்த முழுமையான புரிதல் என்பது இங்கு பெரும்பாலோருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை என்றும், அதனுடைய நீட்சியே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் விளக்குகிறார். 

இறுதியாக, சாதிய மனநிலையில் பேசிய ஆசிரியரிடம், "எல்லாருமே சமம்தானே டீச்சர்?" எனக் கேட்கும் மாணவன் முனீசுவரனின் சமத்துவக் குரலுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறார்.

மாணவர்களின் வளர்ச்சிக்குச் சமூகம் எவ்வளவு முக்கியமான அங்கம் வகிக்கிறது என்பதை புரிந்து கொள்வதாலும், ஆசிரியர் - மாணவர் உறவு மேம்படுவதாலும், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து செயல்படுவதே இதற்குத் தீர்வு.. தான் ஒரு ஆசிரியர் என்பதையும் தாண்டி, ஒரு சமூக மனிதனின் வாயிலாக இந்தப் பார்வையை முன்வைத்திருக்கிறார் மகாராசன்.

நூல்: மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து.
ஆசிரியர்: மகாராசன்.
பக்கங்கள்: 72.
வெளியீடு: ஆதி பதிப்பகம்.
99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
90805 14506.
*
கட்டுரையாளர்:
டி.ஏ.பி.சங்கர்,
மண்டல மேலாளர், 
சுசூகி வாகனங்கள்,
சென்னை.
____________________

தேமொழி

unread,
May 22, 2024, 10:39:00 PMMay 22
to மின்தமிழ்
source : https://www.facebook.com/photo?fbid=7082311515201832&set=gm.7413487848699325&idorvanity=1444591182255718

sanga ilakiyam.jpg
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வழங்கும் மகத்தான படைப்பு
வெளிவந்து விட்டது.

சங்க இலக்கிய உரை வேறுபாட்டுக் களஞ்சியம்.

ஒரு நூற்றாண்டு வாசிப்புப் பின்புலத்தில் பாடல் – வேறுபாடு – உரைவேறுபாட்டு விளக்கங்கள்*
பாடல் கருத்து –அருஞ்சொற்பொருள் – விரிவான ஆய்வு முன்னுரை எனும் அமைப்பில்

தமிழக வரலாற்றில் முதல் முறையாக

22 தொகுதிகள் , 7500 பக்கங்கள்
விலை ரூ 9,000/-மட்டுமே

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்

சிறப்புத் தள்ளுபடியில் பெற
தொடர்பு கொள்ளுங்கள்

இரா.மு.தனசேகரன்
மேலாளர்,என்.சி.பி.எச்
மதுரை கிளை
8124949491

தேமொழி

unread,
May 22, 2024, 11:19:31 PMMay 22
to மின்தமிழ்

ebooks.jpg
இவைதான் எனது நூலகம் இதில் 21K புத்தகங்களுக்கு (PDF book's) மேல் உள்ளது.

*உலக வரலாறுகள்
*இலங்கை, இந்திய வரலாறுகள்
*இந்திய, இலங்கை தொல்லியல் புத்தகங்கள்
*இந்து, பௌத்த, சமண புத்தகங்கள்
*அரசியல் புத்தகங்கள்
*சித்த, சுதேச மருத்துவ புத்தகங்கள்.
*பழந்தமிழ் இலக்கியங்கள்
*ஆய்வுப் புத்தகங்கள்

இவ்வாறாக பல புத்தகங்கள் என்னிடம் உள்ளன. இவற்றுள் பல புத்தகங்கள் இணையத்தளத்தில் இல்லாதவை ( என்னால் PDF ) ஆக்கப்பட்டவை. என்னிடம் உள்ள புத்தகங்களால் பயன்பெற்றவர்கள் பலர். யாருக்கேனும் ஏதாவது புத்தகங்கள் தேவைப்பட்டால் கீழ் உள்ள #ஈமைல்#வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளவும். இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளது எனில் இப்பதிவினை share செய்யுங்கள் இதன் மூலம் பலர் நன்மையடைவார்கள் என நம்புகின்றேன்.

ஈமெயில்- saan...@gmail.com
வாட்சப்- +94776605307

நெடுங்கேணி சானுஜன்

தேமொழி

unread,
Jun 12, 2024, 2:20:35 AMJun 12
to மின்தமிழ்
nesamani.jpeg
‘தமிழக எல்லைப் போராட்டங்கள்’ நூலை வாசிக்க:
https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY9kJIy&#book1/

தேமொழி

unread,
Jun 15, 2024, 12:32:28 PMJun 15
to மின்தமிழ்
science scholar mustahaba.jpeg
ஜூன் 15: அறிவியல் தமிழின் தந்தை
மணவை முஸ்தபா பிறந்த நாள்.
மணவை முஸ்தபாவின் நூல்களை வாசிக்க:
https://www.tamildigitallibrary.in/book-list-view-author?act=ம&id=jZY9lup2kZl6TuXGlZQdjZpejZpy&tag=முஸ்தபா%2C+மணவை
--------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 27, 2024, 11:45:28 PM (3 days ago) Jun 27
to மின்தமிழ்
vethasalam book 1.jpg
vethasalam book 2.jpg
வரலாறு தொல்லியல்  ஆர்வலர்கள் விரும்பக்கூடிய நூல்கள் 

தேமொழி

unread,
Jun 28, 2024, 3:04:07 PM (2 days ago) Jun 28
to மின்தமிழ்
நா.முத்துநிலவன் அவர்கள் எழுதிய “தமிழ் இனிது“ நூல் 
சிற்பி பாலசுப்பிரமணியன், சுப.வீரபாண்டியன்
ஆகியோரின் மதிப்புரைகளுடன் வெளி வந்துள்ளது.  
நூலைப் பெற:
HINDU TAMIL THISAI,
KSL Media Limited,
124, Walajah Road,
(Ellis Road Corner Building),
Anna Salai – CHENNAI-600 002,
Ph- 74012 96562 (திரு இன்பராஜ்)
அஞ்சல் செலவு : 
தனி ஒரு பிரதிக்கு ரூ.25, ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளுக்கு ரூ.10 (இதுபற்றிப் பேசித் தெரிந்து கொண்டு, ஜி பே- செய்ய வேண்டிய எண்- 98406 99497- திரு இன்பராஜ் )
மேலும் விவரங்களுக்கு :
தமிழ் இனிது-முன்அட்டை.jpg
தமிழ் இனிது- பின் அட்டை.jpg
-------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 28, 2024, 9:17:32 PM (2 days ago) Jun 28
to மின்தமிழ்
sanna books.jpg
1. ஆதிதிராவிடர் வரலாறு
2. ரெட்டமலை சீனிவாசன் எழுத்துக்களும் பேச்சுக்களும்
3. இட ஒதுக்கீட்டின் மூல வரலாறு
4. கலகத்தின் மறைபொருள்
5. Dialogues on Anti Caste Politics
ஆகிய கௌதம சன்னா நூல்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கும்.
https://www.commonfolks.in/books/black-town-publishers 


Reply all
Reply to author
Forward
0 new messages