நிலப்பிரண்டை

544 views
Skip to first unread message

Thamizth Thenee

unread,
Feb 19, 2009, 11:38:36 AM2/19/09
to மின்தமிழ்
சமீபத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை என்னும்
தொலைக் காட்சித் தொடரில் நடிப்பதற்காக சென்ற ஒரு இடத்தில் எனக்கு
மனைவியாக நடிக்கும் ஒரு பெண்மணியின் தகப்பனார் சேலத்து ஆசாமி,சுமார் 80
வயது இருக்கும், அவரிடம் அவரிடம் ஆத்மஞானம், இந்துமதம், நம் நாட்டின்
பெருமைகள், என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசியாக அவருடைய ஊரான
சேலத்தைப் பற்றி கேட்டேன், அப்போது அவர் கூறிய விவரங்களை வீட்டுக்கு
வந்து எழுதினேன்’
அந்த விவரங்கள்:


சேலத்தில் மிகவும் விசேஷமான
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

மலைமேல் அர்தநாரீச்வரர் திருக் கோயில்
ஆங்கே ஆணூம் பெண்ணும் சமம் என்பதை நிருப்பிக்கும் வகையில் இறைவன் ஆண்பாதி
பெண்பாதியாய் அர்தநாரீஸ்வரராய்க் திருக் கோலம் கொண்டுள்ளார்

ஆங்கே மலைமேலே உள்ள கருப்பக்கிரகத்தில்
அந்த அர்த நாரீஸ்வரர் பெருமானின் திருவடியின் கீழே
ஒரு சுனை இருக்கிறது எப்போதும் வற்றாத சுனை அது
அருச்சகர் அர்ச்சனை முடித்த பின் அந்தச் சுனையிலிருந்து நீரை எடுத்து
பக்தர்கள் மேல் தெளிப்பர், பக்தர்களும் அந்த நீரை அருட் ப்ரசாதமாய்
வணக்கி ஏற்றுக் கொள்வர்

அதே சேலத்திலே கஞ்ச மலை என்றொரு மலை இருக்கிறது, ஆங்கே சித்தர் கோயில்
ஒன்றும் இருக்கிறது, இன்றும் அங்கே சித்தர்கள் வலம் வருகிறார்களாம்,
அந்த மலையின் அடிவாரத்திலே தடையாண்டி ஊற்று என்றொரு ஊற்று இருக்கிறது
ஈரோடு ,சீரகாபாடி பக்கம் வருகிற இந்த ஊற்றுத்தண்ணீர் பல வியாதிகளுக்கு,
குறிப்பாக மேகரோகம்,போன்ற சரும வியாதிகளை குணமாக்கும் மூலிகைத்தண்ணீர்
என்பது நம்பிக்கை
ஆனால் உடலில் சோப்பு போன்றவைகளை தடவிக் கொண்டு குளிக்கக் கூடாது
என்கிறார்கள் அங்கிருப்பவர்கள் முழுநிலவு நாளிலும் , மறை நிலவு நாளிலும்
பக்தர்கள் அந்த மலையின்மேல் சென்று இரவு தங்குவார்கள்,உண்பதற்கு வேண்டிய
உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துச் சென்ரால் போதும், சுத்தமான
குடிதண்ணீர் ஆங்கே மலைமேல் கிடைக்கிறது ஆங்கே மலைமேல் கிணறு மற்றும்
சுத்தமான ஓடை இருக்கிறது

அடிவாரத்தில் உணவு விடுதிகள் இருக்கின்றன
ஆனால் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் ,அசைவ உணவு விடுதிகளுக்கு அங்கே தடை
விதித்திருக்கிறார்கள், ஒவ்வொரு முழுநிலவு நாளிலும்,மறை நிலவு நாளிலும்
குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வருகிறார்கள், அதேபோல கொல்லி மலையிலும்
இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர்

கொல்லி மலையில் இந்தியாவிலேயே பெரிய மூலிகைப் பன்ணை அரசாங்கத்தால்
நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் செம்மேடு, சுவாலக்காடு, அரபளீஸ்வரர்
திருக்கோயில்,
கொல்லி மலை நீர்விழுச்சியில் நீராடி அரபளீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்,
இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம்
அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்
கௌண்டர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்,அந்தக் கொல்லி மலையில்
மரங்களில் பாம்புகள் தலி கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம்
பலாப்பழம்,அன்னாசி,,பேரிக்காய்,கொய்யா, மாம்பழம், காப்பி,அதிகம்
விளைகிறது,மான்களும் மயில்களும் அங்கே சுற்றித் திரியும்
அந்தக் கொல்லி மலையின் அடிவாரத்திலே

வசிய மை விற்போர் அதிகம்பேர் இருக்கிறார்கள்
அவர்கள் விக்ஸ் டப்பா என்று சொல்லும் ஒரு டப்பாவிலே மையை நிரப்பிக்
கொடுத்துவிட்டு அதற்கு வசிய மை என்று பெயர் சொல்லுவார்கள், அவற்றை நம்பி
300, 400 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாறுவோர் பலர், அந்த கொல்லி மலையில்
குறிப்பாக இரண்டு வேர்களைப் பற்றி கூறுகிறார்கள்

1.தலைவணங்கி வேர்
இந்தத் தலைவணங்கி வேரை வைத்திருப்பவர்களை யாரும் எதிர்க்க
மாட்டார்கள் ,பணிந்து போவார்கள் எதிரிகள் என்று சொல்லுகிறார்கள்,
2,மலைமுழுங்கி வேர்
இந்த மலை முழுங்கி வேரை வைத்திருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட கடினமான
காரியங்களையும் அனாயாசமாக செய்யும் ஆற்றல் வந்து விடும் என்று
சொல்லுகிறார்கள்
அது மட்டுமல்ல அவர் என்ன காரியங்கள் செய்கிறார், எப்படிச் செய்கிறார்
என்னும் ரகசியங்களை மற்றவர் கண்ணிலிருந்து மறைக்குமாம் அந்த
வேர்,எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டாலும்,அதிலிருந்து மீண்டு வர
இந்த மலைமுழுங்கி வேர் உபயோகப்படும் என்று சொல்லுகிறார்கள்,
இவற்றையெல்லாம் விட அதிசியமாய் ஒரு செய்தி சொல்லுகிறார்கள், அந்தக்
கொல்லி மலையில் தரையிலே ஒரு செடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டே
இருக்குமாம், அந்தச் செடிக்குப் பெயர் நிலப்பிரண்டை என்று சொல்கிறார்கள்
நிலத்திலே பிரண்டு கொண்டே இருக்குமாம், அந்த நிலப்பிரண்டைச் செடி பல
நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவினி ,மூலிகை என்று சொல்லுகிறார்கள்,
மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் தெரிந்தோர் கண்ணுக்கு மட்டுமே தென்படுமாம்,
அந்த நிலப்பிரண்டை செடியை அவர்கள் மூலிகை எடுக்கும் விதமாக காப்புகட்டி
மந்திர உச்சாடனம் செய்து பிறகு ஒரு குறிப்பிட்ட வேளையில்தான்
எடுப்பார்களாம்,அப்படி எடுத்து வந்த நிலப்பிரண்டை செடியை சுத்தமான
இடத்தில் வைத்து, அதற்கு வேண்டிய பூசைகளை செய்து பத்திரமாக பாதுகாத்தால்
அந்த செடி மிக நன்மை பயக்குமாம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

annamalai sugumaran

unread,
Feb 19, 2009, 12:01:26 PM2/19/09
to minT...@googlegroups.com
அன்புள்ள திரு தமிழ் தேனீ அவர்களே ,
இன்றைய மின் தமிழ் மாலையில் கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
பற்றித்தான் எழுதினேன் . என்ன பொருத்தம் பார்த்தீர்களா ?
இன்று அதிக வேலை என நினைக்கிறேன் .
நிலபிரண்டை ,யாரவது வரும் சத்தம் கேட்டால் ,நிலத்தில் பதுகிக் கொள்ளுமாம் .
வேறு பெயர் இதற்க்கு என நினைக்கிறேன் .
எனினும் செய்திகள் நன்றாக இருந்தது .நன்றி
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
 
 
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

 
கொங்குநாட்டுத் தலம். இத்தலம் சங்ககிரிதுர்க்கம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டி லிருந்தும் நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மலைமேல் கோயில் வரை செல்லப் பேருந்து வசதி உள்ளது.
இத்தலம் திருச்செங்கோடு, திருச்செங்குன்றூர், நாகாசலம் என வழங்கப்பெறும். மேலவீதியிலிருந்து பார்த்தால் மலை, நாகம் போல் தோன்றுவதால் நாககிரி எனப்பெற்றது. சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியே அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி மேற்குப் பார்த்தது. முருகன் சந்நிதி கிழக்குப்பார்த்தது. விஷ்ணுகோயில் கோயிலுக் குள்ளேயே தனியேயிருக்கிறது. சுவாமி அர்த்தநாரீசுவரர். அம்மை பாகம்பிரியாள்; அர்த்தநாரீசுவரி. விஷ்ணுவுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்று பெயர். அர்த்தநாரீசுவரர் பாதத்தில் ஒரு சிறு ஊற்று இருக்கிறது. இது விறல்மிண்ட நாயனாருடைய அவதாரஸ்தலம். தீர்த்தம் பிரமதீர்த்தம் முதல் 16 தீர்த்தங்கள் உள்ளன.

Tthamizth Tthenee

unread,
Feb 19, 2009, 12:22:20 PM2/19/09
to minT...@googlegroups.com
ஐய்யா அண்ணாமலை சுகுமாரன் அவர்களே
நான் நேற்றுதான் இந்தச் செய்தியை திரட்டினேன்
அதைப்பற்றி எழுதி வைத்திருந்தேன்
உங்களின் கொடிமாடச் செங்குன்றூர் பற்றிய செய்திதான்
எனக்கு நினைவூட்டியது இச்செய்தியை மின்தமிழுக்கு அளிக்க

அது மட்டுமல்ல இன்று விஜய் டீவியிலும் இதே செய்தியை அதுவும் குறிப்பாக கொல்லி மலையைப் பற்றிய விவரங்களை அளித்துக்கொண்டிருந்தார்கள்



2009/2/19 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ
peopleofindia.net@gmail.com
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Subashini Tremmel

unread,
Feb 20, 2009, 3:17:15 AM2/20/09
to minT...@googlegroups.com
வணக்கம் தமிழ்த்தேனீயார்.
 
நல்ல பல தகவல்களை உங்கள் பேச்சினூடே  சேகரித்து வந்திருக்கின்றீர்கள். கொல்லி மலை, கஞ்ச மலை பற்றி முன்னர் நான் கேள்விப்பட்டதுண்டு. இங்கு சித்தர்கள் பலர் மடங்கள் அமைத்து மூலிகை மருத்துவம் செய்துவருவதாக நான் அறிந்ததுண்டு. உண்மையா?
 
அன்புடன்
சுபா
2009/2/19 Thamizth Thenee <rkc...@gmail.com>

v4vijayakumar

unread,
Feb 20, 2009, 4:59:33 AM2/20/09
to மின்தமிழ்
On Feb 19, 9:38 pm, Thamizth Thenee <rkc1...@gmail.com> wrote:
...

> இவற்றையெல்லாம் விட அதிசியமாய்  ஒரு செய்தி சொல்லுகிறார்கள்,  அந்தக்
> கொல்லி மலையில் தரையிலே ஒரு செடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டே
> இருக்குமாம், அந்தச் செடிக்குப் பெயர் நிலப்பிரண்டை என்று சொல்கிறார்கள்
> நிலத்திலே பிரண்டு கொண்டே இருக்குமாம்,  அந்த நிலப்பிரண்டைச் செடி பல
> நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவினி ,மூலிகை என்று சொல்லுகிறார்கள்,
> மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் தெரிந்தோர் கண்ணுக்கு மட்டுமே தென்படுமாம்,
> அந்த நிலப்பிரண்டை செடியை அவர்கள் மூலிகை எடுக்கும் விதமாக காப்புகட்டி
> மந்திர உச்சாடனம் செய்து பிறகு ஒரு குறிப்பிட்ட வேளையில்தான்
> எடுப்பார்களாம்,அப்படி எடுத்து வந்த நிலப்பிரண்டை செடியை சுத்தமான
> இடத்தில் வைத்து, அதற்கு வேண்டிய பூசைகளை செய்து பத்திரமாக பாதுகாத்தால்
> அந்த செடி மிக நன்மை பயக்குமாம்


நிலப்பிரண்டை ?! பிரண்டை இது ஒரு கொடி. பிரண்டைத் தண்டைக் கீரையாக
சாப்பிடலாம். நான் கூட சாப்பிட்டிருக்கிறேன்.:)

Narayanan Kannan

unread,
Feb 20, 2009, 5:30:39 AM2/20/09
to minT...@googlegroups.com
>பிரண்டை இது ஒரு கொடி. பிரண்டைத் தண்டைக் கீரையாக
> சாப்பிடலாம். நான் கூட சாப்பிட்டிருக்கிறேன்.:)

வீட்டில் அப்பளம் செய்யும் போது பிரண்டைச்சாறு சேர்ப்பார்கள்.

அது cryptic coloration எனும் முறையால் பச்சையோடு பச்சையாக
மறைந்திருக்கும். அதை நம்மவர்கள் கொஞ்சம் poeticalஆக ஆள் வந்தவுடன்
மறைந்து கொள்ளும் என்கின்றனர் :-))

க.>

annamalai sugumaran

unread,
Feb 20, 2009, 5:42:30 AM2/20/09
to minT...@googlegroups.com
சாதரணமாக அப்பளம் செய்ய சேர்க்கும் பிரண்டை ,எல்லா காய்கறி ,கிரை கடைகளிலும் கிடைக்கும் .இது சாதரணமாக நான்கு பக்கம் கொண்டது .நீண்டு கோடியாக வளரும் இதிலும் முப்பிரண்டை என ஒரு தனி விதம் உண்டு . ஆனால்நண்பர் கூறும் வித செடி கொல்லிமலையில் உள்ளது .அது பிரண்டை அல்ல . ஆனால் அதை மறைத்துக்கொள்ளும் என்பார்கள் . எருமை போல் சப்பதமிடும் மரம் ,விழுந்த காய் மீண்டும் ஒட்டிக்கொள்ளும் மரம் ,அலை பார்த்தல் சுருங்கும் இலை ,இரவிலே தூக்கும் ல்லை உள்ள மரம் என இன்னுமெத்தனையோ விந்தைகள் உலகிலும் உண்டு . அன்புடன் , ஏ சுகுமாரன்
2009/2/20 Narayanan Kannan <nka...@gmail.com>



--
A.Sugumaran ,
AMIRTHAM INTL .....Source globally......
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

Tthamizth Tthenee

unread,
Feb 20, 2009, 11:03:31 AM2/20/09
to minT...@googlegroups.com
ஆமாம் சுபா அவர்களே,ஆனால் போலிகள் அதிகம்



2009/2/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

annamalai sugumaran

unread,
Feb 20, 2009, 9:55:18 PM2/20/09
to minT...@googlegroups.com

நண்பர் தமிழ் தேனீ   நிலப் பிரண்டை பற்றி எழுதி இருந்தார் .
 நான் முன்பே முதலில் ஒரு மடலில் கூறியபடி ,தன்னை மறைத்துக் கொள்ளும் மூலிகைக்கு பெயர் நிலபிரண்டை கிடையாது .
நிலபிரண்டையின் படம் ,அதன் பலன்களை எழுதி  இருக்கிறேன் .

ஆனால் அவர் கூறும் அபூர்வ செடி நிலப் பிரட்டை ,அது தான் ,மனித அரவம் கேடவ்யுடன் தன்னை மறைத்து கொள்ளும் என்பார்கள் .
இதை முறைப் படி மூல மந்திரங்களை கூறி , காப்பு கட்டி ,சுமார்  10 நாட்களாவது
வேண்டினால் தான் அவர் தலையை காட்டுவார் .
இந்த மூலிகை நிலத்தின் கிழ் உள்ள பொருள்களை ,வெளியே கட்டும் ஒரு அபூர்வ
செடியாகும் .
இந்த மூலிகையை உபயோகித்து கொல்லிமலை அடி வாரத்தில் உள்ள புதன் சந்தை என்ற கிராமத்தில் ,பல நூறு ஆண்டுகளாக புதையுண்டு கிடந்த சிவலிங்கத்தை
மீட்டு எடுத்து கோயில் கட்டி இருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார் .
இது சிவா பூஜைக்கு மிகவும் உகந்த மூலிகை . சிவா கிராந்தி என ஒரு மூலிகை உண்டு .அது போலவே இந்த மூலிகை உபயோகித்து சிவனை பூஜித்தால் சிவன் ,விரைவில் அருள் புரிவார் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு .
உண்மையில் கொட்டிகடக்குது பாரம்பரிய ஞானம் .
இவை இன்னும் தீண்ட முடியாத இடங்களிலே ,கொஞ்சம் கொஞ்சமாக
கேட்பார் இன்றி அழிந்து வருகிறது .


அன்புடன் ,
ஏ சுகுமாரன்

 

 

பிரண்டை


பிரண்டை.

1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.

2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.

3) தாவரக்குடும்பம் - :VITACEAE.

4) வகைகள் -:முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, மூங்கில்பிரண்டை அல்லது கோப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீப்பிரண்டை.
  இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.

 
நிலப் பிரட்டியின் படம் கிடைத்தற்கு அரியது
 

--


2009/2/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

kamaladevi aravind

unread,
Feb 20, 2009, 10:15:58 PM2/20/09
to minT...@googlegroups.com
 நன்றி சுகுமாரன்,
நிங்ஙளுக்கும் தமித்தேனீ அய்யாவுக்கும் நன்றிகள் பல.
ஆனால் ஒரு சம்சயமுண்டு, நிங்ஙள் குறிப்பிடும் நிலபிரட்டை[ மலையாளத்தில் நிலப்பரட்ட]க்கு 10 நாட்கள் மூலமந்திரம் போதுமா?
என்டெ அச்சாவின் குறிப்பேட்டில்  35 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே?
பிறகு காப்புகட்டி ---என்று எழுதியுள்ளீர்களே?  காப்புகட்டி, - என்றால் என்ன?
இன்றும் மூலமந்திரம் உச்சாடனம்  என்பது எந்த வழிபாட்டுக்குமே,   அதீத மெளனத்தில் உறையும் அமைதியில்
தானே சாத்வீகம்? மனது ஒருமுகப்பட, சர்வமர்ப்பணம், எனும் தியானம் , பின்னர் தானே  மந்திராடனம்.
விளக்குங்களேன்.
கமலம்


From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Saturday, February 21, 2009 10:55:18 AM
Subject: [MinTamil] Re: நிலப்பிரண்டை

annamalai sugumaran

unread,
Feb 21, 2009, 2:26:24 AM2/21/09
to minT...@googlegroups.com

நன்றி கமலம் அவர்களே ,
சற்று வெள்யே சென்றிந்தேன் . எனவே பதிலில் தாமதம் .
முதலில் எந்த மந்திரமும் குரு  மூலம் உபதேசிக்கப் படவேண்டும் .புத்தகத்தில் படித்து பலனில்லை .
பிறகு முறைப் படி உரு ஏற்றவேண்டும் .உரு என்பது மந்திரத்திற்கு  தகுந்த படி 
  ௨,00000  முதல் பல லட்சம் வரை உண்டு .
உரு என்பது பெயரில் இருந்தே தெரியும்  என நினைக்கிறேன் .
நாமே அந்த மந்திர உருவாக ஆவது .
நாம் உரு செய்த பிறகு தேவைக்கு தகுந்த படி அதை உச்சாடனம் செய்ய வேண்டும் .
தங்கள் தந்தையின் குறிப்பில் உள்ளபடி  35  நாட்கள் செய்யலாம் .
ஒரு நாளைக்கு எந்தனை மணி செய்கிறோம் என்ன்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் .

இதில் காப்பு கட்டுவது என்பது ,சங்கல்ப்பம் செய்து கொள்வது போல் ,முதலில்
என்ன செய்ய போகிறோம் என உறுதி .பின் அந்த காரியம் செய்யும் போது நமக்கு பாதுகாப்பு .அதுக்கான பிரார்த்தனை .
பின் எடுக்க போகும் மூலிகையின் சாப விமோசனம் .
இதனையும் அடங்கியது .
இவைகளை முறை படி செய்து எடுக்கும் மூலிகையில் ஒரு மஞ்சள் நூலால்
சுற்றி கட்டுவர் .
இதுவே காப்பு கட்டும் சடங்கு .
இது அனைத்து யக்னா முறையிலும் உண்டு .
இதில் சாப நிவர்த்தி செய்யாமல் எடுக்கும் எந்த மூலிகையும்
மாந்திரீக முறையில் வேலை செய்யாது .
நாம் மருத்துவத்திற்கு  மூலிகை எடுக்கும் போது சாப  நிவர்த்தி தேவை  இல்லை
ஆனால் சதற்கு சுத்தத் செய்தல் என்ற ஒரு முறை உண்டு . சுத்தி செய்யாமல்
உபயூகித்தால் எந்த மூலிகையும் பலன் தராது .இதனால் வைத்தியருக்கு தான் கெட்ட பெயர் .
நமது சித்தர் முறையில் மணி ,மந்திரம் ,ஒவ்ஷதம் என முன்றிக்கும் முக்கியத்துவம் உண்டு .இவை அனைத்தும் சேர்ந்தால் தான் பலன் அளிக்கும் .
இப்போது சும்மா இயந்திரத்தில் அரைத்து  பலவித பொடிகள் விற்கப் படுகிறது .
அவைகளினால் பலன்  எதுவும் ஏற்ப்படாது .உபாதைதான் புதியதாக வரும் .

ஒவ்வொரு மூலிகைக்கும் மருத்துவ குணம் போலவே ,அத்துடன் ஒரு மாந்திரீக
குணம் உண்டு . எத்தனையோ காலம் உழைத்து நமது ,முனோர்கள் கண்ட பாரம்பர்ய அறிவு இன்னும் , நமது விஞானிகளின் தலை அசைப்பிற்க்காக காத்திருக்கிறது . இதை தொழில் முறை செய்யும் சிலர் போலியாக போய் விடுகின்றனர் .இதில் உண்மையான ஈடு பாட்டுடன் ஆராய்ச்சி தேவை .
இதைப் பற்றி கூறும் நூல்களும் மறைந்து வருகின்றன .
ஆனால் இந்த நூல்கள்  இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படவே இல்லை .

எனக்கு கூட உங்கள் அச்சாவின் குறிப்பேட்டில்   என்ன இருக்கு என பார்க்க ஆவல் .!
இதில் உச்சடனதிர்க்கு நீங்கள்  கூறித்து போல் பல வழி முறைகள் உண்டு .
 manual instruction ,  ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் உண்டு .
அதற்க்கு உரிய மன நிலை பெற பூஜைகள் உண்டு .
வாத்திய இசை உண்டு .
படையல் முறை உண்டு
மலர்கள் என்ன என முறை உண்டு .அதனையும் கூடி வரவேண்டும் ,
விண்மீன், திதி ,நாள் நேரம் அப்பப்ப ! இன்னும் பல உண்டு .

நீகள் மந்திர மூலிகை என்றதும் எதோ கண்ணில் கிடைக்காத ,நிலபிரட்டை
மாதிரித்தான் என நினை காதீர்கள் .
நீகள் நிதமும் காணும் குப்பை மேனி , கோவை இலை , இவை எல்லாம் கூட மந்திர மூலிகைகள் தான் .
ஆனால் இதை பயன் படுத்த உரிய மன நிலை அவசியம் வேண்டும் .
ஆன்மீகத்தின் வழி நடத்தலின் வெளிப்பாடே அமைதியும் ,சாந்தமும்  தான் .
இவை நமக்கு வந்த பிறகுதான் இந்த பாதையில் செல்ல முடியும் .
நன்றி ,கமலம் கேட்டதற்கு ,


அன்புடன் ,
ஏ சுகுமாரன்



 

2009/2/21 kamaladevi aravind <gokul...@yahoo.com>

Tthamizth Tthenee

unread,
Feb 21, 2009, 5:02:16 AM2/21/09
to minT...@googlegroups.com
ஐய்யா அண்ணாமலை சுகுமாரன் அவர்களே
சமீபத்தில் கொல்லி மலைக்கு சென்றிருந்த ஒரு நண்பர் கூறினார் , அவர் நடந்து வரும் போது செடிகளே இல்லாத சமத்தரையில் திடீரென்று அவர் கண்ணில் பட்டிருக்கிறது அந்தச் செடிகள், அவை தன்னைத்தானே சுற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்த அவர் அந்தச் செடிகளின் அருகிலே சென்றவுடன் அவை சுழலுவதை நிருத்தி விட்டனவாம்
 அதன் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்திருக்கிறார்,அவருக்கு எந்த ஒரு மணமும் கிடக்கவில்லை  ,அவ்வழியாக வந்த ஒரு பெரியவர் இவரிடம் வந்து என்ன பார்க்கிறாய் என்ரு கேட்க இவர் அந்தச் செடியைக் காண்பிக்க கையை அங்கே நீட்டிய போது அந்தச் செடிகள் இருந்த சுவடே தெரியவில்லையாம்
 
மீண்டும்  அந்தப் பெரியவர் கையைக் காட்டியவுடன் அந்தச் செடிகள் பரவலாக கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிரது
 
அப்போது அந்த பெரியவர் கூறினாராம் அந்தச் செடிக்குப் பெயர் நிலம் பிரண்டை ,அது ஒரு மூலிகை என்று
 
சாதாரணமாக நம் வீட்டில் வைத்திருக்கும் துளசி, வேப்பிலை,கருவேப்பிலை, போன்ற செடிகளில் இருந்து கூட
அந்தச் செடிகளின் அனுமதியை மனதாரக் கேட்டு பிந்தான் பறிக்க வேண்டும் என்பர், அப்படி இருக்க அபூர்வ மூலிகைகளை பறிக்கும் போது நீங்களும்,கமலாதேவி அவர்களும்  சொல்வது போல் காப்பு கட்டி மந்திர உச்சாடனம் செய்து எடுத்தால்தான் பலன் தரும்,அதிலும் குறிப்பாக அந்த மந்திர உச்சாடனங்கள் ஒவ்வொரு மூலிகைக்கும்  ஏற்றவாறு நாட்கள், நேரங்கள், மாறு படும்
 
உருவேற்றும் பொழுது உருவேற்றுபவரின் மனதிலேயே ஒரு அறிகுறி காட்டுமாம், உச்சாடனங்கள் நிறைவை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2009/2/21 annamalai sugumaran <amirth...@gmail.com>

kamaladevi aravind

unread,
Feb 21, 2009, 7:52:50 PM2/21/09
to minT...@googlegroups.com
சுகுமாரன்,
காப்புகட்டிக்கு சங்கல்பம் என்று ஒற்றை வரியில் எழுதியிருந்தால் புரிந்து கொண்டிருப்பேன். சங்க இலக்கியங்களில்
திருமணத்துக்குத்தான் [எந்த இனத்தினர் என்று ஞாபகமில்லை] காப்புகட்டுவார்கள் என்று படித்ததாக ஞாபகம் .
இப்பொழுது  புரிகிறது. நிங்ஙள் குறிப்பிட்ட அனைத்துத் தகவல்களுமே சத்யம்.
அச்சாவின் குறிப்பேட்டில் சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.
மூலிகை பலனுக்கு, குருமந்த்ரம் , மூலிகை மந்திரம் மட்டுமல்ல.பூமிமந்த்ரமும் உண்டு.அதுவும் எப்படி தெரியுமா?
தாவர ஜெபம் , நாவில் ஸ்மரித்து, பூமியை கண்ணீரொழுக உக்கி உருகி கும்பிட்டு, பின் பூமி மந்தரம்[குறிப்பிட்ட எண்ணிக்கையில்]ஜெபித்து, , மலர் சந்தணம் அனைத்தும் மூலிகை சித்தனுக்கு[மானசீகமாக] காணிக்கையாக்கி, மீண்டும் ,108 முறை ஜெபித்தால்
கெஷ்ணாம்லி இலை மலர்ந்து விரிந்து , ஈரம் பளபளக்க நம்மை நோக்குமாம், தக்‌ஷண்மே, பறித்து, வீட்டுக்கு கொண்டுவந்து விடவேண்டும். வழியில் யாரிடமும் பேசாது , மறுனாள் வரை உபவாசமிருந்து , கண்ணில் பஸ்மம் [திருனீறு] தொட்டு,
கைகளில் துளசி கசக்கிய மணத்தோடு, மூலிகையை, கூறப்பட்ட பொருள்களோடு அரைத்துக் குடிக்க வேண்டும்
ஒரே ஒருமுறைதான், ஒரு டம்லர் நிறைய சாறு வழிய வழிய குடித்தால், போதும்.
ஆஸ்த்மா அப்படியே முறிந்துவிடும் மறுனாள் மட்டுப்படும் .மூன்றாம் நாள், சுத்தமாய் குணமாகிவிடும்..
குலசேகர ஆழ்வார், பாண்டிய மன்னன் ஒருவனுக்கும் இம்மாதிரி உதவியதாக குறிப்பு சொல்கிரது.

காம்ரி கிழங்கை   புற்றுனோய்க்கு  நிவாரணமாக காண்கிறோம். ஆனால் நட்ட நடுக்காட்டில் யார் கண்ணுக்கும் தெரியாமல் எங்கோ மறைந்திருக்கும் , காம்ரி, புல்லங்குழலில், தேன் தடவி, சரீரம் முழுக்க சாக்கி நெய்யைப்பூசிக்கொண்டு சென்று, 50
முறை, சங்கல்பம் செய்து, சுத்த திதி,, நிர்மால்ய மந்த்ரம், பின்னரே குரு, அதற்குப்பின்னர் காம்ரிமந்த்ரம், ஒரே ஒருமுறை கூறினால் போதும். அடுத்தகணம்  காம்ரி புஸ்ஸென்று சப்த்மிட்டு, நம் கண்ணில் காணாதவாறு பத்தியைத் தூக்கி , படம் பிடித்து நிற்குமாம்[எழுதும்போதே  மேனி நடுங்குகிறது] மந்த்ரம் சொன்னவரின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் .அடுத்த கணம் தாவரமாக  உருமாறி நிற்குமாம். இலைகளில் ஈரம் சொட்டச்சொட்ட, ஒழுகும் நீரை, உடனே கொண்டு சென்ற கிண்ணியில் வடிதெடுக்கவேண்டும். அரைக்கிண்ணி  ரசம் ஒழுக்கியதும் [சர்ப்பம் ] மறைந்துவிட,  அங்கேயெ, அப்படியே,
குடித்துவிடவேண்டும். வீடு திரும்பும் வழியெல்லாம் சந்தனம்  அப்பிய கைகளால், வாயைத்தொட்டுத்தொட்டு,
மிருந்தாதி  ஜெபம் ஸ்மரித்துக்கொண்டே வரவேண்டும்
புற்று னோய், அப்ரியமாய்  அப்படியே மறைந்து விடுமாம். [சான்று--- கோலோச்சி கனேசன் நம்பூதிரிக்கு குண்மாக்கிய சரிதம்]
இன்னும் , இன்னும் நிறைய தகவல்கள் உண்டு, தமிழில் மொழிபெயர்த்து  இட நேரம்  வேண்டும் .

சுகுமாரன், நிங்ஙள், சித்தர்கள் பற்றி எப்பொழுது எழுதப்போகிறீர்கள்?
படிக்கக் காத்திருக்கிறேன். அவ்வளவு ஆவலாக உள்ளது.
அப்பொழுது ஞானும் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன் கமலம்




 .







Narayanan Kannan

unread,
Feb 21, 2009, 8:06:08 PM2/21/09
to minT...@googlegroups.com
உங்கள் இருவரின் உரையாடலும் அறிவியல் பின்புலம் உள்ள எனக்கு சுவாரசியான
வாசிப்பைத் தருகிறது. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இவ்வகை அணுகுமுறைகள்
உண்டென்று தெரிகிறது. கொரியாவில் ஜின்சென் எனும் கிழங்கு சர்வரோக நிவாரணி
என்று சொல்லுகிறார்கள். இந்தக் கிழங்கு எங்குள்ளது என்று கண்டு சொல்ல
மிகத்திறமைவாய்ந்த மாந்தீரீகர்கள் இங்கும் உண்டு. இதேபோல் செவ்விந்திய
கலாச்சாரத்திலும் கதைகளுண்டு. Shaman என்று சொல்லப்படும் மாந்தீரீகனுக்கு
செடி கனவிலேயே தன்னைக் காட்டிக்கொள்ளுமாம். அடுத்த நாள் அவன் மௌன
விரதத்துடன் அதே காட்சியில் மீண்டும் லயித்து சென்று எடுத்து வருவானாம்.
பின் திபெத், சீனா, ஆப்பிரிக்கா இப்படி. ஐரோப்பாவில் இருந்திருக்கலாம்.
ஆனால் இம்மாதிரிக் கதைகளை அங்கு கேட்கமுடிவதில்லை.

என்னதான் சொன்னாலும், நாளைக்கு உடம்புக்கு ஒன்று என்றால்
ஆஸ்பதிரிக்குத்தான் ஓடவேண்டியுள்ளது. டாக்டர் ஊசி போட்டால்தான்
கேட்கிறது. என்ன செய்ய? ;-)

2009/2/22 kamaladevi aravind <gokul...@yahoo.com>:


> தாவர ஜெபம் , நாவில் ஸ்மரித்து, பூமியை கண்ணீரொழுக உக்கி உருகி கும்பிட்டு,

> பின் பூமி மந்தரம்[குறிப்பிட்ட எண்ணிக்கையில்]ஜெபித்து, , அடுத்தகணம்

Reply all
Reply to author
Forward
0 new messages