Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

Tamil Tech Hackathon - தமிழி

53 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Feb 21, 2025, 2:00:09 PMFeb 21
to
வணக்கம்,
பிழையின்றித் தமிழை எழுத தமிழ்வேட்டை என்ற இணையவழிப் போட்டி சில மாதங்கள் முன்னர் சிறப்பாக நடந்து முடிந்தது. அது போலத் தமிழ்த் தொழில்நுட்பத்தை வளர்க்கவும் புதிய சிந்தனைகளை ஊக்குவிக்கவும் தமிழி நிரலாக்கப்போட்டி (Hackathon) ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம். திரள், வாணி, அக்ரிசக்தி ஆகிய தொழில்நுட்ப அமைப்புகள் முன்னெடுத்து, ஸ்டார்டப்-டிஎன், த.இ.க. ஆகிய  நிறுவனங்களுடன் இணைந்து இப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.


நிரலாக்கப்போட்டி என்பது கொடுக்கப்பட்டுள்ள சிக்கல் கூறுகளுக்குக்(problem statements) கணினி நிரல் மொழியில் தீர்வுகளை உருவாக்க வேண்டும். தமிழ் மொழி சார்ந்து ஒரு தொழில்நுட்பத் தீர்வை/மென்பொருளை உருவாக்குவதே இந்தப் போட்டியாகும். ஆர்வமுள்ளவர்கள் (எந்த நாட்டிலிருந்தும்) தமிழ் மொழி சார்ந்த தங்களது தீர்வு வரைவைச்(solution proposal) சமர்ப்பிக்கலாம். அதில் தீர்விற்கான தெளிவு, தமிழுக்கான முக்கியத்துவம், வளர்ச்சிக்கூறு போன்றவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். போட்டியாளர்கள் தொடர்ந்து தீர்வை அவரவர் இடத்திலிருந்து வளர்த்து வரலாம். இணையவழியாகப் பல மதிப்பிடல்களை நிகழ்த்தி, பல திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளும் இணையவழியில் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் இறுதிப் போட்டி மதுரையில் நடக்கிறது. அதில் சிறந்த படைப்புகளுக்கு இரண்டு வகையாகப் பரிசுகளும் (இந்தியப் பணத்தில்)  வழங்கப்படுகின்றன. போட்டியோடு முடிந்துவிடாமல் மேலும் அதைத் தொழில் வாய்ப்பாக வளர்த்தெடுக்க ஸ்டார்ட்ப்-டிஎன் சார்பாக வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.


இந்தப் போட்டியில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கென்றே தனிப் பிரிவுள்ளது. அதில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான கருவிகளையும்  நிரல்களையும் படைக்கலாம்.  userscript, Lua script, BOT, Webapp, Mobileapp போன்று எந்த ஒரு தொழில்நுட்பத் தீர்வையும் தமிழ் விக்கித் திட்டங்களுக்கு உருவாக்கலாம். அதற்குச் சிறப்புப் பரிசுகளும் உண்டு.

தொழில்நுட்பத்தைத் தமிழில் கொண்டுவருவதும் தமிழுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் மொழிக் கணிமையில்(Language Computing) இன்றியமையாத பணியாகும். இத்தகைய பணியில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.



image.png
image.png

--
அன்புடன்,
நீச்சல்காரன்

தேமொழி

unread,
Feb 21, 2025, 3:10:43 PMFeb 21
to மின்தமிழ்
நல்ல முயற்சி, முன்னெடுப்பிற்குப்  பாராட்டுக்கள் 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 22, 2025, 12:58:25 AMFeb 22
to mint...@googlegroups.com
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

தமிழி போட்டியில் பங்கேற்க பதிவு செய்து விட்டேன். :)



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CACir7Op6x47UWZ73uaQZpqCt2Ejo_57n6DLL6gSFsZiFy9gnaw%40mail.gmail.com.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் அனைத்து உயிரிலும் இறைவனை
உண்மையாய்க் காண்கிறார் மூலர் - அதைப்போல்
உலகின் அனைத்து மொழிகளின் வேர்களில்
உன்னையே காண்கிறேன் தமிழே !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Neechal Karan

unread,
May 16, 2025, 4:01:26 PMMay 16
to
வணக்கம்,
சுமார் மூன்று மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிரலாக்கப்போட்டி மிகுந்த நிறைவோடு கடந்த ஒன்றாம் தேதி நிறைவடைந்தது. மலேசியா, ஜப்பான், கர்நாடக, ஆந்திரா உட்பட பல ஊர்களிலிருந்து 142 அணிகள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு தொடக்கம் தான் தொடர்ந்து மொழிநுட்பக் கருவிகளை அனைவரும் உருவாக்க முனைவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. 

வெற்றியாளர்கள் விவரங்களை இங்கே காணலாம்.
(இதே பக்கத்தில் இப்போட்டியில் உருவான திட்டங்களின் விவரங்ககள் வரும் நாட்களில் இற்றை செய்யப்படும்.)


இப்போட்டியைச் சிறப்பாக நடத்த எங்களுடன் இணைந்த பத்திரிகை டாட் காம், அறிஞர் ஆப், தமிழ் அநிதம், வளரிஉடுமலைபுக்ஸ், கோட்ரேஸ் மற்றும் பல தனி நபர்களுக்கும் நடுவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருதுநகர் மற்றும் மதுரை ஆட்சியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


சில ஊடகச் செய்திகள்:

Jeevalingam/ Yarlpavanan

unread,
May 28, 2025, 12:25:04 AMMay 28
to mint...@googlegroups.com

தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages