ஒன்பது வெண்பாக்களையும் ஒரே மடலாக இடுகிறேன்.
நவக்கிரக வெண்பாகாரிருள் நீக்கும் கதிரவன் ஏழ்பரித்தேரிலு லாவரும் சேவகன் ஆரியன்வீரியம் நல்கிடும் வித்தகன் மித்திரன்சூரியனே என்றும் துணைசிந்தைக்(கு) அதிபதியே சீதக் கதிருடையாய்சுந்தர நாயகனே தூவெண் ணிறமுடையாய்இந்திரை சோதரனே ஈசன் தலையமரும்சந்திரனே நல்லருள் தாசெங்கண் உடையோனே செம்மறி ஆடேறும்மங்கள நாயகனே வச்சிர வேலுடையாய்நங்கை நிலமகளின் நன்மகனே வீரமுடைஅங்கா ரகனே அருள்மதிதாரை மைந்தன் மதியைத் தருவோன்நதிசூடி பத்தர்க்கு நன்மை அருளும்சதுரன் கவித்திறன் தந்திடும் சாந்தன்புதபக வானே புகல்அரிசனம் ஆடை அணியும் அரசைப்பெரியவனை வல்லவனைப் பேச்சிற் கிறையைமருளை அகற்றிடும் மங்களத் தேவகுருவை நிதமும் குறிசக்கர பாணியின் தண்ணருளால் கண்ணொன்றைஅக்கணமே பெற்ற அறிவிற் சிறந்தவனைவக்கிரம் தீர்ப்பவனை வல்லசுரர் ஆசானைச்சுக்கிரனை நாளும் துதிகருநிற மேனியன் காக்கைமேல் ஏறிவருகிற தீரன் மறலிக்(கு) இளையன்பனிச்சடை ஈசனின் பத்தர்க் கருளும்சனைச்சரன் தாளே சரண்சுராசுரனைச் சூலக் கரத்தானை அன்பர்உரோகம் அகற்றிடும் உத்தமனை மின்னும்அராவுடல் கொண்ட அதிகோர மானஇராகுவை எந்நாளும் ஏத்துகிரகணத்தின் மூலன் இராகுவிற்குக் கேள்வன்உரகத் தலையன்மனித உடலினன்வாதம் வழக்குகளில் வெற்றியைத் தந்திடும்கேது களைந்திடுவான் கேடு
பணிவுடன்,சரண்யா15.03.2018--
திரு. கி. வா. ஜ அவர்கள் எழுதிய நவக்கிரகம் புத்தகத்திலிருந்து..
நவக்கிரக வெண்பா
வாழி பகல்செய்வோன் வாழி ஒளியுருவன்
வாழியோர் ஆழித்தேர் மன்னுசுடர் - வாழியரோ
ஞாலம் விழிதிறப்ப நல்லோர் புகழுரைப்பக்
காலம் விளக்கும் கதிர்
தண்ணென் நிலவால் சராசரத்துக் கின்புதவிக்
கண்ணெகிழும் பூங்குவளை கட்டவிழ்த்து - விண்ணவர்கள்
ஆரமுதம் உண்ண அருளோ டொளிபரப்பிச்
சீருறுவான் திங்கட்புத் தேள்
செங்கண்ணன் செம்மேனிச் செல்வன்செம் மாலையினான்
அங்கையில்வேல் சூலம் அடர்கதைகொள் - மங்கலத்தான்
மோதுந் தகரேறும் மூர்த்தி நிலமகட்குக்
காதற்சேய் அங்கார கன்
புந்திவலி சேரப் புரிவான்பொன் மேனியினான்
சந்திரன்சேய் வாள்பரிசை தாங்குகதை - உந்துகையான்
வெம்புசிங்க ஊர்தியான் மேனாள் இளைதழுவும்
அம்புதன்என் றோதும் அவன்
வாசவனார் போற்றுகுரு; வாக்குக் கொருதலைவன்;
தேசுறுபொன் போன்ற திருமெய்யான் - மாசில்அக்க
மாலைதண்டம் குண்டிகைசின் முத்திரைகை வைத்தகுண
சீலன் வியாழனென்று தேர்
வல்லவுணர் தம்குரவன்; மாய்ந்தார் உயிர்பெறவே
சொல்லுமனு வைஅறிவான்; சுக்கிரன்என் - றெல்லவரும்
சாற்றும் பெரியான்; சடைமுடியான் மாரிக்கோள்
போற்றுவெள்ளி என்றே புகல்
வெய்யசுட ரோன்சாயை மேவுமகன்; சூற்கரத்தான்;
பைய நடக்கின்ற பங்கு,கரு - மெய்யன்;
இனியன் அருளுங்கால், இன்றேல் கொடியன்;
சனியன்அவன் சீற்றம் தவிர்
கரவின் அமுதுண்டான்; கார்நிறத்தான்; மேனி
அரவம் முகம்அமரன் ஆனான்; - மருவுமுறம்
ஆகும் இருக்கையான்; அஞ்சுதகு தோற்றத்தான்;
ராகுநிழற் கோளென் றிசை
பொன்னங் கிரிஇடமாப் போதுவான்; மோகினியால்
முன்னம் தலையிழந்த மூர்த்தியான் - மன்னுகையில்
மோதுகதை அஞ்சல்உள்ளான் மூண்ட கருநிறத்தான்
கேதுவென்று சொல்வர் கிளந்து
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அற்புதம் சகோதரி!எடுக்கும் முயற்சியில் எண்ணம் துளிரத்தடுக்க முடியாத் தமிழே! - தொடுத்தசரம்தான் நிலைத்த பதிவாய் இருக்கசரண்யா எழுது தொடர்ந்து!-சுரேஜமீ