(எம்)பிரான் மலை - திருக்கொடுங்குன்றம்

114 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 25, 2018, 7:34:24 PM9/25/18
to மின்தமிழ்

நெடுநகர், வளநகர், பழநகர், பெருநகர், எழில்நகர், திருநகர் என்றும் "தேனின்பொலி மொழியாளொடும் உலகு ஏத்த இருந்தான் மேய குளிர்சாரல் கொடுங்குன்றம்" என்றும் திருஞானசம்பந்தர் பாடியருளிய, பறம்புமலை என்னும் பிரான்மலைக்கு அண்மையில் சென்றுவந்தேன். சிங்கை சித்தர் அய்யா கல்லூரிக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தபோது வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டேன்.

பாண்டிய நாட்டின் பாடல்பெற்ற பதினான்கு தலங்களில் ஒன்று திருக்கொடுங்குன்றம். திருஞானசம்பந்தர் மலையையே சிவனாகக் கண்டு எம்பிரான் மலை என்று தொழுதாராம். அதானால் பிரான்மலை என்றும் பறம்புமலை என்று வழங்கப்பட்டு பிரான்மலை என்று திரிந்ததாகவும் கூறுகிறார்கள்.

கடையேழு வள்ளல்களில் மழை போன்றவன் எனப் போற்றப்படும் முல்லைக்குத் தேர் ஈந்த பாரிவேள் ஆண்ட பகுதி பறம்பு மலை என்கிறார்கள். சங்கப்பாடல்களில் பத்தில் ஒரு பங்கு பாடல்களைப் புலன் அழுக்கற்ற புலவன் கபிலன் பாடியுள்ளான்! குறிஞ்சித் திணை வல்லவன். கபிலன் போற்றிய அரசன் பாரி; பாடிய மலை பறம்புமலை.

பிரான்மலை அடைந்ததும் மூன்று தேர்கள் கண்டேன். தேர்ச்சிற்பங்களின் வடிவங்கள் காலத்தால் உரு மாறியுள்ளன. தேர் நிலையிலிருந்து மாலை நேரத்தில் வான்மழை சாரலாக ஆரம்பித்த வேளையில் மலையின் தோற்றம் வெகு அழகு!

கோவில் பரந்து மூன்று நிலைகளில் மலைச் சரிவில் அமைந்துள்ளது. அடிநிலைக் கோவிலில் "உமாமகேசுவரர்" என்று இன்று அழைக்கப்படுகின்ற கொடுங்குன்ற நாதர் அருள்பாலிக்கிறார். அடுத்துத் திருப்புகழ் பெற்ற முருகன் சன்னதி. அருணகிரி நாதர் பாடலில் பொருட்பெண்டிர் உறுப்பு வர்ணனையில் மலை தந்த பாதிப்பு பிரதிபலிக்கிறது. பாடலின் சந்தம் அபாரம். அம்மன் ஞானசம்பந்தர் "தேனின் போலி மொழியாள்" என்று பாடியுள்ளது போல "குயிலமுத நாயகி" என்றழைக்கப்படுகிறார். சரியான விளக்கு ஒளி அமைப்பு இல்லை.

மலையின் அடுத்த நிலையில் காசிவிசுவநாதர் விசாலட்சி கோவில் இருக்கிறது. துவாரபாலகர் கம்பீர அழகு! இங்கு பக்தர்கள் கொண்டாடும் ஆளுயர பைரவர் மிகவிசேடம். பைரவர் சன்னதியே பிரதானம்.

இதற்கும் மேல்நிலையில் தேவ சபை என்னும் கல் மண்டபமும் குடவரைக் கோயிலும் இருக்கின்றன. பெரிய குடவரைக் கருவறையில் ஈசன் "மங்கை பாகர்" அம்பாள் "தேனம்மை" இணைந்த கைகளுடன் அருள்பாலிக்கிறார்கள். இங்கு பல விசேடங்கள். அம்மைக்கு 9 முழ வெள்ளை ஆடை. இறைவனுக்குப் பத்து ஆறு வெள்ளை வேட்டி. ஒருமுறை அணிவித்த ஆடை மறுமுறை அணிவிப்பதில்லை. அபிடேகம் முன்புள்ள சிறு இலிங்கத் திருமேனிக்கே. வெள்ளெருக்கம் பூ மாலை மட்டுமே சாற்றபடும்! வேறு பூக்கள், மின்விளக்கு அனுமதியில்லை. கற்பூர ஆரத்தி ஒளியில் ஒளிர்கின்ற எம்பிரானையும் நாணப் புன்னகை இறைவியையும் வழிபடும்போது சிலிர்ப்பு ஏற்படுகிறது. வெளியில் மழை. உடன் வழிகாட்டியாக அமைந்த சிறுவனும் அர்ச்சகரும் மட்டுமே! (நண்பர்கள் மங்கை பாகர் காட்சி காணை இணையச் சுட்டி இதோ: https://goo.gl/images/i9ZHP5)

மேல்மண்டபத்தில் அர்ச்சகருக்காகக் காத்திருந்தபோது வளநகராகிய பிரான்மலை வீடுகளும், தூரத்தில் தெரிந்த வறண்ட குளமும், மலைப் பள்ளத்தில் அமைந்த தாமரைக் குளமும், மழைச் சாரல் குளிரும் கவர்ந்தன. உயரத்தில் பிரசித்திபெற்ற தர்கா இருப்பதாகச் சிறுவன் கூறினான்.

பிரான்மலைக் கல்வெட்டில் குறித்துள்ளபடி "பாண்டி மண்டலத்து கேரள சிங்க வளநாடாகிய அருவியூரான குலசேகரபட்டிணத்து திசைஆயிரத்து ஐநூற்றுவர்" என்ற வணிக குழாம் இங்கு இருந்துள்ளது. இன்றும் அருவியூர் நகரத்தார் என்னும் வணிக மரபினர் பிரான்மலை வட்டாரத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார்கள்.

நீண்ட நாள் நான் காண விரும்பிய, பல மைல் தூரத்திலிருந்து கண்டு வியந்துள்ள பிரான்மலையைத் தரிசித்த மகிழ்ச்சியுடன் சிங்கம்புணரி, திருப்பத்தூர் வழியாகக் காரைக்குடி வந்தடைந்தேன்.


iraamaki

unread,
Sep 25, 2018, 9:46:18 PM9/25/18
to mint...@googlegroups.com
அருமையான விவரிப்பு. பார்க்கவேண்டிய கோயில். ஒரு சிறு குறிப்பில் மாறுபடுவேன்.
 
"பாண்டி மண்டலத்து கேரள சிங்க வளநாடாகிய அருவியூரான குலசேகரபட்டிணத்து திசைஆயிரத்து ஐநூற்றுவர்" என்ற வணிக குழாம் இங்கு இருந்துள்ளது. இன்றும் அருவியூர் நகரத்தார் என்னும் வணிக மரபினர் பிரான்மலை வட்டாரத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார்கள்.
 
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து ஆத்மநாத சிவாச்சாரியாரோடு பாண்டிநாடு வந்த 1500 நகரத்தார் பிள்ளைகளில் 500 பேர் அருவியூரிலும் 500 பேர் இளையாற்றங்குடியிலும் 500 பேர் சுந்தரபாண்டியன் பட்டினத்திலும் (இதன் பழைய பெயர் தெரியாது) குடியேறினார் என்று சொல்வார். மூவரும் வெவ்வேறு வேளாளர்களிடம் பெண் எடுத்துத் தம் பாண்டிநாட்டு வாழ்க்கையை மீண்டுந் தொடங்கினார். பின்னால் போர், சூழமைவு, இயற்கை  அழிவுகளால், அருவியூரார் முற்றிலும் அழிந்தார். சுந்தரபாண்டியன் பட்டினத்தார் (ஆட்கள் குறைந்து) சுற்றிக்கொண்டு  மேற்கே சேரநாடு போய் முடிவில் நாகர்கோயில் கோட்டாற்றுப் பகுதிக்கு வந்துசேர்ந்தார் என்று கேள்விப்பட்டுள்ளேன். (பேரா. தமிழண்ணலின் ஒரு மாணவர் இதுபற்றி ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வேடு அளித்திருக்கிறார். அதை ஒருமுறை படித்திருக்கிறேன். இப்போது எங்கு அது கிடைக்கும் என்று தெரியவில்லை.). இன்றும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கொண்டுவந்த மரகதப்பிள்ளையாரை தம் நடுவே வைத்துக்கொண்டு கோயில்கட்டி அதைச் சுற்றிலும் வாழ்ந்துவருகிறார் என்றும் அதன்மூலம் படித்ததுண்டு.  (அந்தக் கோயிலுக்கும் நான் ஒருமுறை 15/20 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை போனேன். இப்போது கோட்டாற்றுப் பகுதிக்குள் அதன் இருப்பிடத்தைச் சரியாக நினைவுகூர்ந்து சொல்லமுடியவில்லை.)
 
அழிந்துபோன அருவியூரை  அகத்தியர் மடற்குழு நடத்திவந்த, சிங்கம்புணரியைச் சேர்ந்த, மலேசியா சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த (காலஞ்சென்ற) மரு.செயபாரதியே கண்டுபிடித்து அன்றிருந்த தமிழகத் தொல்லியல் ஆய்வாளருக்குத் தெரியப்படுத்தினார். அவருக்கான சிறப்புகளில் இதுவொன்று. அருவியூர் என்றவூர் சிங்கம்புணரிக்கு அருகில் இருந்தது. இப்போது அது அழிந்துகிடக்கிறது. அருவியூர் நகரத்தார் என்று யாரும் இப்போது இல்லை. முற்றிலுங் கரைந்துவிட்டார். 
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Sep 26, 2018, 5:24:55 AM9/26/18
to mintamil
நூ த லோ சு
மயிலை
திரு வினைதீர்த்தான் அவர்களுக்கு,
பாண்டியநாட்டு தேவாரபாடல்பெற்றதலமாம் கொடுங்குன்றம் பற்றி நல்லதொரு
விளக்கமான கருத்துரைதனை ஈடுபாடுடன் வைத்தமைக்கு மிக்க நன்றி

இந்தியாவில் உள்ள தேவார பாடல்பெற்றத்தலங்கள் மட்டுமல்ல ஆழ்வார்கள் போற்றிய 
திருமால்தலங்கள் அனைத்தையும்னோர் திட்டம் வழி  தம் வாழ்நாளில் நேரில் கண்டு
வழிபடவேண்டும் எனும் கொளகையில் அவைகளை கண்டு முடித்தவன் எனும் நிலையில் 
இந்த பிரான் மலை எனும் கொடுங்குன்றமும் நேரில்வழிப்பட்டவன்.  காலம் சென்ற தவத்திரு குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் தமிழ்மீது ஆழ்ந்த இனவுணர்வுடன் வள்ளல் பாரிவிழா
நடத்தி வந்தது பலர் அறிவர். 

இப்போது நீங்கள் கட்டிய கொடுங்குன்றம் தலப்படங்களில் பிள்ளையார் உருவங்கள் இரண்டு உள்ளன. பிரான் மலையில் மூன்று நிலைகளில்  மூன்று  கோயில்கள் உள்ளன அறிவோம் எனவே 
படத்தொகுப்பில் காட்டப்பட்ட இரு பிள்ளையார் உருவங்களில் ஒன்று பிள்ளையார்பட்டி (கற்பகர்= பழமையானவர் / கற்பம்ஊழி எனும் பொருள்வழி பழமை ) குடைவறைக்குகையில் உள்ள
பிள்ளையார் போல் இரு கைகளுடன் காண்பதால் படத்தில் காணும் பிள்ளையார் எந்தக்கோயிலில் உள்ளது ? மாதொருபாகன் கோயிலா? என அறிய ஆவல்.  ஏனெனில் 

இருக்கைகள் உள்ளவைதான் மிக பழமையானவை என ஆய்வுகள் வரலாற்றாளர்கள்  காட்டி
வருகின்றனர் அதுபற்றி நானும் விவரங்கள் சேர்ப்பதால் காட்டிய இரு கை விநாயகர் பற்றி தகவல் சேகரிக்க நினைக்கின்றேன் .

சோதிலிங்கங்கள் கருநாடக ஆந்திர தலங்கள் மராட்டத்தின் அஷ்ட விநாயக் எனும்  விநாயகர் தலங்கள் என  தெய்வீகதொகுப்பு சுற்றுலா வழிபாடு என பலவற்றில் கலந்துகொண்டபோது  அஷ்டவிநாகர்களில் எல்லாமே  இரு கை மட்டும்  கொண்ட பிள்ளையார்லாகத்தான் உள்ளன
அறிந்தேன். பாதாமி (வாதாபி) அருகுள்ள பட்டடக்கல் குகை கோயிலில் காணும் ஓர் 18 கைஆ டல்
வல்லான் உடன் சேர்ந்து ஆடும் பிள்ளையார் உருவமும்  இருக்கைகள் கொண்டதுதான்

மேலும் தமிழ்நாட்டில் இரண்டு மூன்று கோயில்களிலும் மிகப்பழமையான இருக்கை விநாயக உருவங்கள் உள்ளன எனவே இந்த தொகுப்பினுக்கு விவரங்கள் தேவைப்படுகின்ற . அடுத்த
 முடிந்த வாய்ப்பினில் காட்டினால்  போதும் 
நன்றி



 





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Innamburan S.Soundararajan

unread,
Sep 26, 2018, 7:31:25 AM9/26/18
to mintamil
நான் படிக்க ஏதுவாக எழுதுவதற்கு மிக்க நன்றி. திரு. நூ.த. லோ.சு.
Reply all
Reply to author
Forward
0 new messages