1. சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்

9 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 25, 2024, 6:18:45 PMJul 25
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Dr. Ku.Muthukumar, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்

 


    ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்      26 July 2024      கரமுதல


(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு- தொடர்ச்சி)

என் தமிழ்ப்பணி

அத்தியாயம்  11. மனமும் இனமும்

செயல், புறத்தே நிகழ்வது; உணர்வு அகத்தே எழுவது , செயல் புலப்படக்கூடியதுஉணர்வு புலப்பட மாட்டாதது. புறத்தே நிகழும் செயல் அகத்தே எழும் உணர்வை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே இயற்கையுமாகும். உணர்வு ஊற்றெடுக்கும் அகமும், அவ்வுணர்வை வெளிப்படுத்தும் நாவும், அதன் வழிச் செயல்படும் மெய்யும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவாகும் இம்மூன்று நிலையாலும், மனிதர் தூய்மையுடையராதல் வேண்டும். இதை வலியுறுத்தவே, உண்மை, வாய்மை, மெய்ம்மை என ஒரே பொருள் குறிக்க, மூன்று சொற்களைப் பெற்றுளது தமிழ் மொழி. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வுத் தூய்மையை உணர்த்துவது உண்மை. வாயடியாக எழும் சொல்லின் தூய்மையை உணர்த்துவது வாய்மை. மெய் அடியாக எழும் செயல் தூய்மையை உணர்த்துவது மெய்ம்மை.

சொல்லும் செயலும், உணர்வை அடிப்படையாகக் கொண்டே எழும். உணர்வின்றிச் சொல் எழாது. உணர்வின்றிச் செயல் நிகழாது. உணர்வு உண்டாகிவிடின், அது தொடர்பாகச் சொல் எழுவதையோ, செயல் நிகழ்வதையோ தடுத்து நிறுத்த இயலாது. அவை தாமாகவே எழும்: நிகழும், ஆகவேதான் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆகிய செயல் பற்றியதே அறம் ஆயினும், அவற்றிற்கு அடிப்படை அறவுணர்வே என்பதால், “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறம்” என அறத்தை மனத்தின் தொழிலாகக் கூறினார் வள்ளுவர். தாம் கூற விரும்பியனவற்றை வள்ளுவர் குறளினும் சுருங்கிய வாய்பாட்டால் கூறுவதையே வழக்கமாகக் கொண்ட ஒளவையார், “அறம் செய்” என்பதே சுருங்கிய வாய்பாடாகவும், அது கொள்ளாது. அறவழி வாழ எண்ணிவிட்டால் அறவழி வாழ்ந்து விடுவர் என்ற துணிவினால் “அறஞ் செய விரும்பு” என மேலும் ஒரு சொல் விரிந்த தொடரை மேற் கொண்டுள்ளார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்ற வள்ளுவர் வாய் மொழியும், “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்ற மக்கள் வாய்மொழியும் காண்க.

மனிதனை மதிப்பிடத் துணைபுரிவன, அவன் செய்யும் செயலும், உரைக்கும் சொல்லுமே ஆம். “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்பது திருக்குறள். “மனத்தது மாசாக மாண்டாரின் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்” என்பதற்கேற்ப உணர்வு ஒன்றாக, சொல்லும் செயலும் அவ்வுணர்வுக்கு, மாறுபட்டனவாக வாழும் வன்கணாளரும் உலகில் உலவுகின்றனர் என்பது உண்மையே என்றாலும், வேடமிட்டு நடிக்கும் அந்நாடகம் விரைவில் கலைந்து போகும் ஆதலின், ஒருவன் நல்லவன், நல்லவனல்லன் என்பதை அவனாற்றும் செயல் கொண்டே உலகம் மதிப்பிடும். அச்செயல், அவன் உணர்வையே அடிப்படையாகக் கொண்டு நிகழும் ஆதலின் மனிதன் அவன் உள்ளத்து உணர்வுக்கு ஏற்பவே மதிப்பிடப்படுகிறான் என்பதே உண்மை.

அந்த உணர்வு அவன் மனத்தே எழுவது; நல்லுணர்வோ தீயவுணர்வோ, மனம் எண்ணிய வழி எழுந்துவிடும்; நல்லுணர்வுடைய மனம், விரும்பிவிட்டால் அந்நல்லுணர்வைக் கைவிட்டுத் தீயவுணர்வைக் கக்கலாம்; அது போலவே, தீயவுணர்வு உடையதாக இருந்த மனம், நினைத்த அக்கணமே அத்தீயவுணர்வைக் கைவிட்டு நல்லுணர்வை வெளிப்படுத்தலாம். ஆக, அது; அவன் அகத்தே அடங்கிக் கிடக்கும் மனத்தின் நிலைக்கேற்ப உண்டாகிவிடும். ஆகவே, அவ்விரு நிலையும் அவ்விடத்திலேயே அடங்கி இருப்பன ஆகும்.

ஆனால், மக்களினத்தோடு கொள்ளும் தொடர்பால் உண்டாகும் விளைவு அத்தகையதன்று; ஒருவன் உணர்வாலும், உரையாலும், உடல் ஆற்றும் செயலாலும் எவ்வளவுதான் தூய்மையுடையவனாக இருந்தாலும், அத்தூய்மை அவன் சார்ந்து நிற்கும் இனத்தாரின் இயல்புக்கு ஏற்ப வேறுபட்டே தீரும். சார்ந்து நிற்பது நல்லினமாயின் அத்தூய்மை மேலும் வலுப்பெற்றுத் திகழும். சிற்றினத்தோடு சேர்ந்துவிடுவனாயின், அத்தூய்மை மெல்ல மெல்ல வலிவிழந்து, இறுதியில் அறவே அழிந்துபோக, தூய்மைக்கு மாறான நிலையே அவன்பால் குடி புகுந்துவிடும். சிற்றினத்தோடு சேர்ந்த பின்னரும் தூய்மையாக இருக்க இயலாது; இருக்க முயலலாம்; ஒரு சில காலம் இருக்கவும் செய்யலாம். தூய்மை கெடாமல் வாழும் அவ்வொரு சில கால வாழ்வையும், உலகம் ஐயப்பட்டே திரும்.

பனையடியில் அமர்ந்து பாலே பருகினாலும், உண்ணுவது பால் என ஏற்றுக் கொள்ளாது உலகம். மேலும், பனை அடியையே வாழ்விடமாகக் கொண்டு விட்டவனால், நீண்ட நாளைக்குப் பாலையே இயலாது. பால், பனங்கள்ளாக மாற நெடுங்காலம் ஆகாது. காலம் சிறிது ஆகும் ஆயினும் பால் பனங் கள்ளாக மாறியே தீரும். ஆகவே, ஒருவன் உள்ளத்தால் எவ்வளவுதான் தூய்மையுடையவனாக இருப்பினும், அத்தூய்மை கெடாது நிற்க, அவ்வுணர்வுத் தூய்மை மட்டும் போதாது. அவன் சார்ந்த நிற்கும் இனமும் தூய்மையுடையதாதல் வேண்டும். ஆகவே ஒருவன் நல்லவன். நல்லவன் அல்லன் என்பது அவன் சார்ந்து நிற்கும் இனத்தின் இயல்புக்கு ஏற்பவே மதிப்பிடப்படும். “உன் நண்பனை அடையாளம் காட்டு: நீ எத்தகையவன் என்பதைக் கூறகிறேன்” என்ற பெரியார் வாக்கும் இதையே வலியுறுத்துவது காண்க. சார்ந்து நிற்கும் இனம் நல்லினமாயின், அவனும் நல்லவனாவன். அது சிற்றினமாயின் அவனும் தீயோனாவன். –

ஒர் உணர்வை இழந்தால் அதை மீண்டும் பெற்றுக் கொள்ள இயலும், அஃது அவன் மனத்தகத்தே இருப்பதால். ஆனால், ஒர் இனத்தோடு சேர்ந்து, அவர் இயல்புகளுக்கு அடிமையாகி விட்டவனால், அவ்வியல்பிலிருந்து விடுபட இயலாது. ஆகவே இனத்தைத் தேர்ந்து கொள்வதில் விழிப்பாய் இருத்தல் வேண்டும்.

மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தானாம்

இன்னான் எனப்படும் சொல்.”

என்ற குறளில், இத்துனைப் பொருளும் அடங்கி இருப்பது அறிக.

(தொடரும்)

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்

++

சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


     ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      26 July 2024      கரமுதல


(சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 541-550

541. Acquiring Propertyசொத்தினை அடைதல்  

வணிகச்சொத்துகள் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து கை மாறுகின்றன.

சொத்து கையகப்படுத்தல் என்பது மனைவணிகச்சொத்தின் மீது உரிமை அல்லது உரிமைகளைப் பெறுவதற்கான செயல்முறையைக் குறிப்பது.
542. Acquisition  கையகப்படுத்துதல்  

அகப்படுத்தல்,

கைப்பற்றுகை, கைப்பற்றல், கைக்கொள்ளல்,

ஈட்டல்,

திரட்டூக்கம், 
ஊறல்,
அடைவு,
செயல்,
தேட்டம், 
உழைப்பு,
பெற்றி,
பேறு, உரிமை, 
சேகரம்,
சம்பாத்தியம்,
ஈட்டியது,
முயன்றடைதல், 
வித்தி.  

சம்பத்தி, ஆர்ச்சனம், ஆர்ச்சிதம்,சப்தி, சம்பிராத்தி முதலிய பிறமொழிச் சொற்களைக் கையாள்வதைத் தவிர்க்க வேண்டும்.  

தனியார் சொத்துகளைப் பொதுச் செயல்களுக்காக அரசாங்கமே சட்டப்படி எடுத்துக் கொள்ளுவது, கையகப்படுத்தல் அல்லது நில எடுப்பு எனப்படுகிறது.  

கல்வி நிறுவனங்கள் அமைத்தல், பாலம் கட்டுதல், சாலை போடுதல், பொதுக் குடியிருப்புத் திட்டங்கள், குடிசைமாற்றுத் திட்டங்கள், ஊரகத்திட்டங்கள், நல வாழ்வு நிலையம் அல்லது மருத்துவமனை போன்ற பொதுக்கட்டடங்கள் கட்டுதல் ஆகிய பொதுநலச செயல்களுக்குத் தேவையான நிலங்களைத் தனியாரிடமிருந்து அரசு, தக்க இழப்பீடு தந்துவிட்டு, சட்டபடி தன் கைவசம் எடுத்துக் கொள்வதே இது.   

இந்தியா, பாகித்தான் ஆகிய நாடுகளில், தனியார் வசமுள்ள நிலத்தை, அரசு பொது நோக்கத்திற்காகக் கையகப்படுத்தத் துணை செய்ய ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1894 ஆகும். இது வெவ்வேறு காலக்கட்டங்களில் பல திருததங்களுக்கு உள்ளானது.  

இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) 2011 செட்டம்பர் 7 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் நில எடுப்பு, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை வரையறை ஆகியவற்றை விளக்குகிறது. இச்சட்டம் 2013-இல் நியாயமான இழப்பீட்டு உரிமை, வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு-மீள்குடியேற்றச் சட்டம்(Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013) அல்லது நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013 என்று மாற்றியமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டது.  

சிறப்புப் பொருண்மிய வலயச் சட்டம் (2005), அணுத்திறன் சட்டம் (1962), இருப்பூர்திச் சட்டம் (1989) முதலிய பதினாறு சட்டங்களின் கீழ் நிகழும் கையகப்படுத்தல், இச்சட்டத்தின் பரப்புக்குள் வாரா.
543. Acquisition and transfer of undertaking  எடுப்பிற்குரியவற்றைக் கையகப்படுத்தலும் (உரிமை) மாற்றலும்  

கையகப்படுத்தலும் ஏற்பு நிறுவனங்களை மாற்றலும்   எடுத்துக்காட்டாக ஏற்புவங்கி நிறுவனத்தை/நாட்டுடைமையாக்கப்பட்டநிறுவனத்தை (under taking bank)கையகப்படுத்தி  அதன் உரிமையை மாற்றுதல்  
544. Acquisition by prescription  நீடிய துய்ப்புரிமையால் ஈட்டுதல்

நீண்ட காலத் துய்ப்புரிமை அடிப்படையில் சொத்தினை அல்லது சொத்துமீதான சில உரிமைகளை அடைதல்.  

இந்தியத் துய்ப்புரிமைச் சட்டம் 1882, பிரிவு 15(S. 15 IEA,1882)   பிரிவு4(2) இந்திய மீன்பிடிச் சட்டம், 1897  

prescription என்றால் பெரும்பான்மை மருத்துவர் எழுதித்தரும் மருத்துவக் குறிப்பு என்றே கருதுவதால் அப்பொருளில் சில அகராதிகளில் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் அது பொருந்தாது.
545. Acquisition By Transferமாறுதல் வழி அடைதல்  

மாறுதல் வழிக் கையகப்படுத்தல்  

ஒன்றின் உரிமையை அதன் பங்குகளை மாற்றிப் பெறுதல் மூலம் அடைதல்
546. Acquisition Of Citizenshipகுடியுரிமை பெறுதல்  

பிறப்பால்(பிரிவு 3), பதிவால்(பிரிவு 5), மரபு வழியால்(பிரிவு 4), குடியுரிமை அளிப்பால்(பிரிவு 6), வாழ்நிலத்தை எல்லை வரம்பில் சேர்த்துக் கொள்வதால் குடியுரிமை பெறப்படுகின்றது. (இந்தியக் குடியுரிமைகள் சட்டம்  1955)
547. Acquisition Of Domicile  வாழ்வகம் கொள்ளல்  

வாழ்விடம் கொள்ளல்

வாழிடம் கொள்ளல்

உறைவிடம் கொள்ளல்  

ஒருவர் தன் உரிம மூலம் இல்லாத ஒரு நாட்டில் தன் நிலையான வாழ்விடத்தை அமைத்துக் கொள்வதன் மூலம் புதிய குடியிருப்பைப் பெறுகிறார்.   இந்திய வழியுரிமைச் சட்டம்( The Indian Succession Act,) 1925
548. Acquisition Of Easements  துய்ப்புரிமைகளைப் பெறுதல்  

easement என்றால் வசதி உரிமைகள் என்கின்றனர். இவ்வாறு சொல்வதை விடப்பயன்பாட்டு உரிமை என்னும் பொருளில் துய்ப்புரிமை எனச் சுருக்கமாகக் கூறலாம்.  

இந்தியத் துய்ப்புரிமைச் சட்டம், 1882,(The Indian Easements Act, 1882) பிரிவு 12, அசையாச் சொத்தின் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட உரிமையாளர்களில் ஒருவர், மற்றவர் அல்லது மற்றவர்களின் இசைவுடன் அல்லது இசைவின்றி அத்தகைய சொத்தின் பயன் நுகர்ச்சிக்காக, துய்ப்புரிமையைப் பெறலாம் என்கிறது.  

கூட்டுரிமையாளராலும் துய்ப்புரிமை பெறலாம். இந்நேர்வில் பிற கூட்டுரிமையரின் இசைவு தேவையில்லை.
549. Acquisition Of Gain  ஆதாயம் அடைதல்

ஆதாயத்தைக் கையகப்படுத்தல்  

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் வணிக ஒருங்கிணைவு. இதில், நிறுவனம் 50%இற்கு மேற்பட்ட பங்குகளை வாங்குகையில்  வாங்கப்படும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெறும் ஆதாயம் அடைகிறது.
550. Acquisition Of Landsநிலக் கையகப்படுத்தல்  

நிலங்களைக் கையகப்படுத்துதல்  

நில எடுப்பு  

பொது நன்மை கருதி அரசு நிலத்தை எடுத்துக் கொள்ளுதல்.
காண்க: Acquisition- கையகப் படுத்துதல்

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages