"சங்கச்சொற்புதிர்" செயலி ("Sangachorpudir" Tamil Word Search App)

5 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 3, 2026, 11:23:08 AM (15 hours ago) Apr 3
to மின்தமிழ்
sangach chol game app.jpg
"சங்கச்சொற்புதிர்" செயலி  ("Sangachorpudir" Tamil Word Search App)
https://play.google.com/store/apps/details?id=com.valluvarvallalarvattam.tamilwordsearch
​​​​​​​​​​​​​​​​​​-----------------------------------------------------


தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

நமது வள்ளுவர் வள்ளலார் வட்டம் செயலி வெளியீட்டில், அடுத்ததாக சங்கச்சொற்புதிர் (Sangachorpudir) எனும் செயலியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சங்க இலக்கியச் சொற்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான குறுக்கு புதிர் விளையாட்டு.

கட்டங்களில் மறைந்திருக்கும் சங்கத் தமிழ் சொற்களை
➡️⬅️ கிடைக்கோடு
⬇️⬆️ நெடுக்கோடு
↗️↖️↘️↙️ குறுக்குக்கோடு
வழியாக தேடி கண்டுபிடிக்க வேண்டும்

சங்க இலக்கியச் சொற்கள் அகராதியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் மறைந்து போன சங்கச் சொற்களை மீண்டும் உயிர்ப்பித்து, இன்றைய பயன்பாட்டிற்கு கொண்டு வரும் ஒரு மொழிப் பயணம்!
பழமையான சொற்களின் பொருள், பயன்பாடு, பண்பாட்டு பின்னணி ஆகியவற்றை அறிய உதவும்.
தமிழ்ச்சொல்வளம் மற்றும் மொழி அறிவை வளப்படுத்தும்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள்:
இந்த செயலியை தரவிறக்கம் செய்து, தாங்களும் விளையாடுங்கள்…
கூகுள் ப்ளேயில் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்று தேடினால், எங்கள் செயலிகள் கிடைக்கும்..
உங்கள் பிள்ளைகளையும் விளையாடச் செய்யுங்கள்…

தேடிப் பாருங்கள், தெரியும்
விளையாடிப் பாருங்கள், விளங்கும்
எங்கள் உழைப்பும், உங்கள் தமிழும்

விரும்புக! பிடித்திருந்தால் பகிர்க!

https://play.google.com/store/apps/details?id=com.valluvarvallalarvattam.tamilwordsearch

நன்றி
இவர்கள்,
#அர்ச்சித் & #இங்கர்சால்
வள்ளுவர் வள்ளலார் வட்டம்
Reply all
Reply to author
Forward
0 new messages