இன்று முகநூல் மற்றும் youtube சேனல் மூலம் ஆய்வு என்கின்ற பெயரில் பல்வேறு குழப்பங்களை இளைய தலைமுறையினரிடம் விதைக்கின்றனர் .
தமிழனாக இருந்தால் பகிரவும் .
உலகின் முதல் மொழி ,
என்பது போன்ற பதிவுகள் கூட ஏதெனும் ஒரு வகையில் பரவாயில்லை .
ஆனால் இல்லுமினாட்டி ?, யார் தமிழர் ? , தமிழரின் மெய்யியல் எனும் பெயரில் உலக மதங்களோடு உள்ள தொடர்புகள் குறித்த ஆய்வு ?
இவைகள் பெரும்பாலும் குழப்பத்தையும் கலகத்தையும் மட்டுமே ஏற்படுத்துகின்றன .
உலகம் ஏற்றுக்கொள்ளும் ஆய்வுக் கட்டுரைகள் தரும் ஆய்வாளர்கள் இன்று மிகவும் குறைவு .
அரசியல் காரணங்களுக்காக தமிழர் புகழ் பாடும் அமைப்புகளும் சரியான ஆய்வுகளை முன் எடுப்பதாகத் தெரியவில்லை .
ஆசீவிகம் குறித்த தினமணி கட்டுரைகளின் தகவல்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவை எனும் youtube மூலம் எடுக்கப்பட்டவை .
இவர்களின் youtube ஆய்வுகள் உண்மையில் யாரையும் குழப்பிவிடும் . இவை என்னையும் பாதித்தது உண்மை.
சரியான வழிகாட்டல் இல்லாமல் இத்தகைய ஆய்வுகள் . இளைய தலைமுறையைச் சிதைத்து வருகின்றது .
இதற்கு மற்றும் ஒரு உதாரணம் .
இத்தகைய ஆய்வுகளின் சமீபத்திய கண்டுபிடிப்பு
இல்லுமினாட்டி - தமிழர்கள் தானாம் .
இத்தகைய ஆய்வுகளின் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை
மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கின்றேன் .