Latch லாச்சி, தாழ்ப்பாள்

95 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Aug 6, 2008, 9:59:32 PM8/6/08
to மின்தமிழ்
----- Original Message -----
From: <s.th...@hotmail.com>
To: "மின்தமிழ்" <minT...@googlegroups.com>
Sent: Wednesday, July 30, 2008 2:13 AM
Subject: [MinTamil] Re: வணக்கம்!
|
| On 27 Jul., 06:47, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
| > அன்பின் தணிகா:
| >
| >
| > சிறு, சிறு எழுத்துப்பிழைகள் உண்டு.
| >
| > என் கண்ணில் பட்டது...
| >
| > ஏறத்தாள = ஏறத்தாழ
| > திக்கெண்டது = திக்கென்றது
| > வண்டது = வறண்டது
| > லாச்சி = தாழ்ப்பாள் (Latch எனும் ஆங்கிலச்சொல்லை லாச்சி என்று
சொல்கிறோம்)
| >
| > தொடர்ந்து புகலிட வாழ்வியல் பற்றி எழுதுங்கள். உங்கள் தலைமுறை
| > எழுத்துக்கள் இன்னும் சரியாகப் பதிவாகவில்லை. கிழடுகளே அந்தக்
| > காலத்துக்கதைகள் பேசி வருகின்றன (என்னைத்தான் சொல்கிறேன் :-)
| >
| > கண்ணன்
| வணக்கம்,
| தாழ்ப்பாள் என்றால் கதவின் உள் ப_ட்டு என்ற ஒரு அர்த்தமும் உண்டா?
|

லாச்சி என்பது Latch என்ற தாழ்ப்பாளில் இருந்து மருவியதாக இருக்கலாம்.
ஆனால், யாழ்ப்பாண பேச்சு, எழுத்துக்களில் லாச்சி என்ற சொல்லை Drawer என்ற
சொல்லுக்கே பயன்படுத்துகிறோம்.

அன்புடன்
சிறீதரன்

Narayanan Kannan

unread,
Aug 6, 2008, 10:03:47 PM8/6/08
to minT...@googlegroups.com
> லாச்சி என்பது Latch என்ற தாழ்ப்பாளில் இருந்து மருவியதாக இருக்கலாம்.
> ஆனால், யாழ்ப்பாண பேச்சு, எழுத்துக்களில் லாச்சி என்ற சொல்லை Drawer என்ற
> சொல்லுக்கே பயன்படுத்துகிறோம்.
>

ஆகா!

எப்படி ஒரு ஆங்கில வார்த்தை மாற்றுப் பொருள் கொள்கிறது பாருங்கள்.
சமிஸ்கிருதச் சொற்களின் மாற்றுப் பயன்பாடு பற்றிய இழையைக் கவனிக்கவும்!!

நன்றி. மேலும் தணிகா "தாழ்பாள்" என்பது குறித்து ஒரு சந்தேகம்
எழுப்பியிருக்கிறார்? !!

கண்ணன்

Kannan Natarajan

unread,
Aug 6, 2008, 10:13:34 PM8/6/08
to minT...@googlegroups.com
ஆங்கிலத்திலேயே,"Latch" என்கிறச் சொல்லுக்கு lever to lift or draw என்ற பொருள் பதியுமாறு உருவாக்கமும் ஒன்று  உண்டல்லவா!
 


 
2008/8/7 Narayanan Kannan nka...@gmail.com

Narayanan Kannan

unread,
Aug 6, 2008, 10:18:42 PM8/6/08
to minT...@googlegroups.com
2008/8/7 Kannan Natarajan <thar...@gmail.com>:

> ஆங்கிலத்திலேயே,"Latch" என்கிறச் சொல்லுக்கு lever to lift or draw என்ற பொருள்
> பதியுமாறு உருவாக்கமும் ஒன்று உண்டல்லவா!
>

Latch:

spring-loaded doorlock that can only be opened from the outside with a key
catch for fastening a door or gate; a bar that can be lowered or slid
into a groove
fasten with a latch; "latch the door"

http://www.google.com/search?hl=en&defl=en&q=define:latch&sa=X&oi=glossary_definition&ct=title

இல்லையே! எல்லாப் பொருளும் தாழ்பாள் என்றே சுட்டுகின்றன!

கண்ணன்

Kannan Natarajan

unread,
Aug 6, 2008, 10:51:32 PM8/6/08
to minT...@googlegroups.com

> fasten with a latch; "latch the door"
> இல்லையே! எல்லாப் பொருளும் தாழ்பாள் என்றே சுட்டுகின்றன!

உங்கள் விளக்கத்தால், இப்படிச் சொல்லலாமா - "You've latched the drawer topic tightly!"

Tthamizth Tthenee

unread,
Aug 6, 2008, 11:15:56 PM8/6/08
to minT...@googlegroups.com
அன்புக்கும் உண் டோஅடைக்கும் தாழ்..?
 
தாழ் என்பது அடைப்பான்
 
மனிதமும்,உலகமும் காப்போம்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
http://www.peopleofindia.net
Contact us at: con...@peopleofindia.net or peopleofindia.net@gmail.com
 
 
 
 


 

Pathmanabhan Iyer

unread,
Aug 7, 2008, 6:08:54 AM8/7/08
to minT...@googlegroups.com

ஆன்புள்ள சிறீதரன்

இலங்கையை டச்சுக்காரரும் (ஒல்லாந்தர்) போத்துக்கீசியரும் (Portugese) ஆங்கிலேயரும் (ஒவ்வொருவரும்) சராசரியாக 150 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்களது மொழிச் சொற்கள் சில இலங்கைத் தமிழர் மத்தியில் பாவனைக்கு வந்துவிட்டd. 

நண்பர் ஒருவருக்கும் எனக்கும் உடனயாக நினைவுக்கு வந்தவை:  


DUTCH WORDS

கச்சேரி  -     Kachcheri (Secratariat – Govt. Agent's Office)

ஸ்தோப்பு -  Veranda

tpwhe;ij வுpறாந்தை (Viraanthai)  - Veranda
 
கக்கூஸ்  - Lavatory
 
Magazine Prison      Magazine in Dutch means Store (room). The Magazine prison in Colombo was a store during Dutch Period in Sri Lanka.

 

 

 

PORTUGESE WORDS

அலுமாரி - Almirah

மேசை  - Table

லாச்சி  -  Drawer

கதிரை  - Chair

அலவாங்கு  - Crossbar

குசினி   - Kitchen

 

 

Narayanan Kannan

unread,
Aug 7, 2008, 6:35:51 AM8/7/08
to minT...@googlegroups.com
> | தாழ்ப்பாள் என்றால் கதவின் உள் ப_ட்டு என்ற ஒரு அர்த்தமும் உண்டா?
> |

Latch என்பது வெளிப்பூட்டு.
தாழ்பாள் என்றால் பொதுவான பூட்டு (உள்,வெளி)

கண்ணன்

Narayanan Kannan

unread,
Aug 7, 2008, 6:44:00 AM8/7/08
to minT...@googlegroups.com
> PORTUGESE WORDS

> அலுமாரி - Almirah = almirah
>
> மேசை - Table = mesa
>
> லாச்சி - Drawer = gaveta
>
> கதிரை - Chair =cadeira
>
> அலவாங்கு - Crossbar = barra transversal
>
> குசினி - Kitchen = cozinha
>

ஐயர்
கதிரை, மேசை, குசினி, அலமாரி இவை பொருந்துவது போல் லாட்சி பொறுந்தவில்லையே!!

Latch என்பது போர்ச்சுகலில் trinco
drawer என்பது போர்ச்சுகலில் gaveta

எனவே லாட்சி என்பது ஆங்கில வார்த்தை என்றுதான் படுகிறது!

கண்ணன்

பிகு: எங்கே வேந்தனைக் காணோம் :-)?

Hari Krishnan

unread,
Aug 7, 2008, 6:49:06 AM8/7/08
to minT...@googlegroups.com


2008/8/7 Narayanan Kannan <nka...@gmail.com>
தாழ் என்பதற்கே அடைத்தல் என்ற பொதுவான பொருள் உண்டு.  திருக்குறளில் வரும் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ், தாழ்ப்பாளைக் குறிக்கவில்லை.  அது குறிக்கும் தாழ் எது என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு பாரதியின் கவிதை ஒன்று உதவியது.
 
ஆசையெனும் கொடிக்குஒரு தாழ்மரமே போன்றான்
 
என்று குள்ளச்சாமியைப் பாடுகிறான்.  மேலோட்டமாகப் பார்த்தால் சிக்கல் ஏதும் இல்லாத இந்த வரியில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது.  கொடி என்றால் என்ன, தாழ்மரம் என்றால் என்ன என்று யோசிக்கத் தொடங்கி, பிறகு திருக்குளோடு பொருத்திப் பார்த்து உணர்ந்தேன்.
 
உணர்நததை தென்றல் பத்திரிகையில் ஹரிமொழி பத்தியில் எழுதியிருக்கிறேன்.  ஆர்வலர்கள் பார்க்க இங்கே சுட்டிகள்:
 
 
 
இதுவரை நான் தென்றலில் எழுதியிருக்கும் தொடர் கட்டுரைகள் எல்லாமும் இருக்கும் இடம்:
 
 
எனக்கு இந்தக் குழுவின் சம்பிரதாயங்கள் தெரியாது.  இப்படி ஒரு சுட்டியைப் பொதுவாக மற்ற குழுக்களில் அனுப்புவது வழக்கம்.  (நானும் ஒரு மின்மடல் குழுவை நடத்துபவன்தான்.)   இந்த மாதிரியான உரல் வியாரத்துக்கு இங்கே ஏதேனும் தடையிருப்பின், இந்த மடலை நீக்கிவிடுமாறு உரிமையாளரைக் கேட்டுக் கொள்கிறேன். 
 
 
 
 
 
--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

unread,
Aug 7, 2008, 7:54:10 AM8/7/08
to minT...@googlegroups.com
அன்பின் ஹரி

அருமையான விளக்கம். தாழ் என்பதன் பல்வேறு பயன்பாடு அறிந்தோம். நீங்கள்
தாராளமாக இணைப்பு தாருங்கள். இங்கு அதற்கு தாழ் இல்லை (தடா :-)

உங்கள் கட்டுரைத்தொடர் சேகரம் நல்ல முயற்சி. இணைப்பு த.ம.அ யில் கொடுக்க
ஏற்பாடு செய்வோம்.

கண்ணன்


--
"Be the change you wish to see in the world." -Gandhi

Subashini Tremmel

unread,
Aug 7, 2008, 2:01:46 PM8/7/08
to minT...@googlegroups.com
தணிகா மற்றும் சிறீதரன் சொல்வது போல, மலேசியத் தமிழர்களும் லாச்சி என்ற சொல்லை Drawer என்ற அர்த்தத்துடன் பயன்படுத்துவது வழக்கம். 
 
/சுபா

வேந்தன் அரசு

unread,
Aug 7, 2008, 2:28:10 PM8/7/08
to minT...@googlegroups.com


2008/8/7 Narayanan Kannan <nka...@gmail.com>
இருக்கேன் ஐயா!
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Pathmanabhan Iyer

unread,
Aug 7, 2008, 3:45:06 PM8/7/08
to minT...@googlegroups.com
Kannan
 
You may be right. I will check with friends to see if I could get the correct answer.
 
Iyer

Sri Sritharan

unread,
Aug 8, 2008, 10:17:39 PM8/8/08
to minT...@googlegroups.com
தமிழகத்தில் drawer என்பதற்கு தமிழில் எப்படி சொல்லுகிறார்கள்?


அன்புடன்
சிறீதரன்

Tthamizth Tthenee

unread,
Aug 9, 2008, 3:35:56 AM8/9/08
to minT...@googlegroups.com
தமிழகத்தில் drawer என்பதற்கு தமிழில்
 
என்பதற்கு "இழுப்பரை' என்று சொல்லுவார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/8/9 Sri Sritharan <ksth...@gmail.com>

Kannan Natarajan

unread,
Aug 9, 2008, 7:24:00 PM8/9/08
to minT...@googlegroups.com
> drawer என்பதற்கு தமிழில் "இழுப்பரை" என்று சொல்லுவார்கள்.
 
ஒருபொருட்பன்மொழி (synonym):
 
1. (மேசையின்) செருகுப் பெட்டி.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

வேந்தன் அரசு

unread,
Aug 10, 2008, 8:42:32 AM8/10/08
to minT...@googlegroups.com


2008/8/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

தமிழகத்தில் drawer என்பதற்கு தமிழில்
 
என்பதற்கு "இழுப்பரை' என்று சொல்லுவார்கள்
 
இழுப்பறை" என்றுதானே இருக்க வேண்டும்
 
அறுக்கப்பட்டது அறை
வரையறை போல் இழுப்பறை
 
 

Narayanan Kannan

unread,
Aug 10, 2008, 9:09:26 AM8/10/08
to minT...@googlegroups.com
On 8/10/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
> இழுப்பறை" என்றுதானே இருக்க வேண்டும்
>
> அறுக்கப்பட்டது அறை
> வரையறை போல் இழுப்பறை


அப்படில்லாம் இல்லங்கோ! தமிழ்ல "டிராயர்" அப்படின்னுதாங்கோ சொல்லுவோம்.

Reply all
Reply to author
Forward
0 new messages