London Chuderoli ... May-June 2008 ... Benefits of Vegetables.

0 views
Skip to first unread message

V.Ramasami

unread,
Jul 18, 2008, 1:26:05 AM7/18/08
to Thamiz kUru nal-lulakam, tamil araichchi, nam bik kai, min tamil, e suvadi, tamildom, tamil sangam nigeria, tamil man tram, golden tamil world, golden tamil, free Tamil conputing
:
***************************************************************
இலண்டன் சுடரொளி .. வைகாசி - ஆனி, 2008.
 
****************************************************************
 
காய்கறிகளின் பயன்கள்:
=====================
 
    காய்கறிகள், உணவு மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படும், என்பதுதான், சித்தர்களின் படிப்பினை!
 
     அன்றாடம் நாம் பயன்படுத்தும் காய்கறிகளின் பயன்கள் பற்றி அறிவோம்:
 
வெண்டைக்காய்:
==============
    பிஞ்சுக்காய்கள் நல்லவை. இதனை, மாதம் 8 முறைகளாவது உண்டுவந்தால், மூளை பலப்படும்; அறிவு வளர்ச்சியடையும்; சுறுசுறுப்பு, நினைவாற்றல் அதிகப்படும்; இரத்தத்திலுள்ள கொழுப்பு கட்டுப்படும்; இதயநோய் ஏற்படாது; குடலில் ஏற்படும் புற்று நோயின் வேகத்தைக் குறைக்கும்.
 
முருங்கைக்காய்:
==============
 
    பிஞ்சுக் காய்கள் சிறந்த பலன்கள் தரும். இரும்புச் சத்து, தாமிரச் சத்து, சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்தது. உடலில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். குடலில், புண்கள், புற்றுகள் வருவதைத் தடுக்கும். வாதநோய், பித்தநோய், கபம், சுகமாகும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். பெண்கள் சாப்பிடத், தாய்ப்பால் பெருகும்.
 
பாகற்காய்:
=========
 
    இது, கொம்புப் பாகல், மிதி பாகல், என இரண்டு வகைப் படும். வாரம் 2 முறை சாப்பிட்டுவர, நம் இரத்தம் சுத்தமாகும்; எலும்புகள் உறுதிப்படும்; பசியைத் தூண்டும்; குடலில் உள்ள பூச்சிகள் வெளியேற்றப்படும்; நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும்; நீரிழிவு நோய்க்கு நிவாரணமாகும்; மஞ்சள் காமாலையைக் குணமாக்கும்.
 
கத்தரிக்காய்:
===========
 
    கருநீலம், பச்சை நிறம், வெள்ளை நிறத்தில், உருண்டை / நீளவடிவம் உள்ள காய்கள் உண்டு. இதை, வாரம் இரண்டு முறையேனும் சாப்பிட்டு வந்தால், பித்தம், பித்தக் கிறுகிறுப்பு நீங்கும்; மலச்சிக்கல் வராது; பசியை அதிகப்படுத்தும்; இதயம் பலப்படும்; இரத்தம் சுத்தமாகும்; தொற்று நோய்க் கிருமிகளை அழித்து விடும்.
 
அவரைக்காய்:
============
 
    கோழி அவரை, சாட்டை அவரை எனப் பல வகைகள் உண்டு. இவற்றில், உயிர்ச் சத்துகள் அதிகம் உள்ளன இவற்றைப், பொரியல், அவியல், சாம்பார் செய்து சாப்பிடலாம். மலச்சிக்கலைத் தீர்க்கும்; பசியைக் கூட்டும்; குடல்கள் பலமாகும்; பிரசவமான பெண்களுக்கு வரும், வாதம், கண் நோய்களைக் குணப்படுத்தும்.
 
 
    காய்களை அதிகம் உணவோடு சேர்த்து உண்டு வருபவர்கள், நீண்டகாலம் வாழ்வதோடு, நோய்க் கொடுமைகள் தாக்காமல் வாழ்வது, உறுதியிலும் உறுதி!!
 
**************************************************************
www.geocities.com/vee_ramasami  VUTAM Type_As_You_Write
*****************************************************************
:
 
Reply all
Reply to author
Forward
0 new messages