தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஜூன் 2024

100 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 25, 2024, 5:45:13 PMMay 25
to மின்தமிழ்

kadigai event.jpg
அனைவருக்கும் வணக்கம் 
_____________________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
கடிகை முதன்மைநிலை இணையவழிக் கல்விக்கழகம் நடத்தும் 
மரபணுவியல் இணையவழி கருத்தரங்கம்
_____________________________________________________________
நாள்: ஜூன் 8, 2024 - மாலை 4:00 - 6:00 மணி (இந்திய நேரம்)

""நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நமது உடல்நலம் மற்றும் நோயின் அடிப்படையில் நாம் ஏன் வேறுபடுகிறோம்?""

சிறப்புரை:
முனைவர் கு.  தங்கராஜ்
JC Bose Fellow 
Centre for Cellular and Molecular Biology, Hyderabad 
Former Director, Centre for DNA Fingerprinting and Diagnostics, Hyderabad

நோக்க உரை:
முனைவர் க. சுபாஷிணி (ஜெர்மனி),
இயக்குநர், கடிகை முதன்மைநிலை இணையவழிக் கல்விக்கழகம்.
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

வாழ்த்துரை:
முனைவர் நா. கண்ணன்
இணை தோற்றுநர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

முன்பதிவு தேவை: https://forms.gle/HoqeoWA39vw4aka88
தொடர்புக்கு: Ph: 9487 220301, 
மின்னஞ்சல்: myth...@gmail.com
_____________________________________________________________

Dr. Chandra Bose

unread,
May 25, 2024, 11:11:06 PMMay 25
to mint...@googlegroups.com
இணை தோற்றுநர் -- நல்ல சொல்லாட்சி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/9ccc0ce0-ae23-47f8-968a-89b3ee3eabfdn%40googlegroups.com.

தேமொழி

unread,
May 26, 2024, 3:12:54 AMMay 26
to மின்தமிழ்
"நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? 
நமது உடல்நலம் மற்றும் நோயின் அடிப்படையில் நாம் ஏன் வேறுபடுகிறோம்?"
சிறப்புரை: முனைவர் கு.  தங்கராஜ்
நாள்: ஜூன் 8, 2024 - மாலை 4:00 - 6:00 மணி (இந்திய நேரம்)
kadigai conference.jpg
மரபணுவியல் தொடர்பான ஆய்வுகள் பற்றிய விழிப்புணர்வு தமிழ் மக்களிடையே அறிமுகமாக வேண்டும்; இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைய அளவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று முனைப்போடு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இவ்வாண்டு சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றோம். 
அவ்வரிசையில் அதனைத் தொடக்கி வைக்கின்றார் இந்தியாவில் இன்று உலக அளவில் ஆய்வாளர்களால் பேசப்படுகின்ற ஒரு முக்கிய ஆய்வாளர் முனைவர் தங்கராஜ் அவர்கள்.
இந்த நிகழ்ச்சி வருகின்ற ஜூன் மாதம் எட்டாம் தேதி இணைய வழி உரை நிகழ்ச்சியாக, கேள்வி பதில் அங்கம் கொண்ட வகையில் நிகழ இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்கு உங்கள் நண்பர்கள் உங்கள் கல்லூரி மாணவர்கள் ஆகியோரை ஊக்குவித்து அனைவரும் பதிவு செய்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுப் பயன்பெற இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை குழு ஏற்பாடு செய்கிறது. கலந்து கொள்ளும் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் மின்சான்றிதழ் பெறலாம்.
கடந்த ஆண்டு மரபணுவியல் தொடர்பான ஒரு கருத்தரங்கத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மதுரையில் நிகழ்த்தினோம். விருமாண்டி மரபணு ஆப்பிரிக்காவிலிருந்து இறுதியாக வந்த அலையின் மரபணுவோடு ஒத்திருப்பதைக் கண்டறிந்து உலகிற்கு ஆய்வறிக்கை வெளியிட்ட டாக்டர் பிச்சப்பன் மற்றும் இத்துரையின் ஆய்வுக்கூடத்தை நிறுவி தமிழகத்துக்குச் சிறப்பு சேர்க்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் டிஎன்ஏ லேப் இயக்குநர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு வெங்கடேசன் அவர்கள் என பலரும் வந்திருந்து உரையாற்றி சிறப்பு சேர்த்த மாபெரும் நிகழ்வாக கடந்த ஆண்டு அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
முனைவர் க. சுபாக்ஷிணி 
இயக்குநர், கடிகை முதன்மைநிலை இணையவழிக் கல்விக்கழகம்.
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

முன்பதிவுக்கு: https://forms.gle/HoqeoWA39vw4aka88
தொடர்புக்கு: Ph: 9487 220301, 
மின்னஞ்சல்: myth...@gmail.com
------



Message has been deleted

தேமொழி

unread,
Jun 8, 2024, 1:11:27 AMJun 8
to மின்தமிழ்
நிகழ்ச்சி  தொடங்கியது 
நேரலையில்  இப்பொழுது 
madurai.jpeg
---

தேமொழி

unread,
Jun 8, 2024, 1:41:29 PMJun 8
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைக் கிளையின் சார்பாக இந்த மாதம் நடைபெற்ற நூல் அறிமுகம் மற்றும் நூல் கொடை வழங்கும் விழா இனிதே நடைபெற்றது.  நிகழ்ச்சியில் முனைவர் ராஜேஸ்வரி அவர்கள் தலைமை உரை ஆற்ற, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷேக் நபி அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்.

அடுத்ததாக 10, 11, 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த பள்ளி மாணவர்களுக்குப் பரிசாக முனைவர் ராஜேஸ்வரி அவர்கள் புத்தகங்கள்  வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து முனைவர் தேமொழி அவர்கள் எழுதிய "ஏன்? எதற்கு ?எப்படி? எதனால் ?" என்று தொடங்கும்,  5 தொகுதிகள் கொண்ட "நுண்பொருள் காண்பது அறிவு நூல் வரிசை" அறிவியல் நூல்கள் பள்ளிகளுக்குக்  கொடையாக வழங்கப் பட்டது.  திருமிகு மோசஸ் பாக்கியராஜ், திருமிகு வசந்தி, திருமிகு பாலச்சந்தர், திருமிகு சேகர், திருமிகு காட்வின், திருமிகு நாகரத்தினம், திருமிகு லிங்கேஸ்வரி மற்றும் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு ஷேக் நபி ஆகியவர்கள் தங்களின் பள்ளிகளின் சார்பாக நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

தொடர்ந்து பட்டதாரி ஆசிரியை திருமிகு தாமரைச்செல்வி அவர்கள் முனைவர் தேமொழி அவர்களின் "வரலாற்றில் பொய்கள் " என்ற நூலினை அறிமுகம் செய்து பேசினார்கள். இறுதியாக, திருமிகு செல்வம் ராமசாமி அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ் இயக்கத் தலைவர் மற்றும் பொருளாளர் அவர்கள் கலந்து கொண்டு சிற்றுரையாற்றி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். திருமிகு கணேஷ் பாண்டி அவர்கள் நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் அடுத்த நிகழ்வினை அவருடைய மையத்தில் நடத்துமாறு கூறியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிகழ்விற்கு வந்திருந்து சிறப்பினைச் செய்த அனைத்துத் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணைந்து பயணிப்போம் நன்றி.

திருமிகு சுலைகா பானு
தமிழ் மரபு அறக்கட்டளை
மதுரைக் கிளை பொறுப்பாளர்

______________________________

தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக் கிளைத் தோழர்களுக்கும், முன்னின்று நடத்திய மதுரைக் கிளைப் பொறுப்பாளர் திருமிகு சுலைகா பானு அவர்களுக்கும், தலைமை ஏற்றுச் சிறப்பித்த முனைவர் ராஜேஸ்வரி செல்லையா அவர்களுக்கும், நூல் மதிப்புரை வழங்கிய திருமிகு தாமரைச் செல்வி அவர்களுக்கும், தோழர் செல்வம் ராமசாமி அவர்களுக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த தோழர்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். நன்றி தோழர்களே.

1.jpg
2.jpg
3.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg
10.jpg
11.jpg
12.jpg
13.jpg
16.jpg
14.jpg
15.jpg
___________________________________________________

தேமொழி

unread,
Jun 10, 2024, 1:12:09 PMJun 10
to மின்தமிழ்
kadigai conference.jpg
"நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நமது உடல்நலம் மற்றும் 
நோயின் அடிப்படையில் நாம் ஏன் வேறுபடுகிறோம்?"
— முனைவர் கு.  தங்கராஜ்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
*கடிகை சிறப்பு நிகழ்ச்சி*  [ஜூன் 8, 2024]
https://www.youtube.com/watch?v=IwP5gI49Uxc
-------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 15, 2024, 12:17:32 PMJun 15
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் . . . 
new  books.jpg
நூல்களைப் பெற:

தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்
ச. சிங்கநெஞ்சம்
வெளியீடு : 2024 - தமிழ் மரபு அறக்கட்டளை
விலை: ₹120
ISBN: 9788196962630

தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கிய கடல்களும் கடல்கொண்ட நிலங்களும்
ச. சிங்கநெஞ்சம்
வெளியீடு : 2024 - தமிழ் மரபு அறக்கட்டளை
விலை:  ₹140
ISBN: 9788196962624

 
வரலாற்று நிலவியல் நோக்கில் சிதம்பரம் நகரும் நகர்ப்புறமும்
முனைவர் ஜெ. ஆர். சிவராமகிருஷ்ணன்
வெளியீடு : 2024 - தமிழ் மரபு அறக்கட்டளை
விலை: ₹300
ISBN: 9788196962692
______________________________________________________________________

தேமொழி

unread,
Jun 18, 2024, 6:59:43 PM (12 days ago) Jun 18
to மின்தமிழ்
360.jpeg
முனைவர் க.சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு"
— நூல் திறனாய்வு: முனைவர் சிவ.இளங்கோ

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி
திசைக்கூடல் – 360
நாள் : ஜூன் 22, 2024, சனிக்கிழமை, மாலை 4.00 மணி (இந்திய  நேரம்)
zoom: https://us06web.zoom.us/j/84159419415?pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
-----------------------------------------------

வணக்கம், 
----------------------------------------
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும்  திசைக்கூடல்  - 360
----------------------------------------
முனைவர் க.சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு" 
— நூல் திறனாய்வு: முனைவர் சிவ.இளங்கோ
எழுத்தாளர், ஆய்வாளர்,புதுச்சேரி.

ஏற்புரை:
முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி 

நாள் : ஜூன் 22, 2024, சனிக்கிழமை, மாலை 4.00 மணி (இந்திய  நேரம்)

Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு.இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள், தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பு

வாருங்கள், தமிழால் இணைவோம் 

தேமொழி

unread,
Jun 20, 2024, 5:26:32 PM (10 days ago) Jun 20
to மின்தமிழ்
suba book.jpeg
இவ்வாரம் திறனாய்வு செய்யப்படும் தமிழர் புலப்பெயர்வு எனும் தலைப்பிலான நூலை வாங்கி விட்டீர்களா..?  
இன்றே வாங்கி வாசித்து சனிக்கிழமை நடைபெற உள்ள திறனாய்வுக்குத் தயாராகுங்கள்.
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

360.jpeg
முனைவர் க.சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு"
— நூல் திறனாய்வு: முனைவர் சிவ.இளங்கோ

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி
திசைக்கூடல் – 360
நாள் : ஜூன் 22, 2024, சனிக்கிழமை, மாலை 4.00 மணி (இந்திய  நேரம்)
zoom: https://us06web.zoom.us/j/84159419415?pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
-----------------------------------------------

தேமொழி

unread,
Jun 23, 2024, 5:06:30 AM (7 days ago) Jun 23
to மின்தமிழ்
360.jpeg
முனைவர் க.சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு"
— நூல் திறனாய்வு: முனைவர் சிவ.இளங்கோ

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி
திசைக்கூடல் – 360 [ஜூன் 22, 2024]
https://www.youtube.com/watch?v=E_lWwXN5uUw

தேமொழி

unread,
7:04 AM (6 hours ago) 7:04 AM
to மின்தமிழ்
***ஓர் அறிவிப்பு***

மதுரையில் நமது தமிழ் மரபு அறக்கட்டளைக்கான ஒரு சிறப்புக் குழு இயங்கி வருகின்றது. இக்குழு நல்லாசிரியர் சுலைகா பானு தலைமையில் திறம்பட செயல்பட்டு வருகின்றது.

மதுரையில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் வகையில் மதுரைக்கான சிறப்பு வலைப்பக்க உருவாக்கப்பணிகளைத் தொடங்கியுள்ளோம்.   பூமா, பாரதி  (த.ம.அ ஜெர்மனி செயற்குழுவினர்) இருவரும் இதனைப் பொறுப்பெடுத்துக் கொண்டு ஆவணப்படுத்தலைத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.  https://digital-madurai-thfi.blogspot.com/

இப்பக்கம் அடுத்த சில நாட்களில் நமது முதன்மைப் பக்கத்தில் இணைக்கப்படும்.

குழுவினர்கள் இந்த வலைப்பக்கத்திற்குச் சென்று காணலாம்.

--- முனைவர் சுபாஷிணி 
Reply all
Reply to author
Forward
0 new messages