ஸ்ரீ:
அண்டகோள மெய்ப்பொருள்
ஸேது சம்ஸ்தான மகாவித்வானும்
பாஷா கவி சேகரரும்
அண்ணாமலை சருவகலாசாலை தமிழாராய்ச்சியாளருமான
ரா.இராகவையங்கார் எழுதியது
சென்னை திருவல்லிக்கேணி வேத வேதாந்த மகாசபையாரால் வெளியிடப்பட்டது. -1934 விலை 4 அணா
ஸ்ரீமதே ராமானுஜாயநம:
முகவுரை
"அண்டகோளத்தாரணு" என்ற பாசுரம் "ஆழ்வார் சங்கத்தாருக்கு எழுதிய அகவல்" என்ற தலைப்புடன், ஆழ்வார்திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதலாக என்னாற்காணப்பட்டது. அதனை மதுரை தமிழ் சங்கத்து செந்தமிழ் பத்திரிகை தொகுதி 3 பக்கம் 405இல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்கால பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் 'இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை' என்ற குறிப்பும் ஆங்கு தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப்பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில் சிலவாண்டுகளுக்கு முன் அதன் உண்மைப்பொருள் இஃதென்று உணரலாயினேன்.
அப்பாசுரத்தின் சொற்றொடர் பொலிவினையும் அதனுளடக்கிய அரிய பெரிய வடமொழிப் பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அந்து ஆழ்வார் அருளி செயலாதற்குரிய எல்லா தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத்தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மை பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியை குரு பரம்பரை நூல்களும் "அண்டகோளத்தாரென்னு மாரியத்தமிழாலன்று தண்டமிழ்சங்கம் வென்ற சடகோபர்" (கடவுள் வணக்கம் 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராக தெரியும் கூடற்புராண் ஆசிரியரும் கூறுவது ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.
இவ்வரிய பெரியா பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்து கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கபெற்ற இப்பாசுரார்த்தத்தை கேட்டு மகிழ்ந்த சென்னை திருவல்லிக்கேணி வேத வேதாந்த மகாசபையார் இதனை பலரும் அறிய வெளியிட விரும்பியவாறு அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ் பகதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹா சபையார்க்கும் என் மனமார்ந்த பெரு நன்றி உரியதாகும்.
இங்ஙனம்
ரா.இராகவையங்கார்
ஸ்ரீமதே ராமானுஜாயநம:
அண்டகோளமெய்ப்பொருள்
தற்சிறப்பு பாயிரம்
சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் -பாரிற்
றெருள்காட்டும் வேதச் செழுந்தமிழ்நா வீறன்
அருள்காட்ட மெய்ம்மை யறிந்து
அண்ட கோளத்
தாரணு வாகிப்
பிண்டம்
பூத்த பேரெழி லொருமை
யீருயிர்
மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத்
தன்ன வெண்மணற் பரப்பில்
5 வேரும்
வித்து மின்றித் தானே
தன்னிலை
யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி
முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை
தருவது மற்றது
கல்லி
னெழுந்து கடலினழுந்தி
10 யறுகாற்
குறவனீரற விளைக்குஞ்
செறிபொழிற்
குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட்டாமா
விளைக்கு நாட
னவனே
தலையிலி யவன்மகண் முலையிலி
தானு
மீனா ளீனவும் படாஅ
15
ளெழுவர் மூவர் சிறுவரைப்
பயந்தன
ளவளிவ
ளுவளென வறிதல்
துவளறு
காட்சிப் புலவரது கடனே.
ஸ்ரீ:
அண்டகோள மெய்ப்பொருள்
ஸேது சம்ஸ்தான மகாவித்வானும்
பாஷா கவி சேகரரும்
அண்ணாமலை சருவகலாசாலை தமிழாராய்ச்சியாளருமான
ரா.இராகவையங்கார் எழுதியது
(தொடரும்)
அச்சில் 100,000 புத்தமாவது 19-ஆம் நூற்றாண்டில் தமிழில்
தோன்றியிருக்கும்.
முடிந்தவற்றைக் காத்திட இளைஞர்கள் முன்வந்தால் தொழில்நுட்பம் தயாராக
உள்ளது.
(தொடர்ச்சி)
இது 'மயர்வற மதிகலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாஞ்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம் என்பது கூடலழகர்புராணத்தில் "அண்டகோ ளத்தாரென்னு மாரியத்தழிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்" என வருங்கடவுள் வணக்கப்பாடலால் (13) துணியலாகும்.
இதன் பொருள்:
அண்ட கோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத்து அரிய அணு வளர்ந்தது என்றவாறு.
ஆகல்-வளர்த்தல் " பரிணிமித்தல்; வளர்வதற்கு காரணமாகிய ஊழினை "ஆகலூழ்" (திருக்குறள்-372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது என்பது வடநூற் கொள்கை(பாகவதம்). அண்ட கோளத்து ஆரணு -அண்ட கோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின் வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதிநிலை (இதுவே படைப்புக்கு முன்னிலையுமாகும்) பரமாணுவே என்பதையும் ஸ்ரீ பாகவதம் 3 ஆம் ஸ்கந்தம் (கக-க) "பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியபடுவது" என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி 3 ஆம் ஸகந்தம் கக ஆம் அத்தியாய முடிவில், "ஐம்பது கோடி யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்படங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்ட கோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடியண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் சொரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரம்மம் எனவுங்கூறுகின்றனர்" என வருதலான் இதலுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பர தெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தா ரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தை கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். ஆகி என்று பரிணமித்தல் கூறுதலான். இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. 'அண்டகோளத்து ஆரணு' என்புழி அத்துச்சாரியை "காமத்துக் காழில்கணி" (திருக்குறள் -1191) என்புழியைப்போல அல்வழிச்சாரியையாகக்கொண்டு அன்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது, ஆகிப்பூத்த மரம் என இயையும்.
(தொடரும்)
----
ஆமாம் க்வார்க் 6 தானே?
பாராட்டுக்கள். முன்னுதாரணமாக இக்காரியம் செய்கிறீர்கள்.
1. இதன் மூலம் படிமமாக இருக்கும் தமிழ் எழுத்து தேடு களம் காணும்
வாய்ப்பைப் பெறுகிறது (from image text to electronic text which is
searchable)
2. இப்படி வெளியிடுவதன் மூலம் ஒரு பண்டை நூல் சமகால விமர்சனத்தை உடனே
பெரும் வாய்ப்புக் கொள்கிறது.
3. எழுத்துப் பிழை இருந்தால் அதை இம்முறையால் திருத்தியளிக்க முடியும்
(proof reading)
4. படவடிவிலிருக்கும் ஒரு பொத்தகம் மின்னச்சாக மாறும் போது அதை 'மதுரைத்
திட்டத்தில்" வைத்துப் பாதுகாக்க முடிகிறது.
என் விமர்சனம் கீழே:
2008/2/19 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
>
>
> (தொடர்ச்சி)
>
> இது 'மயர்வற மதிகலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற்
> குழாஞ்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம்
> என்பது கூடலழகர்புராணத்தில் "அண்டகோ ளத்தாரென்னு மாரியத்தழிழ்ச் சங்கம் வென்ற
> சடகோபர்" என வருங்கடவுள் வணக்கப்பாடலால் (13) துணியலாகும்.
>
"மயர்வற மதிநலம்" என்று இருக்க வேண்டும்.
அவர் பக்தியின் கலமாக இருந்தாலும் :-) 'மதி' என்பதை 'பக்தி' என்றே
உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர்.
"ஆரியத் தமிழ்" என்ற ஒரு சொல்லாட்சி இங்கு காணத்தக்கது. கூடற்புராணம்
நம்மாழ்வாருக்குப் பின்னால் வந்திருக்க வேண்டும். சங்கம் வளர்த்த பெருமை
மதுரைக்கு உண்டு. அங்கு சீர் பெற்று இருந்த தமிழை "ஆரியத் தமிழ்"
என்கிறார் ஆசிரியர். இதே பொருளில்தான் பாரதியும் 'ஆரியம்' எனும் பதத்தைக்
கையாள்கிறான். அவன் இந்தியர்களை ஆரிய மைந்தர் எனும் போது "உயர்வுடைய,
சீர்மையுடைய, பெருமையுடைய' எனும் பொருளிலேயே அர்த்தம் கொள்ளவேண்டும்.
நம்மவர் ஆரியம் எனும் சொல்லை ஒரு 'இனம்' எனும் பொருளில் கையாளவில்லை. அது
பின்னாளில் அரசியல் காரணங்களுக்காக அனர்த்தமாகிப் போனது.
> ஆகல்-வளர்த்தல் " பரிணிமித்தல்; வளர்வதற்கு காரணமாகிய ஊழினை "ஆகலூழ்"
> (திருக்குறள்-372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு
> என்றார்.
பரிணாமம் பற்றி இந்தியர்கள் டார்வின் சொல்வதற்கு முன்னமே, பல
நூற்றாண்டுகளுக்கு முன்னமே, தெளிவான கொள்கை கொண்டிருந்தனர் என்பது
காணற்தக்கது.
>பரமாணு இரண்டு கொண்டது என்பது வடநூற் கொள்கை(பாகவதம்). அண்ட கோளத்து
> ஆரணு -அண்ட கோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது
> அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின் வித்து
> ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சமாகிய
> பரமாணுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக.
இந்தியர்கள் பரிணாமம் என்பதை இருவகையாகக் காண்கின்றனர். பொருளியற்
பரிணாமம் (material evolution). இது டார்வின் சொல்லும் கூர்தலியற் கொள்கை
போன்றது. மற்றது பரிணானமடையாத மூல அணு. இதை ஆன்மா என்கின்றனர். இங்குதான்
மேற்கத்திய ஞானத்திலிருந்து இந்திய ஞானம் வேறுபடுகிறது. அவர்கள் ஒரேயொரு
பரிணாமம்தான் உண்டு என்கின்றனர். தற்போதைய புரிதலில் "creative
itelligence theory' என்பது வலுவாகிவருகிறது. இது நம் கொள்கையுடன்
ஒத்துப் போகும்.
> "ஐம்பது கோடி யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்படங்கு அதிகமுள்ள விசேஷண
> முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்ட கோசமும் இன்னும் மற்றுமுள்ள
> பல்கோடியண்டங்களும்
இக்கருத்து சமகால cosmological discovery யுடன் ஒத்துப் போகிறது. ஒரு
அண்டத்தின் ஊடாக இன்னொரு அண்டம் கிளைக்கிறது என்கிறது அறிவியல் (cluster
hypothesis). இக்கால அறிவியல் அண்டம் தோன்றிய கால அளவைச் சொல்கிறது,
ஆனால் விஸ்தீரணத்தைச் சொல்வதில்லை. இந்திய ஆய்வு இரண்டையும் சொல்கிறது.
>எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக்
> காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும்
> மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் சொரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரம்மம்
> எனவுங்கூறுகின்றனர்"
அக்ஷரபிரம்மம் என்பது சுவாரசியமான சொல்லாட்சி. "ஆதியில் வார்த்தை
இருந்தது" எனும் விவிலிய நோக்கைக் காண்க. இதையே திருமழிசையும்,
"நற்றமிழை வித்தியின் உள்ளத்தில் நீ விதைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து"
என்கிறார். இதனால்தானோ என்னவோ தமிழர்கள் மொழியின் மீது அதீத பக்தி கொள்கின்றனர்.
கண்ணன்
திவா
2008/2/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> அடி சக்கைனன்னாம்! திருமூர்த்தி சார் இவ்வளவு பேசுவாரா? ஏதோ ஒன்றும்
> அறியேன் என்று இவ்வளவு நாள் ஏமாற்றிவிட்டாரே!
>
--
My blogs:(all in Tamil)
http://nallaseithi.blogspot.com/
சரிதான். திருத்தி விடுகிறேன்
> > பற்றினாரென்பது, பூத்த என்னும் வினையாற் பிண்டங்களை மலர்களாக்கியதனானும்,
> > அம்மலர்களை யுண்டாக்கி பரிபாலிக்கு நிலையில் மலரின்வேறாகாத மரமாகப்
> > பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துஇயலாம். இவ்வொருமையை
இனிது துணியலாம் என்று இருக்க வேண்டும்.
> குறிப்பிட்ட பகுதி சரியா? பிழை இருப்பின் திருத்துக.
>
>
>
> > ரக்ஷ்யரக்ஷகபாவாதி ஸம்பந்தத்தாலுளதாவதல்லது ஸ்வரூபஐக்யமாகாமை
> > உய்த்துணர்ந்து கொள்க.
> > "பாரிடமாவானுந்தான்" (சஉ) என்னும் பெரியதிருவந்தாத்தித் தொடர்க்குப்
> > பெரியவாச்சான் பிள்ளையாசிரியர் "ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸ்ம்பந்தத்தால்
> > ஐக்யம்; ஸ்வரூபத: அன்று" என் றுரைத்தவாற்றான் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது
> > நிறைவேற்றவே எங்குங்கலந்துரைதலை மேற்கொண்டனன் இறைவன் என்ப.
> >
>
> avoid (remove) white space in the underlined sentence.
பிரச்சினை என்னவென்றால் மூலத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதை
மாற்றலாமா அப்படியே இருக்க வேண்டுமா என்று முடிவு செய்ய முடியவில்லை.
கூடியவரை அப்படியேதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வழி காட்டுக.
அவ்வப்போது மின்பராமரிப்புக்கு மின் நிறுத்தமும், பின் மின் வெட்டும்
இரண்டும் இல்லாதபோது மின் தடையும் இருப்பதால் அவசர அவசரமாக அனுப்ப வேண்டி
இருந்தது. ஆகவே சரி பார்க்க இயலவில்லை. மன்னிக்க.
திவா
--
My blogs:(all in Tamil)
http://nallaseithi.blogspot.com/
பிரச்சினை என்னவென்றால் மூலத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதை
மாற்றலாமா அப்படியே இருக்க வேண்டுமா என்று முடிவு செய்ய முடியவில்லை.
கூடியவரை அப்படியேதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வழி காட்டுக.