Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

1. பிராமணனை உயர்த்திச் சொல்லவில்லை சனாதனத் தருமம் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. பரணர் பாடலில் நியூட்டன் விதி – இலக்குவனார் திருவள்ளுவன்

14 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 17, 2025, 5:52:45 PMMay 17
to thiru thoazhamai, pavaia...@gmail.com, ara...@aol.com, akaro...@gmail.com, pmaruda...@yahoo.com, casmirya...@gmail.com, ariv...@gmail.com, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsw...@gmail.com, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, tnv...@yahoo.co.in, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, palanic...@gmail.com, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, manimekal...@gmail.com, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, ilakkiy...@gmail.com, jainol...@gmail.com, jeevak...@gmail.com, mega digital4, mohan raj, Swathi Swamy, senthilnar...@tcarts.in, chitr...@gmail.com, drseen...@gmail.com, rajan...@gmail.com

பரணர் பாடலில் நியூட்டன் விதி – இலக்குவனார் திருவள்ளுவன்

image.png

(பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் – தொடர்ச்சி)

அன்றே சொன்னார்கள் – பரணர் பாடலில் நியூட்டன் விதி

நியூட்டன் விதிகள் என நம்மால் போற்றப்படுவன,  அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் (திசம்பர் 25,1642-மார்ச்சு 20,1727) கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத் தகுந்தனவாகும்.விசை, விரைவு பற்றிய இவ்விதிகளுள் நியூட்டனின் இரண்டாம் விதி பற்றி மட்டும் நாம் பார்க்கப் போகிறோம்.

திசைவேகம், பொருளின் தாக்கும் விசையைப் பொறுத்து அமையும் என்கிறார் அவர். இதன்படி, ஒரு நேர்க்கோட்டில் செல்லும் விசை, குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது தாக்கும்போது அந்த விசை வேகம் மாறுபட்டு அமையும் அல்லது குறையும். 18ஆம் நூற்றாண்டில் விசைவேக விதியைக் கண்டுபிடித்தார் அறிவியலாளர் நியூட்டன். இதே விதியைப் புலவர் பரணரும் எடுத்துக்காட்டு மூலம் நமக்கு விளக்குகிறார்.

கடையெழு வள்ளல்களில் ஒருவன் வல்வில் ஓரி என அழைக்கப்பெறும் ஆதன் ஓரி என்னும் சிறப்பு மிக்க மன்னன். இம்மன்னன் வில் வித்தையில் சிறந்தவன் என்பதை வல் வில் என்று குறிக்கப்படுவதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். வில்லுக்கு விசயன் என நம் நாட்டவர் அல்லாத மன்னனை அல்லது கற்பனையான கதைப் பாத்திரத்தைப்  போற்றும் நமக்கு வில்லுக்கு ஓரி என்று கற்றுக் கொடுத்திருந்தால் இம்மன்னனின் சிறப்பை அறிந்திருப்போம். நாமக்கல் பகுதியில் உள்ள கொல்லிமலைக்கு மன்னனாகச் சிறந்து விளங்கியவன் இவன்.

மன்னன் வல்வில் ஓரி ஒரு முறை காட்டிற்குச் சென்று வேட்டையாடுகையில் அவ்வழியே வந்த புலவர் பரணர் பார்த்துவிட்டு உடனே, அக்காட்சியைப் பாட்டிலே படம் பிடித்து நிலைக்கச் செய்துவிட்டார்.

வல்வில் ஓரி எய்த ஒரே ஓர் அம்பு நேர்க்கோட்டில் அமைந்த ஐந்து உயிர்களைப் பறித்து விட்டது. அவன் யானையின் மீது அம்பு தொடுத்தான். யானை மீது பாய்ந்த அம்பு அதனை வீழ்த்தியதுடன் தன் கடமை முடிந்து விட்டது என்று நின்று விடவில்லை. அந்த யானை மீது பாயலாம் எனப் பார்த்திருந்த புலியின் வாயில் ஊடுருவி, வெளியேறி அப்பக்கம் குறுக்கே வந்த மானையும் ஊடுருவிக் கொன்று, அடுத்து இருந்த பன்றியை வீழ்த்தி, உடும்பில் பாய்ந்து அதனையும் தைத்து மடியச் செய்து விசை வேகம் படிப்படியே குறைந்ததால் நின்று விட்டது.

வில்லில் இருந்து வேகமாக விடுபட்ட அம்பு போகப்போக வேகம் குறைந்து அதற்கேற்றவாறு சிறிய சிறிய உயிர்களை மடியச் செய்து இறுதியில் செயல் இழந்தது எனப் புலவர் விளக்கி உள்ளார். மன்னன் வல்வில் ஓரியின் வில்வித்தைச் சிறப்பைக் கூறும் அறிவியல் உண்மை அடங்கிய பாடல் வரிகள் பின்வருமாறு: 

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,     
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், 
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் (புறநானூறு 152)

(வேழம்-யானை; பகழி-அம்பு; உழுவை-புலி; புகர்க்கலை – புள்ளி மான்; கேழல் பன்றி-ஆண் பன்றி; புற்றத்து உடும்பில் – புற்றில் உள்ள உடும்பின் மீது)

இப்பாடல் வரிகள் மூலம் வில்லில் இருந்து விடுபட்டு விரைவாக வெளியேறும் அம்பின் விசை போகப்போகக் குறையும் தன்மையை – விசைவேக இலக்கணத்தை – ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புலவர் பரணர் விளக்கி உள்ளதை அறியலாம்.

இதனை வரலாற்று நிகழ்வைக் கூறும் இலக்கிய வரிகளாகக் கருதிய நாம் இதில் புதைந்துள்ள அறிவியல் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் போனது ஏனோ?

– இலக்குவனார் திருவள்ளுவன்

(கருத்தரங்கம் ஒன்றில் கேட்கப்பட்ட கட்டுரை அடிப்படையில் எழுதப் பெற்றது. கட்டுரையாளர் பெயர் நினைவிலில்லை. படம் – நன்றி : தமிழ்த்துளி)

+++

பிராமணனை உயர்த்திச் சொல்லவில்லை சனாதனத் தருமம் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 


`ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்      17 May 2025      கரமுதல


(பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? – தொடர்ச்சி)

சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23

சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, சீவனத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை யடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்(மனு 10. 122). பிராமணன் கூடவே இருந்து அவனுக்குப்பணி விடை செய்ய வேண்டும் என்றும் பிராமணனைப் பிற வருணத்தார் தொழ வேண்டும் என்றும் கூறுவது பிராமணனை உயர்த்திச் சொல்வதாகாதா? இதனை எப்படி ஏற்க முடியும்.

“ஓர் ஊரில் எல்லாருக்கும் 4 வருணத்தினரையும் சேர்த்துக் கல்வி சொல்லித் தருவது தான் பிராமணன் வேலை. பிராமணன் இல்லா விட்டால் அந்த ஊரில் அனைவரும் தற்குறி தான். அதனால் தான் பிராமணனைக் கொன்றால் ஓர் ஊரே முட்டாளாய் மாறுமே என்று தான் அக்காலத்தில் பிராமணனைக் கொன்றால் பாவம் என்றார்கள். மற்ற வருணத்தினர் ஏன் சொல்லி தரக் கூடாதா ? என்றால் அவர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களின் வேலையில் நிறைய வருமானம் கிடைக்கும்”

எத்தகைய பொய்யுரை? பிற வருணத்தார் கல்வி சொல்லித் தந்தால் குறைவாய் வருமானம் கிடைக்கும் என்று வரவில்லையாம். பிராமணர்கள் ஈக-தியாக மனத்துடன் கற்பிக்கும் தொழிலுக்கு முன் வந்துள்ளார்களாம்.  அப்படிப் பார்த்தால், பிராமணர் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்றுத் தர மாட்டார்களே! பிராமணனை உயர்த்திச் சொல்லி விட்டு அவனைக் கொன்றால் பாவம் என அச்சுறுத்தி விட்டு இது குறித்துப் பிறர் கேள்வி கேட்டதும் மழுப்பி மறைக்கப் பார்க்கிறார்கள். கற்பிப்பவர் இல்லாமல் போவார்கள் என்றால் ஆசிரியர்களைக் கொல்லக் கூடாது என்றல்லா சொல்லி யிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லாமல் வருண அடிப்படையில்தானே சொல்லியுள்ளனர்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக். 44-45



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages