அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

17 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 17, 2024, 5:45:56 PM (8 days ago) Oct 17
to மின்தமிழ்
அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்




நிலைமண்டில ஆசிரியப்பா.

“கல்லால் நிழலில் கனிவோ டமர்ந்து
நல்லார் நால்வர்க் குஞான போதச்
சொல்லாம் அமுதைச் சிறப்போ டளித்தாய்
எல்லா உயிரும் ஏற்றம் பெறவே!”
 
★                        

01. அன்பே வெல்லும் கருவி.
நிலைமண்டில ஆசிரியப்பா.

பார்க்கும் இடமெலாம் பாழும் போரெனில்
ஆர்த்தெழும் இளையோர் ஆருயிர்ப் போகுமே!
பாரெலாம் சிறந்திடப் பற்றுவோம் அமைதியைப்
போரெனும் சொல்லே போயழி யட்டுமே!



 02. ஆற்றலை வீணடிக் காதே!
நிலைமண்டில ஆசிரியப்பா.

உன்னைநீ யறிவாய், உன்னுள் புதைந்தே
உன்னைக் காக்கும் உன்திறன் நீயுணர்;
நன்றாய் வெற்றியை நாடொறும் தந்திடும்,
நன்றே போற்றுவர் நண்பருந் தானே!



03.  இல்லற வாழ்வைச் சுவை.
நிலைமண்டில ஆசிரியப்பா.

இல்லறம் என்பது இன்பம் தந்திடும்
நல்லறம் என்பதோ நம்மை உயர்த்திடும்
இல்லறம் பேணுவோம் இனிது வாழவே,
நல்லறம் பேணிட நற்கதி தானே!



04) ஈடில்லாத் தொண்டு செய்.
நேரிசை ஆசிரியப்பா.

நாளும் தொண்டு நாமும் செய்திட
நாளும் கோளும் நம்மைக் காக்கும்,
ஆளு மாட்சியின் ஆணவம்
நாளும் தருமே நமக்குத் தீமையே!



05) உள்ளதில் பிறர்க்கும் கொடு.
நேரிசை ஆசிரியப்பா.

பெற்ற செல்வம் பகிர்ந்த ளித்தலும்
கற்ற கல்வி கனிவுட னளித்தலும்
மற்றவர் வாழ்வும் மகிழ்வுற
உற்ற துணையாய் ஓங்கி நிற்குமே!



06) ஊற்றென ஓடு.
நேரிசை ஆசிரியப்பா.

உழைக்கா தோரிடம் உட்கார்ந் திருத்தல்,
மழைக்கு மஞ்சி மனையில் அடங்கல்,
பிழைப்பிற் காகுமோ? பின்னர்!
உழைக்க முயன்றால் உலகமுன் கையிலே!



நன்றி: அன்பு ஜெயாவின்
"தமிழ்ப் பந்தல்"
தமிழ்க் கல்வி, இலக்கியம், கட்டுரைகள்
http://tamilpandal.blogspot.com/
Reply all
Reply to author
Forward
0 new messages