தமிழருளரசாட்சி 22 - ஊரின் ஆதிமரம்

15 views
Skip to first unread message

இசையினியன்

unread,
Jun 26, 2024, 4:17:50 PM (4 days ago) Jun 26
to மின்தமிழ்
  1. உலகம் என்பது பலதரப்பட்ட உயிரினங்கள் மற்றும் உயிரற்ற வகைகளின் தொகுப்பு ஆகும்.
  2. இந்தத் தொகுப்பு ஒருங்கிணைந்ததே இப்பிரபஞ்சம்.
  3. சில இடங்களில் சில உயிரினங்கள் சிறப்பாக வாழ்கின்றன. உயிரினங்கள் என்றால் ஒரு செல் ஆரம்பித்து பல செல் கொண்டவைகளின் தொகுப்பு.
  4. இந்த செல்கள் என்பவை தனிமங்களின் உயிர்ப்பு நிலை ஆகும்.
  5. தனிமங்கள் குறிப்பிட்ட சூழ்நிலை கொண்ட இடத்தில் பல்கிப் பெருகுகின்றன. இவ்வாறு உயிரற்ற தனிமங்கள் பல்கிப் பெருகும் போது அந்தத் தொகுப்பு உயிருடன் இருக்கின்றது என்கிறோம்.
  6. இந்த பல செல் உயிரினங்களை தாவரங்கள், விலங்குகள் எனப் பிரித்து பார்க்கலாம்.
  7. விலங்குகள் வாழ தாவரங்கள் தேவைப்படுகிறது.
  8. ஒவ்வொரு இடத்திலும் ஒரு சில தாவரங்கள் சிறப்பாக வாழ்கின்றன. அந்த இடத்தின் சூழ்நிலை அந்தத் தாவரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது
  9. இவ்வாறு தான் ஒவ்வொரு ஊரின் மிகப் பழமையான மரங்கள் அல்லது ஒரே ஒரு மரம் அந்த ஊரின் மிகப் பழமையானதாக இருக்கும் இதனை கிராமங்களில் நாம் பார்க்கலாம்
  10. இந்த மரங்களைத்தான் அந்த ஊரின் ஆதி மரங்கள் என கூறுகின்றார்கள். இந்த மரங்களின் பாதுகாப்பு பற்றியும் அல்லது இந்த மரங்களின் வளர்ச்சி பற்றியோ எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் அரசாங்கங்கள் இருக்கின்றன
  11. இந்நிலையை மாற்ற வேண்டும் ஒரு நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் நகரங்களில் மக்களின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் இருக்கின்ற மிகப் பழமையான மரங்களின் ஒரு தரவு தளம் உருவாக்கப்பட வேண்டும் அந்த தளத்தில் அந்தந்த மரங்களையும் அவற்றின் வரலாறு பற்றியும் இடப்பட வேண்டும்
  12. மேலும் இந்த ஆதி மரங்களின் பாதுகாப்பையும் அந்த மரங்கள் மனித மற்றும் விலங்குகளின் அசாதாரண நடவடிக்கைகளால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்படிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கங்கள் செய்ய வேண்டும்
  13. சிலர் எண்ணிக் கொள்கின்றார்கள் கோயில்களில் மட்டும்தான் தலவிருட்சங்கள் என்ற பெயரில் மரங்களை தமிழர்கள் வளர்த்தார்கள் என்று, ஆனால் அந்த ஊரின் பொதுவான இடத்தில் அந்த ஊரின் ஆதி மரங்கள் நடப்பட்டு இருக்கின்றன. அந்த மரங்கள் என்றும் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
  14. இவ்வாறு நூற்றாண்டுகள் பல கடந்த மரங்களின் வளர்ச்சியையும் அதன் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது, அந்த நாட்டின் மன்னனின் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கடமை என நினைக்கிறேன்.
  15. இயற்கை இல்லாமல் மனிதன் இல்லை 
தமிழருளரசாட்சி தொடரும்
Reply all
Reply to author
Forward
0 new messages