பதிற்றுப்பத்து - பழைய உரை
https://www.tamilvu.org/slet/l1241/l1241all.jsp?x=71&y=80&sno=72பாடல் 72
. . . . . . . . . . . .
உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம் [10]
வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத்
தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்து
வெள்ளம் பரக்கையாலே அவ்வெள்ளத்தை மாய்த்தற்கு ஆதித்தர் பன்னிருவரும் தோற்றின பெரிய கூட்டத்தையுடைய வடவைத்தீயென உரைக்க. ஆதித்தர் கூட்டத்தை இவன் (சேர மன்னர்) படைத்தலைவர்க்கு உவமமாகக் கொள்க.
_____________________
ஆதித்தர் பன்னிருவர் குறித்து மேலும் தேடி அறிந்து கொண்டது
இவர்கள் வேதம் குறிப்பிடும் **முப்பத்து மூன்று தேவர்கள்** என்பவரில் ஒரு பிரிவினர்.
வசுக்கள் எண்மரும், **ஆதித்தர் பன்னிருவரும்**, உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் என நால் வகைப்பட்ட முப்பத்து மூவர் எனப் படுபவர்கள்.
ஒவ்வொரு ஆதித்தரும் ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் உரியவர்களாகக் கருதப்படுகிறார்கள், மேலும் இவர்கள் சூரியனின் வெவ்வேறு சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரும் உண்டாம் !!!
வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பார்க்கரன், இரவி, உலோகப்பிரகாசன், உலோ கசாக்ஷி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி. இவர்கள் மாதம் ஒருவராய்க் கடவுளாஞ்ஞைப்படி இருளைப் போக்குவர்.
ஆனால் பல பட்டியலில் இப்பெயர்களில் வேறுபாடுகளும் உள்ளனவாம்.
பரிபாடல், திருமுருகாற்றுப்படை, பதிற்றுப்பத்து என்று சங்க இலக்கியம் என அறியப்படும் நூல்களிலேயே இந்தப் புனைகதைகள் நுழைந்துள்ளன.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சூரியன் என்று 12 சூரியன்களா ? அந்த ஒவ்வொரு சூரியனுக்கும் ஒவ்வொரு சக்தியா ?
காலத்திற்கு ஒவ்வாத படைப்புக் கொள்கை கதைகளில் ஒன்று. அவர்கள் கற்பனையைக் கண்டு, அதைப் படைத் தலைவர்களுக்கு உவமையாக்கியதைக் கண்டு வியந்து கடக்க வேண்டிய வரிகள்.
நடுவில் சூரிய பகவானும், மேல் பகுதியில் பிற 11 ஆதித்தர்கள் கொண்ட சிற்பம், காலம் 11ம் நூற்றாண்டு
திருப்பரங்குன்றம் = இமயமலை !!!!
YES !!!
Both are Great Trigonometrical Survey sites
ஃ Thiruparankundram = Himalayas
-------------------------------------------------------------------------------------