You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to mech-donz-of-v...@googlegroups.com, Jc Sundararajan
இன்சூரன்ஸ் தகிடுதிட்டங்கள்!
----------------------------------------------
இம்முறை இன்சூரன்ஸ் காரங்களிடம் இருந்து நல்லதொரு பாடம்!
நாம் மருத்துவ காப்பீடு செய்துள்ளேன்! சுமார் மூன்று லட்சம் ரூபாய் வரை காப்பீடு பலன் கிடைக்கும் வகையில் பாலிசி எடுத்துள்ளேன்!
மருத்துவ மனையில் சேர்ந்ததும் இன்சூரன்ஸ் இருக்கிறதா என கேட்டனர். ஆம்
என்றேன்! அதற்குரிய டாக்குமென்ட் கள் எல்லாம் தர சொன்னார்கள் வீட்டிலே
இருந்து எடுத்து வந்து கொடுத்தேன்!
பாடம் 1.
எல்லா டாக்குமெண்டையும் எளிதில் எடுக்கும் வகையில் வைக்கவும்! இதர குடும்ப உறுப்பினருக்கும் தெரிவிக்கவும்!
மருத்துவ சிகிச்சை முடிந்து பில் வந்தது. ரூபாய் 9135/=
இன்சூரன்ஸ் கம்பனியில் இருந்து ரூ. 7000 மட்டுமே ஒப்பளித்து இருந்தார்கள்! மீதம் எங்களை கட்ட சொல்லி சொன்னார்கள்!
எனது மருமகன் ஒரு இன்சூரன்ஸ் கம்பனியில் தான் மேலாளர்! அவரிடம் தகவல் சொன்னதும் உடனே வந்து விட்டார்!
போனில் பிடி பிடி என பிடித்தார்! அவருக்கும் கம்பனி காரர்களுக்கும் நடந்த உரையாடல்!
இவர்: - என் கிளைம் ரூ. 7000 க்கு மட்டும் அப்ரூவ் செய்திருக்கிறீர்கள்?
இன்சுரன்ஸ் நிறுவனம்: - சார். அந்த பாலிசிக்கு அவ்வளவுதான் தர முடியும்.
இவர்: - அப்படியா? அப்படி எங்க அந்த பாலிசியில் இருக்கிறது? பாலிசி இப்போ
கையில் இருக்கிறது! அதில் எந்த செக்சனில் அப்படி போட்டு இருக்கிறது என்று
சொல்லுங்கள்!
இன்சுரன்ஸ் : - அது வந்து சார் அது... ஏற்கெனவே இந்த பாலிசியில் இவர் மனைவிக்கு ஒருமுறை கிளைம் பண்ணி இருக்காங்க.
இவர்: - அப்படியா? எவ்வளவுக்கு?
இன்சுரன்ஸ்: - ரூ. 15000
இவர்: - அப்படியானால் மொத்தம் 15000 + 9135 = 24135 தானே ஆகிறது. ? இந்த பாலிசிக்கு மூன்று லட்சம் வரை தரலாமே?
இன்சூரன்ஸ்: சார். இதிலே நான்-மெடிக்கல் பில் இருக்கு.
இவர் : - அப்படியா? எந்த பில் நான்-மெடிக்கல்?
இன்சூரன்ஸ்: - அது சார் அது வந்து ... நீங்க பணததை கட்டிவிட்டு எங்களுக்கு எழுதுங்கள். நாங்கள் க்ளைம் போட்டு தரோம்.
இவர் : - அதெல்லாம் முடியாது! அப்படி எங்க டாக்குமெண்டில் சொல்லி இருக்கிறது? நீங்கள் முழு கிளைம் இப்போதே தந்தாக வேண்டும்.
இன்சூரன்ஸ்: - அதெல்லாம் நீங்க எங்க அதிகாரிகள் கிட்டே தான் பேசணும்
இவர்: - நானும் ஒரு இன்சூரன்ஸ் அதிகாரிதான். எந்த அதிகாரி கிட்டே பேசணும்? நம்பர் கொடுங்கள்.
கொஞ்ச நேர மவுனத்துக்கு பின் சார் கொஞ்சம் நேரம் கழித்து திரும்ப அழைக்கிறார்கள்.
சார். எங்க அதிகாரிகள் கிட்டே பேசினோம். மேலே ஒரு 1000 சேர்த்து தர சொல்லி இருக்கிறார்கள்.
இவர்: - நீங்க என்ன பிச்சை போடறிங்களா? அதெல்லாம் முடியாது. முழு தொகை
கட்டியாகணும். இல்லாவிட்டால் கன்சூமர் கோர்ட்டுக்கு போக வேண்டி இருக்கும்.
இன்சூரன்ஸ்: அப்போ நீங்கள் எங்க அதிகாரிகிட்டே பேசுங்க.
மீண்டும் அதிகாரியிடம் இதே சம்பாஷனை!
கடைசியில் முழுதொகையும் செட்டில் செய்தார்கள்!
பாடம் 2 :
இன்சூரன்ஸ்காரன் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டாம்! உங்கள் கிளைம் என்ன என்று சரியாக தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள் உரிமையை சண்டை போட்டும் கேட்க தயங்க வேண்டாம்! சுமார் இரண்டு மணிநேரம் ரூ 3000 க்காக சண்டை போட வேண்டி இருந்தது!
அப்போ பெரிய தொகைக்கு?