சந்தனம், குங்குமம் இடுவதில் ஒளிந்துள்ள அறிவியல் உண்மைகள்.........

20 views
Skip to first unread message

PonRameshKalam

unread,
Jul 24, 2017, 10:35:46 PM7/24/17
to p. ramesh704
சந்தனம், குங்குமம் இடுவதில் ஒளிந்துள்ள அறிவியல் உண்மைகள்

உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அதற்கு பின் அறிவியல் காரணங்களும் ஒளிந்துள்ள.

சந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, மூளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு உதவுகிறது.

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க சந்தனம் சரியான மருந்து.

குங்குமம் :-

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. அங்கு குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.

நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல், மன உளைச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் . ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருப்பது தான் மனிதனுக்கு நல்லது.

சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும்.  இதன் மூலம்உணர்ச்சியற்ற நரம்புகள் கூட தூண்டப்படுகின்றன. மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் இதுபோன்ற இறைவழிபாடுகள் மூலம் நாம் அடைகிறோம்…

















































































மனத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
---
🌿 குரங்குகள் இயற்கையாகவே சஞ்சல மனம் படைத்தவை. அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதனால் அதன் பரபரப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்? அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதனைப் பிடித்துக் கொண்டது. இப்போது அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும், படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன?
--
🌿 மனித மனம் அந்தக் குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததனால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கின்றன. ஆசை குடிகொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கொண்டு பொறாமை கொள்கிற குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லா பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்!...ஆனால் இது முடியக்கூடியதா? ஆம், கண்டிப்பாக முடியும்.
---
🌿 எனவே முதல் பாடமாக வருவது இது: சிறிது நேரம் அமர்ந்து மனத்தை அதன் போக்கிலேயே அலையவிடுங்கள். அது எப்போதும் குமுறிக் கிளம்பியவண்ணமே உள்ளது. குரங்கு குதித்துத் தாவுவதைப் போன்றது அது. எவ்வளவு வேண்டுமானாலும் அது குதிக்கட்டும். நீங்கள் பொறுமையாக அதைக் கவனிக்க மட்டும் செய்யுங்கள். அறிவே வலிமை.. மனம் என்ன செய்கிறது என்பதை அறியாமல் அதைக் கட்டுப்படுத்த முடியாது. கடிவாளத்தை விட்டுப்பிடியுங்கள். தீய எண்ணங்கள் பல அதில் எழலாம். அத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தில் இருந்ததைப் பற்றி நீங்களே திகைப்படைவீர்கள்.
-
நாள் செல்லச் செல்ல மனத்தின் வெறித்தனமான போக்கு குறைவதையும், அது மெள்ள மெள்ள அமைதி பெறுவதையும் காண்பீர்கள். ஆரம்பத்தில் சில மாதங்கள் மனத்தில் பல எண்ணங்கள் எழுவதைக் காண்பீர்கள். பிறகு அவை குறையத் தொடங்கும். சில மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து குறைந்து கொண்டே போகும். கடைசியாக மனது பூரணக் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஆனால் தினமும் பொறுமையுடன் பயிற்சி செய்யவேண்டும்...இது ஒரு பெரிய வேலைதான், ஒருநாளில் செய்துமுடிக்கின்ற வேலையல்ல. பொறுமையாகத் தொடர்ந்து வருடக்கணக்காகப் பயிற்சி செய்தால் நாம் வெற்றி பெறுவோம்.
-
சூழ்நிலைகளை வெற்றிகொள்வது எப்படி?
---
🌿 புறச் சூழ்நிலைகள் எல்லாவற்றையும் வெற்றிகொள்வது என்பது இயலாத ஒன்றுதான். அது நம்மால் முடியாத காரியம்தான்.
---
🌿 மீன், நீரிலுள்ள தன் எதிரிகளிடமிருந்து தப்பிக்க விரும்புகிறது. அது எப்படித் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது? இறக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு பறவையாவதன் மூலம்தான்.
---
🌿 நீரையோ காற்றையோ அந்த மீன் மாற்றவில்லை; மாற்றம் அதனிடமே உண்டாகிறது. மாற்றம் எப்பொழுதும் அகச்சார்பு உடையது. பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், எல்லா உயிர்களும் தங்களை மாற்றிக் கொள்வதன்மூலமே இயற்கையை வெல்கின்றன என்பதை அறிகிறோம்.
-----
🌿 இந்த உண்மையை மத உணர்வுக்கும் ஒழுக்கக் கோட்பாட்டிற்கும் பொருத்திப் பார்த்தால், தன்னை மாற்றிக் கொள்வதன்மூலம் மட்டுமே ஒருவர் தீமையை வெல்ல முடியும் என்றாகிறது
---
துன்பமும் தீமையும் வெளியே இல்லை; ஆகவே அவற்றைப்பற்றிப் பேசுவது பொருளற்றது.
கோபத்தின் வசப்படாதிருக்கப் பழகிவிட்டால் எனக்குக் கோபம் வராது. வெறுப்பு என்னை அணுகாமல் பார்த்துக் கொண்டால் வெறுப்பே எனக்கு வராது. ஏனெனில் அவை என்னைத் தொடவே முடியாது.
----
வெற்றியடைவதற்கு இதுதான் வழி; அதாவது அகச் சார்பின்மூலம் நம்மை நாமே முழுமையாக்கிக் கொள்வதுதான்.
---
🌿 சுவாமி விவேகானந்தர் 🌿

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் 
மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் 
என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொண்டு இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5.சொன்னதைச் செய்து கொடுப்பது.

6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு

11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு

16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.

21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

Image may contain: 1 person, text
Image may contain: one or more people, people standing and text
Image may contain: one or more people and text
--



-நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.-ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்..
-Time is the most valuable thing in the world. – Edison
-Imagination is more important than knowledge. -Albert Einstein.

எண்ணம் போல் வாழ்வு....     
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.....
செழிக்கட்டும் விவசாயம்......

With Regard....
                                                      
PonRAMESH Kalam,M.Sc.,M.Phil.,Ph.D
(Doing)
Asst.Prof of Physics,
Nehru memorial college(Autonomous),
Puthanampatti,
Thiruchippalli- 621 007.

Cell   : +919750895059 (Whats App).
           +917200514876.

          

Reply all
Reply to author
Forward
0 new messages