
துர்கை மற்றும் லட்சுமி தினம் இப்பழத்திற்கு பின்னணியில் வேறு பல உண்மைகளும் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.
செலவு கூடாது செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.
வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள் எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
துரதிர்ஷ்டம்
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது. இதற்கு காரணம் செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஜோதிடத்தின் படி...
இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. ஒருசில லாஜிக்குகளைக் கொண்டு ஜோதிடர்கள் இதனைச் சொல்கின்றனராம். செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறாராம். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடுமாம்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள் மற்றொரு ஜோதிடர் கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்வடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம். இதுப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருகின்றனர். 
அப்படி என்ன சாதித்தார் ரகுராம் ராஜன்... இதைப் படியுங்க...
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தமக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரகுராம் ராஜன் போனால் போகட்டும் என சுப்பிரமணியன் சுவாமி போன்ற வலதுசாரிகள் கூச்சலிடுகிறார்கள்... ஆனால் ரகுராம் ராஜன் போய்விட்டால் இந்தியாவின் எதிர்கால "இருட்டு" குறித்து பெரிதும் கவலை கொள்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். அப்படி என்னதான் செய்தார் ரகுராம் ராஜன்? 2013-ல் ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியேற்ற போது நாட்டின் நிலைமை இதுதான்.. நாட்டின் பொருளாதாரம் தத்தளித்தது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆக இருந்தது. நாட்டின் பணவீக்கம் 10%-க்கு மேல் அதிகரித்திருந்தது. அந்நிய முதலீடுகள் வேகமாக வெளியேறின. ரகுராம் ராஜன் பதவியேற்ற பின்னர்.... அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவது நிறுத்தப்பட்டது சில மாதங்களிலேயே 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு இந்தியாவுக்கு வந்தது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போகாமல் தடுக்கப்பட்டது. இதற்காகவே ஊடகங்கள் "ராஜன் எபெக்ட்" என புகழாரம் சூட்டின. 10% ஆக இருந்த பணவீக்கம் 6% ஆகக் குறைக்கப்பட்டது. சிறு வங்கிகளுக்கான உரிமங்களை அதிகப்படுத்தினார். வாரா கடன்கள் குறித்து வெளிப்படைத்தன்மையை உருவாக்கினார் வங்கிகள் தங்களது நட்டங்களை பதிவு செய்தது வங்கிகள் தங்களது வாரா கடன்களை வசூலித்து நிதிநிலவரத்தை சரி செய்ய கெடு வைத்தார். கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தினார். நாட்டின் சகிப்பின்மை தன்மை வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைத்தார். ரகுராம் ராஜனுக்குப் பின்னர் என்னவாகும்? உலகமே பொருளாதார மந்த நிலையை நோக்கி நகரும்போது இந்தியாவும் தப்பாது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நிலை உள்ளது. இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்கும். வாரா கடன்களை வசூலித்தல் உள்ளிட்ட ராஜன் நடவடிக்கைகள் அப்படியே நிறுத்தப்படும் இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிலைமை மேலும் படுமோசமாகும் அபாயம்..
--
-நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.-ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்..
-Time is the most valuable thing in the world. – Edison
-Imagination is more important than knowledge. -Albert Einstein.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.....
செழிக்கட்டும் விவசாயம்......
With Regard....
PonRAMESH Kalam,M.Sc.,M.Phil.,Ph.D(Pursuing)
Asst.Prof of Physics,
Nehru memorial college(Autonomous),
Puthanampatti,
Thiruchippalli- 621 007.
Cell : +919750895059.
+917200514876.