சிவராத்திரி என்றால் என்ன.........

11,621 views
Skip to first unread message

பொன்ரமேஸ் கலாம்

unread,
Mar 7, 2016, 12:31:15 AM3/7/16
to பொன்ரமேஸ் கலாம்

சிவராத்திரி என்றால் என்ன


சிவராத்திரி என்றால் என்ன எதுக்கு சிவனை இன்னிக்கு கும்பிடனும்..? சிவன் என்பது நம் ஆத்மா வடிவம்...அண்டத்துல இருக்குறது பிண்டத்துலயும் இருக்குன்னு சொல்றாங்களே அந்த அண்டத்தில் ஒரு மாறுதல் வரும்போது இந்த பிண்டத்திலும் அந்த எதிரொலி இருக்குமே..? 

ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாளில் அண்டத்தில் உள்ள கதிர் அலைகளின் தாக்கத்தால் நம் உடலில் உள்ள சுரப்பிகள்,அமிலங்கள் வெளியேற்றத்தில் மாறுபாடு அடைகின்றன..அச்சமயம் உறங்காமல் விழித்திருந்தால் அவற்றின் செயல்பாடு நம் ரத்த அணுக்களை பாதிக்காது ...கண்டதையும் அச்சமயம் சாப்பிடாமல் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டும் குறைந்த அளவில் சாப்பிட்டு சிவனை வணங்குவது நல்லது ..இதெல்லாம் விளக்கி சொன்னா எல்லோருக்கும் புரியாது அழகா ஒரு கதை சொல்லி ,கொஞ்சம் பயம் காட்டி ,மறைபொருளா வெச்சிருக்காங்க..ஆனா இதில் ஏதோ நம்மை நல்வழிப்படுத்தும் விசயம் இருப்பது மட்டும் உண்மைசிவனை கும்பிடலைன்னா தியானம் செய்யுங்க..அப்படியே தூங்கிடாதீங்க..சித்தர்களை வழிபடுங்க..எங்காவது மனம் அமைதி அடையும் இடத்தில் தனிமையில் இருங்க...ஆற்றங்கரை,குளக்கரை,மலை.கடற்கரை,என எங்கெல்லாம் உங்க போனா உங்க மனம் சாந்தி அடையுதோ அதெல்லாம் சிவரூபம்தான்!!
              சிவராத்திரி என்றால் என்ன எதுக்கு சிவனை இன்னிக்கு கும்பிடனும்..? சிவன் என்பது நம் ஆத்மா வடிவம்...அண்டத்துல இருக்குறது பிண்டத்துலயும் இருக்குன்னு சொல்றாங்களே அந்த அண்டத்தில் ஒரு மாறுதல் வரும்போது இந்த பிண்டத்திலும் அந்த எதிரொலி இருக்குமே..? 

ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாளில் அண்டத்தில் உள்ள கதிர் அலைகளின் தாக்கத்தால் நம் உடலில் உள்ள சுரப்பிகள்,அமிலங்கள் வெளியேற்றத்தில் மாறுபாடு அடைகின்றன..அச்சமயம் உறங்காமல் விழித்திருந்தால் அவற்றின் செயல்பாடு நம் ரத்த அணுக்களை பாதிக்காது ...கண்டதையும் அச்சமயம் சாப்பிடாமல் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டும் குறைந்த அளவில் சாப்பிட்டு சிவனை வணங்குவது நல்லது ..இதெல்லாம் விளக்கி சொன்னா எல்லோருக்கும் புரியாது அழகா ஒரு கதை சொல்லி ,கொஞ்சம் பயம் காட்டி ,மறைபொருளா வெச்சிருக்காங்க..ஆனா இதில் ஏதோ நம்மை நல்வழிப்படுத்தும் விசயம் இருப்பது மட்டும் உண்மைசிவனை கும்பிடலைன்னா தியானம் செய்யுங்க..அப்படியே தூங்கிடாதீங்க..சித்தர்களை வழிபடுங்க..எங்காவது மனம் அமைதி அடையும் இடத்தில் தனிமையில் இருங்க...ஆற்றங்கரை,குளக்கரை,மலை.கடற்கரை,என எங்கெல்லாம் உங்க போனா உங்க மனம் சாந்தி அடையுதோ அதெல்லாம் சிவரூபம்தான்!!

சிவனுக்குப் பிடித்த ராத்திரி

இன்று மஹா சிவராத்திரி. எத்தனையோ இரவுகள் இருக்க ஒரு குறிப்பிட்ட இரவு மட்டும் சிவனுக்கு உகந்ததாக ஏன் ஆனது. அதுவும் மாசி மாதத்து சதுர்த்தசி இரவு மட்டும் ஏன் மஹா சிவராத்திரி ஆனது? விவரம் அறிவோமா?

சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவிற்கு திடீரென்று ஓர் சந்தேகம் ஏற்பட்டது. ‘நான் தானே இந்த உலகைப் படைப்பவன், நான் இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்கள் ஏது, இயக்கம் ஏது? என்று சிந்தித்தான். ஆணவம் அவன் தலைக்கேறியது. உடனே தனது தந்தையான விஷ்ணுவைக் காணச் சென்றான். விஷ்ணு அறி துயிலில் ஆழ்ந்திருந்தார். அவரை எழுப்பி, “ ஏய், நான் உனக்கு மகனாக இருந்தாலும் நானே உன்னை விட உயர்ந்தவன். உன்னைப் போல அன்றி, நான் பிறப்பு, இறப்பு அற்றவன். நான் இந்த உலகத்தைப் படைக்காவிட்டால் எங்ஙனம் நீ காத்தல் தொழிலைச் செய்ய முடியும்? எனவே, நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டு எனக்கு ஏவல் செய்வாயாக’ என்றார்.

அதுகேட்ட விஷ்ணு வெகுண்டார். ”உன்னுடைய தலைகளில் ஒன்றை ஈசன் பறித்து எறிந்த காலத்தில் எங்கே போயிற்று உனது படைப்பாற்றல்? சோமுகாசுரன் உன்னிடம் இருந்த வேதங்களைப் பறித்து எடுத்துச் சென்றபோது எங்கே போனாய் நீ?. நானல்லவோ அதை மீட்டு உலகைக் காத்தேன். ஆகவே நான் என்ற ஆணவத்தை விடுத்து என்னிடம் அடங்கி நடப்பாயாக” என்றார்.

இருவருக்குமான சொற்போர், பெரும் போராக மாறியது. அண்டசராசரம் நடுங்கியது. தேவாதி தேவர்கள், சித்த, முனி, யோகியர்கள் அஞ்சி நடுங்கி ஈசனைச் சரணடைந்தனர். ஈசனும் அபயஹஸ்தம் அருளினார்.

போர் புரிந்து கொண்டிருந்த அயன், அரிகளின் அருகே மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றியது. ”இந்த ஒளியின் அடியையும், முடியையும் எவர் கண்டறிகிறாரோ அவரே பெரியவர்” என்ற அசரீரி ஒலித்தது. உடனே, தாம் தான் பெரியவர் என மற்றவருக்கு நிரூபிக்க வேண்டிய ஆவலில் பிரம்மா அன்னப் பறவையாகி வானில் உயர்ந்தார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைய அரம்பித்தார்.


ஆனாலும் இருவராலும் ஈசனின் அடி, முடியைக் காண முடியவில்லை. உண்மை உணர்ந்த விஷ்ணு, இது ஈசனின் திருவிளையாடலே என்பதை அறிந்து அவரைச் சரணடைந்தார். ஆனால் ஆணவம் கொண்ட பிரம்மனோ, எப்படியாவது தான் திருமுடியைக் கண்டதாகப் பொய் செல்லியாவது போரில் வெற்றி பெற நினைத்தார். அப்போது திருமுடியிலிருந்து தவறி விழுந்து கொண்டிருக்கும் தாழம்பூவைக் கண்டார். தான் திருமுடியைக் கண்டதாகவும், அதை தாழம்பூ பார்த்ததாகவும் பொய் சாட்சி கூற வலியுறுத்தினார். பிரம்மனே தன்னிடம் கெஞ்சுவதைக் கண்டு ஆனந்தப்பட்ட தாழம்பூவும் அதற்குச் சம்மதித்தது.

அதனை சாட்சியாக வைத்து, தான் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்றும் அடி முடி காண இயலாத பேரொளியிடம் பொய் கூறினார் பிரம்மா.

பேரொளி வெடித்துச் சிதற ஈசன் அளவிலாச் சீற்றத்துடன் அதிலிருந்து வெளிப்பட்டார். ”பிரம்மனே! என் திருவடியைக் காணாமலேயே கண்டு விட்டதாகப் பொய் புகன்ற உனக்கு இனி இவ்வுலகில் திருக்கோயில்களும், வழிபாடும் இல்லாமல் போகட்டும்” என்று சாபம் இட்டார். பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம், ”நீதி தவறிய உன்னை இனி என் பக்தர்கள் யாரும் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டார்கள்” என்று சபித்தார்.

சாபம் விடுத்தும் சீற்றம் அடங்காத சிவன் அக்கினிப் பிழம்பாய்த் தகிக்க, அஞ்சிய பிரம்மனும், விஷ்ணுவும் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டித் துதிக்க, முனிவர்கள் வேதம் ஓதி முழங்க, தேவர்கள் பாடித் துதிக்க, ஈசன் குளிர்ந்தார். அண்ணாமலையாய், அருணாசல லிங்கமாய் அமர்ந்தார்.

ஈசன் இவ்வாறு ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்ம, விஷ்ணுக்களின் ஆணவம் அகற்றி மன்னுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவுதான் மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

பகவான் ரமணரும் இதனை

ஆதிஅரு ணாசலப்பேர் அற்புதலிங் கத்துருக்கொள்
ஆதிநாள் மார்கழியில் ஆதிரையச் – சோதியெழும்
ஈசனைமால் முன்அமரர் ஏத்திவழி பட்டநாள்
மாசிசிவ ராத்திரியா மற்று

என்கிறார்.

 

இந்த நன்னாளில் நீராடி, நீறு பூசி, ஐந்தெழுத்து மந்திரத்தை விடிய விடிய ஓதி வருதல் சிறப்பு. சிவ புராணம் படித்தலும், திருமுறைகளைப் பாராயணம் செய்தலும் நற்பலனைத் தரும். அண்ணாமலை தலத்தை கிரிவலம் வருதல் அளவற்ற புண்ணியத்தைத் தரும். அன்னை பார்வதி தேவியுடன், முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தாதி யோகியர்களும், முனிவர்களும் மஹா சிவராத்திரி அன்று கிரிவலம் வருவதாக ஐதீகம். கொடுப்பினை உள்ளவர்களுக்கு அண்ணாமலையில் ஜோதி தரிசனம் கிட்டும்.


கண்கள் விழித்திருப்பதல்ல ஓர் இரவாவது அறிவை விழிப்படைய செய்வதே சிவராத்திரி

அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் தப்புவதற்காக ஒரு பிராமணன் விழித்திருந்த இரவு..

நமது நாட்டு காலண்டர்களில் சிவராத்திரிக்கு ஒரு சித்திரம் வரைந்திருப்பார்கள். ஒரு பிராமணன் வில்வ மரம் ஒன்றில் ஏறியிருப்பான். அவனுடைய கைகளில் இருந்து இலைகள் மரத்தின் கீழே உள்ள சிவலிங்கத்தில் விழுந்து கொண்டிருக்கும். மரத்தின் கீழ் ஒரு புலி அவனையே பார்த்தபடி இருக்கும். அவனுடைய வாயில் இருந்து சிவ.. சிவ.. என்ற நாமம் வந்து கொண்டிருக்கும்…

காலண்டரைப் பார்த்ததும் இன்று சிவராத்திரி என்று தெரிந்து கொள்வோம்..

யாரிந்தப் பிராமணன்.. ? இவனுடைய கதை என்ன..? பாட்டி சொன்ன கதை..

காட்டு வழியாக ஒரு பிராமணன் சென்று கொண்டிருந்தான், அவனை ஒரு புலி விரட்ட ஆரம்பித்தது. வேகமாக ஓடிச்சென்று வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். அவன் கீழே இறங்குவான் என்று புலி மரத்தின் கீழே விழித்துக் காத்திருந்தது.

மரத்தில் இருந்த பிரமணனுக்கு உறக்கம் வந்தது. அவன் வில்வ மரத்து இலைகளை பறித்து சிவ சிவா என்றபடி கீழே போட ஆரம்பித்தான். மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது அவனுக்கு தெரியாது. அதுபோல அந்த நாள் சிவராத்திரி என்றும் அவனுக்கு தெரியாது.

ஆனால் அவன் சிவராத்திரியன்று விழித்திருந்து வழிபட்ட காரணத்தால் புலியை விரட்டுகிறான் இறைவன்.. பின் அவனுக்கு மோட்சமும் கிடைக்கிறது.

ஆக..

சிவராத்திரியன்று கண்விழித்திருந்தால் சிவனுடைய அருள் கிடைக்கும் என்ற செய்தி மனதில் பதிந்து கொள்கிறது.


சிவராத்திரி வந்துவிட்டது நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம்… ?

சிறுவர்கள் வீட்டுக்கு வீடு கண்விழித்திருக்க முடிவு செய்வார்கள்..

ஊஞ்சல் கட்டி ஆடுவது, விசேட உணவு செய்து உண்பதென அறுபதுகளில் இருந்த சிவராத்திரி எழுபதுகளில் கோழி, ஆடு நூடில்ஸ் போடுமளவுக்கு விரிவடைந்தது..



அன்று புலிக்கு பயந்து வில்வ மர இலைபோட்டு முத்தியடைந்த பிராமணனின் வாழ்வுக்கும் இன்றைய புலம் பெயர் வாழ்வுக்கும் நல்லதோர் ஒப்புமை இருப்பதை சிவராத்திரி அழகாக எடுத்துரைக்கிறது..

இப்படி சிவராத்திரி பல சிந்தனைகளை உருவாக்குகிறது.. அந்த சிந்தனையின் கொடுமுடியில் ஒரு கேள்வி பிறக்கிறது..

ஆம் சிவராத்திரி என்றால் என்ன..?

கண்கள் விழித்திருப்தா..?

இல்லை..

ஓர் இரவாவது உன் அறிவை விழித்திருக்க செய்.. இதுதான் சிவராத்திரி.

அனைத்து..
பம்மாத்துக்கள்..
மூட நம்பிக்கைகள்..
இனவாதம்..
மதவாதம்..
போதை வஸ்த்து..
சகோதர, குடும்ப சண்டைகள்..
என்னைவிட நீ பெரிதா என்று ஒப்பீடு செய்வது..

போன்ற அத்தனை மூடத்தனங்களையும் கண்விழித்துப் பார்த்து நீ திருந்திக் கொள்ள வேண்டிய அறிவியல் விழிப்பின் ராத்திரியே சிவராத்திரி…

அறிவு அற்றம் காப்பது என்பார் வள்ளுவர்..

ஆம்..

உங்களை அழிவில் இருந்து காப்பதே அறிவு..

தன்னை அழிவிலிருந்து காக்க விழித்திருந்த ஒரு பிராமணன் போல உங்களை அழிவில் இருந்து காக்க வழி தேடும் அறிவியல் விழிப்பு நிலையே சிவராத்திரி.

 சத்குரு: மஹாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மஹாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். ஈஷாவிலும் இந்நாள், இதே காரணத்திற்காக அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மஹாசிவராத்திரி அனைவருக்குமே உகந்த நாள். என்றாலும், யோகக் கலாச்சாரத்தில் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதியோகியாக, யோகப் பாரம்பரியங்களை நமக்கு வழங்கிய ஆதிகுருவாகவே ஆராதிக்கின்றனர். ‘ஷிவா’ என்றால் ‘எது இல்லையோ, அது’. உங்களில் ‘நான்’ என்ற சுவடின்றி, அங்கே சிவன் குடியிருக்க நீங்கள் வழிசெய்தால், வாழ்வை முற்றிலுமொரு புதிய கோணத்தில், என்றும் இல்லா தெளிவுடன் காணமுடியும். இதை நோக்கியே நம் ஈஷா யோகா மையத்தின் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் அமைகின்றன. இன்னும் சொல்லப்போனால், ஈஷா யோக மையத்தை பொருத்தவரை, ஒவ்வொரு வருடமுமே, மஹாசிவராத்திரியை எதிர்பார்த்து, எதிர்நோக்கி காத்திருப்பது போலாகி விட்டது. இந்நாள், இந்த இரவு, ஒரு வாய்ப்பு. நம் உள்வாங்கும் திறனை சிறிதளவேனும் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு இது. எண்ணங்கள், உணர்வுகள், முன்முடிவுகள் போன்றவற்றின் இடையூறின்றி வாழ்வை அணுகுவதற்கான வாய்ப்பு. வெறும் கண்விழித்திருக்கும் ஒருநாளாக இல்லாமல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நீங்கள் பயன்படுத்திக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசையும் அருளும். ‘ஷிவா’ எனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நீங்கள் எல்லோரும் உணர்வீர்களாக! 

மஹாசிவராத்திரி: 

குறுந்தகவல்கள் 

#1 இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தி மேல்நோக்கி எழும்புகிறது யோகப் பயிற்சிகளும் பிற ஆன்மீக செயல்முறைகளும் ஒரு மனிதனின் உயிர்சக்தியை உயரச் செய்வதற்காகவே செய்யப்படுகிறது. மஹாசிவராத்திரி அன்று இயற்கையே இவ்வழியில் நமக்கு உதவுவதாக அமைகிறது. அதனால் சிவராத்திரி, அதிலும் மஹாசிவராத்திரி மிக மிக முக்கியமான நாள்.

 #2 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் இல்லற வாழ்வில் இருப்பவர்களுக்கு இது, சிவனின் திருமண நாள். அவர் சதியையும், பின்னர் பார்வதியையும் இந்த நாளிலேதான் மணந்தார். லட்சியவாதிகளைப் பொருத்தவரை இது சிவன் தன் எதிரிகளை அழித்த நாள். ஆனால் யோகியருக்கும், முனிவர்களுக்கும் இந்நாள் ‘நிச்சலனத்தின்’ சாரம். பல்லாயிரம் ஆண்டுகால தவத்திற்குப் பின், ஆதியோகி சிவன் ‘அச்சலேஸ்வரராக’, கைலாய மலையுடன் கலந்து, தான் அறிந்த அனைத்தையும் கைலாய மலையில் பதித்த நாள் இது. 

#3 இரவெல்லாம் விழிப்போடு, முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், அதிகளவில் பலன்கள் புராணக்கதைகள் கூறும் காரணம் எதுவாகினும், இந்நாளின் முக்கியத்துவம் அன்று இயற்கையாகவே நம் உயிர்சக்தி மேலெழும்புகிறது என்பது. அதனால் இந்த இரவை விழிப்போடு, விழிப்புணர்வோடு, முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால், அதிக அளவில் பலன் பெற்றிடுவோம். அன்று நாம் செய்திடும் ஆன்மீக சாதனாவிற்கும் பலன் அதிகமாக இருக்கும்.

 #4 இரவெல்லாம் நீடிக்கும் இசை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாய், ஆனந்தமாய், இரவெல்லாம் நீடிக்கிறது நம் ஈஷா யோகா மஹாஷசிவராத்திரித் திருவிழா. சக்திவாய்ந்த தியானங்கள், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் அற்புதமான இசைநிகழ்ச்சிகள், ஈஷாவின் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவின் இசை, இரவெல்லாம் நம்மோடு உடனிருக்கும் சத்குரு என, விசேஷமான அந்நாளின் மகத்துவத்தை நாம் உணர்ந்திட நமக்குப் பல உறுதுணைகள் உருவாக்கப் பட்டுள்ளன. 

#5 சத்குரு உடனிருக்க, தியானலிங்கத்தில் நிகழும் பஞ்சபூத ஆராதனா நம் உடலின் இந்த ஐந்து அடிப்படைக் கூறுகளும் நமக்குள் எப்போது நன்றாக ஒருங்கிணைந்து செயல்படுகிறதோ அப்போது நமக்கு ஆரோக்கியமும் நல்வாழ்வும் நிச்சயம் உண்டாகும். இதற்கென யோகத்தில், ‘பூத ஷுத்தி’ என்ற தனி விஞ்ஞானப் பிரிவவே இருக்கிறது. இந்த ஆழ்ந்த விஞ்ஞானத்தின் பலனை நாமும் பெற, ‘பஞ்சபூத ஆராதனா’ எனும் செயல்முறையை சத்குரு நமக்கு வழங்குகிறார். ஒவ்வொரு சிவராத்திரி அன்றும், தியானலிங்க வளாகத்தில் பஞ்சபூத ஆராதனா நடக்கிறது. 

மஹாசிவராத்திரி அன்று நடக்கும் பஞ்சபூத ஆரதனாவில் சத்குருவும் உடன் இருப்பார். நமச்சிவாய என்ற ஒலிக்குப் பின்னால் ஏதாவது விஞ்ஞானம் உள்ளதா? சிவனை அழிக்கும் சக்தி என்பார்கள். அதாவது உங்கள் அகங்காரத்தை அழிப்பவர், உங்கள் எல்லைகளைத் தகர்ப்பவர் என்று பொருள். ‘ஷிவா’ என்ற வார்த்தையில், ‘ஷி’ என்பது மிகச் சக்தி வாய்ந்த ஒலிக் குறிப்பு. அதைச் சமன்படுத்த, ‘வா’ என்ற ஒலி பின்னால் சேர்க்கப்பட்டுள்ளது. தகுந்த சூழ்நிலையை உருவாக்கி ‘ஆஉம் நம ஷிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்தால், அது எல்லையில்லாததை நோக்கிப் பயணப்பட மிக அற்புதமான கதவுகளைத் திறந்திடும்! ஏன் மந்திரங்கள்? இந்தக் குறிப்பிட்ட ஒலிகளுக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? 

மந்திரங்களும் அதைச் சுற்றி பின்னப்படும் தந்திரங்களும் நம் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. பெருவாரியான மக்கள் மந்திரங்கள் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தாலும் அவர்கள் மனதில் கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. பலவிதமான கேள்விகளையும் பலன்களையும் சர்ச்சைகளையும் ஒருங்கே கொண்ட மந்திரங்களைப் பற்றிய பதிவு இது…

 கேள்வி மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன? 

சத்குரு: காரண அறிவு மந்திரங்கள் என்றாலே சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. ‘வெறும் ஒரு சத்தம் என்னை எந்தவிதத்தில் மாற்றிவிடும்?’ என்று அது கேட்கிறது. அனைத்து மந்திரங்களுமே உச்சகட்ட விடுதலையை அடைவதற்காக உச்சரிக்கப்படுவதில்லை. வேண்டிய செல்வங்களை அடைவதற்காகவும், எதிர்மறைத் தன்மையைப் போக்குவதற்கும் கூட பல மந்திரங்கள் இருக்கின்றன. ஞானயோகி சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன?” என்றார். தினசரி விஷயங்களை இது போன்ற மந்திரங்கள் மூலம் நாம் திறம்பட கையாள முடியும். வெகு சில மந்திரங்கள்தான் ஆன்மீகம் காட்டும் நல்வாழ்வை நோக்கி உங்களை இட்டுச் செல்லும். எந்த ஒரு மந்திரமோ, அல்லது கடவுளோ அல்லது மதமோ, உங்களுக்குள் பேராசையை அல்லது உங்கள் பயத்தை அல்லது எல்லைகளை உருவாக்கினால், அவற்றுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. ஒருவேளை உங்களது உடனடித் தேவைகள் மட்டும் அவற்றால் தீரலாம், ஏனென்றால் நீங்கள் அந்த மந்திரத்தின் மூலம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை அழித்துவிடவோ அல்லது உங்களுக்குத் தேவையான பணத்தை சம்பாதித்து கொள்ளவோ முடியும். 

மந்திரங்கள் ஜெபிப்பவர்களைப் பார்த்து ஏன் சிலர் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்?

ஒரு ஞானயோகி தன்னைப் புரிந்து கொள்ள தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிறார். பொதுவாக ஞானயோகிகளுக்கு யோகத்தின் வேறு அமைப்புகள் மீது எந்தவிதமான மரியாதையும் இருக்காது. ஞானத்தைத் தவிர மற்ற அனைத்துமே முட்டாள்தனமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் பக்தர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள்; கிரியா யோகிகளையும், கர்ம யோகிகளையும் பார்த்து நையாண்டி செய்கிறார்கள். ஒருமுறை ஒரு ஞானயோகி சிவனிடம் சென்று, “உங்கள் பக்தர்கள் மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த உலகத்தில் ஒலி மாசுபாடுதான் அதிகரிக்கிறது. ஒருவர் தான் இருக்கும் நிலையைத் தாண்டி மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல வேண்டுமென்றால், அனைத்தையும் கடந்து பார்க்கக் கூடிய விழிப்புணர்வு அவருக்கு இருக்க வேண்டும். வெறும் மந்திரங்களை மட்டுமே ஜெபிப்பதால் அவர்களால் எங்கு செல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர்களை இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தச் சொல்கிறீர்களா?” என்றார். 

அதற்கு சிவன் தரையில் ஊறிக் கொண்டிருந்த ஒரு புழுவைக் காட்டி, “அந்தப் புழுவுக்குப் பக்கத்தில் போய் ‘சிவ ஷம்போ’ என்று சொல்லுங்கள்” என்றார். அந்த ஞானயோகி நம்பிக்கை இல்லாமல் தன் தலையை ஆட்டிக் கொண்டே, புழுவுக்கு அருகில் சென்று சிவ ஷம்போ என்று உச்சரித்தார். உடனே அந்தப் புழு இறந்துபோனது. அதிர்ச்சியடைந்தார் ஞானயோகி. “என்ன இது? நான் மந்திரத்தைச் சொன்னவுடன், அந்தப் புழு இறந்துவிட்டதே,” என்றார். 

அதற்கு சிவா சிரித்துக் கொண்டே, ஒரு பட்டாம்பூச்சியைக் காட்டி, “அந்த பட்டாம்பூச்சி மீது கவனம் செலுத்திக் கொண்டே சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் அந்தப் பட்டாம்பூச்சியைக் கொல்ல விரும்பவில்லை,” என்றார். அதற்கு சிவா, “முயற்சித்துத்தான் பாருங்களேன்,” என்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்து சிவ ஷம்போ என்றார் ஞானயோகி, அந்த பட்டாம்பூச்சியும் இறந்தது. அதிர்ச்சியுற்ற ஞானயோகி, “இந்த மந்திரம் ஒருவரைக் கொல்லத்தான் செய்கிறதென்றால், ஏன் ஒருவர் இதை உச்சரிக்க வேண்டும்?” என்று கேட்டார். 

அதற்கு சிவா புன்னகைத்துக் கொண்டே, அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு புள்ளிமானைக் காட்டி, “அந்த புள்ளிமானைப் பார்த்து, சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் மானைக் கொல்ல விரும்பவில்லை” என்றார். அதற்கு சிவா, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். ஞானயோகியும் சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன? இது அனைவரையும் கொல்வதற்காகத்தான் இருக்கிறது,” என்றார். அப்போது ஒரு தாய் தனக்குப் புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தையுடன் சிவனின் அருள் பெறுவதற்காக அங்கே வந்தார்..

. சிவா ஞானயோகியைப் பார்த்து, “இந்தக் குழந்தையைப் பார்த்து அந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். அதற்கு ஞானயோகி, “முடியாது. நான் இந்தக் குழந்தையைக் கொல்ல விரும்பவில்லை” என்று மறுத்தார். சிவா அவரை சொல்லுமாறு வற்புறுத்தவே, ஞானயோகி மிகுந்த தயக்கத்துடன் அந்தக் குழந்தையை அணுகி, சிவ ஷம்போ என்றார். 

உடனே அந்தக் குழந்தை எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தது. அது, “நான் வெறும் ஒரு புழுவாகத்தான் இருந்தேன். நீங்கள் சொன்ன ஒரு மந்திரத்தால் பட்டாம்பூச்சியாக மாறினேன். இன்னொரு மந்திரத்தால் நீங்கள் என்னை ஒரு மானாக மாற்றினீர்கள். மேலும் ஒரு மந்திரத்தால் ஒரு மனிதனாகவும் மாற்றிவிட்டீர்கள். தயவு செய்து இன்னும் ஒரே ஒரு முறை நீங்கள் அந்த மந்திரத்தை உச்சரியுங்கள்; நான் தெய்வீகத் தன்மையை அடைய விரும்புகிறேன்,” என்றது. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே சக்திகளின் அதிர்வுகள்தான் என்று நவீன விஞ்ஞானம் தெள்ளத் தெளிவாக நிரூபித்துவிட்டது. எங்கு ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கு ஒரு ஒலியும் இருக்கவேண்டும். அதனால்தான் நாம் யோகாவில், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு ஒலிதான் என்று சொல்கிறோம். அது நாதப்பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒலியின் சிக்கலான கலவைகள் நிறைந்த முழுமையான படைப்பு. இந்த சிக்கலான ஒலிக் கலவைக்குள் சில ஒலிகள் மட்டும் முக்கியமான ஒலிகளாக இருக்கின்றன. இந்த முக்கியமான ஒலிகள்தான் மந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன. உங்கள் வாழ்க்கை முழுக்க நீங்கள் ஒரே அறையில் அடைபட்டுக் கிடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று அந்தக் கதவுக்கான சாவி உங்கள் கைகளில் கிடைத்தால்? சாவி கிடைத்த மாத்திரத்தில் அதை பிரயோகப்படுத்துவது எப்படி என்றும் உங்களுக்கு பிடிபட்டு போனால்? 

சிறிய அறையில் அடைபட்டுக் கிடந்த உங்களுக்கு புதிய உலகிற்கான கதவல்லவா திறக்கும்! அந்த சாவியை எங்கு போட்டு எப்படி திருகுவது என்று தெரியாமல், தரையிலும், கூரையிலும் போட்டு திருகிக் கொண்டிருந்தால், நீங்கள் எங்குதான் செல்ல முடியும்? சாவி, உலோகத்தால் ஆன ஒரு சிறிய பொருள்தான், ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரிந்தால், அது உங்களுக்கு ஒரு புதிய உலகத்தையே திறந்து காட்டும். நீங்கள் அதுவரை கண்டிராத புதிய பிரபஞ்சமாக இருக்கும்.

-- 





-நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.-ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்..
-Time is the most valuable thing in the world. – Edison
-Imagination is more important than knowledge. -Albert Einstein.

---

With Regard....
                                                     _____
PonRAMESH Kalam,M.Sc.,M.Phil.,P.hD.,(Phy)
Asst.Prof of Physics,
Nehru memorial college(Autonomous),
Puthanampatti,
Thiruchippalli- 621 007.

Cell   : +919750895059.
           +917200514876.

          

kumarkum...@gmail.com

unread,
Feb 24, 2017, 12:11:55 PM2/24/17
to MCA_2009-2012&2010-2012, p.ram...@gmail.com

sugur...@gmail.com

unread,
Feb 12, 2018, 6:39:14 AM2/12/18
to MCA_2009-2012&2010-2012

sugur...@gmail.com

unread,
Feb 12, 2018, 6:39:50 AM2/12/18
to MCA_2009-2012&2010-2012


On Monday, March 7, 2016 at 11:01:15 AM UTC+5:30, p ramesh wrote:

பொன்ரமேஸ் கலாம்

unread,
Feb 12, 2018, 9:11:09 PM2/12/18
to ponrame...@googlegroups.com, M.M.MCA 2010
எண்ணம் போல் வாழ்வு....     
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.....
செழிக்கட்டும் விவசாயம்......

With Regard....
                                                      
PonRAMESH Kalam,M.Sc.,M.Phil.,Ph.D
(Doing)

Asst.Prof of Physics,
Nehru memorial college(Autonomous),
Puthanampatti,
Thiruchippalli- 621 007.

Cell   : +919750895059 (Whats App).
           +917200514876.

          

Reply all
Reply to author
Forward
0 new messages