திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க குமரி எம்.பி-யிடம் கோரிக்கை

3 views
Skip to first unread message

Anne Jes Medon S

unread,
Mar 30, 2012, 3:24:16 AM3/30/12
to maravank...@googlegroups.com


திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க குமரி எம்.பி-யிடம் கோரிக்கை
          திருச்சி – திருநெல்வேலி பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்ம், குமரி எம்.பிக்கும் கோரிக்கை மனு அளிக்கபட்டது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ளு.சு ஸ்ரீராம் கூறியதாவது,
        கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சிறிய மாவட்டம் ஆகும். குமரி மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகும். குமரி மாவட்ட பயணிகள் திருநெல்வேலி,மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தம் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணிக்கின்றனர். மதுரையில் உயர்நீதி மன்றம், வேலைவாய்ப்பு அலுவலகமும்,  திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைகழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி நூற்றுகணக்காக பயணிகள் பயணிக்கின்றனர்.

            நாகர்கோவிலிருந்து காலை 7:30 மணிக்கு அடுத்து மாலை 5:30 மணிக்கு தான் திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தினசரி ரயில் வசதி உள்ளது. இதைபோல் மறுமார்க்கம் மதுரை, திருச்சியிலிருந்து அதிகாலையிலிருந்து மதியம் வரை எந்த ஒரு தினசரி ரயில் வசதியும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
        ரயில் பட்ஜெட்டில் திருச்சி – திருநெல்வேலி வழி தடத்தில் பகல் நேர இன்டர்சிட்டி ரயி
ல் அறிவிக்கபட்டது. தமிழகத்தில் இயக்கபடும் முதல் இரண்டு நகரங்களுக்கு இடையே இயக்கபடும் முதல் பகல்நேர இண்டர்சிட்டி ரயில் இது ஆகும். கேரளாவில் இதைபோன்ற ரயில்கள் வெற்றிகரமாக இயக்கபட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சியிலிருந்து காலையில் புறப்பட்டு மதியம் திருநெல்வேலி வந்து சேர்ந்து மதியம் திருநெல்வேலியிருந்து புறப்பட்டு இரவு திருச்சி செல்லதக்க வகையில் இயக்கபட உள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யபடும் இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகளும், குளிர்சாதன வசதி உடைய சாய்வு இருக்கை பெட்டிகளுடன் இயக்கபட இருக்கிறது. இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க போதுமான வசதி வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடதக்கது. ஆகவே இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கபட்டுள்ளது.

Thanks & Regards,

P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949

Visit our Facebook  : www.facebook.com/Kanniyakumari

http://kkdrua.blogspot.com


"Have a nice day"




Reply all
Reply to author
Forward
0 new messages