மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழகத்துக்கு ரயில்வே துறை ஒதுக்கபடுமா?

7 views
Skip to first unread message

Anne Jes Medon S

unread,
Jun 21, 2012, 11:47:19 PM6/21/12
to maravank...@googlegroups.com, ancel rajan, navis vigil

To: Kanniyakumari District Railway Users Association <kkd...@yahoo.com>


மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழகத்துக்கு ரயில்வே துறை ஒதுக்கபடுமா?          

         மத்திய அமைச்சரவை ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு மாற்றியமைக்கபட இருக்கிறது. தமிழகத்திலிருந்து 39 லோக்சபா உறுப்பினர்களும்ää 18 ராஜியசபா உறுப்பினர்கள் மற்றம் இரண்டு நியமன உறுப்பினர்கள் என 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் தி.மு.க விருந்து ராஜியசபாவில் ஏழு உறுப்பினர்களும் லோக்சபாவில் 18 உறுப்பினர்களும் காங்கிரஸ் சார்பில் ராஜியசபாவில் நான்கு உறுப்பினர்களும் லோக்சபாவில் 8 உறுப்பினர்களும் உள்ளனர்.

           தமிழகத்திலிருந்து மூன்று கேபினேட் அமைச்சர்களும் நான்கு இணை அமைச்சர்களும் மொத்தம் ஏழு அமைச்சர்கள்  பதவி வகித்து வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் கேபினேட் அமைச்சர்களாக ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும், ஜி.கே வாசன் கப்பல் துறை அமைச்சராகவும், தி.மு.கா சார்பில் கேபினேட் அமைச்சராக மு.க அழகிரி இராசாயன மற்றும் உரம் துறை அமைச்சராகவும் உள்ளனர். தமிழகத்திலிருந்து தி.மு.கா சார்பில் நெப்போலியன், ஜெகத்ரச்சகன், காந்திசெல்வன்,பழனிமாணிக்கம் போன்றவர்கள் இணை அமைச்சர்களாக உள்ளனர். மத்திய அமைச்சரவையில் தென் தமிழ்நாட்டிலிருந்து (மதுரைக்கு தெற்கு பகுதியிலிருந்து)  எந்த ஒரு நபரும் அமைச்சராக நியமிக்கபடவில்லை.
 
         கேரளா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் தனது மாநில வளர்ச்சிக்காக வெளிநாடுவாழ் இந்தியர் நலன் துறை, பாதுகாப்பு துறை,உணவு மற்றம் பொது வினியோக துறை, வெளியுறவு துறை, உள்துறை , மின்சாரம் போன்ற முக்கிய இலாகாக்களை  காங்கிரஸ் தலைமையிடம் போராடி பெற்றுள்ளனர். இதைபோல் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி அவர்களும் தமிழகத்தில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சிக்காக முக்கிய இலாகாக்களை குறிப்பாக ரயில்வே அமைச்சர், தரைவழி போக்குவரத்து, விமானபோக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளை பெறுமாறு தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதைபோல் தென்தமிழ்நாடு வளர்ச்சிக்காக தென்பகுதியிலிருந்து ஒருவரை மத்திய அமைச்சராக நியமிக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு ரயில்வே இணை அமைச்சர்:-
                தமிழ்நாட்டில் 3885 கி.மீ வழி தடம் தற்போது உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 3000 கி.மீ தூரம் ரயில் புதிய வழி தடம் சர்வே செய்யபட்டு செயல்படுத்தபடாமல் உள்ளது. பல்வேறு திட்டங்கள் குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக மந்தமாக நடைபெற்று வருகிறது. தமிழக ரயில்வே வளர்ச்சிக்காக தமிழ்நாட்டிலிருந்து ஒரு நபரை ரயில்வே அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாடு சுதந்திரம் கடைத்திலிருந்து தமிழ்நாட்டிலிருந்து எந்த நபரும் இதுவரை கேபினேட் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தது இல்லை என்பது குறிப்பிடதக்கது.

தமிழ்நாட்டில் குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் திட்டங்கள்:-
1)    ஈரோடு – பழனி புதிய வழி தடம்
2)    கரூர் - சேலம் புதிய வழி தடம்
3)    திண்டிவனம் - நகரி புதிய வழி தடம்
4)    பெங்களூர் - சத்தியமங்கலம் புதிய வழி தடம்
5)    திண்டுக்கல் - பொள்ளாச்சி – பாலக்காடு & பொள்ளாச்சி – கோயம்பத்தூர் கேஜ் மாற்றுதல்
6)    மதுரை – போடிநாயக்கனூர் கேஜ் மாற்றுதல்
7)    மாநாமதுரை – விருதுநகர் கேஜ் மாற்றுதல்
8)    மைலாடுதுறை – காரைகுடி ரூ திருதிறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி கேஜ் மாற்றுதல்
9)    தென்காசி - திருநெல்வேலி  கேஜ் மாற்றுதல
10)    காரைக்கால் -நாகப்பட்டினம் - திருதிரைபூண்டி புதிய வழி தடம்
11)    செங்கல்பட்டு – விழுப்புரம் கேஜ் மாற்றுதல
12)    விழுப்புரம் - திண்டுக்கல் இருவழிபாதை


தமிழ்நாட்டில் செயல்படுத்த படாமல் உள்ள புதிய ரயில் பாதைக்கான திட்டங்கள்
1)    மதுரை – கோட்டையம் - 234 கி.மீ
2)    திண்டுக்கல் - சபரிமலை – 201 கி.மீ
3)    அரக்கோணம் - திண்டிவனம் வழி வலாஜாபெட், ராணிபெட், ஆர்காட் -96 கி.மீ
4)    ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் - 25 கி.மீ
5)    சென்னை - ஸ்ரீபெரும்புதூர் வழி பூந்தமல்லி – 38 கி.மீ
6)    சிதம்பரம் - ஆத்தூர் வழி அரியலூர், பெரம்பலூர் - 167 கி.மீ
7)    திண்டுக்கல் - கூடலூர் - 131 கி.மீ
8)    திண்டுக்கல் -குமிழி    134 கி.மீ
9)    ஈரோடு – சத்தியமங்கலம்    63 கி.மீ
10)    ஜொலார்பேட்டை - ஓசூர் வழி கிருஷ்ணகிரி    101 கி.மீ
11)    காட்பாடி – சென்னை வழி கிண்டி, பூந்தமல்லி    212 கி.மீ
12)    கும்பகோணம் - நாமக்கல்    178 கி.மீ
13)    மதுரை – காரைக்குடி வழி மேலூர், திருப்பத்தூர்    91 கி.மீ
14)    மதுரை- தூத்துகுடி    144 கி.மீ
15)    மைலாடுதுறை –திருகடையூர் -தரங்கம்பாடி –திருநள்ளார் -காரைக்கால்    47 கி.மீ
16)    மானாமதுரை - தூத்துகுடி    126 கி.மீ
17)    மொரப்பூர் - தர்மபுரி வழி முக்கனூர்    36 கி.மீ
18)    நீடாமங்கலம் - புதுக்கோட்டை வழி மன்னார்குடி    54 கி.மீ
19)    ராமேஸ்வரம் - தனுஷ்கோடி    17 கி.மீ
20)    சத்தியமங்கலம் - மேட்டூர்    90 கி.மீ
21)    தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் வழி அரியலூர்    315 கி.மீ
22)    தஞ்சாவூர் - புதுக்கோட்டை    47 கி.மீ
23)    திண்டிவனம் - கடலூர் வழி புதுச்சேரி    77 கி.மீ
24)    திருவண்ணாமலை – ஜோலார்பேட்டை    85 கி.மீ
25)    வில்லிவாக்கம் - காட்பாடி    153 கி.மீ
26)    மேட்டூர் - சேம்ராஜநகர்    182 கி.மீ
27)    கன்னியாகுமரி – திருசெந்தூர் - தூத்துகுடி – ராமநாதபுரம் - காரைகுடி வழியாக கிழக்கு கடற்கரை ரயில்பாதை

Thanks & Regards,

P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949

Visit our Facebook  : www.facebook.com/Kanniyakumari

http://kkdrua.blogspot.com


http://groups.yahoo.com/group/kkdrua/join

"Have a nice day"








Reply all
Reply to author
Forward
0 new messages