நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்கு மாற்றுத் திட்டம் நிறைவெற்றுதல்
நெய்யாறு இடதுகரைக் கால்வாய் கேரள எல்லையில் கட்டப்பட்டிருக்கின்ற நெய்யாறு அணையில்
இருந்து தமிழ்நாடு எல்கையில் வருகின்ற விளவங்கோடு தாலுகாவின் மேற்குப்பாகப்
பாசனத்துக்கான இருமாநில அரசுகளின் பங்கில் உருவாக்கப்பட்டதாகும். நெய்யாறு
அணையின் நீர் பிடிப்பு இடங்கள் கேரள மாநிலத்திலும், தமிழ்நாடு
மாநிலத்திலும் பரந்து கிடக்கின்றன. ஆகையால் இதை இரு மாநில அணைத் திட்டம்
என்று கருதுவதே சரியானதாகும். முதல் ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட
இந்த திட்டம், தமிழ்நாடடில் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு
நெய்யாறு இடதுகரை கால்வாய் வெட்டப்பட்டது. நெய்யாறு இடதுகரைக் கால்வாயின்
மொத்த நீளம் 38.4 கிலோ மீட்டர்கள். இதனால் 4,048.58 ஹெக்டெர் (10,000
ஏக்கர்) நஞ்சை நிலம் பாசன வசதி கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கால்வாயால் வறட்சியில் சிக்கித் தவிக்கின்ற விளவங்கோடு தாலுகாவின்
மேற்குப் பாகத்திற்கு பாசன வசதி கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. இந்த
அணையால் கேரளத்தில் 9757.09 ஹெக்டொ நஞ்சை நிலஙகளும், தமிழ்நாடடில் 4048.58
ஹெக்டொ ஆயக்கட்டு நஞ்சை நிலங்களும் பாசனவசதி கிடைக்கும். இந்த அணையால்
தமிழ்நாட்டை விட சுமார் இரண்டு மடங்கிற்கு மேலாக கேரளத்தில் விவசாய
நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆனால் இந்த அணையை கட்டி முடிப்பதற்கும், கால்வாய்
வெட்டுவதற்கும் மொத்தம் 143 லட்சம் ரூபாய் அன்று செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டின் பங்காக ரூபாய் 60 லட்சங்கள் 1963-ம் ஆண்டு
கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர், நாகர்கொவில் அலுவலகக்
கோப்புச் சொல்லுகிறது. இது தவிர விளவங்கொடு தாலுகாவில் வெட்டப்பட்டுள்ள
கால்வாய்க்கு ரூபாய் 92.28 லட்சம் செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
விளவங்கோட்டில் வெட்டப்பட்டிருக்கின்ற கால்வாய், நெய்யாறு இடதுகரை
கால்வாயில், பாறச்சாலை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1½ பர்லாங் வடக்காக
முள்ளுவிளை வார்டில் மாத்திரக்காவிளையில் தொடஙகப்பட்டுள்ளது. கேரளப்
பகுதியில் செல்லுகின்ற பிரதான கால்வாயின்
ஒரு சிறிய கிணைக் கால்வாயாகத்தான் இதை வெட்டியுள்ளதால் இதில் சிறிதளவு
தண்ணீர் மட்டுமே வரும்பழயாக அங்கே இரு ஷட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால்
இக்கிளை பிரிகின்ற பிரதான கால்வாயில் ஷட்டர் எதுவுமே அமைக்கப்படவில்லை.
இங்கெ செல்லுகின்ற பிரதான கால்வாயில் இருந்து சுமார் 4 அடி தாழ்வாகத்தான்
தமிழ்நாட்டுக்கு கா ல்வாய் வெட்டப்பட்டுள்ளதால் அது பிற இடஙகளில்
அகலபாதாளத்திலூடே செல்ல வேண்டியதாயிற்று. அந்த 4 அடி தாழ்வை தவிர்த்து
மெயின் கால்வாய் சமதளத்தைத் தொடர்ந்து வெட்டியிருந்தால் கூட இங்கே
வெட்டப்பட்டிருக்கின்ற கால்வாய் சுமார் 10’ அடி வரை உயரத்தில் அமைக்கப்
பெற்றிருக்கலாம். அதனால் மேட்டுப்பாகங்களுக்கும் பாசனம் கிடைத்திருக்கும்.
எனவெ இது ஒரு தவறான கால்வாய் அமைப்பு முறை (Defective Civil Engineering)
என்று கூடக் கருதலாம். இந்த மாத்திரக்காவிளை இடம் கேரளப்பகுதியில்
அமைந்துள்ளது. தமிழ்நாடடில் இந்த கால்வாய் “சுந்தரிமுக்கு” என்ற
இடத்தில்தான் உட்புகுகின்றது. இந்த சுந்தரிமுக்குக்கும்,
மாத்திரக்காவிளைக்கும் சுமார் 1½ பர்லாங் தூரம் உண்டு. அந்த இடத்தை நில
உடமைகளிலிருந்து தமிழ்நாடு அரசு விலைக்கு வாங்கியுள்ளதாகவும்
அறிகிறோம்.
இடதுகரைக்கிளைக் கால்வாய் வெட்டும் பணி 1959 ஜுலை மாதம் 27-ம் நாள்
தொடங்கப்பட்டு 25.04.1963 அன்று தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர்
திரு.காமராசர் திறந்து வைத்தார். இக்கால்வாயால் மேற்கு விளவங்கொடு
தாலுகாவின் முக்கிய குளஙகளை மட்டும் இணைத்து தண்ணீர் பாய்ச்சுகிறது. இதனால்
ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இருப்பினும் இக்கால்வாய்
மிகவும் ஆழமாக வெட்டப்பட்டமையால் மேட்டுப்பகுதி பாசனத்துக்கு இது
பயன்படவில்லை. எனவெ இக்கால்வாய் வழவமைத்ததில் Technical Flaw
காணப்படுகின்றது.
இடதுகரைக் கால்வாய் தமிழ்நாட்டு எல்லையில் இரண்டு இடஙகளைக் கடந்து
செல்கிறது. இதில் முதல் இடம் பண்டாரக்கோணம் என்ற ஊராகும். இரண்டாவதாக, இது
ஆலம்பாறை என்ற இடத்தில் கடந்து, மீண்டும் கேரள எல்லைக்குள் செல்கிறது.
இவ்விடஙகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு,
மீண்டும் கேரள எல்கையான மாத்திரக்காவிளையில் கிளைக்கால்வாய்
வெட்டப்பட்டுள்ளதால, சுமார் ஒன்றரை பர்லாங் தொலைவுக்கு தமிழ்நாடு அரசு
பொன்னும் விலையும் கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. இதில் முதல் இடமான
பண்டாரக்கொணம், மாத்திரக்காவிளையில் இருந்து சுமார் ஒன்பது கிலொ மீட்டர்
தொலைவில் வடக்காக உள்ளது. இந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டு இடதுகரை
கால்வாயைத் தொடங்கியிருப்பின் கால்வாயின் ஆழம் சராசரியாக 50 அடியாவது
குறைந்திருப்பதற்கு வாய்பபு இருந்திருக்கும். அவ்வாறு வெட்டப்பட்டிருந்தால்
ஒரு வேளை சில தொட்டிப்பாலஙகளும், சுரங்க அமைப்புகளும் கூடுதலாகத்
தேவைப்பட்டிருக்கும். இதனால் மேட்டுப்பகுதி பாசனமும் கிடைத்திருக்கும்.
செலவு சற்று கூடுதலாக இருந்தாலும், அதன் பயன்பாடு பெரிதாக இருந்திருக்கும்.
இவ்விடஙகளில் இரப்பர் தொட்டஙகளும், நெல் வயல்களும் புதிதாக உருவாகி
மக்களின்
பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கும். இந்த வளர்ச்சியை, எதிர்பார்த்த பயன்
தராத நிலையில் கால்வாய் வெட்டுவதற்குக் காரணமாக இருந்த அந்நாள்
பொறியாளர்கள் உருவாக்கி விட்டனர். இதற்கு ஏதாவது அரசியல் பின்னணி கூட
இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. தற்போது இக்கால்வாய் முற்றிலும் தூர்ந்து பொன
நிலையில் உள்ளது. இதை பலகாலங்களாக தூர்வாரிப் பராமரிக்காமல் பொதுபணித்துறை
இலாகா விட்டுவிட்டது. தவிரவும் கேரள அரசு பல்லாண்டுகளாக இக்கால்வாயில்
தண்ணீர் விடாமல் தடுத்துவிட்டனர். எதற்காக தண்ணீர் தரவில்லை என்று தமிழக
அரசோ அல்லது அரசியல் கட்சிகளோ ஆய்ந்தறியவில்லை. இதற்கு கேரளா அரசு தமிழக
அரசு மீது பழி சுமத்துகின்றனர். தண்ணீர் செஸ் (Cess) ஆக கேரளத்துக்கு
தமிழகம் டூபாய் 20 கோடி நிலுவையாக உள்ளது என்றும், பராமரிப்புக்கான பணம்
கூட தரப்படவில்லையென்றும் கூறப்படுகிறது. இது உண்மையா அல்லது புரளியா என்று
கூடத் தெரியவில்லை. தமிழக அரசும் இது குறித்த வெள்ளை அறிக்கை
வெளியிடவுமில்லை. உண்மை எதுவானாலும், விளவங்கோடு மேற்குப்பாக
விவசாயிகளுக்கு இந்த நெய்யாறு இடதுகரைக் கால்வாயால் எப்பயனும் இல்லை என்ற
உண்மை நிலை உருவாகியுள்ளது. இது தமிழக அரசின் நிற்வாகத்தன்மையால்
உருவாகிவிட்டதாக அவ்வட்டார மக்கள் கருதுகின்றனர். எனவெ இவ்வாட்டார
விவசாயிகளின் நன்மையைக் கருதி இந்த இடதுகரைக் கால்வாய்க்கு மாற்றுத்திட்டம்
ஒன்றை கண்டறிந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
02.09.2010 அன்று நடந்த குமரிமாவட்டத் திட்டக்குழுக் கூட்டத்தில்
பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் திரு.முத்துசாமிகுமாரன் பேசுகையில,ஃ
நெய்யாறு இடதுக்கரைப் பாசனத்திற்காக மாற்றுத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக
அறிவித்தார். அவர் அறிவிப்புடி திற்பரப்பிலிருந்து வலதுகரை சானல் ஒன்று
வெட்டி நெய்யாறு இடதுகரை கால்வாய்யுடன் இணைத்துவிட்டால் மேற்கு விளவங்கொடு
பாசனம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். இதனாலும்
நெய்யாறு இடதுகரைச் சானலின் உயரம் கூடுவதற்கு வழியில்லை. திரும்பவும் அந்த
அதளபாதாளநிலைதான் தொடரும். இந்த கால்வாயால் பழைய பாசனக் குளங்களில்
சிலதுகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்குமே தவிர இன்று மேட்டுப்பாகஙகளாக
வறண்டு கிடக்கின்ற புமிக்கு பாசனவசதி கிடைக்காமல் போகும். எனவே புதிதாக
தொடங்க திட்டமிட்டுள்ள திற்பரப்பு திட்டத்துக்கு பதிலாக சிற்றார் II நீர்
தேக்கத்திலிருந்து உயர்வான பாகம் வழியாக புதிய கால்வாய் அமைத்தால்
மேட்டுப்பாக பாசனம் (Highland Irrigation) கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற சிறிய தொட்டிப்பாலஙகளும, குழாய்
சுரங்கங்களும் இதற்குத் தேவைப்படும். நவீன வஞ்ஞான உலகில் இது சாத்தியமெ.
கங்கை நதியிலிருந்து, காவிரிக்கு கால்வாய் வெட்ட முடியுமென்றால, ஆழ்கடலில்
சேதுக்கால்வாய் அமைத்திட முடியுமென்றால், இந்த திட்டம் வெகுசுலபமாக
நிறைவெறிவிடும்.
இந்த திற்பரபபு கால்வாய் திட்டம், 1879-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர்
ஆயில்லியம் திருநாள் ராமவர்மா காலத்தில் (1860-1880) திவானாக இருந்த
இராமையர் அமல்படுத்த எண்ணினார். அதற்காக மதிராசி பொதுபணிதுறை இலாகாவில்
முதல் நிலை பொறியாளராக பணியாற்றி இருந்த கொளெனால் மீடு என்பவரை வரவழைத்து
ஆய்வு நடத்தியதாகவும, அதன் சாத்தியக்கூறு சுலபமானது இல்லை என்று கண்டு
கைவிடப்பட்டதாகவும் அறிகிறோம்.(Travancore State Manual – III by T.K.
Velupillai page – 416). எனவே தமிழக எல்லைக்குள் இருக்கின்ற நெய்யாறு அணை
நீர் பிடிப்பு பாகங்களில் மழைகாலங்களில் உருவாகின்ற தண்ணீரை
தடுப்புக்கால்வாய் மூலம் விளவஙகோடு மெற்குப் பகுதிக்கு திசை மாற்றி பாசனம்
செய்தால் அதிக பயன் உள்ளதாக இருக்கும். இந்த மாற்றுத்திட்டத்தை அரசு
பரிசீலிக்க வெண்டும் என்று வேண்டுகிறொம். இது குறித்து விளவங்கொடு சட்டமன்றஉறுப்பினர் அரசுக்கு நெருக்குத்தல் தந்து திட்டத்தை நிறைவு பெறச் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.