---------- Forwarded message ----------
From:
Kanniyakumari District Railway User's Association <kkd...@yahoo.com>
Date: 2012/8/7
Subject: திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே அமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
To: Kanniyakumari District Railway Users Association <
kkd...@yahoo.com>
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே அமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளிக்கபட்டது. அந்த கோரிக்கை குறித்து சங்கத்தின் தலைவர் திரு S.R ஸ்ரீராம் கூறியதாவது: கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிகபடியான கிறிஸ்தவ மற்றும் பிற மதத்தினரும் வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க தினசரி செல்கின்றனர். மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. குமரி மாவட்ட பயணிகள் பேருந்துகளிலும் தனியார் வேன்களிலும் பயணிக்கின்றனர். இவ்வாறு செல்வதால் விபத்துகள் அதிகமாக நடக்கின்றது. மேலும் குறிப்பாக இந்த வழி தடத்தில் செல்லும் வாகனங்கள் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதை பத்திரிகைகளில் காணலாம். கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி கோவில் ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி முடிகிறது. இந்த திருவிழாவிற்கு கொல்லம்,திருவனந்தபுரம்,திருநெல்வேலி மற்றம் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிகமான பக்தர்கள் செல்வார்கள்.
ஆகவே கன்னியாகுமரி மாவட்ட மாதா பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் வழியாக சிறப்பு ரயில் இயக்க கோரி ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பயணிகள் மற்றும் மாவட்டத்திலிருந்து அந்த இடங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் மிகவும் பயனள்ளதாக அமையும். இந்த வழி தடத்தில் தஞ்சை பெரிய கோவில், பூம்புகார், நாகூர் தர்கா, தரங்கம்பாடி, கோடியகரை வனவிலங்கு சரணாலையம் போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இத்த ரயில் இயங்கும் பட்சத்தில் மாவட்ட பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பாறசாலை, இரணியல், குழித்துறை,ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களில் நிரந்தரமாக நின்று செல்லபடவேண்டும்.
ரயில்வே துறையால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தென்தமிழகம்:
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சென்னை, கோவா,மும்பை போன்ற இடங்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு திருவிழா சிறப்பு ரயில்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்மாவட்டங்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்ல சிறப்பு ரயில் அறிவிக்காதது பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. தற்போது இந்த பகுதிகளிலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்ல நேரடி ரயில்வசதி இல்லை என்பது குறிப்படதக்கது. இது தென்மாவட்டங்களை ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணிப்பதாகவே உள்ளது.
Thanks & Regards,
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949
Visit our Facebook : www.facebook.com/Kanniyakumari
http://kkdrua.blogspot.com
http://groups.yahoo.com/group/kkdrua/join
"Have a nice day"