Fwd: கோவா & வேளாங்கண்ணிக்கு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க பணிவான வேண்டுகோள்

0 views
Skip to first unread message

Anne Jes Medon S

unread,
Jan 4, 2014, 9:57:41 AM1/4/14
to maravank...@googlegroups.com, navis vigil, Antony Thomas





With Regards
S.Anne Jes Medon
Cell:9894959003
" Please consider the environment before printing this message"


---------- Forwarded message ----------
From: Kanniyakumari District Railway Users' Association <kkd...@gmail.com>
Date: 2014/1/4
Subject: Fwd: கோவா & வேளாங்கண்ணிக்கு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க பணிவான வேண்டுகோள்
To:




---------- Forwarded message ----------
From: Kanniyakumari District Railway Users' Association <kkd...@gmail.com>
Date: 2014/1/4
Subject: கோவா & வேளாங்கண்ணிக்கு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க பணிவான வேண்டுகோள்
To:


மதிப்பிற்குரிய அருட்பணி  பங்கு தந்தை அவர்களுக்கு,

            ரயில்வே துறையால் நமது மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருவது நீங்கள் அறிந்ததே. கடந்த ஐந்து வருடங்களாக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக வாஸ்கோடகாமாவிற்கு தினசரி  என இரண்டு
ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் இதுவரை ரயில்வே துறை செவிசாய்க்கவில்லை.

          நமது குரலை ஒங்கி ஒலிக்க வாய்ப்பு அருகில் வந்துருக்கிறது. நமது மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க  செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கோவாவில் உள்ள புனித சவேரியாரின் உடலை தரிசிக்க செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் வருகின்ற ரயில்வே நிதிநிலை அறிக்கையில் (பெப்ரவரி -2014) கீழ் குறிப்பிடபட்டுள்ள இரண்டு ரயில்களை இயக்க வேண்டும் என்பதை அரசுக்கு முக்கிய கோரிக்கையாக வலியுறுத்துவோம்.

1.    கொச்சுவேலியிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி புதிய ரயில் இயக்க வேண்டும்.

2.    தற்போது மங்களுர் - திருவனந்தபுரம்/ நாகர்கோவில் வழி தடத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஐந்து ரயில்களில் ஏதாவது ஒரு ரயிலை ஒரு மார்க்கம் கன்னியாகுமரி வரையிலும் மறுமார்க்ம் வாஸ்கோடகாமா வரையிலும் நீட்டித்து கன்னியாகுமரி – வாஸ்கோடகாமா ரயிலாக இயக்க வேண்டும்.


        
              தற்போது ரயில்வே அதிகாரிகள் ரயில்நிதிநிலை அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். கடைசி கட்ட நடவடிக்கையாக அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் நமது கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஜனவரி
மாத இரண்டாவது வாரத்தில்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய ரயில்நிலையங்களின் முன்பாக கோட்டார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பங்கு மக்கள் இணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

     கோட்டார் மறை மாவட்டத்தில் உள்ள  அனைத்து பங்ககளிலும் இந்த உண்ணாவிரதம் பற்றி அறிவிப்பு செய்து அனைத்து பங்கு மக்களும் இணைந்து  அந்த பங்கின் அருகில் உள்ள ரயில்நிலையங்ளில் (கன்னியாகுமரி, நாகர்கோவில், இரணியல், குழித்துறை, பாறசாலை, ஆரல்வாய்மொழி) முன்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த ஒழுங்குபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.    


குறிப்பு:
1. இந்த மின்னஞ்சலை தங்களுக்கு தெரிந்த பங்கு தந்தையின் மின்னஞ்சல் முகவரிக்கு (Forward) மறு அஞ்சல் செய்யவும்.



Thanks & Regards,

P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949

Visit our Facebook  : www.facebook.com/Kanniyakumari

http://kkdrua.blogspot.com


http://groups.yahoo.com/group/kkdrua/join

"Have a nice day"






--
Thanks & Regards,
P.Edward Jeni
Secretary

Kanyakumari District Railway Users' Association (KDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949

Visit our Facebook  : www.facebook.com/Kanniyakumari

"Have a nice day

Demands-1.doc
Reply all
Reply to author
Forward
0 new messages