4) உங்கள் ஜீமெயில் அஞ்சல்பெட்டி(Mail Box) அடிக்கடி நிரம்பிக்கொள்கிறதா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்கானது தான். தொடர்ந்து வாசிக்கலாம்.
ஜீமெயில் நிறுவனம் இலவசமாக தந்திருக்கும் 15GB ஐ நெருங்கி எந்த மடலை அழிக்க வேண்டுமென்று என்றேனும் திணறி இருக்கிறீர்களா? ஜீமெயிலை தீவிரமாக பயன்படுத்துபவர்கள், பல்வேறு மின்னஞ்சல் குழுமங்களில் உறுப்பினராக இருப்பவர்கள் சாதாரணமாக எதிர்கொள்ளும் பிரச்சனை தான் இது.
மிக எளிமையான வினவலை(Query) மூலம் இப்பிரச்சனையை தீர்க்கலாம்.. கீழே உள்ள புகைப்படத்தில் கொடுத்திருப்பதை போல 'larger:10m' என்ற வினவலையை கொடுத்து, அருகில் உள்ள தேடு(search) பொத்தானை சொடுக்குங்கள்.உங்கள் மின்னஞ்சல் கணக்கில் 10 MB -க்கு அதிகமாக இருக்கும் மடல்கள் அனைத்தையும் அவை காட்டும். இப்போது உங்களுக்கு தேவையான மடல்களை வைத்து விட்டு, தேவையற்றது என்பவற்றை அழித்துக் கொள்ளலாம். '10M' என நான் கொடுத்திருப்பது ஒரு சிறு உதாரணமே.. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல '2M','5M','20M' என நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
தொடர்ந்து வாசிக்க...