ஆஸ்திரேலியா அனுபவங்கள் ! நடிகை சோனாவின் பேமிலி டூர்
நடிகை சோனா சென்னையில் ஆண், பெண் நவநாகரிக பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம் வைத்திருக்கிறார். அதன் பெயர் யுனிக் என்றால் தனியான, சிறப்பான ஒன்று என்று பொருள்.
தன்
ஷோரூமில் சென்னையில் எங்கும் கிடைக்காத நவநாகரிக பொருட்கள் - ஆபரணங்கள்
கிடைக்க வேண்டும் என்று அவ்வப்போது வெளிநாடுகள் சென்று கொள் முதல்
செய்துவருபவர் சோனா.
இப்படி சீனா, துபாய், மலேசியா, பாங்காக்,
சிங்கப்பூர், லண்டன், பாரிஸ் என்று போய் வந்தவர். அண்மையில் இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா என்று போய் வந்திருக்கிறார். பேஷன் பொருட்கள் வாங்கவும்,
உறவினர்களை பார்க்கவும் இந்த 35 நாள் ட்ரிப் அமைந்ததாக நடிகை சோனா கூறுகிறார். |