அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுயில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கமே - நமக்கு
சோளம் மாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்
மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்
சேந்து மடியலாமோ தங்கமே தங்கம் - நமக்கு
சேமங்கீரை பஞ்சமாச்சி தங்கமே தங்கம்
தட்டு முட்டுச் சாமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம்
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம
தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்..!
ஒரு ராத்தல் பானுக்குத்தான் தங்கமே தங்கம் - நாம
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம்
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம் - நாம
ஒரு யாரு சீத்தைக்குதான் தங்கமே தங்கம்.
(அரிசியில்ல)