ஒரு ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுரை இளைய சமூகத்தை குறை சொலவதற்கல்ல, சரி செய்வதற்காக..
பிறக்கும்போதே யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வளர்ப்பும் சூழ்நிலையும் தான் அவர்களை நல்லவர்களாகவும்கெட்டவர்களாகவும் மாற்றுகிறது. பின் நாட்களில் அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறிவிடுகிறது.
இளம் ரத்தம் பயமறியாது என்பார்கள் உண்மைதான். சில குழந்தைகள் செய்யும் செயல்கள் கிரிமினல் குற்றவாளிகளையே அதிர வைத்து விடுகின்றன. அந்தளவுக்கு இன்றைய புதிய தலைமுறையினரில் சிலர் ‘பிளான் பண்ணி’கொலை செய்யத் துணிகின்றனர்.செல்போன் வாங்க ஆசைப்பட்ட சக மாணவனைக் கடத்தி பணம் கேட்டதும் கொடுக்க மறுத்ததால் அவனை கொன்று கூறு போட்டதும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த பயங்கரம்.
அது, இது என்று எந்த வரையறையும் இல்லாமல் கைதேர்ந்தவாகள் செய்யும் எல்லாவிதமான குற்றங்களிலும் இன்றைய புதிய தலைமுறை இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 14 வயது வரை உள்ளவர்களைக் குழந்தைகள் என்று சொல்லும் நமது சட்டம் தான் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தவறிழைக்கும்போது அவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாமல் இளம் குற்றவாளிகள் என்று சொல்லுகிறது. அதேநேரத்தில் அவர்களை மிகவும் கவனத்துடன் பார்க்கிறது. மற்றவர்கள் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை,மரண தண்டனை என்கிறது சட்டம் 18 வயதிற்குட்பட்டவர்களை விவரம் அறியாத பருவத்தினராகக் கருதிஇ சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் பெரும்பாலான கூர்நோக்கு இல்லங்கள் அந்த இளம் குற்றவாளிகளைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக அடிமைகளாகவே நடத்துகின்றன. இதனால் அவர்கள் மென்மேலும் கிரிமினல்களாவதற்கே வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2 சதவீதக் குற்றங்கள் இளம் குற்றவாளிகளால் செய்யப்படுபவை. இந்த குற்றங்கள் இரண்டு வகையாக நடக்கின்றன. ஓன்று சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விருப்பம் இ தேவையின் அடிப்படையில் நடைபெறுபவை. மற்றவை சமூக விரோதிகள் அல்லது குடும்பத்தினர் தூண்டுதலின் போல் நடைபெறுபவை. “எப்படியிருந்தாலுமு; அதற்கு சூழ்நிலைகளும்,குடும்பமும் முக்கிய காரணமாக அமைகின்றன. எனவே இளம் குற்றவாளிகளின் குற்றங்களுக்குப் பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும்,தூண்டுதலும் இருக்கின்றன” என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.
குறிப்பாக இளம் குற்றவாளிகள் உருவாவதில் குடும்பத்தினர்.உறவினர் ஆகியோர் அதிக பங்கு வகிக்கின்றனர். மற்றும் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தும் நெருக்கடி என்பது இன்னொரு அதிர்ச்சி தகவல். அதேநேரத்தில் குடும்ப பொருளாதாரமும் குற்றம் நடப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
திருட்டுக் குற்றங்களில் அதிக அளவில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 80 சதவீத திருட்டுக்கள் மற்றவர்களின் தூணடுதலின் பேரில் மற்றவர்களுக்கு துணை நின்றதால் நடந்தவை. 2007 ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5606திருட்டுக்கள் இளம் குற்றவாளிகள் மூலம் நடைபெற்றுள்ளனர்.
இன்னொரு அதிர்ச்சி தகவல்…
2007ம் ஆண்டு மட்டும் 672 கொலைகள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதல் இடம். அதாவது 141கொலைகள. அடுத்து மத்திய பிரதேசம். தமிழ் நாட்டிற்கு 10வது இடம். 28 கொலைகள்தான் என்பது சற்று ஆறுதல்! 746கற்பழிப்புகளுக்கு துணை போயுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக 1400சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதர சட்டங்களில்…
ஆயுதங்கள் ,போதைப்பொருள்,சூதாட்டம், சாரயம் விற்பனை என 22க்கும் அதிகமான குற்றங்களில் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம் இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாகப் பயன்படுகின்றனர்.
2007ம் ஆண்டில் நடந்த இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் இதர சட்டங்களின் கீழ் 4163 வழக்குகளும். 2008ம் ஆண்டில் 3156வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில்…
தமிழகத்திலும் இளம் குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகாத்து வருகின்றன.2006 முதல் 2008 வரையில் பதிவான குற்ற விவரங்களை மாநில குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ளது.
2009 ஆண்டின் குற்றங்கள் தொகுப்பட்டு வருகின்றன.
குற்றம்
|
2006
|
2007
|
2008
|
கொலை
|
23
|
38
|
26
|
கொலை முயற்சி
|
18
|
17
|
17
|
கற்பழிப்பு
|
8
|
13
|
7
|
கடத்தல்
|
0
|
4
|
3
|
பெண் கடத்தல்
|
0
|
2
|
3
|
வீடு புகுந்து திருட்டு
|
1
|
14
|
3
|
வழிப்பறித்திருட்டு
|
6
|
1
|
13
|
கொள்ளை
|
119
|
138
|
106
|
திருட்டு
|
304
|
387
|
410
|
ஆட்டோ திருட்டு
|
44
|
56
|
56
|
வன்முறை
|
6
|
26
|
23
|
அடிதடி
|
41
|
32
|
158
|
மானபங்கம்
|
5
|
2
|
5
|
பாலியல் தொந்தரவு
|
5
|
0
|
0
|
அலட்சியம் காரணமாக
|
--------
|
---------
|
----------
|
ஏற்படுத்திய உயிரிழப்பு
|
78
|
0
|
6
|
மற்ற குற்றங்கள்
|
29
|
65
|
75
|
மொத்தம்
|
687
|
805
|
911
|
ஆண்டுதோறும் அதிகாக்கும் இளம் குற்றங்கள்
நகரத்திலும், குடும்ப உறவுகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் விவரம்
1998
|
9352
|
1999
|
8888
|
2000
|
9267
|
2001
|
16, 509
|
2002
|
18,560
|
2003
|
17,819
|
2004
|
19,229
|
2005
|
18,939
|
2006
|
21,088
|
2007
|
22,865
|
2008
|
24,535
|
2009ம் ஆண்டிற்கான குற்றப்பட்டியல் தொகுக்கபட்பட்டு வருகின்றன
குற்றவாளிகளில் சிறுவர், சிறுமியர்
தேசிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் எண்ணி;க்கை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகாத்துள்ளது. சிறுமிகளின் எண்ணிக்கை 3 மடங்கு குறைந்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுவர் இ சிறுமிகள் 12 முதல் 16வயதுக்குட்பட்டவர்கள்.
ஆண்டு
|
சிறுவர்கள்
|
சிறுமிகள்
|
மொத்தம்
|
1998
|
13974
|
4949
|
18,923
|
1999
|
13088
|
5372
|
18,460
|
2000
|
13874
|
4128
|
17,982
|
2001
|
31295
|
2133
|
33,628
|
2002
|
33551
|
2228
|
35,779
|
2003
|
30985
|
2335
|
33,320
|
2004
|
28878
|
2065
|
30,943
|
2005
|
30606
|
2075
|
32,681
|
2006
|
30375
|
1770
|
32,145
|
2007
|
32671
|
1856
|
34,527
|
2008
|
32795
|
1712
|
34,507
|
2009ம் ஆண்டுக்கான குற்றப்பட்டியல் தொகுக்கப்பட்டு வருகின்றன.