பணம் கல்வியை தீர்மானிக்க கூடாது

2 views
Skip to first unread message

Velicham Students: 9698151515

unread,
May 25, 2011, 11:57:17 AM5/25/11
to thiru-th...@googlegroups.com, amuth...@googlemail.com, canad...@googlegroups.com, kad...@googlegroups.com, our-...@googlegroups.com, SSS-C...@googlegroups.com, team-e...@googlegroups.com, thamizhe...@googlegroups.com, the-a-...@googlegroups.com, thirdmc...@googlegroups.com, tmmk...@googlegroups.com, adangamaru, beyouths, canada tamil, chennaiitguys, imanthiyas, kalaiani college, keetru, mahaperu23, naalorunool, naam tamilar, nambikkai, nanji...@googlegroups.com, orkut...@googlegroups.com, Pagalavan, Panbudan, piravagam, rainbow, sirgugal, tagore-matric-school, tamil nanbargal, tamil2friends, Tamilamutham, tamilcnn cnn, thami...@googlegroups.com, thantha...@googlegroups.com, thiruma...@googlegroups.com, Thozhargal, vijaymakk...@googlegroups.com


இந்த வார கல்கி இதழில் வெளிச்சம் மாணவர்களின் வாழ்க்கை இருட்டைத் துடைக்கும் வெளிச்சம்! தலைப்பில் பிரசுரமாகியிருக்கிறது..  எம்மை பக்குவபடுத்த முழுவதும் படியுங்கள்... எம் வளர்ச்சிக்கு வழிகாட்டுங்கள்..



இருட்டைத் துடைக்கும் வெளிச்சம்! 

பத்தாம் வகுப்பில் 382 மார்க்குகள் வாங்கிவிட்டு,குடும்பச் சூழ்நிலையால் மேலே படிக்க முடியாமல் ஒரு ஹோட்டலில் க்ளீனராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என்னைஇதோ இன்று உங்கள் கண் முன்னே ஒரு பி.எல். மற்றும் எம்.ஏ. (சோஷியல் ஒர்க்) படித்த மாணவனாக மாற்றிக் காட்டியிருக்கிறதுவெளிச்சம்’ என கண்களில் வெளிச்சம் பொங்கப் பேசுகிறார் வெளிச்சம் மாணவர் அமைப்பின்மாணவர் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆனந்த குமார். என்னைப்போலவே இதுவரைவெளிச்சத்தின்’ வாயிலாக பயன் அடைந்தவர்கள் 515 மாணவ,மாணவிகள்.
எப்படி ஏன் எதற்காகவெளிச்சம்தோற்றுவிக்கப்பட்டது?’என்ற கேள்வியை அவரிடம் எழுப்பியபோது, ‘2004 ஆம் ஆண்டு அரியலூர்பெரம்பலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்கள்ல ஷெரீன் ஆய்வு மேற்கொண்டாங்க. அந்த ஆய்வின்படி பார்த்தீங்கன்னாகிராமப்புறத்துல இருக்குற மாணவர்களாலஅவங்க குடும்ப வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல படிக்க முடியாத அவல நிலை இருப்பதையும்இதனால அவங்க கோயம்பேடு மற்றும் பெங்களூரு பகுதியில கூலித் தொழில் செய்யமூட்டை தூக்கன்னு போய் விட்டதையும் அவங்க கண்டுபிடிச்சாங்க.
மாணவர்கள் பாடு இப்படின்னாமாணவிகள் சுமங்கலி திட்டம்ங்கற பேர்ல பஞ்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுஅங்க மூன்று அல்லது அஞ்சு வருஷம் வேலை செஞ்சிட்டு கைல மொத்தமா 30,000 அல்லது 40,000 ரூபாயோட திரும்பி வர்ற நிலை இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. வறுமையைக் காரணம் காட்டி ஒருவருக்கு கல்வி மறுக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கோடதான்2004ஆம் ஆண்டு வெளிச்சம்’ தொடங்கப்பட்டது.
வெளிச்சம்’ அமைப்பின் மூலம் மேற் கல்விக்கான உதவி பெற்றுநல்லபடியாகத் தாங்கள் விரும்பிய கல்வியைப் படித்துதேறி,நல்ல வேலையில் அமர்ந்துள்ளவர்கள்வெளிச்சத்துக்கான நிதி உதவியை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். செந்தில் என்ற ஒருவரை அப்படி உதாரணத்துக்குச் சொல்லலாம். பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து மேலே படிக்க முடியாமல் இருந்தவரை வெளிச்சம்காரைக்குடியில் உள்ள CECRIயில் சேர்த்துப் படிக்க வைத்தது. இன்று செந்தில்,ஓமனில் ஜூனியர் ரிசர்ச் ஆபிஸராகப் பணியாற்றி வருகிறார். மாதா மாதம் தாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை வெளிச்சத்துக்கு’ கொடுத்து வருகிறார்.
‘ உண்மையானகல்வி தாகம் கொண்டவறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களை எப்படிக் கண்டுகொள்வீர்கள்அல்லது அப்படிப்பட்ட மாணவர்கள் உங்களை எப்படித் தேடி வருவார்கள்?’
வெளிச்சத்தின் வழியாக இன்று தங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் பெற்றவர்களின் துணைகொண்டு கிராமங்களுக்குச் சென்று எங்கள் தேடுதல் பணியைச் செய்வோம். கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுமற்றும் அங்குள்ள பெரியவர்களிடம் தீவிர விசாரணை செய்த பிறகே தான் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது கல்வி தடையின்றித் தொடர வெளிச்சத்தின் வழி உதவி புரிவோம்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவ / மாணவிகளிடம் நாங்கள் எதிர்பார்ப்பது,அவர்கள் அதிகமான மதிப்பெண் எடுத்தவர்களாக இருக்க வேண்டும்கல்வியின் மீது ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும்ஆசிரியர்களையும்,பெற்றோர்களையும் மதிக்கத்தக்கவர்களாக இருக்க வேண்டும்தாம் சார்ந்த கிராமத்தைதான் கற்ற கல்வியால் முன்னேற்றம் அடையச் செய்பவர்களாக இருக்க வேண்டும். பணம் என்பது எதை வேண்டுமானாலும் தீர்மானிக்கலாம். ஆனால் கல்வியைத் தீர்மானிக்கக் கூடாது. போதுமான பண வசதி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவருக்குகல்வியில் தடை ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே நோக்குதான் வெளிச்சத்தின் நோக்கமே’ என்கிறார் ஆனந்த குமார் தொடர்ந்து உதவி பெற விரும்பும் மாணவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இருட்டைத் தின்னும் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்திக் கொள்ளலாம்’ என்கிறார்.
நளினி சம்பத்குமார்
--
வெளிச்சம் மாணவர்கள்
"மற்றவர் வாழ்வில் கல்வி வெளிச்சம் ஏற்ற இணைவோம்" 

Reply all
Reply to author
Forward
0 new messages