வணக்கம்,
மேலே உள்ள தலைப்பு நமக்கு எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும், பல நேரங்களில் இந்த கதை முதலீடுகள் விசயத்தில் மிகவும் பொருத்தமானது என்பேன் நான். இன்சூரன்ஸ், பரஸ்பர நிதி, நிலம். தங்கம், வைப்பு நிதி, இன்னும் பல வகையான "முதலீடுகள் செய்யும் போது, ஒரு முடிவும்:, அதன் முழு அளவு முதிர்ச்சி திட்ட கால அளவுக்கு முனà
��னரே அது முறிக்க பட்டு விடும். இதைத்தான் இந்த தலைப்பு சொல்வதாக உணர்கிறேன்.


சில வருடங்களுக்கு முன்னால், சிறு குழந்தைகளை கையை,காலை,காதை, கிள்ளி எரிவது போல எல்லா முதலீடுகளும், கிள்ளி எரியபட்டன. நாம் ஆசை, ஆசையாய், சேர்த்த முதலீடுகள் எல்லாம் ஊனமுற்ற குழந்தைகள் போல எங்கு பார்த்தாலும் அனாதையை போல ஏச்சுக்கும், பேச்சுக்கும், ஆளாயின, கிட்டத்தட்ட என்னை போன்ற à
��லர் வெம்பி வெதும்பிநின்றோம். ஒன்று மட்டும் புரியவில்லை, தினம் நமது டூத் பிரஸ்சை எடுத்து வாயில் வைத்தவுடன் நாம் நமது பங்கு சந்தையில் உள்ள ஒரு நிறுவன பொருளை விலை கொடுத்து வாங்கி அந்த கம்பெனியின் லாப கணக்கை துவக்கி விடுகிறோம். நமது அன்றாடம் உபயோகிக்கும், சைக்கிள், டூ வீலர், கார், குளிருட்டி,கிட்டத்தட்ட தூங்கும் வரை உபயோகிக்கும் எல்லா பொருள்களிலும், ஒரு கம்பெனியே தனà
��ு முலதனம் மூலமாக அதன் லாபம் உள்பட உற்பத்தி செய்து, அதை நாம் வாங்கவும் செய்கிறோம், ஆனால் அதே கம்பெனியில் முதலீடு செய்யும் போது மட்டும் இனி இந்த கம்பெனி அவ்வளவுதான் என்று முடிவுக்கு வருகிறோம். ஓன்று தெரியுமா? பல கம்பெனி பிராண்ட்அதன் பெயரில் இல்லாமல் வேறு பெயரில் வந்தால் அதன் விற்பனை படு மட்டமாக போன வரலாறு நிறைய உண்டு, அந்த அளவுக்கு பிராண்டுகள் மீது நமக்கு மோகம்.

மேலே உள்ள அனைத்து பிராண்டுகள் இல்லாமல் வேறு பிராண்டுகள் இல்லையா? ஆனால் நமக்கு இவைதான் வேண்டும் ஆனால் இந்த கம்பெனி முதலீடுகள் மட்டும் உங்களுக்கு நல்ல வருவாயை தராதா?
யோசியுங்கள் ஸ்டேட் வங்கிக்கு கடன் தர போகிறிர்களா இல்லை அதன் பங்குதாரர் ஆக விருப்பமா?
நன்றி