செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தில் ஈழத் தமிழர் !

1 view
Skip to first unread message

Muthamizh Vendhan

unread,
Jun 3, 2013, 1:40:02 PM6/3/13
to Muthamizh Vendhan

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தில் ஈழத் தமிழர் !

சசிகரன் வயது 21. இவர் கடந்த ஆறு மாத காலமாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு இவர் தன்னை இந்த சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியும் செய்துள்ளார். இதனால் இவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி முதல் சசிகரன் சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளார். சிறப்பு முகாமிற்கு சசிகரன் வருவதற்கு முன் சசிகரன் திருப்பூர் முகாமில் வாழ்ந்து வந்துள்ளார். அங்கிருக்கும் போது,  தமிழக உளவுத் துறை சசிகரன் ஆஸ்திரேலியாவிற்கு தப்பித்து செல்ல முயன்றார் என்ற வழக்கை இவர் மேல் போட்டு இவரை செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்தது. 

உண்மையில் சசிகரன் இந்திய வம்சாவழி தமிழர் ஆவார். இவரது தந்தை மதுரையை சேர்ந்தவர். தொழில் நிமித்தமாக சசிகரனின் தந்தை இலங்கை சென்றுள்ளார். அப்போது சசிகரன் இலங்கையில் பிறந்துள்ளார். நான்கு வயது வரை இலங்கையில் இருந்த சசிகரன் , பின்பு தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டார். சிறு வயதிலேயே சசிகரன் இந்தியாவிற்கு வந்துவிட்டதால் சசிகரனுக்கு இலங்கை பற்றி அவரது நினைவில் கூட இல்லை. எனினும் அவர் இலங்கை அகதி என்றே முத்திரை குத்தப்பட்டு வாழ்ந்து வருகிறார். 

சசிகரனின் தந்தைக்கு இந்தியா மற்றும் இலங்கைக்கான இரட்டை  குடியுரிமை உள்ளதாக அறிய முடிகிறது. இருப்பினும் சசிகரன் ஒரு இலங்கை அகதியாகவே தமிழக கியூ பிரிவு கருதுவதால் சசிகரனை சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளது. இந்த சிறப்பு முகாமில் தான் அடைத்து வைக்கப்படுவோம் என்று சசிகரன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இங்கு வந்த பிறகே , சிறப்பு முகாமில் சிக்கித் தவிக்கும் ஏனைய ஈழத் தமிழர்கள் படும் துயரத்தை சசிகரன் அறிந்துள்ளார். 

அதனால் தன்னையும் மற்ற ஈழத் தமிழர்களையும் சிறப்பு முகாமில் இருந்து நிரந்தரமாக விடுவித்து திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தே இப்போது சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் சசிகரன். தன்னுடைய மரணத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும் என்றால் தன்னுடைய உயிரையும் கொடுக்க தயாராக உள்ளதாக சசிகரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஷம் அருந்தியதால் சசிகரனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழக அரசு உடனடியாக சசிகரனின் இந்தப் பட்டினிப் போராட்டத்தை நிறுத்தி அவரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்கள் கருத்தாக இருக்கிறது. ஈழத் தமிழரின் துயர் நீங்குமா, தமிழக அரசு செவி சாய்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.    


sasikaran.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages