மரம் வளர்ப்பு குறித்த விபரங்கள் தேவை

3,308 views
Skip to first unread message

Rajan

unread,
Jul 12, 2010, 7:14:16 PM7/12/10
to மரம் வளர்ப்போம் வாருங்கள்
அனைவருக்கும் வணக்கம்

நல்ல நோக்கத்துடன் இக்குழமத்தை ஆரம்பித்த நண்பர்களுக்கு நன்றி.

என்னால் முடிந்த ஒரு சிறு பங்காக ஒரு ஏக்கர் நிலம் ஒன்றில் எவ்வளவு
மரங்கள் நட முடியுமோ அவ்வளவு மரங்கள் நட திட்டமிட்டுள்ளேன். மதுரையில்
உள்ள ஒரு சிறு நிலத்தை ரியல் எஸ்ட்டேடுக்காக ஒதுக்காமல், ஒரு சிறிய
வீட்டிற்குத் தேவையான சின்ன இடம் மட்டும் ஒதுக்கி விட்டு முழு
நிலத்திலும் மரங்கள் நட உத்தேசித்துள்ளேன். இப்பொழுது போர்
போட்டிருக்கிறோம் தண்ணீர் நன்றாக வருகிறது. நீரை வீணாக்காமல் சொட்டு நீர்
பாசனத்திற்கான குழாய்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளேன். நான்
வெளிநாட்டில் வசிப்பதினாலும் வயதான தந்தையை அதிகம் தொந்தரவு செய்ய
விருப்பம் இல்லாததினாலும் கூடிய வரை தகவல்களைத் திரட்டி அவருக்கு உதவ
எண்ணியுள்ளேன. என் திட்டங்கள் நிறைவேற்ற கீழ்க்கண்ட தகவல்கள் தேவை.
நானும் இணையத்தில் இது தொடர்பாக தேடிக் கொண்டிருக்கிறேன்.


1. செவ்வக வடிவமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் எத்தனை மரங்களை நட
இயலும்? நிலத்தை எப்படிப் பிரித்துத் திட்டமிடுவது?

2. என்ன வகையான மரங்களை நடலாம். அந்த மண்ணிற்கு ஏற்ற மரங்களை எவ்வாறு
தீர்மானிப்பது? உதவிக்கு யாரை அல்லது எந்த அலுவலகங்களை நாட வேண்டும்?
மரம் நடும் இயக்கங்கள் (அதற்காகும் செலவுகளை ஏற்றுக் கொண்டால்)
நிலத்திற்கு சென்று சோதித்து உரிய மரங்களை தேர்வு செய்ய உதவுவார்களா ?

3. நான் நன்கு அடர்த்தியாக செழித்து வளரும் மரங்களுடன், பழ மரங்களையும்
சில தென்னை மரங்களையும் நட உத்தேசித்துள்ளேன். அப்படி பல வகைப் பட்ட
மரங்களை ஒரு ஏக்கர் நிலத்திற்குள்ளாகவே வளர்ப்பது சாத்தியமா?

4 இந்த நிலத்தில் வேறு பாசனம் ஏதும் சமீபகாலத்தில் (கடந்த 50
வருடங்களில்) நடந்திருக்கவில்லை ஆதலால் புதர்கள் வளர்ந்த வெற்று இடமாகவே
உள்ளது. ஆனால் நிலத்தடி நீர் இருப்பதினாலும், நிலத்தடி குழாய் போடப்
பட்டிருப்பதினாலும் ஓரளவுக்கு நீர் வசதி உள்ளது. அதை எப்படி குறைந்த
அளவில் பயன் படுத்தி மரங்களை வளர்ப்பது?

5. வீடு கட்ட உத்தேசித்திருக்கும் சிறு பகுதியில் மட்டும் பின்னாளில்,
ஒரு பத்து வருடம் கழித்து வீடு கட்டும் பொழுது வெட்டி விட ஏதுவாக எந்த
வகையான தற்காலிக மரங்களை நடலாம்?

தயவு செய்து மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை அளிக்கவும். இது தொடர்பாக
நான் மதுரைப் பகுதிகளில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்,
முகவரிகளையும் முடிந்தால், தெரிந்தால் அளிக்கவும். என்னால் முடிந்த
அளவிற்கு வறண்டு போய் காங்க்ரீட் காடுகளாக மாறி விட்ட அந்தப் பகுதியில்
ஒரு சிறிய பசுமையை உருவாக்க எண்ணியுள்ளேன். இந்த சிறிய முயற்சிக்கு
உங்கள் ஆதரவினை நல்கவும்

அன்புடன்
ராஜன்

AGRIINFOMEDIA-Sakthivel

unread,
Jul 12, 2010, 8:22:48 PM7/12/10
to letspla...@googlegroups.com, raja...@gmail.com
உங்களின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. www.agrinfomedia.com ல் உங்கள் கேள்விகளை கேட்கவும் உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்...

13 ஜூலை, 2010 4:44 am அன்று, Rajan <raja...@gmail.com> எழுதியது:
--
**************************************************************************************
You received this message because you are subscribed to the Google
Groups "மரம் வளர்ப்போம் வாருங்கள்" group.
To post to this group, send email to letspla...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
letsplanttree...@googlegroups.com
For more options, visit this group at

http://groups.google.com/group/letsplanttrees?hl=ta

Visit Also : http://letsplanttrees.blogspot.com

மரம் வளர்ப்போம் - மழைவளம் பெறுவோம் - புவியைக் காப்போம்

A Eswaran

unread,
Jul 13, 2010, 12:59:32 PM7/13/10
to letspla...@googlegroups.com
 ராஜன் மிக்க மகிழ்ச்சி! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மதுரையில் உள்ள தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தினர் தங்களுக்கு உதவுவார்கள். அவர்களின் முகவரி: திரு.தியாகராஜன்/ மெயில்: vignan...@gmail.com
2010/7/13 AGRIINFOMEDIA-Sakthivel <valaru...@gmail.com>

kabheesh S

unread,
Jul 13, 2010, 1:50:23 PM7/13/10
to letspla...@googlegroups.com
ராஜன் பதில் எதுவும் தெரியல, சந்தோசமாயிருக்கு.

2010/7/13 A Eswaran <sivakam...@gmail.com>

Santhini Ramasamy

unread,
Jul 13, 2010, 2:58:33 PM7/13/10
to letspla...@googlegroups.com, Rajan
Hi  Rajan,
 
எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
 
ஒரு ஏக்கர் நிலத்தில் இடைவிடாது நீங்கள் மரம் மற்றும் பிற செடி கொடிகளை நடலாம்.
வீடு கட்ட வேண்டிய இடத்தில், புதர் செடிகளையோ அல்லது எதிர்காலத்தில் வீட்டுக்கு உபயோகமாகும் மரங்களை நடலாம். நீங்கள் எவ்வளவு காலம் கழித்து அதில் வீடு கட்டப் போகிறீர்கள் என்பதை பொருத்து. தேக்கு ஏழெட்டு வருடங்களில் ஓரளவு பெரிதாகும். மற்ற மரவகைகளும் விசாரிக்கலாம். சவுக்கு எதிர்காலத்தில் வெட்டி விற்பதற்காக வீடு கட்டும் பகுதியில் வளர்க்கலாம். வெகு விரைவில் வீடு கட்டும் எண்ணம் இருந்தால், மல்லிகை, முல்லை, செம்பருத்தி என்று வீட்டுப்பெண்களுக்கு உதவும் புதர்களையும் கொடிகளையும் ஓரக்கால்களில் பயிரிடலாம்.
 
அதுபோக .....மற்ற பகுதிகளில் .....மண்ணின் தரத்தை பரிசோதித்து பிறகே பழமரங்களை தேர்ந்தெடுக்கவும். லோக்கல் அக்ரி ஆபீஸ் -ல் மண் பரிசோதனை செய்வார்கள். தண்ணீர் அதிகம் தேவைப்படும் தென்னையை தவிர்க்கவும். ஐந்தாறு மரங்கள் வீட்டு உபயோகத்திற்கு   வளர்க்கலாம்.  அக்ரி ஆபீஸ் -ல் நீங்கள் மர வகைகளை குறிப்பிட்டு கேட்க வேண்டிய அவசியம் நேரலாம். தமிழகத்தில் வளரும் மர மற்றும் புதர் வகைகள் பற்றி மேலோட்டமாய் அறிந்திருந்தாலே போதும்.
பழ வகைகளை .....அக்ரி ஆபீஸ் பரிந்துரைத்தது தவிர ....உங்களின் விருப்பத்திற்கு எதை வேண்டுமானாலும் நர்சரியில் வாங்கி வளர்த்துப் பாருங்கள்.
 
முழு நெல்லி, அரை நெல்லி , நாவல், மா, கொய்யா, கருவேப்பிலை, ஆரஞ்சு, கொளுமிச்சை, எலுமிச்சை, அத்தி, பலா, சப்போட்டா, திராட்சை கொடிகள், பப்பாளி, சில தென்னைகள், கோவை கொடி, வேம்பு, பன்னீர் புஷ்பம், பவள மல்லி, மர மல்லி, சவுக்கு, புங்கன் மரம்,  மேலும் .....உங்களின்  விருப்பம். (இவையெல்லாம் எண்கள் தோப்பில் உண்டு...இதற்கு மேலும் உள்ளது ....இப்போது யோசிக்க நேரமில்லை)
 
மரங்களை நடுமுன் ...குழிகளை வெட்டி, குப்பை உரம் போட்டு, எறும்பு கொள்ளும் மருந்திட்டு  பிறகே நடவும்.  தேவையான இடைவெளி விடவும் ...மரத்தின் எதிர்கால  அகலம் குறித்த கவனம் கொள்ளவும். அப்போதுதான் நிறைய பழங்கள் கிடைக்கும். 
எனக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.
விஷயம் தெரிந்த விவசாயிகள் நிறைய பேருண்டு. 
 
Good luck.
 
 
 


 
2010/7/13 kabheesh S <kabh...@googlemail.com>



--
Santhini

Prabhakar A

unread,
Jul 13, 2010, 3:11:01 PM7/13/10
to letspla...@googlegroups.com
வணக்கம் ராஜன், அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. முதலில் அருகிலிருக்கும் மண் பரிசோதனை செய்யும் நிலையத்தை அணுகி எது போன்ற மண் வகை, அதற்கு தகுந்தாற் போன்ற பழ மற்றும் நல்ல ’குளு’யைத் தரும் மரக் கன்றுகளை தேர்ந்தெடுக்கலாம்.

கீழே சாந்தினி கூறிய நிறைய பழ மற்றும், குத்துச் செடிகள், மரக் கன்றுகள் வகைகளை கருத்தில் கொள்ளலாம். இருப்பினும், ////தேக்கு ஏழெட்டு வருடங்களில் ஓரளவு பெரிதாகும். //// தேக்கு மட்டும் வேண்டவே வேண்டாம், எங்கள் வீட்டில் இப்படியாக மற்ற உறுப்பினர்களால் பெரிய அளவில் வளர்த்து, பணமும் ஈட்டிவிடலாமென்று தேக்கை போட்டார்கள், 18 வருடங்களுக்கு மேலாகியும் கை பருமனைக்காட்டிலும் இரண்டு மடங்கு கூட பெருத்ததாக இல்லை. 

இரண்டாவது பெரிய ட்ரா பேக் தேக்கு மற்றும் சவுக்கு மரங்களை கொண்டிருப்பதில் என்னவென்றால், தனது இலைகளை உதிர்த்து அப்படியே வெயிலை வாங்கி வெப்பத்தை கக்கி, அனல் காற்றை அனுபவிக்க விட்டுவிடும். எனவே தேக்கு கதைக்கு ஒத்தே வராத ஒன்று. நிறைய மழையளவைக் கொண்டிருக்கும் காட்டுப் பகுதிகளில் கூட பல பத்தாண்டுகளை எடுத்துக் கொள்கிறது, டிம்பர் வால்யூவிற்கு அவைகள் எட்டுவதற்கே. இந்த நிலையில், நம் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டுமென்ற நிலையில்....?

என்னயக் கேட்டா, நான் பணப் பயிர் வேண்டுமெனில் தீக்குச்சி மரம் ரெகமெண்ட் செய்வேன், நிலலும், பசுமையும் வேண்டுமெனில் நிறைய மா, பலா, தென்னை, எழுமிச்சை, நார்த்தங்காய், நாவற் போன்ற வகையறாக்களை நாடுவேன். பேசுவோம்.

நன்றி - வணக்கம்.

2010/7/13 Santhini Ramasamy <santhi...@gmail.com>



--
Prabhakar

Rajan

unread,
Jul 13, 2010, 5:30:55 PM7/13/10
to மரம் வளர்ப்போம் வாருங்கள்
சக்திவேல், ஈஸ்வரன், சாந்தினி, கபீஷ், பிரபாகர்

அனைவரது அன்பிற்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி. ஈஸ்வரன் அளித்த
மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்கிறேன். அவர்களிடம் கேட்டு எப்படி
மண் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்வது என்பதை அறிந்து கொண்டு ஏற்பாடு
செய்கிறேன். விபரங்களைக் கேட்டு அறிந்து செயல் படுத்துவதற்கு மட்டுமே என்
தந்தையை கேட்டுக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். அங்கு தோட்ட வேலை செய்ய
ஒருவரையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

என் நோக்கம் வணிக மரங்கள் அல்ல. அந்த மண்ணிற்கு ஏற்ற மரங்களலால் அவற்றை
வெட்ட நேராமல் பிற்காலத்தில் ஏதேனும் சிறிய வருமானம் வருமானால் நல்லது,
வரட்டும். என் நோக்கம் நன்கு அடர்ந்து நிழல் தரும் சோலையை ஏற்படுத்தும்
மரங்களும், பறவைகள் உண்டது போக எங்களுக்கும் ஏதேனும் கனிகள் கொடுக்கும்
மரங்களும், சுற்றுப்புறத்திற்கு தூய்மையான காற்றையும், குளிர்ச்சியையும்,
பசுமையையும் தரும் ஒரு சோலையை அங்கு உருவாக்குவது மட்டுமே. ஒரு நண்பர்
குமிழ் மரம் நடுமாறு யோசனை கூறியிருந்தார்.

வீட்டை குறைந்தது இன்னும் எட்டு வருடங்கள் கழித்து கட்டவே
உத்தேசித்துள்ளேன். வீடு கட்டப் போகும் இடம் சிறிய அளவில் மட்டுமே
இருக்கப் போவதினால் அதில் வேண்டுமானால் ஒரு சோதனை முயற்சியாக சில தேக்கு,
சவுக்கு மரங்களை முயற்சித்துப் பார்க்கிறேன். மற்றபடி நீங்கள் கூறிய
அனைத்து பழ மரங்களையும் அந்த மண்ணுக்கு ஏற்புடைத்தாக இருக்குமானால்
கருத்தில் கொண்டு வாங்கி வளர்க்க ஏற்பாடு செய்கிறேன். மரங்கள் குறித்த
தேர்வுகளுக்கு நன்றி.

பிற்கால வீட்டு உபயோகத்திற்கு மட்டுமாக ஒரு சில தென்னை மரங்கள் மட்டுமே
நடுவதாக இருக்கிறேன். அருகில் உள்ள விவசாய அலுவலகம் எங்கிருக்கிறது
என்பதை அறிந்து என் தந்தையை ஒரு நாள் போய் வரச் சொல்ல வேண்டும். கட்டணம்
செலுத்தி தோட்டத் துறை அலுவலர் அல்லது ஆலோசகர்கள் யாரேனும் நிலத்திற்கு
வந்து நீள அகலங்கள் குறித்து அறிவுரை செய்தாலும் மரக் கன்றுகள் நடுதல்
பராமரித்தல் போன்ற விஷயங்களிலும் சற்று ஆலோசனை செய்பவர்களாக இருந்தால்
நலமாக இருக்கும். அப்படி யாரேனும் செய்வார்களா என்பதும் தெரியவில்லை.
அதையும் நான் விசாரித்தறிய வேண்டும்.

மேலும் தகவல்களையும் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களையும்
வரவேற்கிறேன். சொட்டுநீர் பாசனம் குறித்த தகவல்களையும் அளிக்கவும்.
நிலத்தடி நீரை ஒட்டு மொத்தமாக உறிஞ்சி வளரும் மரங்களிலும் எனக்கு
ஆர்வமில்லை. குறைந்த நீர் வளத்தில் அடர்த்தியாக வளரும் மரங்களையே
விரும்புகிறேன்.


என் முயற்சியின் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ந்து இங்கு உங்களிடம்


பகிர்ந்து கொள்கிறேன்

அன்புடன்
ராஜன்

Rajan

unread,
Jul 13, 2010, 5:32:49 PM7/13/10
to மரம் வளர்ப்போம் வாருங்கள்
ஈஸ்வரன்

தியாகராஜன் அவர்களின் vignanasir...@gmail.com மெயில் ஐடி முழுமையாக
இல்லை என்று நினைக்கிறேன்.

அன்புடன்
ராஜன்

On Jul 13, 9:59 am, A Eswaran <sivakamieswa...@gmail.com> wrote:
>  ராஜன் மிக்க மகிழ்ச்சி! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மதுரையில் உள்ள
> தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தினர் தங்களுக்கு உதவுவார்கள். அவர்களின் முகவரி:

> திரு.தியாகராஜன்/ மெயில்: vignanasir...@gmail.com
> 2010/7/13 AGRIINFOMEDIA-Sakthivel <valarumsak...@gmail.com>
>
> > உங்களின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.www.agrinfomedia.comல் உங்கள்


> > கேள்விகளை கேட்கவும் உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்...
>

> > 13 ஜூலை, 2010 4:44 am அன்று, Rajan <rajans...@gmail.com> எழுதியது:

> >> letsplanttree...@googlegroups.com<letsplanttrees%2Bunsu...@googlegroups.com>


> >> For more options, visit this group at
>
> >>http://groups.google.com/group/letsplanttrees?hl=ta
>
> >> Visit Also :http://letsplanttrees.blogspot.com
>
> >> மரம் வளர்ப்போம் - மழைவளம் பெறுவோம் - புவியைக் காப்போம்
>
> >  --
>
> > **************************************************************************************
> > You received this message because you are subscribed to the Google
> > Groups "மரம் வளர்ப்போம் வாருங்கள்" group.
> > To post to this group, send email to letspla...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to

> > letsplanttree...@googlegroups.com<letsplanttrees%2Bunsu...@googlegroups.com>

Rajan

unread,
Jul 13, 2010, 5:57:48 PM7/13/10
to மரம் வளர்ப்போம் வாருங்கள்
ஈஸ்வரன் சார்

தியாகராஜன் அவர்களின் தொலைபேசி எண் இருந்தாலும் தாருங்கள் நான் அழைத்துப்
பேசுகிறேன்

நன்றி
ராஜன்

kabheesh S

unread,
Jul 14, 2010, 1:14:16 AM7/14/10
to letspla...@googlegroups.com
Rajan,
       Swami Omkar is planting trees for free of cost thru his trust and the trust maintains.They plant trees which r good for environment and nilathadi neerai urinchata marangal. like raththa sandhanam, I'll forward those mail which were discussed in another group. Could you please give me your contact number. I'm coming to india tomorrow. I too have plan like you which i want to implement this time.
 
Sorry for thanglish and english (Tamil font problem :-(()
 
Kind Regards
Kabheesh

2010/7/13 Rajan <raja...@gmail.com>

Rajan

unread,
Jul 14, 2010, 1:58:50 AM7/14/10
to மரம் வளர்ப்போம் வாருங்கள்
Dear Kabheesh

Please send the details. As i said in my first post i am not in India.
I live in USA and i am doing this by remote operation only.
Had i been in India i would have personally gone to the various
organization would have planted trees long back. I already wasted
5 years since i bought this land. Now i am aggressively trying to
plant the saplings at the earliest without wasting any further time

Thanks
Rajan

On Jul 13, 10:14 pm, kabheesh S <kabhe...@googlemail.com> wrote:
> Rajan,
>        Swami Omkar is planting trees for free of cost thru his trust and the
> trust maintains.They plant trees which r good for environment and nilathadi
> neerai urinchata marangal. like raththa sandhanam, I'll forward those mail
> which were discussed in another group. Could you please give me your contact
> number. I'm coming to india tomorrow. I too have plan like you which i want
> to implement this time.
>
> Sorry for thanglish and english (Tamil font problem :-(()
>
> Kind Regards
> Kabheesh
>

> 2010/7/13 Rajan <rajans...@gmail.com>

> > letsplanttree...@googlegroups.com<letsplanttrees%2Bunsu...@googlegroups.com>

kabheesh S

unread,
Jul 14, 2010, 2:10:58 AM7/14/10
to letspla...@googlegroups.com
http://vediceye.blogspot.com/2010/05/blog-post_08.html

ராஜன் இந்த லிங்க்ல விபரம் இருக்கு. மெயில்ல நடந்த டிஸ்கஷனை தேடி அனுப்பறேன். நீங்க இவங்க கிட்ட நிலம் இருக்கற இடம் சொன்னா, மரம் நடறதிலருந்து பராமரிப்பு முழுவதும் பாத்துப்பாங்க. உங்க முதல் த்ரெட்ட ரொம்ப அவசரமா வாசிச்சிட்டேன் அதான் கவனிக்கல நீங்க வெளி நாடுன்னா. ஸாரி.  ஊருக்கு போக பேக் பண்ணிட்டு இருக்கும்போது அவசரமா மெயில மேய்ஞ்சிட்டுருந்தேன். மரம் பத்தினதுனால உடனே ரிப்ளை பண்ணேன். நானும் இந்த ட்ரஸ்ட்ல தான் நிலத்தை நட குடுக்க போறேன் ஊருக்கு போக்கும் போது.
எதாவது கூடுதல் தகவல் வேணும்னா கேளுங்க

2010/7/14 Rajan <raja...@gmail.com>

kabheesh S

unread,
Jul 14, 2010, 2:11:39 AM7/14/10
to letspla...@googlegroups.com
அய்யோ நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக். bear with me :-(

2010/7/14 kabheesh S <kabh...@googlemail.com>

A Eswaran

unread,
Jul 14, 2010, 2:40:15 AM7/14/10
to letspla...@googlegroups.com
 ராஜன், மதுரை தியாகராஜன் போன்:9488054683/மெயில்:vignan...@gmail.com

2010/7/14 kabheesh S <kabh...@googlemail.com>

Jeevaa KS

unread,
Jul 14, 2010, 3:00:36 AM7/14/10
to letspla...@googlegroups.com
நீரை வீணாக்காமல் சொட்டு நீர் பாசனத்திற்கான குழாய்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளேன்.

அருமையான யோசனை... முதலில் வாழ்த்துகள்..பம்புக்கு அருகில் ஒரு தொட்டி கட்டி அதிலிருந்து பைப்பில் தண்ணீரை கொண்டு செல்லவும். அப்போது தான் உரமிடுவதும் சுலபமாகும்.
 
1. செவ்வக வடிவமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் எத்தனை மரங்களை நட
இயலும்? நிலத்தை எப்படிப் பிரித்துத் திட்டமிடுவது?

இது மரங்களைப் பொறுத்து மாறுபடும். மரங்களுக்கு இடையில் ஊடுபயிர்களும் செய்யலாம்.
 
2. என்ன வகையான மரங்களை நடலாம். அந்த மண்ணிற்கு ஏற்ற மரங்களை எவ்வாறு தீர்மானிப்பது? உதவிக்கு யாரை அல்லது எந்த அலுவலகங்களை நாட வேண்டும்?
மரம் நடும் இயக்கங்கள் (அதற்காகும் செலவுகளை ஏற்றுக் கொண்டால்)
நிலத்திற்கு சென்று சோதித்து உரிய மரங்களை தேர்வு செய்ய உதவுவார்களா ?

அரசு வேளாண் அலுவலகங்கள் சுமார் 10 கி.மீ. ஒன்று இருக்கிறது. உதவி வேளாண் அலுவலர் அங்கே இருப்பார். சாலையோரங்களில் “பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் இருக்க யூரியா 20-20-20 இடுங்கள்” என பலகை இருந்தால் அங்கிருந்து 2 அல்லது 3 கி.மீக்குள் அவர் அலுவலகம் இருக்கும்.
 
3. நான் நன்கு அடர்த்தியாக செழித்து வளரும் மரங்களுடன், பழ மரங்களையும்
சில தென்னை மரங்களையும் நட உத்தேசித்துள்ளேன். அப்படி பல வகைப் பட்ட
மரங்களை ஒரு ஏக்கர் நிலத்திற்குள்ளாகவே வளர்ப்பது சாத்தியமா?

இதுவும் அந்த மண் சார்ந்தது. சில மரங்கள் மற்ற மரங்களை வளர விடாது.
 
4 இந்த நிலத்தில் வேறு பாசனம் ஏதும் சமீபகாலத்தில் (கடந்த 50
வருடங்களில்) நடந்திருக்கவில்லை ஆதலால் புதர்கள் வளர்ந்த வெற்று இடமாகவே
உள்ளது. ஆனால் நிலத்தடி நீர் இருப்பதினாலும், நிலத்தடி குழாய் போடப்
பட்டிருப்பதினாலும் ஓரளவுக்கு நீர் வசதி உள்ளது. அதை எப்படி குறைந்த
அளவில் பயன் படுத்தி மரங்களை வளர்ப்பது?

தாங்களே சொன்னது போல சொட்டுநீர் பாசனம் மிக அருமையான வழி.. அடிக்கடி உழவு செய்தலும் மிகச் சிறந்த வகையில் மண்ணைப் பாதுகாக்க உதவும்.
 
5. வீடு கட்ட உத்தேசித்திருக்கும் சிறு பகுதியில் மட்டும் பின்னாளில்,
ஒரு பத்து வருடம் கழித்து வீடு கட்டும் பொழுது வெட்டி விட ஏதுவாக எந்த
வகையான தற்காலிக மரங்களை நடலாம்?

பத்து வருடங்களில் வெட்ட வேண்டுமெனில் தேக்கு மரங்கள் நடலாம். அது வீட்டு ஜன்னல், கதவுகளுக்கும் உபயோகமாகும். ஆனால் தேக்கு மரங்களுக்கான பராமரிப்பு மிக முக்கியம்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


Rajan

unread,
Jul 18, 2010, 3:38:29 AM7/18/10
to மரம் வளர்ப்போம் வாருங்கள்
கபீஷ்

நன்றி. அவர்களையும் தொடர்பு கொள்கிறேன்

அன்புடன்
ராஜன்

On Jul 13, 11:10 pm, kabheesh S <kabhe...@googlemail.com> wrote:
> http://vediceye.blogspot.com/2010/05/blog-post_08.html


>
> <http://vediceye.blogspot.com/2010/05/blog-post_08.html>ராஜன் இந்த லிங்க்ல
> விபரம் இருக்கு. மெயில்ல நடந்த டிஸ்கஷனை தேடி அனுப்பறேன். நீங்க இவங்க கிட்ட
> நிலம் இருக்கற இடம் சொன்னா, மரம் நடறதிலருந்து பராமரிப்பு முழுவதும்
> பாத்துப்பாங்க. உங்க முதல் த்ரெட்ட ரொம்ப அவசரமா வாசிச்சிட்டேன் அதான் கவனிக்கல
> நீங்க வெளி நாடுன்னா. ஸாரி.  ஊருக்கு போக பேக் பண்ணிட்டு இருக்கும்போது அவசரமா
> மெயில மேய்ஞ்சிட்டுருந்தேன். மரம் பத்தினதுனால உடனே ரிப்ளை பண்ணேன். நானும்
> இந்த ட்ரஸ்ட்ல தான் நிலத்தை நட குடுக்க போறேன் ஊருக்கு போக்கும் போது.
> எதாவது கூடுதல் தகவல் வேணும்னா கேளுங்க
>

> 2010/7/14 Rajan <rajans...@gmail.com>

> ...
>
> read more »

Rajan

unread,
Jul 18, 2010, 3:38:57 AM7/18/10
to மரம் வளர்ப்போம் வாருங்கள்
நன்றி ஐயா, நான் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்கிறேன்

அன்புடன்
ராஜன்

On Jul 13, 11:40 pm, A Eswaran <sivakamieswa...@gmail.com> wrote:
>  ராஜன், மதுரை தியாகராஜன் போன்:9488054683/மெயில்:vignanasir...@gmail.com
>
> 2010/7/14 kabheesh S <kabhe...@googlemail.com>


>
> > அய்யோ நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக். bear with me :-(
>

> > 2010/7/14 kabheesh S <kabhe...@googlemail.com>
>
> >http://vediceye.blogspot.com/2010/05/blog-post_08.html


>
> >> <http://vediceye.blogspot.com/2010/05/blog-post_08.html>ராஜன் இந்த
> >> லிங்க்ல விபரம் இருக்கு. மெயில்ல நடந்த டிஸ்கஷனை தேடி அனுப்பறேன். நீங்க இவங்க
> >> கிட்ட நிலம் இருக்கற இடம் சொன்னா, மரம் நடறதிலருந்து பராமரிப்பு முழுவதும்
> >> பாத்துப்பாங்க. உங்க முதல் த்ரெட்ட ரொம்ப அவசரமா வாசிச்சிட்டேன் அதான் கவனிக்கல
> >> நீங்க வெளி நாடுன்னா. ஸாரி.  ஊருக்கு போக பேக் பண்ணிட்டு இருக்கும்போது அவசரமா
> >> மெயில மேய்ஞ்சிட்டுருந்தேன். மரம் பத்தினதுனால உடனே ரிப்ளை பண்ணேன். நானும்
> >> இந்த ட்ரஸ்ட்ல தான் நிலத்தை நட குடுக்க போறேன் ஊருக்கு போக்கும் போது.
> >> எதாவது கூடுதல் தகவல் வேணும்னா கேளுங்க
>

> >> 2010/7/14 Rajan <rajans...@gmail.com>

> ...
>
> read more »

Rajan

unread,
Jul 18, 2010, 3:39:58 AM7/18/10
to மரம் வளர்ப்போம் வாருங்கள்
ஜீவா

தகவல்களுக்கு நன்றி. உங்கள் யோசனைகளைக் கருத்தில் கொள்கிறேன்.
முன்னேற்றம் குறித்தும் எழுதுகிறேன்

அன்புடன்
ராஜன்

> *ஜீவ்ஸ்*http://www.flickr.com/iyappanhttp://photography-in-tamil.blogspot.comhttp://kaladi.blogspot.com

kk2...@gmail.com

unread,
Jun 12, 2013, 2:49:18 AM6/12/13
to letspla...@googlegroups.com, raja...@gmail.com


arjunan

97903 95796 


90 naaali marathai valarthu tharuvaar.ivarai thodarpo kollavum.

pari.bom...@gmail.com

unread,
Oct 15, 2013, 11:42:38 PM10/15/13
to letspla...@googlegroups.com, raja...@gmail.com
nanbare ungalukku vazlthukal.neengal kumil marathai valarapatu payan tharum

yasi...@gmail.com

unread,
May 22, 2014, 7:40:45 PM5/22/14
to letspla...@googlegroups.com, raja...@gmail.com

suba...@gmail.com

unread,
Jun 1, 2015, 7:47:14 AM6/1/15
to letspla...@googlegroups.com, raja...@gmail.com
திரு.ராஜன் அவர்களுக்கு
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
என்னுடைய எண்ணமும் உங்களுடைய எண்ணங்களும் மிக நெருகக்கதில் இருக்கிறது.நானும் மதுரையை சேர்த்தவன்
மேலும் நான் தற்சமயம் இர்ருபது துபாயில் .
உங்களுடைய மரம் வளர்ப்பு அனுபவங்களை என்னிடம் பகிர்டுகொளும்படி கேட்டு கொள்கிறேன்.
என்னிடம் ஒரு யக்கர் நிலம் உள்ளது. அதை உங்களை போல் மரம் வளர்க ஆசை படுகிறேன் .
ஏன் மொபைல் நம்பர் 00971 55 3301849 அல்லது உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள்.நான் தொடர்பு கொள்கிறான்
தோழமையுடன்
Venkatesan

karsu...@gmail.com

unread,
Aug 19, 2017, 3:54:17 AM8/19/17
to மரம் வளர்ப்போம் வாருங்கள்
Dear Sir,
I am living in cuddalore.First i want to buy a land so I have to earn you are in which country? I completed B.E ECE. Can you help me for Job?


Thanks Regards

Venkat

Babu Gmail

unread,
Aug 21, 2017, 12:14:10 PM8/21/17
to letspla...@googlegroups.com
I am in saudiarabia you can apply to ggheewala.com

--

--
**************************************************************************************
You received this message because you are subscribed to the Google
Groups "மரம் வளர்ப்போம் வாருங்கள்" group.
To post to this group, send email to letsplanttrees@googlegroups.com

To unsubscribe from this group, send email to

For more options, visit this group at

http://groups.google.com/group/letsplanttrees?hl=ta

Visit Also : http://letsplanttrees.blogspot.com

மரம் வளர்ப்போம் - மழைவளம் பெறுவோம் - புவியைக் காப்போம்

---

You received this message because you are subscribed to the Google Groups "மரம் வளர்ப்போம் வாருங்கள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to letsplanttrees+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages