[தமிழ் முரசு - கொட்டும் முரசு] இங்கி., தொடரிலிருந்து பாக்., அணி விலகல்?

1 view
Skip to first unread message

premkumar

unread,
Sep 5, 2010, 3:24:09 AM9/5/10
to kottam...@googlegroups.com
லண்டன் : இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூதாட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மீது தொடர்ந்து வெளியாகி வரும் அவதூறு தகவலே இந்த முடிவிற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதர் வாரியத் தலைவர் இஜாஸ் பட்டை சந்தித்த பிறகே இறுதி முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி 4 டெஸ்ட் போட்டிகள், 2 டுவென்டி-20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. தற்போது தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகினால் இங்கிலாந்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது

--
Posted By premkumar to தமிழ் முரசு - கொட்டும் முரசு at 9/05/2010 12:23:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages