அன்பான காயல் சகோதர சகோதரிகளே !
அஸ்ஸலாமு அழைக்கும். இப்புனித ரமழான் மாதத்தின் கடைசி பத்தில் நாம் இருக்கின்றோம். இன்னும் சில தினங்களில் வழமை போல் இவ்வருடமும் நோன்பை (ரமழானை) பூர்த்தி செய்ய போகின்றோம். இது அல்லாஹ் நமக்கு தந்த மிகப்பெரிய பாக்கியம். அதற்க்காக வல்லோனுக்கு நன்றி (சுக்கூர்) செய்வோம். எவ்வித குறையுமின்றி என்றென்றும் நிறைவேற்ற இப்பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் தந்தருள்வானாக !!
இந்த நல்ல தருணத்தில் முறையான பொருளுதவி கிட்டாமல் பிணியின் பிடியில் சிக்கி... இவ்வருட நோன்பை நோற்க / பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் நம் காயல் சொந்தங்களுக்காக இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம் !!
போதிய பொருளாதார உதவி கிடைக்காமல் அல்லல்படும் ஏழை எளிய மக்களையும் அதேநேரத்தில் பிறரிடம் கையேந்த கூச்சப்பட்டு பிணியுடன் தினந்தோறும் அல்லல்படும் நடுத்தர நம் காயல் சொந்தங்களின் நிலைமையை எண்ணி அவர்களுக்காக துஆ செய்வதோடு நில்லாமல்... ரப்புல் ஆலமீனின் திருப்பொருத்தத்தை மட்டுமே நாடி அவர்களுக்காக பாடுபடும் 'மைக்ரோ காயலுடன்' இணைந்து எளியவர் துயர் துடைத்து அதற்கான (இம்மை & மறுமைக்கான) கூலியை பங்குபோட முன் வாருங்கள் என வாஞ்சனையுடன் அழைக்கின்றோம் !
உங்களுடைய ஜக்காத் மற்றும் சதக்காவை, ஆயிரம் மாதங்களை விட சிறந்த 'லைலத்துல் கத்ரை' உள்ளடக்கிய ரமழானின் கடைசி பத்தில் "மைக்ரோ காயலுக்கு" வாரி வழங்குங்கள். வல்ல ரஹ்மான் அதற்க்கான கூலியை உங்கள் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வாரி வழங்குவானாக !!
ICICIAccount Number : 615305021044
Acct Name: RIDA FOUNDATION
Bank: ICICI Kayal Patnam Branch
அலுவலக விலாசம்:
சகோ. மீரா சாஹிப்
(மைக்ரோ காயல் அலுவலக மேலாளர்)
B/2 முதல் மாடி, #3 கஸ்டம்ஸ் ரோடு (கடைப்பள்ளி எதிரில்)
காயல்பட்டணம் – 628204.
வஸ்ஸலாம்.
சாளை முஹம்மத் முஹிய்யதீன்,