[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] காசாங்காடு குடிமகனின் அமைதி வாழ்க்கை குலைக்க காவல்துறையின் பங்களிப்பு !

21 views
Skip to first unread message

காசாங்காடு இணைய குழு

unread,
Mar 3, 2015, 2:36:05 PM3/3/15
to kasang...@googlegroups.com

கிராமத்தில் நடக்கும் பிரச்சனைகள் அப்படியே எழுதப்பட்டுள்ளது.
இது தனி நபர் பிரச்சனை அல்ல. இது போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதால் இது பொது பிரச்சனையாக எடுத்து பேசப்பட்டுள்ளது. இந்த செய்திகள் நியாயம் கேட்டோ அல்லது முடிவு தெரிவதற்கோ அல்ல.

இரண்டு பேருக்கு பிரச்சனை என்றால் எதற்கு நீதியரசர்கள் என்ற பெயரில் (அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல, பிரச்னை தீர்த்து வைக்கிறோம் என்று தனி நபரின் உரிமையில் ஈடுபடுவது) அதில் ஈடுபட வேண்டும்?

இது போன்று சம்பவங்கள் இனிமேல் காசாங்காடு கிராமத்தின் அகராதியிலே இடம் பெற கூடாது என்பதே விருப்பம்.


இந்த செய்தியின் மேலும் என்ன பிரச்சனைகள் நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.



இதில் வந்த காவல் துறை அதிகாரி உண்மையில் காவல் துறை மூலம் வந்தாரா அல்லது பணம் கேட்பவரின் ஏற்பாடா ???

சில நாட்கள் கழித்து அடையாளம்  இல்லாத நபர் தான் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும் முதியர்வர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதியர்வர்கள் தாங்கள் யாருக்கும் எந்த பணமும் கொடுக்க வேண்டியத்தில்லை என்று கூறினர்.

அதற்க்கு அந்த நபர் இரண்டு நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் வந்து இப்போது கூறிய பதிலை சொல்லும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வால் எவ்வித தவறும் செய்யமால் காவல் துறை வீட்டிற்கு வந்தது, வயதான முதியர்களின் அமைதியை சீர்குலைத்தது.

என்ன செய்வதென்று புரியாத இந்த முதியவர்கள் பணம் கேட்க வந்தவர்களிடம் சென்று ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறினர்.

அவர்களோ நம் கிராமத்தில் பேசி முடித்து கொள்வோம், இந்த பிரச்சனை பற்றி காவல் துறையிடம்  நாங்கள் தகவல் தெரிவித்து விடுவோம் என்று நம்பிக்கை அளித்து திருப்பி அனுப்பினர்.

நமக்கு ஏற்படும் சந்தேகங்கள்:

யார் வேண்டுமென்றாலும் எவர் மீதும் காவல் துறையில் எந்த வித சாட்சியும் இல்லாமல் பணம் கேட்டு புகார் செய்யலாமா?
நமக்கு தெரிந்த தகவல் வரை, இந்த மாதிரியான புகார் காவல் துறையில் பதிவு செய்ய இயலாது. 
அப்படியே பதிவு செய்தாலும், காவல் துறைக்கு விசாரிக்க உரிமை உண்டா?
நீதி மன்றத்தில் மட்டுமே இச்சம்பந்தமாக விசாரிக்க முடியுமே தவிர காவல் துறைக்கு அல்ல.

எப்படி நியாயம் வழங்கப்பட்டது என்பதை விரிவாக எழுதுகிறோம்.



--
3/04/2015 01:06:00 முற்பகல் அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு இணைய குழு ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages