[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைகள்

3 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Mar 25, 2011, 4:46:24 PM3/25/11
to kasang...@googlegroups.com

எவர் பதவிக்கு வந்தாலும் எங்களின் வேண்டுகோள்:

கொடுக்கும் இலவச பொருட்களை அரசாங்கமே நேரடியாக அளிக்க வேண்டாம். ஏனெனில் இவை தர மட்டத்தில் கீழ் தரமாகவே உள்ளது. அரசாங்கம் அளிக்கும் அரிசியும் சரி மற்ற உணவு பொருட்களும் தரத்தில் குறைவாகவே (கடைசி மட்ட தரம்) உள்ளது. எனவே பொருட்களுக்கான பற்றுரிமைச் சீட்டு (Coupon) கொடுக்கவும். அருகாமையில் உள்ள கடைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்கள்  விருப்பபடி அந்த பொருட்களை வாங்கி கொள்வார்கள். இதன் மூலம் ஒவ்வொரு கடைகளில் விற்பனை அதிகரிக்கும், அரசாங்கம் கொடுக்கும் சலுகை திருப்திகரமாக குடும்பங்களை போய் சேரும்.

இவ்வாறே வெளிநாடுகளில் முறையாக குடிமகன்களின் அரசாங்க சலுகைகள் கையாளபடுகின்றது.


தற்போதைய முறைகளில் செய்வது அரசாங்க முறைகேடுகள் அதிகம்.  (இதற்காக தான் இந்த சலுகைகள் வழங்கபடுகின்றதா என்பது தெரியவில்லை)  இந்திய அரசாங்கத்தின் பணம் வீண் செய்யபடுவதே அதிகம். முறைகேடுகள் செய்யபடுவது மட்டுமன்றி அதை விசாரிப்பதற்கு விசாரணை குழு போன்று மேலும் மேலும் பணம் வீணாகின்றது. வருடங்கள் பலம் ஆகியும் பல முறைகேடுகளுக்கு முடிவே காண்பதில்லை.

திராவிட முன்னேற்ற கழகம்:
 1. இலவச கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும்.
 2. அரசுக் கல்லூரிகளில் படிக்கும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கும் இலவச மடி கணினி வழங்கப்படும்.
 3. 58 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்துவோம்.
 4. பரம ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசம்.
 5. மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.4 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். அதில் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
 6. முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மாத உதவித் தொகை ரூ.750.
 7. திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும். 
 8. மகப்பேறு விடுப்பு 3 மாதங்கள் என்பது 4 மாதங்களாக உயர்த்தப்படும். கர்ப்பிணிகளுக்கான நிதி உதவி ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
 9. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி மானியம் ரூ.75 ஆயிரம் என்பது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.
 10. நடக்க முடியாத முதியோருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
 11. பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 3 சீருடைகள் வழங்கப்படும்.
 12. ஊக வணிகத்தைத் தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்:

 1. ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர், ஒரு ஃபேன் ஆகிய மூன்று பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.
 2. பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
 3. 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், அரசுப் பேருந்துகளில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
 4. குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
 5. சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி. அதில் 25 சதவீதம் மானியம்.
 6. முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு மாத உதவித் தொகை ரூ.ஆயிரம்.
 7. திருமண உதவித் தொகையாக வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தாலி செய்ய இலவசம். 
 8. இளநிலை பட்டம் அல்லது  பட்டயம் பெற்ற பெண்களுக்குத் திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தாலி செய்ய இலவசம்.
 9. குழந்தையைப் பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறை, ரூ12 ஆயிரம் நிதி உதவி.
 10. அனைவருக்கும் குறைந்த விலையில், சூரிய வெளிச்சம், காற்றோட்டம் உள்ள சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
 11. கிராமம்தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும் 1500  கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலைதூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
 12. பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 4 சீருடைகளும், காலணிகளும் வழங்கப்படும்.
 13. ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
 14. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாயக் கருவிகளை, தி.மு.க. அரசு கொடுக்க மறுத்ததால் அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாயக் கருவிகளை வழங்குவோம்.
 15. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
 16. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.
 17.  திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
 18.  அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். மின்சாரத் திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சாரப் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

சுயேட்சையில் போட்டியிடுபவர்கள் தாங்களின் தேர்தல் அறிக்கை இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.
--
3/26/2011 02:16:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages