[காசாங்காடு கிராமம்: 636] [காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] முனீஸ்வரர் ஆலயத்திருப்பணி

12 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
May 17, 2010, 11:38:37 PM5/17/10
to kasang...@googlegroups.com


நம் ஊரின் முனீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக உரில் ஒரு குழு அமைக்கப்பட்டு முதற்கட்ட சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

முனீஸ்வரருக்கு சிலையெடுப்பவர்கள், சிலையெடுத்து அதனை ஊர்வலமாகக் கொண்டுவந்து கோவில் உள்ள இடத்தில் நிறுவுவது என்பது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்ச்சியாகும்.

இதனால் போதிய இடமின்மை மற்றும் பராமரிப்பு செய்ய இயலாமை போன்ற நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றன. எனவே முனீஸ்வரர் உத்தரவு பெற்று புதிய சிமெண்ட் கலவையால் ஆன மூலவர் சிலை அமைக்க கிராமத்தினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பழைய முனீஸ்வரர் சிலைகள் கோவில் வளாகத்தின் இருபுறங்களிலும் (தெற்கு மற்றும் வடக்கு) மாற்றி வைக்கும் பணிகள் கடந்த மூன்று தினங்களாக நடந்துவருகிறது.

மூலவர் சிறப்பு:

புதிதாக நிறுவ இருக்கும் முனீஸ்வரரின் மூலவர் சிலை நம் சோழமண்டலத்திலேயே மிக உயரமானதாகவும் (சுமார் 21 அடி) கம்பீரம் மிக்கதாகவும் அமைக்கவுள்ளதாக இதனை நிறுவும் ஸ்தபதி கூறியுள்ளார்.

திருப்பணி நிறைவு:

கிராமத்தினரின் மிகுந்த ஒத்துழைப்போடு இத்திருப்பணி இவ்வருடம்(2010) ஆடிமாததிற்குள் நிறைவு செய்யப்பட்டு ஆடிமாதத்தில் கண்திறப்பு மற்றும் சிறப்பு பூஜை செய்யப்படும் என திருப்பணியை மேற்கொண்டுள்ள ஐயா.விஸ்வலிங்கம் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்து வருகிறார்கள்.



தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்

--
5/18/2010 09:08:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

கிராம இணைய குழு

unread,
May 18, 2010, 12:20:12 AM5/18/10
to kasang...@googlegroups.com
பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் கருத்து:

இதற்கு முன்பு மாரியம்மன் கோவில் கட்டுகிறோம் என்று பல வருடங்கள் காசாங்காடு கிராமம் திருவிழா காணாமல் இருந்தது.
முனியன் கோவில் கட்டுகிறோம் என்று கூறிவிட்டு, எங்கள் ஊரிலும் முனியன் கோவில் இருந்தது என்று வரலாற்றில் எழுதாமல் இருந்தால் சால சிறந்தது.
பணிகள் செவ்வனே வெற்றிபெற வாழ்த்துக்கள்.

2010/5/17 ?????????? ????????? <ne...@kasangadu.com>

sukumaran(kasangadu)

unread,
May 22, 2010, 6:39:25 AM5/22/10
to காசாங்காடு கிராமம்

நண்பர்களுக்கு வணக்கம்,

அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி சிறந்த முறையில் நடைபெற்று
வருகிறது. சிலை அமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சிலை
அமைக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

மேலும் முழுபணிகளும் நிறைவு பெற்று இவ்வாண்டு(2010) ஆடி மாதத்தில்
கண்திறப்பும் சிறப்புப் பூஜையும் நடைபெறுவது உறுதி என்று சிலைஅமைப்பு
பணிகளில் தீவிரமாக உள்ள திரு. கோவிந்தராசு (பள்ளிகொடத்தாம்வீடு)
தெரிவித்துள்ளார்.

நன்றி.

என்றும் அன்புடன்...
சுகுமாரன்.அ

Reply all
Reply to author
Forward
0 new messages