காங்கிரஸின் தமிழ் பற்று
இனிய தமிழ் நெஞ்சங்களுக்கும், பேராசிரியர்களுக்கு, அருமை குழு உறுப்பினர்களுக்கும் எனது இனிய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத்தமிழ் அன்பர்களிடமிருந்து வரும் தொலை பேசி அழைப்புக்களும். இணைய மடல்களும், தென்தமிழகத்தின் நெல்லையில் வரைபடத்தில் கூட புள்ளியாக தெரியும் ஒரு கிராமத்திலிருந்து வந்த ஒருவனின் எழுத்துக்களுக்கு, தாங்கள் தரும் ஆதறவிற்க்கு !
உலகத்தமிழ் உணர்வாளர்களான அன்புசார் பெரியோர்களுக்கும் இனிய நன்பர் குழுமங்களுக்கும் எனது நன்றி என்றென்றும்.
இன்று நான் எழுத வரும் கருத்து தமிழும் தமிழினமும்.
சமீபத்திய ஒரு சில நிகழ்வுகள் தமிழினத்தின் மீது அக்கரை கொண்டுள்ளவரையும்; ஒட்டுண்ணிகளையும் தமிழினத்திற்க்கு அடையாளம் காட்டி விட்டது. ஆரம்பம் முதலே தமிழினத்தின் எழுச்சியை ஒருசிலரின் பார்வைக்கு உறுத்தும் துறும்பாக அமைய சில
சந்தர்ப்ப சூழ்நிலைகாரனமாக ஒரு துயர நிகழ்விற்க்கு காரணமாகிவிட்டது.
ஆனால் காலங்கள் கடந்தும் தமிழினம் இன்னும் பல துயரங்களை அனுபவித்துத்து வருகிறது.
தமிழினம் என்றது எங்கோ ஒரு இனம் என்பதல்ல நமது இரத்தம் . அரசியலை தவிர்த்து நாம் இன்று தமிழினத்தலைவர் என்று முன்வைத்தால் அது கலைஞர் கருனாநீதி என்னும் மூத்த தமிழரிஞர் பெயர் ஒன்றையே எடுத்துறைக்கும்.
அப்படி இன்று தமிழன்னை தமிழுலகத்திற்க்கு அடையாளம் காட்டிய ஒரு தமிழார்வலர் தென் புலத்தமிழனின் துயர்கண்டுதுடைக்க எத்தனிக்கும் ஒரு அமைதிப்புறாவை அவர் பணிதொடர்ந்தால் தன் எண்ணம் ஈடேராது என்ற நோக்கில் எதிரிகள் சாய்த்துவிட
ஒரு தமினினத்தின் அக்கரை கொண்ட ஒரு மூத்த தலைவர் அமைதி காத்தால் அது தமிழினத்திற்க்கே ஒரு மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடும். அதனால் தன் இனத்தின் துயர்கண்டு எழுந்த ஒரு வெளிப்பாடுதான் இறங்கல் கவிதை அந்த கவிதையை மட்டும் கையில் எடுத்துகொண்டு ,
இன்றும் இல்லாத காரணங்களுக்காக ரூபாய் கொடுத்து கூட்டம் சேர்த்து போராட்டம் நடத்தும் ஒரு தலைவியும் அவர் தவறுசெய்தாலும் அதற்கும் இராமசந்திர கதைசூட்டி பாராட்டு கட்டுரை எழுதும் ஒரு பத்திரிக்கை அது எழுதுவது தமிழ் அதை படிப்பது தமிழன் என்ற ஒரு எண்ணம் கூட இல்லாமல் தான் மனதிற்க்கு வந்ததை எழுதிதள்ளும் கூட்டம் நாம் இணம் கான நல்ல தொரு உதாரணத்தை காலம் தந்துள்ளது
நேற்றைய ஒரு நிகழ்வு மத்திய அமைச்சர் தமிழரின் ஓட்டுக்களை வாங்கி மத்தியில் கொஞ்சி கூத்தாடி அமைச்சர் பதவியை வாங்கியவர். வட தமிழகத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவரை மறைமுகமாக தாக்கி பேச மேலும் அந்த பொதுக்கூட்டதின் ஒரு மூலையில் இருந்த இறங்கல் பாதுகைகளை கிழித்தெரியுமாறு உத்தரவிட 47 காங்கிரஸ் உறுப்பினர் வாழும் ஒரு கிராமத்தில் 32 கோஷ்டிகள் கொண்ட கட்சி அதன் தொன்டர்கள் எனப்படும் ஒரு சிலர் அந்த பாதுகைகளை அகற்ற
இதுநாள் வரை பொருமையுடன் இவர்களின் பேச்சுக்களை கேட்டு வந்த தமிழர்கள் முதன் முதலில் இந்த ஒட்டுண்ணிகளுக்கு எதிராக வெகுண்டேழுந்தனர். விளைவு கதர்வேட்டி ரோட்டில் விழுந்ததைகூட எடுக்க தைரியமில்லாமல் அரை அம்மணத்துடன் ஒட்டமெடுத்தனர்.
சன் டீவீ 24 / 11 /2007 எட்டரை மணி செய்தி
கவிதை வந்த நாளேடுகளை பார்த்தும் இவர்களுக்கு அதன் தீவிரம் தெரியவில்லையாம். அம்மையாரின் பேட்டியை கண்டதும் இவர்களுக்கு தேசபற்று பொத்துக்கொண்டு வந்ததாம்.
தமிழகத்தில் தீர்மானம் நிரைவேற்ற திராணீயில்லாமல் டெல்லி சென்று புரியாத வடமாநிலத்து டொப்பிவாலாக்களுக்கு தன் இனத்தை பற்றியே வத்தி வைக்கும் வேலைகளில் ஈடு பட்டுள்ளனர்.
அம்மையார் கூட இந்த விடயத்தில் கைவைத்தால் தேன் கூட்டை கலைத்த கதை ஆகிவிடும் என்ற ஜாக்கிரதையில் கலைஞரின் கவிதை எதிர்ப்பை பரணியில் தூக்கிபோட்டு விட 10 பேரில் பதினோரு கோஸ்டி கொண்ட காங்கிரசோ எரிமலையில் தண்ணீர் ஊற்றி அனைக்கும் செயலில் ஈடுபட்டுகொண்ண்டிருக்கிரது.எரிமலை வெடிக்கும் முன்னரே ஊற்றிய நீர் நீராவியாக மாறி ஊற்றியவர்களின் முகங்களை வேகவைத்துவிடும் .முகவரி இழக்க வைத்துவிடும்.
ஆஸ்டிரேலிய பாதிரியாரையும் அவரது குழந்தைகளையும் உயிருடன் எரித்து கொன்ற தாராசிங் தற்ப்பொழுது சிறையில் இருக்கும் அவர் தன் மூன்று குழந்தைகளுக்கும்,
அல்பீர், கஞ்சனா, குஸிராம் என்ற அந்த குழந்தைகளின் கல்விசெலவை யார் ஏற்றுக்கொண்டார் தெரியுமா நெருப்பின் வாயில் தன் குழந்தை கனவனையும் தந்துவிட்டு தனிமரமாய் நிற்க்கும் அந்த ஆஸ்திரேலிய மாதரசி ,
அதில் அனைத்து குழந்தைகளையும் ஆஸ்திரெலியா எடுத்து செல்ல விழைந்த போது அரசியலமைப்பு சட்டப்படி கடுமையான குற்றம் செய்த குற்றவாளிகளின் குழந்தைகளை அவர்கள் மேசராகும் வரை அயல் நாட்டிற்க்கு அனுப்புவதற்க்கு அனுமதியில்லை, இருபினும் அந்த அம்மா கஞ்சனா என்ற பெண் குழந்தையாவது நான் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என சட்ட ரீதியாக போராடிவருகிறார்கள்.
மேலும் நளினி அவர்களை சோனியாகாந்தி அவர்கள் மன்னித்துவிட்டார்.
ஆனாலும் தழிழகத்தில் தமிழருக்கு துண்டு செய்கிரேன் என்று சொல்லிவரும் கூட்டம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஊழையிட்டுக்கொண்டுள்ளது.
அஃறினை காக்கை கூட மின் கம்பத்தில் தொங்கிகொண்டிருக்கும் தனது இனத்தை கண்டு அதை காப்பாற்றி விட முடியாதா என்ற நப்பாசையில் மேலத்தெரு கீழ்த்தேரு நடுத்தெரு என்றில்லாது குளற்றாங்கரையில் கருவாட்டை ஏமாற்றி தூக்கிக்கொண்டு போகும் காக்கைகளைகூட ஒன்று திரட்டி காப்பாற்ற எத்தனிக்கும் . அந்த காக்கை உண்டான இன உணர்வு கூடாவா இவர்களிடமில்லை .
சில வருடங்களுக்கு முன்பு பாரீஸில் சீக்கிய மாணவனுக்கு தலைப்பாகை அனிந்து வர தடை விதித்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து புதுடில்லி பிரான்ஸ் அம்பசிடர் அலுவலகம் ,கன்சிலேட் பிரான்ஸ் மும்பை என அனைத்து பெரிய நகரங்களிலும் மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தியது சீக்கிய இனம்.
ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து தமிழனின் ஓட்டை பெற்று பதவி பெற்று துயர்படும் தமிழனுக்கு கெதிராக போராட்டம் நடத்துகிறார்கள். யாரை திருப்தி படுத்த.
மேலும் சிலர் தமிழ் என்று பெயர் வைத்துகொண்டு தமிழரின் துயங்களை பற்றி கருத்தெழுதும் போது, திஸ் ஈஸ் ஒன்லி பார் என்டர்டையிமென்ர் அன்ட் பன் சொ டொன்ட் சென்ட் திஸ் டைப் ஆப் மெயில் என்று பல காரணங்களை சொல்கிறார்கள். இவர்கள் தமிழன் என்ற இன உனர்வு உள்ளாதால் தான் தமிழ் சேர்த்து குழுமப் பெயர் வைத்தார்களா இல்லை, தமிழ் பெயர் கொண்டால் குழுமத்திற்க்கு கூட்டம் சேரும் என்ற நினைப்பிலா,
இன்று மட்டும் பாரதி இருந்திருந்தால் நிச்சயம் பாடியிருப்பான்
இனபற்றற்றமானுடன் மண்ணில்
இருந்தென்ன பயன்,
பக்குவபட்ட தமிழினத்திற்க்கு
பாரமென்பதை தவிர வேறன்ன,
களையெடுப்போம் இனப்பற்றற்ற
மானிடரை களைந்தெடுப்போம்
என்று பாடியிருப்பான்
--