Solladhadhum Unmai - Prakash Raj - in Anandha Vikatan

528 views
Skip to first unread message

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:16:17 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com
 
Part - 1
-----------
தர்மன் உருட்டிய தாயம்...

யூதாஸ் கொடுத்த முத்தம்...

புத்தர் பார்த்த மரணம்...

காந்தி கண்ட அரை நிர்வாணம்...

- இப்படி எல்லோரோட வாழ்க்கை-யும் ஏதேதோ ஒரு கணம் மொத்தமாக மாற்றும்; புரட்டிப் போடும்; பந்தாடும்தானே? அப்போ, கணங்களால் ஆனதுதான் வாழ்க்கை... கரெக்ட்?!

அடையாறு சிக்னலில் காரில் காத்துட்டி-ருந்தேன். ஏதேதோ வேலைகள், நினைவு-கள் மூளையை முழுசா ஆக்கிரமிச்சி-ருக்கு. அவ-சரத்-துல நிக்கிற சைக்கிள்காரன், 'போப்பா, லெஃப்ட்ல வழிவிடு'ன்னு கார்-காரனை சந்தோஷமாத் திட்டிட்டி-ருக்கான். எல்லோருக்கும் ஏதேதோ அவசரம், கமிட்-மென்ட்ஸ்! திடீர்னு கேக்குது அந்தச் சத்தம்...

'டக்கு டக்கா டகட டக்கா!'

ஆரவாரமா பறையடிச்-சுட்டு, அட்டகாசமா டான்ஸ் போட்டபடி இறுதி ஊர்வலம் ஒண்ணு சாலையைக் கடக்குது. மெயின் ரோடு, ஹெவி டிராஃபிக், போலீஸ், மனுஷங்கன்னு எந்தக் கூச்சமும் இல்லாம பூவை அள்ளி அள்ளி ஏரியா ஃபுல்லா விசிறி எறியு-றாங்க. 'டக்கு டக்கா டகட டக்கா'ன்னு மியூஸிக் பின்னுது. கார் சைடு டோர்ல என் கை தானா தாளம் போடுது. இறங்கி ஒரு டான்ஸ் போடலாம்னு தோணுது. பாடை யில் படுத்திருக்கிற வயசாளி என்னைப் பார்த்து, 'வாடா மாப்ளே, வா..! வந்து ஆடு-றியா? அப்பத்தானே உன் சாவுக்கு என் பையன் வந்து ஆடு-வான்'னு கூப்-பிடுற மாதிரி இருக்கு. அந்த செகண்ட்ல சிக்னல் விழ, கை கியருக்கு போய் கார் கிளம்பிடுச்சு. இப்ப-டித்-தான் இருக்கு வாழ்க்கை எனக்கு!

அது என்னன்னா, எனக்கு ஒவ்வொரு செகண்டும் வாழணும், அவ்ளோதான். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்'தான் நம்ம ஃபிலாஸபி! 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'னு சொல்வான் பாரதி... என்னைக் கேட்டால், 'இப்போதான் பிறந்தேன்!'

என்னை நான் குழந்தை-யாக்கிக்க முயற்சி பண்ணிட்டே இருப்பேன். பல கணங்கள் தோற்கலாம், சில கணங்கள் ஜெயிக்கலாம். அந்தச் சில கணங்கள் ஜெயிக்கிறதுக்காக, எத்தனை முறை வேண்டும்னாலும் தோற்கத் தயாராவே இருப்பேன் எப்போதும்!

'நீ யார்றா பிரகாஷ்?'னு கேட்டால், என்னோட பதில்... 'நான் ஒரு பயணி... டிராவலர்!'

டூரிஸ்ட்டுக்கும் டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டூரிஸ்ட்டா இருந்தா, எங்கே போறோம், எப்படிப் போறோம், எங்கே தங்குறோம், என்னென்ன பார்க்கப் போறோம்னு இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்கெனவே தீர்மானிச்சுட்டுப் போவான். ஆனால், பயணி அப்படி இல்லை. அவன் கையில் ப்ளான் இருக்காது, ஃபார்முலா இருக்காது, அவனுக்குப் பயணிக்கணும். ஒரு நாற்காலியில் உட்காரவெச்சு அசைய முடியாம கட்டிப் போட்டாலும் நம்ம மனசு எங்கேயாவது பயணிச்சுக்கிட்டே இருக்கும்ல... அப்படி ஒரு டிராவல்!

மூணு பஸ் ஸ்டாப் இருக்கு இப்போ எனக்கு! சென்னை-யில் கடல் கை தட்டிக் கூப்பிடுற ஒரு வீடு. மகாபலிபுரம் போற வழியில் தோட்டத்துக்கு நடுவில் ஒரு குடிசை, அப்புறம் ஹைதரா-பாத்தில் மொட்டை மாடியில் ஆகாசம் பார்த்தபடி ஒரு ஃப்ளாட். கடல் வீட்டில் அலையா இருப்பேன். தோட்டக் குடிசையில் பூவா சிரிப்-பேன். ஹைதராபாத் போனால், ஆகாசத்தில் அன்னிக்கு இன்னும் ஒரு நட்சத்திரம் எக்ஸ்ட்ரா முளைச்சிருக்கும்.

ஆனா, மாசத்தில் மூணு வாரமாச்சும் நான் இங்கே எங்கேயும் இருக்க மாட்டேன். ஏதோ ஓர் ஊரில், ஏதோ ஒரு வேலையா போயிட்டே இருப்பேன். நான் எங்கே இருக் கிறேனோ அது-தான் என் அப்போதைய அட்ரஸ். மனசுக்குள்ளே இருக்கு என் வீடு. ஊர் மாறினாலும் உலகத்துக்கு ஒரே ஆகாயம்-தானே!

''பிரகாஷ், ஏன்டா நீ இப்படி இருக்கே?''

''எப்படி இருக்கேன்?''

''சினிமாவுல பிரபலமா இருக்கும்-போது பைத்தியக்காரன் மாதிரி டி.வி. சீரியல்ல ஏன் நடிக்கிறே?''

''நடிக்கிற நேரத்துல, ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றியேன்னு திட்டு, அது நியாயம்! நான் ஒரு நடிகன்ப்பா. எனக்கு ஒரு கேரக்டர், கதை பிடிச் சிருந்தா தெரு நாடகத்-தில்கூட நடிப்-பேன்.''

''முதல்ல இந்த விதண்டாவாதம் பேசுறதை நிறுத்து. நடிச்சுச் சம்பாதிக்கிறதை நல்லபடியா சேர்த்துவெக்-காம நீயே சினிமா தயாரிக்கிற தெல்லாம் தேவையா?''
''அருவா, ஆபாசம்னு நான் நாடு போற்றும் வெள்ளி விழாப் படங்களை எடுத்தா, சமூகத்-தைக் கெடுக்கிறியேடான்னு கேளு. 'அழகிய தீயே', 'கண்ட நாள் முதல்', 'பொய்', 'மொழி' மாதிரி படங்கள் தயாரிக்காம, நான் நிறைய பணம் சேர்த்து, என் புள்ளைகளை வாட்ச்மேனா போடச் சொல்றியா?''

''வித்தியாசமா பேசறதா நினைப்பா? உனக்கு ஒரு நாள் வாழ்க்கைதான் எல்லாத்தையும் புரியவைக்கும் பாரு!''

''கரெக்ட்! நான் என் அனுபவங்கள் மூலமாதான் எதையும் புரிஞ்சுக்க விரும்புறேன். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாத்தையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்-தானே வாழ்க்கை!

என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கிறேன். விட்டுடுங்களேன். உங்க பயங்களை, உங்க ஆசைகளை, உங்க குழப்பங்களை என் மேல் திணிக்காதீங்க, ப்ளீஸ்! அடுத்தவங்க வாழ்க்கையை என்னால் வாழ முடியாது.''

- என் நலன் விரும்பிகளுக்-கும் எனக்கும் நடுவில் அடிக்கடி நடக்-கிற டயலாக் இதுதான்.

ஒளிர்கிற சிகரெட் நெருப்பு... கோப்பையில் வழிகிற மது... நண்பர்களோ, காதலிகளோ, அவர்களின் நினைவுகளோ எப்-பவும் ஏதாச்சும் ஒண்ணு என்னை இழுத்து முறுக்கி ஒரு கிடார் போல வெச்சி-ருக்கு. சந்தோஷமோ, துக்கமோ எது என்னைத் தொட்டாலும் வழிவது வாழ்வின் இசை!

மிக அழகா, ரொம்ப நேர்த்தியா நெய்யப்பட்ட ஒரு புடவையில், அதோட நூலின் முதல் நுனியைத் தேடிப் பார்க்கிற மாதிரி இருக்கு என் தேடல். என் தாய் பாஷை கன்னடம். ஆனா, தெலுங்கில் சிந்திக்-கிறேன். தமிழ்லதான் வாழ்றேன். இங்கிலீஷை வெச்சுக்கிட்டு உலகம் முழுக் கச் சுத்துறேன். 'ஜப்பான் மொழிப் படத்துல நடிக்கிறியா பிரகாஷ்'னு கேட்டா, 'ரெண்டு வாரம் டைம் கொடுங்க, ஜப்பான் மொழியிலேயே டப்பிங்கே பேசுறேன்'னு சொல்வேன். ஏன்னா, எதையும் கத்துக்கணும், தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்-கணும், ருசிக்கணும், ரசிக்கணும்னு ஆர்வமா இருக்கேன். அதனால்தான் எல்லா பாஷையும் என் பாஷையா இருக்கு.

காதல், காமம், சோகம், சந்தோஷம், உழைப்பு, சோம்பல்னு விதவிதமான குணங்களோடும், குறைகளோடும் இருக்கிற மனிதர்களுக்கு மத்தியில், அதே குணங்களும், குறைகளுமா வாழ்கிற ஒருத்தனா இருக்கான் பிரகாஷ்ராஜ்.

என் மகன் செத்துப் போனான். அழகான கவிதை போல இருந்தான். விளையாடிட்டு இருந்தப்போ தவறி விழுந்து அடிபட்டுட்டான். ஹாஸ்பிடல்ல சேர்த்தோம். ஒரு ராத்திரியில் கனவு போல, கற்பூரமா காற்றில் கரைஞ்சுட்டான். தோட்டத் தில் சித்தார்த்தனைப் புதைச்சோம். இப்போ தோட்டம் முழுக்க பூக்களா சிரிக்கிறான். 'ராம்பர ராம்பர ராம்போ... ராம்பர ராம்பர ராம்போ'ன்னு நான் ரிதம் போட்டா, கைகளை ஆட்டி மியூஸிக் ஸ்கோர் பண்றா, சித்தார்த்தனுக்குப் பதிலா இந்த உலகத்துக்கு வந்த என் சின்னப் பொண்ணு மேகனா. அவனை நினைச்சா அழுகை வருது. ஆனா, எவளோ ஒருத்தி இவ மேகனான்னு புதுசா வந்து சிரிப்புக் காட்றா... என்ன டிஸைன்டா இது!

இப்படி நிறைய பேசுவோம். என் பயணங்-களில் ஓர் அங்கமாத்தான் உங்களோட பேசிட்டிருக்கேன். அருவியில் குளிக்கிற மாதிரி, மியூஸிக் கேட்கிற மாதிரி, மழையை ரசிக்கிற மாதிரி என் அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறேன்....

லெட்ஸ் ஸ்டார்ட் தி மியூஸிக்!
 


--
http://sarathecreator.blogspot.com


ஷாரா

unread,
Apr 13, 2007, 3:17:11 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-2
--------
நேத்து சென்னை ஏர்போர்ட்டுக்குள் நுழைஞ்சதும் எனக்கு திடீர்னு ஃப்ளாஷ் அடிச்சது, 'கன்னத்தில் முத்தமிட்டால்' படம்!

ஹைதராபாத் போகணும்னா, ஃப்ளைட்டில் ஒரு மணி நேரப் பயணம். அதைவிட அதிக நேரம் தேவைப்படுது ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி செக்கிங் வேலைகளுக்கு! ஒரு தாய் தன்னோட குட்டிப் பொண்ணுக்காக பாட்டில்ல பால் கொண்டுபோறாங்க. அதையும் வாங்கிப் பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்காங்க பாதுகாப்பு அதிகாரிகள். நம்ம ஊரெல்லாம் பரவாயில்லை. இன்டர்நேஷனல் ஏர்போர்ட்களில் இப்போ கெடுபிடி ரொம்ப ஜாஸ்தி!

எல்லோரும் சிரிக்கிறாங்க, வேடிக்கை பார்க்கிறாங்க, நிதானமா இருக்கிறதா காட்டிக்கிறாங்க. ஆனா, அதையும் மீறி எல்லோர் கண் களிலும் ஏதோ ஒரு பயம் மின்னுது. ஏன்?

மனுஷனோட மூளையை நினைச்சா எனக்குப் பயமா இருக்கு. தொழுநோயால, பாதி உடம்பு அழுகி சாக்கடையோரமா நாத்தமா கிடந்த மனுஷனை அள்ளி அணைச்ச கைகள் நம்மைப்போல ஒரு மனுஷியோட கைகள்தானே! இப்போ குழந்தைகளை குண்டு போட்டு வெடிச்சுச் சிதறவைக்கிற புத்தி எப்பிடி நம்ம மூளைக்குள்ளே நுழைஞ்சுதுன்னு நினைச்சா, பயமா இருக்கு.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் க்ளைமாக்ஸ் ஸீனை மறக்கவே முடியாது! போராளியா இருக்கிற அம்மாவிடம், போரால் பாதிக்கப்பட்ட அவங்களோட குட்டிப் பொண்ணு சில கேள்வி கள் கேட்பா. எந்தக் கேள்விக்கும் அந்த அம்மாவிடம் பதில் இருக் காது.

'அம்மா நீங்க மெட்ராஸ§க்கு வந்துடுங்க. அங்க சண்டை இல்லை, ஆர்மி இல்லை, டி.வி. பார்க்கலாம், சினிமா பார்க்கலாம், பீச் இருக்கு, ப்ளீஸ்மா, வந்துடுங்கம்மா!'னு அந்த சின்னப் பொண்ணு அமுதா கெஞ்சுவா. 'என்றைக்காவது ஒரு நாள் இது யுத்தம் இல்லாத பூமியா மாறும். அமைதி திரும்பும். அன்னிக்கு வா!'னு தன் பொண்ணை அனுப்பி வைப்பா அந்த அம்மா. 'என்னிக்கும்மா? என்னிக்கும்மா?'னு அந்தக் குழந்தை கேட்கிற கேள்விக்கு யாரிடம் இருக்கு பதில்?

என் பொண்ணு பூஜா கேட்கி றாளே.... 'அப்பா, தப்பு செய்தா சாமி கண்ணைக் குத்தும்னு அம்மா சொல்-றாங்க. அப்படின்னா குண்டு வைக்கிற வங்களைப் பார்த்தா சாமிக்குப் பய மாப்பா? ஏன் அவங்க கண்ணை மட்டும் சாமி குத்தவே மாட்டேங்-குது?'ன்னு கேட்கிறா.

அவளுக்கும் எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே சொல்றேன். உங்ககிட்ட பதில் இருந்தா சொல்லுங்க!

''ஏம்ப்பா இந்தியாவும், பாகிஸ்தானும் எனிமியா இருக்காங்க?'

''பார்டர் பிரச்னைடா!''

''பார்டர்னா ரெண்டு கன்ட்ரி பார்டர்லயும் கோடு போட்டிருப்பாங்களாப்பா? நாம அந்தக் கோட்டைத் தாண்டிப் போகக் கூடாதா? ஷ¨ட் பண்ணிருவாங்களாப்பா? எல்லார்ட் டயும் கன் இருக்குமா? நம்மகிட்டே கன் இல்லேன்னு தெரிஞ்சா, விட்டுடு வாங்களா? இல்லாட்டியும் சுடுவாங் களா? டி.வி&ல காமிச்சாங்களே, சின்னப் பசங்க மேல பாம் போட்டு, செத்துட் டாங்களே... பெட்ஷீட் போட்டு மூடிவெச்சிருந்தாங்களே, அந்த கிட்ஸ் எல்லாம் பார்டர் தாண்டிட்டாங் களாப்பா?

நான் காத்தாடி விடும்போது, அது பார்டர் தாண்டிப் பறந்தா என்ன பண்ணுவாங்கப்பா? மும்பை டிரெய்ன்ல பாம் வெடிச்சுதுன்னு உன் ஃப்ரெண்ட்கூட பேசிட்டிருந்தியேப்பா, அங்கேயும் பார்டர் இருக்காப்பா? அது இந்தியாவுக்குள்ளதானே இருக்கு?'' & நடு ராத்திரி 12 மணிக்கு மேல மொட்டை மாடியில் உலாத்துற என்னை, இழுத்துப் பிடிச்சு உட்காரவெச்சு நான்ஸ்டாப்பா கேள்வி கேட்கிறா ஒரு சின்னப் பொண்ணு. ஒரு அப்பனா, ஒரு மனுஷனா, ஒரு சீனியரா நான் என்ன பதில் சொல்றது?

'டேய்... பெரிய மனுஷனுங்களா, ஏன்டா உங்க சுயநலத்துக்கு எங்களைக் கொல்றீங்க?''னு நேரடியா அவளுக்கு கேட்கத் தெரியலை. அவ்வளவுதான்!

'பாவம் என்றால் ஓர் ஆணையும் பெண்ணையும் இறைவன் படைப்பானா, பயணம் போகும் வழியில் திராட்சைக் கொடியை வளர்ப்பானா?'ன்னு நம்ம கண்ணதாசன் எழுதியிருப்பார். காதலும் போதையும் அப்படி வந்ததுன்னா, இந்த எழவு போரும், அழிவும் எப்படி வந்தது?

அதிகாரமும் சுயநலமும் சேர்ந்துதான் முதல் ஆயுதத்தைத் தயாரிச்சிருக்கும். சார்லி சாப்ளினின் 'திகோல்ட் ரஷ்' படம் பார்த்திருக்கீங்களா? பனிமலையில் புதைஞ்சுகிடக்கிற தங்கப் புதையலைத் தேடிச் சில பேர் கிளம்புவாங்க. அதில் சார்லி சாப்ளினும் ஒருத்தர். பனிப் புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகி மலை உச்சிக்குப் போய்ச் சேர்வார் சாப்ளின். அங்கே ஏற்கெனவே புதையல் தேடி வந்த ஒருத்தர் கூடாரம் அடிச்சுத் தங்கியிருக்க, சார்லியும் அவரோடு சேர்ந்து தங்குவார். ஓயாம அடிக்கிற பனிப் புயலில் வெளியே போகவே முடியாது. சாப்பிட எதுவும் இருக்காது. பசி, பந்தாடும். சார்லி தன் ஒரு ஷ¨வைக் கழற்றி, சுடுநீரில் போட்டு அவிச்சு எடுத்து லன்ச் ரெடி பண்ணுவார். அதை ஃபோர்க்ல சிக்கன் நூடுல்ஸ் ரேஞ்சுக்கு ஸ்டைலா குத்தி எடுத்து சார்லி ரசிச்சுச் சாப் பிட, எதிராளி முடியாமத் திணறிப்போயிடுவார். ஷ¨வும் இருக்காது. பசி... பசி... அங்கே ஆரம்பிக்கும் பயம். இவன் நம்மளை அடிச்சுத் தின்னுடுவானோன்னு பரஸ்பரம் ரெண்டு பேருக்கும் பயம்! தூங்காம, நிம்மதியில்லாம ரெண்டு பேரும் பயத்தில் அலைவாங்கன்னு போகும் அந்தப் படம். அட, ஒரு இங்கிலாந்துக்காரன், அமெரிக்கா வில் படம் எடுத்தவன் பசியைப் பத்தி எப்படி இப்படி யோசிச்சான்னு ஆச்சர்யமா இருந்தது. அதான் மானுடத்தை தேடுற கலைஞன் மனசு. அதே அமெரிக்கா தான் யுத்தத்துக்கு ஆயுதங்களும் தயாரிக்குது. கோடிக் கோடிக் குழந்தைகளை, தாலாட்டுகளைக் கொன்னுட்டு ஒரு தூளியை ஜெயிக்கிறதுதான் யுத்தம்... நான்சென்ஸ்!

சமீபகாலமா விமானத்தில் பறக்கிறது எரிச்சலா இருக்கு. வெளிப்படையா சொல்ல ணும்னா எப்பவும் எல்லோரைச் சுற்றியும் ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. வீட்டில் என் பொருட் களை பேக் பண்றதில் ஆரம் பிக்குது அந்த பயம். 'எலெக்ட் ரானிக் கூட்ஸ் எதையும் எடுத்துட்டுப் போக வேண்டாம். செங்கிங் முடிக்கிறதுக்குள்ளே ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடு வோம்'னு ஒரு பயம். பாக்கெட்டில் சிகரெட் இருக்கு. ஆனா, லைட் டர் கொண்டு போக முடியாது. டெரரிஸ்ட் மாதிரியே டீல் பண்ணுவாங்க. ஃப்ரெண்டுக்குப் பிறந்த நாள். அவனுக்குப் பிடிச்ச புத்தகத்தைத் தேடித் தேடி வாங்கி, சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு அழகா பேக் பண்ணினேன். போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி பேக்கிங்கைக் கிழிச்சு எறிஞ்சுட்டாங்க. ஏர்போர்ட்டுக்குள் போகிற ஒவ்வொருத்தர் மேலேயும் ஒரு தீவிரவாதி உட்கார்ந்திருக்கிற மாதிரி, பத்தடிக்கு ஒருத்தர் துப்பாக்கி யோடு பாதுகாப்புக்கு நிக்கிறாங்க. ஆனாலும், நிழல் மாதிரி பின் தொடருது பயம். ஆகாய விமானத்தை ஆயுதமாக, கேடயமாகன்னு ரெண்டு விதமாகவும் பயன்படுத்துகிற வித்தை யைக் கண்டுபிடிச்சுட்டான் மனுஷன். அப்புறமென்ன, பயம்!

சுதந்திர தின விழாவை மகிழ்ச்சி யோடு கொண்டாட முடியலை. காஷ்மீரில் பாதியிலேயே விழாவை கேன்சல் பண்ணிட்டாங்க. இந்தியாவோட தேசிய விலங்கு புலி. தேசிய மொழி இந்தி. தேசிய நோய் ஒண்ணு இருக்கு... பயம்! துப்பாக்கி எடுக்கிற ஒவ்வொருத்தனும் ஒரு கண்ணை மூடிட்டுதான் சுடுறான். அப்பவே பாதி உலகம் அவன் கண்ணில் இருந்து மறைஞ்சுடுது. தெரிகிற பாதி உலகமும், அவன் பார்வையில் கொடூரமானதாகவே தெரியும். ரெண்டு கண்களையும் திறந்து இந்த உலகத்தைப் பார்த்தால்தான் மனசு திறக்கும். குழந்தை, வயசானவங்க, ஊனமுற்றவங்கன்னு நிறையப் பேரோட வாழ்க்கையில் நமக்கும் பொறுப்பு இருக்குன்னு புரியும்.

மரங்கள் மனுஷனைப் பார்த்து இப்படிக் கேட்டதா எங்கோ படிச்சேன்... 'நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக எத்தனை லட்சம் சிலுவைகளைத் தந்திருக்கிறோம். ஆனால் மனிதர்களே, உங்களால் ஏன் ஒரு ஏசு கிறிஸ்துவைக்கூட தர முடியவில்லை?'


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:17:42 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-3
--------
அது ஒரு சாவு வீடு! எல்லாரும் கதறிக் கதறி அழறாங்க. கண்ணு முன்னாடி பொண்டாட்டி செத்துக்கெடக்கா. ஆனா, அவளைக் கட்டின புருஷன் மட்டும் கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கான். 'நீ செத்தாத் தான்டி எனக்கு நிம்மதி'ன்னு ரெண்டு வாரத்துக்கு முன்னால கூட அவளைத் திட்டியிருக்கான். 'ஸேம் டு யூ!'ன்னு அவளும் ஏதோ 'ஐ லவ் யூ' சொல்ற மாதிரி சொல்லியிருக்கா. இதோ, இப்போ பொண்டாட்டி செத்துட்டா. மார்க்கெட் போயிட்டு திரும்பி வரும் போது ஆக்ஸிடென்ட்!

அவனும் அவளும்... அல்லது அவளும் அவனும்... எப்படி சொல்றதுன்னு தெரியலை உயிருக்கு உயிரா காதலிச்சவங்க. சாதி வேற, இனம் வேற, மொழி வேற, மதம் வேற, மாநிலம் வேற... ஆனா, மனசு ஒண்ணா இருந்தது. எல்லாத்தையும் மீறி ஒண்ணா சேர்ந்தாங்க. திடீர்னு ரெண்டு வருஷத்துக்குப் பிறகு ரெண்டு பேருக்குமே போரடிச்சது. புருஷனோட எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி அவ இல்லை. புருஷனோ இவளுக்குப் பிடிக்காத மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்றான். இவனுக்குச் சாவு வர மாட்டேங்குதேன்னு அவ ஏங்கினாள். அவளைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிடலாமாங்கிறது வரைக்கும் இவன் யோசிச்சிருந்தான்.

பொண்டாட்டி இறந்துகிடக்கிற வீட்டில், அவ்வளவு கூட்டம் இருந்தும் தனிமையில் இருக்கிறான் புருஷன். ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த என்னென்னவோ ஞாபகங்கள் வந்து போகுது. டிரெஸ் அலமாரியைத் திறந்தால், இவனுக்குப் பிடிக்கவே பிடிக்காத மாடர்ன் டிரெஸ்ஸா வாங்கி அடுக்கிவெச்சிருக்கா. அவ போடுற டிரெஸ்ஸ§க்காகவே, 'செத்துத் தொலையேன்டி'ன்னு பல முறை சொல்லியிருக்கான். 'நல்லவேளை செத்துட்டா!'ன்னு நினைச்சுக்கிட்டு கட்டிலில் சாய்றான். அவளுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும், வேணும்னே அவன் வாங்கின கட்டில் அது. 'ச்சே, என்னை அவ நிறையவே சகிச்சுக்கிட்டு இருந் தாளோ?'ன்னு உள் மனசு சொல்லுது.

ஒரு காலத்தில் உயிருக்குயிரா காதலிச்ச காதலியின் மரணத்துக்கு அழறதா, வேண்டாமாங்கிற குழப்பமே அவனுக்குத் துன்பமா இருக்கு. ஃப்ரிஜ்ஜைத் திறக்கிறான். அதுக்குள்ளே இவனுக்கு ரொம்பப் பிடிச்ச, அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு டிஃபனை மறக்காம செய்து வெச்சுட்டுத்தான் மார்க்கெட் போயிருந்திருக்கா. அதைப் பார்த்ததுமே அவன் அவ்ளோ நேரம் அடக்கிவெச்சிருந்த துன்பம், கண்ணீரா கொட்டுது. அவ தனக்காகச் செய்த அந்த டிஃபனை உடனே எடுத்து ஆசை ஆசையா சாப்பிடுறான். வேடிக்கை என்னன்னா, அவன் செத்தாதான் தனக்கு நிம்மதின்னு நினைச்சு, அதுல விஷம் கலந்து வெச்சிருக்கா அவ. ஸோ, அவன் கதையும் முடிஞ்சுதுன்னு ஒரு கதை உண்டு.

உண்மை என்னன்னா, அவங்க ரெண்டு பேரும் அந்த வீட்டுக்குள்ள செத்துப்போய் ரொம்ப நாளாச்சு. அது ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமலே ஒரே வீட்டில் ரெண்டு உயிருள்ள பிணங்களா வாழ்ந்துட்டு இருந்திருந் தாங்க.

நம்மைச் சுற்றி இப்படி 'ஆழமான' காதல் கதைகள் நிறைய இருக்கு. என்னோட நெருங்கிய நண்பர்கள் ரெண்டு பேர் காதலிச்சாங்க. பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணமும் பண்ணினாங்க. அவ, அவனை 'டேய், பன்னி!'ன்னுதான் செல்லமா கூப்பிடுவா. அவங்க கல்யாணத்துக்கு நண்பர்கள் நாங்க அழகான ஒரு பன்னிக் குட்டியைத்தான் 'கிஃப்ட்' தந்தோம். ஆசையா அவங்களும் வளர்த்தாங்க. எங்க 'கேங்'ல ரோல் மாடல் ஜோடி அவங்கதான்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தபோது ஒரே வருஷத்தில் ரெண்டு பேரும் டைவர்ஸ் அப்ளை பண்ணி னாங்க.

ரெண்டு பேருகிட்டேயும் தனித்தனியா நானும் பேசினேன். பேசின பிறகு, அவங்க சேர்ந்து வாழவே முடியாதுன்னு மட்டும் தோணலை. சேர்ந்து வாழவே கூடாதுன்னும் தோணுச்சு. ஏன்னா, காதலிக்கிற வரைக்கும் அவன் பார்த்த அவள் வேற. அவள் பார்த்த அவன் வேற. ரெண்டு பேரும் தங்களோட எந்த மைனஸையும் ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டிக்கவே இல்லை. 'அவன் மாறிட்டான், அவன் காதலிக்கிறபோது இருந்தவனே இல்லை. வாழ்நாளெல்லாம் காதலனாவே இருப்பான்னு நம்பி கல்யாணம் பண்ணேன். கல்யாணத்துக்கப்புறம் புருஷனாகிட்டான்'னு அவன் மேல இவ பெரிய புகார்ப் பட்டியலே வாசிக்கிறா. 'அவ நான் நினைச்ச பொண்ணே இல்லைடா. ஏமாந்துட்டேன்டா பிரகாஷ்!'னு உடைஞ்சு அழறான். அவளோட வியர்வை ஸ்மெல் இவனுக்குப் பிடிக்கலை. இவனோட குறட்டை சத்தம் அவளை டிஸ்டர்ப் பண்ணியிருக்கு. காபி டம்ளரை 'உர்ர் உர்ர்'னு அவ உறிஞ்சிக் குடிக்கிறது இவனுக்குப் பிடிக்கலை. இவன் அழுக்காவே திரிவது அவளுக்குப் பிடிக்கலை. இப்படி ஒவ்வொரு விஷயத் துக்கும் ஒருவரை ஒருவர் சகிச்சுக்கத் தயாராவே இல்லை. 'ஏய்! என்னை 'பன்னி'ன்னு இனிமே கூப்பிடாதே'ன்னு இவன் எரிச்சலாகிட்டிருக்கான். 'இவங்க காதலுக்கு சாட்சியாகிட்டோமே!'ன்னு அந்தக் குட்டிப் பன்னி இன்னமும் திருதிருன்னு முழிச்சிட்டிருக்குது!

பல இளைஞர்களுக்கு காதலிக்கவே தெரியலை. 'க்ளாஸ்ல அவ என்கிட்டே மட்டும்தான் பேசுவா சார்'னு, ஒருத்தி சும்மா ஹாய், ஹலோ சொல்றதையே லவ்வா புரிஞ்சுக்கிறான். 'அவன் என்னைத் தினமும் வந்து பஸ் ஏத்திட்டுப் போனான். இப்ப லவ் பண்ணலேன்னு சொல்றான்'னு ஒருத்தி அழறா.

காதலுக்கும் காமத்துக்குமான இடைவெளி என்னன்னு பல பேருக்குத் தெரியலை. உடம்புக்கும் மனசுக்கும் நடக்கிற போராட்டத்தை வர்ணிக்கிற வார்த்தைகள் எந்த மொழியிலும் துல்லியமா இல்லை. மனுஷனா பிறந்த நம்ம ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் இந்த மாதிரி காதலும் காமமும் மாறி மாறி ராட்டினம் சுத்துது. சிலர் மயங்கிடுறாங்க, சிலர் தலை சுத்தலோட இறங்கிடுறாங்க, சிலர் யாருக்கும் தெரியாம அழுது, சிரிச்சுச் சமாளிச்சுடறாங்க. காதலோ, காமமோ மனசுல இருக்கிற வரைக்கும்தான் அது கௌரவம். அதுவே மூளைக்கு ஏறிட்டா எல்லாரும் ராவணன்தான். ஒரு மூளைக்குள் காமம் ஏறினாலே தடுமாறி நிக்கிறோம். ராவணனுக்கோ பத்து தலை. பத்து மூளை. சீதா அந்தப் பத்து தலையிலேயும் ஏறிப் படுத்திருக்கிறா. யார் சொன்னா கேட்பான் ராவணன்?

ராவணன் கொண்டதும் காதல்தான். ஒருவனுக்கு ஒருத்திங்கிறது மட்டும்தான் காதலா? அப்போ மகா பாரதத்தில் அஞ்சு பேருக்கு ஒருத்திங்கிறது காதல் இல்லையா? ஆயர்பாடியில் இருக்கிற பதினாறாயிரம் பெண்களும் கண்ணனை விரும்பினாங்களே, அதுக்குப் பேர் என்ன?

'காதல், காதலர்களைப் பற்றி நீ இவ்ளோ பேசுறியே பிரகாஷ், உனக்குள்ளே இந்த மாதிரிக் கதைகள் இல்லையா?'ன்னு நீங்க கேட்கலாம். நான் பெயர்களைப் பயன்படுத்தாமல், 'அவன்', 'அவள்'னு சொன்னதுக்குக் காரணம், எல்லா அவ னும், எல்லா அவளும் கடந்து வரக்கூடிய விஷயம்தான் இது. காதலோ, காமமோ அதில் எனக்கு எப்பவுமே குழப்பம் வந்ததில்லை. இரண்டுமே அனுபவம்தான்.

என் குருநாதர் பாலசந்தர் இயக்கிய சீரியலில் டாக்டர் க்ருதியா எழுதின ஒரு அற்புதமான 'கஜல்' பாட்டு ஞாபகம் வருது.'

காதல் என்பது காவியம்தான். அதில் நான்
எழுத்தாய் சிறைபட விரும்பவில்லை.

காதல் என்பது நூலகம்தான். அதில் நான்
பல பேர் கைப்பட விரும்பவில்லை.

காதல் என்பது சந்நிதிதான். அதில் நான்
சிலையாய் இருப்பதில் விருப்பமில்லை.

காதல் என்பது சொர்க்கம்தான். அதில்
போனவர் யாரும் திரும்பவில்லை. அதனால்
காதலை எப்படித்தான் நம்புவதோ?'ன்னு வரும் ஒரு பாட்டு. அந்த கஜல்தான் என் கேரக்டர்.

ஒரு பூ காயாகி, காய் கனியாகிற வினாடியை உலகத்தில் எவனாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நம் கண்ணுக்கு முன்னாலேயே அந்த மாற்றம் நடந்திருக்கும். காதல் அப்படி எல்லாருக்குள்ளும் வரும். எனக்குள்ளேயும் வந்துட்டே இருக்கு. நானும் என் மனைவியும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணினோம். இன்னும் காதலிச்சுட்டேதான் இருக்கோம். ஒரு நாள், 'உன்னைப் பத்தி அணுஅணுவா எனக்குத் தெரியும் லதா!'ன்னு சொன்னேன். அவ சிரிச்சா, 'நேத்து ராத்திரி நான் கண்ட கனவு என்னன்னு உங்களுக்குத் தெரியுமா பிரகாஷ்?'னு கேட்டா.

என்ன சொல்வேன் நான்?
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:18:10 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-4
---------
அறிந்தும் அறியாமலும் அப்பப்போ பண்ற தவறுகள்தான் வாழ்க்கையோட திசையைத் தீர்மானிக்குது. எந்த ஒண்ணும், அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் மொத்த டிஸைனும் மாறிடுது!

ரெண்டே ரெண்டு உதாரணங்கள் சொல்லட்டுமா..!

எப்பவும் போல அப்பவும் அது ஒரு வசந்த காலம். அறையில் நான் இருந்தேன். கூடவே என் காதல் பெண் ஒருத்தி. திடீர்னு கதவை யாரோ தட்டுறாங்க. 'பிரகாஷ்... பிரகாஷ்'னு என் நண்பனின் குரல். ஷாக்! ஏன்னா, அப்போ என்னுடன் இருந்த பெண், அவனோட ஃப்ரெண்ட்!

கதவைத் திறக்கணும்னு என் மனசு தவிக்குது. ஆனா, அவனோட ஃப்ரெண்டு... என்னோட காதலி... அலர்றா! அவனைப் பார்த்து பயந்து ஒளிஞ்சுக்கிட்டா. 'அய்யோ சொல்லிடாத! கதவைத் திறந்துடாத! நான் செத்தேபோயிடுவேன் பிரகாஷ்'னு அலர்றா. 'பிரகாஷ்... பிரகாஷ்'னு அவன் கதவைத் தட்டிக்கிட்டே இருக்கான்.

ஜன்னல் வழியா ரகசியமாப் பார்த்தேன். எப்பவும் கலகலன்னு இருக்கிற பையன், ஏழெட்டுக் கப்பல் மொத்தமா கவிழ்ந்தது மாதிரி டல்லா இருக்கான். ரெண்டு மூணு நாளா, குளிக்கலை, சாப்பிடலை, தூங்கலைன்னு சொல்லலாம் போல, அவ்ளோ அழுக்கா நிக்கிறான். ஏதோ ப்ராப்ளத்துல இருக்கான்னு சட்டுன்னு புரிஞ்சுது. நான் என்ன ஏதுன்னுகூட கேட்கலை, 'டேய், கொஞ்சம் வேலையா இருக்கேன். மதியம் பார்க்கலாமா? நானே போன் பண்றேன்'னு உள்ளே இருந்தே சத்தமாச் சொல்றேன். அந்தப் பக்கம் இருந்து பதிலே வரலை.

அது தப்புன்னு தெரியுது. ஆனா, அப்போ அதை எப்படித் தவிர்க்கிற துன்னு தெரியலை. அந்த சில நிமிடங் கள், எது முக்கியம்னு முடிவெடுக்கத் தெரியாம தடுமாறினேன். நண்பனா,காத லியான்னு சட்டுனு டிஸைட் பண்ணத் தெரியலை. சரி, மதியம் போய்ப் பார்த்து மன்னிப்பு கேட்டுட்டா எல் லாம் சரியாப் போயிடும்னு நினைச்சேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், எனக்கு ஒரு போன்... என் நண்பன் தற்கொலை பண்ணிக் கிட்டான்னு!

உடைஞ்சு போயிட் டேன். 'என்னடா மச் சான்?'னு ஒரு வார்த்தை கேட்டிருந்தா, 'என்ன ப்ராப்ளம்டா, எதையும் சந்திக்கலாம்டா'ன்னு ஒரு தம் டீயோட டிஸ்கஸ் பண்ணி இருந்தா, சில நிமிஷங்கள் செலவழிச்சிருந்தா, அவன் இருந்திருப்பான். கடைசி நம்பிக்கையா, கடைசி ஆறுதலா, கடைசி தோளா என்னைத் தேடி வந்திருக்கான். நான்தான் கதவையே திறக்கலையே!

இந்த நிமிஷம் வரைக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி என்னைக் கொன்னுட்டே இருக்கு. இப்போ அவனும் இல்லை; அந்தக் காதலி... ப்ச், அவளும் பிரிஞ்சு போயிட்டா. அவ எங்கே இருக்கா, என்ன பண்றா, என் நினைப்பு இருக்குமா, மறந்து போயிருப்பாளான்னு எதுவும் தெரியாது. ஆனா, என் நண்பன் இப் பவும் என் நெஞ்சுக்குள்ளே இருக்கான். 'அழுதுட்டே கெடடா!'னு விட்டுட்டுப் போயிட்டான்.

கத்துக்கிட்ட பாடம் என்னன்னா, அதுக்கு அப்புறம் எப்போ எவன் கஷ்டம்னு வந்து நின்னாலும், எவ்வளவு பரபரப்பில் திரிஞ்சாலும், அட்லீஸ்ட் பத்து நிமிஷம் என் காதையும் மனசையும் அவனிடம் தந்துடுவேன். என்னால உதவமுடியுதோ இல்லையோ, அவன் கஷ்டத்தைக் காது கொடுத்துக் கேட் டேன்கிற மன திருப்தியையாவது தந்துடணும். இந்தச் சின்ன பாடத்தைக் கத்துக்க நான் தந்த விலை ரொம்ப அதிகம்?

இப்படித் தெரியாம பண்ற தப்பைச் சரி பண்ணவே முடியாம தவிக்கிற மாதிரி, தெரிஞ்சே பண்ணின தப்பு ஒண்ணு எனக்குப் பெற்றுத் தந்த நன்மையை நினைச்சா விசித்திரமா இருக்கு.

காலேஜ் டைமில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நான் இல்லாமல் நாடகங்கள் நடக்கக் கூடாதுன்னு நினைப்பேன். அது ஹீரோவோ, வில்லனோ... நாடகத்தில் நான் ஒரு முக்கிய ரோல் பண்ணி யாகணும். என்னை டைரக்ட் பண்ற புரொபசருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவர் என்ன எதிர்பார்க் கிறாரோ, அதை இன்னும் அழகா, அழுத்தமா, அர்த்தபூர்வமா செய்து தர்ற பையன் நான். அப்படி காலேஜ் கல்சுரல்ஸ§க்காக ஒரு நாடகம். அதிலும் நான்தான் ஹீரோ. அதுக்கான ரிகர்சல்கள் தினம் தினம் நடக்கும். ப்ளேக்கு ஒரு வாரம் இருக்கும்போது ஒரு ஞாயிற்றுக்கிழமை, எனக்கு ரிகர்சல் போக விருப்பம் இல்லை.திமிர்தான். ஒரு நாள் ரிகர்சல் போகலைன்னா, என்னை நாடகத்தில் இருந்து தூக்கிடுவாங்களா என்ன? நான் இல்லாம எப்படி இந்த நாடகம் நடக்கும்?'னு மனசுல ஒரு அரக்கன் வந்து சில நிமிஷம் உட்கார்ந்தான்.

என் புரொபசருக்கு ரொம்ப வருத்தம். என்னை மறுபடி ரிகர்சலுக்கு அவர் கூப்பிடவே இல்லை. ஒரு வாரம் பேசவும் இல்லை. அப்புறம், என் கேரக்டர்ல வேற ஒருத்தன் நடிக்கிறான்னு சொன்னாங்க. என்னை நாடகத்தில் இருந்து மொத்தமாத் தூக்கிட்டாங்க. உள்ளே இருந்த திமிர் இன்னும் உக்கிரமா தாண்டவமாட ஆரம்பிச்சிடுச்சு. எனக்குப் பதிலா நடிக்கிற பையன், நிச்சயம் என் அளவுக்கு நடிக்க மாட்டான். நாடகம் ஃப்ளாப் ஆகிடும்னு எனக்கு நல்லாத் தெரியும். நிஜமாவே நாடகம் ஃப்ளாப்.

'பிரகாஷ் அந்த கேரக்டரைப் பண்ணியிருந்தான்னா, பின்னி யிருப்பாம்ப்பா'ன்னு ஒட்டு மொத்த காலேஜும் எனக்கு சப்போர்ட். ப்ளே சரியில்லைனு தெரிஞ்சதும் 'ஹ§ஹ§ஹ§'னு ஸ்டேஜுக்கு முன்னால பசங்க சங்கு ஊத ஆரம்பிச்சுட்டாங்க. அதுல முதல் ஆள் நான்தான். புரொபஸரை வெறுப்பேத்த ணும்னு விசிலடிச்சு கலாட்டா பண்ணினேன். நாடகம் தோத் ததுல, நான் ஜெயிச்சுட்டேன்கிற திமிர்.

மறுநாள், புரொபஸர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். கம்பீரமா உள்ளே போனேன். 'பிரகாஷ், உன் அளவுக்கு புதுசா வந்த பையன் பண்ண மாட்டான்னு எனக்கு நல்லாத் தெரியும். நாடகம் நிச்சயமா ஃப்ளாப் ஆகும்னும் தெரியும். ஆனாலும், அதை ஏன் நடத்தினேன் தெரியுமா? உனக்கு உள்ளே இருக்கிற திமிருக்குப் பதில்சொல்லணும்னுதான். ஒரு நடிகனா நிச்சயமா நீ ஜெயிப்பே. நாளைக்கே நீ சினிமாவில் பெரிய நடிகனாக்கூட வருவே. எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா, நீ இல்லாம எதுவுமே நடக் காதுன்னு நினைக்கிற உன்னோட இந்த நிமிஷத் திமிருக்கு ஒரு பாடம் சொல்லத்தான் நான் இந்தத் தோல்வியை ஏத்துக்கிட்டேன். 'நான் ஜெயிச்சா மட்டும் போதாது; நாடகமும் ஜெயிக்கணும்'னு நீ நினைச்சிருக்க வேணாமா?

பிரகாஷ், இது சிம்பிளான விஷயம்! நீ இருந்தா வாழ்க்கை ஒருவேளை ரொம்ப நல்லா இருக்கும்தான். ஆனா, நீ இல்லேன்னாலும் நிச்சயமா வாழ்க்கை நடக்கும். யுகம் யுகமா இதுதான் இயற்கை!'னு சொல்லிட்டு எழுந்து போயிட்டே இருந்தார் என் புரொபஸர்.

கழுமரத்தில் ஏத்தின மாதிரி என் திமிரு அங்கே அப்போ என் கண்ணுக்கு முன்னாலயே செத்துப்போச்சு. ஜென்மத் துக்கும் அந்த குருநாதரைமறக்க மாட்டேன்.

நான் படிச்ச, பாடம் கத்துக் கிட்ட அதே காலேஜ் விழாவுக்கு சீஃப் கெஸ்ட்டா போயிருந்தேன். ஷேக்ஸ்பியர் நாடகம் போட்டாங்க ஸ்டூடன்ட்ஸ்! எங்க காலேஜ் நாடகம்... நான் இல்லாம நடக்குது. என் கண்ணுக்கு முன்னால நடக் குது. பிரமாதப்படுத்துறாங்க பசங்க. ரிட்டயர் ஆகிற வயசுல, ஸ்டேஜ் பக்கத்துல அதே பட படப்போட கையில் ஸ்கிரிப்ட் பேடோட நிக்கிறார் என் புரொபஸர்.

எப்பவோ கேட்காத மன்னிப்பை அப்போ அந்த மேடையில் கேட்டேன். எப்பவோ சொல்லி இருக்க வேண்டிய தேங்க்ஸை அப்போ அந்த மேடையில் சொன்னேன்.

முன்னெல்லாம் நான் நல்லா இருந்தா, என் உலகம் நல்லா இருக்கும்னு நினைப்பேன். இப்போ என் உலகம் அழகா இருந்தா, நானும் அழகா இருப்பேன்னு நினைக்கிறேன்.

யெஸ்...இப்போ எல்லாமே அழகு!


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:18:48 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

part-5
---------

ஒரு பொண்ணு... புருஷன் சரியில்லை; மூணு பிள்ளைங்க; வாசல்ல பெரிய கேள்விக்குறியா வாழ்க்கை. என்னெல்லாம் பண்ணி இருப்பா அவ?

எனக்கு எங்கம்மா அப்போ நிலா. அதுவும் பௌர்ணமி நிலா!

ஏன்னா, அப்போ எங்களையெல்லாம் எங்கேயோ ஒரு ஹாஸ்டல்ல போட்டுட்டு, வேலூர் சிம்.எம்.சி&யில் நர்ஸா வேலை பார்த்தா. மாசா மாசம் சம்பளம் வாங்கிட்டு எங்களைப் பார்க்க ஓடி வருவா. அந்த ஒரு நாளுக்காக, எங்களை அள்ளிக் கொஞ்சுற சந்தோஷத்துக்காக ஒரு மாசம் பூரா ஓடி ஓடி உழைப்பா. தன் இளமை எல்லாத்தையும் எங்களுக்காகவே தொலைச்சிருக்கா. தன் பிள்ளைகளுக்கு எப்படியாவது நல்ல படிப்பைத் தந்துடணும்னு அவ தவிச்ச தவிப்பு, உழைச்ச உழைப்பு எப்பவும் எங்க நெஞ்சில் இருக்கும்.

நான் என் பால்யத்துல எவ்வளவோ தப்புகள் பண்ணியிருக்கேன். ஒருநாள்... ஒருமுறைகூட 'நீயும் உன் அப்பனை மாதிரிதான்டா இருக்கே!'னு ஒரு வார்த்தை கடிஞ்சு சொல்லாத அம்மா. அந்தச் சின்ன வயசுல எங்கிருந்து அவளுக்கு அவ்வளவு பக்குவம் வந்திருக்கும்? இப்போ நினைச்சா, ஆச்சர் யமா இருக்கு.

எனக்கே இப்போ 40 வயசு. ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. ஒரு குடும்பத்தில் பெத்த வங்க எப்படி நடந்துக்கணும்னு என் அம்மா எனக்கு வார்த்தைகளால் அறிவுரை சொன்னதே இல்லை. வாழ்ந்தே காட் டிட்டா. எப்படி வாழக் கூடாதுன்னு வாழ்ந்து காட்டினவன் என் அப்பன்.

இப்போ என் அம்மாவின் முதுமையில் அவளுக்கு ஒரு அன்பான புருஷன் இருந்திருந்தா, இன்னும் கொஞ்சம் ஆறுதலா இருந்திருப்பா. தனக்கு எமோஷனல் சப்போர்ட்டா ஒருத்தன் நம்மோட இருக்கான்னு சந்தோஷப் பட்டிருப்பா. அந்தச் சந்தோஷத்தை அவளோட முதுமையில், அவளோட மகனா நான் அவளுக்குத் தரணும். ஆனா, என் அம்மா மாதிரி ஒரு அன்பான மனுஷிக்கு, அவளோட இளமை யைத் திருப்பிப் பெற முடியாதே?

கே.எஸ்.நரசிங்கசாமின்னு ஒரு கவிஞன், கன்னடத்தில் இருக்கான். மிடில் கிளாஸ் மக்களோட ஆசைகளை, கோபங்களை அற்புதமான கவிதைகளா தந்தவன். வயசான தம்பதி ரெண்டு பேர் பேசிக்கிற மாதிரி நரசிங்கசாமியோட பாட்டு ஒண்ணு இருக்கு.

புருஷன், பெண்டாட்டிகிட்டே கேட்பான்... 'என் ஊரு அழகா, உன் ஊரு அழகா?'

'இந்த வயசுல ஏன்யா இப்படி ஒரு கேள்வி? என் ஊரு கட்டில்ல படுத்து, நான் உன் ஊர்க் கனவைக் கண்டேனே, அதைச் சொல்லவா? என் ஊர்லேர்ந்து உன் ஊருக்கு உன்னைத் தேடி மாட்டு வண்டியில் வரும்போது, வழி வேக வேகமாக் கடந்து போகுமே, அந்தக் காரணத்தைச் சொல்லவா? தண்ணிக் குடம் எடுத்துத் தனிமையில் போனாலும், கூட்டமா போனாலும், உன் ஊர் சாலை வந்ததுமே அந்தத் தென்னை மரம்கூட உன்னை ஞாபகப்படுத்துமே?'னு சொல்லிட்டே போய், 'ஆமா, உன் ஊரு அழகா, என் ஊரு அழகா?'னு அவளும் கேள்வியிலேயே முடிப்பா.

'உன் ஊர் ஏரியில் உள்ள அழகான தாமரைப் பூவிலெல்லாம், சிவப்பா உன் பேர் இருக்கும். பழுப்பு நிற ஆட்டுக்குட்டி தன் தாய் மடியில் முட்டிமுட்டிப் பால் குடிக்கும்போது, தெறிக்கிற பால் துளியில் வெள்ளையா உன் பேர் இருக்கும். அழகான கன்னுக்குட்டியின் பளபளப் பான கண்ணுக்குள் இருக்கிற ஒளியில் உன் பேர் இருக்கும்'னு அவன் காதலைப் பரிமாறிட்டே போவான்.

இப்படிக் காதல் துணை இல்லாம இருக்கிறது ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு பெரிய துயரம்னு நான் யோசிச்சுட்டு இருக்கும்போது, என் வீட்டுக்கு என் சித்தி வந்தாங்க.

60 வயசு அழகி; அன்பான கிழவி! என் அம்மாவோட தங்கச்சி. அவங்க கல்யாணமே பண்ணிக்கலை. எத்தனையோ முறை பார்த்த சித்திதான். ஆனா, அப்போ எனக்குள் ஓடிட்டிருந்த யோசனையுடன் என் சித்தியைப் பார்த்தபோது, மனசுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி. சின்ன வயசில், நான் என் சித்திக்குப் பண்ணின தப்பு ஞாபகம் வந்தது.

எனக்கு அப்போ 12 வயசு இருக்கும். வீட்டில் விளையாடிட்டு இருந்த என்னை சித்தி தனியாக் கூப்பிட்டு, ரகசியமா என் கையில் ஒரு லெட்டர் குடுத்தாங்க. அதே ஊரில் இருக்கிற ஒருத்தர்கிட்டே அதைக் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க. ஏதோ ஒரு குறு குறுப்பு, அந்த லெட்டரைப் பிரிச் சுட்டேன். அது, என் சித்தி தன் காதல னுக்கு எழுதின ஒரு லவ் லெட்டர். சின்ன வயசில் இருந்து எல்லாருக் குள்ளேயும் தூங்கிட்டிருந்த மிருகம் லேசா எழுந்து நின்னு சோம்பல் முறிக் குமே, அப்படி ஒரு அனுபவம். முழுசா மூணு, நாலு வரி படிக்க முடியலை. உடம்பெல்லாம் பயம், வியர்வையா வழியுது. ஏதோ செய்யக் கூடாத காரியத் தைச் செய்துட்டு இருக்கிறதா தோணுது.

தன்னோட காதலனுக்கு எழுதப்பட்ட காதல் கடிதத்தை ஒரு சின்னப் பையன் பிரிச்சுப் படிச்சுட்டான்னு சித்திக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்னு கற்பனையே பண்ண முடியலை. தன் காதலி எழுதின கடிதம் முறைப்படி தன்கிட்டே வரலைன்னு தெரிஞ்சு, அந்தக் காதலன் என்னை என்ன செய்வானோங்கிற அச்சம் பயமுறுத்துது. சுக்கு நூறா அந்த லெட்டரை அங்கேயே கிழிச்சுப் போட்டுட்டேன். அந்த லெட்டரில் என்ன முக்கியமான விஷயத்தை என் சித்தி தன் காதலனுக்குச் சொல்லியிருந்தாளோ?

இதோ இந்த நிமிஷம் வரைக்கும், 'அந்த லெட்டரை அன்னிக்கு நான் அவர்கிட்டே தரலை சித்தி. என்னை மன்னிச்சுடு!'னு அவ எதிரில் நின்னு மன்னிப்பு கேட்கிற தைரியமும் வர மாட்டேங்குது. கடல் அலையில் நிக்கிறபோது, காலுக்கடியில் இருக்கிற மணலை தண்ணி கொஞ்சம் கொஞ்சமா உருவிட்டுப் போகுமே, அந்த மாதிரி என் பொய் என்னை உருவி எங்கேயோ தூக்கி எறியப் பார்க்குது. 12 வயசுல செய்த தப்பு 40 வயசுல ஞாபகத்துக்கு வந்து தர்ற தண்டனையை அனுபவிக்க ரணமா இருக்கு.

அந்த லெட்டரைக் கிழிச்சுப் போட்ட ரெண்டு மூணு மாசத்திலேயே அதை நான் மறந்துட்டேன். சிக்கிக்காம தப்பிச்சுட்டோம்னா, எந்தத் தப்பும் நம்ம ஞாபகத்தில் இருப்பதில்லையே! ஒரு முறை ஸ்கூல் லீவுக்கு வீட்டுக்குப் போனபோது, வீட்டில் பெரிய சண்டை. 'நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்குக் கல்யாணமே வேண்டாம். என்னை விட்டுடுங்க!'னு ரௌத்திரமா நிக்கிறா சித்தி. கடைசி வரைக்கும் அப்படியே நின்னா சித்தி!

குப்புனு இப்போ எனக்கு நெஞ்சு அடைக்குது. ஆமா, அன்னிக்கு சித்தி என் மூலமா ஒரு லெட்டர் கொடுத்து விட்டாளே, அதில் என்ன எழுதி இருந்தா? நான்தான் அதை முழுசாப் படிக்காமலே கிழிச்சுப் போட்டுட் டேனே! 'நாம் ரெண்டு பேரும் வீட்டை விட்டு ஓடிப்போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? என்னைக் கை விட்டுட மாட்டியே? உனக்காகத் தான் நான் இன்னும் உயிர் வாழறேன். இந்த ஜென்மத்தில், எனக்குக் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா, அது உன்னோடதான்!' இப்படி ஏதாச்சும் எழுதின கடிதமா இருக்குமோ அது? அவனிடம் இருந்து பதில் வரும்னு காத்துக் காத்து, அப்படியே கல்யாணமே வேணாம்னு நின்னுட் டாளோ என் சித்தி?

இப்படி விளைவுகள், விபரீதங்கள் புரியாம யார் யார் வாழ்க்கையில் நாம விளையாடிட்டு இருக்கோம்? நம்ம வாழ்க்கையில் இது மாதிரி நமக்கே தெரியாம விளையாட்டுகள் நடந்திருக் குமோ?

நமக்குத் தப்பு பண்ணினவங்களோட நாமும், நாம தப்பு பண்ணினவங்க நம்மோடவும்... நடந்தது தெரியாம இன்னமும் பழகிட்டே இருக்கோமோ?
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:19:24 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com


Part-6
----------
''நீ இல்லேன்னா எனக்கு வாழ்க்கையே இல்லடா!'னு சொன்ன காதலி, இப்ப வேற ஒருத்தனோட வாழ்ந்திட்டிருக்கா. எங்கேயாவது சந்திக்க நேர்ந்தா எதுவுமே நடக்கலை... ஒண்ணுமே நினைக்கலைங்கிற மாதிரி 'ஹலோ பிரகாஷ்'னு கேஷ§வலா சிரிக்கிறா. வறுமையிலேர்ந்து கனவு வரை வாழ்க் கையைப் பகிர்ந்துக்கிட்ட நண்பன் இப்போ என்னைத் தொழில் எதிரியா பார்க்கிறான். 'பாருங் கடா... இந்தப் படம் என்னைப் பெரிய நடிகனா இந்த உலகத் துக்கு நிரூபிக்கப்போகுது'ன்னு நம்பிக்கை வெச்ச படம் அட்டர் ஃப்ளாப்! எப்பவும் என்னைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குற என் மூணு வயசுப் பொண்ணு, புதுசா ஒரு பொம்மையைப் பார்த்துட்டா என்னை மறந்துடறா. அவ உலகத்துல, உயிரோட இருக்கிற அப்பனைவிட உயிரில்லாத ஒரு பொம்மை பெரிசான்னு யோசிச் சாலே தலை சுத்துது. ஆனா, எல்லாமே உண்மை. ஆக்ஸிடென்ட்ல செத்துப் போன பெண்டாட்டி மூஞ்சைப் பார்க்க பயந்து, 'இல்ல மச்சான்... அவ சாகலடா! இவ வேற யாரோ'னு ராயப்பேட்டை ஆஸ்பத்திரி வராந்தால நின்னுட்டு, என் தோள்ல சாஞ்சுக்கிட்ட ஃப்ரெண்டோட கண்ணீர் சூடு இப்பவும் என் தோள்லயே இருக்கு. உண்மையைப் பார்த்தா மனுஷனுக்கு அவ்வளவு பயம்!

சரி, உண்மையை எப்படித்தான் எதிர்கொள்றது?

எல்லாருக்கும் முன்னால் இருக்கிற பெரிய சவால் இது. பொய் லேசா இருக்கும். அழகா இருக்கும். கிரீடமா கூட ஜொலிக்கும். ஒரு பொய்யை எடுத்துத் தலையில் மாட்டிட்டு எத்தனையோ பேர் ராஜாவா அலைய றாங்க இந்த ஊர்ல. ஆனா, உண்மை அம்மணமா நிக்கும். ஏசுநாதர் தலையில் இருந்த முள்கிரீடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையைக் கண்டு ஓடி ஒளியறோம். பொய் துரத்த, உண்மை நெருக்க... பலர் சாமியாரா திரியறாங்க. சிலர் பைத்தியமாகுறாங்க. என்னைக் கேட்டா, உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. வலிக்கும். உசுரை எடுக்கும். ஆனா, அதுதான் சரி!

காலேஜ் படிக்கும்போது, என் வாழ்க்கையில் ஒரு பொண்ணு வந்தா. என்னைவிட வயசுல எட்டு மாசம் மூத்தவ. காதலின்னு சொல்ல முடியாது. ஏன்னா, காதலைத் தாண்டி எனக்கு அவ நிறையக் கத்துக்கொடுத்திருக்கா. குருவா இருந்திருக்கா. அறிவாளி. காலேஜே துரத்துற அழகி. நான் பெங்களூரைத் தாண்டாத வயசில் அவ கான்ஃப்ரன்ஸ§க் காக கனடா போயிட்டு வந்தவ. ரொம்ப முற்போக்கான பொண்ணு. அரசியல், இலக்கியம், போர், சினிமா, சமையல், ட்ராவல்னு எதைப் பத்தியும் சலிப்பில் லாம பேசிட்டே இருப்பா. அவ பேச்சு எனக்குப் பிடிக்கும். நான் கேட்கிறது அவளுக்குப் பிடிக்கும்.

பெங்களூர்ல இருந்து 26 கி.மீ தூரத்தில் என் வீடு. கடைசி பஸ் ராத்திரி 9 மணிக்கு. அதை மிஸ் பண்ணா வீட்டுக்குப் போறது ரொம்பக் கஷ்டம். அவளுக்காக, நான் தெரிஞ்சே பஸ்ஸை மிஸ் பண்ணின நாட்கள் ரொம்ப அற்புதமானவை. நடுராத்திரி லாரி பிடிச்சு வழில இறங்கி, வீட்டுக்கு நடந்தே போவேன்.

ஒரு நாள், 'நாம்ம ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற ரிலேஷன்ஷிப்புக்கு என்ன பேரு?'ன்னு கேட்டேன். 'தெரிய லைடா பிரகாஷ்'னு சொன்னா. 'நீ எப்பவும் என்கூட இருந்தா என்னால் எதையும் ஜெயிக்க முடியும்னு தோணுது. ஆனா, உன்னை என் காதலியா மட்டும் பார்க்கவே முடியலை. ரெண்டு பேருக்கும் காமம்கிற கெமிஸ்ட்ரி மட்டும் வரலை யே'னு நிஜமான வருத்தத்தோட கேட் டேன். 'நீ சொல்றது ரொம்பச் சரி! எனக்கும் என்னோட வாழ்க்கைல நீ கூடவே வரணும்னு ஆசையா இருக்கு. காமம் இல்லாம ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ புருஷன் பொண்டாட்டி ரிலேஷன்ஷிப் தேவையில்லை. நமக்குள்ளே காமம் இருக்கான்னு சோதிச்சுப் பார்த்துடலாமா?'ன்னு கேட்டா. எனக்கு ஷாக். ஆனா, அந்தப் பரிசோதனைல ஜெயிச்சுட்டா, அவ வாழ்நாளெல்லாம் கூட இருப்பாளேங்கிற ஆசை. ரெண்டு பேரும் தனியா ஓட்டல்ல ரூம் போட்டோம். எனக்குப் பிடிச்சவளோட நான். அவளுக்குப் பிடிச்சவனோட அவ. ஒரே கட்டில்ல கிடக்கோம். 'எந்த வரம் பையும் மீறலாம். யாரும் யாரையும் புகார் சொல்லக் கூடாது'னு எங்களுக்குள்ளே தார்மிக ஒப்பந்தம்.

விடிய விடிய அவ பேசிட்டிருக்கா. உஸ்தாத் ஷெனாய், வேர்ட்ஸ் வொர்த் கவிதைகள், காலேஜ், மழை, யானை, குழந்தைனு ஏதேதோ... நான் கேட்டுட்டேயிருக்கேன். ஒரு முத்தம் பரிமாறிக்கக்கூடத் தோணலை ரெண்டு பேருக்கும். அவ பேசறதைக் கேட்கிற சுகம், அவளைத் தொடுறதில் இல்லை.

'நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆக முடியாதுடா பிரகாஷ்'னு சொல்லிட்டா. எனக்கும் அதுதான் சரினு தோணுச்சு. அப்புறம் நான் சென்னை வந்தேன். லதா மேல காதல். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கிட்டோம். பொண்ணும் பொறந்து மூணு, நாலு வருஷம் ஓடிப்போச்சு. அவளுக்கும் கல்யாணமாயிடுச்சு. என் நேசத்துக்குரிய ஒருத்தி, வேறொருத்த னுடைய மனைவிங்கிற உண்மையைச் சந்திக்கத் தைரியமில்லாம அவ கல்யாணத் துக்குப் போகலை. கிரீட்டிங் மட்டும் அனுப்பினேன்.

அப்புறம் ஒரு நாள்... பெங்களூர்ல ஷ¨ட்டிங்ல இருக்கேன். திடீர்னு அவளைப் பார்க்கணும் போல இருக்கு. போன் பண் ணினா, 'பிரகாஷ் உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா. எங்க இருக்கேன்னு சொல்லு. இந்தியால எங்கிருந்தாலும் வர்றேன்'ங்கிறா. எனக்குச் சந்தோஷம். ரொம்ப நாளைக்குப் பிறகு, அந்த ஈவினிங் அவ பேச்சைக் கேட்கப்போறேன். மூணு வருஷக் கதைகள் வெச்சிருப்பா. நான் விரும்பி பஸ்ஸை மிஸ் பண்ணின அந்த ராத்திரி மறுபடி வரப்போகுது.

அவ வந்தா. இப்ப இன்னும் அழகா இருக்கா. இன்னொரு முறை திட்டமிடாமலேயே ஒரே கட்டில்ல உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறோம். 'அவன்கூட வாழப் பிடிக்கலைடா'னு விரக்தியா பேச ஆரம்பிச்சா. திடீர்னு கண்ணைப் பார்த்துக் கேட்டா... 'இன்னிக்கு உன்கூட வாழணும்னு ஆசையா இருக்கு. வாழலாமா?' அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. எனக்கு குழந்தையே பொறந்துடுச்சு. எனக்கு அவ மேல காமம் வந்துடக் கூடாதுன்னு போட்டுவெச்சிருந்த எல்லாத் தடுப்புகளையும் ஒரே வார்த் தையில் அடிச்சு நொறுக்கிட்டா. 'நீ பேசறதைக் கேட்கப் பிடிக்கும். நாலு வருஷத்துக்கு முன்னாடி இது நடந்திருந்தா நம்ம வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்கும். இப்ப கேட்கிறியேடி. அப்ப ஏன் நமக்குள்ள காமம் மட்டும் இல்லாமபோச்சு. இப்ப ஏன் வருது?'ன்னேன். உண் மைக்கு முன்னால் ரெண்டு பேரும் தலை குனிஞ்சு நின் னோம். 'உனக்காக எதையும் செய்வேன்'னு சொன்ன காலங்கள் கண்ல கசியுது. 'ஸாரிடி... ஷ¨ட்டிங் டைம் ஆகிடுச்சு. நைட் சென் னைக்கு ஃப்ளைட். இன் னொரு நாள் பார்க்கலாம்'னு சொல்லும்போதே என் குரல் உடையுது. அவளுக்காக ஷ¨ட்டிங்கை மிஸ் பண்ணத் தோணலை. காரணம், பயம். நாங்க ட்ரெஸ்ஸோட இருக்கோம். ஆனா, உண்மை எங்க முன்னால அம்மணமா நிக்குது. அதை எதிர்கொள்கிற பக்குவம் இல்லாம ஓடி ஒளிய ஷ¨ட்டிங்கைக் காரணமா காட்டி, ஓடி வந்துட்டேன்.

இப்பவும் அவ பிறந்த நாளுக்கு போன் பண்ணி விஷ் பண்றேன். என் போனை எதிர்பார்த்து அந்த ஒரு நாள் காத்திருப்பா. இடையில் இருக்கிற 364 நாள்ல என் ஞாபகத்தில் அவளும், அவ ஞாபகத்தில் நானும் எத்தனை தடவை வர்றோம்னு ரெண்டு பேருக்கும் தெரியாது.

இன்னும் சொல்றதுக்கு நிறைய உண் மைகள் இருக்கு. ஆனா, மனசுக்குள்ளே உட்கார்ந்திருக்கிற பொய்களெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து நின்னு வேணாம் வேணாம்னு சொல்லுது. என்ன செய்யலாம்..?
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:20:23 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-7
---------
நான் ஏழைன்னு சொன்னா நம்புவீங்களா?

ஆனா, அதான் உண்மை!

என் அஸிஸ்டென்ட் பையனைக் கூப்பிட்டு, 'டேய்... நீ பணக்காரனா? நான் பணக்காரனா?'ன்னு கேட்டேன். பையன் சிரிச்சான். 'டேய், சீரிய ஸாதான் கேட்கிறேன், சொல்லுடா கண்ணா!'னு திரும்பக் கேட்டா, 'ஜோக் பண்ணாதீங்க சார்! உங்ககிட்டே கை நீட்டிச் சம்பளம் வாங்குற நான் எப்படி சார் உங்களைவிடப் பணக்காரனா இருக்க முடியும்?'னு ஒரு கேள்வியையே பதிலா சொன்னான். சிரிச்சேன். 'உனக்கு எவ்ளோ கடன் இருக்கும்மா?'ன்னு கேட்டேன். 'ஐயே, கடன்லாம் எதுவும் இல்லை சார்'னான். 'ஏதாவது பணம் சேர்த்து வெச்சிருக்கியா?'ன்னு கேட்டேன். 'ஒரு ரெண்டு லட்ச ரூபா வரைக்கும் பேங்க்ல சேர்த்து வெச்சிருக்கேன் சார்'னு சந்தோஷமா சொன்னான். அப்போ, நான் சொன்னதுதான் கரெக்ட். அவனைவிட நான் நிஜமாவே ஏழை!

எனக்கு இப்போ 2 கோடி ரூபாய்க்கு மேல கடன் இருக்கு. டூயட் மூவிஸ் சார்பா மூணு படங்கள் வேலை நடக்குது. இதுக்கு முன்னால தயாரிச்ச படங்களிலும்கூட ஒரு தயாரிப்பாளரா எவ்ளோ பணம் பண்ணலாம்னு யோசிக்கலை. நல்ல படம் பண்ண சந்தோஷம் மட்டும்தான் முக்கியமா இருந்தது. நீட்டின பேப்பரில் காட்டின இடத்தில் கையெழுத்துப் போட்டு வாங்கிய கடனுக்கு, ஃபைனான்ஸியருக்கு அவர் சொன்ன தேதியில் கரெக்டா வட்டி போய் சேர்ந்தாகணும். இல்லேன்னா சாதி, மதம், மொழின்னு எந்த பேதமும் பார்க்காமல், அந்த நேரத்துக்கு வந்து நிக்கிற எந்தக் கப்பலிலும் நம்ம மானம் ஏறிப் போயிடும். ஏன்னா, நான் கடன்காரன்!

பெங்களூர்ல இருந்து 140 ரூபா யோடு பத்து வருஷத்துக்கு முன்னால சென்னைக்கு வந்த அந்த ராத்திரி இப்பவும் ஞாபகம் இருக்கு. சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; எங்கே தங்கப் போறேன்னும் தெரியாது. சின்னச்சின்ன ரோல்கள் நடிக்க ஆரம்பிச்சேன். 20,000 ரூபா சம்பளம் பேசி இருப்பேன். அவசரமா 5,000 ரூபா தேவைப்படும். உடனடியா ஒரே பேமென்ட்டா 10,000 ரூபா தந்தா, மிச்சப் பணம் தர வேண்டாம்னு சொல்ற அளவுக்குப் பண நெருக்கடியில் தவிச்சிருக்கேன். அப்படி இருந்தவனை நம்பி இன் னிக்கு 2 கோடி ரூபாய் கடன் தர்ற அளவு வளர்ந்திருக்கேனே, அது வெற்றியா?

இப்போ என் தேவைகள், வசதிகள் அதிகமாகி இருக்கு. சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பைன்னு என்கிட்டே வேலை பார்க்கிறவங்க எண்ணிக்கையே 40 பேரைத் தாண்டுது. அப்பப்போ ரிலாக்ஸ்டா போய்த் தங்க, மூணு வீடு ரசிச்சுக் கட்டியிருக்கேன். ஆனா, இப்பவும் பெண்டாட்டி பிள்ளை களோடு தினம் வாழ்றது வாடகை வீடுதான். வாழ்க்கையில எல்லாரும் ஜெயிக்கிறதுக்காகத் தான் ஓடிட்டு இருக்கோம். ஆனா, ஜெயிச் சுட்டோமா? எது வெற்றி? எது தோல்வி? வெற்றி ஒருத்தரை அழகாக்குதா, அசிங்கம் ஆக்குதா?

'கூல் அண்ட் லுக்'னு ஒரு படம். குறிக்கோளே இல்லாம திரிவான் ஹீரோ. இவ்ளோ பொய்கள் சொல்லி, இவ்ளோ ஏமாத்திப் பிழைக்கணுமாடானு திடீர்னு ஒரு கேள்வி வரும்போது, அவனுக்கு ஜெயில் ஞாபகம் வரும். ஒரு முறை ஏதாச்சும் திருடி மாட்டிக்கிட்டா, ஜெயில்ல போட்ருவாங்க. அப்புறம் பொய் சொல்லாம, யாரையும் ஏமாத்தாம, ஜெயில்ல நிம்மதியா இருக்க லாம். ஒவ்வொரு வேளையும் சாப்பாடு கிடைக்கும்னு நினைக்கவே சந்தோஷமா இருக்கும். ஜெயிலுக்குப் போகணும்னே ஒரு சின்ன கேஸ்ல அவனே மாட்டிக்குவான். ஜெயில்ல போட்ருவாங்க.

ஆனா, அவன் நினைச்ச மாதிரி இல்லை, ஜெயில்! சிறைச் சாலையில் நிறைய எழுதப்படாத சட்டங்கள் உண்டு. பெரிய கிரிமினல்களுக்கு, புதுசா ஜெயிலுக்கு வர்ற கைதிகள் பணிவிடை பண்ணணும். அப்படி ஏழெட்டு தாதாக்கள் சொல்றது தான் சட்டம். நம்ம ஹீரோ எவனையும் மதிக்க மாட்டான். மிரட்டிப் பார்ப்பாங்க, விரட்டிப் பார்ப்பாங்க. ம்ஹ¨ம், ஒரு வணக்கம்கூடச் சொல்லமாட்டான் நம்ம ஆள்.

அந்த ஜெயில்ல ஒரு விநோத மான பழக்கம். வாரத்துல ஆறு நாள் யாரும் சண்டை போடக் கூடாது. ஆனா, ஏழாவது நாள் சண்டைப் போட்டியே நடக்கும். யார் யாரோட வேணும்னாலும் மோதலாம். தோத்துட் டேன்னு சொன்னா விட்டுடணும். ஜெயிச்சவன் சொல்றதை தோக்கிறவன் கேட்கணும், அதான் ரூல்! குற்றவாளிகளுக்குள் ஒற்றுமை வந்துடக் கூடாதுன்னு சிறை அதிகாரிகளே அனுமதிக்கிற அசிங்கம் அது.

அந்த வாரம் ஹீரோவுக் கும் பத்து பெரிய குற்றவாளி களுக்கும் சண்டை. பத்துப் பேரில் பாக்ஸிங் தெரிஞ்ச ஒருத்தனை, ஹீரோவோடு மோத விடுவாங்க. பாக்ஸர்தான் ஜெயிப்பான்னு எல்லாருக்குமே தெரியும். ஹீரோவை முதல்லேயே தோல்வியை ஒப்புக்கச் சொல்லி அட்வைஸ் பண்ணுவாங்க. பிடிவாதமா மறுப்பான் ஹீரோ. பாக்ஸர் பத்து அடி அடிச்சா, இவனால ஒரு அடிதான் திரும்பி அடிக்க முடியும். பாக்ஸர் அடி நொறுக்குவான். ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இறங்கும். ஆனா, அவ்ளோ மோசமா அடி வாங்கினாலும், தன் தோல்வியை ஒப்புக்காம திரும்பத் திரும்ப எழுந்து நின்னு சண்டைக்கு நிப்பான் ஹீரோ. ஒரு கட்டத்தில், பார்க்கிற அத்தனை பேருக்கும் ஹீரோ மேல் பரிதாபம் வந்துடும். பார்த்தவங்களே டயர்டாகிட்டா, அடிக்கிறவன் நிலைமையைச் சொல்லணுமா என்ன? இதுக்கு மேல அடிக்கத் தெம்பில்லைன்னு சோர்ந்து கீழே விழுற நிலைமைக்குப் போயிடுவான் பாக்ஸர். அப்படி எல்லாரும் போன பிறகும் தட்டுத் தடுமாறி எழுந்து நின்னு, காத்துல அடிக்கிற மாதிரி கைகளை வீசி நிப்பான் ஹீரோ. இன்னமும் இன்னமும் அடி வாங்கத் தெம்பு இருக்கு. அடிக்கத் தான் யாருமே இல்லை. யார்ஜெயிச் சதுங்கிற கேள்விக்குப் பதிலே சொல்லாம படம் முடிஞ்சிடும். அடிச்சவன் ஜெயிச்சவனா? அடி வாங்கினவன் ஜெயிச்சவனா?

ரெண்டு அடி விழுந்ததுமே, வலி தாங்க முடியாம உடைஞ்சு கீழே விழுந்த கல் எல்லாரும் மிதிக்கிற படிக்கட்டாதான் ஆகும். ஆனா, ஆயிரம் ஆயிரம் அடி வாங்கும் பாறை, கண்ணுக்கு ஆயிரம் அடி, மூக்குக்கு ரெண்டாயிரம் அடி, உதட்டுக்கு மூவாயிரம் அடி, முகத்துக்கு பத்தாயிரம் அடின்னு வலி தாங்குற கல் இருக்கே, அதுதான் எல்லோரும் எந்நாளும் கும்பிடுற சாமி சிலையாகி, கர்ப்பக் கிரகத்துக்குள் போகுது.

வெற்றியைக் கொண் டாடும்போது, தோத்தவங்களைப் பற்றி நாம கவலைப்படுறது இல்லை. அங்கேதான் வெற்றி மூல மாவே நாம அசிங்க மாகிடுறோம். சென்னையில் ஒரு சேரியில் ஷ§ட்டிங்! கோட்&சூட்ல போய் நிக்கிறேன். சின்னச் சின்னப் பசங்க டிரெஸ் இல்லாம அம்மணமா நிக்கிறாங்க. அந்தக் குழந்தைகள் என்னைப் பார்க்கும்போது, நானே அம்மண மாகிட்ட மாதிரி உணர்வு. என்னைப் பார்க்கிறாங்களா,நான் போட்டிருக்கும் பல ஆயிரம்ரூபா மதிப்புள்ள டிரெஸ்ஸைப் பார்க் கிறாங்களானு கண்டுபிடிக்க முடியலை. இலங்கையில் ராணுவம் அப்பாவிகள் மேல் நிகழ்த்துற வன்முறைக்கு, நான் சேரிக்குள்ளே கோட்&சூட் போட்டு நிக்கிறது எந்த விதத்திலேயும் குறைஞ்சதில்லை. பசியோட இருக்கிறவனை வேடிக்கை பார்க்கவெச்சு சிக்கன் பிரியாணி சாப்பிடுறது வெற்றி இல்லை; வன்முறை.

'நீ ஜெயிச்சுட்டே பிரகாஷ்!'னு என் நண்பன் ஒருத்தன் சொல்லிட்டுப் போன நிமிஷத்தில் என் மனசுக்குள் ஓட ஆரம்பிச்சது தான் இது அத்தனையும். என் வெற்றி என்னை எவ்ளோ அசிங்கமாக்கி இருக்குன்னு தெரியலை. கொஞ்சமாவது அழகாக்கி இருக்கான்னும் புரியலை.

எனக்கு இப்படி, உங்களுக்கு எப்படி?


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:20:50 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com


Part-8
---------
கடந்த பத்து வருஷமா தமிழ் சினிமாவுல நடிகனா இருக்கேன். அஞ்சு வருஷமா தயாரிப்பாளரா இருக்கேன். இதோ, இப்ப 'கள்ள பார்ட்'னு ஒரு படத்தோட டைரக்ஷன் வேலைல தீவிரமா இருக்கேன். அடுத்த வருஷம் டைரக்டர் பிரகாஷ்ராஜ் ரெடி. நேரடியான ஒரு சினிமாக்காரனா இருந்து நான் தமிழ் சினிமாவைப் பார்க்கும்போது, எனக்கு ஒரு விஷயம் தோணுது... நான் ரசிகனா இருந்த தமிழ் சினிமா காலம் ரொம்ப உன்னதமானது! தமிழ் சினிமாவுல ஒரு நடிகனா அறிமுகமாகணும்னு ஆசைப்பட்டதுக்குக் காரணம், நான் பார்த்த தமிழ் சினிமாக்கள்தான்.

இயல்பா நான் பெண்களை அதிகம் நேசிக்கிறவன். அம்மா, தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள்னு எல்லாக் கோணங்களிலும் பெண்களை அதிகம் நேசிக்கிறேன். பெண்களை நேசிக்காம ஒரு ஆண் மிகச்சிறந்த படைப்பாளியாக ஆகவே முடியாது. புரட்சிகரமான இலக்கியத்திலேயும், சினிமாவுலேயும், காவியத்தி லேயும் நிச்சயமா ஒரு பெண் முக்கிய ரோல் வகிப்பா.

ஸ்ரீதர், பாலசந்தர், பாரதி ராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் மாதிரி டைரக்டர்கள் பெண் களை அவங்களோட பெண்மையோடு, நளினத் தோடு ஸ்க்ரீன்ல காட்டினாங்க. படைப்பாளிகளின் வரிசை அதுக்கப்புறம் தொடரவே இல்லை. அங்கங்கே விதி விலக்கா 'காதல்' மாதிரி சில நல்ல படைப்புகள் வருது. நியாயமா, தவறுகள்தான் விதிவிலக்கா இருக்கணும். நம்ம துரதிர்ஷ்டம் நல்லதெல்லாம் விதிவிலக்கா ஆகிடுச்சு.

ஸ்ரீதரோட நாயகி, முகத் துக்குக் கீழே ஆபாசம் இல்லாத ஒரு நளினத்தோடு இருப்பா. பாலசந்தரோட பெண் கண்ணுலேயே எல்லாத்தையும் சொல்லிடுவா. அவளோட பார்வை கார மாகவும் இருக்கும்; காமமாகவும் இருக்கும். பாரதி ராஜாவோட பெண்ணோ கண், உதடு, முகம், இடுப்பு இதால ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கட்டிப் போட்டுடுவா. பாவாடை, தாவணியில் ஒரு பெண்ணோட வசீகரத்தை பாரதிராஜா அளவுக்கு இன்னும் யாரும் காட்டலை. இப்ப '16 வயதினிலே' பார்த்தால்கூட, எங்க ஊர்ல நான் எப்பவோ பார்த்த பாவாடை தாவணிப் பெண்கள்தான் ஞாபகத்துக்கு வராங்க. விரசமில்லாம ஆண் பெண் உறவை, அதன் எல்லையைத் தொட்டு, அதே நேரம் தாண்டாமல் சொல்லக்கூடிய அழகும் கச்சிதமும் பாலுமகேந்திரா படங்கள்லதான் இருக்கும். மகேந்திரனோட 'உதிரிப் பூக்கள்' அம்மா லட்சக் கணக்கான வீடுகள்ல இன்னும் வாழ்ந்துட்டிருக்கா. 'முள்ளும் மலரும்' தங்கச்சியும் அப்படித்தான். மணிரத்னத்தோட பெண்ணைச் சும்மா பார்த்துட்டு இருந்தாலே போதும்... லைட்-ஷேடு வெச்சே அவ்வளவு அழகா காட்டுவார். இன்னும் நுணுக்கமா பார்த்தா, ஸ்க்ரீன்லேர்ந்து அந்தப் பெண்ணோட வாசனையைக்கூட நம்மால முகர முடியும்.

இந்தப் படைப்பாளிகளோட பெண்கள் போட்டுட்டு வர்ற டிரஸ் இன்னும் என் ஞாபகத்துல இருக்கு. மீண்டும் மீண்டும் பார்க்கிறதுக்காகப் பெண்ணோட அழகை ஒளிச்சு வைக்கிற உடைகளை தமிழ் சினிமாவில் பெண்கள் உடுத்திட்டு வந்த காலம் மலையேறிடுச்சு. கற்பனை களுக்கும், ஞாபகங்களுக்கும் அப்பாற்பட்ட அழகு அந்த டிரஸ்ல இருக்கும். இப்ப தமிழ் சினிமாவோட முகம் மாறிப்போச்சு. முகவரி மாறிப்போச்சு. ஹீரோயினுக்கே வேலை இல்லைனு ஆன பிறகு அம்மா, சகோதரி, தோழிக்கெல்லாம் எங்கே வேலை இருக்கப் போகுது? பெண்ணோட அழகு எதுங்கிற கான்செப்டே மாறிப்போச்சு. 'யூஸ் அண்டு த்ரோ' டம்ளர் மாதிரி பெண்களைத் தமிழ் சினிமா பயன்படுத்த ஆரம்பிச்சுடுச்சு. கடந்த தலைமுறை படைப்பாளிகளுக்கு நிறைய ஹீரோயின்கள் கிடைச்சதுக்கும், இப்ப ஹீரோயின்களை வெளி மாநிலம், வெளிநாடுகள்ல தேடுறதுக்கும் காரணமே யதார்த்தத்துலேர்ந்து சினிமா ரொம்ப தூரம் விலகிப் போயிடுச் சுங்கிறதுதான்.

காதல் வெளிச்சத்திலேயும், காமம் இருட்டிலேயும் இருக்கிறதுதான் வாழ்க்கையோட அழகு. காமத்துல காதலியோ, மனைவியோதான் இருக்க முடியும். காதல்லதான் அம்மா, சகோதரி, தோழி, மகள்னு நிறையப் பெண்கள் இருப்பாங்க. இந்தத் தலைமுறை இளைஞர்களுக்குக் காதலிக்கிறது எப்படின்னு தெரியலை. ஓர் அழகான காதல் கடிதம் எழுதத் தெரியலை. எவனோ எவனுடைய காதலிக்கோ அனுப்பின எஸ்.எம்.எஸ்.களையெல்லாம் ஃபார்வர்டு பண்ணிட்டிருக்கான். தன்னோட காதலி, தன்னோட மனைவி தன் ரசனைக்கு இருக்கணும்னு யோசிக்காம, அவனோட அபிமான ஹீரோ எந்த மாதிரி பெண்ணை ரசிக்கிறானோ அப்படியான பெண் தனக்கு வேணும்னு அலையறான்.

மும்பையில் ஒரு பி.பி.ஓ. கம்பெனியில் சாக்கடை அடைச்சுக் கிட்டு, தண்ணி போகலை. க்ளீன் பண்றப்ப, கம்பெ னிக்கு பயங்கர அதிர்ச்சி. ஆயிரக்கணக்கான 'காண்டம்'கள் டாய் லெட் பைப் லைனை அடைச்சிருக்கு. காமம் சாக்கடைக்குப் போயி டுச்சுங்கிற கசப்பான உண்மையைக்கூட என் னால ஜீரணிக்க முடிஞ்சுது. ஆனா, ரசிக்க ரசிக்கக் காதலிச்ச தலைமுறை தொலைஞ்சுபோய், 'காண்டம்' எப்படி யூஸ் பண்றதுன்னு மட்டுமே தெரிஞ்சு வெச்சிருக்கிற இன்றைய தலைமுறை மேல எனக்குப் பரிதாபம்தான் வருது. படைப்பாளிகளுக்கு, குறிப்பா சினிமாக்காரங்களுக்கு இப்பதான் பொறுப்பு உணர்வு அதிகமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். சரியா?


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:21:48 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com
 
Part-9
--------
வாய்ப்பு கிடைக்காததால்தான் ஊர்ல, உலகத்தில் நிறைய பேர் இன்னும் நல்லவங்களா இருக்காங்களோ!

வாய்ப்பு கிடைச்சா..?

எனக்கு என்னன்னா, வாழ்க்கையை முழுசா வாழ்ந்துடணும். வேறெந்தக் குறிக்கோளும் கிடையாது. சில விஷயங்கள், அந்த நேரத்துக்கு மட்டும்தான் தேவையானதா இருக்கும். ஆனா, அதோட பாதிப்பு, நம்ம வாழ்க்கை முழுக்கக் கூடவே வந்துடும். உள்ளங்-கை ரேகை போல அப்ப-டியே உள்ளுக்குள் ஒட்டிக்கிடும்... கரெக்ட்?

என் வாழ்க்கையிலும் அப்போ அப்படி ஒருத்தி வந்தா. நான் பெரிய நடிகனாகணும். இந்த இந்தியாவே என்னைத் திரும்பிப் பார்க்கணும். அது மட்டும்தான் அப்போ எனக்கு வெறி. சின்னச் சின்னதா நாடகங்கள் பண்ணிட்டிருக்கேன். வயித்துக்குப் போதுமானதே தவிர, வாழ்க்கைக்குப் பத்தாது!

ஏழைகள் எல்லா சுகங்களுடனும் வாழ முடியாது. நானோ, ஏழைக்கும் கொஞ்சம் கீழே! பெங்களூருக்கு வெளியே 30 கி.மீ. தூரத்தில் வாடகைக்கு ஒரு வீடு பிடிச்சேன். வீட்டுக்காரன், வீட்டை முழுசாக் கட்டி முடிக்கலை. அவனோட பணக் கஷ்டம், அதுக்குள்ள வீட்டை வாடகைக்குத் தந்துட்டான். என்னோட பணக் கஷ்டம், அந்த வீட்ல குடியேறிட்டேன்.

வீட்டு வேலையும் நடந்துட்டே இருந்த நேரம். புதுசா அங்கே சித்தாள் வேலைக்கு வந்தா செல்வி. சின்னப் பொண்ணு. பார்த்ததும் பக்குனு பூ பூக்கும்ல, அப்படி அழகு.

17 வயசிலேயே யாரோ ஒருத்தனைக் காதலிச்சு, அவனோட ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டவள். ஒரு வருஷத்துக்குள்ளயே அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டானாம். 18 வயசுல வாழாவெட்டி. இளமை திமிர்ற வயசு, எல்லாம் நொறுங்கின மனசு. என்ன பண்றதுன்னு தெரியலை. மொழி தெரியாத ஒரு ஊருக்கு வேலைக்கு வந்துட்டா. எல்லா சோகத்தையும் தாண்டி, அவளால சிரிக்க முடியுது. செல்வி சிரிச்சா, எனக்கோ சிலிர்ப்பா இருக்குது. அவளுக்கு நிறைய தாகம் இருக்குன்னு தெரியுது. எனக்கும் மனசோட ஒரு மூலையில் ஏதோ ஆசை முளைக்குது.

திடீர்னு மூணு நாள் பயங்கர மழை. எங்கேயும் வெளியில் போக வழி இல்லை. நான் ஹவுஸ் அரெஸ்ட். மழையும் குளிரும் தாங்காம, ஒதுங்கி வீட்டுக்கு வெளியில் நிக்கிறா செல்வி. தயங்கி நிக்கிறவளோட தவிப்பைப் புரிஞ்சுக்கிட்டு அவளை வீட்டுக்குள் அனுமதிச்சேன். ஒரே நாள்... அது அவளோட வீடா மாறிடுச்சு. என் சோப், ஷாம்பு போட்டுக் குளிக்கிறா. பாத்ரூம்ல அவ பாட்டுச் சத்தம் கேக்குது. வாசனையா வளைய வர்றா. கிச்சன்ல புகுந்து சமைக்க ஆரம்பிச்சுட்டா. அவ வாழ்க்கைச் சோகத்தையெல்லாம் சொல்றா. அப்பப்போ அழறா. சின்னதா சிரிக்கிறா. கிட்டத்தட்ட அந்த மூணு நாள்ல எனக்கு அறிவிக்கப்படாத பொண்டாட்டி மாதிரியே வாழப் பழகிட்டா. எந்தக் கட்டுப்பாடும் இல்லாத சூழ்நிலையில், ரெண்டு பேரும் எல்லாம் பகிர்ந்துக்கிட்டோம். நாலு சுவரும், ஒரு கூரையும் ரொம்ப சந்தோஷத்தைத் தருது. என் கூட சந்தோஷமா இருக்கிறா.

அவளோட வீட்டு வேலைக்கு வந்தவன், திடீர்னு ஒரு ராத்திரி என்கூட சண்டைக்கு வர்றான். செல்வியை நான் மயக்கிட்டேன்னு குடிச்சுட்டுக் கத்துறான். அவ மேல அவனுக்கும் ஒரு கண் இருந்திருக்கும் போல. நான் மௌனமா அவனை வேடிக்கை பார்க்-கும்போது, என்னை சப்போர்ட் பண்ணி, செல்வி அவனோட சரிக்குச் சமமா சண்டை போடுறா. என் வாழ்க்-கையில் இப்படியெல்லாம் நடக்க-ணு-மான்னு எனக்குத் துக்கமா இருக்கு. எனக்காக அவ ஆக்ரோஷமா கத்துற-தைப் பார்க்க ஆச்சர்யமாவும் இருக்கு.

ரெண்டு பேரும் சேர்ந்து இருந்-தோமே தவிர, அவகிட்ட பேசறதுக்கு என்கிட்ட எதுவும் இல்லை. சில மணி நேரம் அவ சோகக் கதையைச் சொன்னதுக்குப் பிறகு, அவளுக்கும் என்கிட்ட பேச எதுவும் இல்லை. ஆனாலும் அந்த உறவு தொடர்ந்தது.

பகலெல்லாம் வீட்டு வேலை பார்ப்பா. சாயந்திரம் வீட்டுக்குள் வந்துடுவா. நான் இல்லேன்னாலும் அவ வீட்டிலேயே இருப்பா. ஒரு நாள் நான் சாவியைத் தர மறந்துட்டுப் போயிட்டேன். திரும்ப வரும்போது, வழி மறிச்சு சண்டை போடுறா. 'எனக்கு ஒரு டூப்ளிகேட் சாவி போட்டுத் தா!'ங்கிறா. இப்படி புரொஃ-பஷ-னல் பொண்டாட்டி ஆகிட்டாளேன்னு அதிர்ச்சியாவுது.

சில நாள் சேர்ந்து சந்தோஷமா இருந்ததுக்கு, வாழ்நாள் முழுக்கச் சேர்ந்து வாழ வேண்டி வந்துடுமோன்னு ஏனோ பதறுது. ஏன்னா, என் டேஸ்ட்டுக்கு அவகூட வாழ்க்கை முழுக்க எப்படி வாழ முடியும்? அவ தாகத்தைத் தீர்த்துக்கிற நதியா நான் இருக்கேனா? இல்லை, என்னை அவ குடத்துல அடைச்சுவெச்சுத் தேவைப்படும்போதெல்-லாம் குடிக்கப்போறாளா? அது எனக்கும் தெரியலை. அவளும் சொல்லலை. நாங்களும் பேசிக்கலை!

மூணு மாசம் நடந்துட்டிருந்த இந்த நாடகத்துக்கு திடீர் க்ளைமாக்ஸ். ஒரு நாள் காலையில், 'எனக்கு இங்கே வேலை முடிஞ்சிருச்சு, நான் வேற இடத்துக்குப் போறேன்!'னு சொல்றா செல்வி. தகவலா சொல்றாளா, இல்லேன்னா, 'என்னை என்னடா பண்ணப்-போறே?'ன்னு கேட்கிறாளான்னு புரியலை. ஒருவேளை அப்போ செல்வி, 'என்னை ஏத்துக்கோடா!'ன்னு கேட்டா, சம்மதிச்சுடுற மனநிலையில் இருந்தேன். மன சாட்சிக்கும் குற்ற உணர்ச்சிக்கும் பயந்து அப்படி ஒரு மனநிலையில் இருந்தேன். ஆனா, அவ அப்படி எதுவுமே கேக்கலை!

கிளம்புற நிமிஷம் வரை சோகமா இருந்தா செல்வி. அவ மனசுக்குள் என்ன ஓடுதுன்னு படிக்கத் தெரியலை. 'போகாதே'னு சொல் லவும் என் சுயநலம் இடம் தரலை. என்னையே பார்த்துட்டிருந்தவ, திடீர்னு தேம்பித் தேம்பி அழுதா. என்கிட்டே அப்போ எழுநூறு ரூபா பணம் இருந்தது. அதைச் செல்வியிடம் கொடுக்கலாமா, வேண்டாமான்னு குழம்பித் தவிச்ச நிமிஷங்கள் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கு. 'என்னையே தந்தேனேடா. காசு கொடுத்து என்னைக் கேவலப்படுத்திட்டியேடா?'ன்னு செல்வி கேட்டுட்டா, அந்தக் காயம் என் வாழ்நாள் முழுசும் ஆறாது. எனக்கே அப்படின்னா, நான் நடந்துகிட்டவிதம், எத்தனை ஜென்மம் எடுத்தா செல்விக்கு ஆறும்?

மனசு யோசிக்கும்போதே, புத்தி தப்பா முந்தி, என் பாக்கெட்ல இருந்த மொத்தப் பணத்தையும் எடுத்து செல்வியிடம் நீட்டிடுச்சு. அந்தப் பணத்தைப் பார்த்துச் சிரிச்சா செல்வி. எதுவுமே பேசலை. அவமானத்தில் என் உடம்பெல்லாம் கூசுது. 'போகணுமா?'ன்னு கேட்டேன். 'என் விதி!'ன்னு அழுதுட்டே விறு-விறுன்னு எழுந்து போயிட்டா.

அன்னிக்கு ஆறுதலா, ஆதர-வா ஏதாச்சும் பேசியிருந்தா, செல்விக்கு இன்னொரு வாழ்க்கை கிடைச்சிருக்கும். முப்பது ரூபா கூலிக்கு தினம் தினம் வேர்வை சிந்துற பொண்ணுக்கு, எழுநூறு ரூபா அப்போ பயன்பட்டிருக்கலாம். ஆனா, வாங்கலையே. வாழ்க்கையில் பணம் முக்கியமில்லைன்னு எனக்குப் புரியவெச்சா செல்வி!

வருஷங்கள் ஓடிப்போச்சு. இப்போ செல்வி எங்கே இருக்கா? என்னை போஸ்டர்ல, தியேட்டர்ல பார்த்து அடையாளம் கண்டுபிடிச்சிருப்பாளா? என்னைப் பற்றி அப்போ என்ன நினைச்சா, இப்போ என்ன நினைப்பா? என்னைத் தேடி அவ வந்திருக்கலாமே, காசு கொடுத்து கேவலப்படுத்தினவனை இன்னொரு முறை சந்திக்க வேண்டாம்னு முடிவெடுத்திருப்பாளோ? இல்லை, செல்வி இப்போ எங்கேயோ நல்லா இருப்பாளோ? அவ வாழ்க்கையில் ஒரு நல்லவனைச் சந்திச்சிருப்பாளோ? கேள்விகள்... கேள்விகள்... கேள்விகள்.

என்னை மன்னிக்கிற மனசு அவளுக்கு அப்பவே இருந்தது. ஒருவேளை திரும்ப செல்வியை நான் சந்திக்க நேர்ந்தால், அவளிடம் மன்னிப்பு கேட்க என் இப்போதைய கௌரவம் இடம் கொடுக்குமா?

ஹலோ, வாழ்க்கை இருக்கே, அது எங்கே, எப்போ, எப்படி நிறுத்தும்னு யாருக்குத் தெரியும்?
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:22:45 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-10
-----------
அனுபவம்தான் கடவுள்!' - இது கண்ணதாசனின் அனுபவம்!

கோயில், பூசாரி, பூஜை, பிரசாதம்... இப்படி எதுவுமே இல்லாத கடவுள் - அனுபவம்!

அடுத்த பிறவியைப் பற்றியெல்லாம் யோசிக்காம, இந்தப் பிறவியில் வாழ்ந்துடணும்டான்னு நினைக்கிறவங்களுக்கு அனுபவமே சாமி!

'எறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன், யானை வந்த தடா! என் இதயத் தோலை உரித்துப் பார்த்தேன், ஞானம் வந்ததடா!'ங்கிற கவிஞரின் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோல மயில் என் துணையிருப்பு'ன்னு பகிரங்கமா, தைரியமா தன் அனுபவத்தைப் பாட்டாச் சொன்ன கவிஞன் அவன். அதனால தான் அடுத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு பயந்து சாகாம, தன் வாழ்க்கையை முழுமையா அனுபவிச்சு வாழ்ந்துட்டுப் போக முடிஞ்சுது அவனால!

இந்த அனுபவம் இருக்கே, அது எங்கிருந்து, எப்போ, யாருக்கு எப்படிக் கிடைக்கும்னு யாருக்குத் தெரியும்?

அனுபவம்தான் பாடம். அனுபவம்தான் ஞானம்!

நண்பன் சிரிச்சான்னா, நமக்கு சந்தோஷமா இருக்கு. எதிரி சிரிச்சான்னா, கஷ்டமா இருக்கே! ரெண்டுமே சிரிப்புதான். ரெண்டுமே சந்தோஷம்தான். ஒருத்தனோட சிரிப்பு, நமக்கு சந்தோஷம். இன்னொருத்தனோட சிரிப்பு, நமக்குக் கஷ்டம். என் சிரிப்போட அர்த்தம் தெரியாம என்னைச் சுத்தி இருந்த வங்க குழம்பின ரகசியத்தை, சில வருஷங்களுக்குப் பிறகு இப்போ உங்ககிட்டப் பகிர்ந்துக்கிறேன்.

சென்னையில் உள்ள ஒரு எறும்புத் தோலை உரிச்சுப் பார்த்தா, பெங்களூர் யானை ஒண்ணு வருது.

ஷ§ட்டிங் முடிஞ்சு காரில் டைரக்டர் சரணும் நானும் வந்துட்டிருக்கோம். யாரைப் பத்தியும் கவலைப்படாம, சென்னை மாநகரம் பரபரப்பா இயங்கிட்டு இருக்கு. அப்ப 'ப்ரியம்'னு ஒரு படம் ரிலீஸாகி இருக்கு. பிரகாஷ்ராஜ்னு ஒரு நடிகன் 'டூயட்' படத்தில் அறிமுக மாகி, தமிழ்நாடு முழுக்க தெரிஞ்ச ஒருத்தனா மாறியிருந்தான். என் முகத்தைப் பார்த்ததுமே, நான் ஒரு தடவைகூடப் பார்த்திராத முகங்கள் பரவசமாகி, ஹாய் சொல்றாங்க. டாட்டா காட்டுறாங்க. வேகமா வர்ற வாகனங்களைப் பற்றிய கவலையே இல்லாம, ஒரு நடிகனுக்கு ஹலோ சொல்ல, தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறாங்க.

அந்தக் கர்வத்தில், ஒரு சிக்னலில் வண்டி நின்னப்போ கார் கண்ணாடியை ஏத்திவிட்டு லேசா தலையைத் திருப் பிப் பார்க்கிறேன். 'ப்ரியம்' படப் போஸ்டர் பெரிசா ஒரு சுவர்ல ஒட்டியிருக்கு. போஸ்டர்ல மேலே ஹீரோ; கீழே நான். கொஞ்சம் பெரிசா என் முகத்தை போஸ்டர்ல போட ஆரம்பிச்ச நேரம்... 'நமக்கும் ஃபேஸ் வேல்யூ வந்துடுச்சே!'னு என் மனசுக்குள் லேசா பெருமை. திடீர்னு ஒருத்தன், போஸ்டரில் இருக்கிற என் முகத்தை மறைச்சு நின்னான். சந்தோஷமா என் மூஞ்சியில் ரசிச்சு ஒண்ணுக்கு அடிக்க ஆரம்பிச்சான். அவனோட அவசரத்தை ரொம்ப நிதானமா இறக்கிவிட்டுட்டிருந்தான்.

என் அசிஸ்டென்ட்ஸ் எல்லாம் கோபத்தோட காரைவிட்டு இறங்கப் பார்த்தாங்க. எனக்கு குபீர்னு சிரிப்பு வந்துடுச்சு. ''அவனோட அவசரத்தில் கூட, எனக்குப் பாடம் சொல்லித் தர்றான்டா! அவனையும் டிஸ்டர்ப் பண்ணி, என்னையும் ஏண்டா அவமானப்படுத்துறீங்க? விட்ருங்க, நான் இப்ப நடிகனாகிட்டேன். நீங்க என்கூட இருக்கீங்க. அதனால உங்களுக்குக் கோபம் வருது. அந்தப் போஸ்டரில் வேற ஒருத்தனோட மூஞ்சி இருந்தா, நீங்களும் நானும் சிரிச்சுட்டுதானே போயிருப் போம்''னு அவங்களைத் தடுத்துட்டு, முதல் வேலையா கார் கண்ணாடியை இறக்கினேன்.

வண்டி கிளம்பிச்சு. எதிர்க்காற்று முகத் தில் பட்டதும், பெங்களூருக்குப் பறந்தது மனசு. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா நான் நாடகங்களில் இயங்கிய காலம் அது. சின்ன வயசு. இளமைத் திமிர். நிச்சயம் ஜெயிப்பேன்னு 200% நம்பின காலம். பகல் எனக்கு ராத்திரியாகவும், ராத்திரி எப்பவும் பகலாகவும் இருந்த காலம்.

அந்த நாளோட என் தாகத்துக்கு எந்த ஊரில் தண்ணி குடிப்பேன்னு தெரியாது. அந்த நாளோட என் பசிக்கு எந்த வீட்ல சாப்பிடுவேன்னு தெரியாது. ஒவ்வொரு ஊர்த் தண்ணிக்கும் ஒரு ருசி. ஒவ்வொரு வீட்டுச் சாப்பாட்டுக்கும் ஒரு ருசி. தெரு நாய்கள் துரத்துற, நிலா இல்லாத ராத்திரிகளில் புரோட்டா கடை தேடித் திரிவேன். வயிறு நிறையப் பசி இருக்கும். பாக்கெட் நிறைய பணம் இருக்கும். வாங்கிச் சாப்பிட எந்தக் கடையும் திறந்து இருக்காது. சில நேரங்கள் வயிறு நிறையப் பசி இருக்கும். பாக் கெட்ல பத்துப் பைசா இருக் காது. எல்லாக் கடைகளையும் திறந்து வெச்சிருப்பாங்க. வாசத்திலேயே பசி ஆத்துற கடைகளைக் கடந்து போவேன்.

அப்போ நடந்தது அது... என்னுடன் நாடகத்தில் நடிச்ச என் சக போட்டியாளன் கன்ன டத்தில் பெரிய சினிமா நடிகன் ஆகிட்டான். நான் எடுத்த எல்லா முயற்சிகளும் அட்டர் ஃப்ளாப். நேத்து வரைக்கும் வீதி நாடகத்தில் என்கூட நடிச்சிட் டிருந்தவன் இன்னிக்கு பெரிய சினிமா நடிகனாகிட்டானேன்னு எனக்கு மனசுக்குள்ளே பொறா மைப் புயலடிக்குது.

ஒரு நாள் ராத்திரி, ஒரு ப்ளே முடிச்சுட்டு, கையில் காசு இல்லாம நடந்து போயிட்டிருந்தேன். மனசுக்குள்ளே அடக்கிவெச்ச பொறாமை மாதிரி, அவசரமா வருது ஒன் பாத்ரூம்.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மாதிரி பெரிய நகரங்களில் தடுக்கி விழுந்தா, டெலிபோன் பூத் இருக்கும். ப்ரவுஸிங் சென்டர் இருக்கும். ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள் இருக்கும். ஆனா, அவசரத்துக்கு ஒன் பாத்ரூம் போகணும்னா வாய்ப்பே இருக்காது. வெளி நாடுகளில் வெட்டவெளியில் ஒன் பாத்ரூம் போனா, ஃபைன் போட்டு காசு கேப்பாங்க. நம்ம நாட்டில் சுற்றுப்புறச் சூழலை அசுத்தம் பண்ணக்கூடாதுன்னு பாத்ரூம் தேடிக் கண்டுபிடிச்சு உள்ளே போனா, ஒரு ரூபா கேப்பான். ஒரு ரூபா இல்லாதவன் எங்கே போவான்?

இப்படியெல்லாம் யோசிச்சுக் கிட்டே ஒரு டிரெயினேஜ் பக்கம் ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து நின்னா, அங்கே சுவரில் என் சக போட்டியாளனா இருந்து சினிமா நடிகனாகிட்டவனோட கலர் போஸ்டர். என்னைப் பார்த்து ஏளனமாச் சிரிக்கிறான். அது என்னை வெறுப்பேத்துற மாதிரியே இருக்கு. சந்தேகத்தில் பின்தொடர்ந்து வந்த தெருநாய்கள் என்னைச் சுத்தி நிக்க, 'உன் நிலைமை இப்படி ஆகிடுச்சேடா!'ன்னு அவன் சிரிக்கிற மாதிரியே எனக்குத் தோணுது. ரெண்டு பேர் ஒண்ணா பயணத்தை ஆரம்பிச்சு, அதுல ஒருத்தன் ஜெயிக்கிறதைக்கூட மனசு பொறுத்துக்கும். ஆனா, ஜெயிச்சவன் நம்மைப் பார்த்து நக்கலாச் சிரிச்சுட்டான்னா, பொறுமை போய் பொறாமை வந்துடும். எனக் கும் வந்தது. 'ஒரு நாள் உன்னைவிடப் பெரிய நடிகனாகி, இதைவிடப் பெரிய போஸ்டரில் நின்னு சிரிப்பேன்டா!'ன்னு சொல்லிக்கிட்டே அவன் முகத்து மேல ஒண்ணுக்கு அடிச்சேன். இப்போ நினைச்சா, எனக்கு வருத்தமாவும் சிரிப்பாவும் இருக்கு. பொறாமை ஏற்படுத்துற ஞாபகங்களைவிட, அது நம்ம கண்களில் இருந்து மறைக்கிற உண்மைகள் அதிகம்.

இப்போ நானும் ஜெயிச்சுட்டேன். நாலஞ்சு கன்னடப் படங்களில் விறுவிறுன்னு மேலே வந்தவன், இப்போ அட்ரஸே இல்லாம இருக் கான். என்ன பண்றான்னுகூட எனக் குத் தெரியாது. ஆனா, இத்தனை வருஷங்களுக்குப் பிறகு, என் மூஞ்சி இருக்கிற போஸ்டர்லயும் இப்படி எனக்குச் சம்பந்தமே இல்லாதவன் ஒருத்தன் ஒண்ணுக்கு அடிப்பான்னு அப்ப நான் யோசிக்கலையே!

என் பொறாமையின் கோர முகம் அப்போதான் எனக்கே அசிங்கமா தெரிஞ்சுது. இப்பவாவது உண்மையை ஏத்துக்கிற பக்குவம் வந்திருக்கேன்னு இன்னொரு பக்கம் சந்தோஷம்தான்!

ஏத்துக்கிறேனோ இல்லையோ, நிச்சயமா எதையும் எதிர்கொள்ளணும் கிறதில் தீவிரமா இருக்கேன். வேற வழி?


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:23:16 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-11
----------
எத்தனை பேருக்கு நான் பயன்படுறேன்?

எத்தனை பேரை நான் பயன்படுத்துறேன்?

இந்தக் கேள்விகளைக் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கலாமா, இப்போ?

'பொய்' பட ரிலீஸ் வேலைகளில் கொஞ்சம் பிஸியா அலைஞ்சுட்டு இருக்கும்போது பல 'பொய்'களைச் சந்திக்க நேர்ந்தது. வீட்டில், வெளியே, ஆபீஸ்லன்னு பொய்களில் ஒளிகிற மனிதர்களைச் சந்திச்சிருக்கேன். சில நேரம் நானேகூட ஒளிஞ்சிருக்கேன். இப்போ, என் நெருக்கடி நேரத்தில் நிறைய மனிதர்கள் செல்போனிலும் ஒளிவதைக் கண்டுபிடிச்சேன். ஏதேதோ விஷயங்களுக்காக என்னைத் தேடிப் போன் பண்றவங்க, இப்போ நான் போன் பண்ணும்போது கிடைக்கவே மாட்டேங்கறாங்க. ஏதேதோ புதுப் புது காரணங்கள், பொய்கள் கேட்க வேண்டியிருக்கு. நானும் புதுப் புது காரணங்கள், பொய்கள் சொல்ல வேண்டியிருக்கு.

எப்போ நான் மத்தவங்களுக்குத் தேவைப்படுறேன், மத்தவங்க எப்போ எனக்குத் தேவைப்படுறாங்கன்னு மனசுக்குள் லேசா குழப்பம். 'கஷ்டம் வர்ற காலம் இருக்கே, அது எப்பவுமே காஸ்ட்லி! காரணம், அப்போதான் உண்மையான நண்பர்கள் அடை யாளம் தெரிவாங்க. நிறைய முறை நிறைய அனுபவங்கள் கிடைச்சாலும், ஒவ்வொரு முறையும் அந்த த்ரில் ரொம்பப் புதுசாவே இருக்கு. இந்தப் பரபரப்பில் என் மனைவிக்குப் பிறந்த நாள். வருஷத்தில் பாதி நாள், நான் ஊரில் இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும், வீட்டில் இருக்க முடியாது. வீட்டுக்கே கெஸ்ட் மாதிரி வந்து போற வாழ்க்கை. பிறந்த நாள், கல்யாண நாள் போல ஒரு சில நாட் களில்தான் வீட்டில் இருப்பவர்களைச் சந்தோஷப்படுத்த முடியும்.

திடீர்னு ஒரே நாளில், என் மனைவி யின் பர்த்&டேயை அழகாகக் கொண்டாடுவதுன்னு முடிவு பண்ணி பார்ட்டி ரெடி பண்ணினேன். என் மனைவிக்கு யார் யாரையெல்லாம் பிடிக்குமோ, அவங்களையெல்லாம் வரவழைச்சேன். 'இப்படி ஒரு நெருக்கடியில் இந்த ஃபங்ஷன் தேவையா?'னு நண்பர்கள் கேட்டாங்க. 'இத்தனை நெருக்கடியிலும் நான் எப்படி என் மனைவியைக் காதலிக்கிறேன்னு உணர்த்தக் கிடைச்ச அழகான வாய்ப்பு இது. இதை மிஸ் பண்ணிட்டு எதுக்கு வாழ்க்கை? காலையில் படவேண்டிய கவலைக்கு ஒரு அழகான ராத்திரியை நான் ஏன் தொலைக்கணும்?'னு சிரிச்சேன்.

அப்படி, வாழ்கிற இடத்தில் தொலையாத நான், வேடிக்கை பார்க்கப் போன இடத்தில் வேண்டுமென்றே என்னைத் தொலைச்சுக்கிட்ட சுவாரஸ் யத்தைச் சொல்றேன்...

ரெண்டு வாரத்துக்கு முன்னால், பத்து நாள் மொரீஷியஸ் கடற்கரையில் தான் என் வாழ்க்கை. 'மொழி' பட ஷ¨ட்டிங். நான், ஜோதிகா, பிருத்வி ராஜ், சொர்ணமால்யா, ராதாமோகன், விஜின்னு எனக்குப் பிடிச்ச 'கேங்'.

''முதல் நாள் ஷ¨ட்டிங் கிடையாது, லெட்ஸ் செலிபரேட்!''னு சொன்னதும் டைரக்டர் ராதாமோகனுக்கு ஷாக். ஒரேயரு ஸீன் மட்டுமாவது எடுக் கணும்னு மல்லுக்கட்டி, கொஞ்ச நேரம் ஷ¨ட்டிங் போச்சு!

அற்புதமான சீஸன்... அதுதான் அதிர்ஷ்டம். கடற்கரையில் மெழுகு வத்தி ஏத்திவெச்சு, அந்த வெளிச்சத்தில் ஜாலியா 'அந்தாக்ஷரி' நடத்தினோம். மொரீஷியஸில் இந்த சீஸனில் காற்று இருக்கும். ஆனா, வம்பு பண்ணாத, அன்புக் காற்று. மெழுகுவத்தி யின் கடைசித் துளி எரிவதை எங்க ளோடு சேர்ந்து ரசிக்கும் காற்று!

மொரீஷியஸில் ஏழாவது நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தினம்.

ஷ¨ட்டிங் நடந்துட்டு இருந்த இடத்தைச் சுற்றி மலைகள். மலையெல்லாம் கரும்பு வயல்கள். எல்லோரும் பிஸியா இருந்தாங்க. எனக்கு அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு வேலை இல்லேன்னு தெரிஞ்சதும், ஒரு 'வாக்' போயிட்டு வரலாம்னு தோணுச்சு.

அடுத்த விநாடி, யாரிடமும் எதுவும் சொல்லாமல் அந்த மலைப் பாதையில் நடக்க ஆரம்பிச்சேன். நடந்து நடந்து ரொம்ப தூரம் வந்துட்டேன். ஒரு மேட்டின் வளைவில் திரும்பி சரிவுக்குள் இறங்க ஆரம்பிச்சதும், சடார்னு நிமிர்ந்து பார்த்தால், என்னைச் சுற்றி தொடுவானம் போல நாலாபக்கமும் மலைகள், கரும்புக் காடுகள். ஏழெட்டு கிலோமீட்டர் தூரத்துக்கு எந்தப் பக்கமும் மனுஷன் இல்லை. ஒரு மணி நேரத்தில் நான் தனியனாகிட்டேன்.

அந்த மலை தன் கையில் ஒரு பூங்கொத்தைப் பிடிச்சிருப்பது போல தூரத்தில், உச்சியில் ஒரே ஒரு இடத் தில் மட்டும் ஒரு டஜன் மரங்கள். ஆசையா இருக்கவும் அதை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். ஏதோ, இந்த உலகத்தில் இப்போ நான் ஒருத்தன் மட்டும்தான் உயிரோட இருக்கேன்கிற மாதிரி ஃபீலிங்!

எந்த மனுஷனும் இல்லாம ஓர் இடம் இவ்ளோ அழகா இருக்கான்னு ஆச்சர்யம்! எந்த மனுஷனும் இல்லாம போனதால்தான் இந்த இடம் இவ்ளோ அழகா இருக்கோன்னும் தோணுது. இப்போ இப்படியே நான் தொலைஞ்சுபோனா, யார் என்னைத் தேடுவாங்கன்னு திடீர்னு தோணுச்சு!

ஷ¨ட்டிங் ஸ்பாட்ல அவங்க வேலை முடியற வரைக்கும், நிச்சயம் என்னைத் தேட மாட்டாங்க. ஒருவேளை அவங்க வேலைக்கு நான் இருந்தாக வேண்டிய கட்டாயம் வந்தா, என்னை நிறைய கண்கள் தேடும். எப்போ நான் அவங்களுக்குத் தேவைப்படுவேன்?

என்னை எப்பவும் தேடுற நண்பர்கள் எவ்வளவு நேரம் என்னைத் தேடாம இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆசை வந்தது. மத்தவங்க பார்வையிலிருந்து தொலைஞ்சு போக ணும்னுதான் நடக்க ஆரம்பிச் சேன். ஆனா, கொஞ்ச நேரத் தனிமையில் நான் எனக்குள்ளேயே தொலைய ஆரம்பிச்சுட்டேன்.

ஒரு டைரக்டரா என்னைத் தேட வேண்டிய அவசியம் ராதாமோகனுக்கு உண்டு. யாராவது அசிஸ்டென்ட்டை விட்டு என்னைத் தேடிக் கூட்டிட்டு வரச் சொல்லலாம். அசிஸ்டென்ட் மனசுக்குள்ள என்னைத் திட்டிட்டே தேடக் கிளம்புவான். அவன் பாஸ§க்கு முன்னால், உடனடியா என்னைக் கொண்டுபோய் நிறுத்தலேன்னா, அவன் திட்டுவாங்க வேண்டியிருக்குமே! அவன் தேடல் என்னைக் கண்டுபிடிக்கிறது இல்லே; அவனோட டைரக்டர் சொன்ன வேலையைச் செய்வது!

ராதாமோகன் என்னைத் தேடும்போது என்ன வார்த்தையில் கூப்பிடுவார்? 'பிரகாஷ் சார்'னு கூப்பிடுவார். நான் எப்படி 'சார்' ஆனேன்? என் வயசா, என் அனுபவமா, என் அந்தஸ்தா? அவரோட அஸிஸ்டென்ட் என்னை வெறுமனே 'சார்'னு கூப்பிட்டிருப்பான். ஏன் என் பேர் சொல்லாம சார்னு மட்டும் கூப்பிடுறான்? தயாரிப்பாளர்ங்கிற மரியாதையா? என்னை 'பிரகாஷ்'னு பேர் சொல்லிக் கூப்பிடக்கூடிய நண்பர் விஜி என்னை என்ன மாதிரி தேடுவார்? ஒரு சக நடிகனைக் காணோம்னு மற்ற நடிகர்கள் எப்படித் தேடுவாங்க? என்ன பேசிக்குவாங்க... இப்படி யோசனைகள் ஓடும்போது, மனசு ஃப்ளைட் பிடிக்காமலேயே, சென்னைக்குப் பறந்து வந்துடுச்சு.

என்னை என் மனைவி எந்த நேரத்தில் தேடுவா? என்ன காரணத்துக்காகத் தேடுவா? போன் பண்ணி மூணு நாள் ஆகுதே, பையன் மறந்துட்டானோனு பதறி போன் பண்ணலாம். 'காதலிகளோட பேசுற சுவாரஸ்யத்தில் என்னை மறந்துட்டானோ'னு கோபத்தில் தேடலாம். வெளிநாட்டுக்குப் போனவன் ஒழுங்கா சாப்பிடுறானாங்கிற அக்கறையில் தேடலாம். என் பொண்ணு எப்போ தேடுவா? அவளுக்கு ரேங்க் கார்டு தந்தா நான் கையெழுத்துப் போடணும். நல்ல மார்க் வாங்கினா எனக் குத்தான் முதலில் காட்டணும்னு யோசிப்பா. அவ கனவில் நான் வந்துட்டா, உடனே என்கிட்டே பேசியாகணும். அது எந்த நேரமா இருந்தாலும்,எந்த இடமா இருந்தாலும் என் குரல் கேட்டாகணும். என் சின்னப் பொண்ணு என்னைத் தேடுற அளவு வளரலை. என்னைப் பார்த்தா சந்தோஷப்படத் தெரியும் அவளுக்கு. அவ்ளோதான்!

என் அம்மாவுக்கு எப்போ நான் தேவைப் படுவேன்? மொரீஷியஸில் தன் பிள்ளையைக் காணோம்னு அம்மா தேடுறதுக்கும் அஸிஸ் டென்ட் தேடுறதுக்கும் என்ன வித்தியாசம்? இவங் களுக்கு எல்லாம்தேவைப் படும்படியா நான் இருக் கிறது சந்தோஷம். எனக்கு இவங்க எல்லாம் எப்போ தேவைப்படுவாங்கன்னு யோசனை வந்தது.

எல்லோரும் எல்லோரையும் எல்லா நேரத்திலும் தேடுவதில்லை. ஒவ்வொருத்தருக்குள்ளேயும் ஒரு உலகம் இருக்கும்.பெரும்பாலும் தேவைகள் வரும்போதுதான் நட்பு, காதல், உறவு, உணர்வு எல்லாமே அர்த்தமுள்ளதா இருக்கும்.

எத்தனை பேருக்கு நாம் பயன்படுறோம்? எத்தனை பேரை நாம் பயன்படுத்துறோம்?

இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முடியுதா உங்களால்?
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:24:12 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-12
------------
நவம்பர் 1...

இறந்துபோன என் மகன் சித்தார்த்தின் பிறந்த நாள். இனி அவன் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் நான் வாங்கின அறை ஞாபகம் வரும். என் மனைவிதான் அறைஞ்சா. அதுவும் நாலு பேர் எதிரில், அறைஞ்சா. அஞ்சு விரலும் கன்னத்தில் பதியுற மாதிரி பொளேர்னு அறைஞ்சா!

ஏதேதோ நம்பிக்கைகள் நம்மைத் தொடர்ந்து வழி நடத்திக்கிட்டே போறதால்தான் அழறோம், சிரிக்கிறோம். இந்த நம்பிக்கைன்னு ஒண்ணு இல்லைன்னா, மனுஷன் என்ன ஆவான்? நூத்துக்கு தொண்ணூறு பேர் தற்கொலை பண்ணிட்டிருப்பான். மிச்சம் இருக்கிற பத்து பேரும் பைத்தி யமாத்தான் திரிவான். மூச்சு மாதிரி நாம சாகிற வரைக்கும் நம்பிக்கையும் கூடவே வருது. அதனால்தான், மூடநம்பிக்கையிலாவது மனுஷன் உயிர் வாழ்ந்துடறான். சில நேரம் நம்பிக்கை காயங்களை ஏற்படுத்தும். பல நேரம் நம்பிக்கை தான் மருந்தா இருக்கும்.

என் வாழ்க்கை முழுக்க ஆற்றவே முடியாத காயம் ஒண்ணு இருக்கு. எனக்கு இன்னொரு தாய் மாதிரி இருந்த என் சித்து என் கண்ணுக்கு முன்னாலயே செத்துப்போனது!

தெரிஞ்சோ தெரியாமலோ 'சித்தார்த்'னு அவனுக்குப் பேர் வெச்சேன். அவன் எனக்கு புத்தனா இல்லை, போதி மரமாவே இருந்தான். அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஒருமுறை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தோம். அங்கே ரிசப்ஷனில் மீன் தொட்டியில்நீந்திட்டிருந்த மீன்களைப் பார்த்ததும் என் ரெண்டு வயசு சித்து கேட்டான், ''ஏம்ப்பா, இந்த ஃபிஷ்லாம் ஹாஸ்பிடல் வந்திருக்கு. இதுக்கெல்லாம் உடம்பு சரியில்லையா?''

அப்படிக் கேட்ட குழந்தையை, இன்னொரு நாள் அதேபோல ஒரு ஹாஸ்பிடலில் தொலைக்கப்போறேன்னு எனக்கு அப்போ தெரியாது.

'பையனுக்கு சீரியஸா இருக்கு'ன்னு அம்மா எனக்கு போன் பண்ணினாங்க. அப்போ ஹைதராபாத்ல இருந்தேன். எந்த விஷயமா இருந்தாலும் முதலில் என்னை போன்ல கூப்பிடுற பொண்டாட்டி ஏன் இப்போ பேசலைன்னு தோணின நிமிஷம், எனக்குப் பதறுச்சு. பொதுவா என் எல்லாப் பிரச்னைகளையும் நான் அறிவுபூர்வமா அணுகுவேன். உணர்வுபூர்வமா அணுகினால் ஒழுங்கா ஒரு முடிவு எடுக்க மாட்டோம்னு என் நம்பிக்கை. என் அறிவு ஸ்தம் பித்துப்போன நிகழ்வு, என் பையனோட மரணம். அவசர அவசரமா ராத்திரி ஃப்ளைட் பிடிச்சேன்.

என் குடும்பம் மொத்தமும், ஐ.சி.யு. வார்டு வெளியில் காத்திருக்கு. கண்ணாடிக் கதவு வழியா எட்டிப் பார்த்தா, பையன் அமைதியா தூங்கிட்டிருக்கிற மாதிரி இருக்கு. 'நான் வந்துட்டேன்ல, இனி யாரும் இங்கே இருக்க வேண்டாம்'னு பூஜாவை, அம்மாவை, மத்தவங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பினேன்.

என் மனைவி கண்ணில் தூக்கம் இல்லே, துக்கம் நிரம்பி நிக்குது. 'கீழே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு, நான் இங்கே இருக்கேன்'னு வம்பா அனுப்பினேன்.

டாக்டர்களிடம் அனுமதி வாங்கி, ஐ.சி.யு. வார்டுக்குள் என் பையன் பக்கத்தில் உட்கார்ந்து அவனையே பார்த்துட்டு இருக்கேன். தெய்வம் போல ஒரு நர்ஸ் சின்னப் புன்னகையோட, என் குழந்தையை அதிக அக்கறையோட பார்த்துக்கிறாங்க. லேசா கண் திறக்கிறப்பவெல்லாம் என் மகன் அந்த சிஸ்டரைப் பார்த்து சிரிக்கிறான். அவ்ளோ சினேகமா என் குழந்தையைப் பார்த்துக்க ஒரு நர்ஸ் கிடைச்சாங்களேன்னு ஆறுதலா இருக்கு.

அப்படியே மொத்த ஐ.சி.யு. வார்டையும் பார்க்கிறேன்... எல்லா வயசிலும் என்னென்னவோ பிரச்னைகளோட இருக்காங்க நோயாளிகள். எல்லோரும் நிசப்தமா இருக்காங்க. என் மகனுக்குள்ளும் ஒரு நிசப்தம். அங்கே இருக்கிறவங்களில் ரொம்ப ரொம்பச் சின்னப் பையன் என் மகன்தான். இந்த வயசில் இவன் ஐ.சி.யு&வில் இருக்கணுமான்னு எனக்குத் தொண்டை அடைக்குது.

ஏதேதோ எண்ணங்கள் தத்துவமா வந்துபோகுது. எமன் கையில் கயிறோடு அந்த வார்டை வலம் வர்றான்னு திடீர்னு தோணுது. 'என் குழந்தையை ஒண்ணும் பண்ணிடா தடா?'ன்னு என் மனசு கை கூப்பிக் கெஞ்சுது. நான் பேசுற பாஷை அவனுக்குப் புரியுதான்னு தெரியலை. என் பாசம் அவனுக்குப் புரியு மான்னும் தெரியலை. என் குழந்தைக்கு மட்டும் கரிசனம் காட்டணும்னு நான் எப்படிக் கேட்க முடியும். சாகக்கிடக் கிறவங்களின் ஒவ்வொரு உறவுகளும் இதே கோரிக்கையைத்தானே வெப்பாங்க. எமன் என்ன பண்ணுவான்?

விடியல் நெருங்க நெருங்க, நர்ஸ் பதற்ற மாகிறாங்க. டாக்டர்கள் பரபரப்பாகிறாங்க. என்னை வெளியில் போய் இருக்கச் சொல்றாங்க. எப்போதும் எந்தத் துன்பத் தையும் அதன் கண்கள் பார்த்துச் சந்திக்கிற எனக்கு அன்றைக்கு எந்தத் தைரியமும் இல்லை. என்னமோ நடக்கப்போகுதுன்னு மனசுக்குத் தெரிஞ்சுபோச்சு.

திடீர்னு டாக்டர் கூப்பிடுறார். நிறைய பேசுறார். அந்த நர்ஸோட கண்கள் என்னைச் சந்திக்க முடியாமல் தரையைப் பார்க்குது. அதில் லேசாத் தெரியுற கண்ணீர் எனக்குச் சொல்லிடுச்சு. என் சித்து போயிட்டான். அந்தத் துயரத்தை, உண்மையை, நானே ஏத்துக்கிற மனநிலையில் இல்லை. ஆனா, அதை நான்தான் மற்றவங்களுக்குச் சொல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைமை.

கீழே போறேன். என் மனைவி முழிச்சுக் கிட்டா. 'பையன் கண்ணைத் திறந்துட் டானா?'ன்னு கேட்கிறா. 'கண்ணை மூடிட் டான்'னு சொல்ற தைரியம் என்கிட்டே இல்லை. வேற ஏதோ பேச்சை மாத்துறேன். 'பொளேர்'னு அறைஞ்சா. 'நான் பார்த்துக்கிறேன்'னு சொல்லி என்னை அனுப்பிவெச்சியேடா, இதுதான் நீ பார்த்துக்கிட்ட லட்சணமா?'ன்னு கேட்டு அறைஞ்சாளான்னு தெரியலை. தாய்மையோட பலம் எவ்வளவு பெருசுன்னு அன்றைக்கு நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

என் மகனைத் தொட்டுப் பார்க்கிறேன். அவன் உடம்பு சில்லுன்னு ஐஸ் மாதிரி இருக்கு. வழக்கமா அவன் உடம்பு சூடா இருந்தா, பதறுவேன். முதலும் கடைசியுமா அவன் உடம்பு சில்லுன்னு ஆனதுக் காகப் பதறினேன். அடக்கி வெச்ச கண்ணீர் என் உறுதி களை உடைச்சுத் தூள் தூளாக் கிட்டு வந்துடுச்சு. காயத்தை ஆற்றத் தெரியாமத் தவிச்சப்போ, மூன்று நம்பிக்கை மருந்துகள் கிடைச்சது. மறுநாள் பேப்பரில் ரெண்டு பெண் குழந்தைகளின் படம். லக்னோவில் இலவச வேட்டி சேலை தந்தபோது நெரிசல்ல மாட்டி அவங்களைப் பெத்த வங்க ரெண்டு பேரும் செத்துப்போயிட் டாங்க. பெரிய பொண்ணுக்குப் பத்து வயசு இருக்கும். அவ இடுப்பில் நாலு வயசுத் தங்கை. யாருடைய துணையும் இல்லாம, இந்தச் சமூகத்தில் அந்த ரெண்டு பிள்ளை களும் எதிர்கொள்ளப்போகிற வேதனைகளை யூகிக்கக்கூட முடி யலை. எங்களுக்குப் பிள்ளை இல்லே யேன்னு துக்கம். அந்தக் குழந்தைகளுக்கு, பெத்தவங்க போயிட்டாங் கன்னு துக்கம்னு என் மனைவிக்கு ஆறுதல் சொன்னேன்.

இரண்டாவது நம்பிக்கை... நடிகை சௌந்தர்யா. சித்தார்த் இறந்த செய்தி கேட்டு எனக்கு முதலில் போன் பண்ணினது சௌந்தர்யாதான். அடுத்த ஒரு மாசத்தில் விமான விபத்தில் அவங்க இறந்துட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் 12 படங்கள் நடிச்சிருக்கோம். என்னோட நல்ல தோழியா இருந்தாங்க. அவங்க இறந்த தகவல் தெரிஞ்சதும் நான், சிரஞ்சீவியெல்லாம் ஓடினோம். சௌந்தர்யாவின் அம்மா எல்லாரையும் விட்டுட்டு என்னைக் கட்டிக்கிட்டு அழுதாங்க. 'புள்ளையைப் பறிகொடுத்த துயரம்' மத்தவங்களைவிட அப்போ எனக்கு நல்லாப் புரியும்னு நினைச்சி ருப்பாங்களோ? என் மகனுக்குச் சின்ன வயசு. 26 வயசு வரை வளர்த்த மகளை எமனுக்குத் தாரை வார்த்துட்டு, உடம்புகூட முழுசாக் கிடைக்காமத் தவிக் கிற ஒரு தாயோட வலிக்கு முன்னால், என் கஷ்டம் கால் தூசு ஆகுமான்னு தோணுச்சு.

மூணாவது நம் பிக்கை... என் பொண்ணு மேகனா. சித்தார்த் இறந்த காயத்தை ஆற்று வதற்காகவே பிறந்தவ. அவ பிறந்த கதையை தனியா ஒரு வாரம் பேசணும்.

அது நம்பிக்கையைத் தாண்டி, இயற்கையான யதார்த்தம். என் கன்னத்தில் பளார்னு காலம் அறைஞ்ச நிகழ்வு. என் பையனோட மரணம் கற்றுத்தந்த பாடத்தைவிட, என் பொண்ணோட ஜனனம் கற்றுத் தந்த பாடம் இன்னும் உண்மையானது. இதுவரை யார்கிட்டேயும் சொல்லாத உண்மை அது!


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:24:45 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com
 
Part-13
-----------
கரும்பின் உண்மையான ருசி எங்கே ஒளிஞ்சிருக்கு? நிச்சயமா அதன் இனிப்பில் மட்டுமே இல்லை. கொஞ்ச நேரத்தில் அது திகட்ட ஆரம்பிச்சுடும். திகட்ட ஆரம்பிக்கிற ஏரியா வந்ததுமே, அந்த இடத்தில் ஒரு கணுவெச்சிருக்கு இயற்கை. அந்தக் கசப்பைக் கடந்துட்டா, இன்னும் ருசிக்க ஆரம்பிக்கும் கரும்பு!

வாழ்க்கையும் பெரிய கரும்பு தானோ?

மகனின் மரணம் ஏற்படுத்தின வலிக்கும், மகளின் ஜனனம் ஏற்படுத்தின சந்தோஷத்துக்கும் இடைவெளி மூன்றே நாட்கள்தான்.

விடை தெரியாத விஷயங்களில் சந்தோஷமும் இருக்கும்; வருத்தமும் இருக்கும். என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத மரணம், என் பையனுடையது. என் வாழ்க்கையில் நான் மறக்கவே கூடாத சந்தோஷம், என் சின்னப் பொண்ணு மேகனாவின் ஜனனம்.

என் மகன் இறந்த முத லாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நேரம், எப்ப வேணும்னாலும் பிரசவ வலி வரலாம்னு டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தாங்க என் மனைவி. இது தெரிஞ்ச எல்லோரும் கடவுளுக்கு நன்றி சொன்னாங்க. போன வருஷம் போன உயிருக்குப் பதிலா, அடுத்த வருஷமே இன்னொரு உயிரை அனுப்பி வெச்சிருக்கார் கடவுள்னு என்கிட்டேயே சொன்னாங்க.

உறவுகளை உணர்வுகள் ஜெயிக் கும்கிறது எனக்கும் என் மனைவிக்கும் தெரிஞ்ச உண்மை. ஒவ்வொருத்தருக்குமே அது தெரிஞ்ச உண்மைதான். ஆனா, எல்லோரும் ஈஸியா அதை மறந்துடறோம். என் மகளோட ஜனனம் என்பது நானும் என் மனைவியும் மிக நேரடியா சம்பந்தப்பட்டதால், எங்களால் அந்த உண்மையை மறக்க முடியலை; மறுக்க முடியலை.

உலகத்தின் பார்வைக்கு என் மகன் இறந்த 12-வது மாதம் அது. இன்னொரு உயிர் என் வீட்டுக்குள் வருவதை அவங்களால் எந்த உறுத்தலும் இல்லாம ஏத்துக்க முடியும். ஆனா, ஒரு குழந்தை பிறக்க, பத்து மாசம் தேவைங்கிற உண்மை எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே!

என் மகன் இறந்த இரண்டாவது மாதமே, எனக்கும் என் மனைவிக்கும் இடையில் தாம்பத்யம் நடந்திருந்தால் தானே, இன்னொரு உயிர் அடுத்த வருஷம் சாத்தியம்!

என் மகனின் குறும்பு, சிரிப்பு, அழுகை, கோபம், கொஞ்சல், அன்பு எல்லாமே இன்னும் நெஞ்சுக்குள் இருக்கு. மகன் இறந்த உண்மையை எதிர்கொள்ள முடியாமல், எல்லாரும் இருக்கும்போது புருஷனைப் பலபேர் முன்னாடி கன்னத்தில் அறைஞ்சவளுக்கும், ஆறுதல் சொல்லத் தெரியாமல், அந்த அடியைத் தலைவணங்கிவாங்கி னவனுக்கும் இடையில் ரெண்டே மாதத்தில் தாம்பத்யம் நிகழ்ந்தது.

தினம் தினம் அவனை நினைச்சு, அழுத கண்கள் காமத்தில் சொருக ஆரம்பிச்சது. தினம் தினம் அவனைப் பற்றியே பேசிய வாய் முத்தங்களில் மௌனமாச்சு. தினம் தினம் அவ னையே நினைச்சுட்டிருந்த மனசு,அந்த ஒரு ராத்திரி தன்னைப்பற்றி நினைச்சுது. என் மகன் இறந்த இரண்டாவது மாதம் என் வீட்டில் இன்னொரு புதிய உயிருக்கு நாங்க தயாராகிட்டோம்.

அவன் இல்லாமல் எப்படி இனி வாழப் போறோம்னு யோசிச்ச இரவுகள் உண்டு. அவன் விளையாடின பொம்மைகளில் அவன் ஞாபகம் ஒட்டி இருக்கு. அழுகை இன்னும் முழுசா நிக்கக்கூட இல்லை. ஆனாலும், இன்னொரு குழந்தையோட சிரிப்புச் சத்தத்தைக் கேட்கத் தயாராகிட்டோம். சோகத்தை காமம் ஜெயிச்சிடுச்சு. இது சரியா, தப்பா என்கிற கேள்விகளைத் தாண்டி அது, உண்மை!

அக்டோபர் 20&ம் தேதி என் மகன் இறந்தான். அடுத்த வருஷம் அவனுடைய முதல் நினைவு நாள் வர்ற, அதே அக்டோபர் 20&ம் தேதி எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போறதா நாள் குறிச்சாங்க டாக்டர். ஒரே நாளில் ஒரு மரணத்தின் துக்கத்தையும், இன்னொரு ஜனனத்தின் சந்தோஷத்தையும் எதிர்கொள்கிற சக்தி யாருக்குமே இருக்கமுடியாது. எல்லாத்துக்கும் மேலே, எனக்குப் பிறக்கப்போகிற இன் னொரு ஜீவன், 'என் அண்ணன் இறந்த அதே நாளில் நான் பிறந்தேன். அதனால என் பிறந்த நாளைக் கொண்டாட மாட்டேன்'னு முடிவு பண்ணிடக் கூடாது... அப்படி ஒரு வாழ்நாள் துக்கத்தை அதுக்குத் தந்துடக் கூடாதுங்கிறதுக்காக, டாக்டர்களிடம் பேசி, இன்னும் ஒரு மூணு நாள் என் மனைவியின் டெலிவரி தேதியைத் தள்ளி வெச்சேன்.

எனக்கு மகள் பிறந்த செய்தி கேள்விப்பட்டப்போ, ஹாஸ்பிடல் இருக்கிற ரோட்டையே டிராஃபிக் ஜாம் பண்ணேன். எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்தேன். என் வீட்டின் இன் னொரு சந்தோஷத்தை வரவேற்கத் தயாரானேன். சித்தார்த் பிறந்தபோது எப்படி இருந்தானோ, அப்படியே இருக்கா என் மக!

அவன் ஆண்; இவ பெண். அவ்ளோ தான் வித்தியாசம். அவன் காலில் இருந்த மாதிரியே, இவ காலிலும் அதே இடத்தில் அழகான மச்சம். பேரனே மறுபடி பேத்தியாபொறந் துட்டதா சந்தோஷப்படறாங்க என் அம்மா. என் உறவுகளும் அதே மாதிரி சொன் னாங்க.

ரெண்டு வயசுக் குழந்தை என்ன விதமான குறும்பு களைச் செய்யுமோ, அதைத் தான் அப்போ சித்தார்த் செய்தான். இப்போ மேகனாவும் பண்றா. ஆனா,அதை யெல்லாம் என் மகனே செய்யற மாதிரி, அதில் ஒரு தெய்விகத்தை ஏத்திக் கடவுளுக்கு நன்றி சொல்றாங்க என் மனைவி.

தரையில் மட்டுமே ஊர்ந்து போயிட்டிருந்த ஒரு புழுவை, தன் அலகால் கொத்தித் தூக்கிட்டுப் பறந்ததாம் ஒரு பறவை. அதோட வாயில் மரணத்தின் விளிம்பில் தொங்கின புழுவுக்கோ, அந்த நிமிஷம் ஆகாயத்தில் இருந்து பார்ப்பது ஏதோ புது உலகமா இருக்கு. சாவதற்கு முன்னால், இப்படி ஒரு புது உலகத்தைப் பார்க்கக் கிடைக்கிற அனுபவம் அதுக்குப் புதுசா இருக்கு. அந்த பறவை ஏனோ புழுவை உடனடியாச் சாப்பிடாம, ஒரு பெரிய மரத்தின் உயரமான கிளையின் மேல் அதை வெச்சது. அவ்ளோ உயரத்தில் இருந்து இந்த உலகத்தை லேசா எட்டிப் பார்க்குது புழு. இதுவரைக்கும் நாம எவ்ளோ கீழே வாழ்ந்திருக்கோம்னு குனிஞ்சு பார்க்கும்போதே, அதுக்குப் பயமா இருக்கு. சாவதற்கு முன்னால், இவ்ளோ உயரத்தை அடைஞ்சுட்டோமேன்னு சந்தோஷமாவும் இருக்கு. 'அஞ்சு நிமிஷத்துக்கு என்னைச் சாப்பிடாதே. இவ்ளோ உயரத்தில் என்னைக் கொண்டுவந்து வெச்சதுக்கு ரொம்ப நன்றி. இனிமே நான் சந்தோஷமா சாவேன்!'னு புழு சொன்னதா ஒரு கதை படிச்சிருக் கேன்.

அப்படி ஒரு புழு போல என்னைத் தூக்கிட்டுப் போயிட்டா என் சின்னப் பொண்ணு. பெரிய மரத்தின் மேலே வெச்சு வாழ்க்கையின் உயரத்தைத் தரிசிக்கச் சொல்றா. 'உன் வாழ்க்கையில் ஆற்றவே முடியாத துயரமான மரணத்துக்கும், நினைச்சு நினைச்சுச் சந்தோஷப்படுற என் ஜனனத்துக்கும் இடைவெளி மூணே நாள்தான்டா!'னு சொல்றா. அப்பனுக்கே டீச்சர் ஆகிட்டா என் பொண்ணு!

மகாபலிபுரம் போகிற வழியில் கடற்கரை ஓரம் இருக்கிற தோட்டத்தில் என் மகனின் சமாதி இருக்கு. அதன் மேல் ஏறி நின்னு என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறா மேகனா. அவ எனக்கு என்ன சொல்லவரா?

நிஜமாவே புரியலீங்க!


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:25:18 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com
 
Part-14
------------
மகாபலிபுரம் பக்கத்தில் எனக்கொரு அழகான தோட்டம் இருக்கு!

எனக்கான உணவை, நானே விவசாயம் செய்துக்கணும்கிற கனவில் வாங்கின தோட்டம் அது. எந்தக் கட்டடமும் கட்டலை. ஒரே ஒரு ஓலைக் குடில்... அதுவும் கூரை மட்டும்தான். சுவர் எதுவும் கிடையாது. நாலு பக்கமும் கலர் கலரா பூக்கள், செடி கொடிகள், காய்கள், கனிகள்னு இயற்கை எப்பவும் என்னைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி அற்புதமான தோட்டம்!

சித்தார்த்தனின் சமாதியும் அங்கேதான் இருக்கு. எப்போ எனக்கு ஒரு முழு இரவு ஓய்வு கிடைச்சாலும், உடனே ஓடிப் போகிற இடம் அதுதான். இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்கிற மாதிரி சுகம் வேற எதுவுமே இல்லை. ஒரு கனவுத் தோட்டத்தை உருவாக்கி, அங்கேயே ஒரு இயற்கை விவசாயியா செட்டில் ஆகிடுற ஆசை இருக்கு. அதனால் தான் என் மகனின் மரணம் வரைக்கும் அங்கே கொண்டுபோய்ச்சேர்த்து வெச்சிருக்கேன். அப்படிப்பட்ட இடத்துக்கு என்ன விலை வைக்கமுடியும்? ஆனா, வெச்சான் ஒருத்தன்!

ஒரு சமயம், எனக்குக் கொஞ்சம் பண நெருக்கடி. கடன் வாங்க வேண்டிய நிலைமை. ஒருத்தன்கிட்டே போய்க் கேட்டேன். உடனே தரேன்னு சொன்னான். என் மேல் நம்பிக்கை வெச்சுப் பணம் தர முன் வந்தான்னு நினைச்சேன். ஆனா, எனக்குக் கடன் தர்றதுக்குமுன் னாடி, எனக்கு என்னென்ன இருக்குன்னு விசாரிச்சிருக்கான் அந்த நல்லவன். ஈ.சி.ஆர். ரோட்ல எனக்கு ஒரு தோட்டம் இருக்குன்னு தெரிஞ்சதும், எனக்குக் கடன் தர சம்மதிச்சிருக்கான்.

அவன், அப்போ ஒரு பன்ச் டயலாக் விட்டான் பாருங்க... ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.

'அடடா! என்ன பிரகாஷ் இது, அப்படி ஒரு தோட்டத்தில் உன் பையனைப் புதைச்சுட்டியே! சமாதி மட்டும் இல்லேன்னா, அந்தத் தோட்டத் தோட மதிப்பு இப்ப இருக்கிறதைவிட இன்னும் ரெண்டு மடங்கு அதிகமாவே விலை போகும். அவசரப்பட்டுட் டியே!'னு அக்கறையா எனக்காகக் கவலைப்பட்டான்.

எனக்கு அவனை நினைச்சுப் பரிதாபம்தான் வந்தது. அவனுக்குத் தன் பெண்டாட்டி, பிள்ளைகளை யாவது மனுஷங்களா பார்க்கத் தெரி யுமானு தெரியலை. வாழ்க்கையில எல்லாத்தையுமே பணமா, சொத்தா பார்க்கப் பழகிட்டான். தாஜ்மஹாலைப் பார்த்தாலும், மனசைக் கொடுக்காம, மார்பிள் செலவைக் கணக்குப் பண் ணிட்டிருப்பான் போல!

அவன்கிட்டே கடன் கேட்கிற நான் சந்தோஷமா வாழ்றேன். ஆனா, என் னைப் போல எத்தனையோபேருக்குக் கடன் தர்ற அவன் ஏதேதோ கவலை களோட இருக்கான். பணம் ஒருத்த னுக்கு நிம்மதியைத் தரும் என்கிற கருத்து எத்தனை பெரிய பொய்னு அவனைப் போல சிலரால்தான் நான் கத்துக்கிட்டேன். பணம் மட்டுமேஒருத்த னுக்கு நிம்மதியைத் தரும்னா, என்னைவிட, உங்களைவிட பல மடங்கு சந்தோஷமா வாழ வேண்டி யவன் அவன். ஆனா, அவனுக்குச் சிரிக்கவே தெரியலை. கொஞ்சம் சிரிச்சுப் பேசினாலும், வர வேண்டிய பணம் வராமப் போயிடுமோன்னு மறைச்சு, குறைச்சு, ஒளிச்சு, கடைசியில் சிரிப்பையே மறந்துட்டான். என் மகன் சமாதி இருப்பதால், அந்தத் தோட்டத்தோட மதிப்பு குறைஞ்சுட்டதா கணக்கு சொல்றவனுக்கு, என்னன்னு சொல்லி நான் என் பாசத்தைப் புரியவைக்க முடியும்?

வாழணும்னு வாங்கின ஒரு தோட்டத்தை, என்னிக்காச்சும் விற்க நேரும்போது அது நல்ல விலைக்குப் போக என்ன பண்ணணும்னா ஒரு மூளை யோசிக்கும்? அவன் மட்டும் இல்லை, நாம எல்லாருமே, ஏதோ ஒரு கட்டத்தில் பணத்தைத் துரத்தி ஓடிட்டே இருக்கோம்.

பிரசவம் பார்க்க நாட்டிலேயே அதிக வசதி இருக்கிற ஹாஸ்பிடலில் சேர்க்கலாம். ஆனா, தாய் அனுபவிக்கிற அந்த வலிக்கு என்ன பணம் தர முடியும்? இருப்பதிலேயே சிறந்த உணவை, இருப்பதிலேயே பெரிய ஓட்டலில் இருந்து வாங்கிட்டு வரலாம். ஆனா, பசி என்ன விலை கொடுத்தா வரும்? எல் லாத்துக்கும் விலை வைக்கஆரம்பிச்ச தாலதான், மனிதம் மட்டும் மலிவாகிடுச்சு. எண்ணெய்க் கிணறு பிஸினஸ§க்காக, இராக்கில் எத்தனை லட்சம் மனித உயிர்களைப் பலி தந் திருக்கோம். என்ன உலகம்டா இது?

பணம் வாழ்க்கையில் இரண்டாம்பட்சம் ஆகிட்டா, உலகத்தில் நம்ம வாழ்க்கையில் பாதிப் பிரச்னைகள் இல்லாமல் போயிடும். இன்னும் நிறைய நல்ல மனுஷங்க கிடைப்பாங்க. நல்ல தலை வர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பாங்க. சரிபாதிக் குற்றங்கள் தொலைஞ் சுடும்.

அது சரி, பணம் இல்லாமல் வாழ முடியுமா? முடியாதுதான்!

ஆனா, பணத்தை மட்டும் வெச்சுட்டு வாழ முடியாதுன்னு சொல் றேன். தேவைக்குப் பணத் தைத் தேடணும். அதை விட்டு, ஆசைக்குப் பணத் தைத் தேடும்போதுதான் எல்லாப் பிரச்னைகளும் ஆரம்பிக்குது. பசி, வலி... இந்த ரெண்டையும் ஜெயிக்கத் தெரிஞ்சுட்டா வாழ்க் கையை ஜெயிச்சுடலாம். வயித்துப் பசிக்குச் சாப்பிடத்தான், நமக்குப் பணம்தேவை. ஆனா, நாக்கு ருசிக் காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகுது. டால்ஸ்டாய் ஒரு கதை எழுதினான்...

ரஷ்யாவில் பணம் பற்றி அதிகம் அக்கறைப்படாத பழங்குடிகள் வாழ்ற பகுதி. தங்கள் உழைப்பால் கரடுமுரடான பூமியை அழகான விவசாய நிலமா மாத்தினவங்களுக்கு பணம் என்கிற விஷயமே பெரியது இல்லை.

அவங்களை ஏமாத்தி நிலத்தைப் பிடுங்குகிற ஆசையில், ஒரு கும்பல் இறங்குச்சு. அதை மையமா வெச்சு 'ஒருத்தனுக்குத் தேவையான அளவு பூமி'ன்னு ஒரு கதை எழுதினார் டால்ஸ்டாய்.

ஒரு பழங்குடித் தலைவனிடம் போய் ஒரு நாகரிக மனிதன், 'ஒரு அடி நிலத்துக்கு ஒரு ரூபிள் தர்றேன். எவ்வளவு நிலம் தருவே?'னு கேட் டான். அந்தத் தலைவன் திரும்பி, தன் பூமியைப் பார்த்தான். கண் ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் பசுமை. 'எனக்கு ஒரு ரூபிள் போதும். அதை வெச்சு என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியாது. நீ உனக்குத் தேவையான அளவு பூமியை எடுத் துக்கோ. ஆனா, ஒரு கண்டிஷன். சூரியன் உதிக்கிறபோது நீ இங்கே யிருந்து கிளம்பணும். சூரியன் அஸ்தமிக்கிற நேரத்துக்குள் திரும்ப இந்த இடத்துக்கே வந்துடணும். நீ எவ்வளவு தூரம் சுத்தி வர்றியோ, அவ்வளவும் உன்னோட நிலம்தான்'னு சொன்னான். உற்சாகமா கிளம்பினான் நாகரிக மனுஷன். ஆசையில் ஓட ஆரம்பிச்சான். எங்கே, எவ்வளவு தூரம் வந்திருக் கோம்னு தெரியாத அளவு ஓடிட்டே இருந்தான். சூரி யன் அஸ்தமிக்கிறதுக்குள் இன்னும் கொஞ்சம் நேரம் ஓடினா இன்னும் நிறைய பூமி கிடைக்குமேன்னு ஓடி ஓடி, அவன் திரும்பி வரும் போது மூச்சு வாங்கி, ரத்த வாந்தியெடுத்துச் செத்தே போனான். அவனைப் புதைக்கும்போது அந்தத் தலைவன் சொன்னான்... 'இவனுக்குத் தேவையான நிலம் மொத்தமே ஆறடி மூணு அங்குலம்தான். இது தெரியாம ரத்த வாந்தி எடுத்திருக்கானே!'

பொய், பொறாமை, திருட்டு, சூழ்ச்சி, வஞ்சம்... இப்படி மனுஷனை மனுஷனா இருக்க விடாத எல்லா அசிங்கங்களுக்குப் பின்னாலும் பணம் என்கிற அசுரன் கோரமா சிரிச்சுட்டி ருக்கான்.

சின்ன வயசில் இருந்து சேர்த்துவெச்ச பணத்தைக் காப்பாத்த, கடைசிக் காலத்தில் தூங்காம வாட்ச்மேன் வேலைதான் பார்க்க வேண்டியிருக்கும். இப்போ பெரிய பெரிய பங்களாக்களில் ஷ¨ட்டிங் நடக்குது. அந்த வீடுகளின் திண்ணைகளில் மட்டும் ஐம்பது பேர் படுக்கலாம். அரண்மனை மாதிரி இருக்கிற அந்த வீடுகளில் எஜமானர்கள் யாருமே இருக்க மாட்டாங்க. அப்படிப்பட்ட சில வீடுகளில், மனநிலை பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு ஜீவன் சுத்திட்டிருக்கிறதைப் பார்த்திருக்கேன். என்னோட கை அளவுக்குப் பெரிய சாவிகள் இருக்கிற கதவுகள் எப்பவும் பூட்டியே கிடக்குது. எதுக்காக இவ்ளோ பணம் சேர்த்தாங்கன்னு தோணும்.

கன்னடத்தில் 'பேந்த்ரே'னு ஒரு பெரிய படைப்பாளி, ஞானபீட விருது வாங்கின ஆள்... பணத்தோட குணத்தை அழகா சொல்லி யிருப்பார். 'பணம் எப்பவும் ருத்ர தாண்டவம் ஆடிட்டே இருக்கும். எவன் பணத்தோட காலுக்குக் கீழே போனாலும், அது துவைச்சுத் துவம்சம் பண்ணிடும். பணத்தோட காலுக்குக் கீழே போகாதீங்க. பணத்தை உங்க காலுக்குக் கீழே கொண்டுவந்துடுங்க!'னு சொல்வார்.

ஆனா, நாம பணத்தை எப்பவும் தலையில் வெச்சுக் கொண்டாடுறோம். அதனால்தான் செத்தாக்கூட பொணத்தோட நெத்தியில் ஒத்த ரூபாயை வெச்சு அனுப்புறோம். நான் செத் தாலும், என் நெத்தியில் ஒரு ரூபா வெச்சுடுவாங்க. மனுஷங்களை மதிக்காம பணத்தை மட்டுமே மதிச்சா, அது வாழும்போதே நாமே நம்ம நெத்தி யில் ஒரு ரூபாயை வெச்சுக்கிட்ட மாதிரிதான்... கரெக்ட்டா?


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:25:47 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

part-15
----------
 
'நினைவுகள் எப்போதுமே குழப்பமானவை! நீ எப்பவோ சிரிச்ச விஷயங்களுக்காக, இப்போ அழ வேண்டி வரும். எப்பவோ அழுததை நினைச்சா, எப்பவும் சிரிக்க வேண்டி வரும்!' & இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். படிச்சதும், சிரிச்சேன்!

என் அம்மாவின் கண்ணீரை நினைச்சுக்கிட்டேன். எனக்கு விஷம் வெச்சுக் கொல்லப் பார்த்தாளாம் என் அம்மா!

இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னால, அந்த விஷயத்தை அழுதுட்டே என்னிடம் சொன்னா அம்மா. அவ அழ, நான் சிரிக்க, என் சிரிப்புக்கு அவ இன்னும் அழ, நான் இன்னும் இன்னும் சிரிக்க, அவளும் சிரிக்க ஆரம்பிச்சா அழகா!

எல்லோருக்குமே அவனவன் அம்மாதான், முதல் தேவதை!

ஏன்னா, அம்மாக்கள் அப்படித்தான். அவ என் அப்பனை, தன் புருஷனை நினைச்சு, அவன் மேல் காதல் வயப்பட்டு எப்பவோ சிரிச்சதுக்காக, வாழ் நாள் முழுக்க அழுதுட்டே இருக்கிற பொண்ணு. அவனுக்காக எல்லாத் தையும் தொலைச்சவ, நம்பிக்கையை மட்டும் கஷ்டப்பட்டுக் காப்பாத்திட்டா!

கொஞ்ச காலத்துக்கு முன்னால், ஒருமுறை என் அம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் சீரியஸ் ஆகிடுச்சு. மூளைக்குப் போகிற ஒரு நரம்பில் ஏதோ பிரச்னை. வலியிலும் வேதனையிலும் துடிதுடிப்பா! உடனடியா ஆபரேஷன் பண்ணணும். ஆனா, கொஞ்சம் ரிஸ்க்கான ஆபரேஷன். அம்மாவை ஆஸ்பிடலில் சேர்த்தோம். அப்போ நான் தெலுங்கு சினிமாவில் ரொம்ப பிஸி. அம்மாவைப் பார்த்துக்க நிறைய சொந்தங்கள் இருந்தாலும், பெத்த பிள்ளைகள் கூட இருந்து பார்த்துக்கிறதுதானே சரி!

என் தங்கை பகலெல்லாம் அம்மாவுடன் இருப்பா. நான் நைட் ஷிஃப்ட். ஹைதராபாத்தில் ஷ¨ட்டிங் முடிச்சு நைட் ஃப்ளைட் பிடிச்சு ஓடி வருவேன், இரவெல்லாம் அம்மாவுடன் இருப்பேன். காலையில் திரும்ப ஹைதராபாத் ஃப்ளைட் பிடிச்சு வேலைக்கு ஓடுவேன். இருபது நாட்கள் இப்படியேதான். அம்மாவுக்கு அது ரொம்ப சந்தோஷம். தன்னோட கடைசி நாட்களில் இருப்பதா நினைச்சுட்டாங்க.

பக்கத்திலேயே இருந்து பாசமாப் பார்த்துக்கிற பிள்ளைங்ககிட்டே தன் பழைய வாழ்க்கையைப் பேச ஆரம்பிச்சாங்க. வலிகளை, வேதனைகளை, கஷ்டங்களை, துயரங்களை, அவமானங்களை ஒவ்வொண்ணா சொல்லிட்டு வர்றாங்க.

சின்ன வயசிலேயே அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என் அம்மா. அநாதை என்கிற உணர்வே இல் லாமல், ஒரு கிறிஸ்துவ இல்லத்தில் யேசுவின் மகளா இருந்திருக்கா. கிறிஸ் துவ மதத்தில் தீவிரமாகி, பெங்களூர்ல ஒரு ஆஸ்பிடலில் நர்ஸா சேர்ந்து சேவை பண்ணிட்டிருந்திருக்கா. ஆண் வாசனையே இல்லாம சர்ச், பைபிள், யேசு, வேலைன்னு ஒரு சின்ன உலகத் துக்குள், திருமணமே வேண்டாம்னு இருந்தவளின் வாழ்க்கையில் ஒருத்தன் வந்திருக்கான்.

டைஃபாய்டு ஜுரம்னு வந்து அட்மிட் ஆகியிருக் கான். எந்தக் குறிக்கோளும் லட்சியமும் இல்லாத ஒருத்தன். ஆனா, அவன் பேச்சை நம்பி, தன் மனசைப் பறிகொடுத்திருக்கா அம்மா. 'நீ இல்லாம என்னால வாழ முடியாது'ன்னு அவன் வழக்கமா சொல்ற டயலாக், அம்மாவுக்கு அப்போ புதுசா இருந்திருக்கு. அவன் ஒரு இந்து. இவ தன்னை முழுசா கிறிஸ்துவத்தில் கரைச்சுக்கிட்ட பெண். துரத்தித் துரத்தி லவ் பண்ணியிருக்கான். ஒதுங்கி ஒதுங்கிப் போற மாதிரி அவனுக்குள்ள மொத்தமா விழுந்திருக்கா அம்மா. சாதி, மதம்னு எல்லா பேதங்களையும் தூக்கி எறிஞ்சிருக்கு காதல்.

ஆனா, அது அவளுக்கு நல்ல அனு பவமா இல்லை. பல எதிர்ப்புக்கிடையில் கடவுளையும் காதலையும் நம்பி அவனையே கல்யாணம் பண்ணிக் கிட்டா. கொஞ்ச நாள் சந்தோஷமா இருந் துட்டு, திடீர்னு காணாமப் போயிட்டான் அவன். தேடித் திரிஞ்சவளுக்கு அவன் தந்துட்டுப் போன பரிசு, நான்.

வயித்துல என்னையும், மனசுல அவனையும் சுமந்துட்டு எல்லா அவ மானங்களையும் சகிச்சுக்கிட்டு வேலை பார்த்திருக்கா. நான் பிறந்த செய்தி கேட்டும், அவன் என்னை வந்து பார்க்கலை. என் அம்மா இருக்காளே, அழகி, குணவதி. அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு எத்தனையோ ஆண்கள் அலைமோதி இருக்காங்க. அவளோ தன்னை அநாதையா விட்டுட்டுப் போன தன் அப்பனை நினைச்சு, யேசுவைத் தவிர எந்த ஆண் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தவ. கன்னிகாஸ்திரீயா சேவை செய்யணும்னு நினைச்ச வளைத்தான், அந்த ராஸ்கல் தகர்த்து எறிஞ்சுட்டான்.

தன்னால் நிரா கரிக்கப்பட்டவர்களின் அனுதாபங்களை எதிர்கொள்வதைப் போல ஒரு துயரம் வேறெதுவும் கிடையாது. அதுவும் அது அனுதாபமா இல்லாம, தாகமா இருந்தா? ஆதர வில்லாம ஒரு பெண் பாதுகாப்பா வாழ முடியாத சமூகம். வெவ்வேறு பார்வைகளை தினம் தினமும் சந்திக் கிறதும், அதுக்குத் தன்னுடைய பக்குவ மில்லாத செயல்தான் காரணம்கிற தையும் என் அம்மாவால் தாங்கிக்க முடியலை. அப்போ நான் கைக்குழந்தை. நாளைக்கு வளர்ந்து, விவரம் தெரிஞ்சதும், 'என் அப்பன் யாரு?'ன்னு கேட்டா என்ன பதில் சொல்றது?

அவளோட கேள்விகளுக்கு அவளா லேயே பதில் சொல்ல முடியாம, செத்துடலாம்னு முடிவுபண்ணிட்டா. தான் மட்டும் செத்து, தன்னைப் போல தன் பிள்ளையும் இந்த உலகத்தில் ஏதோ ஒரு அநாதை இல்லத்தில் முகம் தெரி யாதவர்களின் கருணையில் வாழணு மேன்னு நினைச்சதும், அவளுக்கு இன்னும் அழுகை கூடிருச்சு. என்னைக் கொன்னுட்டு, தன்னைக் கொன்னுக்க முடிவு பண்ணா அம்மா.

ஏதோ ஒரு பூச்சி மருந்தை வாங்கிட்டு வந்துட்டாளாம். பால் ஊட்டுற சங்கில், விஷத்தை ஊத்தி எனக்குத் தர வந்திருக்கா அம்மா. அவ கை நடுங்க, மனசு பதற, கண்ணீராக் கொட்ட, எனக்கு விஷத்தை ஊட்ட வரும்போது, அந்தக் கணம் நான் அவளைப் பார்த்துச் சிரிச்சிருக்கேன். அவ அழ, அழ... நான் சிரிச்சுட்டே இருந்திருக்கேன். உலகம் தெரியாத ஒரு குழந் தைக்கு தனக்கு மரணம் வரப்போவு துன்னும் தெரியாதே! தன்னை இந்தப் பூமிக்குக் கொண்டுவந்தவளே, பூமிக் குள்ளே புதைக்கப் போறான்னும் புரி யாதே! சிரிச்சுட்டே இருந்திருக்கேன். அந்தச் சிரிப்பு அம்மாவுக்குத் தூக்கிவாரிப் போட்டிருக்கு. கடவுளைத் தீவிரமா நம்புறவங்க அம்மா. சாகிறதுக்கு தயா ராகும்போதுகூட ப்ரே பண்ணியிருக் காங்க. 'கடவுள் கொடுத்த என் உயிரை போக்கிக்கவே எனக்கு உரிமை இல்லை. என் மூலமா பிறந்த உன்னைக் கொல்ல எனக்கு என்னடா செல்லம் உரிமை இருக்கு?'ன்னு ஒரு நிமிஷம் தோணுச்சாம். அந்த நிமிஷம் சங்கைத் தூக்கிப்போட்டுட்டு, என்னை அள்ளி மாரோட அணைச்சுக் கிட்டு அழுதிருக்கா அம்மா. அப்பவும் நான் சிரிச்சுட்டே இருந்தேனாம்.

அந்த ஒரு சிரிப்புலதான் நான், என் அம்மா ரெண்டு பேருமே இப்போ உயிரோட இருக்கோம். 'உன்னைக் கொல்லப் பார்த்தவடா நான். ஆனா, அப்பவே நீ என்னையும் காப்பாத்தின வன்டா!'னு அழறா அம்மா!

குழந்தையோட சிரிப்புல, வாழ்க்கை யின் நம்பிக்கையைத் தரிசித்தவ அம்மா. சாகுறதுக்கு ஆளாளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கு; வாழறதுக்கு ஒரு காரணம், நம்ம கண் முன் னாலயே இருக்கேன்னு உணர்ந்தா அம்மா. வாழ்க்கையோட அர்த்தம் அவளுக்குப் பிடிபட்டிருக்கு.

அந்தச் சிரிப்பை அவ பார்க்காம விட்டிருந்தா, இன்னிக்கு பிரகாஷ் ராஜ் இல்லை!

இந்த உலகத்துக்கு வந்த சுவடே இல்லாம சின்னக் குழந்தையாவே செத்துப் போயிருப்பேன். நான் பிறந் ததுக்கான காரணமும், இறப்பதற்கான காரணமும் தெரியாமலேயே போயி ருக்கும். என்னைப் பெத்தவளோட தீராத அழுகையை, என் சின்ன சிரிப்பு ஜெயிச்சுது!

அம்மா தான் கொல்லப் பார்த்த பிள் ளையை இப்போ தலை கோதிவிட்டுட்டுச் சிரிக்கிறாங்க. பெட்ல கிடக்குற அம்மா வுக்கு அந்தப் பிள்ளை, மருந்தை ஊத்திக் கொடுக்கிறான்.

ஒரு நர்ஸா, ஆயிரக்கணக்கான பிறப் பையும், இறப்பையும் நேரில் பார்த்த வளுக்கு, 'இது சாதாரண ஆபரேஷன் தாம்மா!'னு என்னைப் போல ஒருத்தன் சொன்னா, சிரிப்புதானே வரும்! அவ சிரிச்சா. ஆனா, அது கண்ணீரைக் கரைச்சு ஊத்திட்டு, சந்தோஷத்தை மட்டுமே நிறைச்ச சிரிப்பு!

ஜெயிச்சது நான்தான். ஆனா, வெற்றி அவளோடது!


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:26:46 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com


Part-16
---------
 
மௌனம்தான் பிரபஞ்ச பாஷை! பல இடங்களில் அது பவர்ஃபுல். பல நேரங்களில் அதுதான் அழகு. அதே மௌனம் சில தருணங்களில் சகிக்க முடியாத அசிங்கமாவும் ஆகும்! அதுவும் தவறுகளுக்குப் பிறகு, கோபத்துக்குப் பிறகு வர்ற மௌனம் இருக்கே, அதன் கனம் ரொம்ப ரொம்பப் பெருசு!

அதன் பாரத்தைத் தாங்கவே முடியாது. நிகழ்காலத்தின் எல்லா சந்தோஷங்களையும் அது சுத்தமா துடைச்சுத் தூரத் தூக்கி எறிஞ்சிடும். ஒரு பெரிய விபத்துக்குப் பிறகுதான் அந்த மௌனம் உடையும். அப்பவும் குற்ற உணர்ச்சிதான் மிஞ்சுமே தவிர, அதனால் வேறெந்தப் பயனும் இருக்காது. விபத்துக்கு முன்னாலேயே அந்த மௌனத்தை உடைக்கிற பக்குவம் வந்துட்டா, உறவுகளில் விரிசல் வராமப் பார்த்துக்கலாம்.

அல்ஜீரிய மொழியில் ஓர் அழகான கதை உண்டு.

அது ஒயின் பாட்டில்களை அடுக்கிவைக்கும் அட்டைப் பெட்டி தயாரிக்கிற கம்பெனி. முதலாளி ரொம்ப ரசனையானவன். 'அழகழகான பெண்கள் தங்களோட ரோஜாப்பூ கைகளால் திராட்சைகளைப் பறிச்சு கூடையில் போட்டு, அசைஞ்சு அசைஞ்சு இடுப்பில் வெச்சுக் கொண்டுவந்து தயாரிக்கிற ஒயின் இது. அவங்க இடுப்பு அசைய அசைய அந்தத் திராட்சைக்குச் சுவை கூடி, இனிப்பும் புளிப்பும் இன்னும் இன்னும் ஏறி, சாதாரண திராட்சை, சர்வதேசத்துக்குமான ராஜ திரவமா மாறுது. அப்படித் தயாரிச்சு வர்ற ஒயின், ரொம்ப விசேஷம். அப்படிப்பட்ட ஒயின் பாட்டில்களை நாம பத்திரமா அடுக்கிவைக்கணும். இல்லேன்னா, அந்த அழகான பெண்கள் நம்மைக் கோபிச்சுக்குவாங்க!'னு கற்பனையில் மிதக்கிற முதலாளி.

'எல்லோரும் சேர்ந்து உழைக் கிறோம். தொழிலில் லாபமோ நஷ்டமோ எல்லாருக்கும் பங்கு இருக்கு'ன்னு சொல்லி, தொழி லாளிகளையும் நல்ல நண்பர்களா நடத்துறவன். தனக்குக் கிடைக்கிற லாபத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துச் சந்தோஷப்படுற நல்ல மனுஷன்!

திடீர்னு தொழிலில் சரிவு. நஷ்டம் வருது. கஷ்டம் தருது. தொழிலாளர்களுக்குச் சம்பளத் தைக்கூட சொன்னபடி தர முடி யாத சூழ்நிலை. முதலாளிக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் முதன்முதலா ஒரு மௌனம் வருது. அதனாலேயே, சரிவில் இருந்து மீள முடியாத நிலைமை. மளிகைச் சாமான், வீட்டு வாட கைன்னு பல பிரச்னைகளில் இருக்கிற தொழிலாளிகளுக்கு, முதலாளி மேல் கோபம் முளைக் குது. அவராலும் இப்போதைக்கு எதுவும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சதும், அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியாம மௌனமாகிடுறாங்க.

'லாப நஷ்டங்களில் சரி பங்கு'ன்னு ஏற்கெனவே முதலாளி சொல்லியிருக்கார். எதுவுமே பேச முடியாத நிலைமை. ரெண்டு மாசம் இந்த மௌனத்தைச் சுமந்த தொழிலாளிகளால், வாழ்க்கைப் பாரத்தைத் தாங்க முடியலை. திடீர்னு ஸ்டிரைக் அறிவிக்கிறாங்க. முதலாளிக்குக் கோபம் வந்து, அவரும் மௌன மாகிடுறார். 'என் நிலைமை தெரிஞ்சும், இப்படிப் பண்றீங் களா? ஓ.கே, நானும் வழக்கமான முதலாளி ஆகிறேன் பார்!'னு நடப்பதை மௌனமா வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறார்.

'நன்றி இல்லாத பசங்க!'ன்னு தொழிலாளிகள் மேல அவருக்கு வருத்தம். அவங்களுக்குத் தான் என்னென்ன சலுகைகள் செய்து தந்திருக்கேன்னு ஒவ்வொண்ணா வெளியில் பேச ஆரம்பிக்கிறார். வலது கையால் கொடுத்தது, இடது கைக்குக் தெரியாமல் இருந்தவரைக்கும் இருந்த மரி யாதை, அதையெல்லாம் அவர் வெளியில் சொல்ல ஆரம்பிச்ச தும் காணாமப் போயிடுது. அது வேலை செய்றவங்களோட தன் மானத்தை உரசிப் பார்த்ததும், மௌனம் இன்னும் இறுக்க மாகுது. தொழிலாளிகள், அந்த நல்லவனைப் பற்றி அவங்க லெவலுக்குக் கேவலமா வேற வேற ஆளுங்ககிட்டே பேச ஆரம் பிக்கிறாங்க. இப்படியே ஒரு மௌன யுத்தம் போயிட்டிருக் கும்போது திடீர்னு ஒரு விபத்து; முதலாளி செத்துட்டார்!

அவரோட இறுதிச் சடங்கில் நிக்கிறாங்க அத்தனைத் தொழி லாளிகளும்! அவன் எவ்வளவு நல்லவனா இருந்தான், எத்தனைக் குடும்பங்களின் விளக்கும் அடுப்பும் அவனால் எரியுதுன்னு ஆளாளுக்குக் குமுறிக் குமுறி தங்களோட முதலாளியின் நல்ல குணங்களைப் பேச ஆரம்பிக்கிறாங்க. இதுக்கெல்லாம் ஒரே சாட்சியா மரணம் மட்டும் அங்கே உட்கார்ந் திருக்கு!

ஒரு விபத்துக்கு முன்னால் இந்த மௌனம் கலைக்கிற பக்குவம் இல்லாமப் போறதால் வாழ்க்கையில் ஏற்படுகிற நஷ்டங்களைப் பற்றி எனக்குப் புரியவெச்ச கதை இது.

சமீபத்தில் எனக்குள்ளும் ஒரு மௌனம் வந்தது. அதோட கனம் என்னையும் அழுத்தியது. தெலுங்குப் பட ஷ¨ட்டிங். பெரிய ஹீரோ. பெரிய டைரக்டர். ரெண்டு பேருமே எனக்கும் நண்பர்கள்தான்.

முதல் நாள் மதியம், லஞ்ச் பிரேக்கில் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டப்போ, ஒவ்வொருத்தரோட அன்பையும் சாப்பாடு மூலமா பரிமாறிக்கிட்டோம். எனக்குப் பிடிச்சதை அவங்க வீட்டில் இருந்து சமைச்சுக் கொடுத்துவிட்டிருந்தாங்க. அவங் களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு டிஷ் நான் எடுத்துட்டுப் போயிருந்தேன். யாரும் எதுவும் பிளான் பண்ணாம, யாருக்கும் சொல்லிக்காம, தற்செயலா பரிமாறப்பட்ட அன்பு. ஒரே நேரத்தில், ஒரே மாதிரி யோசிச்சதை நினைச்சு சந்தோஷப் பட்டோம். இந்தப் பகிர்தல் நடந்த மறு நாளே ஒரு சோதனை வந்தது.

ரெண்டு மணி நேரம் லேட்டா நான் ஷ¨ட்டிங் போனேன். தப்புதான். ஆனா, நான் எவ்ளோ லேட்டா வந்தாலும், என் ஸீனை முடிச்சுக் கொடுக்காம போக மாட்டேன்னு அவங்களுக்குத் தெரியும். ஆனாலும், ஹீரோ ரெண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாப் போச்சேன்னு அவனுடைய மேனேஜர் கொதிச்சிருக்கான். டைரக்டரும் ஏதேதோ வார்த்தைகளை விட்டுட்டார். இதை என் அசிஸ்டென்ட்ஸ் கேட்டு, டென்ஷனா கிட்டாங்க. ஷ¨ட் டிங் ஸ்பாட்டில் நான் போய் இறங் கும்போதே, இதை என்கிட்டே சொல் லிட்டாங்க. திடீர்னு ஒரு மௌனம் ஷ¨ட்டிங் ஸ்பாட் முழுக்கப் பரவ ஆரம்பிச்சுது.

'பிரேக்'னு சொல்லி அரை நாள் ஷ¨ட்டிங்கை நிறுத்திட்டார் ஹீரோ. 'மூட் இல்லே'னு சீக்கிரமே பேக்கப் சொல்லிட் டார் டைரக்டர். பல லட்ச ரூபா கண்ணெ திரே நஷ்டமாகு தேன்னு தயாரிப்பாளரும் கவலை யாகிட்டார். யாரும் யாருடனும் பிரச்னையைப் பேசிக்கவே இல்லை.

ஒரு நாள், மறுநாள்னு ஸ்பாட்ல பரஸ்பரம் ஒரு ஹலோ கூட இல்லை. ஏதோ கடமைக்கு வேலை பார்க்கிற உணர்வு எல்லாருக்கும் வந்தாச்சு. கிரி யேட்டிவ்வான ஒரு வேலையை அது இன்னும் இன்னும் முடக் கிப் போடும். தயாரிப்பாளருக்குக் கோபம் ஜாஸ்தியாகிட்டே இருக்கு. ஆனாலும், அதை வெளிக் காட்ட முடியாம, யூனிட்ல இருக் கிற வேற யாரோ ஒருத்தரிடம் ஏதோ ஒரு விஷயத்துக்கு வெளிப் படுத்த, அது எல்லோர் கண் ணுக்கும் முன்னால வேறொரு விவகாரமா உரு மாறிட்டே இருக்கு. என்னோட ரெண்டு மணி நேரத் தாமதத் துக்கு விலையா, எத்தனை பேரோட சந்தோஷம் காணா மப் போகுதுன்னு பார்க்க விசித்திரமா வும் இருக்கு; வேதனை யாவும் இருக்கு. காட்டுத் தீ போல, ஒருத்தர்கிட்டே இருந்து இன்னொருத் தர்கிட்டே பரவ ஆரம்பிக்கிற கோபத் துக்குக் காரணமான நாங்க மூணு பேரும் அப்பவும் மௌன மாவே இருக்கோம்.

அல்ஜீரியா கதையில் வர்ற மாதிரியே, எனக்காக அவங்க பெரிய மனசு பண்ணிச் செய்த கால்ஷீட் அட்ஜஸ்ட் மென்ட்டை சம்பந்தம் இல்லாதவங்க கிட்டே எல்லாம் சொல்ற விஷயங் கள் என் காதுக்கு வருது. என்னை அறியாமலேயே என் நாக்கு, நான் அவங்களுக்குப் பண்ணின நன்மை களைப் பற்றி யார் யாரிடமோ பேச ஆரம்பிக்குது. இப்படியே ஒவ்வொருத்தர்கிட்டேயும் இருக்கிற நல்ல பழக்கங்களுக்கெல்லாம் வரிசையா சமாதி கட்டிட்டு, சந்தோஷமா நின்னு சிரிக்குது ஈகோ.

இப்படி இறுகிக்கிட்டே போகிற மௌனத்தின் பாரத்தை ஒவ்வொருத் தனும் அவனுக்கு கீழே இருக்கிறவங்க மேல எரிச்சலா இறக்கி வைக்கிறான். அதில் நானும் அடக்கம்.

மௌனத்தை யார் முதலில் உடைப்பது?

மன்னிப்பது என்கிற நல்ல பழக்கத்தை நெருக்கடியான நேரத்தில் மனுஷன் ஏன் மறந்துடறான்? கோபம் என்பதே அகங்காரம்தானே? அவங்க என்னைக் கூப்பிட்டுப் பேசியிருக் கலாம். புரிய வெச்சிருக்கலாம். நானாவது ஸாரி சொல்லியிருக் கலாம். வார்த்தைகளை அதிகமா விட்டுட்டு மௌனமா இருக்கிற தவறை, வாழ்க்கையில் நாம ஒவ்வொருத்தரும் எத்தனை முறை செய்றோம்? இந்த மௌனம் இன்னும் எவ்ளோ காலம் நீடிக்கும்? இப்படி நிறையக் கேள்விகளை மனசு யோசிக்க ஆரம்பிச்சுது. உடனே ஹீரோ, டைரக்டர்னு ரெண்டு நண்பர் களையும் கூப்பிட்டுப் பேசினேன். தெரிஞ்சே எவ்ளோ பெரிய விலை தந்துட்டிருக்கோம்னு சொன்னேன். நான் யோசிச்சதையே அவங்களும் யோசிச்சிருக்காங்க. யார் முதலில் சொல்றதுங்கிற 'ஈகோ'தான் பிரச்னையைத் தீர்க்கவே விடாம ராட்சசன் மாதிரி நின்னுட்டிருந்தது.

பத்து நாள் நடந்த மௌன நாடகத்துக்கு, வெறும் இருபதே நிமிஷத்தில் முற்றுப்புள்ளி வெச்சாச்சு. அப்புறம் கலகலன்னு பழைய வாழ்க்கை திரும்பி வந்துடுச்சு!

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கிற ஈகோ யுத்தத்தில் அந்த மௌனத்தை உடைக்க முன் வராமல் விவாக ரத்து வரைக்கும் போறவங்க எவ்வளவோ பேர் இருக்காங்களே! இப்படி அம்மா & பிள்ளை; மாமியார் & மருமகள்; அண்ணன் & தம்பி; காதலன் & காதலி; முதலாளி & தொழிலாளி; பக்கத்து வீடு, குழந்தைகள், நண்பர்கள்; உறவு கள்னு நம்மைச் சுற்றி இருக்கிற உலகத்தில் எவ்வளவு மௌனத்தை நாம் சுமந்துட்டு இருக்கோம்!

பிரச்னையைப் பேசாமல், தீர்வையே தேடாமல்... கோபத்தையும், அது பெத்தெடுத்த குழந்தை யான மௌனத்தையும் தோளில் சுமந்துட்டு வாழ்க் கையைத் தொலைக்க லாமா?

'மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன். மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்'னு 'விருமாண்டி'யில் ஒரு வசனம் வருமே... அது சத்தியம்!
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:27:19 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-17
----------
ரெட் லைட் ஏரியா...

மும்பையில் பெண்கள் பாலியல் தொழில் செய்ற காமாட்டிபுரத்தில் நானும் என் நண்பனும் நிக்கிறோம். இந்தியாவில் இருக்கிற எல்லா ஸ்டேட் பெண்களும் வாடகைக்குக் கிடைக்கிற இடம். இப்போ போலவே, அது எப்பவோ ஒரு மழைக் காலம். சும்மா சிலுசிலுன்னு இருக்குது ஊரு. சாயங்காலம் ஆறு ஆறரை மணி இருக்கும்.

விதவிதமான வயசு, நிறம், மொழி, அலங்காரங்களோடு பெண்கள். கண்ணால 'கமான்... கமான்...' சொல்றாங்க. செல்லமாச் சிரிக்கிறாங்க, கை தட்டிக் கூப்பிடுறாங்க. எல்லா வயசிலேயும் பெண்கள் கிடைப்பாங்கன்னு சொல்றான் ஒரு புரோக்கர். வயசு குறையக் குறைய துட்டு ஜாஸ்தி ஆவும்னு என் நண்பனிடம் பிஸினஸ் பேசு றான். யாரோ ஒருத்தி வயித்துப் பிழைப்புக்காக, பணம் வாங்கிட்டு, முன்னே பின்னே தெரியாதவனோட படுக்குறா. அதுலயும் பங்கு கேட்க, யாரோ ஒருத்தன் இருக்கானேன்னு யோசிக்கவே மிரட்சியா இருக்கு!

என் நண்பனைச் சுத்தி பத்துப் பதினஞ்சு பெண்கள் நிக்கிறாங்க. அதுல யாரையாவது ஒருத்தரை அவன் செலக்ட் செய்யலாம். அவனுக்கு பதினஞ்சு பேருமே பிடிக்கலை. வேற ஒரு பொண்ணோட பேரைச் சொல்லி அவ வேணும்னு கேட்கிறான். பேர் சொல்லிக் கேட்கிற அளவு இவன் இங்கே ரெகுலர் கஸ்டமரான்னு எனக்கே ஷாக்! நாங்க நாடக ரிகர்சலில் இருந்தபோதே, யாருக்கும் தெரியாம வந்துட்டுப் போயிருக்கான். அவன் பேர் சொல்லிக் கேட்ட பொண் ணைக் கூட்டிட்டு வர்றான் முதலாளி. இந்தியில் அசிங்க அசிங்கமா திட்டிக்கிட்டே வர்றா அந்தப் பொண்ணு. இருபது வயசு இருக்கும். 'இதுவரைக்கும் இருபது பேருக்கு மேல படுத்துட்டேன். இதுக்கு மேல என்னால முடியாது. வேறு யாரையாவது அனுப்பு!'ன்னு கத்துறா. என் நண்பன்கிட்டே 'நூறு ரூபா எக்ஸ்ட்ரா குடுத்தா, அவ ஓ.கே. சொல்லிடுவா!'ன்னு காதைக் கடிக்கிறான் புரோக்கர்.

காமம் மிதக்கிற கண்களோட, தலையாட்டுறான் நண்பன். அந்தப் பதினஞ்சு பொண்ணுகளைக் காட்டி, என்னையும் ஒருத்தியைத் தேர்ந்தெடுக்கச் சொல்றான். 'இல்லடா, என்னமோ பிடிக்கலைடா. நான் பக்கத்துத் தியேட்டர்ல படம் பார்க்கப் போறேன். நீ அங்கே வந்துடு!'ன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.

படம் முடிஞ்சு திரும்பி வந்தா, வெளியில் நிக்கிறான் நண்பன். 'பசிக்குதுடா, மொதல்ல சாப்பிட்டு, அப்புறம் டிரெயினுக்குப் போலாம்டா!'ன்னு கூப்பிட்டா, அவன் முழிக்கிறான்.

'ஸாரி பிரகாஷ், நீ குடுத்த ஐயாயிரம் ரூபாயை பாக்கெட்ல வெச்சிருந்தேன். அவ திருடிட்டாடா. திருப்பிப் போய் கேட்டா குண்டாஸை வெச்சு அடிக்க வர்றானுங்க. என்ன பண்றதுன்னு தெரியலைடா!'ன்னு தலை குனிஞ்சு நிக்கிறான். என் நண்பன் அந்த ஐயாயிரம் ரூபாய்க்கு அன்னிக்கு மட்டும்தான் தலை குனிஞ்சான். ஆனா, நான் இதோ இந்த நிமிஷம் வரைக்கும் என் அம்மா முன்னால் அந்தக் காசுக்காகத் தலை குனிஞ்சு நிக்கிறேன். ஏன்னா, அவசரம்னு அம்மாவிடம் நான் வாங்கிட்டு வந்து தந்த ஐயாயிரம் ரூபாயைத்தான் என் நண்பன் அவன் டேஸ்ட்டுக்கு விருப்பமான ஒரு பொண்ணுகிட்டே தொலைச்சுட்டு வந்து நிக்கிறான். அவ அவனை ஏமாத்திட்டா. இவன் என்னை ஏமாத்திட்டான். நான் என் அம்மாவை ஏமாத்தினேன். ஒரே விஷயத்துக்குப் பின்னால், எவ்ளோ ஏமாற்றங்கள் இருக்கு!

இருபத்தஞ்சு வயசு வரைக்கும் என்னைப் பார்த்த யாரும், 'நான் உருப்படுவேன்'னு நிச்சயம் நம்பியிருக்க மாட்டாங்க. என் அம்மாவுக்கே அந்த நம்பிக்கை இருந்துச்சான்னு தெரியலை. எங்களுக்காக, பல ஊர்களில் நர்ஸ் வேலை பார்த்திருக்கா என் அம்மா.

எப்பவாவது என் அம்மாவை அவ வேலை செய்ற இடத்துக்குத் தேடிப் போய்ப் பார்ப்பேன். 'நான் சம்பாதிச்சதும்மா'னு அவங்களுக்கு ஒரு பைசா நான் தந்தது இல்லை. ஏன்னா, அப்போ என் வாழ்க்கை அப்படி. நான் என் அம்மாவைப் பார்க்க போகிற ஒவ்வொரு தடவையும் அவதான் எனக்குக் காசு தருவா. இன்னும் பச்சையா, கொஞ்சம் கொச்சையா சொல்லணும்னா, எனக்கு காசு தேவைப்படும்போதெல்லாம் நான் அவளிடம் போய் நிப்பேன். பிள்ளைகளுக்குத் தர்றதுக்காகவே, அம்மாக்கள் காசு எங்கேயாவது ஒளிச்சு வெப்பாங்களோ?

அப்போ மும்பையில் வேலை பார்த்துட்டு இருந்தாங்க அம்மா. ஜெட் ஏர்வேஸ் முதலாளி கோய லின் வீடு. கோடீஸ்வரர் வீட்டுப் பசங்களோட ரெண்டு பிள்ளைகளை வளர்க்கிற பொறுப்பு அம்மாவோடது. மும்பையில் விக்டோரியா ரோட்ல செம பங்களா. அந்த ரோட்ல நானும் என் நண்பனும் நடந்து போனதுக்கே, சந்தேகப்பட்டு நிறுத்தி விசாரிச்சான் செக்யூரிட்டி. அப்படி இந்தியாவே திரும்பிப் பார்க்கிற பெரிய மனிதர்கள் வாழ்ற ஏரியா.

அந்த வீட்டு வாசல்ல நின்னு அம்மா பேர் சொன்னேன். விசா ரிச்சுட்டு என்னை மட்டும் உள்ளே அனுமதிச் சாங்க. ஹாலில் யார் யாரோ பெரிய மனிதர்களோட பேசிட்டு இருக்கார் கோயல். ஜாவேத் அக்தர், ஷபனா ஆஸ்மி மாதிரி ஒருத்தர் ரெண்டு பேர் அடையாளம் தெரியுது.

நான் ஓரமா நடந்து போனேன். ஒரு அற்புதமான பார் கண்ணில் படுது. இப்படி யெல்லாம் வீட்டுக்குள்ளேயே வெச்சு விதவிதமாக் குடிக்க முடியுமான்னு பிரமிப்பா இருக்கு. அங்கே இருந்த டிரிங்க்ஸோட பேர் என்னன்னுகூடத் தெரியலை. அந்த பாட்டில் களைப் பார்வையால பார்க்கும்போதே, பாதி போதை ஏறுது. அந்த வீட்டின் சமையல் ரூமுக்குப் போறதுக்கே நாலஞ்சு வீட்டைக் கடந்து போற தூரம் நடக்க வேண்டியிருக்கு. கண்களாலேயே பாசத்தைக் காட்டி வரவேற்கிறா அம்மா. 'ஏண்டா இளைச் சிருக்கே? சரியா சாப்பிடறதில்லையா?'ன்னு கேட்கிறா. கொஞ்ச நாள் கழிச்சு தன் பிள்ளையைப் பார்க்கிற எல்லா அம்மாக்களும் கேட்கிற கேள்வி. அதுக்கு நான் பதில் சொல்லாம, 'எனக்கு அவசரமா பணம் வேணும்மா!'ங்கிறேன். 'எவ்ளோடா?'ன்னு அம்மா கேட்கிறாங்க. எனக்கு அப்போ ஐயாயிரம் ரூபா வேணும். அதுவே என் அம்மாவுக்கு ரெண்டு மாசச் சம்பளம். ஆனா, அந்த வீட்டைப் பார்த்ததும் பத்தாயிரம் ரூபாய் கேட்கலாம்னு மனசுக்குள்ளே ஒரு அரிப்பு. ஆனா, எனக்கே அது அசிங்கமா இருந்ததால ஐயாயிரம் போதும்னு சொல்லிட்டேன்.

முதலாளிகிட்டே போய் சம்பள அட்வான்ஸ் கேட்டிருக்கா அம்மா. 'அவ்ளோ பணம் எதுக்கு?'ன்னு கேட்டிருக்கார் முதலாளி. அம்மா சொன்னதும், 'வளர்ந்த பையனுக்கு எதுக்கும்மா நீ இன்னும் காசு தர்றே?'ன்னு திட்டியிருக்கார். 'நடிகனாக முயற்சி பண்றான். திறமையான பையன். பெரிய ஆளா வந்துரு வான்'னு சொல்லியிருக்கா என் அம்மா. 'உன் பையனை இன்னிக்கு சாயந்திரம் என்னை ஆபீஸ்ல வந்து பார்த்துட்டு, பணம் வாங் கிக்கச் சொல்லும்மா. புத்திமதி சொல்லிட்டு பணம் தர்றேன்'னு சொல்லியிருக்கார் கோயல்.

அவர் ஆபீஸ§க்கு நானும் நண்பனும் போயிருந்தோம். என்னைப் பார்க்க, கோயல் அப்பாயின்மென்ட் தந்திருக் கார்னு சொன்னா, அந்த ஆபீஸ்ல யாருமே நம்பலை. அழுக்கான டிரெஸ் போட்டிருந்தேன். நான் பேசின இங்கிலீஷ்னால கொஞ்சம் நம்பிக்கை வந்து என் ஹிஸ்டரியே விசாரிச்சுத் தெரிஞ்ச பிறகு, ரிசப்ஷன்ல உட்கார வெச்சாங்க.

கொஞ்ச நேரத்துல உள்ளே கூப்பிட்டாங்க. கோயலும் அவர் பக்கத்தில் குண்டா அவரு டைய மனைவியும் இருந் தாங்க. இவர் குள்ளமா சம்பந்தமே இல்லாத உருவத்தில் இருக்கார். என்னோட உயரம்கூட இல்லை. எப்படி இவ்ளோ பணம் இவரால் சம்பாதிக்க முடிஞ்சுதுன்னு ஐயாயிரம் ரூபா வாங்கப் போன நான் யோசிக்க ஆரம்பிச் சுட்டேன்.

'நீ வாங்கிட்டுப் போறது உன் அம்மாவோட ரெண்டு மாசச் சம்பளம் தம்பி!'னு நல்ல வார்த்தை கள் நாலு சொல்லி அனுப்பினார்.

எனக்குப் பணத்தைப் பத்திரமா வெச்சுக்கிறது கஷ்டம். நாடகம் நடிச்சதுக்கு சன்மானமா தந்த காசைத் தொலைச்சதால்தான், அம்மாவிடம் போய் நின்னு, அதனால் கோயலிடம் கை நிறைய காசையும் காது நிறைய அட்வைஸையும் கேட்டுட்டு வர்றேன். 'இதை வெச்சிருடா'ன்னு நண்பனிடம் தந்தேன்.

என் அம்மாங்கிற ஒரு பெண் தந்த பணத்தை என் நண்பன் இன்னொரு பெண்ணிடம் ஏமாந்துட்டு வந்தான். யோசிச்சுப் பார்த்தா, என் வாழ்க்கையில் மறக்க முடியாத இந்தச் சம்பவத்தில் இரண்டு பெண்கள் வர்றாங்க. ஒண்ணு, ஏமாந்த என் அம்மா. அப்புறம் ஏமாத்தின அந்தப் பொண்ணு.

என் அப்பன் என்கிற ஆண் ஏமாத்தினதால், தன் பிள்ளைகளை வேற வேற ஊர்ல ஹாஸ்டல்ல விட்டுட்டு, யாரோ ஒரு பணக்கார னோட ரெண்டு பிள்ளை களுக்கு வளர்ப்புத் தாயா வேலை பார்த்தா அம்மா. 'புருஷன் மாதிரியே மகனும் வளர்ந்து வர்றானே'ங்கிற வேதனையை வெளிக் காட்டிக்காம, அவ ளோட அந்தக் கஷ்டத் திலும் எனக்குப் பணம் தந்தா. அதை நான் என் நண்பன்கிட்டே தந் தேன். 'ஒரு நாளைக்கு எத்தனை பேர்கிட்டே படுக்கச் சொல்வேடா?'ன்னு வேத னையை ஒருத்தி வாய்விட்டுச் சொன்ன பிறகும் நூறு ரூபாய்க்கு அதிகமா பேரம் பேசினான் புரோக்கர் என்கிற ஆண். அவளோட வேதனையைத் தாண்டி, தன்னோட வெறிதான் முக்கியம்னு அவ பின்னால் போனான் என் நண்பன் என்கிற ஆண். திருடின அந்த அழகுப் பெண்ணைப் பார்த்துப் பேசி ஒரு கேள்வி கேட்கிற சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கலை. 'ஏன் பொண்ணு... நீ இப்படி உடலை வித்தும் பத்தாம, திருடியா மாறினதுக்குப் பின்னால எத்தனை திருட்டு ஆண்கள் இருக்காங்கம்மா?'

அப்பன், அண்ணன், புருஷன்..... இப்படி அவகிட்டேயும் ஒரு பட்டியல் இருக்கும்தானே!
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:28:01 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-18
----------
 
தெரிஞ்சோ தெரியாமலோ வில்லன் நடிகன் ஆகிட்டேன். கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு உலகத்தில் இருக்கிறஎல்லாத் தப்புகளையும் சினிமாவில் செய்தாகணும். இது போதாதுன்னு ஹீரோக்களை முதல் இரண்டு அடி, வாயில் ரத்தம் வர்ற மாதிரி அடிக்கணும். உதட்டுக்குக் கீழே வர்ற ரத்தத்தைப் பார்த்துட்டு ஹீரோ மூணாவது அடி அடிக்கும்போது நான் சுருண்டு விழணும். இப்படியே பெரும்பாலான சினிமா வாழ்க்கை போயிட்டிருக்கு.

சமீபத்துல ஒரு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுத்தாங்க. கொஞ்சம் கவனக் குறைவா இருந்ததால, கையில் சின்னதா காயம். எல்லாரும் பதறிட்டாங்க. ஒரு சீனியர் சினிமாக் காரர் சின்ஸியரா ஒரு அட்வைஸ் தந்தார். ''தம்பி ஒரு நடிகனுக்கு உடம்புதான் மூலதனம். அதைக் கவனமா பார்த்துக்கங்க''னு சொன்னார். ரொம்பச் சரி!

நடிகனுக்கு மட்டுமில்லை, மனுஷனாப் பொறந்த ஒவ்வொருத்தருக்குமே உடம்பு முக்கிய மான மூலதனம். மெஷினோட ஒவ்வொரு பகுதியையும் சரியாப் பராமரிக்கிற மாதிரி உடம்பையும் பராமரிக்க வேண்டியிருக்கு. மனசு சொல்றதை உடம்பு கேட்கிற வரைக்கும் தான் வாழ்க்கை ரசனையா இருக்கும். அதனாலதான் 'விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்'னு பாரதி தன்னுடைய இஷ்ட தெய்வத்துக்கிட்ட வேண்டினான்.எந்த வேகத்தில் சுவர்ல ஒரு பந்தை எறியுறோமோ, அதே வேகத்துல பந்து திரும்ப கைக்கு வரணும். அப்பதான் அது டேமேஜ் இல்லாம இருக்குன்னு அர்த்தம். உடம்பு ஒரு வேகத்துலேயும், மனசு வேறொரு வேகத்துலேயும் பயணம் செய்ய ஆரம்பிச்சுட்டா வாழ்க்கை நரகமாகிடும். அடுத்தவங்க நம்மளைத் தொந்தரவா பார்க்கிறது மாதிரியான கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது.

மரணம் நிகழ்ந்த வீடுகள்ல கிடத்தி வைத்திருக்கிற மனித உடல்களுக்குக் கடைசியாக கிடைக்கிற மரியாதையை நினைக்கிறப்ப மனசு லேசா மிதக்க ஆரம்பிச்சுடும். ஒருத்தன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கான்னு அவனோட சவ ஊர்வலத்தை வெச்சு சொல்லிடலாம்னு சொல்லுவாங்க. எவ்ளோ பேர் வர்றாங்கன்றது முக்கியம் இல்லை. அதில் எத்தகைய மனிதர்கள் கலந்துக்கிறாங்க என்பதுதான் என்னுடைய அளவுகோல்.

ஒவ்வொரு மதத்துக்கும், சாதிக்கும் ஏத்த மாதிரி மனிதனோட உடல் அடக்கம் நடைபெறும். நெருப்புல எரிக் கிறதா, நிலத்துல புதைக்கிறதாங்கிறதுல தொடங்கி பிரச்னை ஆரம்பிக்கும். ஒரு வருஷமா உடம்பு சரியில்லைன்னு வீட்டோட ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த மனுஷன் செத்த பிறகு அவ னோட உடலை அதே வீட்டு நடுவில் கிடத்தி மரியாதை பண்ணுவாங்க. தன்னோட அன்பைத் தெரிவிக்க ஒவ்வொரு நெருக்கமான உறவும் அழுகையை ஆயுதமாக்கி இருப்பாங்க. அவரவரோட மன உறுதிக்கு ஏற்ப கண்ணீர் விதவிதமா வெளிப்படும். திடீர்னு உடைஞ்ச அணை மாதிரி கன்னங்கள்ல கோடு கிழிக்கிற கண்ணீர், சத்தமில்லாம விசும்பல் களிலேயே வெளிப்படுகிற கண்ணீர், என்னமோ ஏதோனு செத்தவனே பதறி எழுந்து வர்ற மாதிரி அலற லோடு கதறிட்டு வர்ற கண்ணீர்னு பல ஆங்கிள்ல துயரங்கள் வெளியில் வரும்.

வீட்டுல இருந்து பொணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துட்டுப் போகும் போது கேட்கிற அழுகைச் சத்தம் கல் இதயத்தையும் கரைச்சுடும். ரயில்ல, கோயில்ல, மார்க்கெட்ல குண்டு வெச்சுட்டு டெரரிஸ்ட்டுங்க ஓடு றாங்க இல்லே... குண்டு வெடிச்ச பிறகு ஒரு முறை அந்த இடத்தை அவன் போய்ப் பார்த்தான்னா, அப்புறம் அவன் தீபாவளிப் பட்டாசு கூட வெடிக்கமாட்டான்.

செத்தவனை அடக்கம் பண்ண பிறகு அவனை ஒரு போட்டோவாக்கி ஃப்ரேம் பண்ணி மாட்டுவாங்க. அப்புறம் தினம் தினம் சாமியா நினைச்சு கும்பிடுவாங்க. அவனோட சமாதிக்குப் போய் அவனுக்குப் பிடிச்ச சாப்பாடுலேர்ந்து சாராயம் வரைக்கும் வெச்சு படைச்சு, அவனுடைய ஞாப கங்கள்ல அழுதுட்டு வருவாங்க. இனிமே இந்தக் கலாசாரம் இருக்கு மான்னு தெரியலை. செத்தவனை மெஷின்ல வெச்சா அஞ்சு நிமிஷத்துல சாம்பல்! அதுல கொஞ்சம் எடுத்துட்டுப் போய்க் கடல்ல கரைச்சுட்டு சூரியனைப் பார்த்து மூணு சுத்து சுத்திக் கும்பிடு போட்டுட்டு வர வேண்டியதுதான்.

நம்ம நாட்டுல மனுஷங்களை உயிரோடு இருக்கும்போது கொண்டா டறதைவிட செத்த பிறகு செலிபிரேட் பண்றதுதான் வழக்கமா இருக்கு.

'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ'ங்கிற கண்ணதாசன் பாட்டுல இருக்குற உண்மைக்குச் சாட்சியா ஒரு உதாரணத்தைச் சமீபத்துல சந்திச்சேன். கன்னட சினிமாவுல லோகேஷ்னு ஒரு அற்புதமான நடிகர் இருந்தார். நாடகங் கள்ல நடிச்சிட்டிருந்தவர், அப்படியே சினிமாவுக்குப் போய் பெரிய நடிகரா ஆகிட்டார். எனக்கெல்லாம் ஒரு காலத்துல ரோல் மாடல். ரொம்ப முற்போக்கா பேசுவார். அவரோட பேசறதுக்கே நான் ஆசைப்பட்டு ருக்கேன். அவர் காலத்திலேயே நானும் நடிகனானது மட்டும் இல்லாம, அவர் படங்களிலேயே நடிக்கிற வாய்ப்பும் கிடைச்சுது. அவர்கூட நெருக்கமா பழகினப்ப ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சார்.

நல்லா சமைப்பார். நல்லா சாப்பிடுவார். மட்டன் கோலா உருண்டைன்னா ரொம்பப் பிடிக்கும். ஷ¨ட்டிங் ஸ்பாட்ல சாப்பிடறது மட்டுமில்லாம, பார்சல் வாங்கிட்டுப் போய் ஃப்ரிஜ்ல வெச்சு சாப்பிடுவார். அடுத்தவங்க தன்னைப் பத்தி என்ன நினைக்கிறாங்க என்கிற கவலையே இல்லாத மனுஷன். காஸ்ட்யூம் டிஸைனரோடு எப்பவும் சண்டை. படத்துல நடிக்கக் கொடுத்த டிரஸ்ஸைத் திருப்பிக் கொடுக்காம கொண்டுபோய்டுவார். ஆனா, நடிப்புன்னு வந்துட்டா பிரமாதப்படுத்திடுவார். அதனால, ஒரு மாபெரும் கலைஞனை என்ன சொல்றதுன்னு புரியாம, அவரோட சின்னச் சின்னக் குறைகளை மத்தவங்க ஏத்துக்குவாங்க.

ரெண்டு வருஷத்துக்கு முன்னால அவர் திடீர்னு ஒரு நாள் இறந்துட்டார். அவர் உடலை கலா«க்ஷத் ராவுல பொதுமக்கள் அஞ்சலிக்காக வெச்சாங்க. திரளான ரசிகர்கள் கூட்டம். நானும் போயிருந்தேன். உடலை எரிக்கிறதா பொதைக் கிறதாங்கிற சண்டையே வரலை. தெளிவா மனுஷன்... 'என்னோட உடலை எரிக்கவும் கூடாது; பொதைக் கவும் கூடாது. மருத்துவ ஆராய்ச்சிக்குக் கொடுத்துடணும்'னு சாகிறதுக்கு முன்னால உயில் எழுதிவெச்சிருக் கார். அதன்படி, கர்நாடகாவுல இருக்கிற ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அவருடைய உடலை மாணவர் களின் ஆராய்ச்சிக்காகத் தந்துட் டாங்க. பத்திரிகையில் அவரைப் பற்றின அஞ்சலிகள், சில நினைவுக் கூட்டங்கள்னு கொஞ்ச நாள்ல எல்லாமே மறந்துபோச்சு!

என் நண்பன் ஒருத்தன் கன்னட பத்திரிகையில் வேலை பார்க் கிறான். அவன் அந்த மெடிக்கல் காலேஜுக்கு ஏதோ ஆர்ட்டிகிள் சம்பந்தமா போயிருக்கான். அங்கே மனித அனாடமி பத்திச் சொல்லிக் கொடுக்கிற லேப்ல அவருடைய உடலைப் பத்திரமா பாதுகாத்து வெச்சிருக்காங்க. ''ஆனா, உருகி உருகி வந்த ரசிகர் கூட்டம் தொடங்கி, கூடவே வாழ்ந்த மனைவி, பிள்ளை கள் வரை இன்னொரு முறை போய் அந்த உடலை யாருமே பார்க் கலை''னு சொன்னான் நண்பன்.

லோகேஷூடைய மனைவியும் ஒரு நடிகை. அவங்களைப் பார்க்கி றதுக்கு ஒரு முறை போயிருக்கான். அந்த வீட்ல லோகேஷோட படம் பெரிசா மாட்டியிருக்கு. அந்தம்மா வுக்குத் தன் கணவரோட உடலை பத்திரமா பாதுகாக்கிற விஷயம் தெரியுமான்னு கேட்டிருக்கான் நண்பன். ''தெரியும். ஆனா, எப்படிப் போய்ப் பார்க்கிறது தம்பி?''னு ரொம்ப வருத்தமா கேட்டிருக்காங்க. ஒரு கண்ணாடிப் பெட்டியில் மனித உடலைப்பத்தி ரமா பாதுகாக்கிற ஃபார்முலாவை நாம கண்டுபிடிச்சுட்டோம். படத்தை வெச்சுக் கும்பிடறதுக் குப் பதிலா நிஜமான உடலை வெச்சே கும்பிட முடியும். ஆனா, யார் செய்ய முன் வருவாங்க? அம்மா, அப்பா, நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த தலைவர் யாரா இருந்தாலும் செத்துட்டா 'டெட்பாடி'தான்! 'உடல் மண்ணுக்கு, உயிர் நடிகனுக்கு'னு வசனம் பேசுற ரசிகர் மன்றத் தலைவர் கிட்ட, அந்த நடிகன் இறந்த பிறகு, 'உன் வீட்ல இவரைக் கண்ணாடி பெட்டிக்குள்ள பத்திரமா வெச்சுக்குங்க. ஆகிற செலவைப் பத்திக் கவலைப்பட வேண்டாம்'னு சொன்னா வெச்சுக்குவாரா? செத்தவங்க பயன்படுத்தின சீப்புல இருந்து கீ&செயின் வரைக்கும் 'அவரோட ஞாபகமா வெச்சி ருக்கேன்'னு டயலாக் பேசுற யாரும், 'அவர் உடம்பையே ஞாபகார்த்தமா தர்றோம். வாங்கிக்குங்க'னு தந்தா வாங்கிப்பாங்களா?

வாழும்போதே நாலு நல்ல விஷயம் பண்ணிடணும்னு பெரிய மனுஷனுங்க சொல்றதுல எவ்ளோ உண்மை இருக்கு பார்த்தீங்களா?

லோகேஷுங்கிற நடிகன் உயிரோடு இருந்தபோது எனக்குச் சொல்லித் தந்ததைவிட, செத்த பிறகு நிறைய சொல்லித் தந்திருக்காரேன்னு ஆச்சர்யமா இருக்கு!


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:28:53 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com
 
Part-19
------------------
 
காமுகனும், கடவுளும், நானும்!

காதல் பற்றி

எல்லோரும் பேசுறோம், கொண்டாடுறோம், பகிர்ந்துக்கிறோம்.

ஆனா, காமம்?

ஒவ்வொரு மனிதனும் காமத்தோடு போடுற சண்டை இருக்கே, அது ரொம்ப ரகசியமானது. யாருக்கும் தெரியாம, ஒவ்வொருத்தரும் அதை ஒளிச்சுவெச்சுக்கிறோம்.

எல்லா உயிரினங்களுக்கும் காமம் இருக்கு. ஆனா, மனிதனைத் தவிர எந்த உயிரினமும் காமத்தைக் கண்டு ஒளிவதும் இல்லை, ஒளிச்சுவெச்சுக்கிறதும் இல்லை. 'செக்ஸ்' என்கிற வார்த்தையை நம் கலாசாரத்தில் ஏனோ கெட்ட வார்த்தை போல ஆக்கிட்டாங்க. சிரிப்புதான் வருது. ஏன்னா, நாம எல்லோரும் அந்தக் கெட்ட வார்த்தையினால் பொறந்தவங்கதான்.

தெலுங்கு இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பாளி, சலம். தன்னோட வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமா எப்பவும் வெச்சிருந்த கலைஞன். 'மைதானம்'னு ஒரு நாவல் எழுதினார்.

ஒரு கணவன் & மனைவி. அழகான வீடு. அவனைப் பார்க்க நண்பன் ஒருத்தன் வருவான். புருஷன்கிட்டே ஏதோ சொல்றதுக்காக ஹாலுக்கு வந்த மனைவி, அவங்க ரெண்டு பேரும் பேசிட்டிருக்கிறதைப் பார்த்ததும், சட்டுனு திரும்பி கிச்சனுக்குப் போயிடுவா. உள்ளே போனவளுக்குத் திடீர்னு ஏதோ தோண, தன்னோட இடுப்பைத் தடவிப் பார்ப்பா. புருஷனோட நண்பனா வீட்டுக்கு வந்திருக்கானே ஒருத்தன், அவனோட கண்களில் வெளிப்பட்ட காமம், இவளோட இடுப்பில் வந்து ஒட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சாம். தன்னோட இடுப்பை அவன் பார்த்ததை, இவ பார்க்காமலேயே கண்டுபிடிச்சுட்டா.

அடிக்கடி அந்த நண்பன் வீட்டுக்கு வந்துட்டுப் போவான். அவன் ஒவ்வொரு முறை வரும்போதும், தன்னை ஒவ்வொரு இடமாப் பார்க்கிறதா அவளுக்குத் தோணுது.

ஒரு முறை அவன் வந்துட்டுப் போயி ருப்பான். அன்னிக்குக் கணவனும் மனைவியும் சந்தோஷமா இருப்பாங்க. களைச்சு எழும்போது மனைவி தன் னோட புடவையைச் சரி பண்ணுவா. 'ஆனா, அவன் பார்த்துட்டுப் போன துக்கப்புறம் இவ தன்னோட உடம்பையே சரிபண்ணுவா!'னு எழுதுவான் சலம். அப்படி ஒரு காமப் பார்வையாம் அந்த நண்பனுக்கு.

திடீர்னு ஒரு நாள் அந்த நண்பன், 'நாம ரெண்டு பேரும் ஓடிப்போயிட லாமா?'ன்னு இவகிட்டே கேட்பான். மறுநாள் வீட்ல இருந்து மனைவி காணாமப்போயிடுவா.

'காமம் அவனோட பார்வையில் இருந்துச்சா? அவளோட தாகத்தில் இருந்துச்சா? புருஷனோட இயலாமையில் இருந்துச்சா?' இப்படி எந்தக் கேள்விக்கும் பதில் தராமல், மூணு பேரைச் சிக்கலில் விட்டுட்டு காமம் ஜெயிச்சு, அந்த ரெண்டு பேரை கோதாவரி நதிக்கரையில் கொண்டு போய் விட்டுடும்.

ஓடிப்போன ரெண்டு பேரும் காமத் தில் சரணடைஞ்சு நதிக் கரையோரம் ஒரு குடிசை போட்டு வாழ ஆரம்பிப் பாங்க. அவனுக்கு அவளோட தினம் தாம்பத்யம் வெச்சாகணும். எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான். இவ ஒரு குழந்தைக்கு அம்மாவாகப் போறாள்னு தெரிஞ்சதும் பயங்கரமா சண்டை போடுவான். இவனை எப்படிக் கட்டுப்படுத்தறதுன்னு தெரியாம நதிக் கரையைத் தாண்டிப் போய் ஒரு தாசியைக் கூட்டிட்டு வருவா அவ. 'இவன் தாகத்தைத் தீர்க்க முடியாத நிலைமையில் நான் இருக்கேன். அதுவரைக்கும் நீ இவன்கூட இரு!'ன்னு அந்தத் தாசியை, அவனை ஏத்துக்கிட்ட வளே கொண்டுவந்து சேர்க்கிறதா கதை போகும்.

சலம் இதை எழுதினதும் பயங்கர எதிர்ப்பு வந்ததாம். நளாயினி தன் புருஷனைத் தலையில் சுமந்துட்டு தாசி வீட்டுக்குப் போனதை, 'பத்தி னி'ன்னு கொண்டாடுறவங்களுக்கு இந்தக் கதையை எதிர்க்கிற தகுதி இல்லைன்னு சொன்னாராம் சலம்.

காமம், அனுபவிக்க வேண்டிய விஷயம். காமம், சுவாசம் மாதிரி, வேர்வை மாதிரி... சீரான இடைவெளியில் வெளியேற்ற வேண்டிய விஷயம். அதை அடைகிற விஷயமா மாத்திட்டதால், காமத்தை வெச்சு நிறைய குற்றங்கள் நடக்குது. அது ஏதோ இருட்டுக்கு மட்டுமே சம் பந்தப்பட்ட விஷயமா நினைச்சு ஒளிச்சுவெக்க ஆரம்பிச்சுட்டோம். அசிங்கமா இருக்கிறதைப் பத்தி யாருக்குமே இங்கே பிரச்னை இல்லை. அந்த அசிங்கம் வெளியில் தெரியாம இருக்கணும். அவ்ளோதான்.

அப்போ நான் ஒரு கன்னடப் படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டர். நடிக்கிறதுக்கு ஒரு புதுப் பொண்ணைக் கூட்டிட்டு வந்தாங்க.

இருபது வயசுகூட இருக்காது. அழகா இருந்தா. எதுவும் புரியாம இருந்தா. அவ என்ன டயலாக் பேசணும், எந்த பொஸிஷன்ல வந்து நிக்கணும்னு எல்லாமும் நான்தான் சொல்லித் தர்றேன். திருதிருன்னு முழிச்சுட்டு நிப்பா. இப்படி இன்னொ சன்ஸோட ஒருத்தியான்னு மனசு தவிக்கும்.

அப்படிப்பட்ட ஒரு பொண்ணு கொஞ்சம் கொஞ்சமா தன்னோட நளினத்தை இழக்க ஆரம்பிச்சா. பத்துப் பதினஞ்சு நாளுக்குள்ளே மொத்த யூனிட்டையும் எப்படி கட்டி மேய்க்கிறதுங்கிற வித்தையைத் தெரிஞ்சுக்கிட்டா. அவ பேச்சு, பார் வைன்னு படிப்படியா அந்த இன்னொசன்ஸ் அவளிடம் இருந்து காணாமப்போச்சு.

ஒரு நாள் நைட் டிஸ்கஷனில், டைரக்டர், கேமராமேன், தயாரிப்பாளர், புரொடக்ஷன் மேனேஜர்னு எல்லோரோடு நானும் இருந்தேன். திடீர் திடீர்னு ஒவ்வொருத்தரா காணாமப் போயிட்டு அரை மணி நேரம் கழிச்சு வந்து சேர்ந்துக்கிட்டாங்க. எங்கே போறாங்கன்னு அப்போ எனக்குப் புரியலை. ராத்திரி ஒரு மணிக்கு மேலே ஒரு தம் அடிக்க லாம்னு வெளியே வந்தா, எதிர் ரூம்ல இருக்கா அந்தப் பொண்ணு.

எல்லாரும் அவங்கவங்க ரூமுக்குத் தூங்கப் போயிட்டாங்க. அந்தப் பொண்ணை அழைச்சுட்டு வந்த பொண்ணு, இப்போ தயாரிப்பாள ரோட ரூமுக்குள் போயாகணும். வேலை முடிஞ்ச இந்தப் பொண்ணை என்ன பண்றதுன்னு யோசிச்சவ, 'பிரகாஷ், இவளை உன் ரூம்ல வெச் சுக்கோ. அரை மணி நேரத்தில் வந்துடு றேன்'னு சொல்லிட்டுப் போயிட்டா.

என் ரூம்ல நானும் அந்தப் பொண்ணும் மட்டும் இருக்கோம். 'அக்கா அரை மணி நேரத்தில் வந்துடு வாங்க'ன்னு அவ நேரா விஷயத்துக்கு வர்றா. அவ கண்களில் எந்தத் தயக்க மும் இல்லை. பத்து நாளைக்கு முன்னால அப்பாவியா இருந்த பொண்ணா இவ?

'ஹீட்டர்'ல சுடுதண்ணி போட்டுக் குளிச்சுட்டு வந்து நிம்மதியா தூங்குடி செல்லம்னு நான் சொன்னதும், ஆச்சர்யமா என்னைப் பார்த்தா. என்னை யோக்கியன்னு நினைச்சுட்டாளோ என்னவோ?

அடுத்த தம்மைப் பத்தவெச்சுட்டு வராந்தாவில் உலாத்திட்டு இருக்கப்போதான் தோணுச்சு... அனுபவிக்க வேண்டிய விஷயத்தை, இவனுங்க ஏதோ வாடகை சைக்கிள் எடுக்கிற மாதிரி அரை மணி நேரச் சமா சாரமா ஆக்கிட்டானுங்கன்னு. ஒருத்த னுக்குத் தெரியாம ஒருத்தன் வெவ்வேற பொய்களைச் சொல்லிட்டு, ஒருத்தி கிட்டேயே போயிட்டு வந்திருக்கா னுங்க. கேமராமேன் 'ஒரு தம் அடிச் சுட்டு வந்துடறேன்'னு போனான். டைரக்டர் 'போன் பண்ணிட்டு வர்றேன்'னு போனார். சிகரெட், டாய்லெட் மாதிரி காமத்தை அணு கினா அது சாக்கடையாத்தானே இருக்கும்.

இதோ, இப்போ சமீபத்தில் ஆஸ்திரேலியா போயிருந்தேன். அங்க 'ஸ்டெம்ப் பார்'னு இருக்கு. என் முன்னால் ஒரு பொண்ணு உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் வந்து ஆடுறா. ஒரேயரு கண்டி ஷன், எந்தக் காரணத்துக்காகவும், எவ்ளோ பெரிய மனுஷனா இருந்தா லும் அவளைத் தொடக் கூடாது. ஆனா, ஒவ்வொரு டேபிளிலும் ஓட்டல் மெனு கார்டு மாதிரி 'இரவுப் பெண்கள்' படங்களும், போன் நம்பர்களும் இருக்கு. டோர் டெலிவரி மாதிரி 'அரை மணி நேரத்தில் உங்கள் அறையின் கதவைத் தட்டு வார்கள்'னு ஸ்டைலா எழுதி விளம்பரம் பண்றாங்க.

காமம் அங்கே வாழ்க்கைப் பிரச் னையா இல்லைங்கிற ஆறுதலைவிட, அவங்களுக்கு காமத்தை அனுபவிக்கத் தெரியலையேங்கிற வருத்தம்தான் வருது. இல்லைன்னா காமத்தை மெனு கார்டாக்கி டேபிளில் மாட்டி வெச்சி ருப்பானுங்களா?

பாரை விட்டு வெளியில் வரும் போது, 'காமத்தை ஜெயிக்கவே முடியாதா?'ன்னு மூளை ஒரு கேள்வி கேக்குது. 'காமத்தை ஏன் ஜெயிக்கணும்?'னு மனசு ஒரு எதிர்க் கேள்வி கேட்குது.

காமத்தை ருசிக்கணும்னு நினைக் கிறவன் காமுகன் ஆகிடறான். காமத்தைக் கடந்து போறவன் கடவுளா கிடறான். காமத்தை அனுபவமாப் பார்க்கிறவன் மனுஷனாகிறான்.

நான் காமத்தைப் பார்த்து ஒளியறதும் இல்லை, அதை ஒளிச்சுவெச்சுக்கிறதும் இல்லை.

ஏன்னா, காமுகனா இருக்கிறது தப்பு. கடவுளாக விருப்பம் இல்லை. மனுஷனா இருக்கிறது சந்தோஷமா இருக்கு எனக்கு.

உங்களுக்கு?
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:31:56 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com
Part-20
-----------------
 
விசித்திர வாழ்க்கை!


கொஞ்சம் பணக் கஷ்டத்துல இருந்தேன். 'பொய்', 'மொழி'னு ரெண்டு படங்களை ரிலீஸ் பண்ண கொஞ்சம் பணம் தேவை. கொஞ்சம்னா சினிமா பாஷையில் குறைஞ்சது கோடி ரூபா. வட்டிக்குப் பணம் வாங்க வேண்டிய நிலை. மனுஷங்களோட விதவிதமான முகங்களைக் கஷ்டத்துல இருக்கும்போதுதான் தரிசிக்க முடியும். கடன் வாங்குற முயற்சியில் இருந்த நேரத்துல, ஒரு நண்பன் என்கிட்ட ஒரு லட்ச ரூபா கடன் கேட்டான். அவன் தங்கைக்குக் கல்யாணம். என் மேனேஜர்கிட்ட சொல்லி, பணம் தரச் சொன்னேன். 'பணத்தோட அருமை உனக்கு எப்பதான் தெரியப் போகுது? இப்படி எல்லாருக்கும் கொடுத்துக் கொடுத்து தான் இப்ப கடன் வாங்குற நிலைமையில் நீ இருக்கே! இனிமேலும் திருந்தாம இருந்தா அதுக்குப் பேர் திமிர்'னு ஆளாளுக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாருமே என் மேல் அன்பும் அக்கறையும் உள்ளவங்க! அவங்க சொன்னது நிஜமாக்கூட இருக்கலாம். எனக்குன்னு சொந்தமா இப்பவும் ஒரு பர்ஸ் கிடையாதுன்னு சொன்னா நம்புவீங்களா? சிகரெட் வேணும் னாலும் என் டிரைவர்தான் எனக்கு வாங்கித் தருவார்.

போன வாரம் என் பொண்ணோட பர்த்&டே! ஒரு நாள் நான் நைட் ஷ¨ட்டிங் பண்ணா, அஞ்சு லட்ச ரூபாய் வரைக்கும் சம்பளம். ஆனா, என் மகளோட க்ளாஸ்மேட் எல்லாரையும் வீட்டுக்கு வரவழைச்சு, ராத்திரி பூரா அவங்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்திப் பரிசு கொடுத்தேன். அவங்களோடு கேரம் போர்டு விளையாடித் தோத்தேன். 'பைத்தியமா பிரகாஷ்?'னு கேட்டான் ஒரு நண்பன். அவன் வாழ்க்கையோட மதிப்பைப் பணத்துல தேடுறான். நான் விநாடிகளில் தேடுறேன். அவ்வளவுதான் வித்தியாசம்!

என் அப்பனோட மரணம், என் தங்கச்சியோட கல்யாணம்... என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான ஒரு துக்கம்; ஒரு சந்தோஷம். ரெண்டுக்குமே என்கிட்ட பைசா பணம் இல்லை. சினிமாவுல சின்னச் சின்ன ரோல்கள் பண்ணிட்டிருந்த நேரம். அப்பன் சாவைத் தூக்கிப்போட ஒருத்தன்கிட்ட காசு இல்லேன்னா பரவாயில்லை. சாவுக்குப் போறதுக்கே காசு இல்லேன்னா என்ன பண்றது?

வாழ்நாள் முழுக்கத் தப்புப் பண்ணிட்டு கடைசி அஞ்சு நிமிஷம் நல்லவனா இருந்து செத்துப்போனவன் என் அப்பன். எப்ப வீட்டுக்கு வருவான், எப்ப காணாம போவான்னு யாருக்கும் தெரியாது. ராத்திரி பத்து மணிக்கு மேல, ஏதோ ஒரு சாராயக் கடை வாசல்ல சரிஞ்சுகிடக்கிறதா அம்மாவுக்குத் தகவல் வரும். தம்பியும், தங்கச்சியும் சின்னப் பசங்க. அசிங்கத் தைப் புரிஞ்சுக்குற வயசு அவங்களுக்கு இல்லைன்னு என்னைத்தான் துணைக்குக் கூப்பிடுவா அம்மா. ராத்திரி ஆட்டோவுல என் அப்பனை ஏத்தி வீட்டுக்குக் கூட்டிட்டு வருவோம். அழகா இருக்கிற என் அம்மா மேல ஆட்டோகாரனோட தப்பான பார்வை படிஞ்சது இப்போ எனக்குப் புரியுது. ஆனா, எதுவுமே தெரியாம மயங்கிக் கிடந்து, மறுநாள் ஒண்ணுமே தெரியாத மாதிரி உட்கார்ந்திருப்பான் அப்பன். 'உனக்கு தினம் ஒரு குவாட்டர், ஒரு கட்டு பீடி வாங்கித் தர்றேன்... நீ எங்கேயும் வேலைக்குப் போக வேண்டாம். எனக்குப் புருஷனாக்கூட இருக்க வேண்டாம். என் புள்ளைங்களுக்கு அப்பனா வீட்லேயே இரு'னு கெஞ்சுவா அம்மா.

அவன் பிரமாதமான நடிகன். அன்பாப் பேசியே யோக்கியன்னு நம்ப வெச்சுடுவான். திடீர்னு ஒரு நாள் காணாம போயிடுவான். ரெண்டு நாள் கழிச்சு, 'உன் புருஷன் 2,000 கடன் வாங்கிட்டு ஓடிட்டான்'னு எவனாவது வீட்டு வாசல்ல வந்து நிப்பான். திட்டிக்கிட்டே அவனுக்குக் காசு கொடுத்து அனுப்பிட்டு, ஆத்திரத்துல என் அப்பனோட பனியனைக் கிழிப்பா அம்மா. மூணு மாசம் கழிச்சு திடுதிப்னு வந்து நிப்பான் அப்பன். அப்ப, புது பனியனோட அவனை வரவேற்பா அம்மா. அவளோட காதலை அவன் வாழ்க்கையில ஒரு முறைகூட புரிஞ்சுக்கவே இல்லைங்கிறதாலதான் எனக்கு அவன் மேல மரியாதை இல்லாம போச்சு.

அவன் செத்த பிறகும் அவன் மேல அவளுக்குக் காதல் குறையவே இல்லை. 'ஒரு 10,000 ரூபா வேணும்டா பிரகாஷ். அப்பாவோட சமாதி உடைஞ்சிருக்கு. சரி பண்ணணும்'னு போனவாரம் சொந்தக் கிராமத்துக்குப் போய் அவன் சமாதி பக்கத்துல உட்கார்ந்து போன் பண்றா.

கடைசி காலத்துல, அம்மாவைக் கூப்பிட்டுப் 'பாவ மன்னிப்பு' கேட்டானாம். 'நீ ரொம்ப நல்லவ. நான் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத் திட்டேன். என்னை மன்னிச்சுடு'னு உருக்கமா சொல்லி அழுதானாம். அம்மா சொன்னா. எனக்குத் தெரிஞ்சே அவன் இந்த மாதிரி நூறு முறை மன்னிப்புக் கேட்டுத் 'திருந்தி'யிருக் கான். என்ன... இந்த முறை அவன் மறுபடி தப்பு செய்கிற வாய்ப்பை மரணம் அவனுக்குத் தரலை.

அப்படிப்பட்ட அப்பன் சாவுக்குப் போகக் காசு இல்லாம தலையில கைவெச்சுட்டு உட்கார்ந்திருந்தேன். கன்னட நடிகர் ரவிச்சந்திரன் 5,000 ரூபா தந்து உதவினார். அந்த விநாடி யில் அப்படி ஒருத்தர் காசு கொடுக்க லைன்னா என் அப்பனோட சாவு இன்னிக்கும் என் குடும்பதோட அவமானமா இருந்திருக்கும்.

என் தங்கைக்குக் கல்யாணம். என் நண்பனே காதலிச்சான். என் குடும்ப நிலவரம் தெரியும். சர்ச்ல ரொம்பச் சாதாரண முறையில் கல்யாணம். எல்லாம் என் அம்மாவோட காசு. என் வீட்ல அப்ப நான்தான் வளர்ந்த ஆம்பிளை. கையில் ஒரு பைசா இல்லை. இருந்தாலும் வீம்புக்கு நான் தாலி எடுத்துத் தர்றேன்னு வீட்ல சொல்லிட்டேன். சாயந்திரம் அஞ்சு மணிக்குக் கல்யாணம். பகல் ஒரு மணி வரைக்கும் நான் கடன் கேட்ட எல்லா இடத்திலேயும் கைவிரிச்சுட்டாங்க. இன்னிக்கு என்னை நம்பி நாலு கோடி ரூபாய் கடன் தர ஆள் ரெடி! என் தங்கச்சி கல்யாணத்துக்குத் தாலி வாங்க 4,000 ரூபாய் தர அன்னிக்கு ஆள் இல்லை. என் டி.வி.எஸ்.50&யை வந்த விலைக்கு வித்து, நகைக் கடைக்குப் போய் ஒரு ரெடிமேட் தாலி வாங்கிட்டுக் கிளம்புறப்போ மணி மூணு. கல்யாணம் நடக்கிற சர்ச்சுக்குப்போக ஆட்டோவுக் குக் காசு இல்லை. தாலி இன்னும் வந்து சேரலையேன்னு அங்கே எல்லாரும் பதற்றமாகி இருப்பாங்களேன்னு பதறி, மூச்சு வாங்க ஓடி, நாலரை மணிக்குத் தாலியைக் கொண்டுபோய்ச் சேர்த்தேன். இருநூறு பேருக்கும் குறைவானவங்க சாப்பிட்ட என் தங்கச்சியோட கல்யாணச் சாப்பாட்டுல ஒரு பருக் கைக்கான காசுகூட என்னோடது இல்லை.

யார் யாரோ புது டிரெஸ் போட்டுட்டு வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க, நான் ஒரு பழைய ஜிப்பாவைப் போட்டுட்டு என் தங்கச்சியை ஆசிர்வதிக்கிறேன். ரொம்ப வருத்தப்பட்ட நாள் அது. அப்பனோட சாவுக்குக் கடன் கொடுக்க வாவது ஒருத்தர் இருந்தார். தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் தரக்கூட எவனும் இல்லை. ஒரு துக்கத்துக்கு பணம் கிடைச்ச சந்தோஷம்; ஒரு சந்தோஷத்துக்குப் பணம் கிடைக்க லைங்கிற துக்கம். வாழ்க்கை ரொம்ப விசித்திரமா இல்லே?! அந்த விநாடிகளை என்னால மறக்க முடியாது! அதனால தான் என்னைச் சுத்தி இருக்கிறவங் களுக்குக் கஷ்டம், சந்தோஷம் இந்த ரெண்டுல எது நடந்தாலும், நான் என்ன கஷ்டத்துல இருந்தாலும் என் னால முடிஞ்ச உதவியைச் செய்வேன்.

எனக்குக் காசோட அருமை தெரியாம இருக்கலாம். ஆனா, அது இல்லாம இருக்கிற விநாடியோட வேதனை புரியும்.
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:33:41 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:34:11 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

 
Part-21
-----------
 
வார்த்தைகளில் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்!


'யாகாவாராயினும் நா காக்க!'
& வள்ளுவர் சொன்னது வாழ்க்கைக்கு மருந்து!

சில வார்த்தைகள் வெல்லும்; சில வார்த்தைகள் கொல்லும். சில வார்த்தைகள் விருந்து; சில வார்த்தைகள் விபத்து!

'ஃபாதர்'னு ஒரு ஸ்வீடிஷ் நாடகம். அகஸ்டின் பர்க் என்கிற ஆசிரியரின் படைப்பு.

பல வருஷம் பாசமா, பிரியமா வாழ்ந்த ஒரு புருஷன். அவனுக்குன்னே அவதரிச்ச மாதிரி அழகுப் பெண்-டாட்டி. அவங்களுக்கு அஞ்சு பசங்க. பிள்ளைகளுக்காக உயிரையே விடக்-கூடிய மனுஷன். 'எல்லாருக்கும் ரெண்டு கண்ணுதான். எனக்கு கூடுதலா ஐந்து கண்கள்'னு தன் பிள்ளைகளை ரொம்ப நேசிக்கிறவன்.

அவனுக்கும் அவனுடைய மனை-விக்கும் திடீர்னு ஒரு நாள் பெரிய சண்டை. அவளுடைய நடத்தை மேல் அவனுக்குச் சந்தேகம் வந்துடுது. ஒரு நல்லவனுக்குள் இருக்கிற கெட்-டவன் எப்பவுமே ரொம்ப ஆபத்தான-வன். தான் நல்லவன் என்கிற நினைப்-பிலேயே நிறையத் தப்பு பண்ணுவான். அதுவே நிரந்தரமா அவனைக் கெட்டவனாக்கூட மாத்திடும். நல்லவனா இருந்த புருஷனோட சந்தேகத்தைப் பொறுத்துக்க முடியாத மனைவி, அவனுக்குப் பாடம் கத்துக் கொடுக்க முடி வெடுக்கிறா. 'ஆமா, நான் தப்பானவதான். உன் அஞ்சு குழந்-தையில் ஒரு குழந்தை உனக்குப் பிறந்-தது இல்லை. போய்யா!'னு சொல்-லிட்டுப் போயிடுவா. அங்கே திறக்-கும், அவனுக்கு நரகம்!

பெண்டாட்டி சொன்ன ஏழெட்டு வார்த்தைகளில் அவன் வாழ்க்கையே நாசமாகிடும். தூக்கம் தொலையும். கம்பீரம் காணாமப் போகும். நிம்மதி நாசமாகும். எந்தக் குழந்தை தனக்குப் பிறக்காத குழந்தைன்னு அவனையறி-யாமல் அவனுடைய கண்கள் சந்தேகத்-தோடு தேட ஆரம்பிக்கும்.

தன்னை மாதிரி இல்லாத குழந்தை எதுன்னு தேட ஆரம் பிச்சா, எல்லாக் குழந்தையும் அந்த லிஸ்ட்டில் வருது. இன்னொரு சமயம், அஞ்சு குழந்தை-களுமே அவனை ஞாபகப்படுத்துற மாதிரி இருக்குது. குழந்தைகளின் விளையாட்டில்கூட தப்பு கண்டு பிடிக்க ஆரம்பிச்-சுடுவான்.

மன உளைச்ச-லில் மரணத்தின் வாசலுக்கே போயிடுவான். அதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கை மேல் கோபம் கோபமா வரும். கடைசியில் உண்மையைக் கேட்டு, மனைவிகிட்டேயே சரணடைவான். 'சும்மா அப்ப டிச் சொன்னேன்'னு ரொம்ப கூலா சொல்வா பெண்டாட்டி. கடைசியில் அந்த உண்மை யைக்கூட அவனால் அப்படியே நம்ப முடியாது.

முதல் முறை மனைவி சொன்ன பொய்யை, பைபிள்ல வர்ற வசனம் மாதிரி நம்பின வனுக்கு, பின்னாடி அவளே சொன்ன உண்மையை நம்ப முடியாமல் தவிப்பான்னு கதை. கலங்கடிச்ச கதை!

என்னோட ஒரு காதலி. ரசனையானவள். காதல், காமம் ரெண்டிலேயும் அவகிட்டே சரணடைவதைத் தவிர, வேற வழியில்லை. ஆனா, சண்டைன்னு வந்தா, ராட்சஸி! குழந்தை சண்டை போடுற மாதிரி அர்த்தமில்லாம காயம் ஏற்படுத்துற சண்டைகள். வயசானவங்க மேல வேகமாத் தாவி வந்து மோதுற குழந்தை களுக்கு, தன்னோட பாரத்தைத் தாங்குற சக்தி அவங்களுக்கு இருக்கா, இல்லையான்னு யோசிக்கத் தெரியாது. அன்பா இருந்தாலும், கோபமா இருந் தாலும் அப்படி மோதுற ஒரு காதலி.

திடீர்னு ஒரு ராத்திரி, 'உன்னை இப்பவே பார்க்கணும்'னு கூப்பிடுறா. நான் ஷ¨ட்டிங்ல இருக்கேன்னு சொன்னா, நம்ப மறுக்கிறா. 'இல்லே, பொய் சொல்றே. நீ யாரோ ஒருத்தியோட படுத்துட் டிருக்கே. உனக்கு நான் முக்கியமில்லை!'ன்னு கத்துறா. கேட்கவே முடியாத கெட்ட வார்த்தைகளால திட்டுறா. அவளே சமாதானம் ஆகிடுவாள்னு அப்போதைக்கு விட்டுட்டேன். ஆனா, அது ஜாஸ்தியாச்சு. ரெண்டு நாள் கழிச்சு, மறுபடி போன். 'நீ வேறொருத்தி யோட இருந்ததால்தானே என்னைக் கண்டுக்கலை. இப்ப நான் இன்னொருத்தனோட இருக்கேன், தெரிஞ்சுக்கோ!'ன்னு சொல்லி, சட்டுனு போனை வெச்சுட்டா. எனக்கு மனசு பாரமாகிடுச்சு.

'புரிஞ்சுக்க மாட்டேங்கறாளே'ன்னு கோபம்... 'நிஜமாவே வேறொருத்தனோட இருக்காளோ?'ன்னு எரிச்சல், ரெண்டுமா இருக்கு. என் இரவுகளும், பெண்களும் கண்ணுக்கு முன்னால் நிக்கிறதால், அவளை எதுவும் கேட்க முடியாது. 'என்னைக் கேட்கிற தகுதி உனக்கு என்ன இருக்கு?'ன்னு அவள் கேட்டா, பதில் சொல்ல முடியாது. அவ இன்னொருத்தனோட படுக்கிறாள் என்கிற பொறாமையைவிட, அதை என்னைப் பழிவாங்குறதுக்காகச் செய்ய றாளேனு ஆத்திரம் வருது. அவ பேசின சில வார்த்தைகள் என்னோட நிம்மதியான இரவு, பகல்களை நரகமாக்கியது. ஒரு வாரம் கழிச்சு வந்தவ, என் அமைதி யைப் பார்த்து பயந்து, 'ச்சீ, சும்மா சொன்னேன்டா! அதை நீ எப்படி நம்பலாம்?'னு மறுபடியும் சண்டைக்கு வரா.

ஆனா, அதுவரைக்கும் அவளுடைய காதலும், காமமும் தந்த ஆயிர மாயிரம் சந்தோஷங்களை அவளோட ஒரு சில வார்த்தைகள் முழுங்கிட்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமா விஸ்வ ரூபம் எடுத்து நிக்குது. அவ சொல்ற எந்த சமாதானமும் என் மண்டைக்குள் ஏறலை. 'இப்போ வரைக்கும் அப்படி இல்லை. இனிமே அப்படி ஏதாச்சும் நடந்தா, நம்மால் இவளைத் தாங்க முடி யுமா?'ன்னு என்னென்னவோ மனசு தறிகெட்டு யோசிக்குது. அவளை அப்போதைக்கு மன்னிச் சுட்டேன். ஆனா, சுலபத்தில் அதை மறக்க முடியலை. அவகிட்டே இருந்த காதலையும் காமத்தையும் முன்னே மாதிரி ரசிக்க முடியலை. இதயத்தின் ஒரு ஓரத்தில் அந்த வார்த் தைகள் இருக்குதே!

கொஞ்ச நாளைக்கு முன்பு, அதே மாதிரி ஒரு வலியில் மீண்டும் மாட்டி னேன். இந்த முறை அந்த வார்த்தையைச் சொன்னவனும் நான் இல்லை. கேட்டவனும் நான் இல்லை. சொன் னது என் அம்மா; கேட் டவ என் மனைவி.

நான் நேசிக்கிற இரண்டு பெண்களுக்கு இடையில் நான் எந்தப் பக்கம்னு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம். மாமியாருக்கும் மருமகளுக்கும் வார்த்தைப் போர். அம்மாவோட எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு பெண்ணை நான் கல்யாணம் பண்ணலைங்கிற வருத்தம், நான் பிள்ளை பெத்த பிறகும் அவளுக்கு இன்னும் இருக்கு. விஷயம் என்னன்னா, எல்லா மாமியர்களுக்குமே தன் னோட மருமகளுக்குக் குழந்தைகளைச் சரியா வளர்க்கத் தெரியலைங் கிற அறியாமை மாறவே இல்லை. எல்லா மருமகள்களும் 'நமக்குத் தெரியாததா?'ங்கிற அகங்காரத்திலேயே இருக்காங்க. அறியாமைக்கும் அகங்காரத்துக்கும் நடக்கிற சண்டையில் எந்தப் பக்கம் நிற்பது?

என் சின்னப் பொண்ணு மேகனா, ஐஸ்கிரீம் கேட்டா. எடுத்துத் தந்திருக்கா என் மனைவி. 'குழந் தைக்கு ஜுரம் வந்துடும், தராதே'ன்னு சொல்லியிருக்கா என் அம்மா. 'என் குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது'ன்னு என் மனைவி சொல்ல, 'உன் பிடிவாதத்தாலதான் ஏற்கெனவே ஒருத்தனை வாரிக் கொடுத்திட் டியே'ன்னு இறந்த என் மகனை ஞாபகப்படுத்திட்டா என் அம்மா. 'என் மகனை நானே கொன்னுட் டேன்னு சொல்றாங்களே'ன்னு மனைவியோட கதறல். எங்கேயோ மனசுக்குள்ள, 'இவ நம்மளை எப்பவுமே மதிக்க மாட்டேங்கறாளே' என்கிற ஆத்திரத்துல வந்த சில வார்த்தைகளா அம்மாவோட குமுறல். இப்போ, இந்த இரண்டு தப்புல, எது பெரிய தப்புன்னு சொல்ற இடத்தில் நான். மௌனம் தான் என் பதிலா இருக்கு.

வார்த்தையில் வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களின் எண்ணிக்கை இருக்கே... அது வானத்து நட்சத்திரங்கள் மாதிரி எண்ணி முடிக்க முடியாதோ!
 


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:36:45 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-22
--------------
 
'கடவுள்... என் மதிப்புக்குரிய எதிரி!'

''அம்மா பிள்ளையார் சாமி கும்பிடறாங்க. பாட்டி ஜீசஸ் கும்பிடறாங்க. நீங்க சாமியே கும்பிடறது இல்லை. நான் என்ன பண்ணட்டும் அப்பா?''

''உனக்கு எந்த சாமி பிடிச்சிருக்கோ அந்த சாமியைக் கும்பிடு. என்னை மாதிரி சாமியே கும்பிடாம இருக்கிறது பிடிச்சிருந்தா அப்படியே செய். யாராவது செய்யறதைப் பார்த்து, அதை அப்படியே காப்பி அடிக்காம நீயே யோசிச்சு முடிவு பண்ணு மகளே!''

எனக்கும் என் 12 வயசுப் பொண்ணுக்கும் நடந்த உரையாடல் இது. சின்னப் பசங்க திடீர்னு பதில் சொல்ல முடியாத கேள்வியைக் கேட்டுடுவாங்க. அப்படியரு கேள்வியைக் கேட்டாள் என் மகள்.

''அப்பா நான் இந்துவா... கிறிஸ்டியனா?''

''இந்த வயசுல உனக்குப் புரியாது''னு அவளுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. குழந்தைகளுடைய கேள்வி குழப்பத்துலேர்ந்து வர்ற விஷயம். 'உனக்குப் புரியாது'ங்கிற பதில் அவங்களு டைய குழப்பத்தைத் தீர்த்துடாது. இன்னும் அதிகமா குழப்பிடும்.

என் வீட்டுக்குத் தினம் ஒரு ஐயர் வந்து பிள்ளை யாருக்குப் பூஜை பண்ணிட்டுப் போவார். துளசி இலை, கற்பூரம், சந்தனம், குங்குமம்னு இந்து மதத்தின் அடையாளங்களை என் பெண்டாட்டிகிட்ட பார்க்கிறாங்க குழந்தைங்க. என் அம்மா ரூமுக்குள்ள நுழைஞ்சா, ஒரு சர்ச்சுக்குள்ள போற மாதிரியே இருக்கும். மக்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் வடிய தலையைச் சாய்ச்சுக்கிட்டு இயேசு இருப்பார். கருணை பொழியும் முகத்தோடு ஒரு குழந்தையை வெச் சுட்டு மேரி இருப்பாங்க. அவங்களுக்கு முன்னால காலையில் ஒரு மெழுகு வத்தி, மாலையில் ஒரு மெழுகுவத்தி எரிஞ்சுக்கிட்டே இருக்கும். என் பொண்ணு பரீட்சைக்குப் போறதுக்கு முன்னால, பாட்டி கூப்பிட்டு சின்ஸியரா ஜெபம் பண்ணுவாங்க. என் பெண் டாட்டி சாமி தட்டுலேர்ந்து விபூதி எடுத்து நெத்தியில் வெச்சு விடுவா. காலையில், ஹால்ல சுப்ரபாரதம் பாடும். என் அம்மா ரூமுக்குப் போனா, ஏதோ ஒரு வெள்ளைக்காரர் சுந்தரத் தமிழ்ல இயேசுவோட மகிமைகளை டி.வி&யில் சொல்லிட்டு இருப்பார்.

அம்மாவும் பாட்டியும் இரண்டு ஆங்கிள்ல இருந்தா, அப்பன் நான் வேறொரு ஆங்கிள்ல இருக்கேன். 'படிக்காம கடவுளை மட்டும் கும் பிட்டுட்டு எக்ஸாம் போனா பெரிய தப்பு. சின்ஸியரா படிச்சுட்டு கடவுளைக் கும்பிடாமக்கூட போகலாம். கடவுள் புரிஞ்சுக்குவார். கோபப்பட மாட்டார்'னு சொல்றவன் நான். குழந்தைகளுக்குக் குழப்பம் வருமா... வராதா? என் குடும்பத்தோட மொத்தக் கதையையும் கூப்பிட்டு வெச்சு என் பொண்ணுக்குச் சொன்னேன்.

''உன் அம்மா இந்து குடும் பத்துல பொறந்ததால அவங்க கற்பூரம் ஏத்துறாங்க. உன் பாட்டி கிறிஸ்டியனா பொறந்ததால கேண்டில் ஏத்துறாங்க. 'கற்பூரம், கேண்டில் ஏத்துறதைவிட, வேலையை சின்ஸியரா பார்த்தாலே போதும்... இருக்கிற கொஞ்ச வாழ்க்கையைத் தன்னம்பிக்கையோட சந்தோஷமா வாழ்ந்துடலாம்'னு உன் அப்பா சாமியே கும்பிடறதில்லை. நீ வளர்ந்து, உன் அனுபவத்துக்கு எது சரியா இருக்கோ, அதையே செய்''னு சொன்னேன்.

என் மகளை ஸ்கூல்ல சேர்க்கும் போது 'என்ன மதம்?'னு கேட்டாங்க. 'நான் எந்த மதமும் இல்லை. என் பொண்ணுக்கு மதம் கிடையாது'னு சொன்னேன். 'மதம் இல்லைன்னு ஒரு மதம் கிடையாது. ஏதாவது ஒரு மதத்தோட பேரைப் போடணும். அப்ப தான் ஸ்கூல்ல சேர்க்க முடியும்'னு சொன்னாங்க. 'எல்லாருக்கும் கல்வி'ங் கிறது அரசியல் சாசனம் தர்ற உறுதி மொழி. மத நம்பிக்கை இல்லைங்கிறதுக் காக ஸ்கூல்ல சேர்க்க மாட்டேன்னு சொன்னா நான் கோர்ட்டுக்குப் போவேன்'னு வாதாடித்தான் அட்மிஷன் வாங்கினேன். உயிருக்கு உயிரா நேசிக்கிறதா இருந்தாலும் ஒருத்தரோட பசிக்கு இன் னொருத்தர் சாப்பிட முடியாது. குழந்தையா இருக்கிற ஒரு ஜீவனோட மதத்தையும், கடவுளையும் முடிவு பண்ற அதிகாரம் எனக்கு இல்லை. ரூல்ஸ§க்காக மதத்தின் பேரைச் சும்மா போடுன்னு ஸ்கூல்ல கேட்டதும், எனக்கு ஆச்சர்யமா போச்சு. கடவுள் நம்பிக்கை நம்ம சமூகத்துல கள்ள ஓட்டு மாதிரிதான் இருக்கு. மத்தவங்களு டைய நம்பிக்கையை யார் யாரோ தீர்மானிக் கிறாங்க.

சின்ன வயசுல ஒரு கிறிஸ்டியன் கான் வென்ட்ல படிச்சேன். பிரேயருக்குப் போக லேன்னா அடிப்பாங்களேன்னு பயந்து பிரேயர் போயிருக்கேன். நான் உண்மையா கடவுளுக்கு கீழ்ப்படியறேனா, இல்லையாங்கிறதைப் பத்தி பெரியவங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. நான் நல்லா ஜெபம் பண்ற மாதிரி நடிப்பேன். அதுக்கே என்னை ஸ்கூல்ல லீடராக்கிட்டாங்க. அடுத்தவங்களுக்குப் பயந்து நான் சாமி முன்னால நின்னிருக்கேனே தவிர, எனக்காக நான் இன்னும் ஒருமுறைகூட நின்னதில்லை. நான் கடவுள் முன்னால மண்டியிட மாட்டேன்னு தெரிஞ்சதும், என்னை வற்புறுத்தாம என் உணர்வுகளுக்கு மரியாதை தந்தாங்க என் அம்மா. நான் சுயமா யோசிக்க கத்துக்கிட்டது அங்கதான். அதான், அம்மா மேல எனக்கு எப்பவும் தனி மரியாதை! என் குழந்தை யிடம் அந்த மாதிரி நானும் நடந்துக்கணும்னு நினைக்கிறேன்.

கடல், மலை, ஆகாயம், காடு, திமிங்கிலம், எறும்பு, சூரியன், நட்சத்திரம்... இப்படி இயற்கையைப் பார்க்கும்போதெல்லாம் பிரமிப்பா இருக்கும். நான் எவ்ளோ சின்ன வன்னு ஒவ்வொரு முறையும் தோணுது. இதையெல்லாம் யாரு படைச்சிருப்பாங்கிற கேள்விக்குள்ள போக எனக்கு இஷ்டம் இல்லை. தெளிவான பதில் கிடைக்காதுன்னும் தெரியும். கடவுள்தான் படைச்சிருப் பாருன்னு யூகத்துல வந்து நிக்க வேண்டியிருக்கும். எனக்குக் கிடைச்சிருக்கிற சின்ன வாழ்க்கை யில் இதையெல்லாம் யோசிச்சு விடை கண்டுபிடிக்க முடி யாது. அது தேவையும் இல்லை. மனசாட்சிக்கு விரோதம் இல் லாம வாழ்ந்துட்டா போதும்.

இதுவரைக்கும் மூணு முறை மரணத்தை நேர்ல சந்திச்சுட்டுப் பொழைச்சிருக்கேன். போன மாசம்கூட மரணத்தை நேர்ல பார்த்தேன். 'லீ'னு ஒரு படம். ஹீரோ என்னை சுட்டுக் கொல்ற மாதிரி ஸீன். நெஞ்சுக்கு ரெண்டு புல்லட், நெத்திக்கு ஒரு புல்லட்னு குறிவெச்சு என்னை ஹீரோ சுடணும். ரத்தம் தெறிக் கிற அந்த பையைக் கொஞ்ச மான கரன்ட் மூலமா வெடிக்க வெப்பாங்க. ஏற்கெனவே முழுக்க நனைஞ்சி ருக்கேன். பிளாஸ்டிக் பையில் பாய வேண் டிய கரன்ட் உடம்புல பாய்ஞ்சுடுச்சு. ரத்தம் சுண்டிப்போகிற வலி. 'ஷாக்'னு கத்த நினைக் கிறேன். மூளை சொல் றதை உடம்பு கேட்க மாட்டேங்குது. நான் பிரமாதமா நடிக்கி றேன்னு மொத்த யூனிட்டும் நின்னு கை தட்டி வேடிக்கை பாக்குது. 'வாழ்க்கை முடிஞ்சுடுச்சு'னு சரிஞ்சு விழுந்த நேரத் துலேயும் 'கடவுளே! என்னைக் காப் பாத்து'னு வேண்டிக்கத் தோணலை. மரணம் தான் கடவுளைச் சரண டையும் கடைசி தருணம். அந்தச் சம்பவம் நடந்ததும், எனக்காக என் டிரைவர் சபரி மலைக்கு மாலை போட்டுட்டு வந்து நிக்கிறான். என் வீட்ல சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க. எனக்கு கரன்ட் ஷாக் அடிக்கிறதைக் கண்டுபிடிச்சு நிறுத்தின மனுஷனை எல்லாருமே மறந்துட்டாங்க. 'கடவுள் காப்பாத்திட் டார்'னு சொன்னதும் சிரிப்பு வந்துடுச்சு. அகங்காரமா பேசுறதா அர்த்தமில்லை. மனசுக்குள்ள இருக்கிற உண்மைகளைப் பேசுறதுன்னு முடிவு பண்ணிட்டதுக் கப்புறம் ஒப்பனைகள் தேவை இல்லையே?

கே.எஸ்.நரசிங்க சாமினு ஒரு கன்னடக் கவிஞன் கடவுள்கிட்ட கவிதை மூலமா பேசுவான்... ''ஆகாயம் உன்னுடையது, பூமி உன்னுடையது என் கிறார்கள். நீ மிகப் பெரியவன் என்கிறார் கள். அப்படியே இருந்-தாலும், நீ என்னுடைய மதிப்புக்குரிய எதிரி. உன் சிம்மாசனத்தில் என்னை உட்கார வைக்-காதே! உன் கீரிடம் எனக்கு வேண்டவே வேண்டாம். என் அப்பா-வும் அம்மாவும் தோளோடு தோள் உரசிக்கொண்ட தரு-ணத்தில் வெளியான காம வெப்பத்துக்குப் பிறந்த குழந்தை நான். ஒரு பெண் வயிற்றி-லிருந்து இந்த உலகத்-துக்குப் பிறந்து வந்-தேன். இறக்கும்போது பூமி என்கிற இன்-னொரு பெண்ணின் வயிற்றுக்குள் போகிறேன். இடையில், நீ நட்சத்திரமாகவே இருக்கலாம். நட்சத்திரங்களால் ஆன மாலை என்றாலும், அந்தப் பாரத்தை என்னால் தூக்கிச் சுமக்க முடியாது..!''

கடவுளின் மகிமையைப் பற்றி என் பிள்ளைகளுக்குப் போதிப்பதைவிட, சக மனிதனை எப்படி நேசிப்பதுனு அவங்களுக்குக் கத்துக் கொடுத்தா போதும்கிறது என் கட்சி.

நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்துல வேஷம் போடுறதைவிட, உண்மையா இருக்கிறதைத்தான் கடவுளும் விரும்புவார்... ஒருவேளை அப்படின்னு ஒருத்தர் இருந்தா


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:37:14 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

part-23
--------------
 
என் நண்பன் புதுசா வீடு கட்டினான்!

ஆசை ஆசையா கட்டின வீட்டைப் பார்க்க என்னைக் கூப்பிட்டான். பிரமாதமான வீடு. ரகளை யான ரசனையோட கட்டப்பட்ட வீடு. ஸ்கூல் படிக்கிற தன்னோட ரெண்டு பசங்களுக்கும் நெட் வசதியோடு கிரவுண்ட் ஃப்ளோரில் தனித்தனியே அழகழகான அறைகள். மனைவிக்கு அவங்கடேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி அழகான கிச்சன். நண்பர்கள் வந்தா, சீட்டு விளையாடிட்டே தண்ணி-யடிக்க வசதியா டெரஸ்ல ஒரு ரூஃப் கார்டன்! அப்படியே ஒவ்வொரு ரூமா சுத்திப் பார்த்துட்டே வரும் போது, முதல் மாடியில் ஒரு ரூம்ல இருந்து பக்திப் பாட்டு கசிஞ்சு வருது. ரேடியோவில் கேட்கிற பழைய பாட்டு. ஜன்னல் வழியே சாலையை முறைச்சுப் பார்த்தபடி ஒரு பெரியம்மா அந்த ரூம்ல உட்கார்ந்திருந்தாங்க. அது அவனோட அம்மா!

சட்டுனு மனசு கனமாகிடுச்சு. என்னை அறியாமல் என் அம்மா ஞாபகத்துக்குள் வந்துட்டா. எனக்குள்ளே ஒரு கேள்வி குடைய ஆரம்பிச்சுது. என் அம்மாவோட முதுமையையும் இப்படித்தான் நானும் தனிமையில் தவிக்கவிடு-றேனோ என்ற கேள்வி. மனசாட்சியோட மானசீகமா பேச ஆரம்பிச்சேன். 'இல்லடா, நீ நல்லா பார்த்துக்கிறேடா!'ன்னு பதில் வர்ற வரைக்கும் தவிச்சிருச்சு மனசு.

நண்பன் மேல் வெச்சிருந்த மரியாதை சரசரன்னு சரிஞ்சுபோச்சு! ஓடியாடி விளையாடுற தன்னோட பசங்களுக்கு வசதியான இடம் எதுன்னு அப்பனா யோசிச்சவன், அதில் கொஞ்சமே கொஞ்சமாவது மாடியில் தனியே கிடக்கிற தாய்க் கிழவியைப் பத்தி மகனா யோசிக்கலையே! வயசான வளுக்கு மாடியில் ரூம் ஒதுக்கின அவனோட சிந்தனையே என்னை பயமுறுத்திருச்சு. அவனே இப்படி இருந்தா, அவனோட பிள்ளைகள் அந்தப் பாட்டிக்கு என்ன மரியாதை தருவாங்க?

குழந்தைகளுக்கு நீச்சல் கத்துத் தர்றோம்; பாட்டு கத்துத் தர்றோம்; பரதம் கத்துத் தர்றோம்... பெரியவங்களை மதிக்கக் கத்துத் தர்றோமா?

லண்டன், ரோம் மாதிரியான ஊர்களில் பெரிய பெரிய மியூஸியம் வெச்சிருப்பாங்க. பார்க்கவே பிரமிப்பா இருக்கும். உயிரில்லாத விஷயங்களைப் பொக்கிஷமாக்கி பாதுகாப்பா வெச்சிருப்பாங்க. ஆனா, நாம உயிரோடு இருக்கிற வயசானவங்களையே பாரமா யோசிக்க ஆரம்பிச்சுட்டோம். நிறைய பசங்க இப்போ வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருக்காங்க. பெத்தவங்களுக்குத் தேவையான அளவு பணத்தை அனுப்பி வைக்கிறாங்கதான். அவங்க வருஷத்துக்கு ஒரு முறை வந்து தங்குறதுக்காக கட்டின பெரிய வீட்டுக்குப் பெத்தவங்களையே வாட்ச்மேன் போல வெச்சிருப் பாங்க.

இப்போ சென்னை மாதிரி நகரத்தில் அட்டைப் பெட்டிகள் போல அடுக்க ஆரம்பிச்சுட்டாங்க வீடுகளை. ஒரே அப்பார்ட்மென்ட்ல நூற்றுக்கணக்கான வீடுகள். திருட்டுப் பயத்தினால், ஜன்னல்கள் வைக்காத வீடுகள். ஒரேயரு ஜன்னல்தான் இருக்கும். அந்த ஜன்னல் வழியே, வயசானவங் களோட கண்கள் பரிதாபமா எட்டிப் பார்க்கும்.

நூற்றுக்கும் குறைவான வீடுகள் இருக்கிற கிராமங்களைப் பார்த்திருக்கேன். சுத்தமான காத்து, நிழல் தர்ற மரங்கள், பசுமையான வயல்களுக்கு நடுவில் விசாலமான திண்ணைகளு டன் வீடுகள் இருக்கும். ஒரு டீக்கடை, பெட்டிக் கடை, முடி வெட்டுறவர், துணி துவைக்கிறவர், டெய்லர், குடிதண்ணீர் எடுக்க ஒரு கிணறு, குளிக்கிறதுக்கு ஒரு குளம், மரத்தடியில் பஸ் ஸ்டாப்னு அந்தச் சின்ன ஊருக்குள்ளேயே ஒரு குட்டி உலகம் இருக் கும். நகரத்தில் எல்லாமே ஒரே காம்பௌண்டுக்குள் வந்தாச்சு. அப்பார்மென்ட் வாழ்க்கை இருக்கே, மனிதர்களைப் பார்க்காம, சுவர்களைப் பார்க்கிற வாழ்க்கை. அப்படித் தான் முதியவர்கள் தங்களோட தனிமையைக் கழிக்க வேண்டியிருக்கு.

எங்கேயோ பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, கடைசியில் பிள்ளைகளோடு இருக்கணும்னு கிளம்பி வந்து, அறி முகமான மனிதர்களே இல்லாத ஊர்களில்தான் பெரியவங்களின் மரணம் நிகழுது. தான் செத்துட்டா தன் னுடைய குணநலன்களைச் சொல்லி அழ எத்தனை பேர் இருப்பாங்கன்னு அவங்களுக்குத் தோணும்தானே!

பையனோட வேலை காரணமா தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு ஊருக்கு வந்து, சிரிச்சுப் பேச மனிதர்கள் இல்லாம திண்டாடுவாங்க. அதைப் பற்றி எந்தக் கவலை யும் இல்லாம நாம நம்மோட வேலை களில் பரபரப்பா இருப்போம். முது மையைக் கொண்டாடத் தெரியாம இருக்கிறதுதான் மன்னிக்க முடியாத அறியாமை. அந்த அறியா-மையில் ஒரு நாடே இருப்பதன் அடையா-ளம்தான் நாளுக்கு நாள் வளர்ந்துட்டே வர்ற முதியோர் இல்லங்கள்.

அடுத்தவங்களுக்குப் பாரமாகிட் டோமேங்கிற மன உளைச்சலுடன் வாழ்கிற வயசானவங்க பக்கத்தில் உட்கார்ந்து, 'உனக்கு இதெல்லாம் செய்கிற வாய்ப்பு கிடைச்சது என்னோட வாழ்நாள் புண்ணியம்'னு சொல்லிச் சந்தோஷப்படுற, சந்தோஷப்படுத்துற வாய்ப்பு நம்மில் எத்தனை பேருக்குக் கிடைச்சிருக்கு?

பெண்டாட்டி, பிள்ளைகளை பீச், சினிமான்னு கூட்டிட்டுப் போறவங்க, வீட்டோட படியைத் தாண்டாம வயசான சில ஜீவன்கள் இருக்கேன்னு யோசிச்சதுண்டா?

பெத்த பிள்ளைக்குக் காரமா சமைச்சா பிடிக்காதுன்னு தெரிஞ்சு வெச்சிருப்போம். பிள்ளை ருசி,பெண் டாட்டி ருசியைத் தெரிஞ்சு வெச்சி ருக்கிற நம்மில் எத்தனை பேருக்குப் பெத்தவளோட ருசி தெரியும்?

குழந்தைங்க தூங்கிட்டாங்களானு பூனை மாதிரி அடி எடுத்து வெச்சுப் போய்ப் பார்க்கிற எத்தனை பேர், தன்னோட அம்மா தூங்கியிருப் பாளா, அப்பன் முழிச்சுட்டே இருக்கானான்னு பார்த்திருப் பாங்க? இப்படி நிறைய நிறைய கேள்விகள் நெஞ்சில் முளைச்-சுட்டே இருக்கு!

என் அம்மா திடீர்னு ஒரு நாள், தான் பிறந்த ஊரைப் போய்ப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா. கர்நாடகாவோட ஒரு மூலையில் இருக்குது 'தாரவாடு'ங்கிற சின்ன ஊர். என் தாயோட தாய்க் கிராமம். உடம்பு சரியில் லாம இருக்கிற நேரத்தில் இப்படி ஒரு பயணம் அவசியமான்னு எல்லாரும் அவளைக் கேட்டாங்க. ஆனா, நான் 'நிச்சயமா நாம போறோம். நீ கிளம்பும்மா!'ன்னு சொன்னதும், அவ முகத்துல முளைச்ச சந்தோஷம் இருக்கே, ப்ச்... அதான் வரம்!

எதுக்காக தான் பிறந்த ஊரைப் பார்க்கணும்னு கேட்கிறா? தான் விதைச்ச வேப்ப மரம் செழிப்பா வளர்ந்ததை அடிக்கடி சொல் வாளே, அதைப் பார்க்கவா? தன்னோட சின்ன வயசுத் தோழி கள் இப்ப உசுரோட இருப்பாங் களானு அடிக்கடி கேட்பாளே, அவங்களைப் பார்த்து தன்கிட்டே மிச்சமிருக்கிற ரகசியங்களைச் சொல்லிடணும்னு நினைக்கி றாளா? தன்னை ஏளனமா பார்த்த மனுஷங்களுக்கு முன்னால போய் நின்னு, 'பாருங்க, என் பசங்களை நல்லபடியா வளர்த்து வாழ்க்கை யில் ஜெயிச்சுட்டேன்!'னு சொல்ல விரும்புறாளா? என்ன காரணம்?

'இல்லடா பிரகாஷ், எனக்குத் தெரிஞ்ச எல்லா முகத்தையும் கடைசியா ஒரு முறை பார்க் கணும்னு தோணுதுடா!'னு எனக்குள்ள இருந்த எல்லாக் கேள்விக்கும் ஒரே பதிலா சொல்றா. ரொம்பப் பத்திரமா அவளை அந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போனேன். அவளுடைய உடம்புக்கு அவ்ளோ தூர பயணம் சரிப்படலை. உடம்பு சரியில்லாம அட்மிட் ஆக வேண்டிய நிலைமை. அந்த ஊரில் இருக்கிற சின்ன ஆஸ்பத்திரியில் சேர்த்து, கூடவே இருந்தேன். அந்த சுகவீனத்திலும், 'என் பையன் என்னை எப்படிப் பார்த்துக்கிறான் பார்!'னு தன்னோட உறவுக்காரங்ககிட்டே பெருமை-யாப் பேசுறா. எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்துறா. ஏதேதோ பேசிட்டே இருக்கா.

கோவா கூட்டிட்டுப் போய், இன்னும் பெரிய ஆஸ்பிடலில் ட்ரீட்மென்ட் தந்து, ஒரு நர்ஸைக் கூடவே கூட்டிட்டு சென்னை வந்தேன். 'இவ்ளோ ரிஸ்க் எடுக்கணுமா?'னு எல்லாரும் கேட் டாங்க. அவங்களுக்கு நான் சொன்ன பதில் இதுதான்...

''பெத்தவங்களை எப்படிக் கொண்டாடணும்னு நான் என் குழந்தைகளுக்கு வார்த்தைகள்ல சொல்றதே இல்லை. வாழ்ந்து காட்டணும்னு ஆசைப்படறேன். அவ்ளோதான்!''


--
http://sarathecreator.blogspot.com

ஷாரா

unread,
Apr 13, 2007, 3:37:45 AM4/13/07
to mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, TamilaTamila-தமிழா..தமிழா, தமிழ்நண்பர்கள், TamilarUlagam, tamilm...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tamilb...@googlegroups.com, iniyau...@googlegroups.com, Kar...@googlegroups.com, kad...@googlegroups.com, muthami...@googlegroups.com, namb...@googlegroups.com

Part-24
-------------
 
வீட்டுக்குள்ளேயே காணாமல் போனவர்கள்!

இந்தியாவில் வருஷத்துக்கு 45,000 குழந்தைகள் காணாமல் போகிறார்கள்னு ஒரு புள்ளி விவரம் படிச்சேன். காணாமல் போகிற 5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கணக்கில் வருவதில்லைனு இன்னொரு புள்ளிவிவரம் சொல்லுது.

வீட்டுக்கு வெளியே காணாமல் போகிற குழந்தைகள் பற்றிய இந்த பகீர் தகவல் ஒரு பக்கம் இருக்கட் டும்; வீட்டுக்குள்ளேயே காணாமல் போகிற குழந்தைகள் பற்றியும் நாம யோசிக்கிறது இல்லையே! ரெண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பனா இப்ப நான் யோசிச்சுப் பார்க்கிறேன்... டீன்& ஏஜ் வயசுக்குள்ள போகப் போறா என் பெரிய பொண்ணு. 12 வயசு வரைக்கும் அவகூட ஒரு ஃப்ரென்டா இருந்திருக்கேன். வெளியூர் ஷ¨ட்டிங் போயிட்டு வந்தா, 'அப்பா'ன்னு ஓடி வந்து கட்டிப்பிடிச் சுக்குவா. அவங்க அம்மா சாப்பாடு ஊட்டும்போது, உப்பு மூட்டை தூக்கிட்டு நான் நடக்கணும். காலைல கண் விழிச்சுப் பார்க்கும்போது, என்மேல காலைப் போட்டபடி, என் கழுத்தைக் கட்டிக்கிட்டுத் தூங்கிட்டிருப்பா. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத அப்பனுக் கும் மகளுக்குமான இந்த நெருக்கம் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்னு ஒரு பயம் மனசுல வர ஆரம்பிச்சுடுச்சு. அதற்கான அறிகுறிகள் வீட்டுக்குள் தெரியுது. சர்வ சுதந்திரமா வாழ்ந்திட்டிருக்கிற என் மகள் என் கண்ணுக்கு முன்னால, என் வீட்டுக்குள்ளேயே காணாமப் போயிட்டிருக்கா.

'எப்பவும் அம்மா அட்வைஸ் பண்ணிட்டே இருக்காங்கப்பா'னு என் பெண்டாட்டி மேல கம்ப்ளைன்ட் பண்றா. இதுவரைக்கும் அவ கேட்கிற டிரெஸ்ஸை வாங்கித் தந்த என் மனைவி, திடீர்னு 'இந்த மாதிரி டிரெஸ்ஸெல்லாம் போடக் கூடாது'னு சில கட்டுப்பாடுகளைப் போடுறா. 'இப்பவே ஏன் வித்தியாசத்தைக் காட்டுறே?'னு கேட்டா, 'உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. இது பொம்பளைங்க விஷயம். நீங்க தலையிடாதீங்க'னு எனக்கும் கட்டுப்பாடு விதிக்கிறா. நானும் என் பொண்ணும் என்ன பண்றதுன்னு தெரியாம இந்தக் கலாசாரத்துக்கு முன் னால மௌனமா கை கட்டி நிக்கிறோம்.

இந்த நேரத்துல, என் நண்பன் ஒருத்தன் திடீர்னு 'மஞ்சள் நீராட்டு விழா'னு ஒரு பத்திரிகையை நீட்டுறான். அவன் பொண்ணும், என் மகளும் நெருங்கின தோழிகள். ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸ், சின்ன வயசுலேர்ந்து ஒண்ணா வளர்றவங்க. திடீர்னு நண்பனின் மகளோட நடை, உடை, பேச்சு, பாவனை எல்லாமே மாறுது. 'இனிமே ஆம்பளப் பசங்களோட சேர்ந்து கிரிக் கெட் விளையாடக் கூடாதுன்னு அம்மா சொல்றாங்க'னு பரிதாபமா சொல்லுது அந்தக் குழந்தை. இயல்பா உடலுக்குள்ளே நடக்கிற ஒரு மாற்றத்தை ஏன் இவ்வளவு பப்ளிக்கா மேடை போட்டு, ஸ்பீக்கர் கட்டிச் சொல்லணும்னு குழப்பமா இருக்கு. ஆணின் பார் வையில் இருக்கிற அசிங்கம்தான் பெண்ணுடைய உடல் மாற்றத்தை ஊரைக் கூட்டிச் சொல்லத் தூண்டுதோ? 'வீட்டுல ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு ரெடி'னு சொல்றதுக்காக அப்படி ஒரு விழா எடுக்கி றாங்களா? 13, 14 வயசுல பெண் பெரியவளான தும் கல்யாணம் பண்ற ஒரு காலகட்டத்துல இப்படி ஒரு விழா வெச்சிருக்கலாம். குழந்தைத் திருமணம் காட்டுமிராண்டித்தனம்னு உலகமே ஒப்புக்கிட்டு சட்டப்படி தடை செஞ்ச பிறகும், இப்படி ஒரு விழா எதுக்காக?

ஒரு தகப்பனா எனக்கும் என் மகளுக்குமான இடைவெளியை யாரோ போட்டு வெச்ச சட்ட திட்டங்கள் தீர்மானிக்கிறதை என்னால ஜீரணிக்கவே முடியலை. வீட்டுக்குள்ளே இருக்கிற அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் போன்ற பெண்களின் மாத விலக்குப் பிரச்னைகளின் வலியை அதே வீட்டில் இருக்கிற ஆண்கள் தெரிஞ்சுக்கிட் டாலே, உலகத்தில் முக்கால் பங்கு ஆணாதிக்கம் இல்லாமப் போயிடும். வயசுப் பெண்களுக்காவது வீட்டில் அம்மாக்கள் இருக்காங்க. உடல் சம்பந்தமான சந்தேகங்களை மகளுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டியது தன்னுடைய கடமைனு நினைக்கிற பக்குவம் அவங்களுக்கு இருக்கு. அப்பனுங்களுக்கு அந்தப் பொறுப்பு உணர்ச்சியும் இல்லை. அதனால, நம்ம நாட்டில் வயசுப் பெண்களைவிட வயசுப் பையன்கள்தான் ரொம்பப் பாவம்! தன் உடல்ல நடக்கிற மாற்றங்களை நினைச்சுக் குழம்பி, அநாவசியமான மன உளைச்சலுக்கு ஆளாகிறாங்க. சந்தேகங்களை யார்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கிறதுன்னு புரியாம பசங்க தவிக்கும்போது, யார் யாரோ தப்புத் தப்பா நம்ம வீட்டு பிள்ளைகளை வழி நடத்தி, நாம் மீட்க முடியாத தூரத்துக்குக் கூட்டிட்டுப் போயி டறாங்க. நம்ம வீட்லேயே வளர்ந்தாலும், நிறைய டீன்& ஏஜ் குழந்தைகள் காணாமல் போனவர்கள் லிஸ்ட்லதான் சேர்வாங்க.

ரொம்ப நாளைக்கு முன்னால படிச்ச ஒரு கதை. எழுதினவர் பேர் மறந்துபோச்சு. அப்பா டிரக் டிரைவர். அவனுக்கு டீன்& ஏஜ் வயசுல ஒரு மகன். ரொம்ப ஒழுக்க மான பையன். அப்பன்கூட வேலை செய்யறவங்க எல்லாம் கூடிப் பேசும்போது, தன் பசங்களைப் பத்திக் கம்ப்ளைன்ட்டா சொல்லு வாங்க. 'இங்கே சண்டை இழுத்துட்டான். அந்தப் பெண்ணோட பழகி கொஞ்சம் பிரச்னை ஆயி டுச்சு. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான். தண்ணி அடிக்கிறான். தம் அடிக்கிறான்'னு மத்தவங்க விதம்விதமா சொல்லும்போது, தன் பையனைப் பத்திச் சொல்றதுக்கு எதுவுமே இல்லையேனு ஒரு மாதிரி வருத்த மாயிடுது இவனுக்கு. ஏன்னா, 'வீட்டுக்குள்ள சிகரெட் பிடிக் காதே'னு அப்பனைக் கண்டிக்கிற அளவுக்கு ஒழுக்கமான பையனா இருக்கான் இவன் மகன்.

ஒரே வீட்ல இருந்தாலும், பெருசா ஒருத்தருக்கு ஒருத்தர் அதிகம் பேசிக்கிறதில்லை. கொஞ்ச நாளா திடீர் திடீர்னு பையன் காணாமப் போக ஆரம்பிச்சான். அப்ப ஊர்ல மதக் கலவரங்கள் நடந்து, அங்கங்கே 'பாம்'கள் வெடிக்கும். பையன் எங்கே போனான்னு தேடி அலுத்துப் போவாங்க. திடீர்னு ஒரு நாள் அந்த வீட்டுக்குப் போலீஸ் வருது. பையனைப் பற்றி துருவித் துருவி விசாரிக்குது. மனித வெடிகுண்டா மாறி, பெரிய உயிர்ச் சேதம் ஏற்படுத்தி யிருக்கான் தன் மகன்னு தெரிஞ்சதும், ஆடிப்போயிடு வான் அப்பன். மதத்தின் மேல் தீவிர பற்று வந்து, தீவிரவாதி கள் கூட்டத்தில் மகன் சேர்ந்தது தெரியாம, தினம் அவனைக் கடந்து போயிருக்கான். அதே வீட்ல இருந்தாலும், அவனை அப்பன் வளர்க்கலை; கண்ணுக்குத் தெரியாத இடத்திலேர்ந்து தீவிரவாதிகள் அவனை பிரெயின் வாஷ் பண்ணி வளர்த்திருக்காங்க.

சந்தேகங்களை, பிரச்னைகளைக் கலந்து பேசிக்காத ஒவ்வொரு வீட்டிலும் வளர்கிற குழந்தைகளும் காணாமல் போன வங்கதான். பசங்களுக்கு சாப்பாடு நாம போடலாம்; ஆனா, வளர்க்கிறது வேற யாரோ! தப்பானவங்க ஃப்ரெண்ட்ஷிப் கிடைச்சு, தப்பான வழியில் நம்ம குழந்தைகள் போறதுக்குப் பதிலா நாமே அவங்களுக்கு ஃப்ரெண்ட் ஆகிட்டா, என்ன கௌரவம் குறைஞ்சுடும்?

அந்த மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகையைப் பார்த்ததும், என் பொண்ணு என் வீட்டிலேயே தொலைஞ்சுடக் கூடா துங்கிறதுல உறுதியாகிட்டேன் நான்.

நீங்க?
 


--
http://sarathecreator.blogspot.com

homenaath rajarao

unread,
Apr 27, 2007, 6:00:22 AM4/27/07
to Kar...@googlegroups.com
hi, all the tamil letters vanished and full square appeared, how to
get again the tamil letters to continue my reading of P.Raj
Reply all
Reply to author
Forward
0 new messages