மும்பை தாதர் இரயில் நிலையத்தின் நடைபாதை பகுதியில் வியாபாரம் நடத்தும் எனது இராஸத்தானிய நன்பன் ஒருவனிடன் அவனது கடையிலேயே உட்கார்ந்து
பேசிக்கொண்டிருக்கும் போது சக்கர பலகை வண்டியில் வந்த ஒரு பெரியவர் வயது நாற்ப்பது இருக்கும் இரண்டு தண்ணீர் பாக்கேட்டுகளை தந்து 10 ரூபாய் வாங்கி
விட்டு மீண்டும் அடுத்த கடைக்கு நகர்ந்தார்.
இது என்ன புது வித ஸடைலாக இருக்கே என கேட்க அந்த நன்பரும் தண்ணீர் குடிக்கிறாயா சரவணா என்று சொல்லிக்கொண்டு அந்த பாக்கேட்டிலிருந்து
குளிர்ந்த நீர் ஒரு கிளாஸ தர , இது கூட வியாபாரமா என அவனிடம் கேட்க்க அவனோ அவர் உங்க ஊர் காரர்தான் ரொம்ப வருஷமா பாக்கேட் தண்ணீன்
வியாபரம் செய்கிறார். ஒரு பாக்கேட் இரண்டு ரூபாய்.
என சொல்ல அவர் தனது அமர் பலகை சக்கரவண்டியிலேயே உட்கார்ந்து அங்கே காதை அடைக்கும் சத்தம்போட்டு வியாபாரம் பார்க்கும் இளைஞர்களிடம்
தனது மார்பில் கட்டியிருந்த பெரிய பையிலிருந்து தண்ணீர் பாக்கேட்டுகளை கொடுத்துக்கொண்டிருந்தார்.
அன்று சனிக்கிழமை ஆதலால் எனக்கு ஆபீஸ விடுமுறை வேறு , அவரை கவணிக்க ஆரம்பித்தேன். இருபது பைகள் விற்றிருப்பார் மீண்டும் தனது கைகளால்
நிலத்தை தள்ளிக்கொண்டு சென்றவர் 15 நிமிடம் கழித்து மீண்டும் அதே வேலை மத்தியான நல்ல வெயில் வேறு வியாபாரிகள் அங்கே இங்கே என்று செல்லாமல்
வியாபரம் நடக்கும் இடத்திலேயே சாப்பிட்டு விட்டு இவரிடம் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு மீண்டும் தொண்டை கிழிய கத்தி வியாபாரத்தில் மூழ்கிவிட்டார்கள்.
எனது நன்பரிடம் விடைகொடுத்துவிட்டு இரயில்வே பிளாட்பாரத்தில் இறுதியில் அவர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி சென்ற உடன் முதலில் ஒரு தமிழர் என்று
சொன்னான் இங்கே கர்னாடகா, ஆந்திரா, மலையாள மாநில மக்களையின் அதிகம் விபரம் புரியாதோர் மதரா…ி என்றுதான் அழைப்பார்கள்
அதனால் தமிழர் தானா என தெரிந்துகொள்ள முதலில் வணக்கம் ஐயா என்றேன் அவரும் என்னை தலைதூக்கி பார்த்து வணக்கம் நீங்க யாரு என கேட்க்க
முதலில் என்னை பற்றி அவருக்கு அறிமுகம் செய்து கொண்டேன். பிறகு அவரிடம் இந்த தண்ணீர் வியாபாரத்தை பற்றி கேட்க அவரும் 1000 லிட்டர் டிராமில்
காலையில் தண்ணீர் நிறப்பி 10 ரூபாய்க்கு ஐஸவாங்கி போட்டு விடுவேன். பிறகு 1/2 லிட்டர் பிளாஸடிக் பையில் ஊற்றி எல்லோருக்கும் சப்ளை செய்வேன் என்றார்.
இது முனிஸிபாலிடிகாரங்க எது ஆப்சன் சொல்லவில்லையா
இல்லைப்பா அப்ப அப்ப யாரும் வந்தால் பத்தோ இருபதோ கொடுத்துவிடுவேன் அவிங்களும்
வாங்கீட்டு போய்டுவாங்க என சொல்ல .
வெயில் இல்லாத நேரங்களில் என்ன செய்வீர்கள் என சொல்ல அவரும் இது என்னோட மேயின் பிஸனஸ கிடையாது. பருத்திபால் தான் என்னொட மெயின்
வியாபாரம் .
பிறகுதாம் மெதுவாக ஐயா நான் கம்யூட்டர்ல பத்திரிக்கை மாதிரி கட்டுரை எல்லாம எழுதுவேன் உங்களை பற்றி விளக்கமாக சொன்னால் நல்ல இருக்கும் ஐயா என
அவரது வாழ்க்கை பற்றி சின்ன பிளாஸ பேக் , தீப நகரம் அண்ணாமலை இவரது சொந்த ஊர்.
கதிர்வேலு
பிறந்த பொழுது சரியாக இருந்த இவரது இரண்டு கால்களும் இவர் உடலோடு வளர ஒத்துவரவில்லை, விளைவு இப்பொழுது கூட இவரது கால்கள் பிறந்த
குழந்தையின் கால்கள் போல் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது. எப்படியோ வளர்ந்து விட்டவர், 18 வயதில் தனது ஊர்க்காரர் ஒருவருடன் மும்பை நோக்கி
பயனப்பட தாதர் வந்து இரங்கிய இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் வந்திரங்கியவர்கள் தான் அவர் வேலை தேடி எங்கோ கிளம்பிவிட இவர் ஒரு வாரம்
தாதர் இரயில் நிலையத்திலேயே பிச்சை எடுத்து பார்த்தார், ஆனால் தன்மானம் அவரை வாட்டி எடுத்தது. †ிந்தி வேறு தெரியாமல் என்ன கேட்க என வேட்கம்
வேறு , ஒரு வாரத்திற்க்கு பிறகு காலையில் செய்திதாள்களின் சப்ளிமெண்டிரி இனைக்கும் வேலை என ஆரம்பிக்க இரயில் நிலைய ஓரத்திலேயே அங்கு வசிப்பொருடன்
இவரும் வசிக்க மும்பையில் காலை பொழுதை பார்த்தவருக்கு ஒரு புதிய உத்தி தோன்ற அரம்பித்ததுதான் பருத்திபால் ,
மும்பை நகரத்தில் மிகக்குரைந்த விலையில் கிடைக்கும் பருத்தி கொட்டைகளை வாங்கி ஊறவைத்து அரைத்து அதனுடன் வெல்லம், மற்ற சுக்கு ஏலக்காய் ,
போன்ர இனிப்பு பதார்த்தங்களுக்கு போடும் மசாலாக்கலை போட்டு கொதிக்க வைத்தால் சூடான பருத்திபால் , தாதர் பகுதிகளில் அதிகம் கூலிவேலை பார்க்கும்
உ பி காரர்கள் இதற்க்கு வைத்த பெயர் (கட் தூத்) கெட்டியான பால் ஒரு தம்ளர் ஐந்து ரூபாய் என ஆரம்பித்தது.
கடந்த இருபது வருடமாக இந்த தொழில் காலை ஐந்தேகால் மணிக்கு ஆரம்பிக்கும் இவரி வேலை சரியாக 8 :30 க்கேல்லாம் முடிந்து விடும். முன்னூறுவரையிலும்
வியாபாரம் ஆகிவிடும் அதன்பிறகு தான் தண்ணீர் தொழில். தனது அண்ணனின் இரண்டு மகன்கள் மற்றும் தனது கடைசி தங்கையையும் இவருடன் வசிக்கிறார்கள்
பையன்கள் பெரியவர் 8 ஆம் வகுப்பு (தமிழ்) சிறியவர் 6 ஆம் வகுப்பு(தமிழ்) தனது இரண்டு தங்கை களுக்கு திருமணம் செய்துி கொடுத்துவிட்டார்.
ஊரில் ஐந்து பால் மாடு இருக்கிறதாம் இவர் வாங்கி தந்தது. 15 வயதிருக்கும் அவரின் கடைசி தங்கைக்கு அவருக்கு இன்னும் 3 வருடத்திற்க்குள் திருமணம் செய்து
விட்டு பையன் களில் கையில் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டு ஊருக்கு சென்று தங்குவது இவரது எதிர்கால திட்டம்.
இவருக்கு எந்த மொழியும் எழுத படிக்க தெரியாது. சேரிப்பேச்சு போன்ற ஹிந்தி கொஞ்சம் சென்னை வாடைகலந்த தமிழ் இதுதான் இவரது கல்வி அறிவு
இதுவரை இவர் தாதரை விட்டு எங்கும் சென்றது கிடையாது. விநாயகர் சதூர்த்திவந்தால் சிவாசி பார்க் சென்று பார்த்துவிடுவார்.
இவருக்கு இன்னும் தொடர்வண்டியில் ஊனமுற்றோருக்கான ஒதுக்கீடு இருப்பது தெரியாது. மேலும் இவர் முதல் முதலாக மும்பை வரும்போது மட்டும் இலவசமாக
வந்தார். பிறகு இன்று வரை அவர் ஊருக்கு செல்லும் போதும் வரும்போது டிக்கேட் எடுக்காமல் பயனிப்பது கிடையாது.
யார் இந்த சம்மீ பாய் 30 வருடங்களுக்கு முன்பு இவரும் மும்பை வந்தவர் இரவில் சாப்பிட வழியில்லாமல் படுத்து உறங்கியவர் வேலை கிடைத்து கையில் கொஞ்சம் காசு சேர்ந்த பிறகு ஒருநாள் ஆரம்பித்தது தான் இந்த உணவகம். இலவச உணவகம்.
யாரும் வரலாம், எந்த நேரமும் வரலாம் இரவு 2 மணியா வங்க உங்கள் கண்முன்னே சுடச்சுட ரோட்டி பருப்பு குழம்பு கிடைக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் ஆனால் மறந்து இந்த சம்மீ பாய் ரூபாய் என கொடுத்தீர்கள் அன்பு திட்டு விழும்.
சம்மீபாய் பாந்திராவில் உள்ள ஒரு மசூதி முன்பு வாசனைதிரவியம் மற்றும் குரான் புத்தகங்கள் விற்க்கும் நடுத்தர நபர். இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் ஆன் மகனில் ஒருவர் ரிக்ஷா டிரைவர்,
மற்றோரு பையம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் மரனம் அடைந்து விட்டார்.
அந்த சிறுவனின் மரன நாட்களின் போதும் உணவகம் மூடப்படவில்லை.
அவரை இந்த பகுதி மக்கள் மாயிபாப்(அம்மைஅப்பன்) என்று அழைக்கின்றனர்.
வீட்டில் எப்பொழுதும் நான்கு ஐந்து மூட்டை மாவு இருந்து கொண்டே இருக்கிறது.
--
உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்தும் சரவணா
சரவணா சுற்றுலா ஒருங்கிணைப்பகம்
091 9819166850
மும்பையிலிருந்து